| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 64 online users. » 0 Member(s) | 62 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| சுூரியரே எங்கள் சொந்தங்களே ! |
|
Posted by: shanthy - 10-05-2005, 05:13 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
சுூரியரே எங்கள் சொந்தங்களே !
- சாந்தி ரமேஷ் வவுனியன் -
(05.10.1987 இந்திய சிறீலங்கா அரசுகள் சதியில் தமிழர் விதியெழுதும் புலிவீரர் வழியெழுந்த பன்னிருவர் நினைவுக்கவியிது.)
தீருவிலில் தீயான திருமுகங்கள்
வஞ்சகர் சதி மூட
நஞ்சிலே உயிர் முடிந்து
பிஞ்சுகள் உதிர்ந்த துயர்
நினைவுகள் எழுதிய நாள்.
சாவில் வாழ்வெய்திய சந்தனங்கள்
சாகடிக்கப்பட்ட சாகாத நாளின்று
நேற்றாய் நினைவெல்லாம்.....
விழி நீர் மாலை கோர்த்து
ஆயார் கடவை வாசலில்
அவர்கள் படுத்திருக்க அழுத நாளின்று....
பலாலி வாசலில் பகைவர் குகையமைத்த
தமிழன் நிலமதிலே உச்சிவெயில் சுட்டெரிக்க
'எங்கள் தோழர்களை எங்களிடம் திருப்பித்தா"
எத்தனை குரல்களின் அதிர்வுகள்.....!
எல்லாமே நினைவெழுந்து
நெஞ்சு கனக்கிறது நினைவு சுடுகிறது.
சுதுமலையில் உரைதந்த எரிமலைகள்
மூச்சழித்து மலர்களின் நடுவே - தம்
தோழர் , தோழியரின் இதய நாளங்களில்
விடுதலைத் தீயெரித்துத் தமிழ் வீடெங்கும்
ஒளிகொடுத்து வந்தவரின் சுயம் தெளித்து
வானுலகம் சென்றவர்கள்.
கடலேறி வந்த பேய்களை
கலங்கள் அள்ளிப்போய்
காலங்களும் கரைந்து விட்டன
இன்னும் சனித்தொல்லை
அகலாத பெருந்தொல்லை
அம்மாக்களின் வடிவில் அலைக்கிறது.
சுூரியரே எங்கள் சொந்தங்களே !
வங்கக்கடல் நடுவில்
வந்த எங்கள் வீரர்கள்
தங்கள் உயிர் தீய்த்துத் தமையழிக்க
உங்களை அழித்தவரே
உறுதுணையாய் நின்றார்கள்.
இன்று சர்வதேசக்கடல் வரையும்
சகுனிகள் சேர்ந்து நின்று
எங்கள் தோழர்கள் உயிர் பறிப்பு
இன்னும் தொடர்கிறது.
ஊர் பறித்தோர் , உயிர் பறித்தோர்
உலகைத் தின்றோரெல்லாம்
ஒன்றாய் வந்து நின்று
உதவுகிறார்களாம்.
சிரிப்பாயில்லை இவையெல்லாம் ?
'பொறுத்தார் புவியாழ்வார்"
ஆம் பொறுத்திருப்போம் நாங்களெல்லாம்.
(உயிர்வாசம் கவிதை நு}லிலிருந்து.......)
|
|
|
| அணிலுக்கு வடை... |
|
Posted by: SUNDHAL - 10-05-2005, 03:32 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. கோவிலின் உள்ளே நந்தவனம் இருக்கிறது. இந்த நந்தவனத்தில் தான் ஆண்டாள் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டார் என்பது புராணம். எனவே இது ஆண்டாள் நந்தவனம் என அழைக்கப்படுகிறது.
