| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 229 online users. » 0 Member(s) | 227 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,516
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| யாழ்.மாணவர்களின் திறமை |
|
Posted by: வினித் - 09-25-2005, 02:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
மீண்டுமொரு தடவை வெளியிடப்பட்ட யாழ்.மாணவர்களின் திறமை
* விடுதலைப்புலிகளைப் பாராட்டும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
* அங்கு ஆள்மாறாட்டம் மோசடி இல்லையாம்
* A/L 2005 ஒரு நோக்கு
-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
கல்வியானது ஒவ்வொரு மனிதனுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பிரதான செல்வாக்குச் செலுத்தி வருகிறது. இதனால் தான் பல்வேறு நாடுகளில் கட்டாயக் கல்வி அமுலில் இருந்து வருகிறது.
இலங்கையில் கூட முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்வியின் அவசியம் பற்றிய பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, பரீட்சைகளுக்கு தோற்றுவோரின் வீதம் மிக அதிகளவில் அதிகரித்திருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தம் காரணமாக இப்பரீட்சை உரிய காலத்தில் நடைபெறாமல் காலம் பிந்தியே நடைபெற்றது.
தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 1,16,506 பேருக்கு பல்கலைக்கழகம் செல்ல தகுதியிருந்தும், 16 ஆயிரத்து 292 பேருக்கு மாத்திரமே பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுவார்கள் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இங்கு நாம் `க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2005' சுருக்கமாக நோக்குவோம்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை - 2005
பாடசாலை சார்பாக பரீட்சைக்கு விண்ணப்பித்தோர் - 1,97,099, பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் விண்ணப்பித்தோர் - 48,604, பரீட்சைக்கு மொத்தமாக விண்ணப்பித்தோர் - 2,45,703, பாடசாலை சார்பாக பரீட்சை எழுதியோர் - 1,73,734, பரீட்சையை தனிப்பட்ட ரீதியில் எழுதியோர் - 30,296, பரீட்சையை மொத்தமாக எழுதியோர் - 2,40,30, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் பாடசாலை - 1,01,092, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் தனிப்பட்ட 15,414, பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள் மொத்தம் 1,16,506, மூன்று பாடங்களில் 3ஏ பெற்றவர்கள் மாணவர்கள் 2,910, மூன்று பாடங்களில் 3ஏ பெற்றவர்கள் தனிப்பட்ட 258, மூன்று பாடங்களிலும் 3ஏ பெற்றவர்கள் 3,168
மாவட்ட ரீதியாக பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றவர்கள்
01) அம்பாறை 3,481
02)அநுராதபுரம் 4,240
03)பதுளை 4,851
04)மட்டக்களப்பு 2,211
05)கொழும்பு 13,834
06)காலி 7,630
07)கம்பஹா 9,325
08)அம்பாந்தோட்டை 4,191
09)கண்டி 9,206
10)கேகாலை 5,247
11)யாழ்ப்பாணம் 4,998
12)களுத்துறை 6,663
13)மாத்தறை 6,494
14)மொனராகல 2,251
15)முல்லைத்தீவு 640
16)நுவரெலியா 2,931
17)மன்னார் 606
18)மாத்தளை 2,543
19)கிளிநொச்சி 616
20)குருநாகல் 11,107
21)பொலன்னறுவை 1,731
22)புத்தளம் 3,124
23)இரத்தினபுரி 6,347
24)திருகோணமலை 1,687
25)வவுனியா 829
அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் சிறப்பு பெறுபேறுகளைப் பெற்றவர்கள்.
1. சிவப்பிரகாசம் மயூரன் 3.4102 யாழ். இந்துக்கல்லூரி
2. மேரினேஜ் ஏரங்கி டீ கொஸ்தா 3.1802 கொழும்பு மியுஸியஸ் கல்லூரி
3. ஹன்ஷினி சகுந்தலா சித்தினாமுலுவ 3.0976 கொழும்பு விஸாக்கா பாலிக்கா
4.நாகேந்திரன் பாணுகோபன் 3.0749 யாழ். இந்துக் கல்லூரி
5.சபனாதன் தனீஸன் 3.0602 யாழ்.இந்துக்கல்லூரி
6.சசிதா பன்துக்க குலதர்ம 3.0568 காலி மகிந்த வித்தியாலயம்
7.ஷேயாம் மேஹ்ராஜ் றியாழ் 3.0347 கொழும்பு டி.எஸ். சேனநாயக்கா
8.விக்கிரமசிங்க குணவர்தன 3.0299 அம்பலாங்கொட தர்மசோக்க மகா வித்தியாலயம்
9.சானிக்க நிஸன்சலா விஜயரத்னா 2.9970 நுகேகொட அனுலா வித்தியாலயம்
10.பவானி லக்ஷிகா போறாபஜ் 2.9901 கம்பஹா ரத்னாவாலி பாலிகா மகா வித்தியாலயம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2005
பல்கலைக்கழகம் நுழைய தகுதி பெற்றவர்கள்
1. மருத்துவம் பாடசாலை 11,484 15,173
தனிப்பட்ட 3,680
2.பொறியியல் பாடசாலை 8,470 10,667
தனிப்பட்ட 2,197
3.வணிகம் பாடசாலை 34,251 37,114
தனிப்பட்ட 2,863
4. கலை பாடசாலை 46,887 53,552
தனிப்பட்ட 6,665
இவ்வாறு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் கரங்களை சென்றடைந்த அதேவேளை, சிறந்த பெறுபேறுகள் கிடைத்த மகிழ்ச்சியினால் மாணவன் ஒருவன் மரணமாகிய சம்பவமும் வெளிவந்துள்ளது.
