Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 64 online users.
» 0 Member(s) | 62 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  பிரதமர் லயனல் ஜொஸ்பின் - உதயன் நாளிதழ் 04-10-2005
Posted by: VERNON - 10-04-2005, 06:58 PM - Forum: பொழுதுபோக்கு - No Replies

ஜனாதிபதி சந்திரிகா பிரான்ஸ அதிபருடன் நாளை சந்திப்பு

யுனெஸ்கோ மாநாட்டில் கலந்துகொள் வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாளை புதன்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி ஜெக் ஷிராக்இ பிரதமர் லயனல் ஜொஸ்பின் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் சினேக பூர்வ உறவுகள் மற்றும் பொருளாதாரத் தொடர் பாடல்களை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளின்போது பேசப்படும் எனத் தெரி கிறது. பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்து எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி சந்திரிகா நாடு திரும்புவாரெனத் தெரிவிக்கப்படுகி றது.

உதயன் நாளிதழ் 04-10-2005

திரு லயனல் ஜொஸ்பின் அவர்கள் பதவி விலகி
வேறு 2 புதிய பிரதமர்களும் ஆட்சி அமைத்து விட்டனர்
உதயன் தவறவிட்டது " முன்னை நாள் " எனும் பதத்தையா ? அல்லது காலத்தையா?


vernon

Print this item

  கோயிஞ்சாமி
Posted by: Birundan - 10-04-2005, 03:57 PM - Forum: நகைச்சுவை - Replies (6)

கோயிஞ்சாமி !!

நேத்து ராத்திரி ஒரு கனவு. கனவுல யாரோ மறைஞ்சு மறைஞ்சு வர்றாங்க. நல்லா உத்து பாக்கறேன். அட நம்ம கோயிஞ்சாமி. எனக்கு ரொம்ப குஷியாயிடுச்சு. கோயிஞ்சாமினா ஜோக்கா சொல்லிக்கிட்டே இருப்பார். கனவுல கூட நமக்கு ஆண்டவன் பயமுறுத்தற மாதிரி விஷயங்கள தர்றதில்லைன்னு ஒரே சந்தோஷம். நான் நினைச்சது கோயிஞ்சாமிக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல சும்மா கேள்விகளா அள்ளி வீசுறாரு. அவ்வளவும் இண்டலிஜெண்ட் கேள்விகள். ஒரு கேள்விக்கும் எனக்கு விடை தெரியல. உங்களுக்கு தெரியுதான்னு பாருங்க...

1. உலகத்தில் இருக்கிற எல்லா நாடும் கடன்ல இருக்குன்னா (அட நம்ம அமெரிக்கா உட்பட) பணமெல்லாம் உண்மையிலேயே எங்க தான் போகுது?

2. நாய்க்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும் முன்பை விட தரமானதாகவும் இருக்குதுன்னு விளம்பரப்படுத்தறாங்களே அப்ப தரத்தையும் சுவையையும் மதிப்பிடுபவர்கள் யார்?

3. ஏரோப்ளேன்ல கருப்பு பெட்டின்னு ஓண்ணு இருக்குதுல்ல. எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தாலும் அந்த பெட்டிக்கு ஒண்ணும் ஆவுறதில்லை. அப்போ ஏன் அந்த பெட்டி செஞ்ச உலோகத்திலேயே முழு ஏரோப்ளேன்னைச் செய்யக் கூடாது?

4. இந்த காப்பிரைட் காப்பிரைட்னு சொல்றாங்களே அதோட காப்பிரைட் யாருகிட்ட இருக்கு?

5. ஆரஞ்சு பழம் முதல்ல வந்ததா கலர் முதல்ல வந்ததா?

6. ஒரு அம்னிஷியா நோயாளி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டால் அவருக்கு அம்னிஷியா இருந்தது தெரியுமா?

7. ஒரு ஆண் லேடிபேர்டை என்னன்னு கூப்பிடணும்?

8. முடிக்கப்பட்ட கட்டிடத்தை ஏன் "building"னு சொல்றோம்?

9. 130 கி.மீ வேகத்தில யாரும் வாகனங்களைச் செலுத்தக்கூடாதுன்னா ஏன் ஸ்பீடோமீட்டர்ல 130 கி.மீ வேகம்னு ஒண்ணு இருக்கணும்?

10. குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னா ஏன் எல்லா பாரிலும் பார்க்கிங் வசதி இருக்கு?

