Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராமாயணத்தில் சந்தேகம்
#1
உண்மையில் இது பலருக்கு எழுந்த பழைய சந்தேகம் தான். இங்கே புதுப்பிக்கின்றேன்.
1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?
2. மண் உறுண்டையால் கூனிக்கு இராமன், அடித்ததை பழி தீர்ப்பதற்காகவே, இராமனை காட்டுக்கனுப்ப கூனி சதி செய்ததாக கொள்ளப்படுகின்றது. அந்த மண் உறுண்டை மட்டும் இவ்வளவு து}ரம் நடக்க காரணமா?
3. இராமன் காட்டுக்கு போவதை தசரத மன்னன் தடுக்கவில்லை. என வான்மீகியில் கூறப்படுகின்றது. அவ்வாறு தடுக்காததற்கு காரணம் என்ன?
4. விசுவாமித்திர் இராமனையும், இலட்சுமனையும் அழைத்து சென்றதற்கான காரணம் என்ன?
5. இராவணன் சீதையை கொணடு செல்லும்போது,மண்ணோடு அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அது சாத்தியமானதா? பத்தினி பெண் அவ்வாறு செல்வாளா?
6. மரவுரி தரித்துச் சென்ற சீதை வழியில் செல்லும்போது நகைகளை அடையாளமாகப் போட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. அந்த நகைகள் எங்கிருந்து கிடைத்தன.
7. வானரக் கூட்டம் என கேலி செய்யப்படும் இனம் எது?
8. தன் மனைவியை சந்தேகப்பட்டுத்தானே தீக்குளிக்கச் செய்தான். உலகத்துக்கு காட்டத்தான் என சமாதானம் சொன்னானாம். அப்படி செய்யவேண்டிய தேவை ஏன் அவனுக்கு ஏற்பட்டது.
9. அப்படியாயின் மீண்டும் மனைவியை காட்டுக்கு அனுப்பியதேன்? அங்கே தான் இலவன்,குஷன் பிறந்தார்கள்.

10. இறுதியாக இராமனும், இலட்சுமணும் ஆற்றில் இறங்கித் தற்கொலை செய்யக்காரணம் என்ன?

உண்மையில் கதையில் ஏதோ மர்மம் இருக்கின்றது. எனக்கு தோன்றவதை விரைவில் தருகின்றேன். உங்களுக்கு ஏதும் தோன்றின் எழுதுங்கள்.
(2000ம் ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள கதையை மாற்ற நான் முயலவில்லை. அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை.)
Reply
#2
ராமாயணத்தை நான் முழுமையாகப்படிக்கவில்லை. ஆனால் கம்பர் கூறுவது பொல வான்மீகரால் எழுதப்பட்ட ராமாணயத்தை தமிழில் மொழி பெயர்க்கவில்லை. கம்பர் ஒரு ராம பக்தர் அதனால் வான்மீகரால் எழுதப்பட்ட ராமர் தொடர்பான கருத்துக்களை மறைத்துள்ளார். ஞாபகத்தில் இருக்கும் ஒரு சம்பவம்... ராமனை காட்டுக்கு செல்லுமாறு அவனது சிற்றன்னை தந்தை சொன்னார் என்று சொன்ன போது அவன் கம்பராமாயணத்தில்... ஏன் தந்தை சொன்னார் என்று சொன்னீர்கள் நீங்கள் சொன்னதாக சொல்லிருக்கலாமே என்று நல்ல மாதிரியாகவும் வான்மீகரால் எழுதப்பட்ட ராமாணயத்தில் உன் வஞ்சனையை இன்று நேற்றல்ல நெடுநாயாக அறிவேன் ..என்று சுடு சொற்களால் திட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால் ராமாயணம் என்பது ஒரு கற்பனை கதையே தவிர வரலாற்று ஆவணமாக இருக்க சந்தர்ப்பமே இல்லை எனலாம். அதே நேரம் எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் ராமாணயத்தை தமிழீழத்தில் ஒரு பாடமாக கற்ப்பிப்பதை நிறுத்த வேண்டும்...அதில் இராவணேஸ்வரன் பற்றி (மட்டுறுத்தினர் இராவணன் அல்ல) பல பொய்கள் இருக்கின்றது. ஒரு பக்கத்தில் கடவுள் பக்தனாகவும் மறுபக்கத்தில் அரக்கனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். அதை விட ஒரு வானரம் (குரங்கு) இலாங்கா புரியையே தீக்கிரையாக்கியதாய் வேறு இருக்கிறது..யாதார்த்ததை பார்த்தால் பண்டைய சரித்திரங்கள் குப்பைக்குள் இருக்க வேண்டியவை...இலக்கிய இலக்கணங்களை மரபு முறைகளுக்காகவே அவற்றை சீர்து}க்க வேண்டியுள்ளது....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
அருமையான தலைப்பை தொடுத்து இருக்கிறீர்கள்.
அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
மேலும் தொடருங்கள்.

