Yarl Forum
அணிலுக்கு வடை... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அணிலுக்கு வடை... (/showthread.php?tid=3021)



அணிலுக்கு வடை... - SUNDHAL - 10-05-2005

திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. கோவிலின் உள்ளே நந்தவனம் இருக்கிறது. இந்த நந்தவனத்தில் தான் ஆண்டாள் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டார் என்பது புராணம். எனவே இது ஆண்டாள் நந்தவனம் என அழைக்கப்படுகிறது.

ஆண்டாள் நந்தவனத்தை நம்மாழ்வார் (80) என்ற முதியவர் பராமரித்து வருகிறhர். இவர் திருவில்லிபுத்தூர் குழிப்பிள்ளை யார் கோவில் தெருவில் வசித்து வருகிறhர். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நந்தவனத்திற்கு வந்து சுத்தப்படுத்தும் பணியை தொடங்குவார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்து வருகிறhர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காலையில் நந்தவன வாசலில் உட்கார்ந்து வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஓர் அணில் இவர் அருகில் வந்து நின்றது. விளையாட்டாக அந்த அணிலுக்கு வடையை கொடுத்தார். ஒருநாள், இரண்டு நாள் தொடர்ந்த இந்த பழக்கம் பின்னர் தினசரி வாடிக்கையாகிப் போனது. நாளாக நாளாக அந்த அணில் பெரும் படையையே (அணில் படை) திரட்டிக் கொண்டு (வடை சாப்பிடத்தான்*) வரத் தொடங்கி விட்டது.

நம்மாழ்வாரும் பிரியத்துடன் வடைகளை அணில்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டார். காலையில் நந்தவனத்திற்கு வந்ததும், நம்மாழ்வார் ஒருவித ஒலி எழுப்புகிறhர். அந்த சத்தம் கேட்டதும் மரத்தில் இருந்து ஒவ்வொரு அணிலும் துள்ளிக் குதித்து இறங்கி வந்து அவரிடம் வடை வாங்கிச் செல்கிறது. வடை சாப்பிடும் போது அணில்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு, காகங்கள் மற்றும் பிற பறவைகளை அருகிலேயே விடுவது இல்லை. இப்படி தினந்தோறும் அணில்களுக்கு 5 வடைகளை வாங்கி கொடுக்கிறhராம் நம்மாழ்வார்.