அத்துடன், கடல்கோள் அனர்த்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அம்பாறை கரைதீவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் பிரேமவாஹினி, காரைதீவு - விபுலானந்தர் மத்திய கல்லூரி சார்பாக இப் பரீட்சைக்கு தோற்றி வர்த்தகப் பிரிவில் (3ஏ) க்களைப் பெற்றுள்ளார். தாய் தங்கை உட்பட பல்வேறு உறவினரையும் கடல்கோளுக்கு இறந்த இவர் தற்போது தமது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆள்மாறாட்டம் மற்றும் பல வேறு காரணங்களினால் பரீட்சைக்குத் தோற்றிய 80 இற்கும் மேற்பட்டோரின் பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களம் தடுத்து வைத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.
இவையெல்லாவற்றையும் விட யுத்தம் மற்றும் கடல்கோள் அனர்த்தங்களினால் துவண்டு போன வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சார்ந்த மாணவர்களும் தமது கற்றல் திறமைகளை மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க பகிரங்கமாகவே அங்கீகரித்ததோடு ஆள்மாறாட்டம், மோசடி எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை. தென்னிலங்கையானது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் அண்மையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டார்.
உண்மையில் சம அளவான வளப் பங்கீடு, குண்டுத் சத்தமற்ற அமைதியான சூழல், பொருளாதார தடை நீக்கம் உட்பட தென்னிலங்கை மாணவ சமூகம் அனுபவிக்கும் அதே உரிமைகளையும், வாய்ப்புக்களையும் வட, கிழக்கு மாணவ சமூகம் அனுபவிக்குமாயின், ஆம்; மீண்டும் பல சாதனைகளை அச்சமூகம் கல்வியில் நிலைநாட்டும் என்பது நிதர்சனமே.
http://www.thinakural.com/New%20web%20site.../Article-13.htm
|
|
|
| உடன்பிறவா சகோதரர்கள் |
|
Posted by: SUNDHAL - 09-25-2005, 02:41 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
எஸ்.விஜயன்
அக்டோபர் 1 சிவாஜி கணேசன் பிறந்தநாள்
சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த படம் "தெய்வ மகன்'. சிறப்பான கதை, நடிப்பு, படமாக்கம் இருக்கிறதென்று அதை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைத்தனர். அதை கண்டித்தார் எம்.ஜி.ஆர்., "அனுப்பிய முறை சரியில்லை' என்று விமர்சித்தார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சினிமாவிலும், அரசியலிலும் கடுமையாக மோதிக் கொண்ட நேரம் அது. எம்.ஜி.ஆரின் கண்டனம் பற்றி சிவாஜியிடம் கருத்து கேட்ட போது, "தெய்வமகன்' படத்தைப் பற்றி எம்.ஜி.ஆர்., குறை சொல்லவில்லையே! படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியது பற்றி விமர்சித்திருக்கிறார். அது அவரது கருத்து!' என்று பதிலளித்தார். இந்தப் பிரச்னை மூலமாக இருவருக்கும் மோதல் வளரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போயினர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் போட்டி போட்டதைப் போல, மோதிக் கொண்டது போல வேறெங்கும் பார்த்திருக்க முடியாது அவர்களைப் போல் நட்பு கொண்டவர்களையும் காண முடியாது.
சிவாஜி உற்சாகமாக இருக்கும் போது, எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே கூறுவார். எம்.ஜி.ஆரும், "தம்பி சிவாஜி' என்றே சொல்வார். இருவரையும் நட்பு ரீதியாக இணைப்பதற்கு அவர்கள் நாடக உலகிலிருந்து வந்தவர்கள் என்ற ஒரு விஷயம் அடித்தளமாக இருந்தது. இன்னொன்று இருவரிடமும் இருந்த அளவில்லாத தாய் பாசம்.
சிவாஜிக்கு எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு எதிரிலேயே ஒரு தோட்டம் உண்டு. அதை சிவாஜி தோட்டம் என்பர். இங்கு நிறைய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. வயல்வெளி, தோட்டம், ஓய்வெடுக்க வசதியுள்ள வீடு என்றிருந்த இந்த இடத்தில் சிவாஜி, தன் தாயார் நினைவாக சிலை ஒன்றை எழுப்பினார். அந்த சிலையை, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைக்க வேண்டுமென்று விரும்பினார்.
ஆடம்பரமில்லாத அந்த எளிய நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திரையுலகிலிருந்து தயா ரிப்பாளர், நடிகர் பாலாஜி மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். சிவாஜி காங்கிரசில் தீவிரமாக இருந்த நேரம் அது என்றாலும், தான் சார்ந்த கட்சியிலிருந்து அவர் யாரையும் அழைக்கவில்லை.
இதற்கு முன் தஞ்சாவூரில் சாந்தி, கமலா என்ற இரு திரையரங்குகளை சிவாஜி கட்டி முடித்ததும், அதைத் திறந்து வைக்க முதல்வர் எம்.ஜி. ஆரைத் தான் அழைத்தார். அப்போது முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனும் கலந்து கொண்டார். அன்றைக்கு சிவாஜி காங்கிரசில் இருந்தாலும் வேறு முக்கிய பிரமுகர்களை அழைக்கவில்லை. இரு தியேட்டர்களையும் திறந்து வைத்துப் பேசிய எம்.ஜி.ஆர்., சிவாஜியின் பெயரில் ஒரு தியேட்டர் எழுப்பப்படவேண்டும். அதையும் நானே திறந்து வைப்பேன்...' என்றார்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் சிவாஜி நடித்த 275வது படம் "புதிய வானம்' இது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த படம். சிவாஜியுடன், சத்யராஜ் இன்னொரு நாயகன்.
படத்தில் சிவாஜி, சத்யராஜ் இருவரும் பாடுவதாக ஒரு பாடல் சொல்கிறேன். புதுப்பாடம் சொல்கிறேன்...' என்ற காட்சி உண்டு. சத்யராஜின் குழந்தைகளுக்கு சிவாஜி புத்தி கூறுவதான பாடல் அது.
