Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்
#1
ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்

குஷ்புவின் பேட்டியும், அதைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் நடந்த விவாதங்களும் பிரச்சினைகளின்/கருத்துகளின் பல பரிமாணங்களை காண்பித்தன, பெரும்பாலும் நாகரீகமாகவும், சில இடங்களில் அநாகரீகமாகவும் நடந்தேறின, அநாகரீகங்கள் கண்டிக்க வேண்டியவை, முழுமையாக நீக்கப்படவேண்டியவை.

தங்கரை முழுமையாக எதிர்ப்பதும் குஷ்புவை முழுமையாக ஆதரிப்பதுமே ஆணாதிக்கத்தையும் பெண்ணியத்தையும் அளக்கும் அளவுகோலாக வைத்து இங்கே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் எனக்கு தோன்றிய/ நான் இதற்கு முன் கேட்ட, மற்ற சிலரின் கருத்துகளையும் விடயத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன், முழுவதும் படிக்காமல் இரண்டு வரிகளை படித்துவிட்டு பின்னூட்டமிடுவதும் திரித்து பின்னூட்டமிடுவதையும்,பதிவிடுவதற்கும் விளக்கம் சொல்லி துடித்த காலங்கள் கடந்து அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து பல நாட்களாகிவிட்டன.... எல்லா கேள்விளோடும் என்னை பொறுத்தி பார்க்க வேண்டாம், கேள்வி கேட்பதாலேயே இதை நான் ஆதரிக்கிறேன் என்றோ எதிர்க்கிறேன் என்றோ இல்லை.

1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?

2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)

3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?

4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?

5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?

6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?

7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?

8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?

9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?

10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)

11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?

12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?

13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?

14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?

15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?

16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?

17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?

18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?

19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?

20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?

21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?

22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்

23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.

இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு

'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்

'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது

'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.

24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?

25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?

26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?

29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?

30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?

31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?

32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா?

கடுமையான முகத்தில் அறைய கூடிய சில கேள்விகள் இன்னும் உள்ளன ஆனால் தற்போது அதை பகிர்ந்துகொள்ளும் நிலை இல்லையென்பதால் பிறிதொரு சமயத்தில் அதை பார்ப்போம்.

மேலே உள்ள கேள்விகளில் எத்தனை 'ஆம்' சொல்லியிருக்கின்றோம், மேற்சொன்ன விடயங்களில் ஆணாதிக்கத்தை அழிக்க அரசியல் தலைவனோ, திரைப்பட நடிகனோ அவ்வளவு ஏன் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட தேவையில்லை, நீங்கள் ஒருவரே போதும். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் கூடவே இருக்கும் சக மனுஷிகளின் பிரச்சினைகளை கவனிப்போம், அதற்காக விளிம்பு நிலை மனிதர்களையும், மற்ற கருத்துகளையும் பேசவே கூடாது என்பதில்லை ஆணாதிக்கத்தையும், பெண்ணியத்தையும் பற்றி ஒவ்வொருமுறை பேசும் போதும் பின்னூட்டமிடும்போதும் பதிவிடும்போதும் மேலே கேட்ட கேள்விகளில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு இல்லை என்ற பதிலையாவது ஆம் என மாற்றிவிட்டு பேசலாம்.

மற்ற சித்தாந்தங்களில் கொள்கைவிடயத்தில் ஆதரிப்பதற்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது, உதாரணமாக கம்யூனிச கொள்கையை இந்தியாவில் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சமூகம், தன் வாழ்வு, தன் குடும்பத்தின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்படப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் கடைபிடிக்கலாம் யாரையும் பாதிக்காமலே...

குஷ்புவின் பேட்டியை ஆதரிக்கும்(இதை தவறு சொல்லவில்லை நான்) அதே நேரத்தில் அரசுவின் http://arrasu.blogspot.com/2005/09/blog-post_26.html இந்த பதிவில் வீக் என்ட் பார்ட்டியைப் பற்றி கவலைப்பட்டு 'வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன், ஒரு தாய்' எழுதியுள்ளாரே இது தான் நிதர்சனமான உண்மை நிலை இதற்கு மேலும் விளக்கமாக சொல்லத் தேவையில்லை என கருதுகின்றேன்.