இராமயணத்தின் இறுதிப்பகுதி அற்புதங்கள் நிறைந்ததாகவும், சக்தியை மீறிய தெய்வாம்சங்கள் நிறைந்ததாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. என்பதை அறியக்கூடியதாகவும் இருக்கின்றது.
Reply
#4
வானரங்களாக கேலியாக்கப்படுவது திராவிடர்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு.

நிதர்சன், இராமனை பற்றி வால்மீகர் தப்பாக எழுதியதை கம்பர் மொழிபெயர்பில் சடைந்துவிட்டார் என்று சொல்றீங்கள். ஆனால் பொதுவாக இராமரை வழிபடுவோர், ஆரியார் எனக்கூறும் பிராமணர் கம்பராமாயணத்தை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வால்மீகர் இராமயணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். வான்மீகர் விட இன்னும் நன்றாக கம்பர் இராமனை சித்தரித்திருந்தால் ஏன் இராமரை வழிபடுவோர் வான்மீகரின் இராமாயணத்தை மட்டும் தான் ஏற்றுக்கொள்கிறார்கள்?

நிச்சயமாக இராமாயணம் சமயத்திலோ இலக்கியமாகவோ வரலாறாகவே பாடசாலையில் படிப்பீக்க தகுந்ததோ உகந்ததோ அல்ல. தவறான பாடவிதானங்களால் சந்ததி சந்ததியாக பாடசாலைகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சமுதாயாத்தை திருத்துவது என்பதை எவ்வள கடின மென்பதற்கு இன்று நாம் எதிர் கொள்ளும் சில சமுதாயப்பிரச்சனைகள் நல்ல உதாரணம்.
Reply
#5
இராமாயணத்தில் மட்டும் கிட்டதட்ட 400 வகையான வித்தியாசமான இராமாயணம் உள்ளதாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமானவை. அதே போல் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளிலும் இராமாயாணம் அந்நத நாடுகளில் நடந்ததாக கதை உண்டு அங்குள்ள புத்த கொயில்களில் நான் ராமாயண கதைகளை ஒவியங்களாக பாத்திருக்கிறேன். ஒரு கட்டுகதையை ஏன் பாடதிட்டத்தில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#6
ஆரிய வான்மீகி இராமாயனத்தில்..... சீதையை இராவணனின் மகளாக எழுதப்பட்டிருப்பதாக கேள்விப்பட்ட ஜாபகம்!!

ஆனால் பார்பணீயன் கமபனின் இராமாயனத்தில்...... ஈழத்தை ஆண்ட சகல வல்லமை பொருந்திய தமிழ் மன்னனை, அரக்கன் என்று கூறப்பட்டுள்ளது!!

ஆரீய/பார்ப்பணீய கூட்டு ஒரு திராவிடத் தமிழ் மன்னனை அரக்க இனத்தைச் சார்ந்தவன் என்று, தங்கள் திராவிட எதிர்ப்பைப் பிரதி பலித்துள்ளார்கள்!!! அதற்கு மேலாக இராமன் இலங்கைக்கு போக பாலமமைத்து உதவி புரிந்த தென்னகத்து திராவிடர்களை குரங்கினங்கள் என்றும்(சுக்கிரவன், அனுமான் உட்பட்ட ஜாதிகள்) கேவலமாக படைத்துள்ளார்கள்!!