கண்டிப்பா உங்க விடைகளைச் சொல்லுங்க. அப்புறம் கோயிஞ்சாமி பதிவு போடும் போது வந்து திட்டினாருங்க. அவரு உண்மையிலேயே அறிவாளி தானாம். கனவில வந்தது தான் நிசமாம். முகில் போன்ற ஆளுங்க எழுதுற மாதிரி அவர் ஒண்ணும் முட்டாள் இல்லையாம்.

நன்றி>கனேஷ்

Print this item

  அண்டப் புளுகு... ஆகாச புளுகு ஏன்?...
Posted by: SUNDHAL - 10-04-2005, 03:17 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (4)

சிலருக்கு பொய் பேசுவது தண்ணி பட்ட பாடு. எப்போது பார்த்தாலும் புரூடா விட்டுக் கொண்டிருப்பார்கள். அடுத்தவரை ஏமாற்றுவதில் இவர்களுக்கு அலாதி பிhpயம் உண்டு. பொய் சொல்வதும், ஏமாற்றுவதும் மோசமான பழக்கம், அதனால் சமுதாயத்தில் மதிப்பு கெடும் என்பதை பற்றி துளி கூட கவலையில்லாமல், பீலா விடுவார்கள்.

இந்நிலையில் சிலர் பொய்யர்களாக இருக்க காரணம் என்ன? இதற்காக மூளையில் குறிப்பிட்ட மாற்றங்கள் எதுவும் உள்ளதா? என்ற கேள்விக்கு அமொpக்க உளவியல் நிபுணர் அட்hpயான் ரெய்னே பதில் அளித்துள்ளார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர், பொய் பேசுவதையும், ஏமாற்று வதையும் குலத் தொழிலாக வைத்திருப்பவர்களையும், நேர்மையான பழக்க வழக்கம் உடையவர்களையும் எடுத்துக் கொண்டு, அவர்களின் மூளையை ஆராய்ந்தார். அப்போது 2 பிhpவினருக்கும் இடையே குறிப்பிட்ட சில வித்தியாசங்கள் இருப்பது தொpய வந்தது.

இயல்பான மனிதர்களுடன் ஒப்பிடும் போது, பொய்யர்களின் மூளையில் வெள்ளைப் பகுதி 22 சதவீதம் அதிகமாக காணப்பட்டது. அதே சமயம் சமூக விரோதிகளைக் காட்டிலும் 25.7 சதவீதம் அதிகமாக இருந்தது. கட்டுப்பாடான வர்களைக் காட்டிலும், பொய்யர்களின் மூளையில் பழுப்பு நிறப் பகுதி 14.2 சதவீதம் குறைந்து இருந்தது. இதன்மூலம் விடை கிடைக்காத சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

அதாவது, பழுப்பு நிறப் பகுதியில் காணப்படும் குறைவு, பொய் பேசும் பழக்கம் உள்ளது என்பதற்கான முதல் அறிகுறியாக ஆகும். வெள்ளை நிறப் பகுதி கூடுதலாக காணப்படும் பட்சத்தில், பொய் பேசுவது அவர்களுக்கு எளிதாகி விடுகிறது. பழுப்பு நிறப்பகுதி 14 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால், அவர்கள் சமுதாயத்தைப் பற்றியோ, சமூக ஒழுக்கங்கள் பற்றியோ கவலைப்படுவது இல்லையாம்.

Thanks:dinakaran..............

Print this item

  ஆனந்தம் பொங்குதே...
Posted by: SUNDHAL - 10-04-2005, 03:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் தெரி யுமா?... ஐஸ்லாந்துக் காரர் கள்தான். அந்நாட்டில் 94 சத வீதம் பேர் தாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து,ஸ்வீடன், டென் மார்க், நாட்டுக் காரர்கள் வாழ்க்கையில் திருப்தி 91 சதவீதம் இருக்கிறதாம். இதற்கடுத்த இடத்தில் இருப்பவர்கள் ஆஸ்திரேலியாக்காரர்கள். இவர்கள் 90 சதவீதம் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறுகி றார்கள். நமது நாட்டு மக்களில்(India) 40 சதவீதம் பேரே மகிழச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா?... முதல் நான்கு இடத்தில் இருப்பவர்கள் ஐரோப்பியர்கள்தான்.

