| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 433 online users. » 0 Member(s) | 430 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| கமல் தொடங்கும் நடிப்புக் கல்லூரி! |
|
Posted by: வினித் - 09-27-2005, 01:32 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
கமல் தொடங்கும் நடிப்புக் கல்லூரி!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் ஊட்டி அல்லது கொடைக்கானலில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டங் உள்ளிட்டவற்றை போதிக்கும் திரைப்படக் கல்லூரியைத் தொடங்க கலைஞானி கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
நடிப்புலக இமயமாக விளங்கிய சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் கட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நிலம் ஒதுக்கக் கோரி தமிழக அரசையும் நடிகர் சங்கம் அணுகியது. பல கால இழுபறிக்குப் பின்னர் தமிழக அரசு நிலத்தை ஒருவழியாக ஒதுக்கித் தந்தது.
ஆனால் மணிமண்டபம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சில வதந்திகள் உலா வரத் தொடங்கின. சிவாஜி கணேசன், என்னதான் நடிப்புலகில் யாரும் எட்ட முடியாத சிகரத்தைத் தொட்டவர் என்றாலும் அரசியலில் அவர் அதல பாதாளத்தைப் பார்த்தவர்.
இது நடிகர் சங்கத் தலைவராக இருந்து தற்போது அரசியல் தலைவராக மாறியிருக்கும் விஜயகாந்த் தரப்பினருக்கு ஒரு விதமான நெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.
சிவாஜி கணேசன் தொடர்பான பணிகளில் இப்போது ஈடுபட்டால், அவரது 'அரசியல் ராசி' நம்மையும் பற்றிக் கொள்ளலாம் என 'பயந்த' சிலர், இப்போதைக்கு சிவாஜி கணேசன் மணிமண்டபம் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்ட வேண்டாம் என 'கேப்டனுக்கு' அறிவுரை வழங்கினார்களாம்.
கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டன், அதுவும் சரிதான் என்று சற்றே நிதானப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறாராம். ஆனாலும், பல்வேறு முனைகளிலிருந்தும் நெருக்கடி வந்த காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு அவசர, அவசரமாக பூமி பஜை போட்டனர்.
அத்தோடு சரி, மணி மண்டபம் குறித்த எந்தத் தகவலையும் காணோம்.
இந் நிலையில் சிவாஜியின் கலை வாரிசாக அறியப்படும் கமல்ஹாசன் சப்தம் போடாமல் ஒரு காரியத்தை செய்து வருகிறார். ஊட்டி அல்லது கொடைக்கானலில் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக இரு இடங்களிலும் தோதான இடத்தைப் பார்த்து வருகிறார். பல கோடிகள் முதலீட்டில் இந்தக் கல்லூரி உருவாகப் போகிறதாம்.
இந்தக் கல்லூரியில், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட திரைத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் கற்பிக்கப் போகிறார்கள்.
கல்லூரியை தனது சொந்த செலவிலேயே நிறுவ கமல் ¬டிவு செய்துள்ளார். இருப்பினும் பிறருடைய உதவி கிடைத்தால் அதையும் ஏற்க கமல் ரெடி என்கிறார்கள். ஆனால், உதவி கேட்டு யாரிடமும் போய் நிற்க மாட்டாராம்.
|
|
|
| சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் "கோழி திருடன்'' |
|
Posted by: SUNDHAL - 09-27-2005, 01:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏதாவது பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கும். சில நாடுகளுக்கு இயற்கை சீற்றங்களால், சில நாடுகளுக்கு தீவிர வாதத்தால் இருக்கலாம். ஆனாலும் தற்போது இயற்கை சீற்றத்தை விட பெரும் பான்மையான நாடுகளில் தீவிரவாதத்தால்தான் அதிகப்பிரச்சினை.
சமூகத்தைக் கெடுக்கும் குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு நாட்டிலும் புதுப்புது சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. என்னதான் சட்டங்கள் வகுத்தாலும் சில குற்றவாளிகள் போலீசுக்கும் ராணுவத் துக்கும் தண்ணி காட்டிவிட்டு வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொள்வார்கள். இப்படி வெளி நாடுகளில் ஒளிந்து கொண்டிருக்கும் குற்றவாளிகளை பிடிக்க சர்வதேச குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கப் படும்.
