| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 47 online users. » 0 Member(s) | 45 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,334
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அறுபடும் வேரும் அந்நியமாகும் உறவுகளும்... |
|
Posted by: shanmuhi - 10-02-2005, 07:14 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (15)
|
 |
<img src='http://img327.imageshack.us/img327/8343/verkalinkarthikbabunov043my.jpg' border='0' alt='user posted image'>
[size=18]<b>அறுபடும் வேரும் அந்நியமாகும் உறவுகளும்</b>
புலம் பெயர்ந்தது வந்ததால் நெஞ்சில்
ஓயாமல் ஓலமிடும் சொல்லோன்னா ஏக்கங்கள்
உறவுளை விட்டுப் பிரிந்துவந்த துயர்கள்
அறுபட்டுப் போன வேராக அகதி வாழ்வில்
அடியெடுத்து வைத்த கதையின் ஆரம்பங்கள்
நிலா வெளிச்சத்தில் கூடி மகிழ்ந்த பொழுதுகள்
கோயில் குளம் என்று கூடி மகிழ்ந்த நினைவுகள்
உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்துண்ட பொழுதுகள்
ஆழம் விழுதாய் ஆறுதலாய் கூடி இருந்த உறவுகள்
அறுந்த உறவுகளாக புலத்தினில்
தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லாமல்
எட்டுத்திசையெங்கும் சிதறி வாழும் எம் இனம்
அறுபட்ட வேறாய் அங்கும் இங்குமாய்
அந்நியமாகிப்போன உறவுகளாய் ஆகிவிட்ட நிலை
<b>அறுபட்ட வேர்கள் மீண்டும் படர்ந்திடும் உறவாய்
எப்போ எங்கே இணைந்த சமுதாயமாய் மலர்ந்திடுமா
அந்நியமாகிப்போன உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்த
தமிழீழத்தில் மீண்டும் துளிர்த்திடுமோ</b>
|
|
|
| பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற |
|
Posted by: sakthy - 10-02-2005, 05:47 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள்
* காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு
ரூபன் சிவராஜா
உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமா கவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. எனவே இதன் அடிப்படை சார்ந்து சில விடயங் களை முதலில் ஆராய்வது பொருத்தமானது.
தமிழர் தாயகப் பிரதேசங்களை துண்டாடும் இலக்கோடு பெரு மெடுப்பில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்ட சிங்கள இனவாத மேலாண்மையின் சூட் சுமங்களையும் காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்ட பின்னணியில் காசாவின் எதிர்காலம் பற்றியதான விடயங் களையும் ஆராய்வதே இக்கட்டு ரையின் நோக்கமாகும்.
நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு
உலகிலேயே நிலத்தை அடிப் படையாகக் கொண்ட கோட்பாட்டினை முன்னிறுத்திய வாழ்வினை பின் பற்றுபவர்கள் வரிசையில் முதலில் யூதர்களும், அடுத்ததாக சிங்களவர்க ளும் விளங்குகின்றனர். தமக்காக இறைவனால் "வாக்களிக்கப்பட்ட பூமி" (தேர்ந்தெடுக்கப்பட்ட பூமி) என் பதே அவர்களின் அந்தக்கோட்பாட்டு வியாக்கியானமாக இருக்கின்றது. பௌத்தத்தைப் காப்பதற்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டதே இலங்கைத்தீவு என்ற வலுவான நம்பிக்கை மகாவம் சம் என்ற சிங்கள வரலாற்று (சிங்கள வர்களின் நலனுக்காக திரிக்கப்பட்ட வரலாறு) நூல் மூலம் பெரும் பான்மை சிங்களவர் மனங்களில் ஆழமாய் பதியலாயிற்று.
ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே அரசு, ஒரே நாடு என்ற கோட்பாடே உண்மையான பௌத்தர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்துவதற்கான அதி உன்னதம் என்ற நம்பிக்கை சாதாரண சிங்கள மக்களின் மனங்க ளுக்குள்ளும் மூளைக்குள்ளும் புகுத் தப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இலங்கை முழுவதும் சிங்களவர் களுக்கே உரியது என்ற கருத்துருவாக் கம் சிங்கள மக்களின் மூளைகளை ஆக்கிரமித்த நிலையில், சிங்களவர் கள் மத்தியில் தமிழர் விரோதப்போக்கு வளர்த்தெடுக்கப்பட்டது. சிறு பிராயத்தி லிருந்தே இந்தக் கோட்பாட்டின் அடிப் படை பாடநூல்கள் ஊடாகவும் மிக நுணுக்கமாகப் புகட்டப்படுகின்றது. மகாவம்சத்தினூாடாக சிங்கள மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்பட்ட இந்த உணர்வே இலங்கையின் இன முரண் பாட்டின் தோற்றத்திற்கு அடிகோலியது, தமிழ்மக்கள் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கும் வழிகோலியது.
தமிழர் தாயகப்பிரதேசங்களை விழுங்கிய சிங்களக் குடியேற்றங்கள்
தமிழர் தாயகப்பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தமிழர்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பதன் மூலம், இலங்கைத் தீவில் சிங்களவர்களின் பரம்பலை அதிகரிக்கச் செய்து, தமிழ்மக்கள் சிறுபான்மையினர் என்ற கருத்தை வேரூன்றச் செய்வதே பௌத்த - சிங்களப் பேரினவாத அரச இயந்திரத் தின் நோக்கமாகும். வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம் பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து, வடக்கினையும் கிழக்கி னையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு குடி யேற்றம் கருவியாய் கைகொடுத்தது.
இந்த அடிப்படையில் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையி லுள்ள நிலத்தொடர்பு, திருகோண மலைக்கும் முல்லைத்தீவுக்குமிடை யிலுள்ள நிலத்தொடர்பு ஆகியவற்றை துண்டிப்பதன் மூலம் தமிழர் தாயகத் தினை துண்டாடும் தொலைநோக்கு டன் சிங்களம் செயற்பட்டது. அதே போல் அம்பாறை - மட்டக்களப்பி னைப் துண்டாடும் சூழ்ச்சியுடன் பற் பல குடியேற்றத்திட்டங்களை அமைத்தது. போராளிகளுக்கும் மக்களுக்கு மிடையிலான தொடர்புகளை வேரறுப் பதற்கும் குடியேற்றம் துணைநின்றது.
குளங்கள் புனரமைப்புத் திட்டம், நீர்ப்பாசனத்திட்டம், விவசாய அபிவி ருத்தித் திட்டம் என்ற போர்வைகளில் குடியேற்றத்திட்டங்களே அபிவிருத்தி செய்யப்பட்டன. தமிழர்கள் மீது தாக்கு தல் நடாத்துவதற்கு சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆயு தங்களும் வழங்கப்பட்டன. இதற்கு நில மற்ற வறிய சிங்கள மக்கள் கடும் போக்கு சிங்கள மேலாண்மையாளர்க ளுக்கு பயன்பட்டனர். தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த இடங்க ளிலிருந்து விரட்டப்பட்டு, அவ்விடங்க ளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்ட தோடு தமிழ்ப்பிரதேசங்களுக்கு சிங்க ளப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, படிப்படியாக சிங்கள மயமாக்கல் விரி வாக்கம் கண்டது. குடியேற்றப் பிரதே சங்களில் புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்கி சிங்களவர்களின் சனத் தொகை பரம்பலை அதிகரிப்பதற் கான திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப் பட்டன.
தமிழ் மக்கள் மீதான படுகொலைகள்
இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக் களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைக ளையும் நோக்கவேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலையில் 200 வரை யிலான தமிழ் மக்கள் படுகொலை, அம்பாறை மாவட்டத்தில் வீரமுனைப் படுகொலை மற்றும் திருகோணமலை தென்னமரவாடி படுகொலை என தமிழர்கள் மீதான படுகொலைப் பட்டியல் நீண்டு செல்கின்றது. மட்டக் களப்பில் மட்டும் 20க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற் றுள்ளன. கிழக்கில் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்குமி டையில் சூழ்ச்சிகள் மூலம் படு கொலைகளைத் தூண்டியும் சிங்களம் வேடிக்கை பார்த்தது.
