![]() |
|
கீத்தின் கவிகளா அல்லது..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கீத்தின் கவிகளா அல்லது..... (/showthread.php?tid=3131) Pages:
1
2
|
கீத்தின் கவிகளா அல்லது..... - sankeeth - 09-28-2005 கடல் நீரிலே துள்ளும் மீனினம் போல், என் மனதிலே துள்ளும் உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்து உலவிட வந்துள்ளேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [/url]
மலர்கள் - sankeeth - 09-28-2005 சப்தமில்லாது பெண்மையின் மென்மையினை உணர்த்தும் நாணமகள். - Jenany - 09-28-2005 நல்ல கவிதை சங்கீத்... - கீதா - 09-28-2005 நல்ல கவிதை நன்றி Re: மலர்கள் - Muthukumaran - 09-29-2005 sankeeth Wrote:சப்தமில்லாது யாரவள் சங்கீத்..... யாரும் இல்லை என்றால் கவிதை அர்த்தம் என்ன.... - sankeeth - 09-29-2005 மன்னிக்கவும் முத்துக்குமரன். மலர்களைத்தான் குறிப்பிட்டேன். அடிக்கும்போது தலைப்பை போடவில்லை. - sakthy - 09-29-2005 கவிதைகள் அருமை. தொடருங்கள் சங்கீத் - sankeeth - 09-29-2005 நீலவானம்: மனித மனங்களின் அசுத்தங்களைச் சுட்டிக்காட்டும் தெளிவான கூரை. நதி: அபார வளைவுகளில் ஆபத்திருக்கும்-என உணர்த்தும் வீதி. Re: கீத்தின் கவிகளா அல்லது..... - Mathan - 09-29-2005 sankeeth Wrote:கடல் நீரிலே உணர்வுகளை கவிகளாக வடியுங்கள், ரசிக்க நாங்கள் இருக்கின்றோம். - ப்ரியசகி - 09-30-2005 Quote:நீலவானம்: இந்த கற்பனை சூப்பர்...தொடர்ந்து எழுதுங்கள்... - sankeeth - 09-30-2005 ஜெனனி,ஜோ,முத்துக்குமரன்,மதன் அண்ணா,ப்ரியசகி ஆகியோருக்கு எனது நன்றிகள் இதோ அடுத்தது.... மலை: மாமனிதர்களின் மனங்களில் மகுடமாயிருக்கும் உறுதி. - கீதா - 09-30-2005 நல்லாயிருக்கு குட்டிக் கவிதை - sankeeth - 10-03-2005 நன்றி ஜோ. சீதனம் மலர்க்கரம் பிடிக்க மணாளன் வருவானென்று தினமொரு மலர் சூடி ஆடை புனைந்து மலரும் கனவுகளை சுமந்து காத்திருந்தேன் வந்தவன் எனக்கென்று மலர் விழி நிமிர்த்தியபோதெல்லாம், எனதாடையின் விலையை நிர்ணயித்தான், தங்கங்களை மதிப்பிட்டான். ஆனால் அதற்குள்ளிருக்கும் மனம் என்ற மாசற்ற தங்கத்தை உணரவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-03-2005 கீத் நல்லாக எழுதுறீங்க. குட்டி குட்டி கவிதைகள் நன்றாக இருக்கு. சீதனக் கவிதையும் சூப்பர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-03-2005 ம்ம்..சூப்பர் கவி கீத்..தொடருங்கோ... - RaMa - 10-03-2005 நன்றி உங்கள் அருமையான கவிகளுக்கு தொடர்ந்து எழுது - Mathan - 10-03-2005 கவிதைகள் நல்லாருக்கு சங்கீத் - sankeeth - 10-08-2005 அவளை நான் உயிருக்குயிராய் காதலித்தபோதும், அந்தக் காதலில் மலரும் நினைவுகள் இருந்ததில்லை. மலர்ந்த மலர்களிடையே, உறுத்துகின்ற முட்களாய் அவள் நினைவுகள் மட்டுமே இருக்கின்றன-ஏனெனில் அது எனது ஒரு தலைக்காதல் அல்லவா? - Nanban - 10-10-2005 குட்டி குட்டி கவிதைகளாய்த் தொடக்கம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.... - கரிகாலன் - 10-11-2005 சங்கீத் வாழ்த்துக்கள். அருமையான குட்டிக் கவிதைகளை தந்தமைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்......... கவிதை என்ற புள்ளிக்கோலத்தைப் போட ஆரம்பித்துள்ளான் என் நண்பன்,அதில் அவன் சிறப்புற விளங்குவதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன். |