![]() |
|
சிவாஜி எனும் இமயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சிவாஜி எனும் இமயம் (/showthread.php?tid=3043) |
சிவாஜி எனும் இமயம் - Birundan - 10-03-2005 நடிகர் திலகம் உனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையாம்! குடகு மலையைக் கடந்தாயா என இமய மலையைக் கடந்தவனிடம் கேள்வி! பிரான்சுக்கும் எகிப்துக்கும் தெரிந்த உண்மை -இங்குள்ள பீஷ்மர்களுக்கு மட்டும் தெரியாதாம்! சிதம்பரனார் செல்ல மகன் சினிமா என்பதையும் மறந்து "ஐயோ அப்பா!" என்றரற்றினாராமே! -இந்த சிறப்புக்கு முன் ஆஸ்கார் எந்த மூலைக்கு? விண்ணுலகில் கூட... சிவனும் ,சிதம்பரனாரும் கட்டபொம்மனும் ,கர்ணனும் அப்பரும் ,அம்பிகாபதியும், ஜார்ஜ்-ம் ,சாக்ரட்டீசும் கண்ணாடி பார்ப்பதற்கு பதில் உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே? ************************************* நன்றி> கணியம் |