| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 140 online users. » 0 Member(s) | 138 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| வணக்கம் நான் யது |
|
Posted by: Jathu - 10-04-2005, 07:51 AM - Forum: அறிமுகம்
- Replies (34)
|
 |
03.10.2005
வணக்கம்
நான் யது
யாழ்கள உறவுகளே உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்வடைகின்றேன்
நன்றி
யது
கிளிநொச்சி
ஈழம்
|
|
|
| சிற்றுவேஷன் சோங்ஸ் |
|
Posted by: MUGATHTHAR - 10-04-2005, 06:09 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (17)
|
 |
[size=18]<b>சிற்றுவேஷனுக்கு சோங் போட உங்களுக்குத் தெரியுமா?</b>
இதில் சில குறிப்பிட்ட சிற்றுவேஷனுக்கு எப்பிடியான பாட்டுக்கள் பொருந்தும் எண்டு அந்த பாடலில் ஒரு 2வரி எழுதுங்கள் பாப்பம் பிறகு நீங்களே அடுத்த பாடலுக்குரிய சிற்றுவெஷனை எழுதி விட வேணும் பாடல்கள் வார்த்தைகள் மாறியும் இருக்கலாம் களத்திலை நடக்கிற விசயங்களுக்கும் சோங் போடலாம் சரி வாங்க நிகழ்ச்சிக்குப் போவம். . . . . . .
1. சின்னப்பு நல்லாப் போட்டுட்டு தள்ளாடிய படி வீட்டுக்கு வாறார் சின்னாச்சி அவரைக் கண்டதும் கண்களில் அனல் பறக்க அவரை நெருங்கிறா இந்த நிலையில் சின்னப்புவின் பாடல் எப்பிடி இருக்கும்;. . . . .
<b>ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. .
ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. .
என் கன்னத்திலை கை வைச்சா - அழுதிடுவன்;
என் நெத்தியிலை கை வைச்சா - விழுந்திடுவன்
என் மூக்குமேலை கை வைச்சா - மயங்கிடுவன்;;
என் உதட்டிலை கை வைச்சா - நாறிடுவன்
அட அந்த இடம் கை வைச்சா - .. . . .ஏய். . .ஏய் . . </b>
2. தலயின் குதிரைகள் திடீரென அவருக்கு சொல்லாமலே பறந்து போய்விட்டன இதைக் கேள்விப்பட்ட தல புலம்புகிறார் எப்பிடி? . . . . . .
<b>அது வேறொண்றுமில்லையடி கிளிக்கு(குதிரை) இறக்கை முளைச்சிடிச்சு ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு. . .
பாலூட்டி வளர்த்த கிளி பழங் கொடுத்து பாத்த கிளி. . . . . .
நான் வளத்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு .. . . .
.( கிளி வாற இடத்தில் குதிரை என போடவும்)</b>
3. சாத்திரியும் யாழ் களத்தில் ஜரோப்பிய வலத்தைப் பற்றி எழுதப் போய் 10 வந்து வெட்டு வெட்டெண்டு வெட்டி ஆள் நொந்து நூலாகி இருக்கிறார் அப்போது அவர் பத்தைப் பார்த்துப் கேக்கிறார்; . . . . .
<b>சாத்திரி : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உண்மை எழுதப் கூடாதா?
அந்த நேரம் இந்த நேரம் வெட்டு விழ வேணுமா?
பத்து : கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதே
அந்த நேரம் அந்தி நேரம் கத்தி சொல்லுக் கேக்காதே. . . </b>
4 .இராமரை காட்டுக்கு போக புறப்படுகிறார் அப்ப சீதையும்; அவருடன் வருவதாகக் கூறுகிறாள்; இராமர் மனசுக்குள் நினைக்கிறார் சா. காட்டுக்கை வேறை பிகருகளோடை தனிய ஜாலியா இருந்திட்டு வருவம் எண்டு பாத்தால் இவள் விடமாட்டாள் போல கிடக்கே எப்பிடியும் வெட்டிவிடவேணும் இந்த நேரம் குதாகலத்துடன் பாடினார் எண்டால் . .