ஆண்டாள் நந்தவனத்தை நம்மாழ்வார் (80) என்ற முதியவர் பராமரித்து வருகிறhர். இவர் திருவில்லிபுத்தூர் குழிப்பிள்ளை யார் கோவில் தெருவில் வசித்து வருகிறhர். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நந்தவனத்திற்கு வந்து சுத்தப்படுத்தும் பணியை தொடங்குவார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்து வருகிறhர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காலையில் நந்தவன வாசலில் உட்கார்ந்து வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஓர் அணில் இவர் அருகில் வந்து நின்றது. விளையாட்டாக அந்த அணிலுக்கு வடையை கொடுத்தார். ஒருநாள், இரண்டு நாள் தொடர்ந்த இந்த பழக்கம் பின்னர் தினசரி வாடிக்கையாகிப் போனது. நாளாக நாளாக அந்த அணில் பெரும் படையையே (அணில் படை) திரட்டிக் கொண்டு (வடை சாப்பிடத்தான்*) வரத் தொடங்கி விட்டது.
நம்மாழ்வாரும் பிரியத்துடன் வடைகளை அணில்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டார். காலையில் நந்தவனத்திற்கு வந்ததும், நம்மாழ்வார் ஒருவித ஒலி எழுப்புகிறhர். அந்த சத்தம் கேட்டதும் மரத்தில் இருந்து ஒவ்வொரு அணிலும் துள்ளிக் குதித்து இறங்கி வந்து அவரிடம் வடை வாங்கிச் செல்கிறது. வடை சாப்பிடும் போது அணில்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு, காகங்கள் மற்றும் பிற பறவைகளை அருகிலேயே விடுவது இல்லை. இப்படி தினந்தோறும் அணில்களுக்கு 5 வடைகளை வாங்கி கொடுக்கிறhராம் நம்மாழ்வார்.
|
|
|
| வசிப்பதற்கு ஏற்ற சிறந்த 10 நகரங்கள் |
|
Posted by: SUNDHAL - 10-05-2005, 03:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
கனடாவின் வான் கோவர், ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்பட 10 நகரங்கள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மிக மோசமான நகரங்களில் மும்பை இடம் பிடித்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகின் தலை சிறந்த 10 நகரங்கள் எது என்பது குறித்து ஆய்வு நடத்தியது. மனிதன் வாழ்வதற்கு ஏற்ற பொருளாதார சூழ்நிலை, வாழ்க்கை வசதிகள், அடிப்படையாக வைத்து இந்த `டாப் டென்' நகரங்களை தேர்வு செய்தது.
இதில் கனடாவின் வான் கோவர் நகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், பெர்த், அடிலேய்டு, சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இது தவிர வியன்னா, ஜெனீவா, சூரிச், டொரான்டோ, கால்கெரி, ஆகிய நகரங்களும் டாப் டென் வரிசையில் இடம் பிடித்துள்ளன.
மனிதன் வாழ லாயக்கற்ற மிக மோசமான நகரங்கள் வரிசையில் வங்காள தேசத்தின் டாக்கா, இந்தியாவின் மும்பை, பாகிஸ்தானின் கராச்சி, கம்போடியாவின் நாம்பென் ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
Thanks:Malaimalar............
|
|
|
| கிளிநொச்சி மீட்பு எவ்வாறு... பாகம் 3 |
|
Posted by: வியாசன் - 10-05-2005, 05:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
ஓயாதஅலைகள் 2 கிளிநொச்சிமீட்பு எவ்வாறு.........
ஓயாத அலை 02 தாக்குதலை நடாத்துவதற்கான சிறப்பு வேவுச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வேவு அணிகள் கிளிநொச்சி இராணுவ முகாம்களிற்குள் ஊடுருவி வேவு செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன் மூலம் பெறப்பட்ட பல முக்கிய தரவுகளும் இந்த ஓயாத அலை 02 தாக்குதல் வெற்றிக்கு மூலபலமாகவிருந்தன.