உலகில் உள்ள குற்றவாளிகள் அடங்கிய இந்தப் பட்டியலில் 7 கோழிகளை திருடிய திருடன் ஒருவரும் உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
ருமேனியா நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கிழக்கு ருமேனியாவில் இசி நகரில் வசித்த ஒருவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள கோழிப்பண்ணையில் 7 கோழிகளை திருடி உள்ளார். திருடியது இவர்தான் என்று கண்டு பிடிக்கப்பட்டு இவர் மீது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே போலீசில் இருந்து தப்பிக்க விரும்பியவர் பக்கத்து நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். எனவே இவரது பெயர் சர்வதேச குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டது.
வெளி நாட்டுக்கு தப்பி ஓடியவர் நான்கு ஆண்டுகால இடை வெளிக்கு பின்னர் அண்மையில்தான் தனது நாட்டுக்கு திரும்பினார். அப்போது நாட்டின் எல்லையில் இவரை சோதனையிட்ட எல்லைப் பாதுகாப்பு படையினர் இவர் சர்வதேச குற்றவாளி என்று முடிவு செய்தனர்.
இதன்பின் இவரிடம் விசாரணை செய்ததில் கோழி திருடியவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் 7 கோழிகளை திருடியதற்காக மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றால் கோழி திருட்டுக்கு இந்த தண்டனை ரொம்ப ஓவர் என்று, ஆனால் "இதைப் போன்ற தவறுகளுக்கு தண்டனை குறைவாகக் கொடுக்கப்பட்டால் பெரிய தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். தண்டனை சற்று கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும் என்கின்றனர்'' அந்த நாட்டு போலீஸ்காரர்கள்.
Thanks:Thanthi..............
|
|
|
| மனைவியை கொல்ல துப்பாக்கி திருடிய இராணுவச் சிப்பாய் |
|
Posted by: வினித் - 09-27-2005, 10:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மனைவியை கொல்ல ஆயுத களஞ்சியத்திலிருந்து துப்பாக்கி திருடிய இராணுவச் சிப்பாய்
கடவத்தையிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து நேற்று திங்கட்கிழமை நண்பகல் இராணுவச் சிப்பாயொருவர் துப்பாக்கியொன்றையும் துப்பாக்கி சன்னங்கள் நிரப்பப்பட்ட நான்கு ரவைக் கூடுகளையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
மனைவி தனக்கு துரோகமிழைத்து விட்டதாக கூறிக்கொண்டிருந்த சிப்பாய் ஒருவரே, துப்பாக்கியை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற இந்தச் சிப்பாய் பசியாலை கொட்டகவெலைப்பிட்டிய காட்டுக்குள் மறைந்திருப்பதாக நிட்டம்புவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து அவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிட்டம்புவையைச் சேர்ந்த இந்தச் சிப்பாய் தனது மனைவியைச் சுட்டுக் கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
துப்பாக்கியுடன் சென்றுள்ள இவர், தனது மனைவியைத் தேடி அலைந்து திரிந்ததுடன் துப்பாக்கியால் கண்டபடி சுட்டுக்கொண்டும் காட்டுக்குள் சென்றதாக, அதை நேரில் கண்டவர்கள் நிட்டம்புவ பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இராணுத்தினரும் பொலிஸாரும், இவரைக் கைது செய்ய அப் பகுதியில் தேடுதல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
|
|
|
| காவல்துறையினரின் தடுப்புக் காவல் ஒக். 11 வரை நீட்டிப்பு!! |
|
Posted by: வினித் - 09-27-2005, 09:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
மூன்று சிறிலங்கா காவல்துறையினரின் தடுப்புக் காவல் ஒக். 11 வரை நீட்டிப்பு!!
[செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2005, 14:43 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ காவல்துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சிறிலங்கா காவல்துறையினர், கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நீதிமன்றில் நீதியாளர் சதானா முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.
மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தமிழீழ காவல்துறையின் பரிசோதகர் பவானி, நீதியாளருக்கு தெரிவித்ததாவது:
போர் நிறுத்த உடன்பாட்டின் படி எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி உள்நுழைந்தமையானது தவறாகும்.
தவறாக உள்நுழைந்து விட்டோம். இடம் தெரியாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில் இவர்கள் ஒரு படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அத்துடன் எமது கட்டுபாட்டுக்குள் பகுதிக்குள் உள்நுழைந்தபோது சிவில் உடையில் தோற்றமளித்தனர்.
