| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 165 online users. » 0 Member(s) | 162 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,334
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஆயிரம் பேரைக் கொன்றவன்.. |
|
Posted by: SUNDHAL - 10-01-2005, 02:42 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
ஓர் அன்பர், கையில் ஒரு நூல் சகிதம் வந்தார். முதுமொழிகள் அடங்கிய நூல் அது.
அதிலுள்ள ஒரு முதுமொழியைக் காட்டி, அருமையான முதுமொழியை எப்படி அபத்தமாக வெளியிட்டிருக்கின்றனர் என்று குறைபட்டுக் கொண்டார்.
`ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்' என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது.
"ஆயிரம் பேரைக் கொன்றவன் எப்படி வைத்தியனாக இருக்க முடியும்? ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்' என்றல்லவா இருக்க வேண்டும்" என்றார்.
ஆயிரம் மூலிகைகளை ஆராய்ந்தவன் அரை வைத்தியன் என்பதே சரியானது. இதை விடுத்து, அபத்தமான முறையில் முதுமொழிகளை நூலுருவில் வெளியிட்டு கல்வி கற்கும் இளம் சமுதாயத்தைத் தவறாக வழிநடத்தக்கூடாது என்றார்.
எதையும் அச்சில் போடுவதற்கு முன் நன்றாக ஆராய்ந்து தெளிவுபெற்று வெளியிடவேண்டாமா?
Thanks:Thinakural
|
|
|
| ஐரோப்பிய ஒன்றியத் தடைக்காகக் 'கடுமையாக உழைத்தவர்கள்' |
|
Posted by: வதனா - 10-01-2005, 12:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (18)
|
 |
தமிழீழத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகுக் காரணம் சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் கும்பல் தேச விரோதிகளுடன் இணைந்து லண்டனில் களியாட்டம் ஒன்றத்தை நடத்தி உள்ளனர்.
<img src='http://www.eelampage.com/d/p/2005OCT/20051001002.jpg' border='0' alt='user posted image'>
சிறிலங்காவின் அனைத்து அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளையும் அறிவாளர்களையும் உள்ளடக்கிய குழுவை உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசு, அக்குழுவை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இரகசியமாக செயல்பட வைத்து வருகிறது.
அக்குழுவில்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி கீர்த்தி சுமனசிறீ,
துணைச் செயலாளர் நந்தா கருணாநாயக்க,
ஜே.வி.பி. பொதுச்செயலாளர் தர்சன ஹெட்டியராச்சி,
ஜாதிக ஹெல உறுமயவின் அனுரா மெடகொட,
சிங்கள மையத்தின் விமல் எதிர்வீர,
சட்டத்தரணிகள் சந்த சேனாதீர,
டி.எச். அமைப்பின் ஜோர்ஜ் வித்தியரட்ன,
வரலாற்றுத்துறை பிரபல பேராசிரியர் லக்ஸ்மன் பெரேரா,
வகுல குணபால,
பிரியந்த பெரேரா,
சபுமல் விமலசிறி,
பிரபல வர்த்தகர் லலித் பெரேரா,
சரத் விஜயசிங்க,
சட்டத்தரணி மகிந்த பெரேரா,
ஊடகவியலாளர் பந்துல ஜெயசேகர உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவில் உள்ள 25 பேரும் இணைந்து அனைத்து உலகத் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளும்படியான பரப்புரைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாட்டினது குட்டி அரசியல்வாதி தொடங்கி முக்கிய தலைவர்கள் வரை இந்த செயற்குழு சந்தித்துப் பேசி வருகிறது.
இவர்களின் ஒரு முயற்சியாக தமிழீழத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கப்பட்டையடுத்து தங்கள் வெற்றியைக் கொண்ட உற்சாகக் களியாட்டம் ஒன்றிற்காக உணவு விடுதியில் இவர்கள் கூடியிருந்த போது இந்த முகங்கள் அம்பலமானது.
அந்தக் களியாட்டக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்காகக் 'கடுமையாக உழைத்தவர்கள்' பாராட்டப்பட்டர்கள்.