அவ்வாறு வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஓயாத அலைகள் 02 தாக்குதல் நடவடிக்கைக்கான வேவுப்பணியில் அணி ஒன்றுக்குப் பொறுப்பாகவிருந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவரும் தற்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான பிரதாபன் அன்று தாங்கள் எவ்வாறு எதிரியின் முகாமுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும் அங்கு எதிரியின் நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதையும் தாக்குதலுக்கான தகவல்களை எதிரியின் முகாமுக்குள்ளிருந்து எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இவ்வாறு கூறினார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை வேவு பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஏற்கனவே கட்டளைத் தளபதி தீபன் அண்ணாவால் சொல்லப்பட்டது. உள்வேவுக்கான பகுதிகளும் பிரித்து தரப்பட்டன. ஆனால் உள்ளே செல்வதற்கான பாதை இருக்கவில்லை. வெளிலைனைக் (பாதுகாப்பு வேலியை) கடந்து உள்ளே செல்வதற்கான பாதையை நாங்கள் எடுக்கவேண்டிய தேவை இருந்தது.
ஆனையிறவிற்கும் கிளிநொச்சிப்பகுதி மற்றும் பரந்தன் பகுதிகளுக்குள்ளால் உட்செல்வதற்கான பாதை எடுப்பதற்காக ஒரு மாத காலமாக முயற்சி செய்து கொண்டிருந்தோம் பாதை இல்லாததால், கட்டைக்காடு வெற்றிலைக்கேணியுூடாக உள்ளே செல்லுமாறு எமக்கு கட்டளை கிடைத்தது. அங்கு சென்று நீரேரியினு}டாக உட்செல்ல முனைந்த போது அங்கே இரவில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்ததோடு அவதானிப்பும் பலமாக இருந்தது. பிறகு கொம்படி பகுதியால் செல்ல முற்பட்டபோது எதிரியின் தாக்குதலுக்கிலக்காகி திரும்பினோம்.
இந்த வேளையில்தான் கிளிநொச்சி குளத்தினு}டாக மற்றுமொரு அணி எடுத்த பாதையினு}டே உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அங்கும் அந்த அணிக்கு அடி விழுந்து விட்டது. அதனால் குளத்தின் அலை கரையினால் நாங்கள் ஒருபாதை எடுத்து உள்நுழைந்தோம். உள்ளே எங்கு தங்குவது எப்பகுதியால் பயணிப்பது என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் உள்ளே வயல்வெளிகளும் வெளியான பிரதேசமாகவும் இருந்ததால் மறைவான இடம் கிடைக்கவில்லை. அதனால் முதல் நாள் முழுவதும் நாங்கள் தங்குவதற்கான இடங்களைத் தேடி பாதுகாப்பான ஓர் இடத்தை தெரிவு செய்தோம்.
மறுநாள் அதனுள்ளிருந்து திட்டங்களை வகுத்துக் கொண்டு கரடிப்போக்கு சந்திப் பகுதிக்கு வந்தோம் அங்கு தான் கரடிப்போக்கு முகாம் இருந்தது. அது சிறிய பிரதேசத்தைக் கொண்ட முகாமென நினைத்தோம். ஆனால் கரடிப்போக்கிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலை வரைக்கும் அந்த தொடர்முகாம் அமைந்திருந்தது. அங்கிருந்து புகையிரத வீதியினு}டாக குறிப்பிட்ட பகுதியை அவதானித்து விட்டு மறுநாளும் உள்ளேயே தங்கினோம், அடுத்த நாள் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அவதானிப்பை தொடர்ந்தோம். இவ்வாறு அந்த முகாமின் புகையிரத வீதிப் பகுதியின் சுற்றளவை எடுக்க மட்டும் 07 நாட்கள் எடுத்தன. ஏனென்றால் கரடிப் போக்கு சந்தியிலிருந்து பரந்தன் நோக்கி 700 மீற்றரில் இன்னுமொரு இராணுவ முகாமிருந்தது. அந்த முகாமிற்கும் கரடிப்போக்கு முகாமுக்கும் இடையால் இறங்கியே நாங்கள் வேவுபார்க்க வேண்டியிருந்தது.