அந்தப் பாடலில், "எளிமையும், மனப் பொறுமையும் புரட்சி தலைவராக்கும் உன்னை...' என்ற வரிகள் வரும்.
எம்.ஜி.ஆரைக் குறிப்பது என்பதால் நாம்தான் வாயசைத்து நடிக்கப் போகிறோம் என்று சத்யராஜ் நினைத்திருக்கிறார். ஆனால், படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அந்த வரிகள் சிவாஜிக்கானது என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூறியிருக்கிறார்.
இதை அறிந்த சிவாஜி முதலில் தயங்கினார், "நான் அண்ணனைப் பற்றிப் பாடினால் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?' என்று. உதயகுமார் அதற்கு, "எம்.ஜி.ஆர். அமரரான பின் எல்லாருக்கும் பொதுவானவராகிவிட்டார். உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம்...' என்று விளக்கம் கூறியிருக்கிறார். சொல்கிற விதமாகச் சொன்னால் எந்த ஒரு இயக்குனரின் சொல்லையும் சிவாஜி மீற மாட்டார். சரியென்று நடிக்கத் தயாரானார்.
சத்யராஜை அழைத்த சிவாஜி, "நீ தான் அண்ணன் (எம்.ஜி.ஆர்.) மாதிரி நிறைய பண்ணியிருக்கியே. நான் எப்படி நடிக்கணும்ன்னு நடிச்சுக் காட்டு...' என்றார்.
அதற்கு சத்யராஜ் "என்னங்கப்பா (சிவாஜியை அப்பா என்றழைப்பார்) உங்களுக்குப் போய் நடிச்சுக் காட்டச் சொல்றீங்களே?' என்று நெளிந்தார்.
சிவாஜியோ, நீ நடிச்சுக் காட்டினா தான் நான் நடிப்பேன்...' என்றார். இது சிவாஜியின் குறும்புத்தனம்.
சத்யராஜ், எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடித்துக் காட்ட, அதை ரசித்தார் சிவாஜி. ஆனால், அவர், தனது பாணியிலேயே அந்தப் பாடல் காட்சியில் வாயசைத்து நடித்து முடித்தார்.
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரைக் காணச் சென்றவர்களில் சிவாஜியும் ஒருவர். சிவாஜியைக் கண்டதும் கட்டிப்பிடித்து கதறி அழுதுவிட்டார் எம்.ஜி. ஆரின் நிலையைப் பார்த்ததும் சிவாஜியும் அழுது விட்டார். நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லை. சிவாஜியிடம் ரகசியம் ஒன்றைச் சொன்ன எம்.ஜி.ஆர்., ஒரு கடிதமும் கொடுத்தார். அதை சிவாஜி கடைசி வரை யாரிடமும் கூறவில்லை. கடித விஷயங்களை வெளிப்படுத்தவுமில்லை. இரு திலகங்களுக்குள்ளும் உறைந்து போன விஷயம் அது.
இதற்குப் பின் எம்.ஜி.ஆர்., கடைசி முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன், இலங்கை தமிழர்களைக் காக்கும் பொருட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தியமைக்காக, பிரதமர் ராஜீவ் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட், 2,1987ல் சென்னை கடற்கரையில் பெரும் கூட்டமொன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., கீழே பார்வையாளர் வரிசையில் சிவாஜி அமர்ந்திருப்பதைக் கண்டார். சிவாஜி தயங்கினாலும் அவரை மேடைக்கு வரவழைத்து அமர வைத்தார். அப்போது சிவாஜிக்குத் தன் அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவர் கன்னத்தில் எம்.ஜி.ஆர்., முத்தமிட்டபோது, கூட்டம் முழுவதுமே ஆர்ப்பரித்தது.
டிச., 5,1987ல் அன்று எம்.ஜி. ஆர்., வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற "ஜல்லிக்கட்டு' 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். எம்.ஜி.ஆர். கடைசியாக பங்கேற்ற திரையுலக நிகழ்ச்சி அது. சிவாஜி நடித்த படமொன்றுக்கு எம்.ஜி.ஆர். கேடயம் வழங்கி மகிழ்ந்த முதலும், கடைசியுமான நிகழ்ச்சி அது.
மலையாளத்தில் சிவாஜி நடித்த சினிமாஸ்கோப் படம் "தச்சோளி அம்பு' பிரேம் நசீர், தீபா நடித்த இதில் சிவாஜி ஜோடியாக கே.ஆர். விஜயா நடித்தார். அதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி அருகே நடைபெற்றது. ஒரு சண்டைக் காட்சியின் போது சிவாஜி தவறி விழுந்து வலது கை மணிக்கட்டுக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை நடந்த போது, முறிந்த எலும்பை இணைக்கும் வகையில் தகடு பொருத்தப்பட்டது. (அந்தத் தகடுதான் சிவாஜி உடல் எரியூட்டப்பட்டபின் கிடைத்ததாகும்.)
சிவாஜி குணமாகிய பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடங்கிய இடம் சத்யா ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ ஜூபிடர் பிக்சர்ஸ் வசம் இருந்த போது "மனோகரா'விலிருந்து, "பாசமலர்' வரை பல சிவாஜி படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கிய பின் சிவாஜி படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை. அங்கு நடந்த எம்.ஜி.ஆர்., குடும்ப திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சிவாஜி வந்து போனார்.