<img src='http://www.eelampage.com/d/p/2005OCT/20051001001.jpg' border='0' alt='user posted image'>
இந்த சமாதான காலத்தில் சிறிலங்காவின் கொள்கை வகுத்துக் கெ(ா)டுத்து வருபவர்களும் இவர்களே. இதில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிங்களவர்கள். சிங்கள அறிவாளர்கள். இந்த இரகசியக் குழுவின் செயற்பாட்டுக்காக சிறிலங்கா அரசு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
puthinam.com
|
|
|
| கவிஞர் 'காவடி'யின் கவிதைகள் |
|
Posted by: இவோன் - 10-01-2005, 11:48 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<b>உனக்காக நானே.....</b>
நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வறுமையிலிருக்கிறாய்
ஆதலால்
நான் யாசிக்கிறேன்.
நீ கஸ்டத்திலிருக்கிறாய்
ஆதலால்
நான் யோசிக்கிறேன்
நீ தாகமாயிருக்கிறாய்
ஆதலால்
நான் குடிக்கிறேன்
நீ பசியாயிருக்கிறாய்
ஆதலால்
நான் சாப்பிடுகிறேன்.
நீ சாப்பிட்டுவிட்டாய்
ஆதலால்
நான் தண்ணீர் குடிக்கிறேன்.
|
|
|
| சாக்லெட் கேக் |
|
Posted by: தூயா - 10-01-2005, 10:04 AM - Forum: சமையல்
- Replies (10)
|
 |
சாக்லெட் கேக்
<img src='http://www.vikatan.com/aval/2004/dec/31122004/p43.jpg' border='0' alt='user posted image'>
தேவையானவை:
மைதா 2 கப்,
வெண்ணெய் 100 கிராம்,
கன்டென்ஸ்டு மில்க் 1 டின் (400 மிலி),
வெனிலா எசன்ஸ் 2 டே. ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்,
ஆப்பசோடா கால் டீஸ்பூன்,
தண்ணீர் 400 மிலி,
கோகோ 2 டே. ஸ்பூன்,
உப்பு ஒரு சிட்டிகை (அளவுகள் தலை தட்டி எடுப்பது முக்கியம்).
செய்முறை:
மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், ஆப்பசோடா, கோகோ அனைத்தையும் சேர்த்து இரண்டு முறை சலியுங்கள். வெண்ணெயைக் குழைத்து, அதனுடன் சலித்து வைத்த மாவு, வெனிலா எசன்ஸ், பால், தண்ணீர் சேர்த்து, முட்டை அடிக்கும் கருவியால் நன்கு அடியுங்கள்.
கேக் பாத்திரம் (விதவிதமான வடிவங்களில் கடைகளில் கிடைக்கிறது) அல்லது அலுமினிய குக்கர் தட்டின் உள்ளே வெண்ணெய் தடவி, எல்லா இடங்களிலும் படுமாறு மாவை சிறிது தூவி விடுங்கள். அந்தத் தட்டில் முக்கால் பாகம் வரை கேக் கலவையை கொட்டுங்கள்.
வெறும் குக்கரை கேஸ்கட் போடாமல் அடுப்பில் ஏற்றி, 3 நிமிஷம் சூடாக்குங்கள். பிறகு, கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து மூடி, வெயிட் போடுங்கள். மிகக் குறைந்த தீயில் ஒன்றே கால் முதல் ஒன்றரை மணி நேரம்வரை வேகவிடுங்கள். பின்னர், குக்கரின் மூடியைத் திறந்து, மெல்லிய கம்பியால் கேக்கினுள்ளே நுழைத்துப் பாருங்கள். கம்பியில் கேக் ஒட்டவில்லை எனில், நன்கு வெந்துவிட்டதென்று அர்த்தம்.
பிறகு, கேக்கை கவனமாக வெளியில் எடுத்து, சற்றே பெரிய கண்ணுள்ள சல்லடையின் மேல் வையுங்கள். (நேரடியாக தட்டில் வைத்தால், சூட்டில் வேர்த்து கேக் தட்டோடு ஒட்டிக்கொள்ளும்). இதை 3 முதல் 4 மணி நேரம் வரை நன்கு ஆறவிட்டு, ஐஸிங் செய்யுங்கள்.
ஐஸிங் செய்ய தேவையானவை: வெண்ணெய் அரை கப், பொடித்த சர்க்கரைத் தூள் ஒன்றரை கப், கோகோ பவுடர், வெனிலா எசன்ஸ் தலா 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரைத் தூளை, கட்டிகள் இல்லாமல் சலியுங்கள். வெண்ணெயை ஒரு தட்டில் போட்டு, கையால் நன்கு குழைத்து, சலித்த சர்க்கரைத் தூளை சிறிது சிறிதாக அதனுடன் சேர்த்து நன்கு பிசையுங்கள்.