<b>இராமர் : நான் நன்றி சொல்வேன் எந்தன் சித்திக்கு
என்னை வீட்டைவிட்டு போகச் சொன்னதுக்கு
நான் நன்றி சொல்லச் சொல்ல ஆசை மெல்ல மெல்ல
என்னை இழுப்பதென்ன. . . . </b>
5. .இது உங்களுக்குரியது .டண்ணின் புலநாய் பகுதியில் இருந்த சில தகவல்கள் திருட்டுப் போய்விட்டன இந்த செய்தி; டண்ணுக்கு தெரிவிக்கப் படுகிறது டண்ணின் உள்ளக் குமுறல் பாட்டாக வருகிறது. ஏப்பிடி சொல்லுங்கோ பாப்பம் . . . .
|
|
|
| அநுராவுக்குப் பதிலாக முஸ்லிம் |
|
Posted by: mayooran - 10-04-2005, 04:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் பிரேரிக்கப்பட்டிருக் கும் அநுராபண்டாரநாயக்கா, தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் பிரசாரப் பணிகளில் ஈடுபாடுகாட்டாமல் ஒதுங்கி நிற்கிறார். இதனால், அவரது இடத்துக்கு சிறுபான்மையினரான முஸ்லிம்களின் சார்பில் ஒருவரை முன்னிறுத்தி பிரசாரப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்து சுதந்திரக் கட்சிக்குள் தீவிரமடைந்து வரு வதாகத் தெரிகிறது.
சுற்றாடல், இயற்கை வன வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி பிரசாரப் பணிகளை முன்னெ டுக்கும் திட்டத்துக்கு ஆதரவு தேடும் வேட் டையில், தற்போது கட்சிக்குள் பலமடைந்து வரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதர வாளர் அணி இறங்கியிருப்பதாகக் கூறப்படு கின்றது.
கட்சியின் கொள்கை நிலைப்பாடு மற் றும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் ஆகியவை தொடர்பான விடயங்களில் கட்சித் தலைவி யும், ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங் கவுக்கும், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது தெரிந்ததே.
ஜனாதிபதியின் சகோதரரான வெளிவிவ கார அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா இவ் விடயத்தில் ஜனாதிபதி பக்கமே நிற்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜ பக்ஷவைத் தெரிவுசெய்துள்ள சுதந்திரக் கட்சி, தேர்தலில் அவருக்கு ஜோடியாக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அநுரா பண்டார நாயக்காவை நிறுத்தியுள்ளது என்பது தெரிந் ததே.
ஆனால், சந்திரிகா மஹிந்த ராஜபக்ஷ கருத்து முரண்பாட்டில் சந்திரிகா பக்கம் நிற் கும் அநுரா பண்டாரநாயக்கா, அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யாமல், பிரசாரப் பணிகளைப் பகிஷ்கரித்து வருகிறார். தற்போதைய வேளையை வெளிநாடுகளில் கழித்துவருகின்றார்.
தேர்தலில் பிரதமர் மஹிந்தவுக்கு ஜோடி யாகக் கட்சியால் நிறுத்தப்பட்டவர் பிரசாரப் பணிகளைப் புறக்கணித்துவருவது மஹிந்த அணியினரை விசனத்துக்கும் சீற்றத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றதாம்.
இதனால் அநுராவின் இடத்துக்குப் புதிய வர் ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்து வதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளை முடுக்கி, உற்சாகப்படுத்தலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இப்பொறுப்புக்குச் சிறுபான்மையினரான முஸ்லிம் ஒருவரை நிறுத்தினால் இலங்கை முழுவதும் சிதறி வாழும் முஸ்லிம்களின் முழு வாக்குகளையும் அந்த முஸ்லிம் பிரமுகரின் தேர்தல் ஜோடியாக நிற்கும் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு அள்ளி எடுக்கலாம் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மூத்த உறுப்பினரும், இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வு காண் பதில் அதிக ஆர்வம் காட்டுபவருமான அமைச் சர் ஏ.எச்.எம்.பௌஸியை பிரதமர் வேட்பாள ராக நிறுத்துவதன்மூலம் தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பேரினவாதப் போக்குக் குற்றச்சாட்டையும் ஓரளவுக்கு நிவர்த்தி செய்யலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனராம்.
தங்களது இந்த யோசனைக்குக் கட்சிக்குள் ஆதரவு தேடும் வேட்டையிலும் அவர்கள் இறங்கியிருக்கின்றனர் என்று கூறப்படுகின் றது.
uthayan
|
|
|
| சிவாஜி எனும் இமயம் |
|
Posted by: Birundan - 10-03-2005, 09:13 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
நடிகர் திலகம்
உனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையாம்!
குடகு மலையைக் கடந்தாயா என
இமய மலையைக் கடந்தவனிடம் கேள்வி!