முதல் விசாரணையின் போது தம்மை இனம் காட்டிக்கொள்ள மறுத்து விட்டனர். இவர்களுடைய உள்நுழைவானது சதி நோக்கமாக இருக்கலாம். அது தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் இவ் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 14 நாட்கள் கால அவகாசத்தை நீதிமன்று வழங்க வேண்டும்.
தமிழீழ குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 58 உப பிரிவு 2 - இன் கீழ் இன்னும் 15 நாள் வரை மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் தமிழீழ காவல்துறையினரால் தடுத்து வைக்க முடியும் என்று தெரிவித்தார்.
மூன்று சிறிலங்கா காவல்துறையினர் சார்பில் வாதிட்ட சட்டவாளர் ரி.எஸ்.வேலவர்,
மூன்று சிறிலங்கா காவல்துறையினரையும் பிணையில் விடுவிக்கலாம். பிணையில் விடுவிக்கப்படும் மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் நீதிமன்றின் கட்டளைகளை ஏற்று மன்றுக்கு சமூகம் அளிப்பார்கள்.
இவர்களுடைய குடும்ப நிலைமைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். சிறுவர் துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் இவர்கள் நியமிக்கப்ட்டவர்கள்.
இன்று வரை தமிழீழ காவல்துறையினரால் இவர்களது குற்றவரையறைகள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதற்கான ஆவணங்களை நீதியாளரிடம் கையளித்தார்.
சட்டவாளர் ரி.எஸ்.வேலவர் சமர்பித்த ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்கும் படியும் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் தொடர்பாக குற்ற வரைவினை வரையறை செய்து மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழீழ காவல்துறையினருக்கும் நீதியாளர் உத்தரவிட்டார்.
அடுத்தகட்ட விசாரணைகள் ஒக்டோபர் 11 ஆம் நாள் இடம்பெறும் என்றும் அதுவரை மூன்று சிறிலங்கா காவல்துறையினரை தடுப்புக்காவலில் வைக்குமாறும் தமிழீழ காவல்துறையினருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதியாளர் சதானா உத்தரவிட்டார்.
http://www.eelampage.com/?cn=20380
|
|
|
| வன்மையாக கண்டிக்கிறோம்.. |
|
Posted by: வினித் - 09-27-2005, 07:33 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (36)
|
 |
LTTE no longer welcome in EU member states"
[TamilNet, September 27, 2005 02:03 GMT]
"The European Union on Monday condemned continuing violence by Sri Lanka's Tamil Tigers, and said representatives of the group were no longer welcome in Europe's capitals," Associated Press report said Monday.
"In a statement released by the British government, the EU [European Union] said it was considering adding the Tamil Tigers to its list of terrorist organizations. Britain currently holds the rotating presidency of the 25-nation union.
"In the meantime, it said, delegations from the group "will no longer be received in any of the EU member states until further notice,"" AP report further said.
www.tamilnet.com
|
|
|
| சிங்களப் பாசறை திசைகள் எனி இருக்குமோ...?! |
|
Posted by: kuruvikal - 09-26-2005, 08:49 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
<img src='http://img198.imageshack.us/img198/8401/puratchchi7vg.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழ் தாய் சேய்
இந்துவின் மைந்தன்
தலைவன் வாரிசு
மக்கள் இதயம்
அகிம்சையின் நாயகன்
திலீபன் அண்ணா
அன்று முழங்கினான்
மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென்று..!
இதோ இன்று...
மக்கள்
புரட்சிக்காய்
பொங்கி எழுந்துள்ளார்
தலைவன் வழியில்
தானே நடக்கின்றார்
சிங்களப் பாசறை
திசைகள் எனி இருக்குமோ...??!
செந்தனல் மீது
சுதந்திரப் புலிக்கொடி
பறந்திடும் வேளை..!</b>
படம் - சூரியன்.கொம்
|
|
|
| காணவில்லை? தேடுகிறோம் |
|
Posted by: வன்னியன் - 09-26-2005, 04:52 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
சுவிஸிலிருந்து நண்பர் அனுப்பிய தகவலை (அவலத்தை) உங்கள்முன் வைக்கின்றேன். நகல் எடுத்து இவைக்கமுடியாமையினால் சுயமாக அதை பிரதிபண்னுகின்றேன்.
காணவில்லை? தேடுகிறோம்.
