| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 561 online users. » 0 Member(s) | 558 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,334
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஐரோப்பிய ஒன்றியம் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா? |
|
Posted by: வினித் - 09-30-2005, 10:14 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா?
[வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2005, 06:27 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
மேற்கத்தைய நாடொன்றின் பாராளுமன்ற அரசியல்வாதியான அவர், தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான கருத்துடையவர். இதனால் எமக்கு எதிரானவர் என்ற தோற்றத்தையே தமிழர்களிடையே அவர் பெற்றிருந்தார். அவரை ஒரு வைபவத்தில் ஏதேச்சையாக சந்தித்து உரையாடிய போது, தமிழர் தரப்பைப் பற்றிக் கதையைத் திருப்பி தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது தமிழர்கள் மொழி வாரியான ஒரு இனம் என்பதையும் மூன்று மதங்களைச் சார்ந்தவர்களே தமிழர்கள் என்றும் குறிப்பிட்ட போது, அவர் அப்படியா? அவர்கள் அல்கொய்தா போன்றவர்கள் என்றும், மத அடிப்படைவாதிகள் போன்றுமல்லவா சிறிலங்கா இராஜதந்திரிகள் எனக்குத் தெரிவித்திருந்தார்கள் என்று ஆச்சரியப்பட்டார். நாங்கள் கதைத்த விடயங்கள் பல தனக்குப் புதியவை என்றார். இதன் பிற்பாடு அவர் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.
இந்த விடயத்தை சிறிலங்கா அரசு தனது பொய்ப் பரப்புரையில் வெற்றி பெற்றது என்று என்னால் நோக்க முடியவில்லை. மாறாக, தமிழர்கள் பற்றிய உண்மைத் தன்மையை மேற்படி அரசியல்வாதி விளங்கிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதோடு அவ்வாறு விளக்குவதற்கான முயற்சிகளை நாமாக தமிழர்கள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றவுணர்வே எனக்கு ஏற்பட்டது.
ஏனெனில் அவர்கள் தங்களது மக்கள், தொகுதி, நாடு, பாதுகாப்பு, கட்சியின் கொள்கை என இன்னோரன்ன பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர்கள். அவ்வாறானவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய பூரண பட்டறிவைக் கொண்டிருப்பார்கள் என்று கருதுவது நியாயமில்லை. ஆனால் இப்போது இங்கிலாந்து என்ற நாட்டின் விவகாரத்திலும் இந்த சிறிய உதாரணமே கன கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதே துரதிஸ்டவசமான உண்மை.
இதன் அர்த்தம் இங்கிலாந்து ஏதோ விடயமறியாத நாடு என்றல்ல. சகலதுமாய் அறிந்துள்ள நாடு தான் என்றாலும், தற்போதைய சமாதான காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய பார்வையேதுமில்லாத நிலையே அதனது என்பதாலேயே இந்த ஒப்பீடு.
இங்கிலாந்து ஏற்கனவே விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள நாடு. ஆதனால் எந்தவித பாதிப்புக்களையும் தமிழர் தரப்புப் பெற்றிருக்கவில்லை. மாறாக அமெரிக்க, இங்கிலாந்துத் தடைகளின் பின்னரேயே தமிழர் தரப்பு மாபெரும் வெற்றிகளைப் பெற்று அனைத்துலகின் பார்வையை தமிழீழத்தின் பக்கம் திருப்பினார்கள். ஆனால் இங்கிலாந்து தற்போது ஐரொப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியில் இருக்கிற காரணத்தாலேயே இதில் நாம் சிரத்தை கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையான இங்கிலாந்து, ஏதோ ஒரு உந்துதலால் ஒரு தீவிர பரிசீலனையற்ற அறிக்கையை வெளியிட்டு, தமிழர்களை அடக்க முனையும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தி வரும் சிங்களத்திற்கு உரமேற்றும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. தடை பற்றிய பரிசீலிப்பையே மேற்கொள்கிறோம் என்ற அறிவிப்பானது அவர்கள் தவறவிடுவதற்கு முன்னரேயே திருத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.
