| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 381 online users. » 0 Member(s) | 379 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,413
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,674
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,208
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,523
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| இந்தியா, எப்போது மன்னிப்பு கேட்கும்?-பழ. நெடுமாறன்- |
|
Posted by: ragavaa - 09-05-2005, 06:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
<b>1975 ஆம் ஆண்டு நிடத்தப்பட்ட அவசரகாலக் கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா மன்னிப்புக் கேட்டார்.
1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.
1989ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார் எப்போது மன்னிப்பு கேட்பது? </b>
1989 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 2-4 வரையுள்ள ன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நகழ்ச்சி ஆகும்.
தம்பி பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும், இவ்வுூர் மக்கள் அனைவருமே புலிகளுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர்கள் என்பதனாலும் வல்வெட்டித்துறை மீது இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மிகுந்த கோபம் இருந்தது. அந்தக் கோபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் மிகக் கொடூரமானது.
1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் 'சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும்வரை சுட்டேன்" என்று கொக்கரித்தான். ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்களை அன்று கொதித்தெழ வைத்தது. ஆனால், இன்று அதே இந்திய நாட்டைச் சேர்ந்த இராணுவம் வல்வெட்டித்துறையில் மற்றொரு ஜாலியன் வாலாபாக்கை நடத்திக் காட்டியது.
ஜனதாதள தலைவர்களுள் ஒருவரும் என்னுடைய நண்பருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தப் படுகொலையை வியட்நாமில் நிடைபெற்ற 'மயிலாய்" படுகொலைக்கு ஒப்பிட்டார். வியட்நாமில் மயிலாய் என்ற இடத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் பற்றி அறிய நேர்ந்த போது உலகெங்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவிலேயே பத்திரிகையாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்தக் கொடூரமான கொலைகளைப் பகிரங்கமாகக் கண்டித்தனர். ஆனால், வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகளை இந்திய அரசு திட்டமிட்டு மறைத்தது. இந்தியப் பத்திரிகைகளுள் பெரும்பகுதி இச்செய்தியை மறைப்பதில் ஒத்துழைப்புக் கொடுத்தன. ஆனால், வல்வெட்டித்துறையில் இச்சம்பவம் நடந்த 13 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்ற இலண்டன் 'பைனான்ஸியல் டைம்ஸ்" பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலாக ஆகஸ்ட் 17 ஆம் நாளன்று அவரது பத்திரிகையின் வாயிலாக அம்பலப்படுத்தினார். அதையடுத்து இலண்டன், 'டெலிகிராப்" பத்திரிகையின் டெல்லி நிருபர் ஜெரமி கங்ரான் என்பவரும் இச்செய்தியை வெளியிட்டார். இந்தியப் பத்திரிகைகள் இச்செய்தியை அடியோடு மூடி மறைத்தன. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இச்செய்தி பரபரப்பாக வெளிவந்த பிறகு செப்டம்பர் 3 ஆம் நாள் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" சிறிய அளவில் இச்செய்தியை வெளியிட்டது.
இந்த முறை வல்வெட்டித்துறைக்கு நான் சென்றபோது இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். வல்லை மக்கள் குழுவின் தலைவர் எஸ்.செல்வேந்திரா, செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் நடனசிகாமணி உட்பட பலரை நான் சந்தித்துப் பேசினேன். இப்படுகொலைகள் நடைபெற்று ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வல்லை மக்கள் மீளாததை நான் பார்த்தேன்.
1989 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் வல்வெட்டித்துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர்.
இந்நகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி இருந்த அன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக அன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுட்டுக் கொன்றார்கள். மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர். நு}ற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன்வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக்கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப்போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டன. கணவர் உடலை மனைவியும், மனைவியின் உடலைக் கணவரும், பெற்றோரின் உடலைப் பிள்ளைகளும், பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர்.
மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நிகைகள், பணம், மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின்வருமாறு கொக்கரித்தாராம்.
'இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நு}ற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டுத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகின் 4 ஆவது பெரிய இராணுவம்"
அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லை நிகரம் சுடுகாடானது.
அந்த சோக வரலாற்றினைக் கீழே தந்துள்ளேன்.
மினி வீடியோ சினிமா கொட்டகை ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 30 பேரை வெளியே கொண்டுவந்து நடுத்தெருவில் உச்சி வெயிலில் உட்கார வைத்தார்கள். அங்கு நின்ற ஒரு சீக்கிய சிப்பாய் திடீர் என இயந்திரத் துப்பாக்கி மூலம் படபடவென்று சுட்டான். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இராஜரத்தினம் என்பவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார். அவர் அருகில் இருந்த கருணாநந்தராஜா என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவர் மார்பில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பயங்கரங்களைக் கண்டு மற்றவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். மற்றொரு இந்திய இராணுவ சிப்பாய் அங்கிருந்த கடைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீயை வைத்தான். இதற்கிடையில் சடையாண்டி கோயிலுக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேரை வேறு சில சிப்பாய்கள் அடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து கீழே குதித்த சிப்பாய்கள் திடீர் என்று நாலாபுறமும் தானியங்கித் துப்பாக்கிகளினால் சடசடவெனச் சுட்டார்கள். 40 வயதான சிவபாக்கியம், 60 வயதான தங்கராஜா ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள். முப்பதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என்று கதறிக்கொண்டு இருந்தார்கள். இரத்த வெறி பிடித்த இந்தியச் சிப்பாய்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேலும் மேலும் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.