<span style='color:blue'>நாம் அகதிகாளாக வாழும் அன்னியமண்ணாம் சுவிஸ் மண்ணில் எம் தமிழ்சமூகத்தின் சாபக்கேடுகளான சில தமிழ் ஆண்பெண் இருபாலாரும் இணைந்து பாலியல்தொழிலில் ஈடுபட்டு அதை படம்பிடித்து பணம் பண்ணுவதாலும்
புகலிடம் தேடி அகதியாய் வந்த மண்ணில் அடைக்கலம் தந்த சுவிஸ்நாட்டவரையே துப்பாக்கி ஏந்தி சுட்டுத் தள்ளிய துரதிஷ்டசாலியாலும்
ஆயுதம் எடுத்து அட்டகாசம் பண்ணி காவல்துறையால் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் காவாலி தமிழ் இளைஞர்களாலும் அக்கறையில்லாத பெற்றோரால் அக்கறையில்லாமல் வளர்க்கப்பட்டு ஒழுக்கமில்லாத பெற்றோரால் ஒழுக்கமில்லாமல் வளர்க்கப்பட்டு கட்டுப்பாடற்ற காவாலிக்கூட்டமாய் புகையிரத நிலையங்களிலும் கலாச்சார விழா மையங்களிலும் கோவில்களிலும் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மதுபோதையில் நின்று பொதுமக்களுக்கு பலவகைகளிலும் துன்பம் விளைவிப்பதோடு
இந்த இடங்களுக்கு வரும் இளம் தமிழ்ப்பெண்களை தொலைபேசிமூலம் படமெடுத்து அதைவைத்து அந்த பெண்களை மிரட்டும் தமிழ் இளைஞர்களாலும் பெண்கள்மீது பாலியல் வனமுறையில் ஈடுபடும் இளைஞர்களாலும் பணத்துக்காக கொலை கொள்ளைகளில் ஈடுபடும் தறுதலை தமிழ் இளைஞர்களாலும் மற்றவர் பணத்துக்கு ஆசைப்பட்டு நல்லவர் போல நடித்து மற்றவர் பணத்தை அபகரித்து திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றும் ஏமாற்றுபேர்வழிகளாலும் கட்டிய மனைவியையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவித்ததுவிட்ட அந்த படுபாதக தமிழனாலும் கட்டிய கணவனைவிட்டு மற்றவள் கணவனோடு மாற்று வாழ்க்கை வாழும் ஓரிரு மதிகெட்ட பெண்களாலும்
தன் மனைவியைவிட்டுவிட்டு மாற்றான் மனைவியோடு மகிழ்ந்திருக்கும் ஒரிரு மலிவுத் தமிழராலும் கையில் ஏந்திக் காப்பாற்ற வேண்டிய தங்கள் மனைவி பிள்ளைகளை குடித்துவிட்டு கொத்தடிமைகளாக நடத்தும் சில அரைவேக்காட்டு தமிழர்களாலும்
ஈழத்தமிழரான எம்மவரின் ஒட்டுமொத்தமான கண்ணியம் கற்புநெறி ஒழுக்கம் பண்பாடு மனசாட்சிக்கு பயப்படும் தன்மை கலாச்சார விழுமியங்களை கட்டிக்காக்கும் பொறுப்பு இவை அத்தனையும் எம்மவரிடமிருந்து காணாமல்போய் பலசாட்களாகி விட்டன.
இந்த அடையாளங்கள் தொலையக்காரணமாய் இருந்த இந்த சமூகவிரோதிகளை இந்த கலாச்சாரதுரோகிகளை எம் சமூகத்தின் ஒரு அங்கமென ஏற்றுக்கொண்ட தொடர்ந்து வாழ வேண்டுமா? வேண்டாம். இவர்கள் எம் சமூகத்தில் தொடர்ந்து இருக்கக்கூடாது. இவர்களால் தொலைந்து போன மாற்றாரும் மதிக்கின்ற எம் கலாச்சாரா விழுமியங்களை கண்டுபிடித்து கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு தமிழ்மக்களாகிய எம்மையே சாரும்.
அதனால் இந்த சமூக விரோதிகளை எம் தமிழ்ச் சமூகத்தின் பெயரால் கடுமையாக எச்சரிக்கின்றோம். தொடர்ந்தும் இவர்கள்
இப்படியே செயல்படுவார்களானால் அதன் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும். பொறுத்திருங்கள்.
தங்கள் அடையாளங்களை நேசிக்கும்
தமிழர்கள்</span>
இப்படி அந்த செய்தி இருக்கிறது.
|
|
|
|