Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 47 online users.
» 0 Member(s) | 45 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,334
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும்
Posted by: kurukaalapoovan - 10-02-2005, 06:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b><span style='font-size:22pt;line-height:100%'>பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள்</b></span>
<i>நன்றி: தினக்குரல் ரூபன் சிவராஜா</i>

<b>காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு</b>

உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கிஇ இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமாகவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. எனவே இதன் அடிப்படை சார்ந்து சில விடயங்களை முதலில் ஆராய்வது பொருத்தமானது.

தமிழர் தாயகப் பிரதேசங்களை துண்டாடும் இலக்கோடு பெரு மெடுப்பில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்ட சிங்கள இனவாத மேலாண்மையின் சூட் சுமங்களையும் காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்ட பின்னணியில் காசாவின் எதிர்காலம் பற்றியதான விடயங் களையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

<b>நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு</b>

உலகிலேயே நிலத்தை அடிப் படையாகக் கொண்ட கோட்பாட்டினை முன்னிறுத்திய வாழ்வினை பின் பற்றுபவர்கள் வரிசையில் முதலில் யூதர்களும், அடுத்ததாக சிங்களவர்களும் விளங்குகின்றனர். தமக்காக இறைவனால் "வாக்களிக்கப்பட்ட பூமி" (தேர்ந்தெடுக்கப்பட்ட பூமி) என்பதே அவர்களின் அந்தக்கோட்பாட்டு வியாக்கியானமாக இருக்கின்றது. பௌத்தத்தைப் காப்பதற்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டதே இலங்கைத்தீவு என்ற வலுவான நம்பிக்கை மகாவம்சம் என்ற சிங்கள வரலாற்று (சிங்களவர்களின் நலனுக்காக திரிக்கப்பட்ட வரலாறு) நூல் மூலம் பெரும் பான்மை சிங்களவர் மனங்களில் ஆழமாய் பதியலாயிற்று.

ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே அரசு, ஒரே நாடு என்ற கோட்பாடே உண்மையான பௌத்தர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்துவதற்கான அதி உன்னதம் என்ற நம்பிக்கை சாதாரண சிங்கள மக்களின் மனங்களுக்குள்ளும் மூளைக்குள்ளும் புகுத் தப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்கே உரியது என்ற கருத்துருவாக்கம் சிங்கள மக்களின் மூளைகளை ஆக்கிரமித்த நிலையில், சிங்களவர் கள் மத்தியில் தமிழர் விரோதப்போக்கு வளர்த்தெடுக்கப்பட்டது. சிறு பிராயத்திலிருந்தே இந்தக் கோட்பாட்டின் அடிப் படை பாடநூல்கள் ஊடாகவும் மிக நுணுக்கமாகப் புகட்டப்படுகின்றது. மகாவம்சத்தினூாடாக சிங்கள மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்பட்ட இந்த உணர்வே இலங்கையின் இன முரண்பாட்டின் தோற்றத்திற்கு அடிகோலியது, தமிழ்மக்கள் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கும் வழிகோலியது.

<b>தமிழர் தாயகப்பிரதேசங்களை விழுங்கிய சிங்களக் குடியேற்றங்கள்</b>

தமிழர் தாயகப்பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தமிழர்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பதன் மூலம், இலங்கைத் தீவில் சிங்களவர்களின் பரம்பலை அதிகரிக்கச் செய்து, தமிழ்மக்கள் சிறுபான்மையினர் என்ற கருத்தை வேரூன்றச் செய்வதே பௌத்த - சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தின் நோக்கமாகும். வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம் பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து, வடக்கினையும் கிழக்கினையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு குடி யேற்றம் கருவியாய் கைகொடுத்தது.

இந்த அடிப்படையில் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையிலுள்ள நிலத்தொடர்பு, திருகோண மலைக்கும் முல்லைத்தீவுக்குமிடையிலுள்ள நிலத்தொடர்பு ஆகியவற்றை துண்டிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தினை துண்டாடும் தொலைநோக்குடன் சிங்களம் செயற்பட்டது. அதே போல் அம்பாறை - மட்டக்களப்பினைப் துண்டாடும் சூழ்ச்சியுடன் பற் பல குடியேற்றத்திட்டங்களை அமைத்தது. போராளிகளுக்கும் மக்களுக்கு மிடையிலான தொடர்புகளை வேரறுப்பதற்கும் குடியேற்றம் துணைநின்றது.

