| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 433 online users. » 0 Member(s) | 430 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்! |
|
Posted by: KULAKADDAN - 09-26-2005, 02:59 PM - Forum: குறும்படங்கள்
- Replies (3)
|
 |
<b>4வது சர்வதேசத் தமிழ் குறுந்திரைப்பட விழா</b>
சற்று முன்னர்தான், ரொறொண்டோவில் தமிழ்க் குறுந்திரைப்பட விழா நடந்து முடிந்திருந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட இருபத்தைந்து குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. படங்களின் நேரவளவு, ஒரு நிமிடத்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை பல்வேறு வகையான காலவளவுகளுக்குள் இருந்தன. எல்லாத் திரைப்படங்களையும் அறிமுகஞ் செய்தல் இயலாத காரியமாகையால் என்னைப் பாதித்த/நான் இரசித்த படங்கள் பற்றிய சில குறிப்புக்களைத் தரலாம் என்று நினைக்கின்றேன்.
<span style='color:green'>கிச்சான்
இந்தப் படம் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தை பின்புலமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கி சற்றுப்பின்னரே நான் இதைப் பார்க்கத் தொடங்கியதால் முழுக்கதையும் தெரியாவிட்டாலும், ஏழ்மையின் காரணமாக படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் சிறுவனொருவனின் வாழ்வைப் பதிவு செய்கின்றது இப்படம். அவனது தகப்பன் இராணுவத்தால் கொல்லப்படவும், தாய் வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்வதற்காய் கடல் கடந்து போகையில் இடையில் காணாமல்/எந்தத் தொடர்பும் இல்லாது போவதாயும் சிறுவனுக்கு ஆதரவாய் ஒரெயொரு வயது முதிர்ந்த பாட்டியொருவர் மட்டுமே இருப்பதாய்க் காட்டப்படுகின்றது. வருமானம் எதுவுமின்றி வறுமையால் அல்லறும் சிறுவன் தன் படிப்பை இடைநடுவில் நிறுத்தி இறுதியில் வேலைக்குப் போகின்றான். அவனது வயதுக்குரிய, மற்றச்சிறுவர்கள் செய்யும் எதையும் செய்யவியலாத இயலாமையைப் படம் அழகாக எடுத்துரைக்கின்றது. சிறுவனாக நடித்த பையனுக்கு விழாவின் இறுதியில் வழங்கப்பட்ட விருதில் சிறந்த நடிகனுக்கான பரிசு வழங்கப்பட்டது. உரிய அங்கீகாரம்தான்.
<span style='color:green'>வெள்ளைப் பூனை
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவக்குமார், இடாலானோ கால்வினோவின் ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டு இக்குறுந்திரைப்படத்தை எடுத்திருந்தார். ஒற்றை அறையுள்ள வீட்டில் ஒரு தம்பதியினரையும், எதுவுமே பேசமுடியாத கடும் நோயுற்றிருக்கும் ஆணின் தாயையும் சுற்றிக்கதை நகர்கின்றது. ஒரு தம்பதிகளுக்குரிய இடையில் எழும் இயல்பான பாலியல் உணர்ச்சிகளைக் கூட பிடித்தமான சூழ்நிலையில் காட்டமுடியாத ஒற்றை அறை வாசமும், வெவ்வேறு நேரங்களில் அவர்கள் செய்யும் வேலைகளும் அவர்களை அவர்கள்பாட்டில் சுய இன்பத்தில் அலைய விடுகின்றது. வெவ்வேறு நேரங்களில் அவர்கள் ஈடுபடும் சுய இனபத்தில் ஒரு வெள்ளைப்பூனை மட்டும் இரண்டு பேருக்கும் சாட்சியாக இருக்கின்றது. மிக இயல்பாய் எதையும் அளவுக்கும் மீறிப் பேசாமல் இந்தப்படம் பத்து நிமிடங்களுக்குள் சொல்ல வந்ததைக் கூறி நிற்கின்றது.தம்பதிகளில் ஒருவராக நடித்த லீனா மணிமேகலை மிக அற்புதமாய்ச் செய்திருந்த்தார். சிறந்த திரைப்படத்துக்கான விருதை இந்தப்படம் பெற்றதில் எதுவும் ஆச்சரியமில்லை.
[size=18]
You 2
கணவனால் வன்முறைக்குள்ளாக்கப்படும் பெண், தனது பிள்ளையும் கூட்டிக்கொண்டு ஒரு சினேகிதியின் வீட்டுக்கு வருகின்றார். அங்கே தங்கியிருக்கையில் ஆண்கள் இல்லாது தனித்து வாழ்வோம் என்று எண்ணமும், இரு பெண்களுக்கும் இடையே முகிழும் அந்நியோன்னியமும் அவர்களை சமப்பாலுறவாளராக்குகின்றது. எனினும் இருபெண்களுக்கிடையில் ஒரு பெண் மேலாதிக்கவாதியாக படிப்படியாக மாறி இறுதியில் (கணவனின் வன்முறையால் வீட்டை விட்டுவந்த) மற்றப்பெண்ணை ஒரு பிரச்சினையின் நிமிர்த்தம் கை நீட்டி ஓங்கவும், 'நீயும் கூடவா?' என்று கேள்வியை பார்ப்பவரிடையே விட்டுச் செல்வதுடன் படம் முடிகின்றது. ஆண்-பெண்ணுக்கிடையில் மட்டுமல்ல, பெண்-பெண்ணுக்குமிடையிலான உறவில் கூட வ்ன்முறை/சுரண்டல்கள் வரலாம் என்ற சிந்திக்கக்கூடிய விடயத்தை தொட்டுச்செல்கின்றது. எங்கேயும் ஒரு ஆதிக்கம் வருகையில், அது வன்முறையாகத்தான் இறுதியில் உருவெடுக்கச் செய்கின்றது. அது ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்த்தால் என்ன? ஒரே மாதிரித்தான் இருக்கின்றது. இந்தப்படத்தில் சுமதி ரூபனும்(கறுப்பியும்), இன்னொரு பெண்ணும் நன்றாக நடித்திருந்தனர். சிறந்த திரைக்கதைக்கான விருதை சுமதி ரூபன் பெற்றிருந்தார்.