அந்த ஒரு கிழமை முடிந்ததும் எடுத்த தரவுகளுடன் கட்டளைத்தளபதி தீபன் அண்ணாவிடம் வந்தோம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்களை எமக்கு தந்தார். அதற்கேற்ப நாங்கள் இரண்டாவது முறை உட்புக முயன்ற போது முதல் சென்ற பாதையில் இராணுவத்தின் அவதானிப்பு அணி நிறுத்தப்பட்டிருந்தது.
அதனால் அந்த பாதையிலிருந்து 50 மீற்றர் விலத்தி ஒரு பாதையை எடுத்து உள்ளே சென்றோம் அங்கு திட்டப்படி முதல் கட்டத்தில் விட்ட பகுதியிலிருந்து முகாமின் சுற்றளவை பார்த்தோம். அதன்பிறகு வெளியே வந்து மூன்றாவது முறை உட்சென்று திருநகர் பகுதியில் இருந்த முகாம்களை அவதானித்தோம். பழைய மஞ்சுளா வெதுப்பகத்தடியில் ஒரு முகாமும் 6 ஆம் வாய்க்கால் சந்தியில் ஒரு முகாமும் கோழிப்பண்ணை வீதியில் ஒரு முகாமும் இருந்தன. இவற்றோடு 3 ஆம் வாய்க்கால் வீதியிலும் ஒரு முகாம் இருந்தது. இவை கிளிநொச்சி பிரதான தளத்திற்குரிய பாதுகாப்பு முகாம்களாக அமைந்திருந்தன. இவற்றை நாங்கள் பார்த்த சமகாலத்திலேயே மற்றுமொரு அணி பரந்தன் பகுதியை பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் பார்த்த பகுதியின் முழுமையான தரவும் எடுக்கப்பட்டு விட்டது.
இதற்கிடையில் இரவில் வேலை செய்வது இலகுவாக இருந்தபோதும்; பகலில் உள்ளே தங்குவதென்பது கடினமாகவே இருந்தது. கிளிநொச்சியின் கட்டடப்பகுதிக்குள் இராணுவத்தினர் இருந்தனர்;. ஏனைய பகுதி வெளியானவை. அதனால் நாங்கள் தங்குவதற்காக சில இடங்களை பிரித்து வைத்திருந்தோம். அதாவது 3 ஆம் வாய்க்கால் அருவிக்கருகில் உள்ள சில இடங்களிலும், அடுத்து கோழிப்பண்ணை வீதியின் இடது பக்கத்தில் ஒரு இடத்திலும், திருநகர் சுடலைக்குள்ளிருந்த பற்றைக்குள்ளும் பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடையில் ஒரு பகுதியிலும் தங்குவதற்கான பகுதிகளை பிரித்திருந்தோம்.
வீதியோரமாக நாங்கள் தங்கியிருந்த வேளை பகலில் இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்திருக்கும் அதிலே நாங்கள் சாப்பிடுவதற்குக் கூட பெரும் சிரமமாகவே இருந்தது. ஏனைய பகுதிகளில் இருந்த புற்கள் பற்றைகள் கூட எரிக்கப்பட்டிருந்தன. ஏனென்றால் வேவுக்காக நாங்கள் இறங்கிவிட்டோம் என்பதை எதிரி தெளிவாக உணர்ந்திருந்தான். அதனால் ஒவ்வொரு நாளும் தேடுதலில் ஈடுபட்டே வந்தான். இதனால் கிளிநொச்சியில் இரவு வேளைகளில் வேலை செய்துவிட்டு பகலில் தங்குவதற்காக ஆனையிறவுப்பகுதிக்கு வந்து தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நாங்கள் மூன்று தடவைகள் உள்ளே சென்று ஓரளவு வேலைகளை முடித்திருந்த போதும் சில பகுதிகளின் வேலைகள் நிறைவு பெறவில்லை. எமது திட்டம் கிளிநொச்சிப் பகுதியைக் கட்டம் கட்டமாக பிரித்து மறித்துத் தாக்குதலை மேற்கொள்வதே. எனவே அதற்கான சரியான பகுதிகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் மூன்றாம் நாள் அந்த வேலையை முடிக்க முன் வெளியே வந்துவிட்டு அடுத்த தடவை செல்ல முற்பட்ட போது பாதையில் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன இதனால் மீண்டும் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டினு}டாக உள்ளே வருமாறு கட்டளையிடப்பட்டது. அந்தப்பகுதியால் வருவதற்கு புதிதாக பாதை எடுத்தே வரவேண்டியிருந்தது. அதனால் ஒரு மாதம் அப்பகுதியில் தாமதமானது.