இன்று சமாதானத்திற்கான காலத் திலும் தொடர்கின்ற புத்தர் சிலை விவகாரங்களையும் நாம் இதன் பின் னணியிலேயே நோக்க வேண்டும். இனக்கலவரத்தை தூண்டுமளவிற்கு இந்த விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது பலரும் அறிந் ததே. திருமலை, வவுனியா, யாழ்ப் பாணம் ஆகிய தமிழர் தாயகப்பிர தேசங்களில் புதிது புதிதாய் தோன்றும் புத்தர் சிலைகள், தமிழ்த்தேசிய எழுச்சியின் உச்சத்தை சகிக்க முடியாத சிங்கள இனவாதத்தின் குரூர மன நிலையை கோடிட்டுக்காட்டு கின்றது. இவ்வாறாக தமிழ் மக்களின் போராட்டத்திற் கான நியாயங்களை வலு விழக்கச் செய்யவும், இலங்கை முழுவதும் சிங்கள வர்களுக்குச் சொந்தமானது என்ற கற்பனைக் கோட் பாட்டுக்கு வலுச்சேர்க்கவும், தமிழ்மக்க ளின் தாயகக் கோட்பாட்டினையும் தன்னாட்சியுரிமையையும் நிராகரிப் பதற்கும், பௌத்த சிங்கள மேலாண்மை ஆட்சியாளர்கள் திட்டங் களை வகுத்து செயற்பட்டனர் - செயற்பட்டு வருகின்றனர்.
குடியேற்றம்- பலஸ்தீனமும் தமிழர் தாயகமும்
போராட்டத்திற்கான நியாயப்பாடு கள் என்ற அடிப்படையில் பலஸ்தீனர்களினதும் தமிழர்களினதும் போராட்டம் பல ஒத்த தன்மைகளைக் கொண் டது. அதேபோல் போராடும் இனத் திற்கெதிரான அடக்குமுறையைப் பிரயோகித்த முறைகளிலும் பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் இஸ்ரேலின் யூதப் பேரினவாதத்திற்கும் ஒத்த தன்மைகளுண்டு. அந்த நோக்கு நிலையில் காசா வெளியேற்றத்தை ஆராயும்போது பல உண்மைகளைத் தெளிய முடியும். பலஸ்தீனர்களுக் கெதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாற்றில் திட்டமிட்ட குடியேற்ற மையங்களை இஸ்ரேல் அகற்றுவது இதுவே முதற்தடைவ என்பதால் இந் நிகழ்வு அனைத்துலக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றது.
கடந்த முப்பது ஆண்டுகளாக பலஸ் தீன மக்கள் தமது விடுதலைக்கான அனைத்துலக ஆதரவினைப் பெற்று வந்திருக்கின்றனர். உண்மையில் ஆதரவு என்பதை விட அனுதாபம் என்பதே பொருத்தமான சொல்லாடலா கும். அனுதாபத்தினை அள்ளிப் பொழிந்தே அம்மக்களுக்கான தீர்வு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டி ருக்கின்றது. (இது தனியாக ஆராய வேண்டிய விடயம்). முதலில் இங்கே காசா வெளியேற்றத்தினை ஊடகங் கள் சித்திரித்த விதத்தினைப் பார்ப் போம்.
காசா வெளியேற்றம் - ஊடகங்களின் சித்திரிப்பு
யூதர்கள் ஏதோ தமது சொந்த தாயகத்தை விட்டு வெளியேறுவது போன்ற தோற்றப்பாட்டினையே ஊடகங்கள் தந்தன. கண்ணீரும் கம் பலையுமான யூத மக்களின் தவிப்புணர்வே ஊடகங்களை ஆக்கிரமித்தன. ஆனால் அந்த எதிர்ப்பும் தவிப்பும் யூத அடிப்படைவாத கடும்போக்காளர்கள் அரங்கேற்றிய நாடகம் என்பதையும் ஊடகங்கள் சில விளக்கத் தவற வில்லை. ஊடகம் என்பது சக்தி வாய்ந்தது. இன்றைய பல்லூடகச் சூழல் இன்னும் அதி சக்தியுடையது. கருத்துருவாக்கம் சார்ந்து மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடிய அச்சக்தி, சில சமயங்களில் அநியாயத்தை நியாயப்படுத்தவும், நியாயத்தை அநியாயமாக சித்திரிக்க வும் பயன்பட்டு வருவது வேதனைக்குரியது.
ஊடகர்கள் காசா குடியேற்றப் பகுதி யில் நின்றிருந்த வேளைகளிலும், ஒளிப்படக்கருவிகள் இயங்கு நிலை யில் இருந்த போதுமே யூதர்கள் உருக் கமான முறையில் கண்ணீர் வெள்ளத்தை மடைதிறந்து விட்டனர் என்றும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. கடும்போக்கு மத அடிப்படை வாதிகள் வெளியேற மறுத்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். சில பலஸ்தீனர்களை படுகொலையும் செய்தனர். இந் நிலையில் வலுக்கட்டயமாகவே இஸ்ரேலியப் படைகள் யூதர் களை வெளியேற்றவும் நேர்ந் தது.
பலஸ்தீன மக்களின் உணர்வு
காசாவிலிருந்து யூதர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பலஸ்தீனர்கள் தமது சொந்த நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட சுதந்திர உணர்வுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை யும் ஊடகங்கள் பதிவுசெய்யத் தவறவில்லை. இளைஞர்கள் தேசியக்கொடிகளை ஏந்திய வாறு மகிழ்ச்சி பொங்க ஓடித் திரிந்தனர். நாற்பது ஆண்டு கால ஆக்கிரமிப்பு, சொந்த வாழ் விடங்களை இழந்து நம்பக்கை யீனங்களுடனும் ஏக்கங்களுடனும் ஏமாற்றங்களுடனும் இருந்த மக்களுக்கு இது பெருத்த மகிழ்ச்சியை தந்திருக்கின்ற தென்றால் அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வே யாகும். எத்தனை தசாப்தங்கள் சென்றாலும் சொந்த வீடு, சொந்த நிலம், சொந்த தேசம் மீதான பற்றுறுதி இம்மியளவும் தணி யாது என்பதற்கு பலஸ்தீன மக்களின் உளவெளிப்பாடு கட்டியம் கூறுகின்றது.
பறிக்கப்பட்ட நிலங்களை மீளப் பெறுவதென்பது அரசியல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் பெறுமதி மிக்க நிகழ்வு எனலாம்.
இது காசா பிரதேசத்தினை சொந்த வாழ்விடமாகக் கொண்டிருந்த மக்க ளுக்கு மாத்திரம் மகிழ்ச்சி தரும் நிகழ் வல்ல. காசாவில் யூதக்குடியேற்றப் பகுதிகளில் மட்டுமல்லாமல், அதனை அண்டிய பகுதி மக்களும் எல்லைப்புற மக்களும் இஸ்ரேல் படைகளின் தாக்கு தல்களுக்கு முகம் கொடுத்தனர். எனவே இனி அந்தத் தொல்லையும் நீங்கியதென்ற மகிழ்ச்சி பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இங்கு கோடிட்டுக் காட்டவேண்டிய விடயம் என்னவெனில், இஸ்ரேல் தேசத்தின் உச்சநிலைத் தொழில்நுட் பத்தையும் படை பலத்தையும் நம்பியே காசா குடியேற்றம் அகற்றப்படுகின்றது (படைகள் உள்ளடங்கலாக) என்று இஸ்ரேல் தலைமையமைச்சர் ஏரியல் சரோன் ஆரம்பத்தில் கூறினார். எனவே மீண்டும் தேவையேற்படின் இந்த இடங்களைப் பிடிப்போம் என் பதே சரோனின் கூற்றில் புதைந்துள்ள எண்ணக்கருவாகும். மீண்டும் இந்த இடங்களில் பலஸ்தீன மக்கள் குடிய மர்த்தப்பட்டால் மாத்திரமே அரை நூற் றாண்டு காலத்திற்கும் மேலாக தமது சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட் டப்பட்டு ஏதிலி வாழ்வில் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு இது பூரண வெற்றியாக நிலைக்கும்.
காசா பிரதேசமானது நிலப்பரப்பில் மிகவும் சிறிய பிரதேசமாகும். இது 45 கி.மீ நீளத்தினையும் 5௭ கி.மீ அக லத்தினையும் கொண்ட பரப்பாகும். எனவே இலகுவில் மீளக்கைப்பற்ற முடியும். தவிர எகிப்தின் எல்லையை அண்டிய கரையோரங்கள் மற்றும் காசாவின் துறைமுகங்களும் தொடர்ந் தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில், பலஸ்தீனர்க ளின் மீள்குடியேற்றமும் இயல்புவாழ் வும் தொடர்ந்தும் கேள்விக்குரியதா கவே இருக்கின்றது. காசாவிற்கும் மேற்குக்கரைக்குமிடையிலானதும், காசாவிற்கும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலானதுமான வாணிப நடவடிக்கைகள், போக்குவரத் துக்கள் பாதிக்கப்படும். இது பலஸ் தீனத்தில் மீளக்குடியேறும் மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவ தோடு காசாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும்.
காலச்சக்கரத்தினை மூன்று தசாப்தங்கள் பின்னகர்த்தி மீள்பார்வை செய்வதன் மூலம் யூதர்களின் திட்டமிட்ட குடியேற்றம் பற்றிய ஆக்கிரமிப்பு வரலாற்றினை அறியமுடியும்.