என்ன, ஏது என்ற தீவிர விசாரிப்புத் தன்மையற்ற ஒருதலைப்பட்சமான இந்த அறிவிப்பையே ஈழத்தமிழனின் நிரந்தரத் தலைநிமிர்விற்கான திறவுகோலாக மாற்ற முயன்றால் நிச்சயமாக தமிழர்கள் இந்த விடயத்தில் வெற்றி பெற்றேயாவார்கள்.
இவ்வாறானதொரு அறிக்கை வெளியீட்டிற்கான பின்னணி என்ன என்று பார்த்தால், சிறிலங்கா அரசின் முழு முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற உண்மை யாருக்குமே புலப்படும். ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்டு வைத்திருந்த திட்டத்தை அவர்கள் கதிர்காமரின் கொலையோடு மேற்குலகில் அரங்கேற்றினார்கள்.
<b>கதிர்காமரின் கொலையையடுத்து விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு வலுவாக முன்னெடுத்தது. இந்த நடவடிக்கை மேற்குலகு முழுவதும் உள்ள தனது தூதரகங்களினூடாகவும், கொழும்பிலிருந்து இதற்கென விசேடமாக அனுப்பப்பட்டவர்களாலும் (தமிழின எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட) மேற்கொள்ளப்பட்டன.
[b]சிறிலங்கா அரசு இவ்வாறான பிரச்சாரத்தை முன்னெடுத்த போது, விடுதலைப் புலிகளிற்கெதிரான பல பழைய ஆவணங்களையும் தற்போதைய கிழக்கு வன்முறைக்கு புலிகளே முழுப்பொறுப்பு என்பது போன்ற செய்திகளையும் மேற்குலக, ஐரோப்பிய ஊடகங்களினூடாக பல லட்சம் டொலர்கள் செலவில் பிரசுரித்தும், ஒளிபரப்பியும் இருந்தது</b>.
இவ்வாறு திட்டமிட்டு இதர நாடுகளில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய முற்று முழுதாக முயன்ற சிறிலங்காவோ தங்களது நாட்டில் அவர்களைத் தடை செய்யவில்லை. மாறாக புலிகளுடன் பேசியே நாங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்கிற மாய மந்திரத்தையே தொடர்ந்தும் உச்சரித்து கொண்டே வருகின்றார்கள்.
சிறிலங்கா அரசாங்கமே, இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யாது அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறி வரும் இவ்வேளையில், எதற்காக மேற்குலகில் மாத்திரம் தடையை ஏற்படுத்த சிறிலங்கா அரசு தீவிரமாய் முனைகிறது என்பதை ஆராய இங்கிலாந்து ஏனோ மறந்து விட்டது. இதுவே அந்த அறிக்கை இங்கிலாந்தின் தெளிவான பார்வைக்குட்படாததொன்றாக நாம் கருதுவதற்கான காரணம்.
விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களில் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புக்கள் பற்றியோ அல்லது சமாதான முயற்சிகளைக் குழப்புவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட சதிகள் பற்றியோ இங்கிலாந்து ஒரு முறையாவது பரிசீலிந்திருந்தால் இந்த அறிக்கை வெளியீட்டில் சிறிலங்கா அரசையும் கண்டித்து இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தையை நோக்கிச் செல்லுமாறு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
இம் மாதம் 19 ஆம் திகதி அமெரிக்காவில் உதவிவழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் அவசர கூட்டமொன்று நடைபெற்றது. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளிற்காக தார்மீக பொறுப்பையேற்றுள்ள அமெரிக்கா, ஐப்பான், நோர்வே ஆகிய மேற்படி இணைத்தலைமையானது களநிலைமைகளைப் பரிசீலித்து, சிறிலங்கா அரசு மற்றும் தமிழர் தரப்பு ஆகிய இரு தரப்புக்களையும் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததோடு, இரு தரப்பையும் கண்டித்திருந்தது.