குளங்கள் புனரமைப்புத் திட்டம், நீர்ப்பாசனத்திட்டம், விவசாய அபிவி ருத்தித் திட்டம் என்ற போர்வைகளில் குடியேற்றத்திட்டங்களே அபிவிருத்தி செய்யப்பட்டன. தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. <i>இதற்கு நில மற்ற வறிய சிங்கள மக்கள் கடும் போக்கு சிங்கள மேலாண்மையாளர்களுக்கு பயன்பட்டனர்.</i> தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு, அவ்விடங்களில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்ட தோடு தமிழ்ப்பிரதேசங்களுக்கு சிங்க ளப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, படிப்படியாக சிங்கள மயமாக்கல் விரிவாக்கம் கண்டது. குடியேற்றப் பிரதே சங்களில் புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்கி சிங்களவர்களின் சனத் தொகை பரம்பலை அதிகரிப்பதற் கான திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப் பட்டன.

<b>தமிழ் மக்கள் மீதான படுகொலைகள்</b>

இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தில் அம்பாறைஇ மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் நோக்கவேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலையில் 200 வரையிலான தமிழ் மக்கள் படுகொலை, அம்பாறை மாவட்டத்தில் வீரமுனைப் படுகொலை மற்றும் திருகோணமலை தென்னமரவாடி படுகொலை என தமிழர்கள் மீதான படுகொலைப் பட்டியல் நீண்டு செல்கின்றது. மட்டக்களப்பில் மட்டும் 20க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கில் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்குமிடையில் சூழ்ச்சிகள் மூலம் படுகொலைகளைத் தூண்டியும் சிங்களம் வேடிக்கை பார்த்தது.

இன்று சமாதானத்திற்கான காலத்திலும் தொடர்கின்ற புத்தர் சிலை விவகாரங்களையும் நாம் இதன் பின்னணியிலேயே நோக்க வேண்டும். இனக்கலவரத்தை தூண்டுமளவிற்கு இந்த விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது பலரும் அறிந்ததே. திருமலை, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய தமிழர் தாயகப்பிர தேசங்களில் புதிது புதிதாய் தோன்றும் புத்தர் சிலைகள், தமிழ்த்தேசிய எழுச்சியின் உச்சத்தை சகிக்க முடியாத சிங்கள இனவாதத்தின் குரூர மன நிலையை கோடிட்டுக்காட்டுகின்றது. இவ்வாறாக தமிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயங்களை வலு விழக்கச் செய்யவும், இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்ற கற்பனைக் கோட்பாட்டுக்கு வலுச்சேர்க்கவும், தமிழ்மக்களின் தாயகக் கோட்பாட்டினையும் தன்னாட்சியுரிமையையும் நிராகரிப் பதற்கும், பௌத்த சிங்கள மேலாண்மை ஆட்சியாளர்கள் திட்டங்களை வகுத்து செயற்பட்டனர் - செயற்பட்டு வருகின்றனர்.

<b>குடியேற்றம்- பலஸ்தீனமும் தமிழர் தாயகமும்</b>

போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் என்ற அடிப்படையில் பலஸ்தீனர்களினதும் தமிழர்களினதும் போராட்டம் பல ஒத்த தன்மைகளைக் கொண்டது. அதேபோல் போராடும் இனத் திற்கெதிரான அடக்குமுறையைப் பிரயோகித்த முறைகளிலும் பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் இஸ்ரேலின் யூதப் பேரினவாதத்திற்கும் ஒத்த தன்மைகளுண்டு. அந்த நோக்கு நிலையில் காசா வெளியேற்றத்தை ஆராயும்போது பல உண்மைகளைத் தெளிய முடியும். பலஸ்தீனர்களுக் கெதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாற்றில் திட்டமிட்ட குடியேற்ற மையங்களை இஸ்ரேல் அகற்றுவது இதுவே முதற்தடைவ என்பதால் இந் நிகழ்வு அனைத்துலக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் தமது விடுதலைக்கான அனைத்துலக ஆதரவினைப் பெற்று வந்திருக்கின்றனர். உண்மையில் ஆதரவு என்பதை விட அனுதாபம் என்பதே பொருத்தமான சொல்லாடலாகும். அனுதாபத்தினை அள்ளிப் பொழிந்தே அம்மக்களுக்கான தீர்வு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. (இது தனியாக ஆராய வேண்டிய விடயம்). முதலில் இங்கே காசா வெளியேற்றத்தினை ஊடகங்கள் சித்திரித்த விதத்தினைப் பார்ப்போம்.