என்ன ஆச்சரியமென்றால்; இன்றுவரை எத்தனையோ தமிழ்நாட்டு விர்பனர்கள் கமபனின் இராமாயனத்திற்கு பலபல விளக்கங்கள் மூலம் பல புத்தகங்கள், கட்டுரைகளைத் தீட்ட்த்தள்ளி விட்டார்கள்!! இன்றும் இந்த தமிழ்நாட்டு உணர்வுத் தமிழர்கள் தம்மை கேவலப்படுத்திய அதே பார்பணீய/ஆரிய இலக்கியத்தை தலைமேல் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
" "
Reply
#7
நீங்கள் ஆரிய உயர் இனமென கூறுபவர்களும் பார்பனர்களும் வேறு என்று குளப்புறியளே? :?
Reply
#8
எனக்கும் சில கேள்விகள் எழுவதுண்டு..

எதையும் விட சிவபக்தனாம் இராவணன்.. சிவனிடம் நிறைய வரங்களை வாங்கினான் எண்று விட்டு...அன்பே சிவம் என்னும் சிவபக்தன் இராவணன்.. எப்படி அரக்கன் ஆனான் எண்டது மர்மம்தான்..

அதைவிட சக்திமான் இராமன் வாலியை ஏன் மறைந்திருந்து கொன்றான் எண்டதும் விளக்கமாய் இல்லை...

மயில்ராவணணையும் தந்திரமாய்த்தான் கொல்லப் பட்டதாய் சொல்லப்பட்டது..

சீதையை ஏன் எல்லாம் வல்ல இறைவனாய் போற்றப்பட்ட இராமன் தீக்குழிக்க வைத்தான்??? சொல்லுற காரணங்கள் பெண்களை இளிவு படுத்துவதாய் இருக்கு.. அப்படியானால் இராமன் ஏன் தீக்குளிக்க இல்லை எண்ட கேள்வி எழுவது தடுக்க முடியாமல் உள்ளது...
::
Reply
#9
உதெல்லாம் ஒரு கேள்வியே, நீங்கள் எல்லாம் இப்படிக் கேள்வி கேட்டு எங்கட கலாச்சாரத்தயே குட்டிச்சுவர் ஆக்குறியள்.சும்மா சீதைக்கு வக்காலத்து வாங்கி ,இன்னும் பல சீதைகளின் கற்பை சூறயாட வாறியள்.பேசாம பப்பில போய் தண்ணி அடிச்சுட்டு விழுந்து கிடவுங்க....இல்லாட்டி எல்லாருக்கும் தேசத் துரோகி பட்டம் குடுப்பம்.
உதெல்லாம் ஒரு கேள்வி....ஏன் இதெல்லாம் உங்களுக்கு சுகூலில படிப்பிக்கிறவை...உண்மை எண்ட படியாத்தானே..அங்க கொளும்பில போய்ப் பாருங்கோ கம்பன் கழகம் எவ்வளவு இலட்சம் செலவழிச்சு கம்பராமாயணத்தில் எவ்வளவு உருப்படியான ஆராச்சி எல்லாம் செய்யுது எண்டு.சும்மா தமிழரின்ட கலாச்சாரத்தில கல் எறியுறதே உங்களுக்கு வேலயாப் போச்சு...சூ .....சூ.தமிழரின்ட கலயழ வளர்ப்பம் எண்டில்ல சும்மா ஐஸ் அடிக்கிறதே உங்களுக்குத் தொழிலாப் போச்சூ ..சூ
Reply
#10
இராமயணத்தை எப்போதுதான் நாங்கள் ஓர் இலக்கியமாக மட்டுமே பார்க்கப் பழகப்போகிறோம்?
அதைவைத்து அவனவன் நினைத்த மாதிரிக் கதை விட்டுக்கொண்டிருக்கிறான். அதுகளை வைத்து நாங்களும் சண்டைபிடித்துக்கொண்டிருக்கிறோம்.
Reply
#11
கோமதி Wrote:இராமயணத்தை எப்போதுதான் நாங்கள் ஓர் இலக்கியமாக மட்டுமே பார்க்கப் பழகப்போகிறோம்?
அதைவைத்து அவனவன் நினைத்த மாதிரிக் கதை விட்டுக்கொண்டிருக்கிறான். அதுகளை வைத்து நாங்களும் சண்டைபிடித்துக்கொண்டிருக்கிறோம்.
கோமதிக்கு வணக்கம்
உண்மையில் சண்டைபிடிப்பதற்காக இதை நான் தொடங்கவில்லை. அசினுக்கு சொண்டில் மச்சமா? கமலுக்கு காலில் வலிப்பா? என விவாதம் செய்வதை விட இது பரவாயில்லை என நம்பியதால் தான் இத் தலைப்பை கொடுத்தேன். அது ஒரு இலக்கியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதன் மூலம் தமிழன் மறைமுகமாக சிறுமைப்படுத்தப்படுகின்றான் என்பதை மறுக்கமுடியாது. இதனால் கம்பவாரிதி எனச் சொல்லும் nஐயராஐ;க்கும் விடுதலைப்புலிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாக அறிகின்றேன்.
Reply
#12
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#13
கோமதி, இலக்கியமாய் பார்த்தால் அதில் கூறப்படுகிற விடயங்களை எமது கலாச்சாரமாக பண்பாடாக ஏற்றுக் கொள்ள தேவையில்லையா?