1967களில் பலஸ்தீன மக்கள் பாரம்பரிய மாக வாழ்ந்துவந்த காசா பள்ளத்தாக்கு மற்றும் மேற்குக்கரை ஆகிய பிரதேசங்களி லிருந்து விரட்டப்பட்டு அங்கெல்லாம் யூதர்கள் குடியேற்றப்பட்டனர். இஸ்ரேல் படைகள் எகிப்திலிருந்து படையெடுத்து காசா பள் ளத்தாக்கையும் ஜோர்டானிலிருந்து படை யெடுத்து மேற்குக்கரையையும் ஆக்கிரமித் தன. காசாவில் 22 யூதக்குடியேற்ற மையங்க ளும் மேற்குக் கரையில் 120 யூதக்குடியேற்ற மையங்களும் அமைக்கப்பட்டன.
கேள்விக்குள்ளான மேற்குக்கரை வெளியேற்றம்
காசாவில் 22 குடியேற்ற மையங்களில் 9000 யூதர்கள் வரையில் வசித்தனர். மேற்குக்கரை யில் 120 குடியேற்ற மையங்களில் 240,000 யூதர்கள் வசிக்கின்றனர். காசாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே என்பதால் வெளியேற் றம் சாத்தியமானது. ஆனால் மேற்குக்கரை யில் இரண்டரை லட்சம் பேர் வரையில் இருப் பதால் வெளியேற்றமென்பது கடினமானதா கவே அமையும்.
தொடர்ந்து மேற்குக்கரை உட்பட பலஸ் தீனப் பகுதிகளின் ஏனைய குடியேற்றங்க ளும் படிப்படியாக அகற்றப்படும் என்ற நம் பிக்கை பலஸ்தீன மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கின்றது. ஆனால் அந்த நம்பிக்கை ஈடே றுவதற்கான சாத்தியக்கூறுகள் கேள்விக்குரி யனவே.
இன்று 38 ஆண்டுகள் கடந்த நிலையில் காசாப்பிரதேசத்தின் யூதக்குடியேற்ற மையங் கள் அகற்றப்பட்டு, இஸ்ரேல் படைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளன. இம்மாதம் (செப்.) 13ஆம் நாள் இஸ்ரேல் படையினர் காசாவிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளன.
ஓகஸ்ட் 15ஆம் நாளிலிருந்து இஸ்ரேல் படைகளும் காவல் துறையினரும் பெருமள வில் குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக இரு வாரங்கள் வெயியேற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. எதிர்ப்பின்றி இஸ்ரேல் அரசின் முடிவினை ஏற்று வெளியேறியவர் களின் புனர்வாழ்வுக்கான பொருளாதார இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. வெளியேற மறுத்தோருக்கு ஓகஸ்ட் 15இற்குப் பின்னர் 48 மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டு, காலக் கெடுவின் பின்பும் வெளியேற மறுத்தோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்பது கடந்த வாரங்களில் பல்லூடகங் களை ஆக்கிரமித்த முக்கிய செய்திகளில் ஒன்று.
வரலாறு சொல்லும் பாடம்
வரலாறு எவ்வாறு நகர்கின்றது என்று பாருங்கள். யூதக்குடியேற்றங்களை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டவர் கடும்போக் காளரான ஏரியல் சரோன். இன்று அவற்றை காலக்கெடு விதித்து அகற்றி குடியேற்றவாசிக ளால் துரோகிப் பட்டமும் சூட்டப்பெற்றிருக் கின்றார். இது வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனும் முதுமொழிக்கு பொருள் தருகின்றது. யூத மக்களுக்கு இனவெறியை யும் மத அடிப்படை வாதத்தினையும் ஊட்டி பெருமைப்பட்டு, அந்த மக்களையும் பெருமைப்படவைத்த ஒருவர், அந்த மக்களாலேயே துரோகியாக வஞ்சிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
காசாவிலிருந்து யூதர்களின் வெளியேற்ற மானது இரண்டு யதார்த்தங்களை வரலாற் றின் முகத்தில் அறைந்து சொல்கின்றது. எத்தனை காலங்கள் கழிந்தாலும் ஒரு மக்க ளினத்தின் பூர்வீக பூமி அந்த மக்களுக்கே சொந்தமென்பது ஒரு யதார்த்தம். சிங்கள ஆட் சியாளர்களால் திட்டமிட்ட முறையில் அபக ரிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சொந்த நிலங் களும் அவர்களிடம் வந்து சேரும் என்ற நம் பிக்கையையும் தருகின்றது. மேற்குக் கரையிலிருந்து கண் துடைப்பிற்காக நான்கு குடியேற்ற மையங்கள் மாத்திரமே அகற்றப்பட் டுள்ளன. எனவே, இந்த நிகழ்வு ஈழத்தமிழர்கள் மேலும் விழிப்பாக இருப்பதற்கான பாடமாகவும் (சிங்களவர்களால் எங்கள் தேசம் இனியும் விழுங்கப்படுவதை அனும திக்க முடியாது என்ற பாடத்தினைத் தருகின் றது) அமைகின்றது என்பதே இரண்டாவது யதார்த்தமாகும்.
நன்றி தமிழ் நாதம்
|
|
|
| சிவாஜி ஓப்பனிங் ஸீன்! |
|
Posted by: SUNDHAL - 10-02-2005, 02:46 PM - Forum: நகைச்சுவை
- Replies (2)
|
 |
தீப்பிடிக்க தீப்பிடிக்க ஒரு ஸீன் டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. இடம் -கேளம்பாக்கம் பண்ணை வீடு! படம்?!..."சிவாஜி'. பரபர டிஸ்கஷனில் படபடவென பேசும் சூப்பர் ஸ்டார், மடமடவென ஷூட்டிங் நடத்தும்(?!) டைரக்டர் ஷங்கர், கடகடவென கவிதை கட்டும் வைரமுத்து, வளவளவென வாயளக்கும் வடிவேலு, "தளபதி'யின் தளபதி சத்ய நாராயணா! ஓ.கே. மீட்டர் போட்டாச்சு! மேட்டருக்குப் போகலாம்!
ரஜினி : ஷங்கர்ஜி நீங்க சொல்லப்போற ஸீன்ஸ் அந்நியனையே அசரடிக்கணும், சந்திரமுகியையே "சலாம்' போட வைக்கணும். ....ம் சொல்லுங்க!
வடிவேலு : ஆமா..ஆமா.. நீங்க சூப்பர் ஸ்டாரு நடிகரு! அவரு சூப்பர் ஸ்டாரு டைரக்டரு! ரெண்டு பேரும் ஜாயிண்டு ஆகிறீங்க! ச்சும்மா பின்னிப் பேன் பாத்துரணும்!
நாராயணா : ஆமா, அண்ணன் படத்துல ஓப்பனிங் சாங்தான் ரொம்ப முக்கியம். அது "பாபா' மாதிரி பிளாக் ஷீப் ஆகிடக்கூடாது. சந்திரமுகி மாதிரி கண்ணுக்குள்ளயும் காதுக்குள்ளயும் நெறைஞ்சு ஓவர்ஃப்லோ ஆகி வழியணும்!
ஷங்கர் : அவ்வளவுதான! ஓப்பனிங்லயே க்ராபிக்ஸ்ல டன் டன்னா பிரம்மாண்டத்தைக் கொட்டி கும்மியடிச்சுடலாம்! எனக்குள்ள இருக்குற டைரக்டர் ஷங்கர் ஓப்பனிங் ஸீனையே ஒம்பது விதமா சிந்திச்சு வைச்சுருக்கான். அதை எனக்குள்ள இருக்குற கிரியேட்டிவ் ஷங்கர் நிறைய கலர் ஊத்தி ஊற வைச்சு ப்யூட்டிஃபுல்லா செதுக்கியிருக்கான்.
வடிவேலு : அய்யோ ரொம்ப ஆசையா இருக்குண்ணே! ஸீனைச் சொல்லுங்கண்ணே! சிலாகிச்சுக் கேப்போம்!
ஷங்கர்: ஓப்பனிங்ல காலை நேரத்துல ஒரு சிவன் கோவிலோட கோபுரத்தை லோ-ஆங்கிள்ல காட்டுறோம். டாப் ஆங்கிள்ல வானத்தைக் காட்டுறோம். ஆனா வானத்துல அங்கங்க க்லவுட்ஸ்! மழை மேகங்கள் இல்ல, இது வெண் மேகங்கள்! சூரியன் ஒருபக்கம் முழு மூச்சோட சுட்டெரிச்சுக்கிட்டிருக்கு! சூரியனோட ஹீட் தாங்காம பக்கத்துல இருக்கற பிரம்மாண்டமான சேரில இருக்குற ஒரு குடிசையில தீப்பிடிச்சிருது. தீ தீயாப் பரவுது! இதை க்ராபிக்ஸ்ல நாம காட்டுற காட்டுல, தியேட்டர்லேயே அவனவனுக்கு சீட் ஹீட் ஆகணும்!