[size=18]Rape
காலம் காலமாய் தமிழ்ப்பெண்கள் மீது ஏனைய இராணுவங்களால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளையும் சித்திரவதைகளையும் இது ஆவணப்படுத்துகின்றது. 50களில் ஆரம்பித்த கலவரத்தில் பாலியல் வன்புணரப்பட்ட பெண்களிலிருந்து, அண்மையில் (2001) மன்னாரில் வன்புணரப்பட்ட இருபெண்கள் வரை பேசப்படுகின்றது. 'சிறி' என்ற சிங்கள முத்திரையை, பெண்களை பாலியல் வன்புணர்ந்து முலைகளில் குத்தியிருந்து தொடக்கம், கர்ப்பிணிப்பெண்களை கூட்டாய் வன்புணர்ந்தது வரை பார்த்தவர்களின் நேரடிப்பேச்சால் ஆவணப்படுத்தப்படும்போது சொல்வதற்கு நிச்சயம் சொற்கள் எதுவும் நமக்கு எஞ்சியிருக்கப்போவதில்லை. அதிலும் கலவரம் ஒன்றில் ஜந்து இராணுவத்தால் வன்புணரப்பட்ட ஒரு பெண் தன் வாயால் நிகழ்ந்ததைக் கூறும்போது..... #%^$ U #$%$@! என்று swear பண்ணாமல் நிச்சயம் இருக்கமுடியாது. வெளியுலகத்துக்கு இதுவரை மறைக்கப்பட்ட, பல உண்மைகளை இது அம்பலத்தப்படுகின்றது. பாலியல் வன்புணரப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வாழ்வேன் என்று நம்பிக்கையாக எழுந்த அந்தப்பெண்மணியையும், பாலியல் வன்புணரப்பட்டாலும் நீங்கள் எந்தக்குற்றமும் செய்யவில்லை அந்த நிகழ்வை அசட்டை செய்து வாழ்வில் நீங்கள் கட்டாயம் நகரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காய், எழும் ஒரு திருச்சபை ஆயரின் வார்த்தைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் ஆதரவைத் தரும். பாலியல் வன்புணரப்பட்டாலும் அவர்களும் நம்மில் ஒருத்தர் என்ற புரிதலை பார்ப்பவரிடையே இந்த ஆவணப்படம் படியவிடுவது ஆறுதலாக இருக்கின்றது.
[size=18]அந்த ஒரு நாள்</span>
ஒரு பெண்ணுடைய adultery பற்றிக் கூறுகின்ற படம். தனது மனைவி இன்னொருத்தருடன் உறவில் ஈடுபட்டிருக்கின்றார் என்று ஏற்கனவே அறிந்து சந்தேகம் கொள்ளும் கணவனுக்கு, மன உளைச்சல்களால் அவதிப்பட்டு வேலை போய்விடுகின்றது. இறுதியில் அந்தப்பெண்ணைப் 'பழிவாங்கி' இரத்தக்கறைகளும் நிற்பதுடன் படம் முடிகின்றது. சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதை இது பெற்றிருந்தது. கனடாவில் எடுக்கப்பட்ட படம்.
'உயிர்நிழல்' கலைச்செல்வன் நினனவுப்பரிசான சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதைப் பெறும் பற்றிக் பத்மநாதன்(வலது), கலைச்செல்வனின் சகோதரர் கவிஞர் திருமாவளவன் (இடது) மற்றும் நிக்கோல்
<span style='color:green'>தீர்ந்து போயிருந்த காதல்
கவிதை நடையுடன் மூன்று நிமிடங்களில் காதலின் 'அழுகிய' கணங்களைச் சொல்கின்றது. வேலைக்குப் போகும் பெண் தாபத்துடன் வேலை முடிந்தவுடன் தனது கணவனுக்காய் வீட்டில் காத்திருப்பதும், அவன் நேரம் பிந்தி நள்ளிரவில் வருகின்றபோது அவளது காதல்/காமம் அவளை விட்டு விலகிப்போயிருப்பதையும், ஜடமாய் அவன் அரவணைப்பில் கசங்கிப்போவதையும் மிக இயல்பாய் கவிதை நடையில் கூறியிருந்தது. லீனா மணிமேகலையே இயக்கியும் நடித்தும் இருக்கின்றார். சிறந்த இந்தியத் திரைப்படத்துக்குரிய தேர்வில் இது விருதைப்பெற்றிருந்தது.
ரெட் வின்ரர்(Red Winter)மூன்று இளைஞர்களையும் ஒரு பெண்ணையும் சுற்றி நகரும் கதையிது. படத்தின் முடிவில் மூன்று கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன. யாரோ ஒரு ஆண்தான் இந்தக் கொலைகளைச் செய்திருப்பான என்பதைப் பார்ப்பவரிடையே படியவிட்டு இறுதியில் மூன்று கொலைகளையும் சைக்கோவான பெண்ணே செய்திருக்கின்றாள் என்பதாய் முடியும். அற்புதமான ஒளிப்பதிவும், இசையும் இதற்கு மெருகூட்டுகின்றன. படத்தில் இடையில் பின்னணியில் காட்டப்படும் துண்டு துண்டான ஆங்கிலப்படங்களின் காட்சிக்கும், இதற்கும் தொடர்புகள் இருக்கின்றதென்று படம் பார்த்துக்கொண்டிருந்த தோழி ஒருவர் கூறியிருந்தார். எனினும் தமது மூலத்தை/அடிப்படையை மறைக்காமல், படம் முடியும்வரை பார்க்கக்கூடிய ஒரு நல்லதொரு திரில்லரைத் தந்திருக்கின்றார்கள் என்பதற்காய்ப் பாராட்டலாம். இதைச் சற்று நீளமான திரைப்படமாக (ஒரு மணித்தியாலத்துக்கு மேல்) எடுத்தார்கள் என்றும் இந்த விழாவுக்காய் 30 நிமிடங்களாய்ச் சுருக்கியதாயும் அந்தப் படத்தை இயக்கியவர் உரையாடும்போது கூறியிருந்தார். முடிந்திருந்தால் அந்தப்படத்தில் வழமையான சினிமாத்தனத்துடன் வரும் பாடல்களை (ஒரு பாடலையாவது) எடிட் செய்திருக்கலாம். விரைவில் ரொறண்டோவில் தியேட்டர்களில் முழுநீளத்திரைப்படமாக இத் திரைப்படம் காண்பிக்கப்படப்போவதாயும் அறிந்தேன். பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்சினி நன்றாகச் செய்திருந்தார்.
இந்த விழாவில் வலைப்பதியும் நண்பர்களினதும் பங்களிப்பைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அருண் வைத்தியநாதனின் நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. சுமதி ரூபன் 'You 2' நடித்ததுடன், திரைக்கதையையும் அந்தப்படத்துக்கு எழுதியிருந்தார். வலைப்பதிவுகள் தமக்கென சொந்தமாக வைத்திருக்காவிட்டாலும், அவற்றை வாசிப்பவர்களும், ரொறண்டோவில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களுமான ரூபன், சத்தியாவும் தமது திறமையைக்காட்டியிருந்தனர். ரூபன் 'You 2' மற்றும் 'ஐயோ' ஆகிய இருபடங்களை இயக்கிருந்ததும், சத்தியா 'ஐயோ' படத்தில் நடித்தமைக்காய் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
.........
நன்றி DJ
</span>[size=9]' target='_blank'>http://djthamilan.blogspot.com/[/s...[size=9]
|
|
|
| திலீபன் கனவு |
|
Posted by: Netfriend - 09-26-2005, 02:22 PM - Forum: தமிழீழம்
- Replies (8)
|
 |
இது திலீபன் கனவு கண்ட மக்கள் புரட்ச்சி ..8)
<img src='http://www.nitharsanam.com/public/hello/puratchchi.jpg' border='0' alt='user posted image'>
tnx: nitharsanam
|
|
|
| என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ |
|
Posted by: mayooran - 09-26-2005, 12:50 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
கோட்டை அதிர்ந்தது! கோட்டை அழிந்தது!