இந்த பதிவை பிரதியெடுத்து உண்மையான/ மனசுக்கு நேர்மையான பதிலை எழுதுங்கள் பாஸா/பெயிலா என உங்கள் மனசுக்கு தெரியும், பின்னூட்டத்தில் எழுத வேண்டியதில்லை.

இதோ முதல் ஆளாக நான் இந்த பதிவை அச்செடுத்து பதிலளிக்கப் போகின்றேன், பார்ப்போம் பாசாகின்றேனா/பெயிலாகின்றேனா என்று

கற்பு அது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்தததா? இருக்கா இல்லையா என்று பேசும் நிலையில் தற்போது நான் இல்லை, இந்த சச்சரவுகள் அடங்கி பிறிதொரு நாளில் ஒரு நல்ல சூழ்நிலையில் திறந்த மனதோடு பேசலாம் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.

நன்றி - குழலி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
ஒரு நியாயமான் ஆண்மகன் தான் நேசிக்கும் பெண்ணின் நியாயமான சந்தோஷங்களை மனதார ஏற்கவேண்டும் அவள் விரும்பாத எதையும் திணிக்காத மனிதனாக இருக்கவேண்டும் ஆனால் துர்ரதிஸ்டவசமாக அந்த ஆணை ஒரு புழுபோல் நடத்தும் பெண்கள் அவன் பொங்கினால் தாங்குவார்களா என் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சியை சொன்னேன்
inthirajith
Reply
#3
1. அமெரிக்காவிலோஇசிங்கப்பூரிலோஇசப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?
வலியுறுத்துகிறார்கள்தான்...... அதில் பொருளாதாரம். தொழில்வாய்ப்பு. எதிர்கால வழ்கையின் நிச்சயதன்மை என்பன உள்ளடக்கப்படுகின்றனவே.
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#4
2. அமெரிக்காவிலோஇசிங்கப்பூரிலோஇசப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்ஃ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?

........ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் எனும் பந்நத்தில் இணைந்தபின்பு. ஆண்ணின் பக்கம்...பெண்ணின் பக்கம் என பார்ப்பது தப்பென நான் நினைக்கிறேன். எமது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு..... உகந்த இடம் எனும் நோக்கோடு பார்ப்பதே நன்று! அப்படி பார்கையில் உகந்த இடத்தில் வாழ்வவரது இடம்தான் இடப்பெயர்விற்கு சிறந்தது!
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#5
3. பண்பாடுஇவழக்கம்இ கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பாஇஅம்மா விருப்பம்இ நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?

இதில் பெண்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? கலாச்சாரம் பண்பாடு சமுதாயம் பெற்றோர்கள் எல்லோரையும் புறம்தள்ளும்போது.... அது சதாரண மனிதநிலைக்கு மாறாக மேல்நிலையாக சாமி நிலையாக்கும் அன்றி தாழ் நிலையாக மிருக நிலையாக்கும் தன்மை சற்றேனும் உள்ளதல்லவா?
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#6
4.வழக்கம்இவிருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?

பெண்கள் தாலி அணிவது கலாச்சாரம் மட்டுமன்றி பெண்களின் பாதுகாப்பு அழகு என்பனவோடு சம்மந்தபட்டது. அதை ஆண் அணிவது பெண்களின் அவமானத்துடன் சம்மந்தப்பட்டது. அதை பெண்கள் மீது அக்கறையுள்ள ஒரு ஆணால் செய்ய முடியாது.
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#7
தாலி என்பது பெண்ணடிமைத்தனம்இ ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன்இ வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லைஇ அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?