வடிவேலு : சூட்டைக் கிளப்பிட்டிங்கண்ணே! மேல மேல மேலப் போங்க!
ஷங்கர் : இப்ப சிவன் கோவில் தெருவில் தன் வீட்டு மொட்டை மாடியில காய்ஞ்சுக்கிட்டு இருக்குற வத்தல், வடாமை அண்டங்காக்கா திங்க விடாம பாதுகாத்துக்கிட்டிருக்கிற சாதாரண ரஜினி சாரோட கையை மட்டும் காட்டுறோம்!
ரஜினி : வத்தல், வடாம்! இந்த சிச்சுவேஷன் நல்லா இருக்குயா! கமான், மேல சொல்லுய்யா!
ஷங்கர் : தூரத்துல சேரி மக்கள் அலறுற சவுண்ட் அப்படியே உங்க காதை வந்தடைந்ததை விஞ்ஞானப்பூர்வமா காட்டுறோம். நெக்ஸ்ட் உங்க கண்களைக் காட்டுறோம். அதுல தூரத்துல எரியுற தீ ஜ்வாலைத் தெரியுது. இந்தக் காட்சி ரொம்ப இயல்பா வரணும். úஸô, உங்க கண்களில் இருந்து புகை வர்ற மாதிரி ரியலிஸ்டிக்கா காட்டுறோம்!
வடிவேலு: அடி ஆத்தி! காதுக்குள்ளே சவுண்டு இன்கம்மிங்! கண்ணுல இருந்து புகை அவுட்கோயிங்! ரொம்பப் பிரமாதமால்ல இருக்குது! ஆங்...அப்புறம்...
ஷங்கர் : அந்த ஜ்வாலைக் கண்களோட ரஜினி சார் வானத்தை முழு வேகத்தோட பார்க்குறாரு. தன்னோட உதடுகளைக் குவிச்சு வானத்தை நோக்கி காத்தை ஊதுறாரு! வாயில இருந்து "வாயு' புயலா வானத்தை நோக்கிக் கௌம்பி, அங்கங்கே சிதறிக் கிடக்குற மேகங்களையெல்லாம், எலெக்ஷன் டைம்ல சில்லறைக் கட்சிகளெல்லாம் ஒண்ணாச் சேருமே, அந்தமாதிரி ஒண்ணாச் சேக்குது! இப்ப தன்னோட கண்களில் இருந்து ஒரு அரைக்கிலோ "கருணைப் பார்வையை' ரஜினி சார் மேகங்களைப் பார்த்து வீசறாரு! உஜாலாவுக்கு மாறியிருந்த வெள்ளை மேகங்க எல்லாம், டக்குன்னு மழை மேகங்களா கெட்-அப்பை மாத்திக்கிடுது! ரஜினி சார், இப்ப ஒரு சொடக்குப் போடுறாரு, "டம் டமார்'னு ஒரு இடி இடிக்குது! அடுத்த சொடக்கு போடுறாரு. பல கலர்ல மின்னல் வெட்டுது!
வடிவேலு : பல கலர்லயா...ஆத்தாடி!
ஷங்கர் : மூணாவதா ஒரு சொடக்குப் போட்ட உடனே, மழை மானாவாரியா பெய்ய ஆரம்பிக்குது. சேரியில சின்னச் சின்ன சேதாரங்களோட தீ அணைஞ்சிடுது! இதுல ஸ்பெஷலா அந்த மழையோட முதல் சொட்டு அப்படி இறங்கி வந்து ரஜினி சார் நெத்தியில விழுந்து, மெதுவா மெதுவா புருவம் வழியா மூக்குல இறங்கி, உதடுகளைச் சென்றடையுது. உதட்டுல சாரோட சாகசச் சிரிப்பு! அப்படியே முகத்தை முழுசாக் காட்டுறோம்! இங்க ஓப்பனிங் சாங்கை உசுப்பேத்தி விடுறோம்!
நாராயணா : சூப்பரு! பின்னலா இருக்கு! இதுவரைக்கும் வந்த ஓப்பனிங் ஸீன்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு 7அப் குடிச்சு ஏப்பம் விட்டிடுச்சி இந்த ஸீன்!
ரஜினி : வாவ் ஷங்கர்ஜி! வெரி இன்ட்ரஸ்டிங்! வைரமுத்துஜி உங்க திருவாசகத்தை லான்ச் பண்ணுங்க!
வைரமுத்து : அருமையான காட்சி! திறமையான கற்பனை! முழுமையாக வார்த்தைகளை வைத்து விளையாட இங்கே மெல்போர்ன் கிரவுண்ட் அளவிற்கு இடமிருக்கிறது. என்னிடம் தமிழ் தந்த நிறை குடமிருக்கிறது! அள்ளித்தெளிக்கிறேன், நீங்களும் நனையுங்கள்!
வடிவேலு: தொந்தரவுக்கு மன்னிச்சுகோங்க கவிஞர் அய்யா ஷங்கர் சார் முக்கிய மானதை விட்டுட்டீங்களே!
ஷங்கர்:என்னது?
வடிவேலு : ஊருக்கு நல்லது பண்ணுற மழை, ரஜினி சார் காய வைக்கிற வத்தல் வடாமை நனைச்சி, நாசமாக்கி, நாறடிச்சுப்புடும்ல!
ஷங்கர் : இதை நான் யோசிக்காம இருப்பனா! அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கேன். மொட்டை மாடியில இருக்குற ரஜினி சார், கீழே தெருவுல குடையோட நடந்து போய்க்கிட்டிருக்கிற கதாநாயகியை, கொடிக்கயிறை வீசியே, அபாரமா"அலேக்கா' தூக்கி வத்தல், வடாமுக்கு குடை பிடிக்க வைச்சிடுதாருலே!
வடிவேலு : ஆஹ்ஹா...அது! நீங்க இப்ப ஓப்பனிங் சாங்கை ஓட விடுங்க சார்!
வைரமுத்து :
ஓம் ஓம் சிவாஜி!
ஓம் ஓம் சிவாஜி!
உன் கண்கள் ரெண்டும் எரிமலை!
இதயம் முழுவதும் பனிமலை!
நீ சொடுக்குப் போட்டால் வரும் மழை!
சொன்னபடி கேட்கும் கடல் அலை!
வடிவேலு : ஆஹா...கௌம்பிட்டாருல்ல...
ஷங்கர் : ஓ.கே. சார். ஆனா இன்னும் கொஞ்சம் நிறைய மாடர்னா, டிஜிட்டல் வார்த்தைகளெல்லாம் போட்டுத் தாக்குனா சூப்பரா இருக்கும்!
ரஜினி : ஆங்...டிரை பண்ணிப் பார்க்கலாமே!
வைரமுத்து :
லப்டப் சிவாஜி!
லாப் டாப் சிவாஜி!
செல்லுலாய்டு உலகின் தெய்வம் நீ!
டிஜிட்டல் தேசத்தின் தேவன் நீ!
பைபர் ஆப்டிகல் பிதாமகன் நீ
சைபர் உலகின் சாணக்கியன் நீ!
லப்டப் சிவாஜி!
லப் டாப் சிவாஜி!
நாராயணா : நெஞ்சை நக்குது கவிஞரே!
ரஜினி : பிராட் -பேண்ட் நெட் கனெக்ஷன் வேகத்துல வார்த்தைகளை கொட்டிட்டீங்க! சூப்பர்!
ஷங்கர் : ரஜினி சார் டிஜிட்டல் மழையில நனையுற மாதிரி க்ராபிக்ஸ் பண்ணி பின்னிடலாம். வத்தல் வடாம்லாம் கை, கால் முளைச்சு பிரேக் டான்ஸ் ஆடறாப்ல அசத்திடலாம்!
வடிவேலு : அய்யோ....அய்யோ...நெனச்சாலே புல்லா அரிக்குது! பாட்டைப் பாத்துட்டு அவனவன் சொக்கி சொர்க்கத்துக்கு போன எஃபெக்ட்டோட அலையப்போறான்.
ரஜினி : ஓக்கே ஷங்கர்ஜி, இந்த ஸீனைப் பத்தி நான் கொஞ்சம் நிறையவே யோசிக்கணும். அப்பத்தான் பர்ஃபெக்டா வரும்! வர்ட்டா!