வாழ்க்கையை விரக்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா?...அவர்களும் ஐரோப்பாவில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெல்ஜியம் நாட்டினர். இவர்கள் மைனஸ் 24 சதவீதம் விரக்தியாக உள்ளனர். இத்தனைக்கும் அந்நாட்டு மக்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அடப்பாவமே!

Print this item

  நீதிக்காக எழுந்துநிற்க மறுக்கின்றபோது
Posted by: வினித் - 10-04-2005, 02:54 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - No Replies

<b>உண்மை, நீதிக்காக எழுந்துநிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள்' </b>


பிரியாவிடை வைபவத்தில் நீதிவான் கணேசராஜா
திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மூதூருக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையிட்டு வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவத்தில் திருகோணமலை முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஓ.எல்.எம்.இஸ்மாயில் தற்போதைய தலைவர் கா.சிவபாலன், செயலாளர் ஜெகசோதி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்ரன் பாலசிங்கம் தற்போதைய நீதிவான் வி.இராமக்கமலன், பதில் நீதிவான் செல்வராஜா மற்றும் பல சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திருமலை முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஓ.எம்.எம்.இஸ்மாயில் தமது உரையில், திருமலை நீதிமன்ற நீதிபதி கணேசராஜா திருகோணமலை நீதிமன்றில் அனைவரினதும் அன்பை சம்பாதித்திருந்ததாகவும், அன்பு இல்லம் வழக்கு, புத்தர் சிலை வழக்குகளில் துணிச்சலான தீர்ப்புகளை வழங்கியிருந்தார் எனவும், சட்டத்தரணிகள் சங்கத்துடன் சுமுகமான உறவை பேணுவதில் முன்மாதிரியாக விளங்கினார் எனவும் குறிப்பிட்டார்.

திருமலை நீதிவான் இராமக்கமலன், தன்னுடைய உரையில், தான் இந்நீதிமன்றில் பயிற்சி பெறுவதற்காக வந்தபோது வழக்குகளில் தனியாக இயங்கி தீர்ப்புகளை வழங்க கணேசராஜா சந்தர்ப்பம் வழங்கியதாகவும், நீதிமன்ற நடைமுறைகள் பற்றியும், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கி இருந்ததாகவும், இதன் காரணமாகவே தாம் தன்நம்பிக்கையுடன் தற்போது நீதிவானுக்குரிய கடமைகளை நிறைவேற்ற முடிகிறது எனவும் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் ஜெகசோதி தமதுரையில்;

நீதிவான் கணேசராஜா தாம் பணிபுரிந்த காலத்தில் புத்தர்சிலை வழக்கில் பயமில்லாது தயக்கமில்லாது துணிச்சலான தீர்ப்புகளை வழங்கியதாகவும், அவரது துணிச்சலையும் பாரபட்சமின்மையையும் தாம் வெகுவாக பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

சட்டத்தரணி கா.சிவபாலன், சட்டத்தரணி செந்தில்நாதன் ஆகியோரும் நீதிவானின் பணியை பாராட்டி பேசினார்கள். மேலும் சமுதாய சீர்திருத்தப்பிரிவின் சார்பில் இரவீந்திரன் நீதிவானை பாராட்டி கவிபுனைந்தார்.

நீதிவான் கணேசராஜா தமதுரையில்; நீதிமன்றத் தீர்ப்புகள் மீளாய்வு செய்யப்படுவதற்கும் மேன் முறையீடு செய்யப்படுவதற்கும் மேல் நீதிமன்றங்கள், மேன்முறையிட்டு நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றம் உள்ளதாகவும், தீர்ப்புகளை அதிகாரம் படைத்தவர்கள் விமர்சிப்பது அநாகரிகமானது எனவும், நீதிமன்ற தீர்ப்புகளை அநாகரிகமான முறையில் விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் குறிப்பிட்டார்.

நீதிபதிகளிடம் துணிச்சல், பயமின்மை, பாரபட்சமின்மை இருக்க வேண்டுமெனவும் அப்போது தான் மக்களிடம் நீதித்துறையில் நம்பிக்கை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அவர் கூறினார்.