இங்கிலாந்து மேற்படி இணைத் தலைமையின் அறிக்கையைப் பின்பற்றியிருக்க வேண்டும் இல்லாவிடினும், சமாதான காலத்தில் சாதகமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் யுத்தமொன்றிற்கான வழிகளை ஏற்படுத்தியது யார் என்ற அடிப்படையையாவது தள யதார்தத்தை வைத்து ஆராந்திருக்க வேண்டும்.
குரங்குப்பாஞ்சான் முகாமை விவகாரமாக்கி சமாதான முயற்சிகளைக் குழப்பியது யார்?
ஆயுதபாணிகளை உருவாக்கி, அரவணைத்து வைத்து நிழல் யுத்தத்தைத் தொடர்வது யார்?
போர்நிறுத்த ஒப்பந்தம், வட-கிழக்கிற்குப் புனர்வாழ்விற்கான உதவி வழங்கும் நாடுகளின் பங்களிப்பு, ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு என்பவற்றில் தடைகளை ஏற்படுத்துவது யார்? போன்ற ஒரு சில காரணங்களையாவது இங்கிலாந்து கவனத்தில் கொண்டிருந்தால் அது இவ்வறிக்கை வெளியீட்டைத் தவிர்த்திருக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட சிறிலங்காவின் அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் பேரிலான தாக்குதல்களிலிருந்து, நிழல் யுத்தத்தில் இருந்து தப்புவதற்கான, அவற்றைத் தடுப்பதற்கான தற்காப்பையே தமிழர் தரப்பு மேற்கொண்டு வருகிறது. எனவே இங்கிலாந்து தனது அறிக்கையில் குறிப்பிடுகின்ற பயங்கரவாதத்தை (?) தூண்டிவிட்ட சக்தி சிறிலங்கா அரசே என்பதும், தமிழர் தரப்பு அதனை எதிர்கொள்வதற்கான தற்காப்பையே மேற்கொள்கிறார்கள் என்பதும் அதற்குப் புரிய வைக்கப்பட வேண்டிய விடயங்கள்.
ஆகவேதான், தமிழர்களின் வெற்றிக்கான, நியாயத்திற்கான திருப்புமுனையாக இந்த அறிவிப்பை மாற்ற வேண்டிய உடணடிச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனையும் சார்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் தனது சுய அடையாளத்தை இழக்காமல் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இதில் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை அது ஏற்படுத்தியிருக்கிறது.
அத்தோடு, காரண காரியங்களை தகுந்த ஆதாரங்களோடு விளக்கும் வல்லமை பெற்ற சக்தியான தமிழர் தரப்பு இந்த விடயத்திலும் தமது இராஜதந்திரப் வழிமுறைப் பேணலை மேற்கொண்டு சிறிலங்காவின் சமாதான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதாரங்களோடு விளக்கி, சிறிலங்கா அரசையே குற்றவாளியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம், ஆழிப்பேரலையின் பின்னான கட்டமைப்பு போன்ற ஒப்பந்தங்களை சர்வதேச அனுசரணையுடன் தமிழர் தரப்பு மேற்கொண்டதானது, நாம் விரும்பியோ விரும்பாமலோ இதர விடயங்களையும் அவர்களிற்கு விளக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் எம்மைத் தள்ளியுள்ளது. எனவே இந்த முயற்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
அத்தோடு, அனைத்துத் தமிழர்களும், தமிழர்களின் அமைப்புக்களும் இந்தப் பணியை தமது சொந்தப் பணியாக ஏற்று, ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தால் போரே முடிவாக அமையும் என்பதனை விளக்குவதோடு, சிறிலங்காவின் கபடத் தன்மையை வெளிக்கொணரும் செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் வதியும் நாடுகளின் அரசுகளை, வெளியுறவு அமைச்சகங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தியுங்கள். உங்களுக்கு தெரிந்த பிரமுகர்கள், உங்கள் தொழில்நிறுவன அதிபர்கள் என இன்னொரன்ன வழிகளிளெல்லாம் உங்கள் கருத்துக்களை வெளிக்கொணருங்கள். நீங்கள் மாத்திரமல்லாமல் உங்கள் உறவினர்கள் மற்றும் உங்கள் பள்ளிப்பிள்ளைகள் மூலமாகவும் இந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். வெற்றியென்பது எமக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்ற உண்மையை அப்போது உணர்வீர்கள்.