(ரஜினி கிளம்ப டிஸ்கஷன் நிறைவு பெறுகிறது
Thanks inamani............
|
|
|
| நீயும் துரோகியா மண்ணென்ணை.... |
|
Posted by: வினித் - 10-02-2005, 02:32 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
<b>சிங்களப் பேரினவாதக் கும்பலுடன் கைகோர்க்கும் 'மகேஸ்வரன்'</b>
[ஞாயிற்றுக்கிழமை, 2 ஒக்ரொபர் 2005, 19:40 ஈழம்] [ம.சேரமான்]
<b>சிங்களப் பேரினவாத கும்பல்களான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தி.மகேஸ்வரன் இரகசிய உறவு வைத்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.</b>
யாழ். குடாநாட்டு மக்களால் 'மண்ணெண்ணெய் மகேஸ்வரன்' என்றழைக்கப்படும் இந்நபர் முன்னர் யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மகேஸ்வரன் செயற்பட்டவிதத்தைத் தொடர்ந்தே அவரது இரகசிய உறவுகள் வெளிப்பட்டு இருக்கின்றன.
அவசரகால சட்ட நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் தன்னையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மகேஸ்வரன் குரல் கொடுத்தார். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க முன்பிருந்த ஆவணங்களை கிழித்தெறிந்து ஆவசப்பட்டார்.
தொடர்ந்து தனது ஐக்கிய தேசியக் கட்சியையும் விமர்சனம் செய்த போது அவருக்கு ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கரிசனம் காட்டினார். தமது கட்சியின் ஐந்து நிமிடத்தை ஒதுக்குவதாக விமல் வீரவன்ச கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
மகேஸ்வரனை விடுதலைப் புலி என்று விமர்சனம் செய்த விமல் வீரவன்சவின் கரிசனை மகேஸ்வரனுக்கு எப்படிக் கிடைத்தது? என்ற கேள்விகள் எழவே மர்ம முடிச்சுக்கள் அவிழ்ந்துள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே விமல் வீரவன்சவுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையே இரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு ஒரு மூன்றாம் நபர் உதவியிருக்கிறார். சிறிலங்கா துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவைப் போல் இருவருக்கும் பொதுவான ஒரு நபர் இந்தத் தரகுப் பணியில் செயல்பட்டிருக்கிறார்.
இதையடுத்து விமல் வீரவன்சவும் மகேஸ்வரனுக்கும் இடையே பலமுறை இரகசிய சந்திப்புக்கள் நடந்துள்ளன. அதேபோல் ஜாதிக ஹெல உறுமயவுடனும் மகேஸ்வரன் இரகசிய உறவை மேற்கொண்டிருக்கிறார்.
ஆறுமுகம் தொண்டமானை ஐக்கிய தேசியக் கட்சி அணியில் இணையவிடாமல் தடுப்பது என்பதுதான் சிங்களப் பேரினவாதிகளால் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட கட்டளை.
இதற்கேற்பவே அண்மைக்காலமாக ஆறுமுகம் தொண்டமானை ஐக்கிய தேசியக் கட்சி அணியில் அனுமதிக்கக் கூடாது என்று மகேஸ்வரன் குரல் எழுப்பி வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியிடம் தொண்டமான் பண பேரம் பேசிவருவதாகவும் ஊடகவியலாளர்களிடம் மகேஸ்வரன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆறுமுகம் தொண்டமான் அந்த அணியில் இணைந்துவிட்டால் கட்சியிலிருந்து வெளியேறுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டதாக தோற்றத்தை உருவாக்குவது என்பதுதான் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய- மகேஸ்வரன் கூட்டணியின் நோக்கம்.
மகேஸ்வரனின் இந்த அதிரடி பேச்சுகளையடுத்து அவரது இரகசிய திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் கண்டுபிடித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்திட்டம் ஒன்றையும் சிங்களப் பேரினவாத கும்பலுடன் இணைந்து மகேஸ்வரன் செயற்படுத்தி வருவதாகவும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஈபிடியின் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது போல் உரிய பாதுகாப்பு மகேஸ்வரனுக்கு வழங்கவும் பேரினவாதிகள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.
www.puthinam.com
|
|
|
| புல தமிழர்கள் தொடங்க வேண்டிய யுத்தம் |
|
Posted by: வினித் - 10-02-2005, 02:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
<b>ஐரோப்பிய தடையும் புலம்பெயர் தமிழர்கள் தொடங்க வேண்டிய 'யுத்தமும்' </b>
உண்மையை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால், பிழையானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற ஆணித்தரமிருந்தால் எவனும் எழுத்தாளனாக, செய்தியாளனாக மாறலாம் என்ற உதாரணம் புதினத்திற்கு மிகப் பொருந்தும்.
குறிப்பாக புதினம் கடந்த ஒரு சில நாட்களில் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட இரண்டு செய்திளும் இவற்றை மாசற விளக்கி நிற்கின்ற செய்திகளும் எனக்கு உந்துதலாயின. முதலாவது ஐரோப்பிய அரசியல்வாதி பற்றிக் குறிப்பிட்டிருந்த ஒரு செய்தி ஆய்வு. மற்றையது லண்டனில் இடம்பெற்ற சிங்களவர்களின் குதூகலக் கொண்டாட்டம் பற்றிய செய்தி.
<b>இரண்டுமே விடுதலைப் புலிகள் ஐரோப்பாவிற்கு பயணம் செய்வதைத் தற்காலிகமாகத் தடைசெய்வதைப் பற்றியன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தவறான தகவல் சென்றடைகிறதே!. தமிழா நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியையே மறைமுகமாக வெளியிட்ட அந்த இரண்டு செய்திகளும் புதிய செய்தியாளர்களின், படைப்பாளர்களின் தகவல்களே என்று அறிந்த போது, தமிழனின் ஆதங்கம் வழிந்தோடி தமிழீழ நதியில் கலக்கும் ஒரு வாய்க்காலாக புதினம் இருக்கிறது என்பதை மட்டும் என்னால் திடமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.</b>
கலப்படமற்ற, எந்தவித பூச்சுமெழுக்குமற்ற அந்த இரு செய்திகளையும் மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். நான் சொல்ல வருகின்ற செய்தி உங்களிற்கும் புரியும். என்றாலும் அந்த இருவருரின் ஆதங்கங்களும் ஐரோப்பாவிற்கு மாத்திரம் பொருந்தவில்லை. மாறாக நான் வசிக்கும் வட அமெரிக்கக் கண்டத்துடனும் அப்படியே பொருந்துகின்றன.
<b>நாங்கள் வசிக்கின்ற நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்ளிற் சிலரும் ஏறக்குறைய அந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரைப் போன்றவர்களே என்பதை நான் நேரடியாகவே உணர்ந்த சம்பவமொன்று கடந்த சில மாதங்களிற்கு முன்பு இடம்பெற்றது</b>.
நான் குடிமகான இருக்கும் இந்த நாட்டில் (ஆம், நான் இந்த நாட்டின் குடிமகன், இந்த குடிபெயர்ந்த நாட்டில் என்னால் நல்ல மாற்றங்களை உண்டு பண்ண முடியும்), எனது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர். நல்ல கல்வியறிவுடைய ஒரு அரசியல்வாதி. சந்தர்ப்பவசமாக சிறிலங்கா சம்பந்தமான அரசியலில் கலந்து விட்டார். காரணம் எமது தொகுதியில் கணிசமான வாக்குகள் தமிழ் வாக்குகள்.
<b>ஆனால் அவரை சிறிலங்காத் தூதுவருக்கு அருகாமையாக கொண்டு சென்று, அவரை இரு நாடுகளிற்குமிடையிலான பாராளுமன்றக் குழவின் உறுப்பினராக்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் நியமிக்கும் அளவிற்கு சிலர் செயற்பட்ட காரணத்தால் அவர் சில வேளைகளில் தாறுமாறாகக் கருத்துச் சொல்வார். ஆனால் அது அளுங்கட்சியின் அக்கறைக்கு எடுபடாமலே பலவேளைகளில் போகும்.</b>
இருந்தாலும் இவர் ஏன் இவ்வாறு செயற்பட்டார் என்பதை அறிவதற்கான ஒரு சந்தர்ப்பம் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஆனால் நான் குடிமகனாக உள்ள இந்த நாட்டில் தேர்தல் நெருங்குகிற படியால் அவர் எனது தொழில்சார் நிறுவனத்தை தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக அணுகியிருந்தார். ஆறுதலாகக் கதைப்பதற்குச் சந்தர்ப்பமும் தந்தார்.