<b>காசா வெளியேற்றம் - ஊடகங்களின் சித்திரிப்பு</b>

யூதர்கள் ஏதோ தமது சொந்த தாயகத்தை விட்டு வெளியேறுவது போன்ற தோற்றப்பாட்டினையே ஊடகங்கள் தந்தன. <i>கண்ணீரும் கம்பலையுமான யூத மக்களின் தவிப்புணர்வே ஊடகங்களை ஆக்கிரமித்தன. ஆனால் அந்த எதிர்ப்பும் தவிப்பும் யூத அடிப்படைவாத கடும்போக்காளர்கள் அரங்கேற்றிய நாடகம் என்பதையும் ஊடகங்கள் சில விளக்கத் தவறவில்லை. ஊடகம் என்பது சக்தி வாய்ந்தது. இன்றைய பல்லூடகச் சூழல் இன்னும் அதி சக்தியுடையது. கருத்துருவாக்கம் சார்ந்து மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடிய அச்சக்தி, சில சமயங்களில் அநியாயத்தை நியாயப்படுத்தவும், நியாயத்தை அநியாயமாக சித்திரிக்கவும் பயன்பட்டு வருவது வேதனைக்குரியது.</i>

ஊடகர்கள் காசா குடியேற்றப் பகுதியில் நின்றிருந்த வேளைகளிலும், ஒளிப்படக்கருவிகள் இயங்கு நிலையில் இருந்த போதுமே யூதர்கள் உருக்கமான முறையில் கண்ணீர் வெள்ளத்தை மடைதிறந்து விட்டனர் என்றும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. கடும்போக்கு மத அடிப்படை வாதிகள் வெளியேற மறுத்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். சில பலஸ்தீனர்களை படுகொலையும் செய்தனர். இந் நிலையில் வலுக்கட்டயமாகவே இஸ்ரேலியப் படைகள் யூதர்களை வெளியேற்றவும் நேர்ந் தது.

<b>பலஸ்தீன மக்களின் உணர்வு</b>

காசாவிலிருந்து யூதர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பலஸ்தீனர்கள் தமது சொந்த நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட சுதந்திர உணர்வுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததையும் ஊடகங்கள் பதிவுசெய்யத் தவறவில்லை. இளைஞர்கள் தேசியக்கொடிகளை ஏந்திய வாறு மகிழ்ச்சி பொங்க ஓடித் திரிந்தனர். நாற்பது ஆண்டு கால ஆக்கிரமிப்பு, சொந்த வாழ் விடங்களை இழந்து நம்பக்கை யீனங்களுடனும் ஏக்கங்களுடனும் ஏமாற்றங்களுடனும் இருந்த மக்களுக்கு இது பெருத்த மகிழ்ச்சியை தந்திருக்கின்ற தென்றால் அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வேயாகும். எத்தனை தசாப்தங்கள் சென்றாலும் சொந்த வீடு, சொந்த நிலம், சொந்த தேசம் மீதான பற்றுறுதி இம்மியளவும் தணியாது என்பதற்கு பலஸ்தீன மக்களின் உளவெளிப்பாடு கட்டியம் கூறுகின்றது.

பறிக்கப்பட்ட நிலங்களை மீளப் பெறுவதென்பது அரசியல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் பெறுமதி மிக்க நிகழ்வு எனலாம்.