பிரான்சுக்கும் எகிப்துக்கும் தெரிந்த உண்மை -இங்குள்ள
பீஷ்மர்களுக்கு மட்டும் தெரியாதாம்!
சிதம்பரனார் செல்ல மகன்
சினிமா என்பதையும் மறந்து
"ஐயோ அப்பா!" என்றரற்றினாராமே! -இந்த
சிறப்புக்கு முன் ஆஸ்கார் எந்த மூலைக்கு?
விண்ணுலகில் கூட...
சிவனும் ,சிதம்பரனாரும்
கட்டபொம்மனும் ,கர்ணனும்
அப்பரும் ,அம்பிகாபதியும்,
ஜார்ஜ்-ம் ,சாக்ரட்டீசும்
கண்ணாடி பார்ப்பதற்கு பதில்
உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே?
*************************************
நன்றி> கணியம்
|
|
|
| முதிர் காளையர் |
|
Posted by: Birundan - 10-03-2005, 08:15 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
காளையர் விடியல்!(விடியல்காளை)
தாய்க்குத் தலைமகனாகப் பிறந்துவிட்டால் சொந்த ஊரோ அந்நிய தேசமோ, குடும்பத்தின் அத்தனை சுமைகளும் அவன் தலையில்தான். பெண் சுதந்திரம் பேசும் பெண்களும் எதோ ஒரு வகையில் அண்ணன்களை சுரண்டுவது நம்மூர் நியாயம். அங்கு பெண் உரிமை முன்னிலையில் இருக்காது. கடமை, அன்பு என்று ஏகப்பட்ட சாக்குப்போக்குகளின் போர்வையில் உறிஞ்சல்கள் இருக்கும். `சீர் கொண்டு வந்தால் சகோதரி’- மிக மிக உண்மை. அங்கே பெண்மை சுயநல பூதம்.
பெற்றோர்களின் நிலைமை, ஒவ்வொரு குடும்ப சூழ்லைப் பொருத்து ஓரளவு சுயநலமாகவே வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. வலியோரிடமிருந்து பெற்று வறியவர்க்கு கொடுப்பது தமது கடமை என்றே நினைக்கிறார்கள். பணத்துக்காக வேண்டுகோள் விடுக்கும்போதும், தன் மகனுக்கு பிடித்த சீடை, முறுக்கு இன்ன பிற பொருட்களைத் தெரிந்தவர்கள் மூலம் கொடுத்தனுப்புவதும், தங்களின் guilty conscience-ல் இருந்து ஓரளவு தேற்றிக் கொள்ளவே!
முதிர் காளையர்( முதிர் கன்னியரின் ஆண்பால்) என்ற ஜனத்தொகை அதிகமாவது இந்த எதிர்பார்ப்புகள் பாசம் கடந்து, பணம் ஒன்றே குறிக்கோளாகும் போதுதான். `உன்னை என்ன பாடு பட்டு படிக்க வைத்தேன்’ என்று இவர்கள் மறுபடி மறுபடி புலம்ப வேண்டியதில்லை. அது மனதில் பதிந்த மகன்கள்தான் இந்த மாதிரி தங்களின் சுகங்களைத் துறந்து வீட்டுக்காக வாழ்வது. ஓரளவு எதார்த்த சிந்தனாவாதிகள் தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறார்கள். என்ன , கொஞ்ச நாள் தங்கள் மகன் சொல்லாமல் சட்டைகாரியையோ சல்வார் கமீஸையோ `சேர்த்துக்கிட்டான்’னு புலம்பிட்டு,மறுபடியும் தங்கள் விண்ணப்பங்களைத் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆதலால் புதிதாக புலம்பெயர்ந்த காளையரே விழிப்புடன் வாழ்வீர்! ஆத்துலே(வீட்டில்) போட்டாலும், ஆத்திலே (ஆறு) போட்டலும் அளந்துதான் போடோணும்!!!
நன்றி>குரல்
|
|
|
| விமானத்தில்... |
|
Posted by: best_net - 10-03-2005, 07:33 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
அடடா...விமானத்தில் கூட போவது ரொம்ப சிக்கலாயிருக்குது..
நேற்று இரு நாடுகளில் நடந்த சிக்கலைப் பாருங்களேன்..
இங்கே.......
சிறிலங்கா ஏயார் லைன்சுக்குச் சொந்தமான லண்டன் விமானம் வெடிகுண்டுப் புரளியால் மீண்டும் கொழும்பிற்கே திரும்பியது.