பல வருடங்களுக்குப்பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பு சத்யா ஸ்டுயோவில் துவங்கிய போது எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்தார். சிவாஜி ஒப்பனையோடு படப்பிடிப்புக்கு வந்தார் ஸ்டுடியோ நிர்வாகி பத்மநாபன், துணை நிர்வாகி ஹரி (எம்.ஜி.ஆர்., மேக்கப்மேன் ராமதாஸின் மகன்) உட்பட ஸ்டுடியோ பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பத்தாயிரம் ரோஜாப் பூக்களைக் கொண்ட மிகப்பெரிய மாலையொன்றை சிவாஜிக்கு அணிவித்து வரவேற்றனர். எம்.ஜி.ஆரின் உத்தரவின் பேரில், அவரது பிரத்யேக ஒப்பனை அறையை சிவாஜி பயன்படுத்திக் கொள்ளச் செய்தனர். அதற்கு முன் வேறு யாரும் எம்.ஜி. ஆரின் ஒப்பனை அறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதில்லை.
இதற்குப் பின் சிவாஜி தன்னுடைய சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான திரிசூலம், ரத்தபாசம், சந்திப்பு, வா கண்ண வா போன்ற படங்களின் படப்பிடிப்பை சத்யாவில் வைத்துக் கொண்டார்.
அப்படி படப்பிடிப்பு நடத்திய போது ஸ்டுடியோ பணியாளர்களை எம்.ஜி.ஆர்., நடத்திய விதம், தினந்தோறும் அசைவ உணவு பரிமாறியது பற்றியெல்லாம் அறிந்த சிவாஜி, தன் படங்களில் பணியாற்றியவர்களுக்கும் தினசரி அசைவ உணவு பரிமாறச் செய்தார்.
இதிலிருந்து சத்யா ஸ்டுடியோ நிர்வாகிகள் ஹரி, சந்திரனிலிருந்து பலரும் சிவாஜி குடும்பத்திற்கு நெருக்கமாகி விட்டனர்.
Thnaks inamalar...
|
|
|
| தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்மானம். |
|
Posted by: vasanthan - 09-25-2005, 01:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜனாதிபதித் தேர்தல் முடிவை அடுத்து தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்மானம்.(இன்றைய உதயனின் ஆசிரியர் தலையங்கம்)
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தென்னிலங்கைச் சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகப் பேரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றுடன் சேர்ந்து செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் அமைந்திருந்த முக்கிய அம்சங்களை தமிழர் விரோத நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பகிரங்க அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளனர். இலங்கையின் ஒற்றை ஆட்சி முறையை உறுதிப்படுத்தல். அதிகாரப் பகிர்வு, சமஷ்டி முறை, சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளை அடியோடு நிராகரித்தல். தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாடு என்ற அம்சத்தை அங்கீகரிக்காமல் புறமொதுக்குதல். விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை முற்றாக நிராகரித்தல். ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மீள் கட்டுமானத்துக்கான பொதுக்கட்டமைப்புத் திட்டத்தை அடியோடு கைவிடுதல். யுத்த நிறுத்த உடன்பாட்டை முற்றாக மாற்றி அமைத்தல். இலங்கை அமைதி முயற்சிகளில் நோர்வே அரசு, அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவது குறித்து மீள்பரிசீலனை செய்தல். இப்படி எழுத்து மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி அளித்திருப்பதை அடுத்து, தென்னிலங்கைச் சிங்களத்தில் அவருக்குப் பேராதரவு கிட்டியிருப்பதாகத் தென்னிலங்கையில் பேசப்படுகின்றது. சரி, இவ்வளவு உறுதி மொழிகளையும் வழங்கியவர், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் என்ன நடக்கும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியமை போன்று சமாதான முயற்சிகளுக்குக்கான கதவு நிரந்தரமாகவே அடைபட்டுப்போகும்.
தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதிவழியில் சமாதான முறையில் இணக்கத் தீர்வுகாணும் வாய்ப்பு அடிபட்டுப் போகும். நவம்பர் 17ஆம் திகதி நடைபெறும் தென்னிலங்கை ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவில் தங்கிநிற்கும் ஒருவர் ஜனாதிபதியானால், இப்போது விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழர்கள் அதன்பின் தங்களின் இருப்புக்காக விடிவுக்காக கௌரவமான வாழ்வுக்காக நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காக தமது சுயநிர்ணயப் போராட்டத்தை முழுமூச்சில் மீண்டும் முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்துக்கு ஏற்கனவே விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளார்கள். நவம்பர் 17ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் தென்னிலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் என்ற வானளவு உயர்ந்த அதி காரங்களோடு ஜனாதிபதிக் கதிரையில் அமரப்போகின்றவர் யார், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான தங்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்ற பிரகிருதி எவர் என்ப தெல்லாம் அத்திகதியில் தீர்மானமாகும் என்ற காரணத்தால் அது அவர்களுக்கு முக்கியமானதாக அமைகிறது.
அதேபோன்று அந்தத் தேர்தல் முடிவு ஈழத் தமிழர்களுக்கும் முக்கியமானதாகத்தான் அமையப் போகின்றது. ஆனால், அந்த முடிவின் விளைவு பெறுபேறு என்னவென்பதை அறிய ஈழத்தமிழர்களும் ஏன் முழு உலகமுமே மேலும் பத்து நாள்கள் காத்திருக்கவேண்டிவரும். அவ்வளவுதான். மீண்டும் பேரினவாதம் தென்னிலங்கையில் பீறிட்டு வலுவடைவதற்கு அங்குள்ள அரசியல் தலைமைகள் வழிசமைத் துள்ள நிலையில், அத்தகைய பேரினவாத சக்திகளின் ஆதரவுக் கரங்களில் இலங்கையின் அரசியல் தலைவிதியை எழுதும் அதிகாரப் பொறுப்பு விழுமானால், அதற்குப் பதிலீடாகத் தமிழர் தரப்பு எடுக்கக்கூடிய எடுக்கப் போகின்ற நடவடிக்கை என்ன, மார்க்கம் என்ன என்பவையெல்லாம் நவம்பர் 27ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்து பத்து நாள்கள் கழிந்து தமிழ்த் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீரர் தின உரையின் ஊடாக சர்வ தேசத்துக்கும் வெளிப்படுத்தப்படும் என்பது திண்ணம்.
