Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 229 online users.
» 0 Member(s) | 227 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,516
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஆணென்ன பெண்ணென்ன...!
Posted by: kuruvikal - 09-25-2005, 07:52 AM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

<img src='http://img379.imageshack.us/img379/7615/cimg44915vs.jpg' border='0' alt='user posted image'>

<b>எத்தனை குஞ்சுகள்
அத்தனை பாசம்
சிறகுக்குள் அடங்கி விட்ட
அன்பு சிறைக்குள்..!

சேவலைத் தேடா
தன் சேய்க்காய் வாழும்
அந்தப் பேடு
பேசியா பொழுது கழிக்கிறது...?!

சுதந்திரம் தேடும்
ஆறறிவு மனிதா
உன்னிடம் மட்டும்
ஏன் இல்லை இந்தக் குணம்...??!
இயல்பாய்...
அன்பால் அணைத்துக் கொள்
ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் ஓரினமே..!</b>

படம் - யாழ் களம் தியாகம்..!

Print this item

  செல்போன் ஷாக்: வாலிபரின் காது செவிடானது.
Posted by: kuruvikal - 09-25-2005, 07:03 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

செல்போனில் ஷாக் அடித்ததால் அதைப் பயன்படுத்தியவருக்கு காது செவிடானது.

கோயம்புத்தூர் அருகே உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டி (33). மில் அதிபரான இவர் செல்போனை சார்ஜரில் மாட்டி, சார்ஜ் ஏற்றியடிபடி அதில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் பேட்டரியில் இருந்து கசிந்த மின்சாரம் பாண்டியின் காதைத் தாக்கியது. இதில் அவரது காது புண்ணாகிவிட்டது, மேலும் வலிப்பும் ஏற்பட்டது. இதனால் அவரது ஒரு காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. மேலும் முகத்தின் ஒரு பகுதியும் நாக்கும் இழுத்துக் கொண்டன.

மின்சாரம் பாய்ந்ததில் செல்போனின் ஸ்பீக்கரும் கருகிவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் சார்ஜரில் மாட்டியபடி செல்போனை உபயோகிக்காதீர்கள்.

thatstamil.com

Print this item

  தேர்தல் திருவிழாவில் அருளர்.
Posted by: விது - 09-25-2005, 03:58 AM - Forum: தமிழீழம் - No Replies

தேர்தல் திருவிழாவில் அருளர் வருகிறார். இவர் ஆரம்பகால ஈரோஸ் உறுப்பினர். ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். ஒரு பொறியியலாளர். ஈரோஸ் அமைப்பைக் கலைத்த பிறகு விடுதலைப் புலிகளின் கீழ் நிர்வகிக்கப்பட்ட தமீழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் கடமையாறிறியவர். யாழ் குடாநாட்டு இடப்பெயர்வு ஏற்படும் வரைக்கும்; தொடர்ந்து வேலை செய்தவர். அதற்குப் பின்னர் கொழும்புக்குச் சென்றவர். கொழும்பிலிருந்து சிங்களத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தவர். ஆரம்பகாலம் தொடக்கம் எல்லாத் தமிழ்த் தேசியத்திற்கு முரணான குழுக்களுடனும் தொடர்பு இருந்து வந்தது. 1980 காலப்பகுதியில் தமிழ்க் குழுக்களுடன் நெருக்கமான தொடர்புகள் இருந்தது. எல்லா இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும் என்பதில் எல்லா இயக்ங்களுடனும் கைகோர்த்து ஒத்துப் போகக் கூடிய ஒரு பேச்சுக்களில் ஈடுபட்டு வந்தவர். புலிகளின் தலைவரின் மதிப்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர் இந்த அருளர். பிற்காலத்திலும் இந்த நன்மதிப்பானது இருந்து வந்தது.