இது காசா பிரதேசத்தினை சொந்த வாழ்விடமாகக் கொண்டிருந்த மக்களுக்கு மாத்திரம் மகிழ்ச்சி தரும் நிகழ் வல்ல. காசாவில் யூதக்குடியேற்றப் பகுதிகளில் மட்டுமல்லாமல், அதனை அண்டிய பகுதி மக்களும் எல்லைப்புற மக்களும் இஸ்ரேல் படைகளின் தாக்கு தல்களுக்கு முகம் கொடுத்தனர். எனவே இனி அந்தத் தொல்லையும் நீங்கியதென்ற மகிழ்ச்சி பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இங்கு கோடிட்டுக் காட்டவேண்டிய விடயம் என்னவெனில், இஸ்ரேல் தேசத்தின் உச்சநிலைத் தொழில்நுட் பத்தையும் படை பலத்தையும் நம்பியே காசா குடியேற்றம் அகற்றப்படுகின்றது (படைகள் உள்ளடங்கலாக) என்று இஸ்ரேல் தலைமையமைச்சர் ஏரியல் சரோன் ஆரம்பத்தில் கூறினார். எனவே மீண்டும் தேவையேற்படின் இந்த இடங்களைப் பிடிப்போம் என்பதே சரோனின் கூற்றில் புதைந்துள்ள எண்ணக்கருவாகும். மீண்டும் இந்த இடங்களில் பலஸ்தீன மக்கள் குடிய மர்த்தப்பட்டால் மாத்திரமே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமது சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு ஏதிலி வாழ்வில் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு இது பூரண வெற்றியாக நிலைக்கும்.

காசா பிரதேசமானது நிலப்பரப்பில் மிகவும் சிறிய பிரதேசமாகும். இது 45 கி.மீ நீளத்தினையும் 5-7 கி.மீ அக லத்தினையும் கொண்ட பரப்பாகும். எனவே இலகுவில் மீளக்கைப்பற்ற முடியும். தவிர எகிப்தின் எல்லையை அண்டிய கரையோரங்கள் மற்றும் காசாவின் துறைமுகங்களும் தொடர்ந்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில், பலஸ்தீனர்களின் மீள்குடியேற்றமும் இயல்புவாழ்வும் தொடர்ந்தும் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. காசாவிற்கும் மேற்குக்கரைக்குமிடையிலானதும், காசாவிற்கும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலானதுமான வாணிப நடவடிக்கைகள், போக்குவரத்துக்கள் பாதிக்கப்படும். இது பலஸ்தீனத்தில் மீளக்குடியேறும் மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு காசாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும்.

காலச்சக்கரத்தினை மூன்று தசாப்தங்கள் பின்னகர்த்தி மீள்பார்வை செய்வதன் மூலம் யூதர்களின் திட்டமிட்ட குடியேற்றம் பற்றிய ஆக்கிரமிப்பு வரலாற்றினை அறியமுடியும்.

1967களில் பலஸ்தீன மக்கள் பாரம்பரிய மாக வாழ்ந்துவந்த காசா பள்ளத்தாக்கு மற்றும் மேற்குக்கரை ஆகிய பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டு அங்கெல்லாம் யூதர்கள் குடியேற்றப்பட்டனர். இஸ்ரேல் படைகள் எகிப்திலிருந்து படையெடுத்து காசா பள்ளத்தாக்கையும் ஜோர்டானிலிருந்து படை யெடுத்து மேற்குக்கரையையும் ஆக்கிரமித்தன. காசாவில் 22 யூதக்குடியேற்ற மையங்களும் மேற்குக்கரையில் 120 யூதக்குடியேற்ற மையங்களும் அமைக்கப்பட்டன.

<b>கேள்விக்குள்ளான மேற்குக்கரை வெளியேற்றம்</b>

காசாவில் 22 குடியேற்ற மையங்களில் 9000 யூதர்கள் வரையில் வசித்தனர். மேற்குக்கரை யில் 120 குடியேற்ற மையங்களில் 240000 யூதர்கள் வசிக்கின்றனர். காசாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே என்பதால் வெளியேற்றம் சாத்தியமானது. ஆனால் மேற்குக்கரையில் இரண்டரை லட்சம் பேர் வரையில் இருப்பதால் வெளியேற்றமென்பது கடினமானதாகவே அமையும்.

தொடர்ந்து மேற்குக்கரை உட்பட பலஸ்தீனப் பகுதிகளின் ஏனைய குடியேற்றங்களும் படிப்படியாக அகற்றப்படும் என்ற நம்பிக்கை பலஸ்தீன மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கின்றது. ஆனால் அந்த நம்பிக்கை ஈடேறுவதற்கான சாத்தியக்கூறுகள் கேள்விக்குரியனவே.

இன்று 38 ஆண்டுகள் கடந்த நிலையில் காசாப்பிரதேசத்தின் யூதக்குடியேற்ற மையங் கள் அகற்றப்பட்டு, இஸ்ரேல் படைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளன. இம்மாதம் (செப்.) 13ஆம் நாள் இஸ்ரேல் படையினர் காசாவிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளன.