இது குறித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய காவல்துறை அதிகாரி அசோக்க விஜயதிலக்க கூறுகையில்இ விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட திவீர சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றார்.
லண்டன் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அனாமதேய தொலைபேசித் தகவல் வந்ததையடுத்து விமானத்தை கொழும்பிலேயே மீண்டும் தரையிறக்க இதையடுத்து பாதுகாப்புப் பிரிவினர் முடிவு செய்தனர் என்று கொழும்பு விமான நிலையப் பேச்சாளர் ரூவினி ஜயசிங்க கூறினார்.
வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்ட யுஎல் 510 விமானத்தில் 257 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
-----------------------------
அங்கே...........
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் ‘கத்தார் ஏர்வேஸ்’ நிறுவன விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஒரு எலி விமானத்துக்குள் பாய்ந்து ஓடியது. உடனே பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டுஇ அந்த எலியை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 13 மணி நேரம் ‘சல்லடை’ போட்டு தேடியும் எலியை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதனால் பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டுஇ விமானம் புறப்பட்டுச்சென்றது. எலி விமானத்தில்தான் இருக்கிறதா? அல்லது வெளியேறிவிட்டதா? என்ற குழப்பத்துடன்தான் பயணிகள் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள். இதுபோன்ற ஒரு சம்பவத்தை என் பணிக்காலத்தில் நான் பார்த்தது இல்லை என்று அந்த விமான நிலைய தலைமை அதிகாரி ஆக்டேவியோ லினோ தெரிவித்தார்.
|
|
|
| ஒழுங்கை |
|
Posted by: Birundan - 10-03-2005, 05:28 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (32)
|
 |
ஒழுங்கா இருப்பது ஒழுங்கை
குழைக்காட்டானின்ர படத்தைப் பாத்த உடன ஒழுங்கை ஞாபகங்கள் வந்திட்டுது.
அனேகமா சைக்கிளோ மோட்டச் சைக்கிளோ போற அளவில ஒழுங்கைகள் இருக்கும். இதுகள குச்சொழுங்கை எண்டும் சொல்லுவம். சில ஒழுங்கைகளுக்குள்ளால மாட்டுவண்டில், கார் கூடப் போய்வரலாம். அதுகள தனிய ஒழுங்கை எண்டு சொல்லுவம்.
அனேகமா ரெண்டு பக்கமும் வேலிஅடைக்கப்பட்டிருக்கும். அப்பிடி வேலியடைக்கப்பட்டிருக்கிற இடங்களில ஒழுங்கை எந்தநேரம் இணலுக்குள்ளதான் (நிழல் எண்டதின்ர பேச்சு வடிவம் தான் இணல்) இருக்கும். யாழ்ப்பாணத்தில அனேகமா பூவரசுதான் வேலிக்கதியாலா நிக்கும். அதுக்கடுத்தபடியா முள்முருக்கு அல்லது கிளுவை நிக்கும். எங்கயாவது அருந்தலா வாதனாராணி அல்லது சீமைக்கிளுவை (இதை யப்பான் மரமெண்டும் சொல்லிறானங்கள்) நிக்கும். உந்த ஒழுங்கை பிரிப்புகளில பெரிய காணிச்சண்டைகள் கூட வந்திருக்கு. சகோதரங்களுக்குள்ள வெட்டுக்குத்துகூட நடந்திருக்கு.
எங்கட ஊரில ஒழுங்கை கூட்டிற ஆக்களைக் காணலாம்.
தங்கட தங்கட வளவுகளுக்கு முன்னால இருக்கிற ஒழுங்கையின்ர பகுதிகளில கொட்டுப்பட்ட பூவரசம் அல்லது கிளுவைச் சருகுகளைக் கூட்டியள்ளுவினம். எனக்கு அப்பவே உந்தப் "பெண்டுகளின்ர" ஒழுங்கை கூட்டல் ஏனெண்டு விளங்கிறேல. கோடையில ஒழுங்கைக்குத் தண்ணிகூடத் தெளிச்சு வைப்பினம். வேலயில்லாத பிரச்சின எண்டு நான் நினைக்கிறது. பொழுது போக வேணுமெண்டு ஏதாவது செய்யிறதாத்தான் நான் நினைக்கிறது.