கொடிவர் பாசறை எரிந்தது
வாட்டிய துன்பம் வடிந்தது: வரிப்புலி பூட்டுக்கள் உடைத்தது
வேங்கைகள் பாய்ந்தன : வீழ்ந்தது கோட்டை
வியப்புடன் எழுந்தனர் மக்கள்
தாங்கிய கொடியினைத் தளபதி ஏற்றினான்
தமிழரின் தலைகள் நிமிர்ந்தன
என்று தான் கோட்டையில் புலிக்கொடி ஏறுமோ
என்றவன் நினைவு நாளன்று
வென்றனர் புலிகள் : வியத்தகு வீரம்
விளைத்தனர் விடுதலைப் புலிகள்
வன்னியும் மன்னார் திருமலை மட்டு
நகரதும் வென்றிடும் தமிழா!
அந்நியர் ஓடி அகலுவர் : வீதியில்
ஆடடா பாடடா தமிழா!
புதுவை இரத்தினதுரை
|
|
|
| பாண்டிருப்பில் படையினரின் உந்துருளி படையணி தாக்குதல் |
|
Posted by: mayooran - 09-26-2005, 12:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இரு இளைஞர்கள் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டம் பாண்டிருப்பு மாரியம்மன் கோவில் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் உந்துருளி அணியினரின் பலத்த தாக்குதலுக்கு இலக்கான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்தி திருத்துமிடம் ஒன்றில் போலை செய்யும் இவ் இரு இளைஞர்களும் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது, இராணுவ உந்துருளிப் படையினர் இவர்களை வழி மறித்துள்ளனர். இதனை அவதானிக்காது சென்ற இவர்களை உந்துருளிப்; படையணியினர் துரத்திப் பிடித்து துப்பாக்கிப் பிடிகளால் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
நேற்று முன்தினம் நண்பகல் நடைபெற்ற இச் சம்பவத்தில் கடும் தாக்குதலுக்குள்ளானவர்கள் ராசரட்ணம் நிதர்சன்(22), பாக்கியராஜா நவோதயன்(23) என இனம் காணப்பட்டுள்ளனர்.
|
|
|
| நண்பர்களுக்கிடையில் பாவிக்கும் சொற்கள் |
|
Posted by: MUGATHTHAR - 09-26-2005, 10:18 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (46)
|
 |
<b>நண்பர்களுக்கிடையில் பாவிக்கும் வித்தியாசமான கருத்துள்ள சொற்கள் </b>
பாடசாலை கம்பஸ் பிறகு வேலைத்தளங்கள் என எங்களுக்கு நிறைய இடங்களில் சினேகிதங்கள் இருந்திருக்கும் ஆண்கள் எண்டால் 4 /5பேர் ஒரு செட்டாக மற்றவர்களை கிண்டலடிப்பது பெண்களுக்கு பகிடி விடுவது இப்படி ஜாலியாக அந்த வாழ்க்கை போகும் அப்படிதான் பெண்களும் இப்படியிருக்கும் போது மற்றவர்களுக்கு விளங்காமக் கதைப்பது அல்லது வித்தியாசமான வார்த்தைகள் மூலம் ஒருவரை அழைப்பது என அந்த செட்டுகளில் இருப்பவர்கள் பாவிப்பார்கள் இதை விட பொதுவான சில வார்த்தைகளும் கம்பஸ்களில் இருக்கும் (வெளிநாடுகளில் எப்படியோ தெரியாது) இதை கோட்வேட்ஸ் எண்டு சொல்லுவார்கள் உங்களுக்குத் தெரிந்த கோட்வேட்ஸ்களை சொல்லுங்கோ பாப்பம் . . . .
உதாரணத்துக்கு
1. <b>காய் </b> - அழகான ஒரு பெண்ணை குறிக்கும்
(சூப்பர் காய் மச்சான். . . .)
2. <b>கடலை வறுக்கிறது </b>- ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லாத விசயத்தை தனிமையில் ஒரு பெண்ணுடன் கதைத்துக் கொண்டிருப்பது
(பார் மச்சான் உவன் கடலை வறுக்கிற விதத்தை தாச்சியே சரியில்லை இதிலை வறுத்து என்ன செய்யப் போறனோ?)
3. <b>மஞ்சள்</b> - பேர் தெரியா பெண்ணை அழைப்பது
(இது சிக்கல் லைட்டில் சிவப்புக்கும் பச்சைக்கும் இடையானது ஒரு புதிய பெண்ணை அழைக்கும் போது எமக்கு பச்சை விழவும் சான்ஸ் இருக்கு சிவப்பு விழவும் சான்ஸ் இருக்கு அதுக்காண்டித் தான் மஞ்சள் எண்டு அழைப்பது )
4. <b>பங்களாதேஷ் </b> - இதுவும் பெண்களை குறிக்கும்; ஒரு சொல்
( இது சேலைகட்டும் போது கணுக்காலுக்குமேல் உயர்த்தி சேலை கட்டும் பெண்களை ஏனெண்டால் பங்களாதேஷில் எந்த காலமும் வெள்ளம்தானே )
5. <b>சுனாமி பாட் 2 </b> - ஒரு சதமும் செலவழியாமல் வந்து எமது சாப்பாடு சிக்ரெட்டுகளை அடிச்சிட்டு போற நண்பர்களை
(மச்சான் சுனாமி பாட் 2 வருகுது எல்லாத்தையும் டம் பண்ணு.. . . . )
எங்கை நீங்களும் உங்களுக்குத் தெரிந்த சொல்லுகளைத் தாங்கோ பாப்பம்
|
|
|
| Ajith விஜய் கூத்து |
|
Posted by: SUNDHAL - 09-26-2005, 06:37 AM - Forum: சினிமா
- Replies (22)
|
 |
இந்த நிமிசம் கோடம்பாக்கத்தோட ஹாட்டஸ்ட் டாக் என்னன்னு... அதான் உங்களுக்குத் தெரியுமே! பர்ஸ்ட் க்ளாஸ் சண்டைக் கோழிகளா இருந்த அஜித்-விஜய், திடீர்னு "பாசமலர்'களாகி, ரொம்பக் "க்ளோஸ்'ஆ நின்னு "க்ளோஸ்-அப்' புன்னகையோட போட்டாக்கு போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க! இது யாரு பண்ணுன சதின்னு தெரியாம அவனவன் மண்டையப் பிச்சிக்குனு திரியறான். அதனால சமுதாய நலன்(!) கருதி நம்ம சராசரி ரசிகர் கோயிஞ்சாமி, உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு உலகத்துக்குத் தெரிவிக்கலாம்கிற சேவை மனப்பான்மையோட(!) முதல்ல அஜித்தைச் சந்திக்கப் போறாரு! அடங்கொப்புரானே, அங்கே அஜித்தும், விஜய்யும் ஒரே தட்டில் "மம்மு சோறு' சாப்பிட்டுக் கொண்டிருக்க, சிறிது தலைசுற்றலோடு கோயிஞ்சாமி பேச ஆரம்பித்தார்.