அருளரின் காலப்பிழையினால் கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இவருக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. ஈ.பி.டி.பி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிட இருந்தவர். அதன் அடிப்படையில் அது தொடர்பாகக் கதைப்பதற்கு விடுதலைப் புலிகளிடம் வன்னிக்கும் சென்றிருந்தவர். விடுதலைப் புலிகளின் தரப்பு நியாயத்தைக் கேட்டுக்கொண்டு இவருடைய ஈ.பி.டி.பி தொடர்பான தேர்தல் நிலைப்பாடு விடுதலைப் புலிகளால் நிராகரிகப்பட்ட நிலையில் வன்னியிலிருந்து மீண்டும் பாதுகாப்பாகக் கொழும்புக்கு வந்து சேர்ந்தவர்.

தற்போது புளொட் அமைப்பின் சின்னத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் ஆதரவுடன் போட்டியிடப் போகின்றார். இவர் ஒரு பட்டம் பதவி என்றால் எந்த விசப்பரீட்சையிலும் குதிப்பார். இவரை வைத்து ஈ.பி.டி.பியும் புளொட்டும் சவாரி செய்ய முற்படுகிறது. இவர் ஒரு அரசியல் கற்றுக்குட்டி போராட்டத்தின் ஆரம்பகால விடயங்கள் சிலவற்றை அறிந்திருந்தாலும் அரசியல் தொடர்பாக இவருக்கு அறவே அறிவு கிடையாது.

அப்படி ஒரு அறிவு எங்காவது ஒரு மூலையில் இருந்திருந்தால் இத்தகைய விசப்பரீட்சையில் இறங்கமாட்டார் என்று கருதலாம். அவர் தான் படித்த தொழிற்துறையில் ஒரு நிபுணத்துவம் உடையவராக இருக்கலாம். ஆனால் இத்தகைய ஒரு அரசியல் கற்றுக்குட்டி விடுதலைப் புலிகளின் தலைவருக்குக் கடிதம் எழுதி அதனைத் தினகரனில் பிரசுரிக்க எந்தத் தகுதியும் இல்லை.

பொதுவாக நல்ல ஒரு மனிதன். நல்ல பண்புள்ள மனிதன். ஆனால் அரசியல் அறிவு இல்லை. யாருடன் சேரவேண்டும் யாருடைய அரசியல் நுணுக்கங்கள் இராஜதந்திரங்கள் நல்லவை கெட்டவை என்பது தொடர்பான தெளிவு இல்லாததால் இந்தத் தேசவிரோத சக்திகளுக்குப் பின்னால் இவரும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்.

சிவாரம் புளொட் அமைப்பினரால் கொலை செய்யபட்ட பிறகு இதுவரைக்கும் சித்தார்த்தன் எங்கே என்றே தெரியாது. இடைக்கிடை டக்ளஸ் தேவானந்தாவின் வேட்டிக்குப் பின்னால் நின்று புகைப்படத்துக்கு மட்டும் போஸ் கொடுக்கிறார்.

புளொட் குழு என்பது இலங்கையில் பதிவு செய்யபட்ட ஒரு அரசியல் குழு இல்லை. அதன் அரசியல் குழு என்று டி.பி.எல்.எவ் என்ற ஒன்று இருக்கிறது. இதன் தலைவர்தான் சித்தார்த்தன். ஆகவே அருளர் போட்டியிடுவதாக இருந்தால் சித்தார்த்தன் முதல் இதனை அறிவிக்க வேண்டும்.