வரலாறு சில சந்தர்ப்பங்களைத் தானாகவே தந்து, இனங்களின் விடுதலைக்கு வழிவகுத்து நிற்கும். அந்த வகையில் தமிழினத்தின் விடுதலைக்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான சந்தர்ப்பத்தை இங்கிலாந்து தானாகவே தந்து நிற்கிறது. போரா? சமாதானமா? தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிவகுக்கும் என்பதனை தீர்மானிக்கின்ற பொறுப்பை இங்கிலாந்தினூடாக அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மேற்குலகிற்கும் வழங்கி நிற்கிறது.
எனவே தடையகற்றல் என்பதே போரற்ற நிரந்தர சமாதானத்தையேற்படுத்தும் என்பதையும், தடையேற்பட்டால் போரே நிரந்த சமாதானத்தைப் பிறப்பிக்கும் என்பதையும் விளக்க வேண்டிய தார்மீகக் கடமையில் நாமும் இணைவோம். இன்றே செயற்படுவோம்.
அதிருப்தி மனுக்களை அனுப்ப வேண்டிய முகவரிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்.
www.puthinam.com
|
|
|
| வாசல் தேடி வருகிறேன் |
|
Posted by: inthirajith - 09-30-2005, 06:32 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
நீ என்னை தவிர்த்தால் புவியில் யாருண்டு
உன்மனதில் இடமில்லையெனில் நான் வாழ்ந்து
என்ன பலன் உறவுகள் விலகியது உன்மேல்
நான் வைத்த காதல் அது புரியாதா?
மனது என்னிடம் இல்லை உறக்கமும் இல்லை
தினம் ஒரு மடல் வரைவேன் கண்ணா என்றாயே
கணனி திரை பார்த்து காதலி உன்மடல் பார்த்து
கண்கள் பூத்து விட்டதடி எதுமே இல்லாத போது
வருவேன் உன் வாசல் தேடி......
|
|
|
| சனத்தொகைப் பெருக்கமும், இஸ்லாமியர்களும் |
|
Posted by: cannon - 09-29-2005, 09:49 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (12)
|
 |
<b>உலகில் சனத்தொகையில் விரைவாக பரவிவரும் மதமாக இஸ்லாம் உள்ளதாகக் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன!.</b>
..... விரைவாகப் பெருகிவரும் மதம் ........... அப்படியாயின் ஏனைய மதத்திலுள்ளவர்கள் இஸ்லாத்திற்கு மாறுகிறார்களா???? அப்படிப் பாரிய மதமாற்றங்கள் உலகில் எங்கேயாவது நிகழ்ந்துள்ளனவா??? இல்லை!!!! அப்படியாயின் இப்பெருகிவரும் இஸ்லாத்திற்க்கான அடிப்படைக் காரணம் என்ன????????????
கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்!! அதில் கூறிய சில கருத்துக்கள் ...."1958ம் ஆண்டளவில் மொத்தத் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையுமே, முஸ்லீங்களின் சனத்தொகை 20,000 ஆகத்தானிருந்தது. ஆனால் இன்றோ 1,25,000 ஆக, திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாண்மை இனமாக மாறியுள்ளது!!! இம்மாற்றம் குடியேற்றங்களினால் ஏற்பட்டதல்ல!! முற்று முழுதாக பிறப்பு விகிதத்தினாலேயே ஏற்பட்டது!"...