<b>ஏன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய வேறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்று பச்சையாகவே கேட்டேன். அவரும் பச்சையாகவே பதில் சொன்னார். படித்துப் பாருங்கள்... "நான் ஏதோ உலக வரலாற்றில் அல்லது ஏனைய நாடுகளின் விடயங்களில் பூரண அறிவுடையவன் அல்லன், எனக்கு இலங்கைப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல நானும் சும்மா இருந்துவிட்டு, இலங்கையில் இருபகுதியும் சுடுபட்டு செத்துவிட்டு, மிஞ்சுபவர்கள் வரட்டும் என்று இருந்திருக்கலாம். ஆனால் எனது தொகுதியில் கூடுதலான இலங்கையர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் நான் ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன்" என்று கூறினார்.</b>
<b>அப்படியானால் உங்கள் தொகுதியில் உள்ளவர்கள் தமிழர்கள், ஆனால் நீங்கள் சிறிலங்காவின் கருத்துக்களையல்லவா செவி மடுக்கிறீர்கள். அவர்கள் சொல்வது போலல்லவா நடக்கிறீர்கள் என்று கேட்ட போது,
.... உண்மையிலேயே நான் நினைத்தது என்னவென்றால் ஒரு நாட்டின் பிரஜையை அந்த நாட்டு அரசாங்கத்தின் தூதரகமே பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதே... அதையே இந்த விவகாரத்திலும் நான் முற்றாக நம்பியிருந்தேன் ஆனால் போகப் போகத்தான் உண்மை புரிந்தது... என்றார்</b>.
அவரே ஒப்புக்கொள்ளும் போதும், இருக்கின்ற கேள்வியை எறிவதற்கு எனக்குத் தயக்கமில்லை, ஏனென்றால் நான் கேட்கப்போவது நியாயமானது என்பதை விட, நான் கொண்டிருந்த அதே கருத்தைக் கொண்டிருந்த, நான் வதியும் இந்தத் தொகுதியிலேயே வசிக்கின்ற வேறு மூன்று பேரும் அந்தச் சந்திப்பின் போது என்னுடன் இருந்தார்கள்.
...உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் நீங்கள் சிறிலங்காத் தூதுவர் தருகின்ற விருந்துகளில் திளைத்துப் போயல்லவா இவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்ற கருத்து நிலவுகிறேதே... என்று கேட்ட போது,
<b>பாராளுமன்ற அமர்வுகள் உள்ள பொழுதுகளில் இடையிடையே சிறிலங்காத்தூதுவர் தலைநகரிலுள்ள தனது இல்லத்தில் விருந்துபசாரம் வழங்கியது உண்மையே. இதர கட்சிகளிலுள்ள சிறிலங்காப் பிரச்சினையில் அக்கறையுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த இந்தச் சந்திப்புக்களை நாங்களாகவே தவிர்க்குமளவிற்கு அவர்கள் (தூதரகத்தினர்) தங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணித்து அவற்றை செய்யும் படி வேண்டினார்கள். ஆனால் அவை ஏற்புடையதாக இல்லாததை அவர்களிற்கு விளங்கப்படுத்த முயன்ற போது, ஆரோக்கியமாக இருந்த இந்த விருந்துகள் கசப்பாக மாறின என்பதே உண்மை என்றார்.</b>
ஆகமொத்தம், "நக்கினார் நாவிழந்தார்" என்ற தமிழ்ப் பழமொழியைப் பயன்படுத்தி சிறிலங்காத் தூதரகம் எவ்வாறு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு சிறிய உதாரணமே இது. ஆனால் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் போட்ட இன்னொரு குண்டை இனிக் கவணிப்போம்.
நானே தொடர்ந்தேன்... "நல்லது நீங்கள் உணர்ந்து கொண்டுவிட்டீர்கள். இவர்கள் (தூதரகத்தினர்) இப்படித்தான். 1983-இல் அரசமயப்படுத்தப்பட்ட ஒரு இன அழிப்பில் இவர்கள் எங்கள் மக்களின் ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்து, பெண்களின் கற்பைச் சூறையாடி, பலகோடி சொத்தையழித்த போதே நாங்கள் இந்தத் தேசத்திற்குள் காலடி வைத்தோம். இப்போது இங்கேயும் எங்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்க முனைகிறார்கள். பார்த்தீர்களா" என்றேன்.
<b>அவர் என்னைப் புதினமாகப் பார்த்து விட்டுச் சொன்னார்.... "நான் அரசியலிற்கு வந்ததே 1990-க்களின் நடுப்பகுதியில் தான். அதற்கு முன்பு நான் எனது தொழிலில் முனைப்போடு செயற்பட்டு வந்தேன். எனவே எனக்கு நீங்கள் கூறுகிற விடயத்தைப் பற்றித் தெரியாது" என்றார்.
நாங்கள் எதற்காக இங்கே வந்தோம், இந்த நாட்டை இரண்டாவது தாயகமாக ஏற்றோம் என்பது உங்களிற்கு உண்மையிலேயே தெரியாதா என்று கேட்ட போது, அவர் மீண்டும் சொன்னார்.... எனக்குக் கடந்த காலத்தைப் பற்றித் தெரியாது. உண்மையிலே, எனது தொகுதியில் குறிப்பிட்டளவு இலங்கையர்கள் இப்போது இல்லாவிட்டால், இப்போது கூட நான் இதே அக்கறையோடு இருப்பேனோ தெரியாது.... என்றார்.
உண்மையிலேயே அவர் சொன்னவை முத்தான வார்த்தைகள். 22 வருடங்களிற்கு முன் எங்களிற்கு இழைத்த அநியாயங்களை மறைப்பதற்காக இப்போது இடம்பெறுகிற போரை மையப்படுத்தி எங்களைப் பற்றிய தவறான கருத்துரைகளைச் செய்து வரும் சிங்களத்தை விட மீறிய அறிவுப் புலத்தையும், ஆட்பலத்தையும் கொண்டுள்ள நாங்கள் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
நாங்கள் ஏன் புலம்பெயர்ந்தோம் என்பது தெரியாத எனது தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரையும் விடக் குறைவான தரவுகளுடனேயே ஏனைய நாடுகளிலுள்ள வெளியுறவுத் துறை சார்ந்தோரும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும் இருப்பார்கள் என்ற உண்மையை இப்போதே நாம் உணர வேண்டும்.</b>
<b>1983-இல் இருந்த மேற்குலக அரசியற் தலைவர்களோ, அல்லது வெளியுறவுத் துறை மற்றும் இராஜதந்திர வட்டாரத்தைச் சேர்ந்தவர்களோ இப்போதும் அங்கே இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போமானால் அது எமது தவறு. இப்போது செய்திகளில் அடிபடுகின்ற, அல்லது இலங்கைத் தீவு சம்பந்தமான விவகாரங்களைக் கையாள்கின்ற இராஜதந்திரிகளை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இச்சேவையில் சேர்ந்து 10 அல்லது 15 வருடங்களிற்குள்ளேயே இருக்கலாம் என்ற நிலையே உள்ளது.
எனவே இவ்வாறானவர்களிற்கு சிங்களர்வர்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக எம்மை விரட்டியடித்தார்கள், எத்தனை இனக்கலவரங்கள் ஏற்பட்ட என்பதையெல்லாம் மீண்டுமொரு முறை அவர்களிற்குப் புரிய வைக்க வேண்டிய விதத்தில் எடுத்தியம்புவது இன்றைய தேவை. நாங்கள் ஏன் புலம்பெயர்ந்தோம் என்பதை விளக்கினாலேயே எல்லாமும் அதனுள் அடங்கி விடும்.</b>
<b>அத்தோடு, புதினம் குறிப்பிட்ட, லண்டன் ஒன்றுகூடல் போன்றவற்றை முறியடிக்க, தேசியத் தலைவரின் வரிகளிகேற்ப, நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ நாமனைவரும் பழகிக் கொள்ள வேண்டும். உள்ளே எத்தனை வேறுபாடிருந்தாலும் எவ்வாறு அவர்கள் செயற்படுகிறாhர்கள் என்பதற்கு உதாரணமே அந்த லண்டன் கூட்டம்.
ஒரு பொய்யை உண்மையாக்க முயலும் அந்தக் கூட்டத்தைப் பார்த்து நாங்கள் எள்ளவும் யோசிக்கத் தேவையில்லை. மாறாக, நாம் ஏன் புலம்பெயர்ந்தோம், எவ்வாறு ஒடுக்கப்பட்டோம் என்பனவற்றோடு, எமது இனம் மொழிவாரியான இனம், நாம் மதவாதிகளல்ல போன்ற விடயங்களையும் கையிலெடுத்து போரைத் தொடங்குவோம். மேற்கத்தைய தேசத்தவர்கள், அவர்களாகவே புரிந்து கொள்வார்கள் என்றிருக்க இது நேரமில்லை. ஏனேன்றால் தேவை எங்களிற்கே தவிர, அவர்களிற்கு அல்ல.</b>தொடர்புபட்ட செய்திகள்:
<b>ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா?