மொத்தத்தில் காலப்பிழைக்கு அருளர் காவடியைத் து}க்கித் தோழில் வைத்திருக் முற்படுகின்றார். அருளர் தீண்டத்தக்கதாக தமிழ் விரோதத் துரோக சக்திகளுடன் சேர்ந்தது. தமிழ் மக்களுக்கு அரசியல் கோமாளித்தனத்தைக் காட்ட முற்படுகின்றார். இந்தியாவிலிருக்கும் சுப்பிரமணிய சுவாமியின் பாதையில் இவரும் கொழும்பில் வலம்வர முற்படுகின்றார். இலங்கையின் கேடுகெட்ட அரசியலில் ஒரு பௌத்த மதத்தைத் தழுவியவர் தான் ஜனாதிபதியாக வரமுடியும் என்று அழுத்தம் திருத்தமாக எழுதி இருக்கிறது.
1977 ம் ஆண்டு தமிழ் மக்கள் சிங்களவர்களால் துரத்தப்பட்ட போது லங்காராணி கப்பலில் யாழ் வந்த விடயத்துடன் கூடவே தமிழர் தாயகப் போராட்டம் தொடர்பாக ஒரு நு}லையும் எழுதியவர். இவருடைய மகள் தான் மீயா என்கின்ற மாயா. அவருடைய தகப்பனார்தான் இந்த அருளர். மீயா ஒரு பொப்பிசைப் பாடகியாகவும் வெளிநாட்டு மேற்கத்தைய பாணியிலை வளர்த்து வைத்திருக்கிறார். தாயகப் போராட்டம் என்று சொல்லி அதனைக் கொச்சைப்படுத்தும் முகமாக பல செயல்களை இணையத்திலும் நடைமுறையிலும் செய்துள்ளளர்.




வாறார் வாறார் புள்ளடியார் வாறார் வாறார் புள்ளடியார்

எனக்குப் புள்ளடி போடுங்கோ எனக்குப் புள்ளடி போடுங்கோ என்று சந்திகளில் நின்று கத்துவார்.

எல்லோர் முன்னாலும் பல்லைக் காட்டுவார்.

தங்களின் வால்களில் தொங்கிடச் சொன்னார் என்று எங்கள் தலைவர்கள் உரைத்தனர்.

பொய்யும் புழுகும் புரட்டும்

சீ

புழுத்துப்போன அரசியலே.

பெரிய தேர்தல் சிறிய தேர்தல்.

குட்டித் தேர்தல் குஞ்சித் தேர்தல்

ஒன்று முடிய இன்னொன்று எந்த நாளும் திருவிழாத்தான்.

வாறார் வாறார் புள்ளடியார்

திரும்பி வாறார் புள்ளடியார்.

ஆடி வாறார் புள்ளடியார்.

தேடி வாறார் புள்ளடியார்.

குட்டித் தேர்தல் வைக்கவும் கெட்டித்தனத்தைக் கணிக்கவும்

பட்டம் பதவி கொடுக்கவும்

திட்டம் கொண்டு வருகிறார்.

வாறார் வாறார் புள்ளடியார் வாறார் வாறார் புள்ளடியார்

நன்றி மாவை நித்தி

http://www.nitharsanam.com/?art=11854

Print this item

  கனடாவில் இரு தமிழர்கள் கொலை
Posted by: malaravan - 09-25-2005, 03:27 AM - Forum: புலம் - Replies (24)

கனடா நாட்டின் ஒன்ராறியோ மாநிலத்திலுள்ள வோட்டர்லு} பகுதியில் வாகனம் மோதியதில் ரொரண்ரோவைச் சேர்ந்த சகோதரர்களான இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் வோட்டர்லு}வைச் சேர்ந்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சௌமியன் நகுலசிகாமணி (அகவை 19) மற்றும் சந்திரசேகர் நகுலசிகாமணி (அகவை 21) ஆகிய சகோதரர்களே கொல்லப்பட்டுள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் உள்ள வீதியொன்றிலிருந்து இவர்களது சடலங்களை தாம் மீட்டதாகவும் இவர்களை மோதிவிட்டு தப்பியோடிய வாகனத்தை தாங்கள் தேடிவருவதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் வோட்டர்லு} பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மலரவன்

Print this item

  ஜனாதிபதி தேர்தலில் எவரையும் தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்காது
Posted by: வினித் - 09-24-2005, 08:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஜனாதிபதி தேர்தலில் எவரையும் தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்காது
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவருக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லையென திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சாதகமான எந்தவொரு திட்டத்தையும் முன் வைக்காததன் விளைவாகவே இந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த பின்னரே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது சமாதானத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த பற்றுறுதி வெளிக்கொணரப்பட்ட போதும் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த ஐ. தே. முன்னணி அரசை பதவியில் இருந்து தூக்கி எறிந்த தென்னிலங்கை சிங்கள மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிப் பீடமேற ஆணை வழங்கினர். இதனால் சமாதானப் பேச்சுவார்த்தையில் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு நம்பிக்கையில்லையென்பது தெளிவாகியது.