..... இன்னுமொரு புள்ளி விகிதம்... "இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களின் சனத்தொகையை முஸ்லீங்கள் 25 வருடத்தில் தாண்டுவார்கள் என்றும், சிங்களவர்களின் சனத்தொகையை 100 வருடங்களில் தாண்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது"....
இது ஒரு அச்சமூட்டும் செய்திகள்! இன்று யுத்தம்/பொருளாதாரம் எனப் பலபல காரணங்களினால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்ததினால், வடக்கு/கிழக்கு சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இச்சனத்தொகை இன விகித மாற்றமானது தமிழர்களின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரும். அதேவேலை இனப்பரம்பலில் புவியியல் ரீதியாக மாற்றங்களைக் கொண்டு வந்து பாதுகாப்பு ரீதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி, தாயகம் துண்டிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கூட ஏற்படலாம்!
இஸ்ரேலில் பலஸ்தீனர்களின் இனப் பெருக்கத்தினால் ஏற்படப்போகும் விளைவுகளை கட்டுப்படுத்த, தொடர்ந்துவரும் இஸ்ரேலிய அரசுகள் உலகலாவிய அளவில் யூதமக்கள் வந்து இஸ்ரேலில் குடியேறுவதற்காக பாரிய சலுகைகள், நிதியுதவிகள், .. போன்றன அளிக்கப்பட்டு யூதமக்களின் சனத்தொகையை இஸ்ரேலில் பல மடங்குகளாக அதிகரிக்கப்பட்டது, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது!
இவற்றை எதிர்கால தமிழீழ அரசு எவ்வாறு கையாளப் போகிறது?
|
|
|
| ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும் |
|
Posted by: Mathan - 09-29-2005, 08:08 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (14)
|
 |
ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்
குஷ்புவின் பேட்டியும், அதைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் நடந்த விவாதங்களும் பிரச்சினைகளின்/கருத்துகளின் பல பரிமாணங்களை காண்பித்தன, பெரும்பாலும் நாகரீகமாகவும், சில இடங்களில் அநாகரீகமாகவும் நடந்தேறின, அநாகரீகங்கள் கண்டிக்க வேண்டியவை, முழுமையாக நீக்கப்படவேண்டியவை.
தங்கரை முழுமையாக எதிர்ப்பதும் குஷ்புவை முழுமையாக ஆதரிப்பதுமே ஆணாதிக்கத்தையும் பெண்ணியத்தையும் அளக்கும் அளவுகோலாக வைத்து இங்கே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் எனக்கு தோன்றிய/ நான் இதற்கு முன் கேட்ட, மற்ற சிலரின் கருத்துகளையும் விடயத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன், முழுவதும் படிக்காமல் இரண்டு வரிகளை படித்துவிட்டு பின்னூட்டமிடுவதும் திரித்து பின்னூட்டமிடுவதையும்,பதிவிடுவதற்கும் விளக்கம் சொல்லி துடித்த காலங்கள் கடந்து அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து பல நாட்களாகிவிட்டன.... எல்லா கேள்விளோடும் என்னை பொறுத்தி பார்க்க வேண்டாம், கேள்வி கேட்பதாலேயே இதை நான் ஆதரிக்கிறேன் என்றோ எதிர்க்கிறேன் என்றோ இல்லை.
1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?
2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)
3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?
4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?
5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?
6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?
7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?
8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?
9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?
10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)
11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?
12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?
13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?
14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?
15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?
16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?
17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?
18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?
19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?
20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?
21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?
22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்
23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.
இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு
'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்
'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது
'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.
24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?
25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?
26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?
29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?
30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?
31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?
32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா?
கடுமையான முகத்தில் அறைய கூடிய சில கேள்விகள் இன்னும் உள்ளன ஆனால் தற்போது அதை பகிர்ந்துகொள்ளும் நிலை இல்லையென்பதால் பிறிதொரு சமயத்தில் அதை பார்ப்போம்.
