Yarl Forum
சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தல் செய்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தல் செய்திகள் (/showthread.php?tid=3412)



சிறிலங்கா அரசுத்தலைவர் தேர்தல் செய்திகள் - வினித் - 09-05-2005

மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஜே.வி.பி. ஆதரவு: உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
[திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 17:55 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளரான மகிந்த ராஜபக்சவுக்கு 12 நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.


கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பை கைவிடுதல்,

சிறிலங்கா என்ற ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு,

2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தல்,

அமைதி முயற்சிகளில் நோர்வை அனுசரணையாளர் பங்களிப்பை மறுபரிசீலனை செய்தல்,

உள்ளிட்ட 12 நிபந்தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது.

1. ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது. முன்னைய பொதுக்கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை அரசினூடாக மேற்கொள்ளப்படும் வகையில் புதிய செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

2. இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது இதர கட்சிகளுடனும் அமைதிப் பேச்சுகள் நடாத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தன்னாட்சி அதிகார சபை உள்ளிட்ட எதுவித அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை அளிக்கும் வகையில் அப்பேச்சுகள் இருக்கக் கூடாது.

3. இனப்பிரச்சனைக்கு முன்வைக்கப்படுகிற எந்தத் தீர்வும் சிறிலங்கா என்கிற ஒற்றையாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.

4. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறிலங்காவின் அரசியல் சாசனத்துக்கு ஏற்பில்லாத, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிற யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் அனைத்தையும் அதிலிருந்து முழுமையாக நீக்க வேண்டும்.

5. சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அனுசரணையாளராக செயற்பட்டு வரும் நோர்வே தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பக்க சார்பாக செயற்பட்டு வருகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பணியில் கண்காணிப்புக் குழு முழு அளவில் தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில் அனுசரணையாளராக நோர்வே பணியாற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

6. தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனைகளை முதன்மைப் பணியாகக் கொண்டு சிறிலங்காவில் மூவின மக்களும் எவ்வித அச்சமுமின்றி வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இம்மாகாணங்களில் அனைத்து ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகளும் செயல்படும் வகையில் பல கட்சி அரசியல் முறையை மீளவும் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

7. சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாராம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையானது சிறிலங்காவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடியது. இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் ஆட்சி முறையை நீக்குவதை முதன்மைப் பணியாக கொள்ள வேண்டும். இதை 2005 ஆம் ஆண்டு தொடங்க உள்ள 6 ஆவது அரசுத் தலைவரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே செயற்படுத்த வேண்டும்.

8. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக தாரளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. சிறிலங்காவின் தேசியப் பொருளாதாரக் கொள்கையானது சமச்சீரான பொருளாதாரக் கொள்கையாக இருக்க வேண்டும்.

9. தேசியப் பொருளாதாரத்தின் மையமாக விளங்குகிற துறைமுகங்கள், விமான தளங்கள், பெற்றோலியக் கூட்டுத் தாபனம், அரச வங்கிகள், சிறிலங்கா மின்சார சபை உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நீர், கனிம வளங்கள் ஆகியவற்றை தனியார்மயமாக்கக் கூடாது. தனியார்மயமாக்கல் தொடர்பாக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டும்.

10. அனைவருக்குமான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குகிற முயற்சிகள் மற்றும் 1981-இல் கல்வி தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றை கைவிட வேண்டும். கல்வி மேம்பாடு குறித்து புத்திஜீவிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது கருத்துகளை கவனத்திலெடுத்துக் கொள்ள வேண்டும்.

11. தேசிய உற்பத்திக்குப் பங்காற்றுகிற அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் உள்ளிட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜே.வி.பி. முன் வைக்கிற செயற்திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

12. சிறிலங்கா அரசின் வெளியுவுக் கொள்கையானது அணிசேரா கொள்கையாக இருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை குறிப்பாக தெற்காசிய பிராந்தியம் மற்றும் ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிற வகையில் இருக்க வேண்டும்.

ஜே.வி.பி.யின் இந்த நிபந்தனைகள் குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து எதுவித கருத்துகளும் வெளியிடப்படவில்லை.

சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஐந்து நாள் சீனப் பயணத்திற்குள்ளாகவே மகிந்த ராஜபக்சவும், ஜே.வி.பியினரும் பல சுற்று இரகசியப் பேச்சுக்களை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாட்டில் மேற்கொண்டனர்.