அங்கு நின்ற செம்பியன் வேவு அணியின் பாதையினாலேயே நாம் உள்ளே நுழைந்தோம். ஆனால் நாம் சென்ற அப்பாதை எதிரியின் காப்பரணுக்குள் தான் செல்லும் ஆனால் அந்தக்காப்பரண்களில் இருக்கும் இராணுவம் முன்னுக்கு வந்து நிற்பதால் அந்த அரண்கள் வெறுமையாக இருந்ததால் நாம் அந்தப் பகுதியால் உள்நுழைந்தோம்.
உள்நுழைந்த போதும் ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையுள்ள இராணுவ முகாம்களை கடந்தே வரவேண்டியிருந்தது. அன்று அதிகாலையில் பரந்தன் வீதியைக் கடக்க முடியவில்லை உமையாள்புரப் பகுதி பற்றைக்குள் தங்கிவிட்டோம். அன்று காலைதான் எமக்குத் தெரிந்தது. அப்பகுதியில் இராணுவத்தின் தேடுதல் அதிகமாக நடைபெறும் பிரதேசமென்று. அன்று தேடுதலுக்காக வந்த இராணுவத்தினர் நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். நாய்கள் எங்களை கண்டு குரைக்கத் தொடங்கின. ஆனால் இராணுவம் அதைப் பொருட்படுத்தவில்லை. அன்று இரவு கிளிநொச்சிக்கு வந்து முன்னர் விட்ட மிகுதி வேலையை ஆரம்பித்தோம்.
நான்கு நாட்களுக்குள் வேலையை முடித்துக் கொண்டு தட்டுவன் கொட்டியையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது பதுங்கியிருந்த இராணுவ அணி ஒன்று எங்களைத் தாக்கியது. நாங்களும் திருப்பி தாக்கிக் கொண்டு ஓடினோம். ஒரு போராளி காயப்பட்டு விட அந்த சண்டையோடு வெளியால் வந்து விட்டோம். வந்தவுடன் வெளியில் நின்ற எதிரியின் ஒரு அணியுடனும் சண்டை பிடித்துத்தான் வந்து சேர்ந்தோம்.
இதேவேளையில் பரந்தன் பகுதியில் வேலை செய்த எமது அணியும் அன்று வெளிவர முயற்சி செய்து இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அவர்கள் முட்கள் நிறைந்த பகுதியால் ஓடி மறுநாள் கால்களில் முட்கள் குத்தி நடக்க முடியாத நிலையில் பனை மட்டைகளை வெட்டி காலில் செருப்பு போல கட்டிக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள் எனக் கூறினார்.
சுட்டது தமிழ்நாதத்திலிருந்து
|
|
|
| வீடியோ கடை உரிமையாளர் நேற்றிரவு உடுவிலில் சுட்டுக்கொலை |
|
Posted by: mayooran - 10-05-2005, 03:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
உடுவில், டச்சு வீதியில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட் டுச் சம்பவத்தில் வீடியோக் கடை உரிமை யாளர் கொல்லப்பட்டார்.
அதேயிடத்தைச் சேர்ந்த இராசரத்தினம் இராஜவினோதன் (வயது30) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப் பட்டுள்ளது.