சிவபுர வீதி என்னும் தெருவை நான் பார்வையிட்டேன். அங்கு 10 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசம் ஆகிக் கிடப்பதைக் கண்டேன்.
கோட்சேயின் மறுபிறவி
இந்திய இராணுவ சிப்பாய்கள் வெறிக்கு இந்தியத் தலைவர்களின் படங்கள் கூடத் தப்பவில்லை. நெடியகாடு என்னும் பகுதியில் கணபதி படிப்பகம் ஒன்று உள்ளது. அதில் ஐந்து அடி உயரமான மகாத்மா காந்தியின் உருவப்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. இந்திய சிப்பாய்கள் அந்தப் படிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் தேசத் தந்தையின் படத்தையும் உடைத்து எரித்துவிட்டுச் சென்றார்கள். காந்தி அடிகளின் எரிந்து கிடந்த அலங்கோலமான படத்தை நானும் பார்த்தேன். காந்தியைச் சுட்ட கோட்சே மறுபிறவி எடுத்து வந்து காந்தியின் படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.
அதைப் போல வர்ணகுலசிங்கம் அரசரத்தினம் என்னும் ஒரு வணிகன் பெரிய வீடு ஒன்றும் நாசப்படுத்தப்பட்டு இருந்தததை நான் பார்த்தேன். அவர் ஓர் இந்திய பக்தர். இந்தியத் து}துவராக இருந்த தீட்சித்தின் நெருங்கிய நண்பர். தமிழீழ மக்களின் பிரச்சினைகளை இந்தியாவினால்தான் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தம் மனைவி பத்மலோசினி, தம் 5 பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து குடும்பத்தை எப்படியோ சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பெரிய வீட்டில் வரவேற்பறையில் இந்திரா காந்தியின் ஆளுயர மூவர்ணப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த வீட்டிற்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அதைப் பார்த்துக்கூடத் தங்கள் கொடுஞ்செயலை நிறுத்தவில்லை. வீட்டையே கொளுத்திவிட்டுச் சென்றார்கள்.
வித்தனை ஒழுங்கை என்னும் தெருவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கண்டபடி சுட்டு 8 பேரைப் படுகொலை செய்து, ஏராளமானவர்களைப் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள். இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நடுவே மற்றவர்கள் அன்று நாள்கள்வரை அப்படியே பதுங்கி இருக்க வேண்டியிருந்தது. வல்வெட்டித்துறை கிராமிய வங்கி முற்றிலுமாக எரிந்து சாம்பல் மேடாகிக் கிடந்தது. எந்தத் தெருவுக்கு நான் சென்றபோதிலும் அந்தந்த தெருக்களில் இந்திய இராணுவம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றியும், படுகொலைகளைப் பற்றியும் கண்ணீர்க் கதைகளை மக்கள் கூறினார்கள்.
வல்வெட்டித்துறையில் மட்டுமில்லாமல் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரணி, பொலிகண்டி ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள். ஊரணி அரசு மருத்துவமனையில் நு}ற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். இந்திய இராணுவம் அந்த மருத்துவமனையைச் சுற்றி வளைத்துக்கொண்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் இருந்தும் கோயில்களில் இருந்தும் பலர் இராணுவத்தினரால் இழுத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு முன்னால் உள்ள தார்ச் சாலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் உட்கார வைக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் முகாமுக்குக் கொண்டு போகப்பட்டனர்.
வல்வெட்டித்துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் பரவிக்கொண்டே இருந்தது.
இராணுவத்தினர் போய்விட்டதாக நினைத்து அங்கிருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வல்லை மக்கள் குழுவின் செயலாளர் ஆனந்தராஜாவும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஒத்துழைத்தார். அப்போது உடுப்பிட்டியில் இருந்து இந்திய இராணுவச் சிப்பாய்கள் 30 பேர் திடீர் என அங்கு வந்து சேர்ந்தனர். தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆனந்தராஜாவை அவர்கள் பார்த்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து மேலும் 8 பேரைப் பிடித்துக் கைதிகளாகத் தங்களுடன் இழுத்துச் சென்றார்கள். அப்போது கேப்டன் பர்க் என்னும் இந்திய அதிகாரி அங்கு வந்தார். அவர் ஏற்கெனவே ஆனந்தராஜாவிற்கு நன்கு அறிமுகமானவர். எனவே அவரிடம் ஏதோ முறையிடுவதற்காக ஆனந்தராஜா முயன்றபோது தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவர் மார்புக்கு நேரே து}க்கிப் பிடித்தார். ஆனந்தராஜ் பாடசாலை ஒன்றின் முதல்வர், மக்கள் குழுவின் செயலாளர், இந்திய இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டவர். ஒரு முறை பருத்தித்துறை இந்திய இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவனைப் புலிகள் கைது செய்து கொண்டுபோய் விட்டார்கள். அவரை மீட்பதற்கு வடமராட்சி முழுவதும் இராணுவத்தினர் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனாலும், அவர்களால் சிப்பாயை மீட்க முடியவில்லை. அந்த Nநிரத்தில் இந்திய அதிகாரி ஆனந்தராஜாவிடம் மன்றாடினார். புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளரான தீபன் என்பவருடன் தொடர்புகொண்டு அந்தச் சிப்பாயை விடுவிக்கச் செய்து இந்திய இராணுவ அதிகாரிகளிடம் ஆனந்தராஜாவும் மக்களும் ஒப்படைத்தார்கள்.
