09-06-2005, 10:54 AM
நண்பர் ஒருவர் மிகவும் முகவாட்டத்துடன் காணப்பட்டார். காரணம் கேட்ட போது, அவருடன் ஒன்றாகப் படித்த பள்ளித் தோழன்(ர்) தற்போது மிக உயர்ந்த பதவியில் இருப்பதாக அறிந்து, அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார். மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார். ஒரு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின்னும், அறிமுக அட்டையை உள்ளே கொடுத்தனுப்பிய பின்னும், அழைப்பு வராததால் மனம் சோர்ந்து போய் இருந்திருக்கிறார். பின்னர் அழைக்கப்பட்டு உள்ளே சென்றவர், பழைய பள்ளி நாட்களையும் அந்த நாட்களின் சம்பவங்களையும் பற்றிப் பேச ஆரம்பிக்க அந்த அதிகாரி உடனே அப்பேச்சை விரும்பாத முகபாவத்துடன் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பட்டும் படாமலும் பேசி, அவரை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்தாராம். இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் நண்பர்.
இன்னொரு நண்பர். அவருடன் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கிப் படித்தவருடன் அந்த இரண்டாண்டுக் காலமும் நல்ல நட்பு இருந்தது. ஆனால், படிப்பை முடித்தவுடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லை. எங்காவது கண்டால் மட்டுமே சில முகமன்கள். விசாரிப்புகள்.. அவ்வளவு தான். அதே நண்பர் இவருக்கே மிகப் பெரிய மேலதிகாரியாக வர நேர்ந்த போது, இவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஏதோ தனக்கே அப்பதவி கிடைத்தது போல் மகிழ்ந்து போனார். இவரை மற்றவர்கள் பார்த்த பார்வையும், விதமும் மாறிப்போனது. அந்த அதிகாரியிடம் சிபாரிசு செய்யச் சொல்லி ஏகப்பட்ட நச்சரிப்புகள். ஆனாலும், இவர் நண்பராக அவரைச் சென்று பார்த்து விட்டு வரவில்லை. தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அடுத்து கூட்டத்தோடு கூட்டமாகப் போய் நின்று விட்டு வாழ்த்தி விட்டு வந்ததோடு சரி. தனக்காக எதையும் அவரிடம் கேட்கக் கூடாது என்ற பிடிவாதம் (வைராக்கியம் என்று கூடச் சொல்லலாம்).
இவ்வளவு ஆண்டுகளும் ஆத்மார்த்தமான சிநேகத்துடன் தொடர்பு வைத்திருந்தால், இப்போதும் அதே நட்புடன் சென்று பார்ப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால், இருபது வருடங்களாகக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது போய் ஒட்டிக் கொள்வது தவறு. அது `காரிய நட்பு' என்று இவர் வியாக்கியானம் பேசுவார். இப்போதும் இவர் யாரிடமும் அந்த அதிகாரியின் கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசுவது இல்லை. நம்பமுடியாத உண்மை இது. மனிதர்களில் தான் எத்தனை ரகம்?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல காலகட்டங்கள் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்தின் போதும், அந்தந்த வயதிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நட்பு வட்டமும், உறவு வட்டமும் ஏற்படுவது இயல்பு. பள்ளிப் பருவத்தின் போது மிகவும் அந்நியோன்யமான நட்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆனால், கல்லூரி வாழ்க்கையில் நெருக்கமான நட்பும், பகிர்தலும் அவசியமாகப் போகிறது. பெற்றவர்களிடமும், உடன் பிறந்தவர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பல மன உளைச்சல்களையும், அந்தப் பருவத்திற்கேயுரிய படபடப்புகளையும் நண்பர்களிடம் தான் மனம் திறந்து பேச முடியும். கல்லூரி நட்பு சிலசமயம் தொடரும். பல சமயம் விட்டுப்போகும். வேலையில் சேர்ந்த பின்னர் புதிய நட்பு வட்டம் ஏற்படுகிறது. இதில் `பழையன கழிதலும், புதியன புகுதலும்' இயல்பு தானே! அதனால் நம் வாழ்க்கையில் நமக்குப் பரிச்சயமான எல்லோருக்கும் `செய்வது' என்பது எப்படி சாத்தியமாகும்? பெரிய பதவியுயர்வு கிடைத்ததைக் கேட்டு ஆனந்தமடைவதற்குப் பதில் வருத்தமாக இருந்தார் ஒருவர். காரணம், இனி நிறையப் பேரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள நேருமே என்பது தான். நம் மக்கள் இலேசுப்பட்டவர்களா என்ன? யாரைப் பிடித்தால் எதை, எப்படி சாதிக்கலாம் என்று தானே அலைந்து கொண்டிருக்கிறார்கள்? தன் நண்பர் மிகப்பெரிய பதவியில் இருக்கிறார் என்பதால் விடாமல் அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். அவரால் பல பயன்களை அடைய முடியும் என்ற இலாப நஷ்டக் கணக்குப் போட்டுப் பார்த்துப் பழகுகிறார்கள்.