தாலியின் உண்மையான அர்த்தத்தை புரியாதவர்கள் ஏன் அதை கட்ட முயற்சிசெய்கிறார்ள்? ஆசை எனும் வலையில் வீழ்ந்து 20.30 பவுணில் தாலிகட்ட வேண்டும் என்று பல பெண்களே எதிர்பார்கின்றார்கள் அப்போதைக்கு அதை மட்டுமே நினைக்கும் அவர்கள் பிற்காலத்தில் அதை தொடர்ந்தும் அணியும்போது வரும் சௌரிய....அசௌரிகத்தை நினைக்க மறக்கிறார்கள். காலாச்சாரம் என எண்ணிப்பார்த்தால்...... தாலி ஒரு மஞ்சள் நுலாகவே இருக்கிறது இதை வாளிகம்பி வடிவில் மாற்றம் செய்து பிரச்சனையை தாமாகவே உருவாக்குகிறார்கள். பெண்களுக்கு மட்டுமே அடையாள சின்னமா என எண்ணினால்.....
சமுகத்தில் பல இன்னல்களை சந்திப்பதை தவிர்ப்பதே அதன் உண்மையான நோக்கமாக இருக்கும் போது சுதந்திரம் எனும் போர்வையில் அதை அணியாமல் விடலாம்....... பத்து மாதம் தன் பிள்ளையை சுமப்பதையும் அடையாள சின்னம் என்று பெண்கள் குரல் கொடுக்க தொடங்கினால் ஆண்கள் தம்வயிற்றிலா பிள்ளையை சுமக்க முடியும்? இந்த இடியப்ப சிக்கலான பிரச்சனைகளெல்லாம் தம்மை வேறு ஒரு கலாச்சார சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுடன் ஒப்பிட்டு பார்கையில் தான் முளை விடுகின்றன ஆதலால் தமிழ் பெண்கள் தாம் ஒரு தமிழ் பெண்ணாக வாழ்வதா அல்லது தமிழ் பேச தெரிந்த மேலை நாட்டு பெண்ணாக வாழ்வதா என்று மட்டுமேதான் முடிவு எடுக்க முடியுமே தவிர பல ஆழ்ந்த அர்த்தங்களை கொடுக்க கூடிய தாலியை களற்றுவது பற்றி முடிவெடுப்பது என்பது முறையற்றது.
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#8
6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர்இ வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லைஇ குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?

குடும்பம் என்று இருவர் இணைந்த பின்பு பல இன்னல்களுக்கும் முகம் கொடுத்தும் ஒருவரை மற்றயவர் சந்தோசப்படுத்துவதே இல்லற இன்பம். சுவையாக யாருக்கு சமைக்க தெரியுமோ அவர் சமையல் செய்து மற்றையவருக்கு சுவையான உணவை ஊட்டி மகிழ்விக்க வேண்டும் இதில் பல வேலை பளு இருக்கலாம்தான்... அதற்காக திங்களும் செவ்வாயும் நீ புதனும் வியாழனும் நான் என்று அட்டவணை தயாரித்தால் குடும்பம் ஆமி முகாமாக மாறிவிடும் பின் அரசியல் தந்திரம் என நினைத்து வெள்ளிகிழமைக்கு வெளி நபர் ஒருவரை வீட்டுக்குள் இழுக்க வேண்டி வரும் பின் அரசியல் தந்திரம் என நினைத்து வந்தவர் மனைவியை இழுத்து விடுவார். நாம் சுதந்திரம் எனும் பெயரில் எது எவைக்கோ எல்லாம் அத்திவாரம் போடுகிறோம் எனக்கு தோன்றுகிறது.
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#9
Maruthankerny Wrote:வலியுறுத்துகிறார்கள்தான்...... அதில் பொருளாதாரம். தொழில்வாய்ப்பு. எதிர்கால வழ்கையின் நிச்சயதன்மை என்பன உள்ளடக்கப்படுகின்றனவே.

நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆனால் அதே பெண் தான் வசிக்கும் ஊரில் நல்ல உத்தியோகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தால். ஒரு ஆண் தனது வேலையை விட்டுவிட்டு அந்த பெண்ணின் ஊருக்குதான் வர வேண்டும் என்று உங்களால் வலியுறுத்த முடியுமா? இல்லை அப்படி வலியுறுத்தினால்தான் அவர்கள் வந்துவிடுவார்களா?
<b> .. .. !!</b>
Reply
#10

_________________
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா?

குடும்பம் என்று இருவர் ஒன்றாக இணையும்போது. ..ஏன் ஆண் வசிக்கும் இடம் பெண. வசிக்கும் இடம் என்று பிளவு பண்ணுகிறீர்கள்? நாம் வசிக்க போகும் இடம் எனும் மனதுடன் தான் சிந்திக்க வேண்டும். இடபெயர்சி என்பது எதோ ஒரு லாபம் கருதியே இடம்பெற்று இருக்கிறது (குறிப்பாக பொருளாதார லாபம்) அப்படி இருக்கயில் பெண் வசிக்கும் இடமே எதிர்காலத்திற்கு உகந்தது என்றால் நிச்சயமாக ஆண்கள் மறியிருப்பார்கள். அப்படி இடம்மாறி போன எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். உள்நாட்டில் ஊருக்கு
ஊர் மாறவதாயின் பெண் இருக்கும் ஊருக்கு ஆண்கள் மாறினால் பெண்ணின் மனதுக்கு பிடித்தமாயிருக்கும் காரணம் ஆண்களை விட பெண்கள் தனது தாயிடன் நெருக்கமாகவே வாழ்ந்திருப்பார்கள் திருமணமானவுடன் அதுவரையில் அறிமுகமில்லாத ஒரு நபருடன் வேறுர் செல்வது சற்றே மனப்பயத்தை உண்டாக்கலாம். அவளின் தாயார் வாழும் ஊரில் இருக்கும் போது கொஞ்சம் தாயாரின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். சகோதரி ரசிகை.....! நான் சொல்ல வருவதெல்லாம் திருமணத்திற்கு பின் எனது உனது எனும் எண்ணங்களை தள்ளிவைத்தல் அவசியம் எமது எனும் தொணிப்பே இருக்க வேண்டும் என்பதுதான். (என்னை தப்பாக புரிந்து விடாதீர்கள்)
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#11
1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?
ஏன் அங்கு வேலை செய்யும் பெண்கள் திருமணத்தின் பின் ஆண்களை (தாயகத்தில் திருமணம் செய்திருந்தால்?) தங்கள் இடத்துக்கு அழைப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அப்படி செய்வதால் அவர்களிட்தே என்ன தவறைக் கண்டுள்ளீர்கள், எதிர் காலம் சிறப்புற அமைய குடும்பத்தில் விட்டுக் கொடுப்பு வேண்டும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)
அப்படி சத்தியமாய் யாரும் சொல்ல மாட்டார்கள் என நம்புகின்றேன்( சீ முளைச்சு 3 இளை விடல்ல அதுக்குள்ள நான் எங்க மனைவிக்கு பொறது....)