இந்தக் கலவையை இரண்டு பாதிகளாகப் பிரித்து, ஒன்றில் வெனிலா எசன்ஸ் சேர்த்துப் பிசையுங்கள். மற்றொன்றில் கோகோ பவுடரைச் சேர்த்து நன்கு கலக்குங்கள்.
பட்டர் பேப்பரில் கோன் செய்து, முனையை வெட்டுங்கள். அதனுள்ளே பூ செய்யும் பிளாஸ்டிக் அச்சைப் (கடைகளில் ‘நாஸில்’ என்று கேட்டால், கிடைக்கும்) போட்டு, இரண்டு நிற மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, இரண்டு நிறமும் பக்கம் பக்கமாக வெளியேறுவதுபோல் கோனுக்குள் போட்டு, கோனை மடித்து மூடிக்கொள்ளுங்கள்.
இப்போது மீதமுள்ள கோகோ கலவையை சிறிது சிறிதாக ஒரு கத்தியினால் எடுத்து, கேக்கின் மேல்புறத்திலும் பக்க வாட்டிலும் சீராகத் தடவுங்கள். ஒரு கிண்ணத்தில் சிறிது வெந்நீரை வைத்துக் கொண்டு, கத்தியை அதில் நனைத்து, நனைத்து ஐஸிங் கலவையை சமப்படுத்துங்கள்.
அடுத்து, கேக்கின்மேல், கோனினால் விருப்பத்துக்கேற்ப டிசைன், பூக்கள் போட்டு அலங்கரித்தால் சாக்லெட் கேக் தயார்!
சாக்லெட் கேக் என்பதால்தான் அலங்கரிக்க கோகோ பவுடர் உபயோகிக்கிறோம். மற்ற கேக்குகளுக்கு, விரும்பிய நிறத்தில் பவுடர் போட்டுப் பிசைந்து கொள்ளலாம்.
vikatan
|
|
|
| இராணுவ முகாமை நோக்கி ஓடிவருவார்களா? |
|
Posted by: வினித் - 10-01-2005, 09:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இராணுவ முகாமை நோக்கி மக்கள்
ஆவேசத்துடன் ஓடிவருவார்களா?
பதற்றத்துடன் இப்படி விசாரித்த பொலீஸார்
பொங்கு தமிழ் நிகழ்வு இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றிவர பிர தான வீதிகளில் வழமையை விட நேற்று இராணுவத்தினரும் பொலீஸாரும் சற்று அதி களவில் நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும் அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறவில்லை.
இருப்பினும் மக்கள் ஆத்திரம் கொண்டு தங்கள் மீது தாக்குதல் ஏதும் நடத்துவார்களா என்ற அச்சமும் படையினரிடம் காணப்பட் டது.
நிகழ்வு நடந்துகொண்டிருந்த போது 4.30 மணியிருக்கும் "உதயன்' செய்தியா ளர்கள் மருத்துவபீட மைதானத்திலிருந்து பிறவுண் வீதி வழியாக உதயன் அலுவலகத் துக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்துக்குச் சமீபமாக அமைந் துள்ள ஒரு காவலரணில் இருந்த பொலீஸ் அலுவலர் ஒருவர் அவர்களை வழிமறித்தார்.
அந்தப் பொலீஸ் அலுவலர் எமது செய்தியாளர்களிடம் கேட்ட விடயங்கள் இவைதான்
* <b>எத்தனை மணிக்குப் பொங்கு தமிழ் முடிவடையும்?
* பொங்கு தமிழ் முடிவடைய அங்கு இருக்கின்ற மக்கள் எல்லோரும் ஆவேசத்து டன் இராணுவ முகாமுக்கு ஓடி வருவார் களா?
* இராணுவத்துடனும் பொலீஸாருடனும் ஏதேனும் பிரச்சினைகளில் ஈடுபடுவார் களா?
* காவலரண்களை எரிக்கின்றதாகக் கதைக்கின்றார்களா</b>
http://www.uthayan.com/pages/news/today/10.htm
|
|
|
| பிரபாவின் படத்துடன் இங்கிலாந்துப் பெண்மணி |
|
Posted by: வினித் - 10-01-2005, 09:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வெளிநாட்டவர்கள் பலரும்
பொங்கு தமிழில் பங்கேற்பு!