இப்படி நிழல் போல் அவரைத் தொடர்பவர்கள் அவரது பதவிக்குச் சோதனை வரும் போதும், சங்கடம் ஏற்படும் போதும் தன்னை அவருடன் இணைத்துக் கொண்டால் ஏதாவது சிக்கல் வரலாம் என்று கற்பனை செய்து கொண்டு அவருடன் பழகுவதைக் கத்தரித்துக் கொள்கின்றனர். அவருக்கு அப்போது ஆறுதல் சொல்லவோ அல்லது பக்கபலமாக இருந்து தைரியமும், நம்பிக்கையும் தருவதற்கோ அவர்கள் முன்வருவதில்லை. அந்தச் சமயத்தில் தான் உண்மையாகப் பழகியவர்கள் யார்? காரியவாதிகள் யார்? கபடவேடதாரிகள் யார்? என்று அந்த நபருக்கு அடையாளம் தெரிய வாய்ப்பு உண்டு. இப்படி ஒதுங்கிக் கொள்பவர்கள், அவர் மீது சாட்டப்பட்ட பழி நீங்கினாலோ அல்லது அவருக்கு மீண்டும் நல்ல பதவி கிடைத்தாலோ கிஞ்சித்தும் நாணமின்றி வந்து ஒட்டிக் கொள்ள முயல்வது தான் வேடிக்கை.
நமக்கு ஓரளவே தான் பழக்கமானவர் என்றாலும் கூட அவர் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை அல்லவா? செய்யாவிட்டால் தூற்றுகிறார்கள். ஓர் அதிகாரிக்கோ, அரசியல் தலைவருக்கோ, கல்லூரி தாளாளருக்கோ எவ்வளவு பேரைத் தெரியுமோ- அவர்களுக்கு எவ்வளவு நெருங்கிய அல்லது ஒன்றுவிட்ட, விடாத சொந்தங்கள் இருக்குமோ அவ்வளவு பேருக்கும் செய்ய முடியுமா? சங்கடத்தையும், விரோதத்தையும் தவிர்க்கத்தான் அவர்கள் யாருடனும் சட்டென்று பழகுவதில்லை. உதவி கேட்பதில்லை. சிறு உதவி செய்யத் தவமாய் தவமிருந்து, சந்தர்ப்பம் கிட்டாதா எனக் காத்திருந்து, வலிந்து சென்று உதவி விட்டுப் பின்னர் அதற்குப் பிரதியுபகாரமாக ஏதாவது கேட்டு வைப்பர்.
`பதவி கிடைத்ததும் மனிதர் மாறிவிட்டார். முன்பு போல் நன்றாகப் பழகுவதில்லை. நல்ல வாய் வார்த்தைக்குக் கூடவா பஞ்சம்?' என்றெல்லாம் விபரம் புரியாதவர்கள் அங்கலாய்க்கிறார்கள். கொஞ்சம் இறங்கி வந்து பழகினால், தோள் மீது கை போட்டுக் கொள்வார்களே! இந்த எச்சரிக்கை உணர்வுதான், அவர்கள் மனிதிற்குள் மணியடித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு சம்பவம். ஓர் அதிகாரியைப் பார்ப்பதற்காக, அவர் வீட்டு வரவேற்பறையில் மஞ்சள் பையுடன் மணிக்கணக்காகக் காத்திருந்தார் ஏழ்மைக் கோலத்தில் இருந்த ஒருவர். அவர் ஏதோ, பண உதவி கேட்கத்தான் வந்திருக்கிறார் என நினைத்து அவரை அழைக்கத் தயங்கி காலம் கடத்தினார் அந்த மனிதர். `மஞ்சள் பையும்' அடமாக அமர்ந்திருக்க வேறு வழியின்றி உள்ளே அழைத்தார். வந்தவரோ பணம் எதுவும் கேட்கவில்லை. தன் பெண்ணின் திருமண அழைப்பைக் கொடுத்தபோது, அந்த அதிகாரியின் நிலை எப்படி இருந்திருக்கும்? ஆனால், அந்தக் குற்ற உணர்ச்சி சிறிது நேரம் தான் இருந்திருக்கும். அவர் என்ன மாறி இருக்கவா போகிறார்? அவர் கற்றுக்கொண்ட பாடம் தான் அவரை இவ்வாறு மாற்றியிருக்கும்.
சாதாரண நிலையில் உள்ள நாம், யாரிடமும் கொஞ்சம் சிரித்துப் பேசினாலும் வந்தது ஆபத்து. ஏதாவது உதவி கேட்டு (அதுவும் பெரிய நம் சக்திக்கு மீறிய உதவி) வந்து தொல்லை பண்ணுகிறார்களே! நம்மால் ஆகக்கூடிய நியாயமான உதவியாக இருந்தாலும் செய்து விட்டுப் போகலாம். தவறு ஒன்றுமில்லை. ஆனால், நாம் போய் வேறு ஒருவரைத் தொல்லை செய்ய வேண்டுமென்றால், அது சரியா? நமக்கே இப்படி என்றால் பிரபலங்கள் என்ன செய்வார்கள்? எனவே தான் போலியாகவாவது தன் முகத்தில் ஒரு கடுமையை வரவழைத்துக் கொள்கிறார்கள். ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டு, அந்த வளையத்திற்குள் எவரும் அத்துமீறி நுழைந்து விடாதபடி எச்சரிக்கையாக இருக்கிறார்கள். தேவையற்ற நச்சரிப்பும்
தொல்லையும் அவர்களின் இயல்பையே மாற்றி விடுகிறது.
யார் நமக்குச் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ அவருடைய வெற்றிக்கும், உயர்நிலைக்கும் நாம் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறோமோ என்று யோசித்துப் பார்த்தால், அவரைத் தொல்லை செய்ய மனம் வராது; மனச்சாட்சி கொஞ்சமாவது இடித்துரைக்கும். சிபாரிசுத் தொல்லை இல்லை என்றால் தகுதி மட்டுமே அரியணை ஏறும்.
Thanks-Thinakkural

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>