ஆகையால் ஜனாதிபதி தேர்தலிலும் யாரை தெரிவு செய்ய வேண்டுமென்பதை தென்னிலங்கை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டுமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கருதுகிறது


http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Print this item

  ஒருவாரத்தினுள் குடாநாடு கைவசமாகும்..
Posted by: வினித் - 09-24-2005, 07:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

போர் வலிந்து திணிக்கப்பட்டால்
குடாநாடு ஒருவார காலத்தினுள் கைவசமாகும்
(வடமராட்சி)

நடைமுறையிலுள்ள தமிழீழ அரசாங்கத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டுமெனக் கோரி 30 ஆம் திகதி நடத்துவதற்கு யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொங்கு தமிழ் எழுச்சி மாநாட்டை சிறப்பிக்கும் வண்ணம் பிரதேசங்கள் தோறும் எழுச்சிக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் பருத்தித்துறையிலுள்ள பொது அமைப்புக்களுக்கான பொங்கு தமிழ் ஏற்பாடு தொடர்பான கூட்டம் பருத்தித்துறை சுப்பர் மடம் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் ஜோன் பொஸ்கோ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் சர்வதேச மாணவர் பேரவையைச் சேர்ந்த பிரபா ஆகியோர் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் இப்பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்திப் பேசினார்.

கஜேந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்:

நாம் போரை வலிந்து ஏற்படுத்தவில்லை. எமது மக்களும் சமாதானம் மூலமே எமது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். எனினும் எம்மீது வலிந்து போர் ஒன்று திணிக்கப்படுமானால் ஒரு வார காலத்திற்குள் யாழ். குடாநாடு பிடிக்கப்படும் என அறைகூவல் விடுத்தார்.

இவ் எழுச்சிக் கூட்டத்தில் பருத்தித்துறைப் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேவேளை வடமராட்சி வடக்குப் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் பொங்கு தமிழ் தொடர்பான விழிப்புணர்வுகளை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான கூட்டங்களை நடத்துவதெனவும் முடிவு எடுக்கப்பட்டது.


http://www.virakesari.lk/VIRA/20050925/pol...cal_news.htm#p1

Print this item

  பொங்கு தமிழ்: படையினர் இடையூறு
Posted by: வினித் - 09-24-2005, 07:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

பொங்கு தமிழ் ஏற்பாடுகள் தீவிரம்
இடையூறு விளைவிக்க படையினர் முயற்சி
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு

யாழ். குடாநாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் நிகழ்விற்கு குடாநாட்டு சமூகம் தயாராகி வருகின்ற போது அதற்கு இடையூறு விளைவிக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு முற்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வெள்ளியன்று முகமாலையில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதியொருவர் படையினரால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்ட குற்றச்சாட்டை அது எழுப்பியுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதும் யாழ். மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளதுமான பளைப் பிரதேசத்தில் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்விற்கான மக்களை அணி திரட்டும் பணியில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த விஞ்ஞான பீட மாணவர் ஒருவரே முகமாலையில் வைத்து படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது கைப் பையினுள் விடுதலைப் புலிகளது அங்கத்தவர்களது பாவனையிலுள்ளது போன்றதோர் அடையாள இலக்கத்தகடினை குடாநாட்டினுள் எடுத்து வர முற்பட்ட வேளையிலேயே குறித்த மாணவன் தம்மால் பிடிக்கப்பட்டதாக படைத்தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் படையினர் திட்டமிட்டு சோதனை நடவடிக்கையின்போது குறித்த மாணவனின் கைப்பையினுள் இலக்கத் தகடினை போட்டுவிட்டு பின்னர் அதனை கண்டெடுத்ததாக நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மாணவர் அமைப்பு சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை குறித்த மாணவனை அச்சுறுத்தி ஒப்பம் பெற படையினர் மேற்கொண்ட முயற்சிகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.