கோயிஞ்சாமி: ஈஸ்வரா... வானும் மண்ணும் ப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா.. நேத்து முறைச்சது இன்னிக்கு "முஸ்தபா' பாடுது உன்னால் ஈஸ்வரா...
விஜய்: அது ஈஸ்வரன் வேலை இல்ல.."பேரரசு'வோட வேலை!
கோயிஞ்சாமி:யாரு , விஜயகாந்தைச் சொல்லுறீங்களா! அவருதான் நடிகர் சங்கத்துல உக்காந்து உங்க ரெண்டு பேருக்கும் பெவிகால் போட்டு உட்டாரா?
அஜித்:இல்ல, இது விஜய் பிரதர் நடிச்ச சூப்பர் ஹிட் "திருப்பாச்சி'யோட டைரக்டர் பேரரசு.
கோயிஞ்சாமி: ஆகா...இருக்கட்டும் இருக்கட்டும். ஆமா "சிவகாசி' தமிழ்நாட்டுல இருக்கு! "திருப்பதி' ஆந்திராவுல இருக்கு! எப்படி கனெக்ஷனாச்சு?
அஜித்: பிரதர் விஜய் மன்சுல "அன்பு' இருக்கு. என் மன்சுல "பாசம்' இருக்கு. அதான்.
கோயிஞ்சாமி:ஏம்ப்பு, அப்ப இவ்ளோ நாள் அந்த "அன்பு' என்ன அமெரிக்காவிலயா இருந்துச்சு. "பாசம்' என்ன பாயசம் சாப்பிடப் போயிருந்துச்சா!
விஜய்:இல்லீங்கண்ணா, ஏன் இப்ப தேவையே இல்லாம டென்ஷன் ஆகுறீங்க?
கோயிஞ்சாமி:எப்பா , இவ்ளோ நாள் படத்துக்கு படம், ஸீனுக்கு ஸீன், அவரை நீயும், உன்னை அவரும், மாத்தி மாத்தி வசனத்தால துவைச்சு தொங்கவிட்டுக்கிட்டு இருந்தீங்களே, அது ஏன்?
விஜய்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->ஆச்சரியத்தோடு) அப்படியா!
அஜித்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->விஜய் தோளில் கை போட்டுக் கொண்டே) நெசமாவா?!
கோயிஞ்சாமி: அடப்பாவிகளா! (தன்னைத் தானே கிள்ளிப் பார்த்து "ஆ'வென அலறி) புஷ்-சதாம், இந்தியா-பாகிஸ்தான், திமுக-அதிமுக மாதிரி நேத்து வரை நல்லா இருந்த பசங்க மூளையைக் குழப்பி வுட்டாங்களே!
விஜய்:பிரதர் அஜித் இருக்காரே, அவரு ரேஞ்சுக்கு என்னால நடிக்க முடியுமா! நானே அவரைப் பாத்துத்தான் நடிக்கவே கத்துக்கிட்டேன். நான் அவரைப் போயி தப்பாப் பேசினதா புரளி கௌப்பாதீங்க, ப்ளீஸ்ண்ணா!
கோயிஞ்சாமி: வ்வாவ்வாவ்வா..(வாயில் அடித்துக்கொண்டே) அப்ப "என்ன மட்டுமில்ல, என் இமேஜைக் கூட எவனாலயும் ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு குஷியா வசனம் பேசனீங்களே, அதை என்னன்னு சொல்லுறது.
விஜய்:அது டைரக்டரோட வசனம். கண்டதையும் லிங்க் பண்ணி எங்க பாசத்தைப் பஞ்சராக்கணும்னு நெனைக்காதீங்க, அது நடக்காது. இனிமே நான் நடிக்கப் போற படத்துக்கெல்லாம் அஜித் பிரதர்தான் கதையே கேக்கப் போறாரு. (அஜித்தின் கன்னத்தை தன் கைகளால் செல்லமாகக் கிள்ளி முத்தமிடுகிறார்.)
கோயிஞ்சாமி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->அஜித்தைப் பார்த்து) "உனக்கென்ன, உனக்கென்ன'ன்னு தியேட்டர்ல உக்காந்து படம் பாக்கறவன் கண்ணைக் குத்துற மாதிரி விரலை நீட்டி நீட்டி பாடுனதோட அர்த்தம்...
அஜித்:அப்படியொரு பாட்டைப் படத்துல வைக்கச் சொல்லி பிரில்லியண்ட் ஐடியா கொடுத்ததே பிரதர் விஜய்தான். அதுக்காக என்னோட ரேஸ் காரையே அவருக்கு கிஃப்ட் பண்ணுனேன். இங்க பாருங்க. சும்மா அதை இதை சொல்லி எங்க மன்சை கலைக்க திட்டம் போடாதீங்க. நீங்க கௌம்பலாம்.
(விஜய்-அஜித் இருவரும் தள்ளிச் சென்று ஓவர் பாசத்தோடு பேச ஆரம்பிக்க கோயிஞ்சாமி தள்ளி நின்று கவனிக்கிறார்.)
விஜய்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->அஜித்திடம் ) "ஜனா' மாதிரி ஒரு சூப்பர் படம் ஓடலையேன்னு நான் ரொம்ப ஃபீல் பண்ணுனேன் பிரதர். நாலு நாள் சாப்பிடவே இல்லை தெரியுமா!
அஜித்: "சச்சின்' படம் சக்கைப்போடு போடணும்னு நான் ரெண்டு மாசம் சனிக்கிழமை விரதம் இர்ந்தேன் தெரியுமா!
கோயிஞ்சாமி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மனதுக்குள்) ஓ...அதான் தொப்பை குறைஞ்சுதா!
விஜய்: பிரதர் நீங்க நடிக்கப் போற "திருப்பதி' படம் ஓஹோன்னு ஓடுனா நான் கீழ் திருப்பதி டூ மேல் திருப்பதிக்கு குடும்பத்தோட கால்நடையாவே வர்றதா பெருமாளுக்கு வேண்டியிருக்கேன்.
கோயிஞ்சாமி: (மனதுக்குள்) அட தேவுடா!
அஜித்:ரொம்ப தாங்க்ஸ் பிரதர்! நான் கூட என்னோட ஏரியாவுல "சிவகாசி' விஜய் ரசிகர் மன்றம்னு ஒண்ணைத் தொடங்கப் போறேன். வர்ற தீவாளிக்கு உங்களுக்கு கட்-அவுட், போஸ்டர்னு அடிச்சு, உங்க ரசிகர்களோட ரசிகர்களா சேர்ந்து படத்தை தியேட்டர்ல விசிலடிச்சு பார்க்கலாம்னு இருக்கேன். பால் குடம் கூட எடுக்கச் சொல்லி ஷாலினி சொல்லிச்சு!