இப்படியெல்லாம் செய்த ஆனந்தராஜாவையே அவர்கள் துச்சமாக மதித்தார்கள். ஆனந்தராஜாவையும், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் அழைத்துச் சென்று உடுப்பிட்டி இராணுவ முகாமில் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். நான்கு சீக்கிய சிப்பாய்கள் ஆனந்தராஜாவைச் சுற்றிக்கொண்டு உருளைக் கட்டைகளால் மாறி மாறித் தாக்கினார்கள். அவர் தலையில் இருந்து குருதி ஓடியது. முகத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. கீழே விழுந்த அவர் தொண்டையின் மீது ஒரு மரக்கட்டையை வைத்துச் சீக்கிய சிப்பாய் ஒருவன் அதன் மீது ஏறி நன்றான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்ட நேரத்தில் அவர் அவனைப் பிடித்துத் தள்ளியதும் ஆத்திரம் கொண்ட அந்தச் சிப்பாய் அவர் முகத்தில் மாறி மாறி மிதித்தான். அவர் மூச்சு திணறி மயங்கிவிட்டார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி அந்த வெறியர்கள் விலகிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் அங்கு வந்த இராணுவ டாக்டர் கேப்டன் சௌத்ரி ஆனந்தராஜாவை ஏற்கெனவே அறிந்தவர். அதனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தக்க சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றினார்.
மறுநாள் காலை மருத்துவமனையில் படுத்திருந்த ஆனந்தராஜாவை டாக்டர் கேப்டன் சௌத்திரி 'உடல்நிலை விசாரிப்பதுபோல" வந்தார். தலையிலே பட்ட காயத்திற்கு மருந்து போடப்பட்டு இருந்தது. முகம் வீங்கி இருந்தது. வலது கன்னத்தில் ஆழமான காயம் இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. படுத்திருந்தார். டாக்டருடன் வந்த கேப்டன் கர்பத்சிங் என்னும் சீக்கியன் அவரின் தலைமயிரைப் பிடித்துத் து}க்கி நிமிர்த்தினான். பின்பு இந்தியில் ஏதோ திட்டினான். 'போரில் இரண்டு பக்கமும் இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான், ஆனால், போரில் எந்தச் சம்பந்தமும் இல்லாத பொது மக்களிடம் நீங்கள் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது" என ஆனந்தராஜா பதில் கூறினார். அதைக் கேட்ட டாக்டரின் முகம் கோபத்தினால் சிவந்தது.
'புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடத்தை நீங்கள் காட்டிக் கொடுத்தால் உங்கள் உயிரைக் காப்பாற்றும்படி மேலதிகாரிகளுக்கு நான் சிபாரிசு செய்வேன். நீங்களும் குடும்பஸ்தர், பள்ளியின் முதல்வராக இருப்பவர், எதற்காக வீணாக உயிரை இழக்க வேண்டும்" என்றார்.
அவரது வார்த்தைகளைக் கேட்டதும் ஆனந்தராஜா அந்த வேதனையின் நடுவிலும் சிரித்துக்கொண்டே 'டாக்டர் நான் கடவுளை பிரார்த்திக்கப் போகிறேன். இவ்வாறு கூறியதும் டாக்டர் சௌத்திரி வேகமாக விலகிச் சென்றார்.
அவர் போய்ச் சேர்ந்த சில நிமிடங்களில் பிரிகேடியர் சங்கர் பிரசாத், கர்னல் அவுஜியா, கர்னல் சர்மா ஆகியோர் ஜீப்பில் வந்து சேர்ந்தனர். நேராக ஆனந்தராஜா படுத்திருந்த கட்டிலை நோக்கி வந்தார்கள். அவரைப் பார்த்ததும் ஆச்சரியப்படுபவர் போல் பிரிகேடியர் நடந்தார்.
'என்ன மிஸ்டர் ஆனந்தராஜா என்ன நடந்தது. உங்களை எதற்காக இங்குக் கொண்டு வந்தார்கள்" என்று கேட்டார். என்னை ஏன் கொண்டுவந்தார்கள் என்பது எனக்கே தெரியாது. என்னுடைய கோலத்தைப் பாருங்கள் என்று கூறிக் குருதியில் தோய்ந்து உலர்ந்து இருந்த தனது சட்டை, வேட்டி, குருதி ஓடி உறைந்து போயிருந்த தலை எல்லாவற்றையும் பிரிகேடியருக்குக் காட்டினார்.
'மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாடுதானா உங்கள் நாடு? சே! என்னால் நம்பவே முடியவில்லை". என்று வேதனையோடு ஆனந்தராஜா கூறியபோது அந்தப் பிரிகேடியர் பின்வரும் பதிலைச் சொன்னார்.
'மிஸ்டர் ஆனந்தராஜா, வெரி சாரி, உங்களைத் தற்செயலாகத்தான் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக மனம் வருந்துகிறேன். உங்களுடைய சொல்லைப் புலிகள் கேட்கமாட்டார்கள். எப்படியாவது அவர்களை நாங்கள் அழித்து விடுவோம். அதற்கு உங்களைப் போன்ற படித்தவர்கள் தான் உதவி செய்ய வேண்டும். புலிகள் ஒளிந்திருக்கும் இடங்களை நீங்கள் கூறினால் உங்களைப் பத்திரமாக இந்தியாவுக்கே அனுப்பி அங்கே நீங்களும் உங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறோம். நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் முகத்தை மறைத்து முகமூடி போட்டு அழைத்துச் செல்கிறோம். எங்களுடைய ஜீப்பில் வந்தே புலிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்கலாம்" என்றார்.