பிரபாவின் படத்துடன் இங்கிலாந்துப் பெண்மணி
நேற்றைய பொங்கு தமிழ் எழுச்சி நிகழ் வுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர் களும் வந்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற சில சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பணி யாற்றுகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சிலர் மொழி பெயர்ப்பாளர்கள் சகிதம் மருத்துவ பீட மைதானத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
அங்கு நடைபெற்ற எழுச்சி நிகழ்வு களை, மக்களின் உணர்வுகளை, அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. தாம் கொண்டு வந்திருந்த கமராக்கள் மூலம் நிகழ்வுகளைப் புகைப்படம் பிடிப்பதிலும் அவர்கள் ஆர் வம் காண்டினர்.
அவ்வாறு வந்து நின்றவர்களில் இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒரு வர் தலைவர் பிரபாகரனின் படங்கள் சில வற்றை அங்கிருந்தவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
அந்த இங்கிலாந்துப் பெண் மணியின் பெயர் ஷாலட் (இஏஅகீஃOகூகூஉ) அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
தலைவர் பிரபாகரனின் படத்தை ஆர் வத்துடன் வாங்கி வைத்திருக்கிறீர்கள். அதற் கான காரணத்தைக் கூறமுடியுமா என்று அவ ரிடம் கேட்டோம்.
தங்கள் தலைவர் மீது இந்த மக்கள் காட்டுகின்ற விசுவாசத்தையும் ஆர்வத்தையும் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கிறது. இந் தப் படங்களை நான் ஆவணப்படுத்தப் போகின்றேன் என்றார். அந்தப் வெள்ளைக் காரப் பெண்.
இதேவேளை வெளிநாடுகளைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்களும் நேற்றைய நிகழ் வுக்கு வந்திருந்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனர்
http://www.uthayan.com/
|
|
|
| மோதல் காதலில் முடிந்தது. |
|
Posted by: SUNDHAL - 10-01-2005, 03:24 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (36)
|
 |
திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி கத்தியால் குத்தியவனுக்கு கோர்ட் தண்டனை தரும் நேரத்தில் அவனையே மணமுடிக்க ஒரு பெண் சம்மதம் தெரிவித்தார். மும்பை ஐகோர்ட்டில் இந்த சம்பவம் நடந்தது.
மும்பையைச் சேர்ந்த ரசூல் ஷேக் என்பவன் மம்தா குர்குலா என்ற பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தான். அவனது "சேது' பாணி காதலை அந்தப்பெண் ஏற்க மறுத்தாள். ஆத்திரமடைந்த ஷேக் அந்த பெண்ணின் வயிற்றில் கத்தியால் குத்தினான். கடந்த ஜனவரியில் நடந்த இந்த சம்பவத்தின் போது அவளது தோழி லட்சுமி அருகில் இருந்தாள்.
தனது கண் முன்னால் நடந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த லட்சுமி, ஷேக்குக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து ஷேக்கை கைது செய்த போலீசார் அவன் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் ஜாமீனில் வெளியில் வந்த அவன் மம்தாவுக்கு மீண்டும் மீண்டும் "காதல் துõது' அனுப்பி வந்தான். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி அவனுக்கு கை கொடுத்தது. ஷேக் தொடர்ச்சியாக வீசிய காதல் கணைகளில் வீழ்ந்த மம்தா அவனை மணாளனாக ஏற்றாள்.
கடந்த ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது "நான் ஷேக்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுங்கள்' என்று கோர்ட்டில் மம்தா கூறினார். மம்தாவின் வாக்கு மூலத்தை ஆய்வு செய்த மும்பை ஐகோர்ட் கடந்த வியாழக் கிழமை ஷேக்கை விடுதலை செய்தது. இதையடுத்து, ஷேக் மம்தாவின் மோதல் காதலில் முடிந்தது.
[size=13]<b>dinamalar.com</b>
|
|
|
| புலனாய்வு விழிப்புணர்வு அவசியம் |
|
Posted by: kurukaalapoovan - 09-30-2005, 09:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
<span style='color:brown'><b>தமிழரின் புலனாய்வு விழிப்புணர்வு தமிழீழம் வென்றெடுக்க வழியமைக்கும்</b>
<i>(நன்றி வே பவான், மட்டக்களப்பு ஈழநாதம்)</i>
[size=13] கடந்த 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் 22ம் திகதி சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஓர் சமாதான சூழல் உருவாக்கப்பட்டது. ஆனால் இச் சமாதானச் சூழலானது இன்று கேலிக்கிடமாகியுள்ளது.
