Yarl Forum
ஆனந்தம் பொங்குதே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆனந்தம் பொங்குதே... (/showthread.php?tid=3032)



ஆனந்தம் பொங்குதே... - SUNDHAL - 10-04-2005

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் தெரி யுமா?... ஐஸ்லாந்துக் காரர் கள்தான். அந்நாட்டில் 94 சத வீதம் பேர் தாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து,ஸ்வீடன், டென் மார்க், நாட்டுக் காரர்கள் வாழ்க்கையில் திருப்தி 91 சதவீதம் இருக்கிறதாம். இதற்கடுத்த இடத்தில் இருப்பவர்கள் ஆஸ்திரேலியாக்காரர்கள். இவர்கள் 90 சதவீதம் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறுகி றார்கள். நமது நாட்டு மக்களில்(India) 40 சதவீதம் பேரே மகிழச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா?... முதல் நான்கு இடத்தில் இருப்பவர்கள் ஐரோப்பியர்கள்தான்.

வாழ்க்கையை விரக்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா?...அவர்களும் ஐரோப்பாவில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெல்ஜியம் நாட்டினர். இவர்கள் மைனஸ் 24 சதவீதம் விரக்தியாக உள்ளனர். இத்தனைக்கும் அந்நாட்டு மக்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அடப்பாவமே!


- stalin - 10-04-2005

இதே நேரத்தில் மேற்குலக நாடுகளில் 50களிலையும் இப்போதைய காலகட்டத்தையும் ஒப்பிடும் பொழுது இப்பொழுது பல வசதிகளையும் உழைக்கும் தனிவருமானம் அதிகரித்து இருந்தாலும் ஒப்பீட்டளவில் சந்தோசம்(happiness) இவர்களிடம் அதிகரிக்கவில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது

இதிலிருந்து தெரிவது என்பது எதுவெனில் சந்தோசம் பணத்திலோ ஆடம்பர வசதிகளிலோ தங்கியிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது

ஒரு தேவையின் திருப்தி மாதிரி இருப்பது இன்னொரு தேவையை உருவாக்கிறது

john harry உளவியலாளர் கூறுகிறார் மேற்குலகில் இருக்கும் சராசரி ஒருவர் சந்தோச திருப்தியோடு இந்தியாவில் குக் கிராமத்தில் இருக்கும் சராசரிகளோடு ஒப்பிடும் போது பொருளாதர மேம்பாடு இல்லாத போதும் இவர்களுடன் சந்தோசம் அதிகமுள்ளது என்று கூறுகிறார்


- SUNDHAL - 10-05-2005

ஆம் அத உண்மை தான்..............
என்ன தான் ஏழைகளாக இருந்தாலும் அவர்களிடம் ஒரு மகிழ்ச்சி கானப்படும்.....