ஒரு புறம் பேரினவாதத்தின் குறியீடுடாகத் தன்னை முன்னிறுத்தி இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. மறுபுறம் அமைதித் தீர்வு, சமாதான முயற்சி, அதிகாரப் பகிர்வு, சமஷ்டி முறை ஏற்பாடு என்பன பற்றியெல்லாம் அதிகம் பேசிக்கொண்டு, அதேசமயம் ஈழத் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏற்றுக்கொள்ளப்படாத தென்னிலங்கை அரசு முறைமைக்கு அடிப்படையான அரசமைப்புக்குள்ளும் அதன் சட்ட, நீதி முறைகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டு, அதற்கு வெளியே வரமுடியாமல், வரத்திராணியில்லாமல் கதை அளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வல்லாதிக்கநாடுகளின் ஆதரவுடன் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றைப் பின்னி, அதில் புலிகளை மாட்டவைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவுசெய்யாமல் அவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடித்து விடலாம் என்று ரணில் கனவு காணுகிறார்.
இந்த இருவரில் யார் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வு கிட்டாது என்பது தமிழர்களுக்குத் தெளிவாகியுள்ள இன்றைய நிலையில், தமது இறுதி இலட்சியத்தை அடைவதற்குத் தமிழர்கள் நாடப்போகும் வழிதான் என்ன? தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இம்முறை அதனைத் தெளிவாகக் கோடிட்டு வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். சிங்களத்தின் ஜனாதிபதித் தேர்தல் முடிவு வந்த கையோடு வெளிவரப்போகும் மாவீரர் தின உரை விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை விளக்கம் பற்றிய வருடாந்த உரை இம்முறை எதிர்காலம் பற்றிய பல கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில் தரும் என நம்பலாம்.
|
|
|
| டோக்கியா இணைத் தலைமை நாடுகள் பட்டியலில் இந்தியா? |
|
Posted by: வினித் - 09-25-2005, 12:43 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
[ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2005, 18:06 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டோக்கியோவில் 2003 ஆம் ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிற்கு அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய நாடுகளைக் கொண்டு இணைத் தலைமை நாடுகள் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவையும் இந்த இணைத் தலைமை நாடுகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகள் கூட்டத்தின் போது அமெரிக்காவில் இருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கே. நட்வர்சிங்கும் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணங்களினால் அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்திய அதிகாரிகள் எவரும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது வெளிப்படையான அழைப்பு அல்ல தனிப்பட்ட அழைப்பே என்று நோர்வே தரப்பினர் கூறியிருக்கக் கூடும்.
இந்தியாவை இணைத் தலைமை நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக நோர்வேக்கு அழுத்தங்கள் தரப்பட்டதாக செய்திகள் கூறுகிறது. வேண்டா வெறுப்பாகவே நோர்வேயும் இந்தியாவையும் அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி, இந்திய அமைச்சர் நட்வர்சிங் திட்டமிட்டபடியான சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அக்கூட்டத்தில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
நியூயோர்க்கில் இந்திய அமைச்சர் நட்வர்சிங்கை நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்சன் சந்தித்துப் பேசினாலும் அது இருதரப்பு பேச்சுகள் என்றளவில் இருந்தது.
ஜான் பீற்றர்சுடனான சந்திப்பின் போது சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளைத்தான் மீண்டும் முன்வைத்துள்ளதோடு, படைகளில் சிறார் சேர்ப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
www.puthinam.com
|
|
|
| உதயராஜிற்கு தீர்வு கிடைக்குமா? |
|
Posted by: வினித் - 09-25-2005, 12:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இலங்கை அகதியென்பதால் மருத்துவ பீடத்துக்கு இடம் கிடைக்காமல் தவிக்கும் மாணவன் உதயராஜ் ஜெயலலிதா அரசு கருணை காட்டுமா?
தமிழ்நாட்டின் மேலூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 இல் முதலிடம் பெற்று, டாக்டருக்கு படிக்க எண்ணிய மாணவர் `இலங்கை அகதி' என்ற காரணத்தால் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். தமிழக அரசின் உதவி கிடைக்குமா என மாணவர் உதயராஜ் காத்துக் கொண்டிருக்கிறார்.
திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் சிவலிங்கம், லட்சுமி. இவர்கள் மகன் உதயராஜ். கடந்த ஆண்டு பிளஸ் 2 இல் இவர் 1200 இற்கு 1137 மார்க் பெற்று மேலூர் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்றார். அதன் பின் டாக்டராக எண்ணிய அவர் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் 96.66 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, ஒதுக்கப்பட்ட 20 மருத்துவ பட்டியலில் இவரது பெயர் 7 ஆவது இடத்தில் இருந்தது. ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக ரூ. 2 ஆயிரத்து 500 க்கான காசோலை எடுத்துக்கொண்டு சென்னை சென்றவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இலங்கைத் தமிழரான இவருக்கு இந்தப் பிரிவில் ஆசனம் வழங்க முடியாது என்று, இவருக்கு அனுப்பியிருந்த தபால்களை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழகத்தில் படிக்க அனுமதித்த அரசு, மேற்படிப்பை படிக்க அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் முதல் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை உதயகுமார் மனு செய்தார். ஜனாதிபதி மாளிகையிலிருந்து அவரது உதவியாளர் ஆசிஸ் கால்யா ஒரு தபால் அனுப்பி உள்ளார். அதில் தமிழக அரசு இவரது மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான உதயராஜ் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இது குறித்து சிவலிங்கம் கூறியதாவது:
1990 இல் நான் இலங்கை வவுனியா பகுதியில் இருந்து தமிழகம் வரும் போது உதயராஜ் 2 வயது சிறுவன். மதுரை பெரியார் நகர் மற்றும் தெற்குவெளி வீதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்தான். பின்னர் திருவாதவூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தான். பிளஸ் 2 இல் உயிரியலில் 200, வேதியியலில் 200, இயற்பியலில் 199, கணிதத்தில் 197, தமிழிலில் 188, ஆங்கிலத்தில் 153 மார்க்குகள் பெற்றான். இவ்வளவு நன்றாக படிக்கும் மாணவனுக்கு இலங்கை அகதி என்ற ஒரே காரணத்தால், டாக்டருக்கு படிக்கும் படிப்பை மறுப்பது வேதனையளிக்கிறது என்றார்.