இப்ப யோசிச்சுப் பாக்கேக்க ஒருவிதத்தில அது நல்லதெண்டுதான் நினைக்கிறன். சும்மா வேலவெட்டியில்லாம சமைக்கிறதும் தோய்க்கிறதும் முடிஞ்சிட்டா பிள்ளையள் பள்ளிக்கூடத்தால வரும்வரைக்கும் அக்கம்பக்கத்தில சேந்து பூராயம் கதைக்கிறதெண்டுதான் கிராமங்களில பொழுதுபோறது. அப்ப எங்க உந்த தொலைக்காட்சிப்பெட்டியளும் மின்சாரமும். (அதுக்காக நானேதோ அம்பது வருசத்துக்கு முந்தின கதையக் கதைக்கிறன் எண்டு நினையாதையுங்கோ. வெறும் பதினஞ்சு வருசத்தயக் கதை) சிலவேளை அதிலயே சண்டைகள் வரும். சும்மாசும்மா கதையளக் கட்டுறதுக்கெல்லாம் எங்கட ஆக்களக் கேக்கவேணுமே? அந்தவிதத்தில இப்பிடியேதாவது செய்து வீண்வம்புகள விலைக்கு வாங்காமல் இருக்கிறது நல்லந்தானே? இண்டைக்கு எந்தநேரமும் ரி.விப் பெடடிக்கு முன்னால இருக்கிறதக்கூட உந்த விசயத்துக்காக நான் வரவேற்கிறன்.
ஆம்பிளையள் எங்கயாவது மதவடியில குந்தியிருப்பினம். இல்லாட்டி ஏதாவதொரு மரத்துக்குக்கீழ கடுதாசியோ தாயமோ விளையாடுவினம். கிராமப் பக்கங்களில அரசாங்க வேல செய்யாத ஆக்கள் வேலவெட்டியில்லாமல் ஓய்வாயிருக்கிற சந்தர்ப்பம் அதிகம்தானே. அனேகமா வெறியில்லாட்டி ஆம்பிளைகளுக்குள்ள சண்டைவாறது குறைவுதான்.
சரி எங்க விட்டன்?
ஆ.. ஒழுங்கை பற்றிக் கதைக்க வந்து என்னவோ கதைச்சுப்போட்டன். ஒழுங்கைகள் எண்டா கட்டாயம் தார் போடாமல் சாதாரணமாத்தான் இருக்கோணும். (அந்த நேரத்தில பெரிய பாதைகளே முந்தியொருக்கா தார் போட்டிருந்தது எண்ட அடையாளத்தோட மட்டுந்தான் இருந்திச்சு.) ஒழுங்கைகள் எப்பவும் நேர்ப்பாதையா இருக்கக்கூடாது. வளைஞ்சு வளைஞ்சு போகவேணும். இதில ஒரு சிக்கல் இருக்கு. வேலிய உயத்தி அடைச்சிருந்தா முடக்குகளில எதிர்ப்பக்கம் வாறவங்களைத் தெரியாது. சைக்கிளில பெல் இருக்காதபடியா முடக்குகள் வரேக்க,
"பெல் இல்ல
பிரேக் இல்ல
அடிபட்டாக்
கேள்வியில்ல"
எண்டு ஒரு ராகத்தோட கத்திக்கொண்டுதான் திரும்புவம். எங்களுக்கு முதல் எதிர்ப்பக்கத்திலயிருந்து கத்தல் வந்தா நாங்கள் உடன வேலிக்கரைக்கு சைக்கிள விட்டிடோணும். சிலநேரங்களில அப்பிடிக் கத்துறதுக்கு வெக்கமாயிருந்தா, (ஆனேகமா எங்களோட படிக்கிற, அல்லது எங்களுக்குள்ள ஏதோவொண்ட உருவாக்கிற பொம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடிருக்கிற இடமாயிருக்கும்) அப்பிடியே சைக்கிளில எழும்பிநிண்டு வேலிக்குமேலால அந்த முடக்குப் பாதையப் பாத்திட்டுத் திரும்புவம்.
அதிலயும் சிக்கல் வந்திச்சு. இப்பிடித்தான் ஒரு முடக்கில நாங்கள் பள்ளிக்கூடத்தால வரேக்க எழும்பிப்பாத்திட்டுத் திரும்பிறனாங்கள். சைக்கிளில வரிசையாப் பவனிவாறநேரத்தில முன்னுக்குப்போறவன் மட்டும் அப்பிடி பாதையக் 'கிளியர்' பண்ணிப்போட்டுப் போனாச்சரிதானே? ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.