ஓகஸ்ட் 15ஆம் நாளிலிருந்து இஸ்ரேல் படைகளும் காவல் துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக இரு வாரங்கள் வெயியேற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. எதிர்ப்பின்றி இஸ்ரேல் அரசின் முடிவினை ஏற்று வெளியேறியவர்களின் புனர்வாழ்வுக்கான பொருளாதார இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. வெளியேற மறுத்தோருக்கு ஓகஸ்ட் 15இற்குப் பின்னர் 48 மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டு, காலக் கெடுவின் பின்பும் வெளியேற மறுத்தோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்பது கடந்த வாரங்களில் பல்லூடகங் களை ஆக்கிரமித்த முக்கிய செய்திகளில் ஒன்று.

<b>வரலாறு சொல்லும் பாடம்</b>

வரலாறு எவ்வாறு நகர்கின்றது என்று பாருங்கள். யூதக்குடியேற்றங்களை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டவர் கடும்போக் காளரான ஏரியல் சரோன். இன்று அவற்றை காலக்கெடு விதித்து அகற்றி குடியேற்றவாசிக ளால் துரோகிப் பட்டமும் சூட்டப்பெற்றிருக்கின்றார். இது வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனும் முதுமொழிக்கு பொருள் தருகின்றது. <i>யூத மக்களுக்கு இனவெறியையும் மத அடிப்படை வாதத்தினையும் ஊட்டி பெருமைப்பட்டு, அந்த மக்களையும் பெருமைப்படவைத்த ஒருவர், அந்த மக்களாலேயே துரோகியாக வஞ்சிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.</i>

காசாவிலிருந்து யூதர்களின் வெளியேற்ற மானது இரண்டு யதார்த்தங்களை வரலாற்றின் முகத்தில் அறைந்து சொல்கின்றது. எத்தனை காலங்கள் கழிந்தாலும் ஒரு மக்க ளினத்தின் பூர்வீக பூமி அந்த மக்களுக்கே சொந்தமென்பது ஒரு யதார்த்தம். சிங்கள ஆட் சியாளர்களால் திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சொந்த நிலங்களும் அவர்களிடம் வந்து சேரும் என்ற நம் பிக்கையையும் தருகின்றது. மேற்குக் கரையிலிருந்து கண் துடைப்பிற்காக நான்கு குடியேற்ற மையங்கள் மாத்திரமே அகற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த நிகழ்வு ஈழத்தமிழர்கள் மேலும் விழிப்பாக இருப்பதற்கான பாடமாகவும் (சிங்களவர்களால் எங்கள் தேசம் இனியும் விழுங்கப்படுவதை அனும திக்க முடியாது என்ற பாடத்தினைத் தருகின்றது) அமைகின்றது என்பதே இரண்டாவது யதார்த்தமாகும்.

http://thinakkural.com/New%20web%20site/we...2/Article-1.htm

Print this item

  ஸ்ரீலங்காவின் புலனாய்வு போர் வலையும்
Posted by: narathar - 10-02-2005, 06:19 AM - Forum: புலம் - No Replies

ஸ்ரீலங்காவின் புலனாய்வு போர் வலையும்
விலகிப் போகும் சமாதானமும்

- சங்கதிக்காக எல்லாளன் -

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்தவரும் உதவிகளை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் இரண்டு முக்கிய வழிமுறைகளை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகளுக்கு கூடுதல் நிதி உதவிகள் கிடைப்பதாக கருதப்படும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி நிதி ஆதாரங்களை தடை செய்வதற்கான திட்டம்.

இதற்கென சிங்கள தேசியவாதப் போக்குடையவர்களை கொண்டு விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்துள்ள இந்த குழுவினர் விரைவில் கனடா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது

இதன் ஒரு கட்டமாகவே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது பயணத் தடையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக பலம் பெறுவதை தடுப்பதற்கும் கடும் முயற்ச்சிகள் மே;றகொள்ளப்பட்டு வருகின்றன

சர்வதேச ரீதயில் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பிரதான கேந்திர நிலையாமாகவும் சர்வதேச ஆயுத கொள்வனவில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தங்கியிருக்கும் தளமாகவும் கருதப்படும் தாய்லாந்தில் விசேட புலனாய்வு பிரிவு ஒன்றை இலங்கை அரசாங்கம் களமிறக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையின் புலனாய்வு துறை இயக்குனர்களில் ஒரவராக கருதப்படும் கபில ஹெந்தவிதானர தலைமையில் இப்பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல பரிவுகளாக பிரிந்து தயாய்லாந்தில் தமது செயல்பாடுகளை மெ;றகொண்டு வருவதாக குறிப்பிபடப்படுகின்றது.