தாயார் லட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:
படிப்பு ஒன்றை மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பான். தற்போது மேல் படிப்பு படிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் இருக்கிறான். நாங்கள் இருவரும் படிப்பறிவு இல்லாதவர்கள். எங்கள் மகனாவது நன்றாக படித்து வேலைக்கு செல்வான் என்று எண்ணியதும் கனவாக போய்விட்டது. தமிழக அரசு எங்கள் மீது கருணை கொண்டு, அவனது படிப்பு தொடர அனுமதிக்க வேண்டும் என்றார்.
செப்.29 விடுபட்டவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர கடைசி நாளாகும். அதற்குள் உதயராஜிற்கு நல்ல தீர்வு கிடைக்குமா
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| வைரமுத்துவிடம் 52 கேள்விகள். |
|
Posted by: shanmuhi - 09-25-2005, 12:28 PM - Forum: சினிமா
- Replies (7)
|
 |
<b>52_வது பிறந்த நாளைக் கொண்டாடும் வைரமுத்துவிடம் 52 கேள்விகள். </b>
தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை?
தமிழ்
இப்போது 50kg. தாஜ்மகால் யார்?
சானியா மிர்சா
காதல் என்பது?
காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு.
பிடித்த நிறம்?
வெள்ளை
பச்சையப்பன் கல்லூரி?
மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது.
கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக?
பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்;
ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி
உங்கள் இளமையின் ரகசியம் என்ன?
மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது
இளையராஜா _ பாரதிராஜா?
மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள்.
வேட்டி பிடிக்காதா?
காலைப் பிடிக்கும்.
தம்பி...?
உடையான் படைக்கு அஞ்சான்
ரஜினி?
நடிகர்களில் ஓர் அறிவாளி
கமல்?
அறிவாளிகளில் ஒரு நடிகர்
பொன்மணி?
மனைவியாய் வந்த கடவுள்
பெரியார்?
செயற்கரிய செய்தார்.
அண்ணா?
கவிஞர்களை உருவாக்கிய உரைநடையாளர்
சின்ன வயதில் கடவுள் பக்தி உண்டா?
கோயிலுக்குப் போனதுண்டு. பக்தி மட்டும் வந்ததில்லை.
ஜெயலலிதாவிடம் பிடித்தது?
துணிச்சல்
முதல் பாடல்?
பொன்மாலைப் பொழுது
நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா!
தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?
நேரம் குறித்த பிரக்ஞை இன்மை.
உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)
. சுசீலா
காதலில் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
கல்யாணம் செய்து காதலைத் தோற்கடிப்பது
தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?
சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தங்கமாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; நகையாவாய்
நாகேஸ்வரராவ் பூங்கா என்றதும் நினைவுக்கு வருவது?
''இலை'' என்ற கவிதைக்குக் கருப்பொருள் தந்தது.
ஷங்கர் _ மணிரத்னத்துக்கு மட்டும் கலக்குகிறீர்களே?
இல்லை. அவர்களே கலக்குகிறார்கள்
தென்றல், மலர், நிலவு, பனித்துளி, பெண், ஆண் _ உடனே கவிதை எழுதத் தூண்டுவது?
பனித்துளியும் _ பெண்ணும்
சென்னையில் பிடித்த இடம்?
சென்ட்ரல் ரயில் நிலையம்
கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?
வியப்பது உழைப்பை
ரசிப்பது நகைச்சுவையை
வைகோ?
அரசியலில் இலக்கியம் கலப்பவர்
இலக்கியத்தில் அரசியல் கலக்காதவர்
விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?
நண்பர் யார் என்று தீர்மானித்துக் கொள்வது _ திரைப்பட வெற்றி
எதிரி யார் என்று தீர்மானித்துக்கொள்வது _ அரசியல் வெற்றி.
அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.
கபிலன் இன்னொரு வைரமுத்து ஆவாரா?
ஒரு வைரமுத்துவையே சிலபேர் ஜீரணிக்க முடியாதபோது, கபிலன் கபிலனாகவே
இருக்கட்டும்.
ராஜா _ ரகுமான் ஒப்பிடுங்கள்?
அவர் ஆர்மோனிய அரசர்;
இவர் ''கீ போர்டு கிங்''
திரைப்பாட்டு _ கவிதை எழுதுவதில் எது பிடிக்கும்?
திரைப்பாட்டில் கவிதை எழுதப்பிடிக்கும்
உங்கள் மனதில் பதிந்த கவிதை வரி?
தீதும் நன்றும் பிறர்தர வாரா
திருவள்ளுவரைப் பற்றி?
தமிழர்களின் ஞான அடையாளம்
கம்பர்?
தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் உச்சம்
இளங்கோவடிகளைப் பற்றி?
தமிழைத் துறக்காத துறவி
கண்ணதாசன் உயிரோடு வந்தால் என்ன கேட்பீர்கள்..?
வனவாசத்தில் விட்டுப்போன பகுதிகளை,
கவிஞர்களில் கூட ஆண் ஆதிக்கம் தானே அதிகம் இருக்கிறது?
பெண்ணாதிக்கம் உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!
அடிக்கடி வாசிக்கும் தமிழ் இலக்கியம்?