இந்த இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பான படங்களை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஊடகங்கள் அம்பலப்படுத்திய நிலையிலேயே ஜே.வி.பி. இன்று தனது நிபந்தனைகளுடனான ஆதரவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான தலைமை நீதிமன்றத் தீர்ப்பில் தமக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட்டது குறித்து மிகக் கடும் கோபத்தில் இருக்கும் சந்திரிகா குமாரதுங்க, ஜே.வி.பியுடனான இந்த ரகசியப் பேச்சுகள் குறித்தும் அதிருப்தியில் இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


- வினித் - 09-05-2005

தலதா மாளிகையில் அரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு: ஜாதிக ஹெல உறுமய
[திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 19:44 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
ஜாதிக ஹெல உறுமயவின் அரசுத் தலைவர் வேட்பாளரை தலதா மாளிகைக்கு முன்னால் வைத்து அறிவிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் பாட்லி சம்பக்க ரணவக்க தெரிவித்தார்.


இது குறித்து சம்பக்க ரணவக்க கூறியதாவது:

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரும் திகதியை தேர்தல் ஆணையாளர் அறிவித்ததும் தமது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடாத்தப்பட்ட பேச்சுக்கள் நல்லமுறையில் நடந்தாலும் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைகளுக்கு அவசியமான வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.

ஜாதிக ஹெல உறுமய வேட்பாளர் ஒருவரை நிறுத்தக் கூடிய சூழ்நிலையில் இல்லை என்றும் அதனால் அவர்கள் மகிந்த ராஜபக்ச பின்னாலும் ரணில் விக்கிரமசிங்கவின் பின்னாலும் செல்வதாக அனேகமானவர்கள் கூறிவருகின்றனர்.

ஜாதிக ஹெல உறுமய இவர்கள் இருவரின் பின்னாலும் செல்லவில்லை. அந்த இருகட்சிகளும் தான் ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தன.

எமது கட்சிக்கு வேட்பாளராக நிற்கும் நபர் முக்கியமில்லை. ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அதனை செயற்படுத்த விரும்புபவருக்கே எமது கட்சி ஆதரவளிக்கும் என்றார் சம்பக்க ரணவக்க.


- வினித் - 09-05-2005

ரணிலுக்கு ஆதரவு வழங்கு முஸ்லீம் காங்கிரஸ் முடிவு!
றுசவைவநn டில Pயயனெலையn வுரநளனயலஇ 06 ளுநிவநஅடிநச 2005

எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லீம் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோள்களிற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கியதை அடுத்தே அவரிற்கு ஆதரவு வழங்குதற்கு முஸ்லீம் காங்கிரஸ் முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முஸ்லீம் காங்கிரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களிற்குள் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


- வினித் - 09-05-2005

சிறீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பழைய உறுப்பினர்கள் பலர் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவு.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பழைய உறுப்பினர்கள் பலர் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சி ஆதரவாளர்கள் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்றதாகவும் குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலர் முதன் முறையாக ஐக்கியதேசியக்ட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய மாற்றம் என்றே கருதவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


- வினித் - 09-05-2005

ஜே.வி.பி.யும் பிரதமர் ராஜபக்ஷவும் இணைந்து
களமிறங்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு
ஐ.தே.க. தெரிவிப்பு

(ஜப்ரல் அஸ்கான்)

ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. யும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இணைந்து களமிறங்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பு. இவர்களின் கூட்டிணைவால் ஐ.தே. கட்சிக்கு எவ்வித பிரச்சினையும் வந்துவிடப் போவதில்லை என்று ஐ.தே.க. வின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் மனோ விஜேரட்ண தெரிவித் தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவ ரின் காரியாலயத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற் காக சிறிய கட்சிகளின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷதான் அதிகா ரத்திற்கு வருவதற்காக பிரபாகரன் நாட் டை பிரித்துக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவே கூறுவார்


- RaMa - 09-06-2005

அரசியல் குட்டையில் ஊறிய இன்னொரு மட்டை வெளி வரப்போகின்றது


பிரதமர் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடுவது நிச்சயம் - வினித் - 09-06-2005

ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன்
பிரதமர் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடுவது நிச்சயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை

(அ. நிக்ஸன்)