டச்சு வீதியில் உள்ள தமது வீடியோக் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குப் புறப்பட்ட சமயம் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் அவர்மீது வேட்டுக்களைத் தீர்த்தனர் என் றும்
அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
நள்ளிரவு யாழ். ஆஸ்பத்திரியில் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
UTHAYAN
|
|
|
| யாழ்கள உறவுகளுக்கு வணக்கம் |
|
Posted by: SANKILIYAN - 10-05-2005, 02:12 AM - Forum: அறிமுகம்
- Replies (50)
|
 |
வணக்கம்
பிள்ளையாள் நான் முத்திரை சந்தையில் இருக்கிறனான்
நானும் எனது கருத்தை உங்களுக்கு தெரிவிக்க விரும்புறன்
என்னை எற்பியளோ?
நன்றி
சங்கிலியன்
சங்கிலியன் தோப்பு
யாழ்
|
|
|
| ஜே.வி.பிக்கு ஆப்பா..? |
|
Posted by: வன்னியன் - 10-04-2005, 08:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
ஜே.வி.பி உறுப்பினரான வீரவங்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரும் விசேட மனுவொன்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச சார்பற்ற அமைப்பொன்றின் இயக்குனரான கலாநிதி குமார் ரூபசிங்க இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் சட்டமா அதிபரும் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 1987 முதல் 92ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியோடு இணைந்த தேஷபிரேமி மக்கள் அமைப்பு மற்றும் தேஷபிரேமி ஆயுதப் படையணியில் ஒன்றிணைந்த கட்டளைத் தலைமையகம் எனும் பெயர்களில்; 6557 மனித படுகொலைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் அரச ஊழியர்கள் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பேராசிரியர்கள் பாடசாலை அதிபர்கள் தோட்டத் துரைமார்கள் புத்தி ஜீவிகள் என பலதரப்பட்டவர்கள் இந்த அமைப்பினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜனாதிபதியின் கணவரான விஜய குமாரதுங்கவை கொலை செய்ததும் மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கிதாரிகளே என குறிப்பிடப்பட்டுள்ள அந்த மனுவில் அரசாங்க சொத்துக்களான 613 பஸ் வண்டிகள் 16 பஸ் டிப்போக்கள் 16 ரயில்கள் 24 ரயில் நிலையங்கள் என்பனவற்றை தீ வைத்துக் கொளுத்தியுள்ளதாகவும் 294 கிராம சேவையாளர் அலுவலகங்கள் 73 தேயிலைத் தொழிற்சாலைகள் 79 பிரதேச செயலகங்கள் என்பனவும் அவர்களால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 680 தபால் நிலையங்கள் 103 விவசாய சேவை நிலையங்கள் 8 பாடசாலைகள் 16 கூட்டுறவுச் சங்கங்கள் என்பனவும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இந்த மனுவில் அந்தக் கட்சியினர் ஜனநாயக நீரோட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாக கூறியுள்ள போதிலும் அவர்களிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் இன்னமும் கையளிக்கவில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் திகதி மாஹரகமையில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் தேசிய அமைப்பின் கூட்டமொன்றின் போது இலங்கையின் அரச சார்பற்ற அமைப்புகளை தொடர்பாகவும் மனுதாரர்கள் தொடர்பாகவும் அபாயகரமான கருத்துக்கள் வெளியிட்டதாகவும் இந்தக் குழுவினர் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிக்கார துரோகிகள் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தன்னியக்கத் துப்பாக்கிகள் உட்பட அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியினர் அவற்றை அரசாங்கத்திடம் இன்னமும் கையளிக்காததால் அவர்களால் பயங்கர விளைவுகள் ஏற்படலாம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக மஹாரகமை பொலிஸாருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென மனுவில் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தண்டனைச் சட்டக் கோவை மற்றும் குற்ற வழக்கு விதிமுறைகளுக்கு அமையவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விமல் வீரவங்சவிற்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்குமாறும் இந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டது லங்காசிறியிலிருந்து
|
|
|
|