| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 398 online users. » 0 Member(s) | 396 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| மட்டு. புனர்வாழ்வுக்கழகம் மீது தாக்குதல்: காவலாளி கொலை |
|
Posted by: வியாசன் - 09-28-2005, 07:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மட்டு. புனர்வாழ்வுக்கழகம் மீது தாக்குதல்: காவலாளி கொலை
ஜபுதன்கிழமைஇ 28 செப்ரெம்பர் 2005இ 21:34 ஈழம்ஸ ஜமட்டக்களப்பு நிருபர்ஸ
மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதிச் சந்தியிலுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மாவட்ட அலுவலகம் மீது இன்றிரவு 8.20 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட தாக்கதலில் அங்கு இரவு நேர கடமையிலிருந்த காவலாளியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் வேலுப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் அலுவலகம் முன்பாக இறங்கிய இரண்டு நபர்கள் 5 கைக்குண்டுகளை வீசி இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
ஏற்கனவே டயஸ் வீதியிலுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அலுவலகம் சில மாதங்களுக்கு முன்பு இப்படியானதொரு தாக்குதலுக்கு இலக்கானதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டமை குறிப்படத்தக்கது.
சுட்டது புதினத்திலிருந்து
|
|
|
| மன்னாரில் தேசியநிகழ்வை குழப்பமுயற்சி! |
|
Posted by: ANUMANTHAN - 09-28-2005, 05:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மன்னாரில் நடைபெறும் தேசியநிகழ்வில் கலந்துகொள்ள வன்னியில் இருந்து சென்றவர்களை குழப்பும் முயற்சியாக, ராணுவத்தினர் மன்னாரில் இருந்து வன்னிக்கு வரும்வழியான மன்னார்-மதவாச்சி வீதியினை போக்குவரத்துக்கு தடைசெய்துள்ளதாகவும் இதனால் தேசிய நிகழ்வில் கலந்துகொள்ளச்சென்ற சுமார் ஐயாயிரம் மக்கள் மீண்டும் திரும்பமுடியாதுள்ளதாகவும், இதுகுறித்து மதகுருமாரும் தமிழ்தேசியகூட்டமைப்பினரும் போர்நிறுத்தக் கண்காணிப்பாளர் சகிதம் ராணுவத்துடன் தொடர்புகொண்டுள்ளதாகவும், தமிழ் தொலைக்காட்சி(வெக்டோன்)தெரிவித்துள்ளது.
|
|
|
| விளையாட்டு செய்தி(கால்பந்து) |
|
Posted by: வினித் - 09-28-2005, 03:50 PM - Forum: விளையாட்டு
- Replies (2)
|
 |
<b>ஐரோப்பிய champions League</b>
27-09-2006
Group A
Bayern munchen 1 Club Brugge 0
Juventus 3 Rapid Wien 0
Group B
Ajax 1 Arsenal 2
FC Thun 1 Spaarta praag 0
Group C
FC Barcelona 4 Udinese 1
Panathinaikos 2 Werder Bremen 1
Group D
Manchester Utd 2 Benfica 1
lille OSC 0 Villarreal 0
|
|
|
| தங்கரின் வரவு ப்ளஸ் ஒன்று இல்லை.., ப்ளஸ் 100...! |
|
Posted by: SUNDHAL - 09-28-2005, 03:20 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
ஆரம்ப அரைமணி நேரம் அப்பாடா(சாமி)! அதன்பின் கதைக்குள் நம்மை மெல்ல இழுத்துக் கொள்கிறார் தங்கர்பச்சான். குடும்ப கதைகளை சொல்கிற இயக்குனர்கள் குறைந்துவிட்டார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் தங்கரின் வரவு ப்ளஸ் ஒன்று இல்லை.., ப்ளஸ் 100...!
உருட்டிய கொழுக்கட்டை மாதிரி இருக்கிற ஒருவர் ஹீரோவாக களமிரங்க தைரியம் வேண்டும். (பார்க்கிற நமக்கும்) என்ன மாயமோ, அதிலேயும் வெற்றி கண்டிருக்கிறார் தங்கர்.
தமிழ் வாத்தியாரான தங்கர்பச்சானுக்கு இரண்டு எல்லைகள். ஒன்று பொறுக்கியாக ஊர் சுற்றுவது. திருந்துவார் என்று ஐயப்பன் கோவிலுக்கு அனுப்பினால், திரும்பி வந்து முழு சாமியாராகிவிடுவது. மனைவி குழந்தைகள் பட்டினியால் திண்டாட, மனிதர் திருவண்ணாமலைக்கு சிவதரிசனம் செய்ய கிளம்பிவிடுகிறார். சன்யாசம் என்ன தருகிறது என்பது க்ளைமாக்ஸ்.
எக்குதப்பாக நடந்து கொள்வதையும், பிறகு மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதையும் சினிமாவிலும் செய்திருக்கிறார் தங்கர். அச்சு அசலாக பொருந்தியிருக்கிறது. அதிலும், ÔÔஉள்ளே வாÕÕ என்று ஒரு வார்த்தை சொல்ல மறுக்கும் மனைவியை கெஞ்சுவதும், அப்பா மாமனார் என்று முக்கிய உறவுகளாவது தன்னை குடும்பத்தோடு சேர்த்து வைக்காதா என்று கதறுவதுமாக மனசுக்குள் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் தங்கர். சன்யாச வாழ்க்கையில் குடும்பத்தையும், குடும்ப வாழ்க்கையில் சன்னியாசத்தையும் நினைத்து அவர் தடுமாறுவது இயல்பான சித்தரிப்பு.