'ஐரோப்பியத் தடைக்கு உழைத்த' சிறிலங்கா அரசின் 'லண்டன் இரகசியக் குழு'</b>!!
www.puthinam.com
|
|
|
| தமிழ் தேசிய இனம் தமது பலத்தில் |
|
Posted by: mayooran - 10-02-2005, 11:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை)
தமிழர் தாயகத்தின் விடுதலைப் போராட்டம் விடியலை நெருங்கும் காலகட்டத்தில்,
‘தமிழ் தேசிய இனம், தமது தாயகத்தில் தமது பலத்தில், தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கத் தயாராகிவிட்டது’
என்பதை இந்த யாழ் மண்ணிலிருந்து ஸ்ரீலங்கா அரசிற்கும், சர்வதேச நாடுகளிற்கும் தெரிவிக்கவே நாம் இங்கு கூடியுள்ளோம்.
இன்றைய தினம் தமிழர் தம் வாழ்நாளில் ஒரு திரு நாள். அலை அலையாக வந்து, கடலெனத்திரண்டு நிற்கிறது தமிழ் வெள்ளம். பொறுமையின் எல்லையில் நிற்கிறோம். பொங்கி எழுந்து நிற்கும் எமது உணர்வலைகளை உலகமே புரிந்துகொள், என உரக்க கூவி நிற்கிறோம.; நிச்சயமாக இந்தமுழக்கம், காற்றோடு கலந்து, உலகின் காதுகளை எட்டும். உண்மையை உலகம் புரிந்துகொள்ளும். உலகமே உனது மனச்சாட்சியைத் திற என இந்த மக்கள் வெள்ளத்தின் முன்னால் கோருகின்றேன்.
தமிழ் தேசியப் போராட்டம் தானாக உருவானது அல்ல. உருவாக நிர்ப்பந்திக்கப்பட்டது. எமக்கென ஒரு தனியரசை வரலாற்றில் கொண்டிருந்தவர்கள் நாம். ஆனால், 1948ல், ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரம், சிங்களவருக்கு மாற்றப்பட்டது. இத் தீவின் சுதந்திரம், சிங்;கள இனத்தின் மேலாண்மையை அங்கீகரிப்பதாகவும், தமிழரின் இறைமையைப் புறந்தள்ளுவதாகவும், நசுக்குவதாகவும் அமைந்தது. இந் நிலையில், தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்துவதற்காக போராட்டத்தினை தொடங்கினர்.
ஒரு நாட்டின் இறைமை என்பது, அந்த நாட்டு மக்களிடமே உள்ளது. அதே போன்று, ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு என்பது, அந் நாட்டின் அனைத்து மக்களுடன் மேற்கொள்ளும் ஒரு ஒப்பந்தமாகும். இதுவரையில் இலங்கைத் தீவில் உருவாக்கப்ட்ட எந்த ஒரு அரசியல் அமைப்பையும் தமிழ் மக்கள் அங்கீகரிக்கவில்லை. ஒருபோதும் நாம் ஏற்றுக்கொண்டதுமில்லை. ஆகையால், சிங்கள அரசுகளால் ஆக்கப்பட்ட அரசியல் அமைப்புகள், எமது மக்களின் இறைமையைக் கொண்டதல்ல. எமது இறையாண்மை இப்போதும் எம்மிடமே இருக்கின்றது – சிங்கள அரசியல்; அமைப்புக்குள் எங்கள் இறைமை சென்றுவிடவில்லை.
நாம் முயற்சித்தது எல்லாம், எமது தனித்துவத்தை இழக்காது, சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழவே. இந்த விருப்பத்தின் அடிப்படையில், எம்முடைய முன்னைய தமி;ழ் அரசியல்த் தலைவர்கள், தழிழ் மக்களின் இறைமையை பிரதிபலிக்கின்ற அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற, ஸ்ரீலங்கா அரசுடன் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பேச்சு வார்த்தைகள் நடத்தினர். எனினும், அவை எல்லாம் தோல்வியடைந்து, தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றப்பட்டனர். எமது அடிப்படை உரிமைகள் ஏறி மிதிக்கப்பட்டன. எல்லா வகையான வதைகளையும் சிங்கள அரசுகள் செய்து பார்த்தன. ஆனால், தமிழ் தேசிய இனம் என்ற ஆத்மாவை, சிங்கள அரசால் அழிக்க முடியவில்லை. அதை அழிக்கவும் முடியாது – ஏனெனில், இன்று, தமிழ் மக்களாகிய எங்களிடம், ஏமாற்ற முடியாத, பலமுள்ள எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய, வலுவுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளோம்.
நண்பர்களே, நாங்கள் ஆயுதத்தின் மீது அன்பு கொண்ட இனமல்ல. வன்செயல்களில் காதல் கொண்ட இனமுமல்ல. ஆனால், உரிமைகளின் மீது மோகம் கொண்ட இனம், எமது தமிழினம். அந்த தணியாத தாகம் எம்மைத் தடியெடுக்க வைத்தது. இனிமேலும் முடியாது என்ற நிலையில் ஒரு இனம் செய்யக் கூடியது இது தான். வரலாறு பூராவும் உலகில் இதுதான் நடந்திருக்கின்றது. அதனை உலகம் அவ்வப்போது அங்கீகரித்தும் உள்ளது.
எமது மக்களிற்கு மனிதாபிமான ரீதியில் உதவி வழங்க என, சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்ததின் காரணமாக உருவாக்கப்ட்ட, ஒரு மிகச் சிறிய பொதுக்கட்டமைப்பையும் கூட, சிங்கள பேரினவாதம், சிங்கள அரசியலமைப்பை ஆயுதமாக பாவித்து முடக்கியது.
பசித்தவனுக்கு புசிக்கக் கொடுக்கவே, தடுக்கும் மனிதாபிமானம் அற்ற சிங்கள பேரினவாதம், தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யுமா என்பதை சர்வதேச சமூகம் சிந்தித்துப் பார்த்து, தீர்க்கமாக, உறுதியானதும் இறுதியானதுமான முடிவை எடுக்க வேண்டும் எனக் கூறி விடைபெறுகின்றேன்.
ஆயுதம்.com
ஜீ.ஜீ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
|
|
|
| கண்கள் கலயை நோக்கட்டும் |
|
Posted by: narathar - 10-02-2005, 11:23 AM - Forum: (தீவிர) இலக்கியம்
- Replies (111)
|
 |
<img src='http://img156.imageshack.us/img156/9746/normal05septparismatch0024uv.jpg' border='0' alt='user posted image'>
<b>பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்
மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை
தெப்பலாகி
உள்ளாடைகள் தெரிய
பஸ்சினுள் ஏறுவது
தமிழ்க்கலாச்சாரமல்லவென
வெளியே முழங்கும் இடியைவிட
உரத்துக் குரல்கள்
எழும்பத் தொடங்குகின்றன
அவள்;
கோடையில் 'மட்டும்'
இப்படி மழையில் சிக்கியதால்
உள்ளாடைகள் தெரிகின்றன
எல்லாப் பருவங்களிலும் அல்ல
என்கின்றாள்
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்
முன்பு
பஸ் நெரிசலுள்
பிருஷ்டம் உரசி சேட்டை செய்து
அவளிடம் அடிவாங்கியவன்
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென
உற்றுப்பார்த்தபடி
இவள் வின்ரர் காலத்திலும்
இப்படித்தான் உடையணிபவளென்றபடி
அவளின் கடந்தகாலத்தை
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்
அனைவருக்கும் முன்னும்
அவளது ஆடைத்தெரிவுகள்
தங்களது விரல்நுனியில்
இருக்க விரும்பும் அவதானத்தில்
மதவாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல
இவர்கள்
இப்படி
உள்ளாடை தெரிய பஸ்சினில் ஏறினால்
எங்கள் 'குடும்ப'ப்பெண்கள்
எப்படி பஸ்சில் பயணிப்பதாம்;
கவலைப்படுகிறது இன்னொரு கூட்டம்
மெல்லிய குரலில்
அவள் கூறுகின்றாள்;
'கோடைகாலத்தில்
வெயிலுக்கேற்ற ஆடைகள் அணிவது
எனது தெரிவு
அப்படியே
உங்கள் குடும்பப்பெண்களுக்கும்
ஓர் தெரிவு இருக்கலாம்.'