மேலே உள்ள கேள்விகளில் எத்தனை 'ஆம்' சொல்லியிருக்கின்றோம், மேற்சொன்ன விடயங்களில் ஆணாதிக்கத்தை அழிக்க அரசியல் தலைவனோ, திரைப்பட நடிகனோ அவ்வளவு ஏன் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட தேவையில்லை, நீங்கள் ஒருவரே போதும். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் கூடவே இருக்கும் சக மனுஷிகளின் பிரச்சினைகளை கவனிப்போம், அதற்காக விளிம்பு நிலை மனிதர்களையும், மற்ற கருத்துகளையும் பேசவே கூடாது என்பதில்லை ஆணாதிக்கத்தையும், பெண்ணியத்தையும் பற்றி ஒவ்வொருமுறை பேசும் போதும் பின்னூட்டமிடும்போதும் பதிவிடும்போதும் மேலே கேட்ட கேள்விகளில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு இல்லை என்ற பதிலையாவது ஆம் என மாற்றிவிட்டு பேசலாம்.
மற்ற சித்தாந்தங்களில் கொள்கைவிடயத்தில் ஆதரிப்பதற்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது, உதாரணமாக கம்யூனிச கொள்கையை இந்தியாவில் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சமூகம், தன் வாழ்வு, தன் குடும்பத்தின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்படப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் கடைபிடிக்கலாம் யாரையும் பாதிக்காமலே...
குஷ்புவின் பேட்டியை ஆதரிக்கும்(இதை தவறு சொல்லவில்லை நான்) அதே நேரத்தில் அரசுவின் http://arrasu.blogspot.com/2005/09/blog-post_26.html இந்த பதிவில் வீக் என்ட் பார்ட்டியைப் பற்றி கவலைப்பட்டு 'வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன், ஒரு தாய்' எழுதியுள்ளாரே இது தான் நிதர்சனமான உண்மை நிலை இதற்கு மேலும் விளக்கமாக சொல்லத் தேவையில்லை என கருதுகின்றேன்.
இந்த பதிவை பிரதியெடுத்து உண்மையான/ மனசுக்கு நேர்மையான பதிலை எழுதுங்கள் பாஸா/பெயிலா என உங்கள் மனசுக்கு தெரியும், பின்னூட்டத்தில் எழுத வேண்டியதில்லை.
இதோ முதல் ஆளாக நான் இந்த பதிவை அச்செடுத்து பதிலளிக்கப் போகின்றேன், பார்ப்போம் பாசாகின்றேனா/பெயிலாகின்றேனா என்று
கற்பு அது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்தததா? இருக்கா இல்லையா என்று பேசும் நிலையில் தற்போது நான் இல்லை, இந்த சச்சரவுகள் அடங்கி பிறிதொரு நாளில் ஒரு நல்ல சூழ்நிலையில் திறந்த மனதோடு பேசலாம் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.
நன்றி - குழலி
|
|
|
| பொங்குதமிழ் - 2005 (யாழ்ப்பாணம்) |
|
Posted by: yarlmohan - 09-29-2005, 07:46 PM - Forum: தமிழீழம்
- Replies (6)
|
 |
<b>மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்ற சில</b>
PONGU TAMIL - 2005 JAFFNA,SRILANKA
Dear sir/Madam
INVITATION FOR THE PONGUTAMIL - 2005
The three and a half year old peace process has failed and once again we have reached the stage of a possible resumption of hostilities. Yet we are trying our level best to avoid a conflict situation. The Singhalese Governments in Colombo have failed to respect and implement the Ceasefire Agreements. The understandings that were reached during the six rounds of peace talks between the Sri Lanka Government and LTTE were also never implemented by the former. The appeal to resume talks on the basis of the Interim Self Governing Authority proposals were also rejected.
As a result, normalcy continues to elued a people who have suffered the horrors of thirty years of war, without a permanent political solution and the complete absence of normalcy, the people have been pushed into a political vacuum. Why, even to provide humanitarian assistance to the tsunami affected people through a joint mechanism, Singhalese Buddhist chauvinism and the Unitary Constitution became an insurmountable hurdle.