3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?
வழக்கத்தை விடுங்கள் பண்பாடு,கலாச்சாரம் என்பவற்றில் நம்பிக்கை கொள்ளக் கூடாது அதை நேர்தியாக கடைப்பிடிக்க வேண்டும். அதில் இருக்கும் தீய விடையங்களை விட வேண்டுமே தவிர நல்ல விடையங்களையும் சோர்த்து நம்பிக்கை இல்லை என்ற தொனியில் கைவிட முடியுமா? நீங்கள் தாலி கட்டிய திருமணங்களை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள் போல.. தேவாலயத்தில் நான் தாலியைக் கண்டதில்லை...ஏன்..சில கோவில்களில் கூட கண்டதில்லை... அதே கேள்வியை நான் திருப்பி கேட்டால்....திருமணம் செய்யும் மனைவிக்கு குறைந்த பவுணின் தாலி கட்டுவதே கேவலாமாக ஏன் பெண்கள் பார்க்கிறார்கள்? சமூதாய சாக்கடையாய் தாலியை நினைத்தால் கிளர்ந்தெழுந்து எனக்கு தாலி கட்ட வேண்டாம் என் மனதை புரிந்த கணவனாக வாழுங்கள் என்று ஏன் நேருக்கு நெர் சொல்லக்கூடாது?
4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?
இது உங்கள் ஆசை, அவரவர் கணவன் எப்படி இருக்க வெண்டும் என்பதை அந்ததந்த மனைவி மாரே முடிவு செய்ய வேண்டும். உங்கள் கணவர் உங்கள் படம் போட்ட லாக்கெட் போட வேண்டும் என்றால் தாராளமாக அந்த ஆசையை கணவனிடம் சொல்லுங்கள்...(உங்கள் என்றது எழுதியவரை மட்டுமல்ல..பெண்களை)
5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?
அட அட என்ன கேள்வி
வைபகத்தின் லாக்கரிலே கண்டேன் அவளது தாலியை....
வருடம் ஒருமுறை தட்டி பார்த்தால் தூசியை
வாங்கிய தங்கம் குறையவில்லையா என்று நெறுத்தும் பார்த்தால்..
இதற்க்குள் நான் எப்படி இந்த கேள்விக்கு சொல்வேன் பதிலை....
6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?
புலத்தை பற்றி கதைப்பதால், எத்தனை பெண்கள் தினமும் சமைக்கிறீர்கள்? எத்தனை பெண்கள் ரேக்அவட்டில் சாப்பாடு வேண்டுகின்றீர்? இதற்க்கு உங்கள் வீட்டு குளிர் சாதனப்பெட்டி பதில் சொல்லும்...

7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?
உடுப்பு தோய்பது முதல்... சமையல் வரை...அது தானே நடக்கிறது....

8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?
விட்டு விட வேண்டும் என்றால் விடத்தானே வேண்டும்..இதில் என்ன கேள்வி இருக்கிறது. பசித்தால் சாப்பிடத்தான் வேண்டும் அதை விடுத்து கொஞ்சம் பொறு நாளைக்கு அரிசி வரும் நாளை மறுதினம் கறி வரும் என்று சொல்லி பசியை ஆற்ற முடியுமா? வேலையை விட வேண்டும் என்ற நிலை வந்தால் அதை விடத்தானே வேண்டும்,..
9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?
ஆகா..குழந்தை வளர்ப்பில்.... உதவி.....
டேக்கோயர் சென்ரரில்...
நீ வளர்ந்தாய்...
டேச்சும் பிரஞ்சும் நீபடித்தாய்
தமிழ் மட்டும் உனக்கு தெரியாது..
ஆராரே பாட அன்னைக்கு நேரமில்லை
ஆர் ஆரோ உணவூட்ட
உன்பாட்டில் நீ வளர..
இதற்க்குள் குழலி இந்த கேள்வி கேட்க
நானதற்க்கு இப்படி பதிலளிக்க...
நீயிடையில் புகுந்து..
டேக்கேயார் சென்ரருக்கு
டாடி தான் விடுவரர் என்று சொல்ல...
இதில் யாருக்கு யார் உதவி....
குழலிக்கு தான்' புரியும்...

10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)
அப்படியாயின் ஒரு கணவன் தனது இளமைக்காலத்தை பற்றி மனைவியிடம் சொல்லாமல் விட்டால் மனைவி மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தாமா?
11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?
திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....
12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?
திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....[/color

13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?
[color=blue]திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....[/color
14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?
[color=blue]திருமணமாணவர்கள் பதிலளிப்பார்கள்.....[/color
15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?
[color=blue]அடப்பாவிங்களா...வீட்டீல சேலைக்கே தட்டுப்பாடு நீங்க வேற.....

16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?
சொந்த பெயரில கூப்பிட்டாலும் பிரச்சினையில்லை....சூரி பட ஸ்ரையிலிலா தன்ரை பெயரையும் கணவன்ர பெயரையும் சேர்த்து வைதெல்லே கூப்பிடினம்....