http://www.virakesari.lk/VIRA/20050925/index.htm

Print this item

  விஜயகாந்திற்குப் போட்டியாக கார்த்திக் புதிய கட்சி தொடங்குகிற
Posted by: கீதா - 09-24-2005, 07:29 PM - Forum: சினிமா - No Replies

விஜயகாந்திற்குப் போட்டியாக கார்த்திக் புதிய கட்சி தொடங்குகிறார்.



வறுமையில் வாடிய கார்த்திக்கை மீட்டுவந்து மறுவாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த் என்று முன்னர் கூறப்பட்டது.
இதற்கு பிரதியுபகாரமாக கார்த்திக் விஜயகாந்த் கட்சியில் இணைந்து செயற்படுவார் என்று முதலில் கூறப்பட்டது.
இப்போது கார்த்திக் விஜயகாந்தைப் போல தானும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படி எல்லா நடிகர்களையும் பணத்தைக் கொடுத்து ஏவிவிட்டால் மக்கள் அனைத்து நடிகர்களையும் கைவிடும் நிலை வரும் என்று பழுத்து அரசியல் முதலைகள் கருதுவதாகக் கூறப்படுகிறது.

Print this item

  திருமலைக் கடலில் விசித்திர ஒளி
Posted by: வினித் - 09-24-2005, 05:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (28)

திருமலைக் கடலில் விசித்திர ஒளி
திருமலை 24-09-2005

திருமலை டைக்ஸ் வீதியில் உள்ள வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள கடலில் ஒர் வீசித்திர ஒளி தென்படுவதாகவும், இதனை அச்சம் கலந்த நிலையில் அயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார். அத்துடன் கடல் நீரில் ஒருவித பச்சை நிறம் கலந்து காணப்படுவதாகவும் அவர் தெரவித்துள்ளார்.
கடலில் சிலர் கற்களை எறிந்தபோது மென் பச்சை நிறத்தில் நீர் தெறித்துள்ளது. இதனையடுத்த கடல் நீரை பாத்திரங்களில் அள்ளிச் சென்று கடற்கரையிலிருந்து சற்றுத் தூரத்தில் கொண்டு சென்று ஊற்றியபோதும் அதே நிறத்திலேயே நீர் தெரிந்ததாகவும் அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனார். ஆனால் அவர்கள் மத்தியில் ஓர் அச்சநிலை தோன்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.

எதனால் இந்த ஒளிக்கீற்றும், கடலின் நீரின் நிறம் மாறியுள்ளது என்பது தொடர்பில் எதுவும் தெரியாத நிலையிலேயே மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இதேவேளை திருமலை மாவட்டத்தின் வேறு சில பகுதிகளில் கடல் நீர் சற்று உட்சென்றுள்ள தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அத்தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் தரப்படும்

http://www.sankathi.net/index.php?option=c...=2661&Itemid=41

Print this item

  படித்ததில் பிடித்தவை.........
Posted by: sakthy - 09-24-2005, 05:53 PM - Forum: கவிதை/பாடல் - Replies (50)

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் கவிந்துள்ளன
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும்
கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும்
இறுகிய உதடுகள் ஒரு நாள் துடிதுடிக்கும்
கண்டிய பற்களும் ஒரு நாள் நற நறுக்கும்

அதுவரை எங்களை நீங்கள் ஆள்க
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக
- சண்முகம் சிவலிங்கம்(" மரணத்துள் வாழ்வோம்" )

Print this item