கோயிஞ்சாமி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மன துக்குள்) அடங்கொப்புரானே!
விஜய்:எப்படி பிரதர், என்னைவிட சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க. என்னதான் முயற்சி பண்ணனாலும் உங்க லெவலுக்கு என்னால டான்ஸ் பண்ணவே முடியல!
அஜித்:அப்படிப் போடு! இந்தத் "தன்னடக்கம்'தான் உங்க கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விசயம். கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்.
விஜய்:ஹைய்யோ... "தல' இருக்கறப்போ, "வால்' நான் ஆடக்கூடாது. கோலிவுட்ல எந்தவித சப்போர்ட்டும் இல்லாம சுயம்புவா வளர்ந்த ஆள் நீங்கதான் பிரதர். நீங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.
அஜித்:இல்ல பிரதர். நீங்க நடிச்சாலே அந்தப் படம் அத்துக்கிட்டு நூறு, நூத்தம்பதுன்னு ஓடுது. அதனால அடுத்த எம்.ஜி.ஆர், ரஜினி எல்லாம் நீங்கதான். (இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேச வார்த்தைகளை இன்றி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நிற்கிறார்கள்.)
கோயிஞ்சாமி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->மன துக்குள்) விட்டா அடுத்தாப்ல எஸ்.ஏ.சந்திரசேகர், அஜித்தை வைச்சு படம் எடுப்பாரு போல! சரி, இதுக்கு மேல இங்க நின்னா நமக்குத்தான் பைத்தியம் பிடிச்சிரும். நாம கௌம்புவோம்.
(அங்கிருந்து கோயிஞ்சாமி நகர, தூரத்தில் இருவர் சென்று கொண்டிருக்கின்றனர்)
கோயிஞ்சாமி: அட செல்வராகவன், கஸ்தூரி ராஜா மாதிரி தெரியுது. போய்ப் பேசுவோமா! (சிறிது யோசித்துவிட்டு) வேண்டாம்பா, அப்புறம் அவங்க திடீர்னு "சிம்புவை வைச்சு படமெடுக்கப் போறோம், அதான் கதை டிஸ்கஷனுக்குப் போய்க்கிட்டிருக்கோம்'னு சொன்னாலும் சொல்வாங்க. நம்மால தாங்க முடியாது சாமியோவ்!
(இடத்தைக் காலி பண்ணுகிறார்)
Thanks inamani
|
|
|
| காத்திருப்புக்கள் தொடரும்!...... |
|
Posted by: Nitharsan - 09-26-2005, 05:04 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
[size=12][b]பெண்னே!
நீயும் மானிடப்பிறப்பு தானே!?
மனங்களை...
மனதார உணரதெரியாத நீ..
எப்படி மனிதப்பபிறப்புக்குள்
அடங்கினாய்?
அன்பாய் பழகுவதையும்
ஆசையாய் பார்ப்பதையும்
அர்தமின்றி.....
நான் செய்வதாய் எண்ணுகிறாயோ?
அர்தங்கள் புரிந்தாலும்...-அதை
நீ அலட்சியம் செய்வது -என்
நெஞ்சுக்கு புரிகிறது?
எதற்காக இந்த அலட்சியம்
எதற்காக இந்த வஞ்சனை...
உன்னை நினைத்து...
கவிதையேழுதினேன்....
உன் நினைவினில்...
உயிர் வாழ்ந்தேன்...
இதை தவிர நான்..
என் செய்தேன் உனக்கு?
இவை தான் குற்ற மெனில்...
தண்டனையை...
ஆயுள் முழுவதும்...-நான்
அழுதுகொண்டிருக்கும் படி
தருவதா? -இன்னும்
காலம் போகவில்லை
கண்னே!...
காதலையுன்னிடம் -நான்
சொல்லவில்லை.....
கவிதையை உன்னிடம்-நான்
காட்டவில்லை.....ஆனாலும்
உணர்தத் முற்ப்பட்டேன் -என்
காதலை......-எதை
சொன்னாலும் சிரித்து கொண்டிருப்பாய்...-
இதற்க்கும் சிரித்து...-என்
வாழ்க்கையை
சின்னாபின்னமாக்கிடாதே!
சிந்தனை மாறி...
சிதறிக்கிடந்த என் சீரற்ற வாழ்வுக்கு....
மீள் உயிர் கொடுத்தது -நான்
உன் மேல் கொண்ட காதல்...
உலகத்தில் காதல் எனும்
உணர்வின் உன்னதத்தை-எனக்கு
உணரவைத்தவளும் நீயே!
உணர்வாலே..-நீ
என்னுயிராகிவிட்டாய்
எனக்கு தெரியாமலே.....
என்னிதயத்தில் நுழைந்தும் விட்டாய்....
நுனுக்கமான உன்
இதயத்தை படிப்பது
கடினமானதாகியதால்....
காதலை நானும்...-உன்னிடம்
காட்டிக் கொள்ளவில்லை....-இப்போ
காதல் பொய்யாகுமோ!?
கனவுகள்...கனவுகளாகுமோ!?
கண்ணீர் தான் என் வாழ்வாகுமோ?
எத்தனை அச்சம் என் மனதில்...
இத்தனைக்கும் காரணம் நீ...!?
ஏனிப்படி செய்கிறாய்? - என்
நித்திரையற்ற இரவுகளில்- உன்
நினைவுகள் தான் எச்சங்களாய்...
நினைத்து நினைத்து
நிதம் என்னை வாட்டுகிறேன்...-நீ
வருவாய் என் காதலியாய்
என்று எண்ணுவதால்.....-என்
சோகமான வாழ்வுக்குள்
ஒரு சந்தோச ஒளிதந்த நீ- மீண்டும்
இருள்சூழ்ந்த அந்த குகைக்குள் -ஏன்
தள்ளிவிட நினைக்கிறாய்? -உனை
இழந்த வாழ்வெனக்கு வாழ்வாகாது
உனைப்பிரிந்தால் உயிர் கூட -என்
உடலிருக்க அச்சப்படும்-உறுதி
மட்டும் நெஞ்சில் கொண்டு
இதயத்தில் உன்னை கொண்டு
இயங்குகிறேன் மனிதனாய்...!?
என் இதயத்து ஜீவனே!
ஒரு முறை செல்லிடு -நீ
என்னை காதலிப்பதாய்....
சினிமா என்ற சித்திரத்தை போல்
சிரிப்பதற்காய் கவி எழுதவில்லை
சிந்திப்பாய் நீயேன... -நான்
சிந்திப்பதால் எழுதுகிறேன்.........
சிநேகிதியே!...
சிற்பமாய் நீயும்
அமைதி கொள்ளாதே!....-உன்
அமைதியை நேசிக்கும் -என்
கேள்விக்கு பதிலையும்..
மெளனத்தால் தந்திடாதே!?
மரத்துப் போயிருந்த
என் மனதில் காதலெனும்
கனியை தந்தவளே!
கனவுகளுடன்.....