ஜே.வி.பி. யுடனும் ஜாதிக ஹெல உறுமயவுடனும் கூட்டுச் சேர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவாரேயானால் இந்த நாடு இரண்டாக பிளவுபடுவது நிச்சயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை மஹிந்த ராஜபக்ஷ நன்கு தெரிந்திருந்தும் மேற்படி இரு கட்சிகளினதும் அந்த நிலைப்பாட்டை அவர் ஏற்றிருக்கின்றமையானது அவரின் குறுகிய அரசியல் நோக்கம் எனவும் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது


Re: பிரதமர் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடுவது நிச்சயம் - AJeevan - 09-06-2005

[size=15]<b>பிரதமர் ஜே.வி.பி. இணக்கப்பாடு </b>

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கவுள்ளமை உறுதியாகி விட்டது. ஜே.வி.பி. முன்வைத்த 12 முக்கிய நிபந்தனைகளுக்கு பிரதமர் இணங்கியதையடுத்தே இந்த ஆதரவினை வழங்க அக்கட்சி முன்வந்துள்ளது.

ஜே.வி.பி. பிரதமரிடம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை பாரதூரமான விடயங்களாகவே நோக்கப்படுகின்றன.

சுனாமி பொதுக்கட்டமைப்பினை நடைமுறைப்படுத்துவதனை தவிர்த்தல், இறுதித் தீர்வு குறித்தே விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தல், இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசாது சகல தரப்பினருடனும் பேசுதல், இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே தீர்வு, போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீளமைத்தல், நோர்வேயின் பணியை மீள் பரிசீலனை செய்தல் ஆகியவை ஜே.வி.பி. யினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் முக்கியமானவையாகும்.

இவ்விடயங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணங்கியுள்ளமையானது எதிர்காலத்தில் சமாதான முயற்சிக்கே பாதகமாக அமையும் செயல் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக் கட்சிகளின் கருத்தாகவுள்ளது.

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாது என்பதை இனம் கண்டமையினால்தான் சமஷ்டி அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் இணக்கத்துக்கு வந்திருந்தனர்.

இதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலேயே கடந்த அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்திருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம், நோர்வேயின் மத்தியஸ்த்தம் என்பவற்றினால் தான் சமாதான முயற்சி என்பது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சமாதான முயற்சியானது தடைப்பட்டிருந்தாலும் மீண்டும் அதனை ஆரம்பிக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுவதற்கு இவை இரண்டுமே காரணமாகும்.

எனவே, சமாதான முயற்சியையும், சுனாமி பொதுக்கட்டமைப்பினையும் அன்று முதல் எதிர்த்து வந்த ஜே.வி.பி. யுடன் பிரதமர் கூட்டிணைவதானது சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

சுனாமி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஜே.வி.பி. யானது கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இறுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்தும் வெளியேறியிருந்தது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க துணிவுடன் மேற்கொண்ட முயற்சியினால் பொதுக்கட்டமைப்பு சாத்தியமானது. ஆனால், அதற்கும் கூட நீதிமன்றம் சென்று ஜே.வி.பி. தடைபோட்டுள்ளது. இத்தகைய நிலையில் தான் தற்போது ஜே.வி.பி. யின் நிபந்தனைகளுக்கு பிரதமர் ராஜபக்ஷ இணங்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் ஜே.வி.பி. யின் ஆதரவினை ஜனாதிபதித் தேர்தலில் பெறுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. ஜே.வி.பி. யுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரி பாலசிறிசேன, அமைச்சர்களான மங்கள சமரவீர, சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எனவே, ஜே.வி.பி. யின் நிபந்தனைகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் இணக்கம் தெரிவித்தார் எனக் கூற முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பி. யின் நிபந்தனைகளுக்கு இணங்கியதாகவே கருத வேண்டியுள்ளது.

ஜே.வி.பி. யுடன் இணைந்து அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சமாதான பேச்சுக்களை முன்னெடுக்க முடியாதுபோனமைக்கு காரணம் ஜே.வி.பி. யின் எதிர்ப்பு நடவடிக்கைகளாகவே அமைந்திருந்தன.

இடைக்கால நிர்வாக சபை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்ட பின்னரே இறுதி தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். ஆனால், இறுதி தீர்வு குறித்தே பேச முடியும் என்று அரசாங்கம் கூறியிருந்தது. இதனால்தான் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க முடியாத முட்டுக்கட்டை நிலை காணப்பட்டு வந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து சமாதான முயற்சியை முன்னெடுப்பதற்கு இவ்விடயமே தடையாக இருந்துள்ளது.