பிரிகேடியரின் இந்தக் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தராஜா எரிச்சலுடன் பதில் கூறினார்.
'அத்தகைய துரோகத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். புலிகளை அழிக்க நினைப்பதை மறந்துவிட்டு அவர்களுடன் பேசிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது. அதை விட்டுவிட்டுச் சிறு பையன்களிடம் கூறுவது போல என்னிடம் கூறாதீர்கள்." என்று கூறிவிட்டு அவர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.
பிரிகேடியர் அருகே நின்ற கர்னல் சர்மா 'நாங்கள் சொன்னபடி செய்யாவிட்டால் உம்மை காங்கேசன்துறை முகாமுக்கு அனுப்பிவிடுவோம்" என்று மிரட்டினார்.
புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என்று சந்தேகத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சித்திரவதை முகாமான காங்கேசன்துறை முகாமுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு 750 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் 150 பேரை அடைத்து வைப்பார்கள். ஒரே ஒரு மலக்கூடத்தைத்தான் அத்தனை பேரும் பயன்படுத்த வேண்டும். சாப்பாடு ஒழுங்காக அளிக்கப்படுவது இல்லை. கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5ஃசிறீ வழங்கப்படவேண்டும் என்பது விதிமுறை ஆகும். அனால், கைதிகளிடம் கையெழுத்து பெற்றுக் கொள்வார்களே தவிர பணத்தைக் கொடுக்க மாட்டார்கள். இராணுவ அதிகாரிகளே அவற்றை எடுத்துக் கொள்வார்கள். யாராவது தப்பித் தவறி இதைத் தட்டிக் கேட்டால் அன்று முழுவதும் அவருக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும்.
முன்பொரு நாள் காங்கேயன்துறை முகாமுக்கு அங்குள்ள கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது குறைகளைக் கேட்டு ஏதாவது உதவி செய்வதற்காகச் சென்ற மக்கள் குழுவில் ஆனந்தராஜாவும் ஒருவராக இருந்தார். அந்தக் கொடுமையான முகாம் பற்றி அவருக்கு ஏற்கெனவே தெரியும். அதனால்தான் அவரை அந்த முகாமுக்கு அனுப்பப் போவதாக அதிகாரிகள் மிரட்டினார்கள்.
'அந்த முகாமுக்கு அனுப்புவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றால் கூட நீங்கள் கூறும் கீழ்த்தரமான வேலைகளை நான் செய்யப்போவது இல்லை" என ஆனந்தராஜா பதில் கூறினார்.
தங்களின் மிரட்டல் பலிக்காத கோபத்தில் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அவர் துயரம் அத்துடன் ஓயவில்லை. ஆகஸ்ட் 4 ஆம் நாள் அன்று காலை 10 மணி அளவில் டாக்டர் சௌத்திரி மீண்டும் வந்தார். ஆனந்தராஜாவிடம் ஒரு கோப்பைக் காட்டிக் கையெழுத்து போடும்படி வற்புறுத்தினார்.
'மிஸ்டர் ஆனந்தராஜா இங்கே அடைத்து வைக்கப்பட்டவர்களுள் 6 பேர் இறந்து போனார்கள். அவர்களின் அடையாளம் தெரியாததால் அவர்களை இங்கேயே தகனம் செய்துவிட்டோம்"
'டாக்டர், அவர்கள் இங்கே கொண்டு வரும்போது நின்றாகத்தானே இருந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவே. அப்பாவிப் பொது மக்கள்தானே, திடீர் என அவர்கள் எப்படி இறந்தார்கள்" என்று ஆனந்தராஜா கேட்டார்.
ஆனால் டாக்டர் எவ்விதப் பதிலும் சொல்லாமல் ஆறு பேரை எரித்ததற்கு ஆதாரமாக அவரிடமிருந்து கையெழுத்தைக் கட்டாயமாகப் பெற்றுக் கொண்டார்.
ஒரு மரண வீட்டில் துக்கம் கொண்டாடுவதற்காக உறவினர்கள் வந்து கூடியிருந்தார்கள். திடீர் என அந்த வீட்டை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடு இல்லாமல் வெளியே இழுத்து வந்து வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். நீங்கள் எல்லோரும் புலிகள், உங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வெறிபிடித்தவன் போல ஒரு சிப்பாய் கத்தினான். துக்க வீட்டில் இருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடிவந்து சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அனால், அந்த மூர்க்கர்களின் மனம் இரங்கவில்லை.
ஆண்களையெல்லாம் அடித்து இழுத்துக்கொண்டு முச்சந்தியை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்கு பின்னால் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் ஓடிவந்த பெண்களை 'புூட்ஸ்" கால்களினால் உதைத்தும், துப்பாக்கிக் கட்டைகளினால் அடித்தும் விரட்டினார்கள். வல்வெட்டித்துறைச் சந்தியை அடைந்ததும் அவர்களை ஒரு சாலையில் உட்கார வைத்தார்கள். முதல் நாள் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப்போய் அங்கேயே கிடந்தன. சிலருடைய தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எதிர்ப்புறமாக எரிந்த கடை ஒன்றின் முன்னால் நிற்க வைத்தார்கள். அடுத்து என்ன நிடக்குமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது. அங்கு நின்ற மற்றொரு சிப்பாய் அவ்வாறு நிறுத்தப்பட்ட ஆறு பேரையும் சுட்டுத் தள்ளினான். அந்த ஆறு பேரும் அந்த இடத்திலேயே அவர்களுடைய உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்க துடிதுடித்து இறந்தார்கள்.
மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகளையும் இந்திய இராணுவம் விட்டுவைக்கவில்லை. வல்வெட்டித்துறை இராணுவ முகாமிலிருந்து சிறிது தொலைவில் புூச்சிபுத்தான் என்ற இடத்தில் இருந்த கோழிப்பண்ணையை இந்திய இராணுவம் கொளுத்தியதன் விளைவாக அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட கோழிகள் எரிந்து கருகிப் போயின.
வல்வெட்டித்துறைப் பிள்ளையார் கோயில் ஊரிலிருந்து சிறிது ஒதுக்குப்புறத்தில் அமைந்து இருக்கிறது. பொதுவாக எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்கள் அங்கே ஓடி அடைக்கலம் புகுவார்கள். அன்றும் ஏறக்குறைய 400 பேர் வரையில் அந்த ஆலயத்திற்குள் தஞ்சம் புகுந்து இருந்தனர். அவர்களையும் இந்திய இராணுவம் விட்டுவைக்கவில்லை.
கோவில் என்றும் பார்க்காமல் புூட்ஸ் கால்களோடு வெறித்தனமாகப் பாய்ந்து ஓடி வந்தார்கள். உள்ளே நுழைந்த அவர்களின் கண்களுக்கு முதலில் பட்டவர்கள் கோயில் அர்ச்சகர்கள்தாம். அந்த இரண்டு அர்ச்சகர்களையும் கோவிலுக்குள் வைத்தே பலமாகத் தாக்கினார்கள். பிறகு அங்கிருந்த இளைஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து அடித்து வெளியே சந்திக்குக் கொண்டு வந்தார்கள். மேலும், மற்றப் பகுதிகளில் பிடிபட்டவர்களையும் அங்கே கூட்டி வந்தார்கள். கொதிக்கும் வெயிலில் அங்கிருந்து உருண்டுகொண்டே உடுப்பிட்டியில் இருந்த இந்திய இராணுவ முகாம் நோக்கிச் செல்லுமாறு ஆணையிட்டார்கள். கொதிக்கும் தார்ச்சாலையின் சூட்டைப் பொறுக்கமுடியாமல் வேதனையுடன் உருண்டு உருண்டு சென்று கொண்டிந்த மக்களை மரக்கட்டைகளால் அடித்துக் கொண்டே சென்றார்கள்.
உடுப்பிட்டி முகாமிலும் மிகக் கொடுமையான சித்திரவதைகள் நடந்தன. அதன் விளைவாக இறந்த 11 பேரின் சடலங்களை முகாமுக்குள்ளேயே மற்றக் கைதிகள் முன்னால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்.
வல்வெட்டித்துறையில் அன்று நாள்களாகத் தொடர்ந்து நரவேட்டை நடத்திய இந்திய இராணுவம் அச் செய்திகளை அடியோடு மறைத்தது. இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிடந்த மோதலில் சற்றும் எதிர்பாராத விதமாகப் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகச் சில வீடுகளும், கடைகளும் சேதம் அடைந்தன. இம்மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய இராணுவம் கூறிய அப்பட்டமான பொய்யை இந்திய வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிகைகளும் வெளியிட்டன. இந்தக் கொடுமைகளை அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்தன. ஆனால், அன்னிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள்தாம் முதன் முதலாக இந்திய அக்கிரமங்களை அம்பலப்படுத்தின.
அதைப் போல சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசியா வாட்ச் என்னும் உலக மனித உரிமை அமைப்புகள் வல்வெட்டித்துறைப் படுகொலைகளைப் பற்றி விசாரணை நடத்தி இந்திய இராணுவத்தைக் கண்டனம் செய்தன.
வல்வெட்டித்துறை மக்கள் குழுவின் செயலாளரும் இந்திய இராணுவத்தின் பாதிப்புக்கு நேரிடையே ஆளானவருமான ஆனந்தராஜா அவர்கள் தலைமையில் மக்கள் குழு ஒன்று சென்னைக்கு வந்து சகல அரசியல் தலைவர்களையும் சந்தித்து இந்தக் கொடுமைகளை அம்பலப்படுத்தியது.
இக்குழு டெல்லிக்கும் சென்று பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து உண்மையை விளக்கிற்று. ஜனதா தளப் பொதுச் செயலாளரான ஜார்ஜ் பெர்ன்னாண்டஸ் இந்தப் பிரச்சினையை அம்பலப்படுத்துவதில் முன்னின்றார். வெறும் வார்த்தைகளோடு அவர் நின்றுவிடவில்லை. வல்வெட்டித்துறைப் படுகொலை பற்றிய ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆங்கிலத்திலும், தமிழிலும், இந்தியிலும் நு}லாக வெளியிட்டு இந்தியா முழுவதிலும் மட்டுமன்று, உலகெங்கிலும் அனுப்பி இராஜீவ் அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். அவரின் இந்த முயற்சிக்குத் தமிழ் மக்கள் கடமைபட்டுள்ளார்கள்.
<b>யாழ். மருத்துவமனை</b>
27.2.90 அன்று யாழ். மருத்துவமனைக்குச் சென்றேன். இந்திய இராணுவம் செய்த கொடுமைகளுக்கெல்லாம் தலையாய கொடுமை இங்குதான் நடத்தப்பட்டது. எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இராணுவமோ, காவல்துறையோ உள்ளே புகக்கூடாது. போர் விதிகளில் மிக முக்கியமானதாக இதை உலகெங்கும் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தப் போர் விதியை இந்திய இராணுவம் அடியோடு மீறியது.