உன் நினைவுகளுடன்
காலம் போகுது காதல்
கவிதையை நான் எழுதியது
உனை கண்ட பின் தான்....-இது
உனக்காக நான் சொல்லும்
பொய்யல்ல உண்மை......
உருளும் உலகில்
மீண்டும் சந்திப்போம் என்று...
நழுவிடாதே!...-நான்
சந்திப்புக்களை எதிர் பார்க்கவில்லை
என்னுடன் நீ
வாழ வேண்டுமென விரும்புகிறேன்....!
உன் வாய்கள் சொல்லும்
வார்த்தைகள்-என்
வாழ்க்கையின் முடிவுகள்...
சத்தியமாய் இந்த வார்த்தை -என்
கற்பனையில் உதிக்கவில்லை
கண்மணியாள்
உன் நினைவுதனில்- இன்றும்
ஒரு நித்திரையற்ற இரவில்
நிஜமாக எழுந்த வரிகள்....
காத்திரமாய் சொல்லிய -என்
உள்ளத்து உணர்வுகளுடன் -என்
காத்திருப்புக்கள் தொடரும்
உனக்காக....
|
|
|
| பிரிவு :( :( |
|
Posted by: RaMa - 09-26-2005, 03:47 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<img src='http://img347.imageshack.us/img347/7840/good8lk.gif' border='0' alt='user posted image'>
இடைநடுவில் சந்தித்தோம்
இடைவேளியால் பிரிந்தோம்
பிரிந்த பாதைகள் தாண்டவாளமாகிவிட்டான...
பயணிக்கும் பாதைகள் ஒன்று என்றோம்
பாதி தூரம் சென்றபின் தான் தெரிந்தது
பாதைகள் வேறு வேறு என்று
சந்திக்க முடியாத தாண்டவாளமாய் நாம் இருந்தாலும்
புகையிரதம் என்ற நாம் நினைவுகள் எம்மை
இணைத்துக் கொண்டு இருக்கின்றது! இருக்கும்!
|
|
|
| «Îò¾ ÅøÄÃÍ |
|
Posted by: ¦ÀâÂôÒ - 09-26-2005, 12:42 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (30)
|
 |
[size=18]மெல்ல மெல்ல இந்து சமுத்திரத்தை ஆதிக்க வலைக்குள் அகப்படுத்தும் சீனா
<img src='http://www.nyu.edu/globalbeat/jpg/china-military.jpg' border='0' alt='user posted image'>
<b>* டில்லியை அரவணைத்து பெய்ஜிங்குடன் ஆலிங்கனம் செய்யும் கொழும்பின் தந்திரோபாய காய் நகர்த்தல்
* யதார்த்தத்தை அறிந்தும் `மாயை ' பரப்புரைகளை கட்டவிழ்த்து விடும் இந்திய மதியுரைஞர்கள் சிலர்</b>
இந்தியாவின் தென் பிராந்தியத்தில் மூன்றாவது கடற்படையாக கடற்புலிகள் உருவாகியுள்ளார்கள் என்றும் இது இந்தியாவிற்கு ஆபத்தானதென்றும் இந்திய சிந்தனையாளர்கள் என்று கூறப்படும் சிலர் கருத்துகளை வெளியிட்டுவருவதும் இந்தியப் பத்திரிகைகள் சிலவும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
உண்மையில் கடற்புலிகள் தமிழர் தாயகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய கடலணிகளாக மட்டுமே விளங்குகின்றார்கள். புலிகளின் கடற்படை இந்தியா போன்ற பிராந்திய வல்லரசொன்றின் வலிமை மிக்க கடற்படைக்கு சவால்விடும் அளவிற்கு வலிமையுடையது என்று சாதாரண பகுத்தறிவை உடையவர்கள் கூறமாட்டார்கள். ஆனால், அறிவுஜீவிகள் என்றும் பேராசிரியர்கள் என்றும் கூறப்படும் சிலர் இவ்வாறு உண்மையில் இல்லாத அச்சுறுத்தலை இருப்பதாகக் காண்பிக்க முனைவது யாருடைய நலன்களுக்காக? கடற்புலிகளை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக காண்பிப்பதற்கு சிங்கள அரசே தொடர்ந்து முனைந்து வருகின்றது. தமிழர்களுடனான போரில் அறுதியும் இறுதியுமான தோல்வி நெருங்கிவிட்டதென்பதை அறிந்த சிங்களப் பேரினவாதம், அவ்வாறான இறுதிக்களத்தில் கடற்புலிகள் பெரும்பங்கை ஆற்றுவார்கள் என்பதை ஆனையிறவுத் தளத்தை சுற்றிவளைப்பதற்காக நடத்தப்பட்ட குடாரப்பு தரையிறக்கத்திற்கு பின்னர் நன்கு புரிந்து கொண்டுள்ளது.
எனவே, இந்தியாவை அச்சுறுத்தி கடற்புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்று அது முனைந்து வருகின்றது. அந்த கருத்துகளை தமது சொந்த நலன்களுக்காக உள்வாங்கி சிங்களப் பேரினவாதத்தின் நலன்களை இந்திய நலன்களாக திரிபுபடுத்திக் காட்டுவதற்கே சில இந்தியப் பத்திரிகையாளர்களும் சிந்தனையாளர்கள் என்று தெரிவிக்கப்படுபவர்களும் முயற்சிசெய்து வருகின்றனர். இது உண்மையில் இந்தியா எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து அந்நாட்டின் கவனத்தை திசைதிருப்பக் கூடியதென்பதனால் அவ்வாறானவர்கள் ஒருவகையில் சொந்த நாட்டின் நலன்களுக்கே துரோகமிழைத்து வருகின்றனர்.
இப்பிராந்தியத்தில் மூன்று கடற்படைகள் உள்ளன என்று கூறி பலவீனமான இலங்கைக் கடற்படையையும் சுய பாதுகாப்பிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கடற்புலிகளையும் வலிமை வாய்ந்த இந்தியக் கடற்படையுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானதாகும்.
இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்துகின்றாரோ அவர் இந்தியாவைக் கட்டுப்படுத்துகின்றார் என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் பணிக்கர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்து சமுத்திரத்தில் இரண்டு வலிமை வாய்ந்த கடற்படைகள் உள்ளன. ஒன்று இந்திய கடற்படை. மற்றையது உலக வல்லரசாகிய அமெரிக்காவின் கடற்படை.
ஆயினும், ஆசியாவில் மாறிவரும் இராணுவ மற்றும் பொருளாதார சூழல்களினால் மூன்றாவது சக்திவாய்ந்த கடற்படையொன்றும் இந்து சமுத்திரத்தில் நிரந்தரமாக நிலைகொள்ளும் காலம் அண்மித்து வருகின்றது. அந்தக் கடற்படை சீனாவினுடையதாகும்.