17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?
ஊருக்கு போய் நிக்கும் போது மனைவி எங்க வேலை செய்யிறது. பாவம் பெற்றதுகள் வாம்மா இரும்மா என்று மாகாராணி மாதிரி கவனிச்சு அனுப்புதுகள்...பிறகு அதுக்குள்ள என்ன உதவி....

18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?
அனுமதிபெறமால் அனுப்புவது பற்றி கணவனிடம் கேட்பது நியாயமா?சொல்லியிருந்தால் தெரிந்திருக்கும்...சொல்லாமல் அனுப்பினால் யாருக்கு தெரியும்.... அதை பற்றி
19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?
வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யலாம் என்று இருக்கிறன்....

20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?
தந்தால் சொல்லுகின்றேன்....

21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?
மப்பிளை வீட்டுக்கராரை மாப்பிளை வீட்டுக்கரார் என்று தானே சொல்லனும்..இதுக்கு புதிதாய் ஏதாவது சொல்லிருக்கா என்ன?
22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
வீட்டு பொறுப்பு பெரும்பாலாக மனைவி மாரிடமே உள்ளது...அதனால் பொருளாதார சுகந்திரம் யார் கையில் இருக்கும்?

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்

23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.

இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு

'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்

'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது

'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.

24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?
அது முன்னர் வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்ப்பட்ட விதத்தை பொறுத்தது
25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?
திருமணம் செய்வது உறுதியானால்.......நிச்சமாக....
26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
அப்படி உங்களில் சிலர் புலம்புவதால் எல்லோரும் அப்படி என்று நினைப்பது தவறல்லவா?
27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
உண்மையை சொல்லத்தானே வேண்டும்....

28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?
அவருக்காக நான் வேலை செய்கிறேனே என்று சந்தோசப்பட்டிருக்கிறேன்...
29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?
எங்கள் விருப்பத்தை யhர் கேட்டார்கள்.....

30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?
இல்லை...தந்தையிடம் பகிர்ந்து கொள்ளும் அனைத்து விடையங்களையும் தாயிடம் பகிர்ந்து கொள்ளலாமா? என்பதை நீங்கள் ஒரு தாயாக இருந்து பாருங்கள்.....

31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?
பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்களைனா வேட்டி கட்டனும் என்று தானே சொன்னார்கள் அது தானே தமிழர் பண்பாடு...பொம்பிளைனா ஜுன்ஸ் போடனும் ஆப்பிளைன்னாலும் ஜுன்ஸ் போடனும் என்று சொன்னால் அருவெறுப்பாக பார்க்கலாம்....
32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா
கண்டிக்க வேண்டிய தேவை என்ன உள்ளது?

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
தாழ்வு மனப்பான்மை என்பது பெண்களுக்கு மிகவும் அதிகம் அது கேள்வி மேல் கேள்வி கேட்கும் குழலிக்கும் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.

அவரின் கேள்விகளே பல வேடிக்கையாகத்தானிருக்கிறது. பல விதண்டாவாதமென அவர் தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றே கேட்டிருக்கின்றார்.

முதலில் எத்தனை பெண்கள் தங்களை விட அந்தஸ்து படிப்பு குறைந்த ஆண்களை திருமணம் செய்திருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் தாறுமாறாக இவர்கள் பார்க்கப்போய்த்தானே சீதனப்பிரைச்சினைகள் பெரிதாகின. 8ம் வகுப்பு படித்திருந்தால் எக்கவுண்டன் 10ம் வகுப்பு படித்திருந்தால் பட்டதாரி அல்லது டாகுத்தர் ஏஎல் படித்திருந்தால் என்ஜினியர் மாப்பிள்ளை என்று வெளிக்கிட்டுத்தானே இவ்வளவு பிரைச்சினைகளும். அது மட்டுமன்றி வாங்கும் சீதனம் இனாம் போன்றன பெரும்பாலும் ஆணின் சகோதரிகளின் வங்கிக்கணக்கைத்தானே நிரப்புகின்றன.

