Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்ரீலங்காவின் புலனாய்வு போர் வலையும்
#1
ஸ்ரீலங்காவின் புலனாய்வு போர் வலையும்
விலகிப் போகும் சமாதானமும்

- சங்கதிக்காக எல்லாளன் -

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்தவரும் உதவிகளை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் இரண்டு முக்கிய வழிமுறைகளை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகளுக்கு கூடுதல் நிதி உதவிகள் கிடைப்பதாக கருதப்படும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி நிதி ஆதாரங்களை தடை செய்வதற்கான திட்டம்.

இதற்கென சிங்கள தேசியவாதப் போக்குடையவர்களை கொண்டு விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்துள்ள இந்த குழுவினர் விரைவில் கனடா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது

இதன் ஒரு கட்டமாகவே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது பயணத் தடையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக பலம் பெறுவதை தடுப்பதற்கும் கடும் முயற்ச்சிகள் மே;றகொள்ளப்பட்டு வருகின்றன

சர்வதேச ரீதயில் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பிரதான கேந்திர நிலையாமாகவும் சர்வதேச ஆயுத கொள்வனவில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தங்கியிருக்கும் தளமாகவும் கருதப்படும் தாய்லாந்தில் விசேட புலனாய்வு பிரிவு ஒன்றை இலங்கை அரசாங்கம் களமிறக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையின் புலனாய்வு துறை இயக்குனர்களில் ஒரவராக கருதப்படும் கபில ஹெந்தவிதானர தலைமையில் இப்பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல பரிவுகளாக பிரிந்து தயாய்லாந்தில் தமது செயல்பாடுகளை மெ;றகொண்டு வருவதாக குறிப்பிபடப்படுகின்றது.

இதேவேளை விடுதலைப் புலிகளின் சர்வேச ஆயுத கொள்வனைவை தடை செய்வதற்கு இந்தியாவின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக பலம் பெறுவது இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமன்றி தனது நலன்களிற்கும் பாதிப்பு என நினைக்கும் இந்தியாவும் இந்த விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்து.

விடுதலைப் புலிகளுக்கும் நேபாளத்தில் போராடி வரும் மாவோ போராளிகளுக்கும் இடையில் ஆயுத பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்மை அதனை எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு அதிகரித்த அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் அவர்களை பணி வைப்பதற்கான முயற்சிகளிலேயே இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இராணுவ துணைப்படைகள் மூலம் நிராயுத பாணிகளாக அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வடக்கு கிழக்கில் உள்ள அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் அங்கு தமது இருப்பை தக் வைத்துக் கொள்வதற்கு இலங்கை அராசங்கம் முயலுகின்றது

மறுபுறம் வடக்கு கிழக்கில் பண்பாட்டுச் சீரழிவுகளை ஏற்படுத்தவதற்கும் ஸ்ரீ லங்காவின் புலனாய்வு பிரிவு தீவிரம் காடடி வருதாக தெரியவருகின்றது

வெளிநாட்டவர்கள் பலர் வியாபாரிகள் போல் வடக்கு கிழக்கு பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் இவாகள் மூலம் பண்பாட்டுச் சீரழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது

இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய புலனாய்வு நிழல் யுத்தம் தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கு முன்னர் தீhக்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

http://www.sankathi.net/index.php?option=c...=2774&Itemid=44
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)