தற்போதும் ஜே.வி.பி. முன் வைத்துள்ள நிபந்தனையில் இறுதித் தீர்வு குறித்தே பேச வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சமாதானப் பேச்சுக்களை எவ்வாறு ஆரம்பிக்க முடியும்? எவ்வாறு அது சாத்தியமாகும்?

ஜே.வி.பி. யின் நிபந்தனைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டமை வருத்தமளிப்பதாகவும், யுத்த சூழலையே இது ஏற்படுத்தும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் நிபந்தனைகளுக்கு இணங்கியதன் மூலம் ஜே.வி.பி. யின் சிறைக்குள் பிரதமர் அகப்பட்டு விட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. யின் ஆதரவை பெறுவதற்காக சமாதான முயற்சிக்கு எதிரான நிபந்தனைகளுக்கு பிரதமர் இணங்கியமை சிறுபான்மை மக்களின் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை உணர்ந்து பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் செயற்பட முன்வர வேண்டும். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த தக்க வகையில் அனைவரது செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

- <b>Veerakesari Editor's View</b>


- வினித் - 09-07-2005

ரணிலுக்கு இ.தொ.க., மு.கா. ஆதரவு?
[புதன்கிழமை, 7 செப்ரெம்பர் 2005, 14:18 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா அரச தலைவர் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிலைப்பாட்டை அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்னும் இரு நாட்களில் வெளியிட உள்ளார்.

இ.தொ.க.வின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், அரசுத் தலைவர் சந்திரிகாவுடன் இணக்கமான உறவில் இருந்தபோதும் அக்கட்சியின் பெரும்பான்மையோர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று விரும்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடம் கூடியபின்னரே அக்கட்சியின் ஆதரவு அறிவிக்கப்படும்.

டோக்கியோ பிரகடனத்தின் அடிப்படையில் முஸ்லிம்களையும் அமைதிப் பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஐக்கிய தேசியக் கட்சியை முஸ்லிம் காங்கிரசு ஆதரிக்கக் கூடும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இ.தொ.க.வும், மு.காவும் விரைவில் தங்களது அறிவிப்புகளை வெளியிட்டு ரணிலுடன் ஒப்பந்தத்தில் கைச்சாதிடக் கூடும் என்று கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தால் மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஐ.தே.க. பிரச்சார நடவடிக்கைகளுக்கு மு.கா. வலுச்சேர்க்கும்.

மலையகம் மட்டுமல்லாது கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் இ.தொ.கா.வும் ஐ.தே.க.வும் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டால் தமது அணிக்கு வலுசேர்க்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜே.வி.பி.க்கும் பிரதமருக்கும் இடையில் நாளை வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.

இந்த உடன்படிக்கையில் பிரதமரும் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவும் கைச்சாத்திடவுள்ளனர்


கட்சியிலிருந்து மகிந்தா நீக்கம்?: - வினித் - 09-09-2005

சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தா திடீர் நீக்கம்?: எச்சரிக்கை கடிதம் அனுப்பினார் சந்திரிகா!!
[வெள்ளிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2005, 19:57 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசியல் புதிய திருப்பமாக சுதந்திரக் கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச நீக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.


இது தொடர்பான எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை மகிந்த ராஜபக்சவுக்கு கட்சித் தலைவரும் அரசுத் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க அனுப்பியுள்ளார்.

அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிங்களப் பேரினவாத ஜே.வி.பியுடனான மகிந்த ராஜபக்சவின் ஒப்பந்தம் நேற்று வியாழக்னிழமை கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சில மணிநேரங்களிலேயே சந்திரிகா குமாரதுங்க தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் கடிதத்தை நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார்.

அக்கடிதத்தில் அதிகாரப் பகிர்வைக் கைவிடுதல், ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட ஜே.வி.பியின் நிபந்தனைகளை மகிந்த ராஜபக்ச ஏற்றுள்ளது குறித்து சந்திரிகா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் சந்திரிகா தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா சுதந்திரக் கட்சியாலும், அமைச்சரவையாலும், பிரதமராகிய உங்களாலும் (மகிந்த ராஜபக்சவாலும்) அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பை, நிராகரிப்பதற்கு ஒருதலைப்பட்சமாக ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்கள்.

உங்களின் அனைத்து செயற்பாடுகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுங்கை மீறுவதாக உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

கட்சி ஒழுங்கை மகிந்த ராஜபக்ச மீறுவதாக சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ள விடயம் தென்னிலங்கை அரசியலில் மேலும் திருப்பங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.