தலைவர்கள் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் வரலாற்றிலிருந்து யாரும் பாடம் கற்றுக்கொள்ளாத வரை புத்தர்சிலை விவகாரம் போன்ற பிரச்சினைகள் தொடரவே செய்யும் எனக் குறிப்பிட்ட நீதிவான், எனது தீர்ப்புகள் சரியா, தவறா என்பதை காலமும் வரலாறும் தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

கறுப்பின மக்களின் விடிவுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகங்களை மேற்கோள் காட்டி பேசிய நீதிவான் கணேசராஜா தனிமனிதன் ஒருவன் நேசிப்பதற்கும் அதற்காக மரணிப்பதற்கும் உயரிய பொருளை அல்லது பணியை ஒருவன் தன் வாழ்நாளில் கண்டுபிடிக்காவிடில் அவன் வாழ்வதற்கு தகுதியற்றவன். நீங்கள் 38 வயது நிரம்பியவராக இருக்கலாம், ஒரு நாள் உங்கள் முன்னிலையில் அரிய சந்தர்ப்பம் ஒன்று, ஒரு குறிப்பிட்ட கொள்கை, தத்துவம் நீதிக்காக எழுந்து நிற்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்ற போது பயம் காரணமாக அல்லது நீண்டநாள் வாழ வேண்டுமென்பதற்காக, பதவி ஒன்றை இழந்து விடுவோமா என்ற பயம் காரணமாக அல்லது விமர்சிக்கப்படுவோமோ என்ற பயம் காரணமாக அல்லது எமது புகழை இழந்துவிடுவோமா என்ற காரணத்திற்காக அல்லது கத்திக்குத்துக்கு இலக்காகுவோமோ என்ற பயம் காரணமாக, யாராவது உங்களை சுட்டுவிடுவார்கள் அல்லது உங்களுடைய வீட்டினை குண்டுகளால் தகர்த்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக எழுந்து நிற்க மறுப்பீர்களானால் நீங்கள் தொடர்ந்து 90 வயது வரை சென்று வாழலாம். ஆனால் நீங்கள் 90 வயது வரை வாழ்ந்தாலும் முப்பத்தெட்டு வயதிலேயே மரணம் அடைந்து விட்டதாகவே கருதப்படுவீர்கள். மூச்சு 90 வயதில் நின்றாலும் 38 வயதிலேயே உங்கள் ஆன்மாவின் துடிப்பு நின்றுவிட்டதாகவே கருதப்படும்.

நீங்கள் உரிமைக்காக எழுந்து நிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள். நீங்கள் உண்மைக்காக எழுந்து நிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள். நீதிக்காக நீங்கள் எழுந்து நிற்க மறுக்கின்ற போது நீங்கள் மரணித்து விட்டதாகவே கருதப்படுவீர்கள் என குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் சமுதாய சீர்திருத்தப் பிரிவு பொறுப்பதிகாரி சட்டத்தரணி இல்லியாஸினால் நீதிவான் கணேசராஜாவுக்கு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பிலும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணேசராஜா தமது சார்பில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிவபாலனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.


http://sooriyan.com/index.php?option=conte...id=2340&Itemid=

Print this item

  சிங்கள ஊடகங்களுக்கு ஐரோப்பியஒன்றியம் கண்டனம்
Posted by: வினித் - 10-04-2005, 02:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

பயணத் தடை முடிவை திசை திருப்பும் சிங்கள ஊடகங்கள்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
[செவ்வாய்க்கிழமை, 4 ஒக்ரொபர் 2005, 19:36 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான பயணத் தடை விதித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு தொடர்பாக சிறிலங்கா ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


இலங்கை இனப்பிரச்சனைக்கான அமைதி முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பிரதிநிதியின் அறிக்கையை கொழும்பில் உள்ள இங்கிலாந்துக்கான தூதரகம் இன்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயணத் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை பல ஊடகங்கள் சரியாக வெளியிட்டு இருக்கின்றன. இருப்பினும் சில ஊடகங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது நோர்வே அரசாங்கத்துக்கு தோல்வி என்று கூறியுள்ளன. இது உண்மைக்குப் புறம்பானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகும்.

செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட டோக்கியோ இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையில் அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் அனுசரணைப் பணியை தொடர்ந்து ஆதரிப்போம் என்று சொல்லப்பட்டிருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை குறிப்பிட்டுச் சுடிக்காட்டி இருக்கிறது.

அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக ஆதரவு அளிக்கும். சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இருதரப்புப் பேச்சுகளை நடாத்த வேண்டும் என்பதுதான் முதன்மையானது. இப்பேச்சுகளை அனுசரணையாளர்கள் இன்றி நடாத்த முடியாது. இருதரப்பினரிடனும் நோர்வே நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இருதரப்பினரும் மீண்டும் அமைதிப் பேச்சுகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம், நோர்வேக்கு தொடர்ந்து சாத்தியமான வழிகளில் ஒத்துழைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


www.puthinam.com

Print this item

  16 ஆண்டுகளாக புகைபிடித்த மனிதகுரங்கு
Posted by: SUNDHAL - 10-04-2005, 02:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

சீனாவின் வடமேற்கு பகுதி யில் உள்ள சாங்சி மாகா ணத்தில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த மிருக காட்சி சாலையில் `ஆயி' என்ற மனித குரங்கு உள்ளது.

இந்த பெண் குரங்குக்கு 27 வயது ஆகிறது. மிருகக் காட்சி சாலைக்கு வரும் பார் வையாளர்களுக்கு வேடிக்கை காட்ட இந்த குரங்கு சிகரெட் பிடித்தது. பிறகு இதுவே அந்த குரங்குக்கு பழக்கமாகி விட்டது. பார்வையாளர்கள் விட்டெறியும் சிகரெட்டை புகைத்து தள்ளியது. `செயின் ஸ்மோக்கர்' ஆகி விட்ட இந்த குரங்குக்கு சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லை.

16 ஆண்டுகளாக புகை பிடித்து வந்த இந்த குரங்கை புகை பழக்கத்தில் இருந்து விடுவிக்க ஊழியர்கள் அதற்கு தீவிர பயிற்சி அளித்தனர். சிறப்பு சிகிச்சையும் அளித்தனர். பார்வையாளர்கள் அதற்கு சிகரெட் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. சிகரெட்டை மறக்க அந்த குரங்குக்கு இசை நிகழ்ச்சிகளை காட் டினார்கள். சினிமா படம் போட்டு காட்டப்பட்டது. அடிக்கடி வெளியே கூட்டிச் சென்றனர்.

படிப்படியாக அந்த குரங்கு சிகரெட் பழக்கத்தை கை விட்டது. புகை நமக்கு பகை என் பதை அந்த குரங்கு உணர்ந்து கொண்டது. யாராவது சிகரெட்டை கொடுத்தால் திரும்ப அவர்களிடமே வீசி எறிந்து விடுகிறது அந்த குரங்கு.

Print this item

  'எழுகதமிழ்&quot; எழுச்சிப் பேரணி
Posted by: வினித் - 10-04-2005, 01:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

ஐரோப்பிய ஒன்றியத் தடையை எதிர்த்து ஒக். 24-ல் பெல்ஜியத்தில் கண்டனப் போராட்டம்!


<b>தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையை நீக்க வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் திகதி பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறைக்கான ஆணையர் அலுவலகம் முன்பாக கண்டனப் போர் முழக்கம் நடைபெற உள்ளது.</b>

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான பயணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து இந்தப் போராட்டம் நடாத்தப்பட உள்ளது.
<b>தடையை நீக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான கையெழுத்தியக்கமும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கையெழுத்துக்களும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிகார ஆணையரிடம் கையளிக்கப்பட உள்ளது</b>.

<b>புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழர்களும் இந்த மாபெரும் கண்டனப் போர் முழக்கக் கூட்டத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</b>

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாழ். பொங்கு தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரும் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது.

மேலதிக விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.



www.puthinam.com

Print this item

  விருது பெற்ற புகைப் படங்கள் சில
Posted by: narathar - 10-04-2005, 09:48 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (18)

உலக செய்திப்பட நிறுவனத்தின் 50ஆவது விருது வழங்கல் தினத்தில் BBC இணயத் தளத்தில் வெளியான விருது பெற்ற புகைப் படங்கள் சில.

<img src='http://img387.imageshack.us/img387/5168/66xs.jpg' border='0' alt='user posted image'>

1976: Françoise Demulder of Gamma agency ஆல் பெய்ரூட்டில் எடுக்கப்பட்ட படம்,ஒரு பலஸ்தீனிய அகதி.

Print this item

  வணக்கம் நான் கரிகாலன்
Posted by: கரிகாலன் - 10-04-2005, 08:34 AM - Forum: அறிமுகம் - Replies (51)

Vanakam Yarl uravukale naan Karikaalan <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
tamil font velai seiya vellai manikkavum !! :roll:[/url][/code]

Print this item