எமது அன்றாட வாழ்வில் இராமயணம் சார்ந்த விடயங்களை அர்த்தப்படுத்தி வாழத்தேவையில்லை என்று சொல்லுறீங்களா?

அப்போ ஏன் இராமரை கடவுளின் அவதாரமாக கும்புடுகிறார்கள்? அனுமாருக்கு கோவில்? சீதாவாக்கை? சிறீராமஜெயம்?

பாடசாலையில் பாடவிதானத்தைப்பற்றி முடிவெடுத்தவர்களுக்கே விளக்கமிருந்ததோ தெரியாது. :roll:
Reply
#14
http://www.yarl.com/forum/viewtopic.php?t=4468
Reply
#15
இணைப்பை தந்ததுக்கு நன்றி வம்பன் stalin <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#16
உங்களுக்கு வந்தது போல் கம்பர் இராமாயணமும் வால்மீகி இராமாயணமும் படிச்சுட்டு நிறைய குழப்பம் இருக்கு. சரி அதாவது பறாவய் இல்லை. சமீபத்தில் இராவணன் சரிதம் என்ற ஒரு புத்தகம் வாசித்தேன். அது ஒரு இலங்கை பேராசிரியர் எழுதிய புத்தகம். அதை வாசிச்சு இன்னும் நிறைய குழப்பம். அதுல இராவாணனை பற்றி மிகவும் பெருமையாக எழுதி இருந்தது. அதுல இன்னும் ஒன்று சொல்லப்பட்டது சீதை இராவணனின் மகள் அதனால்தான் இராவணன் சீதையை கடத்தி வந்ததாக. இன்னும் நிறைய விசியம் வித்தியாசமாக போட்டு இருந்தது. நேரம் கிடைக்கும் போது சொல்லுறன்.
<b> .. .. !!</b>
Reply
#17
Quote:1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?
2. மண் உறுண்டையால் கூனிக்கு இராமன், அடித்ததை பழி தீர்ப்பதற்காகவே, இராமனை காட்டுக்கனுப்ப கூனி சதி செய்ததாக கொள்ளப்படுகின்றது. அந்த மண் உறுண்டை மட்டும் இவ்வளவு து}ரம் நடக்க காரணமா?
3. இராமன் காட்டுக்கு போவதை தசரத மன்னன் தடுக்கவில்லை. என வான்மீகியில் கூறப்படுகின்றது. அவ்வாறு தடுக்காததற்கு காரணம் என்ன?
4. விசுவாமித்திர் இராமனையும், இலட்சுமனையும் அழைத்து சென்றதற்கான காரணம் என்ன?
5. இராவணன் சீதையை கொணடு செல்லும்போது,மண்ணோடு அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அது சாத்தியமானதா? பத்தினி பெண் அவ்வாறு செல்வாளா?
6. மரவுரி தரித்துச் சென்ற சீதை வழியில் செல்லும்போது நகைகளை அடையாளமாகப் போட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. அந்த நகைகள் எங்கிருந்து கிடைத்தன.
7. வானரக் கூட்டம் என கேலி செய்யப்படும் இனம் எது?
8. தன் மனைவியை சந்தேகப்பட்டுத்தானே தீக்குளிக்கச் செய்தான். உலகத்துக்கு காட்டத்தான் என சமாதானம் சொன்னானாம். அப்படி செய்யவேண்டிய தேவை ஏன் அவனுக்கு ஏற்பட்டது.
9. அப்படியாயின் மீண்டும் மனைவியை காட்டுக்கு அனுப்பியதேன்? அங்கே தான் இலவன்,குஷன் பிறந்தார்கள்.