யாழ். நகரின் ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஆளானதால் ஆத்திரம் கொண்ட இந்திய இராணுவம் யாழ். மருத்துவமனையுள் வெறியுடன் புகுந்தது. அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றது. இந்தக் கொடிய நிகழ்ச்சியைப் பற்றி நேரில் விசாரிக்க நேரின் அங்கு சென்றேன். அங்குள்ள டாக்டர்கள் என்னை அன்போடு அழைத்துச் சென்று நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களை எனக்குக் காட்டினார்கள்.
இந்தியப் படை உள்ளே சுட்டுக்கொண்டே வந்தபோது மாடி அறை ஒன்றில் இருந்த டாக்டர்கள் இந்த ஒலி கேட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். 'இது மருத்துவமனை, நாங்கள் டாக்டர்கள்" என அவர்கள் அலறியதற்கு இந்தியப் படை செவிசாய்க்கவில்லை. மாடிப்படிகளிலேயே அவர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். மருத்துவமனையின் பல பகுதிகளில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டார்கள். இதன் விளைவாக டாக்டர்கள், செவிலியர்கள் 21 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் 109 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த மருத்துவமனையில் 89 ஆகிய இரண்டு பிரிவுகள் முழுமையாகச் சேதம் அடைந்துவிட்டன. படுகொலை செய்யப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெயர்கள் எழுதப்பட்ட பலகை மருத்துவமனையின் முகப்பில் தொங்கவிடப் பட்டுள்ளது. இஃது இந்திய இராணுவத்தின் கொடுமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த மருத்துவமனை டாக்டர்களும் செவிலியர்களும் இன்னமும் மீளவில்லை என்பதையும் நேரின் பார்த்தேன்.
<b>தம்பி வீட்டில் இந்தியப்படை</b>
1985 ஆம் ஆண்டு, அக்டோபரில் வல்வெட்டித்துறையில் உள்ள தம்பி பிரபாகரன் அவர்களுடைய வீட்டிற்கு நான் சென்று பார்த்தபொழுது வீட்டின் கூரை மட்டுமே நாசமாகிக் கிடந்தது. சுவர்கள் சேதமடையாமல் நின்றன. சிங்கள இராணுவம் அதற்கு மேல் நாசப்படுத்தவில்லை. ஆனால், ஐந்தாண்டுகளுக்குப் பின்பு 1990 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் அதே வீட்டைச் சென்று பார்த்தபொழுது சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டு அடியோடு நாசமாகிக் கிடந்தன.
பிரபாகரனைப் பிடிக்க முடியாத இந்திய இராணுவம் பீரங்கியால் சுட்டு அவரின் வீட்டை நாசப்படுத்தியது. பிரபாகரனைச் சுடமுடியாத ஆத்திரத்தை அவரது வீட்டைச் சுட்டுத் தீர்த்துக்கொண்டது.
அனாலும், இந்தியப்படை வீரர்கள் தம் நாட்டிற்குத் திரும்பும் சமயத்தில் அணி, அணியாக அந்த வீட்டிற்கு வந்து அதன் முன் நின்று ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த வினோதக் காட்சியை வல்வெட்டித்துறை மக்கள் வேடிக்கையாகப் பார்த்து இரசித்தனர்.
-பழ. நெடுமாறன்-
நன்றி-http://www.tamilnaatham.com
|
|
|
| இந்தோனேசியாவில் விமான விபத்து. |
|
Posted by: Rasikai - 09-05-2005, 05:48 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
<b>இந்தோனேசியாவில் விமான விபத்து.</b>
<img src='http://img270.imageshack.us/img270/1453/crashindonesia7by.jpg' border='0' alt='user posted image'>
இந்தோனேசியவில் இன்று பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விட்டது.
இதில் பயணம் செய்த 130 பேரும் இரந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்ரது.
இவ் விமானம் மக்கள் குடியிருப்பில் மேல் விழுந்து எரிந்ததால் பல வாகனங்கள் தீயுக்கு இரையாகி உள்ளன.
|
|
|
| பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா? |
|
Posted by: preethi - 09-05-2005, 04:21 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (305)
|
 |
எங்களில் பலருக்கும் பிராமணர்களைப் பற்றித் தெரியாது , நாங்கள் அவர்களை எங்களில் ஒருவராக நினைக்கிறோம், ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் தாங்கள் தமிழரல்ல ஆரியர்கள், எங்களை விட உயர்ந்தவர்கள் என்பது தான் அவர்களின் கருத்து. இந்தியா இப்படி இலங்கைத் தமிழர்களையும், எங்களின் விடுதலைப் போராட்டத்தியும் எதிர்ப்பதற்குக் காரணம் இந்திய அரசில் மிகவும் செல்வாக்குள்ள தமிழர்களை எதிர்க்கும் பிராமணர்கள் தான்.
இலங்கைப் பிராமணர்கள் கூடத் தங்களைத் தமிழரென்று கருதுவதில்லை. அவர்கள் தமிழை நீச பாசையென்றும் சமஷ்கிருத்தை தேவ பாசையென்றும் இழிவு செய்கிரார்கள். கனடா, மொண்ரியாலில் கூட ஈழத் தமிழர்களின் கோயிலில் கும்பாபிசேகம் என்பதை தமிழில் குடமுழுக்கு என்று போட்டதற்கு, எங்களின் தயவில் வாழும் கள்ளப் பிராமணி எதிர்ப்புத் தெரிவித்து பூசை செய்ய மறுத்தாராம். இதை உங்களால் நம்ப முடிகிறதா?