அதாவது போர் நிறுத்த உடன்படிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றான "போர் நிறுத்த முறைகள்" (ஒப்பந்தத்தின் உறுப்புரை 1.1 தொடக்கம் 1.13வரை இது பற்றிக் கூறுகின்றது) என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளல்லாத தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்த தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் ஆயுதங்களைக் களைய வேண்டும். அல்லது அவர்கள் விரும்பினால் சிறிலங்கா படையணிகளில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் வடகிழக்கில் சேவையாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற நடைமுறைபடுத்தப்பட வேண்டிய விடயத்தை சிறிலங்கா அரசானது சொற்பமேனும் கடைப்பிடிக்கவில்லை. மாறாக அவ் ஆயுதக் குழுக்களுக்கு இராணுவ புலனாய்வுத் துறையானது சுகபோக சலுகைகளை வழங்கி அவர்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்படுத்தி வருகின்றது.
சிறிலங்கா இராணுவமும் அதனுடன் ஒட்டுப் படையாக உள்ள தமிழ்த் தேசவிரோதக் குழுக்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அலுவலங்களின் மீதும் அரசியல் பணியில் ஈடுபடும் போராளிகள் மீதும் தமிழீழ பற்றாளர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மறைமுக தாக்குதலை நடாத்தி வருகின்றனர். ஆனால் இவர்களால் நடாத்தப்படும் இத் தாக்குதல் திட்டமிடப்பட்ட புலனாய்வு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெறுமதி வாய்ந்த தாக்குதல்களாகக் காணப்படவில்லை.
ஆயினும் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்குனர்களாக இருக்கும் துரோகிகள் எம் மத்திலேயே இருக்கின்றனர். இவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு வலுசேர்க்கின்றனர். எமது விடுதலைப் போராட்டத்திற்கு நேரில் மோதும் எதிரி பெரிதல்ல முதுகில் குத்தும் துரோகியே ஆபத்தானவர்கள். விடுதலைப் போராட்டம் இவ்வளவு காலத்திற்கு நீண்டு செல்வதற்கான காரணமும் இத்துரோகிகளே.
எனவே தமிழர் தாயகத்திலிருந்து துரோகிகளைக் களைந்து எதிரியுடன் போரிட்டு எமது தமிழீழத்தை வென்றெடுக்க தமிழர்களாகிய நாம் புலனாய்வு சார்ந்த விழிப்புணர்வையும் புலிப்படையின் புலனாய்வு வல்லுனர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் முன் வரவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் பிறப்புக் கடமையாகும்.
எமது மக்கள் புலனாய்வுப் பணியை ஓர் வஞ்சகத்தன்மையான செயற்பாடாகவும் புதுமையான செயற்பாடாகவும் நோக்குகின்றனர். ஆனால் இப்புலனாய்வுச் செயற்பாடானது வஞ்சகத் தன்மை நிறைந்ததோ அல்லது ஒழுக்கக்கேடானதோ அல்ல. திருக்குறள் பைபிள் அஸ்த்தசாஸ்திரம் போன்ற உலகுக்கு வழிகாட்டும் நூல்கள் புலனாய்வின் நியாயத்தை கூறுகின்றன. நாட்டுக்காக சூது வாது நிறைந்த உளவுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று இந் நூல்கள் வலியுறுத்துகின்றன. அத்துடன் ஓர் நாட்டின் குடிமகனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அந் நாட்டிற்காக உளவு பார்க்க வேண்டியது அவரது பிறப்புக்கடமை என்றும் கூறுகின்றது.