இதேவேளை விடுதலைப் புலிகளின் சர்வேச ஆயுத கொள்வனைவை தடை செய்வதற்கு இந்தியாவின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக பலம் பெறுவது இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமன்றி தனது நலன்களிற்கும் பாதிப்பு என நினைக்கும் இந்தியாவும் இந்த விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்து.

விடுதலைப் புலிகளுக்கும் நேபாளத்தில் போராடி வரும் மாவோ போராளிகளுக்கும் இடையில் ஆயுத பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்மை அதனை எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு அதிகரித்த அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் அவர்களை பணி வைப்பதற்கான முயற்சிகளிலேயே இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இராணுவ துணைப்படைகள் மூலம் நிராயுத பாணிகளாக அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வடக்கு கிழக்கில் உள்ள அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் அங்கு தமது இருப்பை தக் வைத்துக் கொள்வதற்கு இலங்கை அராசங்கம் முயலுகின்றது

மறுபுறம் வடக்கு கிழக்கில் பண்பாட்டுச் சீரழிவுகளை ஏற்படுத்தவதற்கும் ஸ்ரீ லங்காவின் புலனாய்வு பிரிவு தீவிரம் காடடி வருதாக தெரியவருகின்றது

வெளிநாட்டவர்கள் பலர் வியாபாரிகள் போல் வடக்கு கிழக்கு பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் இவாகள் மூலம் பண்பாட்டுச் சீரழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது

இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய புலனாய்வு நிழல் யுத்தம் தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கு முன்னர் தீhக்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

http://www.sankathi.net/index.php?option=c...=2774&Itemid=44

Print this item

  இராமாயணத்தில் சந்தேகம்
Posted by: தூயவன் - 10-02-2005, 03:48 AM - Forum: தமிழும் நயமும் - Replies (46)

உண்மையில் இது பலருக்கு எழுந்த பழைய சந்தேகம் தான். இங்கே புதுப்பிக்கின்றேன்.
1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?
2. மண் உறுண்டையால் கூனிக்கு இராமன், அடித்ததை பழி தீர்ப்பதற்காகவே, இராமனை காட்டுக்கனுப்ப கூனி சதி செய்ததாக கொள்ளப்படுகின்றது. அந்த மண் உறுண்டை மட்டும் இவ்வளவு து}ரம் நடக்க காரணமா?
3. இராமன் காட்டுக்கு போவதை தசரத மன்னன் தடுக்கவில்லை. என வான்மீகியில் கூறப்படுகின்றது. அவ்வாறு தடுக்காததற்கு காரணம் என்ன?
4. விசுவாமித்திர் இராமனையும், இலட்சுமனையும் அழைத்து சென்றதற்கான காரணம் என்ன?
5. இராவணன் சீதையை கொணடு செல்லும்போது,மண்ணோடு அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அது சாத்தியமானதா? பத்தினி பெண் அவ்வாறு செல்வாளா?
6. மரவுரி தரித்துச் சென்ற சீதை வழியில் செல்லும்போது நகைகளை அடையாளமாகப் போட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. அந்த நகைகள் எங்கிருந்து கிடைத்தன.
7. வானரக் கூட்டம் என கேலி செய்யப்படும் இனம் எது?
8. தன் மனைவியை சந்தேகப்பட்டுத்தானே தீக்குளிக்கச் செய்தான். உலகத்துக்கு காட்டத்தான் என சமாதானம் சொன்னானாம். அப்படி செய்யவேண்டிய தேவை ஏன் அவனுக்கு ஏற்பட்டது.
9. அப்படியாயின் மீண்டும் மனைவியை காட்டுக்கு அனுப்பியதேன்? அங்கே தான் இலவன்,குஷன் பிறந்தார்கள்.

10. இறுதியாக இராமனும், இலட்சுமணும் ஆற்றில் இறங்கித் தற்கொலை செய்யக்காரணம் என்ன?