நானும் பிராமணர்களின் உண்மையான கருத்தைத் தெரியாமல் தான் இவ்வளவு நாளும் இருந்தேன். எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை உலகத்துக்கு, முக்கியமாக பிராமணரல்லாத இந்தியர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எங்களின் முக்கிய கடமை. இந்த இணையத் தளத்துக்குப் போய்ப் பாருங்கள் எந்தளவுக்குப் பிராமணர்கள், ஈழத் தமிழர்களையும், எங்களின் விடுதலைப் போராட்டத்தையும், எங்களின் விடுதலைப் போராளிகளையும், ஈழத் தமிழ்ப் பெண்களையும் இழிவு படுத்துகிறார்களென்று. எங்களின் இந்தியத் தமிழ்ச் சகோதரர்கள், இந்த ஈழத் தமிழர்ளை எதிர்க்கும், பெண் விடுதலைப் போராளிகளை இழிவு படுத்தும் பிராமணர்களோடு எங்களுக்காக வாதாடிக் களைத்துப் போய் விட்டார்கள். இனிமேலாவது "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்று எங்கள் தமிழ் முன்னோர்கள் சொல்லியதற்கிணங்க, தமிழையும், தமிழர்களையும் எதிர்க்கும் இந்த பிராமணர்களின் வாய்க் கொழுப்பு அடங்க நாங்கள் அவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டும், அப்பொழுது தான் அந்தப் பேராசைப் பார்ப்பன்களுக்கு ஈழத் தமிழர்கள் ஒன்றும் இழிச்ச வாயர்கள் இல்லையென்பது புரியும்.
நாம் ஈழத் தமிழர்கள், எங்கள் மத்தியில், எங்கள் தயவில் வாழ்ந்து கொண்டு எங்களின் முதுகில் குத்து தமிழ்பேசும் பிராமணர்களின் தமிழெதிர்ப்பை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஈழத் தமிழர்களின் இரத்தத்திலும், வியர்வையிலும் கட்டிய கோயில்களை பிராமண,சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து விடுவித்துத், சோழர் காலத்தில் இருந்தது போன்று தமிழாக்க வேண்டியது எங்களின் கடமை.
குண்டுச் சட்டிக்குள் இருந்து குதிரை விடுவது போல் சும்மா ஈழத்தமிழர்களுகுக் கதை விடுவதை விட்டு விட்டு, எங்களின் மத்தியில், எங்களின் தயவில் வாழ்ந்து கொண்டு, தமிழை எதிர்க்கும் பார்ப்பான்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, எங்களின் முன்னோர்கள் கட்டிக் காத்த தமிழ்ச் சைவ சமயத்தைத் தமிழையெதிர்க்கும் பிராமணர்களினதும், சமஸ்கிருதத்தினதும் பிடியிலிருந்து விடுவிக்க என்னுடன் இணையுங்கள்.
The Brahmins are against us. They are against Tamil, Tamil Elam, Tamil Nationalism. Who Ramsay, Hindu Ram, Jayalalitha and all other LTTE baiters are anti Tamil Brahmins.
Now is the time we have take a hard look at our Tamil speaking Brahmins of Tamil Eelam. The Brahmins are like snakes. They are greedy and want our money only, They don’t care about religion or Tamil people.
The Brahmins are calling us ‘black”refugees and drug runners and terrorists. They want Prabhakaran’s head to role. Our parents went everywhere as refugees without any. They went through all kind of hardship and humiliations. Worked menial jobs like dish washing for a minimum wage for so many hours. Then they built Temples and brought Anti Tamil Paarpaan and his families. Our brothers and sisters made $ seven an hour in a cruelling conditions and give it to one second “swaha” $5 for archanai ticket and 2 dollar ‘tharchanai’. That is even not in Tamil, we don’t even understand what he is saying. He is more concerned about how much we are going to put in his plate than praying to God. But, why are we, the educated and affluent Canadian Tamils allow this type of day robbery to continue in the name of religion. We all should ask this question to us. Let the Paarpaans to go wash the dishes. .
Why we need this pompous Paarpaans as an intermediary between us and Gods. Why can’t we have a non Brahmin Tamil priest who can do things in Tamil. I am not a disgruntled old person, im young and religious Tamil too. I have seen the Tamil speaking Brahmin’s attitudes in our Temples and other message boards. Why are we pouring milk to these poisonous Paarpaans? When are we going to take back our temples from the Clutches of these anti Tamil Brahmins who think they are better than us?
I would like the Tamils in this forum to write these things to our Canadian Tamil news papers. Let us stir up a controversy, let us question our belief system. Let us educate the Tamil people of this anti Tamil Brahmins’ attitude toward us. Let us make our Temples Tamil again like the Chola period. Let us start this Saiva Tamil reform from Canada. Now we have the economic clout and numerical strength in Canada.
[/quote]
|
|
|
| TRO-USA |
|
Posted by: வினித் - 09-05-2005, 01:24 PM - Forum: புலம்
- Replies (4)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>TRO-USA appeals for funds to help Katrina Hurricane victims</span>
[TamilNet, September 05, 2005 12:37 GMT]
Tamils Rehabilitation Organization (TRO-USA), head quartered in Cumberland, Maryland, posted an appeal in its website, soliciting funds to help the victims of hurricane Katrina which hit New Orleans, Louisiana displacing 220,000 people and killing several thousands. "TRO is very grateful of the tremendous help provided by American people during Tsunami and wishes to express its sympathy for the victims of Katrina and encourages all of you to help with Katrina relief efforts," the posting on the website said.