இன்று தாயகத்திலும் சரி புலத்திலும் சரி திறமையான சமையல்காரர் ஆண்கள்தான். ஏன் பிரபலமான உணவுவிடுதிகளில் பாருங்கள் தலைமைச் சமையல்க்காரர் ஆண்களாகத்தானிருப்பார்கள்

புகழ்பெற்ற நடிகர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். பெரும்பாலான நடிகர்களை புகழ்பெற வைப்பதே பெண்கள் தானே. ஏன் இரசிகைகள் நிறையப் பெண்கள் தானே???? சரி அவர் பேசும் வசனங்கள் பிடிக்காவிட்டால் அவரின் படங்களைப் புறக்கணித்து அவருக்கு புத்தி புகட்டலாமே???
முடிந்தால் செய்து பாருங்க் தெரியும் எத்தனை பெண்கள் இதற்கு ஒத்துழைப்பாரென்று!!!!! பெண்ணுக்கு பெண்தானம்மா எதிரி. எதற்காக அப்பாவி ஆண்களை வம்புககு இழுக்குறீங்க???

மொத்தத்தில் ஆண் நெருப்புப்பெட்டி மாதிரி பெண் நெருப்புக்குச்சி மாதிரி. எப்படி என்று யோசிக்கிறீர்களா??
பொதுவாக நெருப்புப் பெட்டியின் ஒரு ஓரத்திலும் நெருப்புக்குச்சியின் தலையிலும் நெருப்பை உண்டாக்கக் கூடிய மருந்துக்கள் உண்டு. ஆனால் குச்சியால் பெட்டியை உரசும்போது குச்சிதானே பற்றிக் கொள்கின்றது. என்றாவது பெட்டி பற்றிக் கொண்டதுண்டா???? அது போல பெண்களே ஆண்கள் மீது உரசி பற்றிக் கொண்டதும் ஆண்கள் மீதே பழியா???

சரி உதை விடுங்க இப்ப சமீபத்திலே அமெரிக்காவையே ஆட்டிப் படைச்ச இரு சூறாவளிகளுக்கும் பெயர் என்னாங்கோ????
1) கத்தரினா 2) ரீற்றா
பாருங்க அளிவென்றவுடனேயே எல்லோருக்கும் பெண்களின் ஞாபகம் தானே வருதுங்கோ!!!!!!

சரி எவ்வளவோ கேள்விகள் நீங்கள் கேட்டீர்கள். ஆனால் நான் இரண்டே இரண்டு கேள்விதானுங்க கேட்கப்போறன். முடிஞ்சா சிந்தித்துப் பாருங்கள் (அதுக்கெல்லாம் உங்களுக்கு நேரமிருந்தால் ).

1) எனது பாட்டி காலத்திற்கு முன்பிருந்தே உந்த மாமியார் மருமகள் பிரைச்சனை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. நேற்று மாமியார்களுக்கெதிராக போர்க்கொடி ஏந்திய மருமகள்மார்தான் இன்றைய மாமியார்கள் அப்படியிருந்தும்; ஏனுங்க இன்றும் உந்தப் பிரைச்சினை தொடருகின்றது????

2) சீதனப்பிரைச்சினையென்று பல பெண்ணிய வாதிகளும் பல மாதர் சங்கங்களும் போர்கொடி ஏந்தி வருகின்றார்கள்.
சரி எத்தனை பெண்கள் உங்கள் சகோதரன் சீதனம் வாங்கும்போது அதை பங்கிட்டு உங்கள் வங்கிக் கணக்கை நிரப்பாமல் அதை எதிர்த்து போர்க்கொடி ஏந்தினீர்கள்???
:roll: :roll: :roll: :roll:
Reply
#13
Rasikai wrote:
நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆனால் அதே பெண் தான் வசிக்கும் ஊரில் நல்ல உத்தியோகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தால். ஒரு ஆண் தனது வேலையை விட்டுவிட்டு அந்த பெண்ணின் ஊருக்குதான் வர வேண்டும் என்று உங்களால் வலியுறுத்த முடியுமா? இல்லை அப்படி வலியுறுத்தினால்தான் அவர்கள் வந்துவிடுவார்களா?