உண்மையில் கதையில் ஏதோ மர்மம் இருக்கின்றது. எனக்கு தோன்றவதை விரைவில் தருகின்றேன். உங்களுக்கு ஏதும் தோன்றின் எழுதுங்கள்.
(2000ம் ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள கதையை மாற்ற நான் முயலவில்லை. அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை.)

Print this item

  வணக்கம்! நான் கோமதி.
Posted by: கோமதி - 10-02-2005, 01:47 AM - Forum: அறிமுகம் - Replies (39)

வணக்கம்!
நான் கோமதி.
யாழ் உறவுகளுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தீராத வாசிப்பில் நான் உணர்ந்து கொண்டவற்றையும், ஓயாத அலைக்கழிவில் நான் புரிந்துகொண்டவற்றையும் என் அனுபவங்களையும் கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா அண்ணன்மாரே அக்காமாரே?

Print this item

  சுடுதண்ணீர் வைப்பது எப்படி?
Posted by: vasisutha - 10-01-2005, 11:27 PM - Forum: சமையல் - Replies (21)

<b>சுடுதண்ணீர் வைப்பது எப்படி?</b>


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Arrow
முதலில் பெரிய பானை அல்லது அண்டா ஒன்றை
எடுக்கவும்.

அதன் முக்கால் அளவுக்கு தண்ணீரை ஊற்றவும்.

அடுப்பை பற்றவைத்து அதில் பானையை வைக்கவும்.
மறக்காமல் பானையின் வாயை மூடவும். அப்பத்தான்
தண்ணீர் விரைவாக கொதிக்கும்.

சிறிது நேரத்தில் தண்ணீர் கொதித்து பானையை மூடியுள்ள
தட்டு ஆடத்தொடங்கும். (தண்ணி கொதித்துவிட்டது என்று அர்த்தம்)

அடுப்பை அணைத்து விட்டு பானையை இறக்கி பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடவும்.

சோற்றுடன் சாப்பிட சிறந்தது இது.. (ஐயோ...பழக்கதோசத்தில எழுதிட்டன் மன்னிக்கவும்..)

ஆறியபின் எடுத்து குடிக்கலாம்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  மாசிச்சம்பல்
Posted by: கீதா - 10-01-2005, 08:36 PM - Forum: சமையல் - Replies (5)

தேவையானபொருள்

தேங்காய் (துருவல்)
செத்தல்மிளகாய் சிறிது
வெட்டின வெங்காயம் சிறிதளவு
கறிவேப்பிலை சிறிது
மாசுத் தூள் சிறிது
தேவையான உப்பு
தேசிக்காய்ப்புளி


செய்முறை

முதலில் மிளகாயைப் போட்டு பட்டுப் போல இடிக்கவும் பின்
தேங்காப்புூவைப் போட்டு நன்றாக இடிக்கவும் பின் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு நன்றாக இடித்து பின் உப்பு மாசுத்தூளைப்போட்டு சேர்த்து இறக்கி பின் தேசிக்காய்ப் புூளியை தேவையானது விடவும் இதோ மாசுச்சம்பல் றெடி

Print this item

  பாஸ்' எடுக்க மறுத்த மீனவர்
Posted by: வினித் - 10-01-2005, 07:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

"பாஸ்' எடுக்க மறுத்து குடும்ப சகிதம் கடலில் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர
தனுஷன்

படையினரின் பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஸ் எடுக்காமல் குடும்ப சகிதம் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பியிருக்கிறார் வடமராட்சி மீனவர் ஒருவர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

பிரஸ்தாப மீனவர் மாலை வேளை மீன் பிடிக்க கடலிற்கு செல்ல முற்படுகையில் படையினர் இவரிடம் பாஸ் அனுமதி கோரியதாகவும், ஆனால் படையினரின் பாஸ் அனுமதியை பெற மறுத்த இவர் தான் குடும்பத்துடன் படகில் கோயிலிற்கு செல்லப் போவதாக கூறி மனைவி மூன்று பிள்ளைகள் ஆகியோரையும் படகில் ஏற்றி கடலில் சென்றிருக்கிறார். இவருடைய பிள்ளைகளில் <span style='font-size:25pt;line-height:100%'>1லீ வயது கைக் குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</span>
படகில் சென்ற மீனவர் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததை அடுத்து படையினரால் கடற் படையினருக்கு அறிவிக்கப்பட்டது. கடற்படையினர் கடலில் தேடியும் பலன் எதுவும் கிட்டவில்லை. இந்த நிலையில் மீண்டும் காலை வேளை பிரஸ்தாப மீனவர் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான மீன்களுடன் கரையை வந்தடைந்தார்.

