![]() |
|
வீடியோ கடை உரிமையாளர் நேற்றிரவு உடுவிலில் சுட்டுக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வீடியோ கடை உரிமையாளர் நேற்றிரவு உடுவிலில் சுட்டுக்கொலை (/showthread.php?tid=3025) |
வீடியோ கடை உரிமையாளர் நேற்றிரவு உடுவிலில் சுட்டுக்கொலை - mayooran - 10-05-2005 உடுவில், டச்சு வீதியில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட் டுச் சம்பவத்தில் வீடியோக் கடை உரிமை யாளர் கொல்லப்பட்டார். அதேயிடத்தைச் சேர்ந்த இராசரத்தினம் இராஜவினோதன் (வயது30) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப் பட்டுள்ளது. டச்சு வீதியில் உள்ள தமது வீடியோக் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குப் புறப்பட்ட சமயம் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் அவர்மீது வேட்டுக்களைத் தீர்த்தனர் என் றும் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். நள்ளிரவு யாழ். ஆஸ்பத்திரியில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. UTHAYAN |