சீனாவின் பொருளாதாரம் விரைந்து வளர்ந்து வருகின்றது. இதே வளர்ச்சியில் தொடர்ந்து செல்லுமாயின், அது 2025 ஆம் ஆண்டளவில் ஜப்பானிய பொருளாதாரத்தை விஞ்சிவிடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின், பொருளாதார வளர்ச்சி அதன் படைபலத்தை அதிகரிப்பதற்கு பெருமளவு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
"கடந்த கால போக்கின் அடிப்படையில்... சீனப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டளவில் அநேகமாக 6.4 ரில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவடைய முடியும். தொடர்ச்சியான ஒட்டுமொத்த பொருளாதாரச் செயற்பாட்டிலிருந்து சீனப் பாதுகாப்புப் பிரிவு அநேகமாக நன்மை பெறும்" என்று இவ்வாண்டு ஜூலை 19 ஆம் திகதி வெளியான அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் "சீன மக்கள் குடியரசின் இராணுவ வலிமை" என்பது குறித்த வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 களிலிருந்து சீனாவின் எரிபொருள் நகர்வானது, உள்நாட்டு உற்பத்தியை விட அதிகரித்துச் செல்கின்றது. சீனாவின் பொருளாதாரத்திற்கு அவசியமான எரிபொருளின் பெரும்பகுதி மத்திய கிழக்கிலிருந்து கடல்வழியாகவே பெறப்படுகின்றது.
இந்தக் கடற்பாதையூடான தனது விநியோகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அந்நாடு இந்து சமுத்திரக் கரையோர நாடுகள் பலவற்றில் தனது கடற்படைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
சீனா உலக வல்லரசு என்ற நிலையை அடைவதற்கான நீண்ட காலத்திட்டத்துடன் செயற்பட்டு வருகின்றது. அந்த நிலையை அடைவதற்கு இந்து சமுத்திரத்தில் வலிமையான கடற்படையைக் கொண்டிருப்பது அவசியமானது என்பதை அது நன்கு அறிந்துவைத்துள்ளது.
சீனா, ஈரானின் கரையோரமாக ஒரு கடற்படைத்தளத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன், பாகிஸ்தானில் குவாடோனில் கடற்படைத் தளம் ஒன்றை அமைத்து வருகின்றது.
காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் அந்நாட்டுடன் சீனாவிற்கு நேரடியான தரைத் தொடர்பு உள்ளது. இது பாகிஸ்தானில் அமைத்துவரும் கடற்படைத்தளத்தின் இராணுவ முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அம்சமாகும்.
பங்களாதேஷுடன் தனது உறவுகளை இறுக்கமாக்கிவரும் அந்நாடு, சிட்டகொஸ் துறைமுகத்தில் கொள்கலன் வசதிகளை கட்டியெழுப்ப உதவி வருகின்றது.
மற்றுமொரு இந்து சமுத்திர நாடான மியான்மாரில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்துவரும் சீனா அங்கு கடற்தளங்களைக் கட்டியெழுப்பி வருவதுடன் அந்நாட்டுக்குச் சொந்தமான கொக்கோத் தீவுகளில் கண்காணிப்பு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்காசியக் கரையோர நாடான கம்போடியாவுடன் நவம்பர் 2003 இல் பயிற்சியளித்தல் மற்றும் ஆயுதங்கள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அரசு கைச்சாத்திட்டுள்ளது. தெற்கு சீனாவிலிருந்து கடல்வரை புகையிரதப்பாதையொன்றை அமைப்பதற்கு அந்நாட்டுக்கு கம்போடியா உதவுகின்றது.
அத்துடன், மலாக்கா நீரிணையை கப்பல்கள் கடந்து செல்லாமல் இருக்கக் கூடியதாக தாய்லாந்தின் க்ரா நிலத்துண்டினூடாக சுயஸ் மற்றும் பனாமா கால்வாய் போன்ற ஒரு கால்வாயை அமைக்கும் 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவு பிடிக்கும் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கும் சீனா திட்டமிட்டு வருகின்றது. இந்த கால்வாய்த் திட்டம் சீனாவிற்கு தாய்லாந்தில் துறைமுக வசதிகள், களஞ்சிய வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்.
இவ்வாறாக இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில் தனது கடலாதிக்கத்திற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் அந்நாடு திட்டமிட்ட ரீதியில் செயலாற்றி வருகின்றது.
சீனாவின் எரிபொருள் நலன்களைப் பாதுகாப்பது என்று கருதும் வழிவகையில் அந்நாடு மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையான கடற்பாதை நெடுகிலும் தந்திரோபாயத் தொடர்புகளைக் கட்டியெழுப்பி வருவதாகவும் அவை பரந்தளவிலான பாதுகாப்பு நோக்கங்களுக்கும் பயன்படும் என்று "ஆசியாவில் சக்திவள எதிர்காலம்" என்ற தலைப்பில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ் பெல்ட்டிற்காக தயாரிக்கப்பட்ட உள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக "வாஷிங்டன் ரைம்ஸ்" கடந்த ஜனவரி மாதத்தில் தகவல் வெளியிட்டது.
சீனா "முத்துக்கள் கோர்க்கப்பட்ட இழை" (String of Pearls) என்ற மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக்கடல்வரை தளங்கள் அமைத்தல் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தல் தந்திரோபாயத்தை கைக்கொண்டுள்ளது என்று அந்த உள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக "வாஷிங்டன் ரைம்ஸ்" தெரிவித்திருந்தது.
இந்த இழையில் புதிய முத்தாக இலங்கையும் கோர்க்கப்பட்டுள்ளமையை அண்மையில் ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் பின்னர் இடம்பெற்ற விடயங்கள் காட்டுகின்றன.
தமிழர்களுக்கு எதிரான போரில் கொழும்பு அரசிற்கு சீனா நீண்டகாலமாக ஆயுதங்கள் விநியோகம் செய்யும் நாடாக இருந்து வருகின்றது. இது நீண்டகால நோக்கில் சிங்கள அரசை தனது இராணுவ தளபாடங்களில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்துவதனையும் ஒரு நோக்கமாகக் கொண்ட சீனாவின் தந்திரோபாயமாகும்.
சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டம், பொஸ்பேற் அகழ்வுத்திட்டம், கொழும்பு - கட்டுநாயக்க கடுகதிவீதி, கொழும்பு - இரத்மலானை புகையிரதப் பாதைத் திட்டம் போன்ற பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் உள்ளடங்குகின்றன. இதன் மூலம் சீனா இலங்கையின் பொருளாதாரத்தினுள் ஊடுருவுகின்றது. எதிர்காலத்தில் இலங்கைப் பொருளாதாரத்தில் சீனா கணிசமான செல்வாக்குச் செலுத்த இந்த ஒப்பந்தங்கள் வழிவகுத்துள்ளன.
இவற்றைத் தவிர, இந்த ஒப்பந்தத்தில் குறப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் தான் இலங்கை தொடர்பில் சீனாவின் எண்ணப் போக்கைக் காட்டுவதாக உள்ளது.
அது அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான எண்ணெய்த் தாங்கிகள் அமைப்பது தொடர்பிலான ஒப்பந்தமாகும். இதன் மூலம் தனது கடல்சார் நடவடிக்கைகளில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் சீனா உள்ளடக்க விரும்புவது தெளிவாகத் தெரிகின்றது.