இப் புலனாய்வுப் பணியானது எமக்கு புதுமையான பணியல்ல. அதாவது மனிதன் தோன்றிய காலம் தொட்டே புலனாய்வு தோற்றம் பெற்றது எனலாம்;. அயல் வீட்டை வேவு பார்ப்பதிலிருந்து குடும்ப இரகசியத்தைக் காப்பது வரையான சாதாரண நடவடிக்கைகளும் புலனாய்வுதான். எமது குடும்ப வாழ்வில் புலனாய்வு இரண்டறக் கலந்துள்ளது. இரகசியம் காப்பது கதை கட்டிவிடுவது திருடனை கையும் களவுமாக பிடிப்பதற்கு உளவு பார்ப்பது காதலிப்பதற்கு முகவர்களை அமைப்பது இரகசிய மறைவிடத்தில் கடிதம் வைப்பது போன்ற எம் மத்தியிலுள்ள வழமையான செயற்பாடுகளும் ஒரு வகைப் புலனாய்வு வேலைகளே. ஆனால் இத் தந்திரோபாய செயற்பாடுகளை நாம் எமது சுய நோக்கத்திற்காகவே செய்கின்றோம். இவ் வித்தியாசமான புலனாய்வுச் செயற்பாட்டை எமது தமிழர் தேசியம் பலம் பெறும் வகையில் சிந்திப்பதே தற்போதைய காலத்தின் தேவையாகும்.
உளவு வேலையானது இன்று உலக மக்களிடையே நன்கு வியாபித்து அதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. வீரம் மிகுந்த செவ்விந்திய இனம் போரில் தோற்றது அமெரிக்காவின் சொந்தக்காரர்களான செவ்விந்தியர்கள் உலக திரையிலிருந்து மறைந்து போனது புலனாய்வின் தேவையைச் சுட்டிக்காட்டும் நிகழ்வாகும். அமெரிக்க கடற்படைத் துறைமுகம் (பேள்காபர்) ஜப்பானால் நீர் மூலமாக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவுக்கு புலனாய்வின் தேவையை உணர்த்தியது.
இஸ்ரேலிய தேசத்தின் வரலாறு புலனாய்வின் ஓர் வரலாறாகும். யூதர்களின் தாயகம் நோக்கிய பயணம் ஓர் புலனாய்வுப் பயணமே. இவ்வாறு இஸ்ரேல் தேசம் தோன்றியதும் அது நிலைத்திருப்பதும் அதன் "மொசாட்"என்ற புலனாய்வு அமைப்பாலாகும். இன்றைய எமது தமிழீழம் நோக்கிய பயணத்திற்கும் இவை நல்ல படிப்பினைகளாகும். மொசாட்டின் வெற்றிக்கு மூலகாரணம் அதன் தேசப்பற்று நிறைந்த முகவர்களாகும். இவர்கள் உலகெங்கும் வலையமைப்பாக பரந்திருந்தார்கள். மொசாட்டின் தேவைகள் ஏற்படும் போது ஒவ்வொரு முகவரும் தோள் கொடுத்தனர். மொசாட் அமைப்பு பெறுமதி வாய்ந்த வெற்றிகளைக் குவித்தது.
அமெரிக்காவிற்கு 90மைல் அருகிலிருக்கும் குட்டித்தீவு கியூபா பல வருங்களாக அமெரிக்காவிற்கு சவால் விட்டு பிடல் காஸ்ரோ என்ற பெரும் தலைவனின் ஆட்சி கியூபாவில் தொடர்கிறது. இதற்கு ஒட்டுமொத்த கியூபா மக்களினதும் கியூபா புலனாய்வுத் துறையினதும் பங்கு பெரியது. அந்நிய உளவு குறித்து கியூபா மக்கள் விழிப்படைந்தனர். இதன் விளைவாக கியூபா போரிலும் புலனாய்விலும் பொருளாதாரத்திலும் தனிமரமாக நின்று பிடிக்க முடிகிறது.
இவ்வாறு பல நாடுகள் இன்று புலனாய்வின் முக்கியத்துவத்தை தேவையை உணர்ந்து அந்நாட்டு மக்களின் ஆதரவு கொண்டு பாரிய உள்ளக வெளியக புலனாய்வுக் கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றது.
இப் புலனாய்வின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளும் புலனாய்வுத் துறையை உருவாக்கி செயற்படுத்துகின்றனர். இப்பணியானது இரகசிய முகவர்களுடாக இரகசியமான முறையில் நடாத்தப்படுகின்றது. புலிப்படை ஒற்றர்கள் சாதாரண மக்களோடு மக்களாக இருந்து கொண்டு தமிழர் போராட்டத்திற்குப் பலம் சேர்க்கக் கூடிய தகவல்களைத் திரட்டுகின்றனர்.