10. இறுதியாக இராமனும், இலட்சுமணும் ஆற்றில் இறங்கித் தற்கொலை செய்யக்காரணம் என்ன?


Quote:1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?



சீதையின் கதை
ஜனகர் சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் இவரை பூமாதேவியின் புதல்வியாக கூறுவதுண்டு. சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நான் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் ராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை ராமன் நானேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை ராமரின் மனைவியானார்.

ராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் லட்சுமணனும் சென்றனர். அப்போது இலங்கை அரசனான ராவணன் சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் தங்க வைத்தான். பின்னர் ராமன் வானரங்களின் துணையுடன் ராவணனை வென்று சீதையை மீட்டார்.

வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன் ராமன் மன்னனானான், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை ராமன் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த ராமன் சீதையை வால்மீகியின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். வால்மீகியில் ஆசிரமத்தில் சீதைக்கு லவன், குசன் என இரட்டை மகன்கள் பிறந்தனர். இரு மகன்களையும தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை ராமனிடம் ஒப்படைத்தாள். பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள். பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.
2. இது ஒரு பொய்க்கதை
3. ராமர் காட்டுக்கு போவதை அவரால் தடுக்கமுடியாது.....காரணம் அவர் ஏற்கனவே கைகேயிக்கு செய்து கொடுத்த வாக்குறுதி மீறமுடியவில்லை ....
4. விசுவாமித்திரர் இவர்களை guide பண்ணினார் என்பதற்கு இதுவரை எது வித ஆதாரங்களும் இல்லை....என்றே தெரிகிறது ..
5. மண்ணோடு அள்ளிச்சென்றதாக நான் இதுவரை அறியவில்லை ...... இருக்கலாம் ...இல்லாமல் இருக்கலாம் .....
6. அந்த காலங்களில் அரச குடும்பங்களில் நகைகளுக்கா பஞ்சம்.....??????????
7. குரங்குகூட்டம்
8. ராமர் எந்த கட்டத்திலும் தன் மனைவியை சந்தேகபட்டதே கிடையாது ....*அப்டி ஏதும் சாட்சிகள் உண்டா* ..... மற்றது ஊர் வாயை அடக்குவதற்கு....
9. ராமர் மனைவியை காட்டுக்கு அனுப்பியதாக சரித்திரம் இல்லை .....
10. ராமரும் லட்சுமணரும் இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை .............
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
<i>மண் உறுண்டையால் கூனிக்கு இராமன்இ அடித்த கதை ஒரு பொய்க்கதை </i>

ஆனால்

<i>ஜனகர் சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார்....
...
பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.</i>

தரமான மெய்க்கதை :? :roll:
Reply
#19
ராமர் எந்த கட்டத்திலும் தன் மனைவியை சந்தேகபட்டதே கிடையாது ....*அப்டி ஏதும் சாட்சிகள் உண்டா* ..... மற்றது ஊர் வாயை அடக்குவதற்கு....


ஊர் வாய அடக்க , மனவியை அப்ப என்ன வேன்டுமானாலும் செய்வார் இந்த ராமன்.என்னெண்டா சீதை அவர் சொத்து.

நல்ல கதை எங்களூர் ராமன்களுக்கு ,அது தான் படிப்பிக்கினம் எங்கட கலாச்சாரத்தை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#20
kurukaalapoovan Wrote:<i>மண் உறுண்டையால் கூனிக்கு இராமன்இ அடித்த கதை ஒரு பொய்க்கதை </i>

ஆனால்

<i>ஜனகர் சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார்....
...
பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.</i>

தரமான மெய்க்கதை :? :roll:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)