These events have, at the very least demonstrated to the Tamil people that the Singhalese Buddhist chauvinists are not prepared to grant even the very basic rights to our people. As a result, the Tamil people have lost all hope in trying to peacefully win over our rights by talking to the Singhalese leaders. We have reached the stage where we believe the only way a non – violent permanent peace could be created in the island of Sri Lanka is by the International Community recognizing the Tamil people's sovereignty on the basis of the latter's right to self – determination. It is to stress this that the people of the Jaffna have organized the “PONGU THAMIL 2005” event.
This event is meant to reiterate the resolution that was initiated by the Tamil people's representatives in Vavuniya on 27.07.2005. “PONGU THAMIL 2005” has been organized for the 30th of September 2005. The proceedings are to commence at 3 pm at the Jaffna University Grounds. It is with great pleasure that we invite you to this event. Please confirm your presence in advance in order to arrange accomodation and other needs timely.
RSVP: Gajendrakumar Ponnambalam MP at + 94 112 58 16 77 or pongutamil2005@yahoo.com
Yours truly,
Sivasothy Vijayaruban
President, Pongutamil Organizing Committee.
|
|
|
| சந்திப்போமா....? |
|
Posted by: best_net - 09-29-2005, 03:50 PM - Forum: அறிமுகம்
- Replies (31)
|
 |
அன்பு நெஞ்சங்களே..வணக்கம்!
உங்கள் அனைவரையும் உங்களின் ஓர் உறுப்பினராய் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி.
|
|
|
| கட்டுரை |
|
Posted by: best_net - 09-29-2005, 03:07 PM - Forum: கணினி
- Replies (3)
|
 |
எனக்கு சில கட்டுரைகள் தேவை கீழ்வரும் அடிப்படையில்..
1.வினைத்திறன் மிக்க கற்பித்தலில் கணனியின் பங்கும் -
எதிர் நோக்கும் பிரச்சினைகளும்.
2.கணனியை கற்பித்தலில் பயன்படுத்துவதன் பயன்கள்
3.computer is a teaching aid
இது பற்றிய கட்டுரைப் பகுதிகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம்..??/
|
|
|
| தட்டிவான் |
|
Posted by: Mathan - 09-29-2005, 02:23 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (27)
|
 |
Thatti Van (தட்டிவான்)
கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந்தோட்டங்களும் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள். புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் வீதி முக்கியமான ஒரு வீதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும். உயரங்குறைந்த ஜப்பானிய தயாரிப்பு வாகனங்கள் அந்த வீதியால் செல்லமுடியாதோ என்று சந்தேகப்படும் ஒரு நிலை.
விண்வெளிக்கு முதலில் ராக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு (உண்மையில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கினாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்துகொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம் (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை). யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ், ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளியில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார்களாம்.
இப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை, எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி (horn), அதனுடைய தனித்துவமான "பாம் பாம்" ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள் பல.
சிலதசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். சிறிதுகாலத்தின் பின் போக்குவரத்துச் சேவையிலீடுபட முயன்ற சில சிற்றூர்திகளும் தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான அரசுப் பேருந்து சேவையைத் தவிர (பல காலங்களிலும் இயங்காத), பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது, இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயேயுள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.
அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை, துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். "இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ", "சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ", "அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்" என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் "அண்ணை றைற்" சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள். இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. தட்டிவானிற்கு shock-absorber இருப்பதாகவே தெரிவதில்லை (உணர முடிவதில்லை). ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. "டிறைவரண்ணை! அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?" என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் "போயிட்டு வாறன்" சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.
கொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் "அண்ணை றைற்" சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.
எத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான மகிழ்ச்சியான உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.
நன்றி - விஜயாலயன்
|
|
|
|