அதாவது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற அமைப்புக்கள் தனிநபர்கள் பற்றிய விடயங்கள் இராணுவ மற்றும் மாற்றியக்கங்களின் புலனாய்வு அமைப்புக்களுடன் தொடப்பினை ஏற்படுத்தி புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் பற்றிய விபரங்கள் நேரடியாக இயக்கத்திற்கு எதிராக செயற்படாத போதிலும் கொள்கை ரீதியாக விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள். அத்துடன் தமிழர் போராட்டத்திற்கு எதிராக விமர்சனங்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய விபரங்களையும் சேகரிக்கின்றனர்.
மேலும் எதிரியின் தரைப்படை கடற்படை விமானப்படை பொலிஸ்படை போன்ற பாதுகாப்பு கட்டமைப்பு சார்ந்த விபரங்களையும் புலனாய்வு கட்டமைப்பு சார்ந்த விடயங்களையும் தகவல்களாகச் சேகரிக்கின்றனர். அத்துடன் நாச வேலை ஒன்றை மேற் கொள்வதினூடாக எதிரியின் பொருளாதாரத்தைச் சீரழிக்கக் கூடியதும் சிவில் நிர்வாகத்தினை ஸ்தம்பிதமடையச் செய்யக் கூடியவாறானதுமான சிறிலங்காவின் பொருளாதார இலக்குகள் ஒவ்வொன்றினையும் பற்றிய முழுமையான விபரங்களும் திரட்டப்படுகின்றது.
புலிப்படையி;ன் இரகசிய உளவாளிகள் தமிழர்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் சாவுக்கு அஞ்சாது எதிரியின் பிரதேசத்திற்குள் ஊடுருவி எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்தி மேற்படி தகவல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இத்தகவல்களின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் தமிழீழம் வென்றெடுப்பதற்கான பெறுமதி வாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இத்தகவல்கள் வழியமைத்துக் கொடுக்கின்றது.
தமிழர் தயாகத்தின் இன்றைய கள நிலமை மோசமடைந்து வருகின்றது. தமிழ் மக்களின் இயல்பு வாழ்வு சீரழிந்து வருகின்றது. மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களில் மக்கள் வாழ்விடங்களில் புதிது புதிதாக இராணுவ காவலரண்கள் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. முகாமில் உள்ள இராணுவ சிப்பாய்கள் ஒரு சில தமிழ் மக்களுடன் ஒரு மித்து நன்றாகப் பழகுவதையும் சில தமிழ் இளைஞர்கள் அருகில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அடிக்கடி சென்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இப் பழகுமுறையை இராணுவப் புலனாய்வு (னுஆஐ) தமிழர் தரப்புக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும். இது எந்தவொரு புலனாய்வு அமைப்பினதும் வழமையான தந்திரோபாயமாகும். பணத்திற்குச் சோரம் போபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்கி தமிழர் போராட்டத்திற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய தகவல்களை இவர்கள் மூலம் பெறுகின்றனர். இத்தகவல்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் மூலம் எமது போராட்டத்திற்கு போராளிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர்.
எனவே இராணுவத்தினருடனான இப்பழகு முறையை தமிழ்த் தேசிய போராட்டத்திற்குச் சார்பாகப் பயன்படுத்துவதற்கும் இராணுவத்திற்கும் தகவல் வழங்குனர்களாக இருக்கும் தமிழ்த் தேச துரோகிகளை தமிழர் தாயகத்திலிருந்து களைவதற்கும் இப் பத்தியில் கூறப்பட்ட தமிழர் தேசியம் பலம் பெறுவதற்கான தகவல்களைத் திரட்டுவதற்குமான துடிப்பும் ஆர்வமும் புலனாய்வு விழிப்புணர்வும் தமிழீழ பற்றும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வரவேண்டியதே இன்றைய தேவையாகும்.
எனவே போர்நிறுத்த ஒப்பந்தம் எந்நேரமும் கிளித்தெறியப்படலாம் என்பது வரலாறு சொல்லும் பாடம். எனவே 4ம் கட்ட ஈழப்போரை தமிழர்கள் எதிர் கொள்வது நிச்சயம். எதிர் நோக்க வேண்டிய 4ம் கட்ட ஈழப் போரில் துரிதமாக தமிழீழம் வென்றெடுக்க தமிழரின் ஒன்றுபட்ட புலனாய்வு விழிப்புணர்வு வழியமைக்கும். </span>
உங்கள் கருத்துக்கள்:
http://www.battieezhanatham.com/weekly/mod...p?name=Feedback
|
|
|
|