"Our target is to collect US$25k-$35k. With the number of inquiries we have had from expatriate Tamils in the US and in some other countries, and the offers of help, I strongly feel we can achieve this target," TRO's President Dr Ranjithan told TamilNet when asked to comment on the appeal.
"Although we have not yet decided where to channel the collected funds, since a plane load of hurricane survivors are expected to arrive to Washington D.C to be housed in D.C Armory, we are reviewing whether if it is logistically prudent to offer the donated funds for this effort," TRO's President added.
Hurricane Katrina developed from a tropical wave about 175 miles east of Nassau. The hurricane strengthened to a Category 1 hurricane before making landfall on the Miami-Dade/Broward county line in Florida. After moving southwest across Florida the hurricane exited west into the Gulf of Mexico where it underwent rapid intensification, reaching Category 5 on August 28, 2005 and remaining there for the entire day. It made its second landfall near Grand Isle, Louisiana with 140 mph winds, or Category 4, on August 29, 2005. Hurricane Katrina's eyewall then passed over the eastern edge of New Orleans before the hurricane was again over water. A few hours later it made landfall for a third time near the Louisiana/Mississippi border with 125 mph winds, or Category 3. It weakened from this point forward, losing hurricane status crossing over 100 miles inland, near Laurel, Mississippi. It was downgraded to a tropical depression near Clarksville, Tennessee as it continued to race northward.
Early in the morning of August 30, 2005 and as a direct result of Hurricane Katrina, breaches in three places of the levee system on the Lake Pontchartrain side of New Orleans caused a second and even greater disaster. Heavy flooding covered almost the entire city over a sustained period, forcing the total evacuation of over a million people. The city was now uninhabitable, due to 80% of its area being below sea level meaning that the water had nowhere to go.
www.tamilnet.com
|
|
|
| நோர்வே செய்திகள் |
|
Posted by: Mathuran - 09-05-2005, 11:27 AM - Forum: புலம்
- Replies (16)
|
 |
<img src='http://www.yarl.com/forum/weblogs/upload/15/1603007486431c2d06f0d7b.jpg' border='0' alt='user posted image'>நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் தமிழரான பாலசிங்கம் யோகராஜாவின் பெயர் இடம்பெற்றிருக்கின்றது.
கடந்த 2003 ஆம் ஆண்டு நோர்வே நகரசபைத் தேர்தலில், நோர்வே தமிழ் மக்களின் பிரதிநிதியாக தொழிற்கட்சி உறுப்பினரான பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) போட்டியிட்டு ஒஸ்லோ வாழ் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இம்மாதம் 12 ஆம் திகதி (செப்.12) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் பாலசிங்கம் யோகராஜாவின் பெயரும் இடம்பெற்றிருக்கின்றது.
இது நோர்வே தமிழர்களின் அரசியல் பிரவேசத்தின் படிநிலை வளர்ச்சியாகும்.
இவரது பெயர் தொழிற்கட்சி வேட்பாளர் பட்டியலில் 18 ஆவது இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. எனவே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவென்ற போதும், தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரின் பெயர் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றமை எதிர்காலத்தில் நோர்வே நாட்டில் தமிழர்கள் அரசியலில் தடம் பதிப்பதற்கான புடம் போடப்படுகின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது.
நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாலசிங்கம் யோகராஜா தெரிவித்ததாவது:
இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள். தொலைநோக்கு அடிப்படையில் எமது இருப்பு இங்கேதான் அமையப்போகின்றது என்ற யதார்த்தப் புறநிலையில், நாமும் இந்த நாட்டின் அரசியலில் முக்கிய அங்கமாகின்றோம். இந்த ஆரம்ப முயற்சியை வழிகாட்டலாகக் கொண்டு நோர்வேயில் வாழும் இளைய தமிழர்கள் நோர்வே அரசியலிலும் சமூகத்திலும் ஈடுபாடு கொள்ளவேண்டும், செயல் முனைப்புக் கொள்ளவேண்டும்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களின் சார்பில் ஒரு பிரதிநிதியை நோர்வே நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான முனைப்போடு நாம் உழைக்க வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் நாம் அரசியல் உட்பட பல தளங்களிலும் பலமாக வளரும் போதுதான் தாயக மக்களின் கெளரவமான வாழ்வுக்கும் பலம் சேர்ப்பவர்களாக நாம் கடமையாற்ற முடியும்.
இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் எமது வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கடந்த 2003 ஆம் ஆண்டு, நகரசபைத்தேர்தலில் 57 விழுக்காடுடைய தமிழ்மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது நோர்வே அரசியல் தளத்தில் அவதானிக்கப்பட்ட முக்கிய விடயம்.
அதிலும் குறிப்பாக அதிகமான தமிழ்ப் பெண்கள் தேர்தலில் வாக்களித்தமை உயர்வாகப் பேசப்படுகின்றது.
ஆனபோதும் வாக்குரிமையுடைய 43 விழுக்காட்டினர் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவில்லை என்பது கவலையளிக்கின்ற விடயமேயாகும்.
எனவே இம்முறை தமிழ்மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தப்படுமேயானால் எமது வாக்குப்பலம் தேர்தலில் வெகுவாகப் பிரதிபலிக்கும் என்றார் பாலசிங்கம் யோகராஜா.
நன்றி புதினம்
|
|
|
|