சீனாவின் இந்தக் கடல்சார் ஆதிக்கமானது, இந்தியாவையே அதிகம் பாதிக்கக்கூடியது. இந்தியாவின் வடக்கில் பெரும் பகுதியை சீனா எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான், மியான்மார் போன்ற வலுவான நட்பு நாடுகளை இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ளதனால் ஏறத்தாழ பெரும்பாலான இந்தியாவின் நில எல்லைப்புறங்கள் சீனாவின் இராணுவ நகர்வுகளுக்கு திறந்து விடப்பட்ட நிலையே காணப்படுகின்றது. அத்துடன், பாகிஸ்தானிலும் மியான்மாரிலுமான சீனாவின் கடற்படைத் தளங்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நிலையைத் தோற்றுவிக்கும். வடக்கில் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகளைக் கொண்டிருப்பதனால் இந்தியா பாதுகாப்புக் காரணங்களுக்காக தனது முக்கிய தளங்களையும் மையங்களையும் தென்னிந்தியாவிலேயே அமைத்து வந்தது. ஆயினும், இந்து சமுத்திரத்தில் சீனாவின் எழுச்சியால் அவை அர்த்தமற்றுப் போகும் நிலைமை தோன்றியுள்ளது.
அமையப்போகும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனச் செல்வாக்கிற்கு உட்படுவது இந்தியாவின் கடற்பாதுகாப்பிற்கு இறுதி அடியாக அமையும்.
15 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சீனாவின் மிங் அரச வம்சகாலத்தில் சீனா உலகில் அதுவரைகாலத்திலும் எவராலும் எட்டப்பட்டிராத அளவிலான பெரும் கடற்பேரரசாக உருவெடுத்தது. செங்கோ அல்லது ஷெஸ் ஹீ என்ற பிறப்பில் முஸ்லிமான சீனக் கடற்படைத் தளபதி சுமார் 28,000 பேருடன் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல் அணிகளுடன் இந்து சமுத்திரத்தின் பல்வேறு நாடுகளுக்கு வெற்றிகரமான பயணங்களை மேற்கொண்டார். இந்தப்பயணங்களில் ஒன்று ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரம் வரை மேற்கொள்ளப்பட்டது. 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் சீனப் பேரரசிற்கு தங்களின் மரியாதையைச் செலுத்துமுகமாக தூதுவர்களை அனுப்பின. சீனாவின், இந்தக் கடல் எழுச்சியின் பொழுது தென்னிலங்கையிலும் அக்கடற்படை தரித்துச் சென்றது.
(தென்னிலங்கை அரசன்சீனர்களுடன் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் அவனையும் அவனின் குடும்பத்தையும் ஷெங் ஹீ கைது செய்து சீனாவிற்குக் கொண்டு சென்றதாக மிங் வம்சக் குறிப்பேடுகள் கூறுகின்றன.)
ஆயினும், இந்தக் கடற்பயணங்கள் வீண் செலவென்று கூறி பின்வந்த அரசர்களால் தடை செய்யப்பட்டதனால், அந்நாடு உலக அரங்கில் ஆற்றியிருக்கக்கூடிய பெரும்பங்கு இல்லாதொழிக்கப்பட்டது.சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னரே ஐரோப்பியர்கள் தமது நீண்ட கடற்பயணங்களை ஆரம்பித்து உலகில் சக்திவாய்ந்தவர்களாக மாறினர்.
ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னர் விட்டதவறை சீனா இனிமேல் விடப்போவதில்லை என்பதையே அதன் தற்போதைய நகர்வுகள் காட்டுகின்றன.
இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்துபவர் இந்தியாவைக் கட்டுப்படுத்துவார் என்றே பணிக்கர் கூறினார். இதன் மறுதலை உண்மையல்ல. அதாவது, இந்தியாவைக் கட்டுப்படுத்துபவர் இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்துவார் என்பது உண்மையல்ல.
இந்தியா, இலங்கையின் அதிவிஷேட நண்பன் என்று கூறிக்கொண்டு கொழும்பு அரசாங்கம் இந்தியாவிற்கு ஆபத்தானதென்று நன்கு தெரிந்த விடயங்களில் சீனாவுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
இந்திய நலன்களுக்கு இவ்வொப்பந்தங்கள் ஆபத்தானவை என்று நன்கு தெரிந்ததனாலேயே தென்னிலங்கைப் பேரினவாத நாளேடுகள் இதைப்பற்றி அதிகமாக ஆரவாரம் செய்யாமல் உள்ளூர இரசித்து மகிழ்ந்தன. பேரினவாதிகளின் வலைகளில் விழுந்துள்ள சில இந்திய அறிவுஜீவிகள் எனப்படுவோரும் உண்மையான ஆபத்துகளை மறைத்து தமிழர் நலன்களுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு சொந்த நாட்டிற்கே துரோகம் இழைத்துவருகின்றனர்.
¿ýÈ¢:
நர்த்தன்-¾¢ÉìÌÃø
25/09/2005
|
|
|
| மகனாக நடித்தவரிடம் விசாரணை |
|
Posted by: வினித் - 09-25-2005, 05:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மகிந்தவின் மகனாக நடித்தவரிடம் விசாரணை
[ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2005, 21:12 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகனைப் போல் நடித்த இளைஞரிடம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றுக்கு 5 பாதுகாப்பு குழுவுடன் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். பாதுகாப்புக் குழுவினர் அனைவரும் காவல்துறையினரின் உயர் பாதுகாப்பு பிரிவின் உடையைப் போன்ற உடுப்புகளை அணிந்திருந்தனர்.
இளைஞரின் வாகனமும் பாதுகாப்புக் குழுவும் அவரை பிரதமரின் மகன் என்று தோற்றமளிக்கும் வகையில் இருந்துள்ளது.
நட்சத்திர விடுதிக்குள் உள்ளே சென்ற அந்த இளைஞர் முன்பகுதியில் இருந்த பெண்களைச் சீண்டியுள்ளார். இந்த சீண்டலுக்குள்ளானவர்களின் சிறிலங்கா நீதிபதி ஒருவரின் மகளும் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த நட்சத்திர விடுதி நிர்வாகத்தினர் அந்த இளைஞரின் அட்டையாள அட்டையை வாங்கி பரிசோதித்துப் பார்த்தனர். அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் அல்ல என்று அப்போது தெரியவந்தது.
21 வயதுடைய தில்ரூவன் ராஜபக்ச என்ற அந்த இளைஞர் ஆயுத வியாபாரி ஒருவரின் மகன் எனவும் தெரியவந்தது.
இந்த இளைஞரின் நடவடிக்கை குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டதையடுத்து அவரிடமும் அவரது பாதுகாப்புக் குழுவினரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். தில்ரூவனும் அவருடன் வந்த இருவரும் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அறையிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்
http://www.eelampage.com/?cn=20328
|
|
|
|