முத்தொள்ளாயிரம்
புதிய இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள்..?
பாலா _ சரண் _ செல்வராகவன் _ தரணி _ அமீர்.
தமிழ் நாட்டில் பிடித்த ஊர்
கொடைக்கானல்
பா. விஜய்க்கு விருது கிடைத்தது பற்றி....
தமிழின் பெருமை தொடர்கிறது
பெண் குழந்தை இல்லை என்ற ஆதங்கம் உண்டா?
ஷெமினியின் கடைசிப் படுக்கையருகே என்னை அழைத்துச் சென்ற டாக்டர் கமலா
செல்வராஜ், கண்கலங்கி அழுதபோது ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
இதிகாசங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரம் எது?
பேயத்தேவர்.
ரசிக்கும் சிற்பம்..?
கண்கள் மூடிய புத்தர் சிலை
வித்யாசாகர் விருது பெற்றது பற்றி...
தன் தாய்மொழியான தெலுங்குப் படத்திற்கு தேசிய விருது பெற்றவர்,
தந்தை மொழியான தமிழிலும் விருது பெறுவார்.
இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்...
ஆண் : மீசை முத்தம் வேண்டுமா;
மீசை இல்லாத முத்தமா?
மீசை முத்தம் என்பது பெண்ணே
நான் உனக்குத் தருவது
மீசையில்லாத முத்தம் என்றால்
நீ எனக்குத் தருவது (கலைஞரின் பாசக்கிளிகள்)
நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியுடன்
தொடர்புடையவர்களாக இருக்கிறார்களே ஏன்?
எனக்குத் தொடர்பு அரசியல் கட்சிகளோடல்ல _ தலைவர்களோடுதான்
|
|
|
| சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியம் |
|
Posted by: kurukaalapoovan - 09-25-2005, 12:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (26)
|
 |
எமது போராட்டத்தின் நியாயத்தன்மையின் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரத்தை கோரி தாயகத்திலும் புலத்தி பல மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்றுரைத்த உன்னத அகிம்சைவாதியின் நினைவுநாட்களில் எமக்கு சர்வதேச அங்கீகாரம் எவ்வளவு முக்கியம் என்றதை கொஞ்சம் விவாதித்தால் எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் அல்லவா கள உறவுகளே.
இன்று உலகில் எந்தெந்த வகையில் யாரால் அங்கீகரிக்கப்பட் நாடுகள், குடியரசுகள், தேசங்கள், அரசியல் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளன என்று வலையில் அறிந்தவற்றை சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன். தவறுகளை திருத்தி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள்.
ஜநாவினால் அங்கத்தவராக தீர்க்கப்படாதா அரசியல் மற்றும் அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி 191 நாடுகள் உள்ளன.
வத்திக்கான் இற்கு எந்த அங்கீகாரச்சிக்கல்கள் இல்லாவிட்டாலும் தன்னை ஜநாவில் இணைக்கவில்லை.
வத்திக்கான் மதரீதியிலான தேவைகளுக்காக ஒரு நாடகா உள்ளபோதும் மற்றய அன்றாட வாழ்வுக்குரிய நடைமுறை விடயங்களில் இத்தாலின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது எனலாம்.
ஆகவே வத்திக்கானோடு சேர்த்து 192 அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் தீர்க்கப்படாதா அங்கீகார சிக்கல்கள் எதுவுமின்றி உள்ளன.
193 வதாக தமது நலன்களிற்காக சர்வதேசம் அங்கீகரித்து பின்னர் ஒரு பலமிக்க அரசியல் இராணுவ சக்தியின் எதிர்பினால் அதை ஓரளவு இழந்த நாடாக தாய்வான் உள்ளது. தாய்வான் ஒரு காலத்தில் ஜநாவில் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டு இருந்த குடியரசு. அமெரிக்க இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கா 1971 இல் சீனா விதித்த நிபந்தனைக்கு அடிபணிந்து சீனாவின் ஒரு அங்கமாக தாய்வானை ஏற்றுக் கொண்டது.
இந்தவகையில் ஜநா அங்கீகாரமும் சீனா (பாதுகாப்புச்சபையின் நிரந்தர அங்கத்தவர்) அங்கீகாரமும் அற்ற ஓரு நாடக ஆனால் இராஜதந்திரரீதியில் மற்றய நாடுகளால் நேரடி உறவுகளை தொடர்ந்து பேணியவண்ணம், அரசியல் பொருளாதார நிர்வாக கட்டமைப்புக்களையும் முப்படைகளோடு நடமுறையில் ஒரு தனி நாடாக தொடர்கிறது. அமெரிக்கவின் ஆதாரவும் அரசியல் இராணுவ பொருளாதாரரீதியல் தொடர்கிறது. தாய்வானை சீனாமீது அழுத்தம் பிரயோகிக்க பயன்படுத்தம் ஒரு கருவியாக அமெரிக்கா ஆரம்பத்திலிருந்து பயன்படுத்துகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
194 வதாக சர்ச்சைக்குரியரீதியில் இருப்பதாக பாலஸ்தீனத்தை கொள்ளலாம். பாலஸ்தீனத்திற்கு ஜநாவில் விசேட அவதானிப்பாளர் உரிமை வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இருந்தும் இங்கே முழு அங்கீகாரத்திற்கு முன்னர் தீர்க்கப்படவேண்டி விடயம் என்ன வென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேலின் தலைநகரான ஜெரூசலத்திற்கு தான் பாலஸ்தீனமும் உரிமை கோருகிறது.
ஒரு அங்கீகரிக்கப்பட வேண்டிய நாட்டிற்குரிய அடிப்படை தகமைகளாக
1 வரையறுக்கப்பட்ட எல்லைகளோடு கூடிய முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம்
2 அங்கு சாதாரண அன்றாட வாழ்வில் ஈடுபடும் மக்கள்
3 அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக கட்டமைப்புகள்
4 பொருளாதார நடவடிக்கைகளை உள்ளேயும் வெளிநாடுகளோடும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கக்கூடிய தகமை. சொந்த நாணயத்தை உருவாக்கி அதை முகாமைப்படுத்துவது.