கோடையில்
மழைபெய்யும் பொழுதில்
குடையுடனோ
குடையின்றி நனைந்தபடியோ
பஸ்சினுள் ஏறுவது
அவளவள்களின் விருப்பு
உங்களது வாய்கள்
எதையாவது மெல்ல ஆசைப்படின்
மழையில் நனைந்தபடி எவளாவது ஏறுகையில்
உங்கள் காற்சட்டைகளுக்குள் விறைத்ததை
அவள்களுக்குப் பிடிக்காதபோதும்
சனநெரிசலில் உரசிய வக்கிரங்களை
மறைக்காமல் பேசத்தொடங்குங்கள்
இப்போதே.</b>
http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html
|
|
|
| புதிய MP3 பாடல்களை |
|
Posted by: sinnappu - 10-02-2005, 10:33 AM - Forum: இணையம்
- Replies (25)
|
 |
<b>பிள்ளையள் புதிய எம் பீ 3 பாடல்களை எங்கே தரவிறக்கம் செய்யலாம் உதவி செய்யுங்கோப்பா
புண்ணியமாபோகும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: </b>
|
|
|
| தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி |
|
Posted by: narathar - 10-02-2005, 09:43 AM - Forum: நூற்றோட்டம்
- Replies (2)
|
 |
என்னைக் கவர்ந்த நல்ல எழுத்தாற்றல் உள்ள இன்னொரு ஈழத்து வலைப் பதிவாளர் டிசே தமிழன், மேரி ஆனின் கதைகளை விமர்சித்துள்ளார் ,எல்லாத்தையும் இங்க போட ஏலாது மிச்சத்தை அவரது பதிவிற்குச் சென்று வாசிக்கவும், நல்ல பதிவு.....
தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி
Bodies in Motion by Mary Anne Mohanraj
"...Even in the middle of war, children were being born here, life was going on. Without sugar, sometimes without even rice, going on anyway, despite the grief and the pain. Sometimes, the blood on the sheets was only from a bridal night, sometimes, there was celebration, there was pleasure, there was joy."
-Mary Anne Mohanraj (Wood and Flesh)
(1)
இந்தத் தொகுப்பில் மேரி ஆன் மோகன்ராஜின் இருபது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளாக இருப்பினும் ஒரு நாவலுக்குரிய தன்மையுடன் சில பாத்திரங்கள் பல்வேறு கதைகளில் பல்வேறு சூழலில் மீண்டும் மீண்டும் வருகின்றன. 'கந்தையா', 'வல்லிபுரம்' என்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட இரு குடுமபங்களின் பிள்ளைகளின் கதைகளும், பிறகு அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் கதைகளும் கூறப்படுகின்றன. கதைகள் 1939ல் இருந்து 2002 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், கொழும்பில், அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் நடப்பதாய் விரிந்தபடி இருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் இலகுவில் வாசிப்பவருக்கு புரியவேண்டும் என்பதற்காய் கதைகள் ஆரம்பிக்க முன்னர் குடும்ப மரம் (family tree) தரப்பட்டிருக்கின்றது.
தொகுப்பிலுள்ள இருபது கதைகளில் ஆகக்ககுறைந்தது பத்துக் கதைகளாவது நல்ல கதைகள் என்று துணிந்து கூறலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் (முக்கியமாய் பால்யநதி), தங்கமணியின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஒருவிதமான அமைதியும் நிதானமும் படர்கின்றமாதியான வாசிப்பை மேரி ஆனின் படைப்புக்களிலும் பெற்றிருந்தேன். எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கூற முடியாத இரகசியங்கள் கசிந்தபபடியேதானே இருக்கின்றன. அவை குறித்து அறிய ஆவல் இருப்பினும் அவ்வாறு அறியமுற்படுகையில் தமது குடும்ப அங்கத்தவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் தகர்ந்துவிடுமோ என்ற பயம் இரகசியங்களை இரகசியங்களாவே வைத்துப் பார்க்கவே மனித மனங்களை விரும்பச் செய்கின்றன. இந்தக் கதைகளிலுள்ள கதாபாத்திரங்களும் தமக்குரிய தனிமைகளுடன், நம்பிக்கைகளுடன், துரோகங்களுடன், இரகசியங்களுடன் நடமாடுகின்றன. கதைகளை வாசித்துக்கொண்டுபோகும்போது எந்த பாத்திரத்தின் மீதும் மூர்க்கமாய் கோபப்படமுடிவதில்லை. ஏன் இப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற இயலாமையுடந்தான் பார்த்துக்கொண்டிருக்க முடிகின்றது. 'உபபாண்டவத்தில்' வருவதுபோன்று, அந்த அந்தப் பாத்திரங்கள் உரையாடத் தொடங்கும்போது அவை தமக்கான நியாயங்களையும், அந்தப் பாத்திரம் குறித்து பிற பாத்திரங்கள் பேசும்போது வேறுவிதமான பார்வைகளையும் வாசிப்பவருக்குத் தருகின்றது. முக்கியமாய் மேரி ஆன் எந்தப் பாத்திரத்தின் மீதும் தனது பார்வையை (ஜெயமோகன் எழுத்துக்களில் இருக்கும் முக்கிய பலவீனமே இதுதான்) திணிக்காமல் அவற்றை அவர்கள்பாட்டில் பேசவிடுவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம். இந்தக் கதைகளில் என்னை(உடைந்தபோன பல 'நான்'களை), உங்களை, உஙளுக்குத் தெரிந்த பலரைப் பார்த்துக்கொண்டே போகலாம். குடும்பஙகளில் சாத்தியமாயுள்ள Heterosexual, Homosexual, Adultery, Teen Age Sex என்று எல்லாவிதமான உறவுகளும் பேசப்படுகின்றன. எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் காமம் ஒரு சிற்றாறைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றது. அது பலவேளைகளில் உறவுகளை பிணைப்பதாயும் (Bond?) சிலவேளைகளில் உறவுகளை முறிப்பதாயும் அமைகின்றது.
(2)
Mary Anne Mohanraj (2001)
பிள்ளைகளின் பிள்ளைகளைப் பற்றிக் கூறும் கதைகளில், Minnal in Winter கதை மிகவும் பிடித்த ஒன்று. பத்தொன்பது வயது மின்னல், புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றார். அவரது தாயார் கொழும்பில் இருந்தாலும் அவரது சித்தியொருவர் மாசூஸட்டில் இருக்கின்றார். வளாகத்துக்குள் தங்கியிருக்கும் மின்னலுக்கு சேர்ந்து படிக்க ஆரம்பிக்கும் ஸ்பானிய பெடியனுடன் காதல் முகிழ்ந்து, உறவின் நீட்சியில் கர்ப்பமும் தரிக்கின்றார். இதே சமயம், கொழும்பிலிருக்கும் தாய் மின்னலுக்கு நல்லதொரு திருமணப் பொருத்தம் வந்திருக்கின்றது, படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வருக என்று கடிதம் எழுதுகின்றார். இங்குள்ள உறவு குறித்து அம்மாவுக்கு கூறுவதா அல்லது அம்மா பார்த்த பையனைத் திருமணஞ்செய்வதா என்று மின்னல் குழம்பத்தொடங்குகின்றார். அந்த நேரத்தில் மாசூஸட்டில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போகின்றார். அவரது சித்தி ராஜியும் அந்தச்சமயத்தில் கர்ப்பிணியாய் இருக்கின்றார். இறுதியில் அம்மாவின் முடிவுக்கு உடன்படுவதில்லை எனவும், அதேசமயம் அந்த கருவைத் தாங்குவதில்லை எனவும் முடிவு செய்து தொடர்ந்து படிக்கப் போவதாய் கதை முடியும். இந்தக் கதை நகர்ந்துகொண்டு போகும் விதம் மிக அற்புதமானது. ஒரு பெடியனோடு படித்து கொண்டிருக்கும்போது ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தன்னை முழுதாய் எடுத்துக்கொள் என்று தன்வசம் இழப்பது....காதலில்/காமத்தில் கிறங்கிக்கிடப்பது...பிறகு கர்ப்பந் தரிக்கும்போது தன் எதிர்காலத்தை நினைத்து வருந்துவது.... என அனைத்தும் மிக இயல்பாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கதையின் ஓரிடத்தில் மின்னல் யோசிப்பதாய் வரும், 'அம்மா இப்படி ஒரு பெடியனுக்கருகில் இருந்தால் எப்படியான உணர்ச்சிகள் பீறிட்டெழும் என்று சரியாக நீ எனக்குக் கற்றுத்தந்து மனந்திறந்து விவாதித்திருந்தால், இன்று இப்படியான சிக்கலில் மாட்டாமல் கவனமாயிருந்திருப்பேனென' என்று எல்லாம் அந்தப் பாத்திரம் யோசிப்பது பற்றி, ஒரு பதின்மவயதுப்பெண்ணின் மனநிலையில் இருந்து அழகாய் மேரி ஆன் எழுதியிருபபார். மின்னல் குழம்புபோது நாங்களும் குழம்பி, படிப்புத்தான் அனைத்தையும் விட தன் சுயத்தைப் பிரதிபலிக்கப்போகும் விடயம் என்று தீர்க்கமாய் முடிவெடுக்கும்போது வாசிக்கும் நமக்குள்ளும் ஒருவித அமைதி படர்ந்துவிடுகின்றது.
http://djthamilan.blogspot.com/2005/09/blo...1566016861.html
|
|
|
|