தங்கரின் மனைவியாக நவ்யா. மாடர்ன் உடையில் டூயட் பாட வேண்டிய வயசு. ஆனால் இந்த உயிரோட்டமுள்ள வேடத்திற்காக தன்னையே அற்பணித்திருக்கிறார். அற்புதமான நடிப்பு. குழந்தைகளின் உண்டியலை கூட விட்டு வைக்காமல் அபேஸ் பண்ணும் தங்கரை நினைத்து குமுறி, வீட்டில் உள்ள சாமி படங்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து சாமியாடுகிறாரே.. பின்-டிராப் சைலண்ட்டில் திகைத்து போகிறது தியேட்டர்.
பாராட்டபட வேண்டிய இன்னொருவர் பிரமிட் நடராஜன். பிள்ளையை பெத்தா கண்ணீரு... மருமகளுக்கும் சேர்த்து வடிக்கிற அற்புத கேரக்டர்.
காமெடி என்ற பெயரில் இவர்கள் அடிக்கிற கூத்தில்தான் மிளகாய் பொடியை தேய்த்து குளித்த எரிச்சல். ஆனாலும் மும்பையிலிருந்து திரும்பிய கஞ்சா கருப்பு, தாய் மண்ணுக்காக அத்தனையையும் இழந்து தவிப்பது குபீர்!
இளையராஜாவின் இசையில் பின்னணி இசை சேர்ப்பு நிலாச்சோறு.
இந்த அப்பாசாமி மலையாள தழுவல்தான். ஆனாலும் தைரியமாக தமிழுக்கு படைத்த தங்கரை பங்கமில்லாமல் பாராட்டலாம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|
|
|
| கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு |
|
Posted by: வினித் - 09-28-2005, 02:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கொழும்பில் இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு
மனோகணேசன் முறைப்பாடு
<b>கொழும்பில் தமிழ் இளைஞர்களை கடத்திச் செல்லும் நடவடிக்கைகளில் இனம் தெரியாத கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இலக்கத் தகடுகள் அற்ற கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட வான்களில் வரும் ஐவருக்கு மேற்பட்ட கும்பல் ஒன்றே இந்தக் கடத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியிலும் வத்தளையிலும் இவ்வாறான கடத்தல் நடவடிக்கைகளும் கடத்தல் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கொச்சிக்கடையிலுள்ள இந்திய பிரஜையொருவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவரைப் பார்க்க வந்த வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த இளைஞரின் வத்தளை வீட்டுக்கு சென்றுள்ள அவரின் நண்பனை, வானில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்ற போது அந்த இளைஞன் அவர்களை வானில் கிடந்த கட்டையொன்றில் தாக்கிவிட்டு தப்பிவந்துள்ளார்.
<span style='font-size:25pt;line-height:100%'>இச் சம்பவம் தொடர்பாக ஜம்பட்டா வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பொலிஸார், சம்பந்தப்பட்ட இளைஞனை தகாத வார்த்தைகளினால் பேசி வெளியேற்றியுள்ளனர்</span>. பின்னர் அந்த முறைப்பாடு வத்தளை பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொச்சிக்கடையிலுள்ள கடைக்கு வெள்ளை வானில் வந்த சிலர் இளைஞர் ஒருவரை தேடியுள்ளனர்.
அந்தக் கூட்டத்தில், வத்தளை இளைஞர் கடத்தலில் சம்பந்தப்பட்டவரும் இருந்ததுடன் அவர் கடை ஊழியர்களை எச்சரித்துமுள்ளார்.
இதேவேளை, ஆட்டோவிலும் சிலர், பொலிஸ் உடையில் வந்து மேற்படி கடையை நோட்டமிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மேல் மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர் இது குறித்து பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவிற்கும், பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரட்ண சிறி விக்கிரமநாயக்காவுக்கும் அறிவித்து இது குறித்து உடனடி நடவடிக்கை</b> எடுக்குமாறு கேட்டுள்ளார்.
http://www.thinakural.com/New%20web%20site...Important-6.htm
|
|
|
| ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இனவாதிகளுக்கு ஊக்குவிப்பு |
|
Posted by: வினித் - 09-28-2005, 01:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது பலதரப்பட்ட தடையுத்தரவுகளை விதித்தும் பல படுகொலைகளை நடாத்திவரும் இவ்வேளையில் ஐரோப்பியயூனின் இவ்வறிக்கை தமிழ் பொறுத்தவரையிலும் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையிலும் பலத்த ஏமாற்றத்தையும் கவலையையும் தந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இச்சயெற்பாடு சமாதான நடவடிக்கைளுக்கும் ஒரு பின்னடைவை தரும் ஏன் எனில் சர்வதேச சமூகத்தின் அனுசரனையுடனேயே இப்பேச்சுவார்த்தையை நாம் ஆரம்பித்தோம் ஆனால் சர்வதேச சமூகமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது எமக்கு தடையுத்தரவுகளை பிறப்பித்துள்ளது பலத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.
சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகளுக்கு இதுவரை எந்த கண்டன அறிக்கை எதனையுமே வெளியிடாத சர்வதேச சமூகம் திடீரென எமது அமைப்பின் தூதுக்குழுவினரின் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கான தடைவிதிப்பு சிறிலங்கா அரசின் இத்தகைய செயற்பாட்டுக்களை சரியானவை என கருதுவதாக இது உள்ளது என நாம் கருதுகின்றோம் என அவர் தெரிவித்தார்.
,
http://www.sankathi.net/index.php?option=c...=2727&Itemid=41
|
|
|
|