5 வேறொரு நாட்டினால் அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தி ஆளமுடியாமை
6 இன்னெரு நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச (ஜநா) அங்கீகாரத்திற்கும் அங்கத்துவத்திற்கும் முன்மொழியப்பட வேண்டும்.
அங்கீகாரமின்றி இன்று பல பிரதேசங்கள் உள்ளன. இவை மேற்கூறிய அடிப்படைத் தகமைகளை பூர்திசெய்யாததினாலே அல்லது பாரபச்சமான முறையில் இவை சர்வதேச சமூகத்தினால் பின்பற்றப்படுவதினாலோ இந்நிலையில் இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/List_of_unrec...their_territory
இவர்களோடு எமது போராட்டமும் இணைக்கப்பட்டிருப்பது சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது சுதந்திரப்பிரகடனம் செய்துவிட்டு அங்கீகாரம் இல்லாது இருப்பதை தவிர்கவேண்டியதன் முக்கியத்துவம் எம்மால் உணரப்பட்டு அதற்கான பங்களிப்புகளை நாம் துரிதப்படுத்த வேண்டும்.
ஆழிப்பேரலை அனர்த்ததோடு வந்திறங்கிய வெளிநாட்டு ஊடகங்கள் அரசச்சார்பற்ற நிறுவனங்களும் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் தமது பிரதேச குடிமக்களின் தேவைகளிற்கு எவ்வாறு சேவைகளை வழங்குகிறது என்பதை தொளிவாக அறிந்து கொண்டதோடு உலகிற்கும் அறிவிக்க தவறவில்லை. அதேவேளை இனவாத இலங்கை அரசின் உண்மை முகத்தையும் கண்டு கொண்டது. இவை வரலாறாக சுயாதீனமாக ஆதாரங்களோடு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது எமது போராட்டத்திற்கு கிடைத்த ஓரு பெரு வெற்றி.
நிலமையை உணர்ந்தும் இராஜதந்திர சம்பிரதாயங்களிற்காக வெளிப்படையாக கருத்துக்கூற முடியாது இருக்கிறது சர்வதேசசமூகம். அத்தோடு சர்வதேசசமூகத்தின் முக்கிய அங்கத்துவ நாடுகளின் தனிப்பட்ட சுயநல அரசியல் பூகோள இராஜதந்திர நலன்களிற்கு பங்கம் விழைவிக்கும் நிலையை தவிர்ப்பதே அவர்களின் நோக்கம். தமது நலன்களிற்கு பயன் இல்லாவிட்டால் எந்தவெரு நியாமான போராட்டாத்தையும் அங்கீகாரிப்பார்களா? வரலாற்றில் அவ்வாறு நடந்துள்ளதா? எமது போராட்டத்தை அங்கீகரிப்பதால் சர்வதேசத்திற்கு கிடைக்கும் பயன் என்ன? இதை நாம் எமது போராட்டத்தின் நியாயத்தன்மைக்கு அப்பால் எவ்வாறு சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கலாம்?
|
|
|
| அப்பத்தா |
|
Posted by: Muthukumaran - 09-25-2005, 10:49 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
[b]இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட....
சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்....
பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..
அணைக்காத உன்வீட்டு அடுப்பு...
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்....
உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்...
திடீரென்று ஓய்வெடுத்த
உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு...
ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்......
உன் சோகம் சொல்ல
முடியாமல் தடுமாறுகிறது
என் தமிழறிவு...
எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை......
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை...
அவை கற்பனை அல்ல
நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது........
வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்.....
மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே....
சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்
உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற
அந்த
|
|
|
| குழந்தைகளின் குறும்புகள் |
|
Posted by: MUGATHTHAR - 09-25-2005, 09:38 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (8)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>குழந்தைகளின் குறும்புகள்</b></span>
இப்பத்தைய குழந்தைகளைப் பாத்தீர்கள் எண்டால் நிறைய புத்திசாலிகளாகத் தான் இருக்கிறார்கள் அதுவும் சிறுவயதில் செய்யும் குறும்புகள் சிலவேளைகளில் ஆச்சரியப்படவும் செய்கின்றன. ஆரம்பத்தில் நாங்கள் எங்கடை அப்பா அம்மாக்கு எவ்வளவு சுத்துமாத்துகளைச் செய்திருப்போம் இப்ப எங்கடை குழந்தைகள் எங்களுக்கே தண்ணி காட்டுதுகள் இப்ப 3வயது பிள்ளைக்குகூட டிவி தொலைபேசி கணணி என்பவற்றைப்பற்றி நல்லாத் தெரியும் இந்த தொழிநுட்ப வளர்ச்சியும் அவர்களில் புத்திசாலித்தனத்துக்கு காரணமாக இருக்கலாம் சரி. . . .
இதில் உங்களின் பிள்ளைகள் செய்த அல்லது நீங்கள் கண்ட/ கேட்ட சிறுபிள்ளைகளின் குறும்புத்தனங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சிலது ஆச்சரியப்பட வைக்கும் சில நகைச்சுவையாக இருக்குமல்லவா??
குறிப்பு : களத்தில் இருக்கும் சுட்டிகள் தாங்கள் செய்த செய்கிற குறும்புகளை எழுதினாலே காணும் (அதுக்காண்டி வெண்ணிலா சுட்டி டண்ணின் புலநாயை பிடிச்சுக் கொண்டு போணது குறும்பெண்டு சொல்லக் கூடாது. அது நம்பர்வன் கடத்தல்கேஸ். .)
|
|
|
|