அந்த முடக்கில கத்துறதும் நாகரீகக் குறைவெண்டபடியா பேசாமல்தான் முடக்கால திரும்பினம். ஆனா ஒருநாள் எதிர்ப்க்கம் வந்த ஒரு சைக்கிளோட முன்னுக்குப்போனவன் மோதி, அடுத்தடுத்து மொத்தம் ஆறு சைக்கிளுகள் விழுந்தபிறகுதான் திருந்தினம். பிறகென்ன பழையபடி அந்த முடக்கில
'பெல் இல்ல..
பிறேக் இல்ல..."
உப்பிடி ஒழுங்கை பற்றிக் கனக்க கதைச்சுக் கொண்டே போகலாம். உங்களுக்குக் கேக்கிற பொறுமை வேணுமே?
அதால இதோட நிப்பாட்டுறன்.
நன்றி< பூராயம்
|
|
|
| யாழ் கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் |
|
Posted by: mahilan - 10-03-2005, 04:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>மகிழன்
அருச்சுனா இணையத்தளம்
தமிழீழம்
03 10 2005</b>
யாழ் களம்,
என் உயிரிலும் மேலான புலத்து உறவுகளுக்கும் யாழ்கள அமைப்பாளர்களுக்கும் வணக்கம்.
யாழ்களம் ஊடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இதேவேளை சில தினங்களில் கண்டவற்றை எனது மனதில் பதிந்தவற்றை எழுதலாம் என நினைக்கிறேன் யாரையும் புண்படுத்ததுவது எனது நோக்கமில்லை. எனது அன்பு உறவுகளே யாழ் இணையத்தை செய்பவர்கள் தாயகத்தின் விடுதலையின் பொருட்டும் பிற நல்ல நோக்கத்திற்காகவும் இதனைச் செய்கிறார்கள் என நினைக்கிறேன. ஆனால் சிலர் தாயகத்தையும் ஒருசில தனி நபர்களின் பெயர்களையும் போராட்டத்தையும் தொடர்புபடுத்தி பொறுப்பற்ற முறையில் எழுதுவதை காணக்கூடியதாகவுள்ளது. இதனால் நான் மிக வேதனை அடைகிறேன். தாயக விடுதலைப் போராட்டம் எந்தத் தனிமனிதனுடையதுமில்லை எங்களுடையது. எனவே தனி நபரை சம்மந்தப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். 18000 மாவீரர்கள் மற்றும் 80000 தாயக உறவுகளின் உயிரும் அதுதவிர புலத்திலுள்ள உங்களின் குருதியும் வியர்வையும் இழந்துதான் இன்றைக்கு உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். எனவே தனிநபரின் விமர்சனத்தை விட்டு தமிழீழத் தேசிய தலைவரின் கரத்தைப் பலப்படுத்தி தாயகவிடுதலையை வெல்வோம். இதேவேளை யாழ் இணையம் ஊடாக பயன்னுள்ள நல்ல கருத்துக்களைத் தந்து தாயக விடுதலைக்கு வலுச் சேர்ப்பதுடன் இளைய தலைமுறைக்கு நல்வழி காட்டுங்கள். பெரும்பாலும் நல்ல கருத்துகளை நிறையப் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. கருத்துக்களை எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. இத்துடன் யாழின் தொழில்நுட்வியலாளர்கள் புலத்தில் பல்வேறு இடங்களில் இருப்பதாய் அறிந்தேன். அவர்களிற்கும் எனது நன்றிகள்
<b>என்றும்
அன்புடன்
மகிழன்
அருச்சுனா இணையத்தளம் (விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவு)
தாயகம்
http://www.aruchuna.com/
</b>
|
|
|
| பத்தாவது கோளுக்கு துணைக்கோள் |
|
Posted by: Birundan - 10-03-2005, 04:23 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
கேட்டீங்களா! கேட்டீங்களா! பத்தாவது 'கோளுக்கு' 'சந்திரனை' கண்டுபிடிச்சிருக்காங்களாம்!
--------------------------------------------------------------------------------
கீழே இருக்கும் படத்தில் (கடிகாரத்தின்) மூன்று மணி இடத்தில் இருக்கிற புள்ளிதானுங்க அது.WM கெக் (Keck) வானவியல் மையத்திலிருந்து கெக்-II தொலை நோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்த சமாச்சாரம் பற்றிய தகவல்: உத்தேசமாக இக்'கோள்' பூமியின் அளவில் 1/5 பங்கு இருக்கும். அதன் 'துணைக்கோள்' நம் சந்திரனுக்கு 1/8 அளவாம்.
[நன்றி>அகப்பயணம்
|
|
|
|