![]() |
|
16 ஆண்டுகளாக புகைபிடித்த மனிதகுரங்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 16 ஆண்டுகளாக புகைபிடித்த மனிதகுரங்கு (/showthread.php?tid=3035) |
16 ஆண்டுகளாக புகைபிடித்த மனிதகுரங்கு - SUNDHAL - 10-04-2005 சீனாவின் வடமேற்கு பகுதி யில் உள்ள சாங்சி மாகா ணத்தில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த மிருக காட்சி சாலையில் `ஆயி' என்ற மனித குரங்கு உள்ளது. இந்த பெண் குரங்குக்கு 27 வயது ஆகிறது. மிருகக் காட்சி சாலைக்கு வரும் பார் வையாளர்களுக்கு வேடிக்கை காட்ட இந்த குரங்கு சிகரெட் பிடித்தது. பிறகு இதுவே அந்த குரங்குக்கு பழக்கமாகி விட்டது. பார்வையாளர்கள் விட்டெறியும் சிகரெட்டை புகைத்து தள்ளியது. `செயின் ஸ்மோக்கர்' ஆகி விட்ட இந்த குரங்குக்கு சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லை. 16 ஆண்டுகளாக புகை பிடித்து வந்த இந்த குரங்கை புகை பழக்கத்தில் இருந்து விடுவிக்க ஊழியர்கள் அதற்கு தீவிர பயிற்சி அளித்தனர். சிறப்பு சிகிச்சையும் அளித்தனர். பார்வையாளர்கள் அதற்கு சிகரெட் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. சிகரெட்டை மறக்க அந்த குரங்குக்கு இசை நிகழ்ச்சிகளை காட் டினார்கள். சினிமா படம் போட்டு காட்டப்பட்டது. அடிக்கடி வெளியே கூட்டிச் சென்றனர். படிப்படியாக அந்த குரங்கு சிகரெட் பழக்கத்தை கை விட்டது. புகை நமக்கு பகை என் பதை அந்த குரங்கு உணர்ந்து கொண்டது. யாராவது சிகரெட்டை கொடுத்தால் திரும்ப அவர்களிடமே வீசி எறிந்து விடுகிறது அந்த குரங்கு. - தூயா - 10-05-2005 குரங்கிற்கு இருக்கிற அறிவு சில மனிதர்களிடம் இல்லையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-05-2005 அது சரி எதாவது தமிழ்ப்படம் போட்டுக் காட்டியிருப்பினம் குரங்கு சிகரெட்டை விட்டிருக்கும் (சிகரெட்டை விட படத்திலை கிக் யாஸ்தியா இருந்ததாலோ என்னவோ...) - தூயா - 10-05-2005 இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் முகம்ஸ்??? பொன்னம்மாக்காவுக்கு தெரியுமா? - SUNDHAL - 10-05-2005 தமிழ்படங்கள எடுத்திட்டு வர சொல்றதே அவா தானே...பொன்னம்மாக்காவோட புன்னியத்தில அவர் தமிழ் படம் பாக்கிறார்... |