இப்ப என்னங்க பிரைச்சினை???

ஒரு பேச்சுக்கு உங்க லவ்ஸ் ஊரிலே இருக்கின்றார் என்று வைப்போம். அவர் ஊரிலே என்ன தான் பெரிய உத்தியோகத்திலே இருந்தாலும் உங்கடை உழைப்பை ரூபாயின் பெறுமதியால் பெருக்கிப் பார்க்கும் தொகைக்கு சமனாக வராதுதானே. எனவே அவரை உமதிடத்திற்கு வரும்படியும் கூடும் தானே.

தற்ஸ் ஆல் யுவர் ஆனர்!
:roll: :roll:
Reply
#14
Maruthankerny Wrote:குடும்பம் என்று இருவர் ஒன்றாக இணையும்போது. ..ஏன் ஆண் வசிக்கும் இடம் பெண. வசிக்கும் இடம் என்று பிளவு பண்ணுகிறீர்கள்? நாம் வசிக்க போகும் இடம் எனும் மனதுடன் தான் சிந்திக்க வேண்டும். இடபெயர்சி என்பது எதோ ஒரு லாபம் கருதியே இடம்பெற்று இருக்கிறது (குறிப்பாக பொருளாதார லாபம்) அப்படி இருக்கயில் பெண் வசிக்கும் இடமே எதிர்காலத்திற்கு உகந்தது என்றால் நிச்சயமாக ஆண்கள் மறியிருப்பார்கள். அப்படி இடம்மாறி போன எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். உள்நாட்டில் ஊருக்கு
ஊர் மாறவதாயின் பெண் இருக்கும் ஊருக்கு ஆண்கள் மாறினால் பெண்ணின் மனதுக்கு பிடித்தமாயிருக்கும் காரணம் ஆண்களை விட பெண்கள் தனது தாயிடன் நெருக்கமாகவே வாழ்ந்திருப்பார்கள் திருமணமானவுடன் அதுவரையில் அறிமுகமில்லாத ஒரு நபருடன் வேறுர் செல்வது சற்றே மனப்பயத்தை உண்டாக்கலாம். அவளின் தாயார் வாழும் ஊரில் இருக்கும் போது கொஞ்சம் தாயாரின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். சகோதரி ரசிகை.....! நான் சொல்ல வருவதெல்லாம் திருமணத்திற்கு பின் எனது உனது எனும் எண்ணங்களை தள்ளிவைத்தல் அவசியம் எமது எனும் தொணிப்பே இருக்க வேண்டும் என்பதுதான். (என்னை தப்பாக புரிந்து விடாதீர்கள்)

மருதங்கேணி இதைத்தான் நானும் சொல்ல வந்தன்,. ஆண்கள் இடத்துக்கு பெண்கள் வரவேண்டும் எதிர்பார்க்காமல். எங்கு சென்றால் வாழ்க்கை வளமாக இருக்குமோ அங்கு சென்று வாழ்வதே மேல்
<b> .. .. !!</b>
Reply
#15
Vasampu Wrote:ஒரு பேச்சுக்கு உங்க லவ்ஸ் ஊரிலே இருக்கின்றார் என்று வைப்போம். அவர் ஊரிலே என்ன தான் பெரிய உத்தியோகத்திலே இருந்தாலும் உங்கடை உழைப்பை ரூபாயின் பெறுமதியால் பெருக்கிப் பார்க்கும் தொகைக்கு சமனாக வராதுதானே. எனவே அவரை உமதிடத்திற்கு வரும்படியும் கூடும் தானே.

தற்ஸ் ஆல் யுவர் ஆனர்!
:roll: :roll:

நீங்கள் சொன்னால் சரிதான் யுவர் ஆனர். :roll:
<b> .. .. !!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)