இச்சம்பவம் வடமராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, வடமராட்சி பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாஸ் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு ஒன்று 524 ஆவது படையணித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் படை அதிகாரிகள், கடற்படையின் உயர் அதிகாரிகள், கடற் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், சமாசப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இம்மாநாட்டை படைத் தலைமையகத்திற்கு வெளியில் நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறு கடற்றொழிலாளர் சங்கங்கள் கடற் தொழிலாளர் சமாசத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.


http://www.virakesari.lk/VIRA/20051002/loc...cal_news.htm#l1

Print this item

  எல்லாளன் படை மீண்டும் எச்சரிக்கை
Posted by: வினித் - 10-01-2005, 07:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<span style='font-size:30pt;line-height:100%'><b>எல்லாளன் படை மீண்டும் எச்சரிக்கை</b></span>
த.தனுஷன்

யாழ். குடாநாட்டில் கலாசார சீரழிவில் ஈடுபடுவோர் மற்றும் படையினருக்கு தகவல் கொடுப்போர் படையினருடன் தொடர்பு வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்லாளன் படை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ் எச்சரிக்கை தொடர்பான சுவரொட்டிகள் குடா நாட்டின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் <span style='font-size:25pt;line-height:100%'><b>இது இறுதி எச்சரிக்கை</b> </span>எனவும் இதையும் உதாசீனம் செய்தால் ஏற்படும் விபரீதமான விளைவுகளிற்காக மனம் வருந்த வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதற்கு முன்னர் பல தடவைகள் யாழ்.குடாநாட்டில் எல் லாளன் படை இவ்வாறான எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் இத்தகைய துண்டுப் பிரசுரங்கள் குடா நாட்டின் பல பாகங்களிலும் ஒட்டப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


http://www.virakesari.lk/VIRA/20051002/loc...cal_news.htm#l1

Print this item

  விமானி ஆக என்ன செய்யவேண்டும்
Posted by: narathar - 10-01-2005, 06:43 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (13)

விமானி ஆக என்ன செய்யவேண்டும்

கனடாவில private pilot license குடுக்கிறது Transport Canada என்கின்ற அரச ஸ்தாபனம் அதற்கான தகவல்கள் கிழே உள்ளன.ஒருவர் விமானி ஆவதென்றால் முதலில் PPL எடுக்க வேணும்,பின்னர் CPL (Commerical Pilot licence) எடுக்க வேணும்.PPL எடுக்க கனடாவில 25 மணித்தியாலம் விமானம் ஓட்டிய அனுபவமும் வேறு சோதனைகளும் எடுக்க வேணும்.இதை flying academy அல்லது club வளிய செய்யவேணும்.வேறு வகயாகவும் இதனை எடுக்கலாம் .இப்ப சில விமான நிறுவனங்கள் ஸ்பொன்சர் பண்ணலாம் அல்லது உங்களுக்கு கடன் அடிப்படையில் பயிற்சிக்கு உதவலாம். நீங்கள் அவர்களிடம் தொடர்பு கொண்டு அல்லது இணயத்தில் தேடிக் கண்டு பிடிக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Pilot_licensing_in_Canada

http://www.pilotcollege.co.uk/Frequently%2...20Questions.pdf

http://www.pprune.org/forums/

http://www.pprune.org/forums/forumdisplay....php?forumid=104

http://www.tc.gc.ca/pacific/faq/aviation/personnel.htm

http://jobs.aviation.ca/content/view/12/26/

http://www.aircanada.com/en/about/career/pilots.html

UK யில் CAA(Civil Aviation Authority ),same for europe JAA (Jonit Aviation Authority) தான் PPL (private pilot license) கொடுக்கிறது அவர்களின் தள முகவரி கிழே உள்ளது.

http://www.caa.co.uk/default.aspx?categoryid=49

http://www.caa.co.uk/default.aspx?category...=68&groupid=211

http://www.caa.co.uk/docs/49/SRG_MED_JAR_C...Visual_Stds.pdf

Print this item

  பாலி தீவில் குண்டு வெடிப்பு...
Posted by: MEERA - 10-01-2005, 03:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/4300274.stm

Print this item