![]() |
|
ஒழுங்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஒழுங்கை (/showthread.php?tid=3047) Pages:
1
2
|
ஒழுங்கை - Birundan - 10-03-2005 ஒழுங்கா இருப்பது ஒழுங்கை குழைக்காட்டானின்ர படத்தைப் பாத்த உடன ஒழுங்கை ஞாபகங்கள் வந்திட்டுது. அனேகமா சைக்கிளோ மோட்டச் சைக்கிளோ போற அளவில ஒழுங்கைகள் இருக்கும். இதுகள குச்சொழுங்கை எண்டும் சொல்லுவம். சில ஒழுங்கைகளுக்குள்ளால மாட்டுவண்டில், கார் கூடப் போய்வரலாம். அதுகள தனிய ஒழுங்கை எண்டு சொல்லுவம். அனேகமா ரெண்டு பக்கமும் வேலிஅடைக்கப்பட்டிருக்கும். அப்பிடி வேலியடைக்கப்பட்டிருக்கிற இடங்களில ஒழுங்கை எந்தநேரம் இணலுக்குள்ளதான் (நிழல் எண்டதின்ர பேச்சு வடிவம் தான் இணல்) இருக்கும். யாழ்ப்பாணத்தில அனேகமா பூவரசுதான் வேலிக்கதியாலா நிக்கும். அதுக்கடுத்தபடியா முள்முருக்கு அல்லது கிளுவை நிக்கும். எங்கயாவது அருந்தலா வாதனாராணி அல்லது சீமைக்கிளுவை (இதை யப்பான் மரமெண்டும் சொல்லிறானங்கள்) நிக்கும். உந்த ஒழுங்கை பிரிப்புகளில பெரிய காணிச்சண்டைகள் கூட வந்திருக்கு. சகோதரங்களுக்குள்ள வெட்டுக்குத்துகூட நடந்திருக்கு. எங்கட ஊரில ஒழுங்கை கூட்டிற ஆக்களைக் காணலாம். தங்கட தங்கட வளவுகளுக்கு முன்னால இருக்கிற ஒழுங்கையின்ர பகுதிகளில கொட்டுப்பட்ட பூவரசம் அல்லது கிளுவைச் சருகுகளைக் கூட்டியள்ளுவினம். எனக்கு அப்பவே உந்தப் "பெண்டுகளின்ர" ஒழுங்கை கூட்டல் ஏனெண்டு விளங்கிறேல. கோடையில ஒழுங்கைக்குத் தண்ணிகூடத் தெளிச்சு வைப்பினம். வேலயில்லாத பிரச்சின எண்டு நான் நினைக்கிறது. பொழுது போக வேணுமெண்டு ஏதாவது செய்யிறதாத்தான் நான் நினைக்கிறது. இப்ப யோசிச்சுப் பாக்கேக்க ஒருவிதத்தில அது நல்லதெண்டுதான் நினைக்கிறன். சும்மா வேலவெட்டியில்லாம சமைக்கிறதும் தோய்க்கிறதும் முடிஞ்சிட்டா பிள்ளையள் பள்ளிக்கூடத்தால வரும்வரைக்கும் அக்கம்பக்கத்தில சேந்து பூராயம் கதைக்கிறதெண்டுதான் கிராமங்களில பொழுதுபோறது. அப்ப எங்க உந்த தொலைக்காட்சிப்பெட்டியளும் மின்சாரமும். (அதுக்காக நானேதோ அம்பது வருசத்துக்கு முந்தின கதையக் கதைக்கிறன் எண்டு நினையாதையுங்கோ. வெறும் பதினஞ்சு வருசத்தயக் கதை) சிலவேளை அதிலயே சண்டைகள் வரும். சும்மாசும்மா கதையளக் கட்டுறதுக்கெல்லாம் எங்கட ஆக்களக் கேக்கவேணுமே? அந்தவிதத்தில இப்பிடியேதாவது செய்து வீண்வம்புகள விலைக்கு வாங்காமல் இருக்கிறது நல்லந்தானே? இண்டைக்கு எந்தநேரமும் ரி.விப் பெடடிக்கு முன்னால இருக்கிறதக்கூட உந்த விசயத்துக்காக நான் வரவேற்கிறன். ஆம்பிளையள் எங்கயாவது மதவடியில குந்தியிருப்பினம். இல்லாட்டி ஏதாவதொரு மரத்துக்குக்கீழ கடுதாசியோ தாயமோ விளையாடுவினம். கிராமப் பக்கங்களில அரசாங்க வேல செய்யாத ஆக்கள் வேலவெட்டியில்லாமல் ஓய்வாயிருக்கிற சந்தர்ப்பம் அதிகம்தானே. அனேகமா வெறியில்லாட்டி ஆம்பிளைகளுக்குள்ள சண்டைவாறது குறைவுதான். சரி எங்க விட்டன்? ஆ.. ஒழுங்கை பற்றிக் கதைக்க வந்து என்னவோ கதைச்சுப்போட்டன். ஒழுங்கைகள் எண்டா கட்டாயம் தார் போடாமல் சாதாரணமாத்தான் இருக்கோணும். (அந்த நேரத்தில பெரிய பாதைகளே முந்தியொருக்கா தார் போட்டிருந்தது எண்ட அடையாளத்தோட மட்டுந்தான் இருந்திச்சு.) ஒழுங்கைகள் எப்பவும் நேர்ப்பாதையா இருக்கக்கூடாது. வளைஞ்சு வளைஞ்சு போகவேணும். இதில ஒரு சிக்கல் இருக்கு. வேலிய உயத்தி அடைச்சிருந்தா முடக்குகளில எதிர்ப்பக்கம் வாறவங்களைத் தெரியாது. சைக்கிளில பெல் இருக்காதபடியா முடக்குகள் வரேக்க, "பெல் இல்ல பிரேக் இல்ல அடிபட்டாக் கேள்வியில்ல" எண்டு ஒரு ராகத்தோட கத்திக்கொண்டுதான் திரும்புவம். எங்களுக்கு முதல் எதிர்ப்பக்கத்திலயிருந்து கத்தல் வந்தா நாங்கள் உடன வேலிக்கரைக்கு சைக்கிள விட்டிடோணும். சிலநேரங்களில அப்பிடிக் கத்துறதுக்கு வெக்கமாயிருந்தா, (ஆனேகமா எங்களோட படிக்கிற, அல்லது எங்களுக்குள்ள ஏதோவொண்ட உருவாக்கிற பொம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடிருக்கிற இடமாயிருக்கும்) அப்பிடியே சைக்கிளில எழும்பிநிண்டு வேலிக்குமேலால அந்த முடக்குப் பாதையப் பாத்திட்டுத் திரும்புவம். அதிலயும் சிக்கல் வந்திச்சு. இப்பிடித்தான் ஒரு முடக்கில நாங்கள் பள்ளிக்கூடத்தால வரேக்க எழும்பிப்பாத்திட்டுத் திரும்பிறனாங்கள். சைக்கிளில வரிசையாப் பவனிவாறநேரத்தில முன்னுக்குப்போறவன் மட்டும் அப்பிடி பாதையக் 'கிளியர்' பண்ணிப்போட்டுப் போனாச்சரிதானே? ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார். அந்த முடக்கில கத்துறதும் நாகரீகக் குறைவெண்டபடியா பேசாமல்தான் முடக்கால திரும்பினம். ஆனா ஒருநாள் எதிர்ப்க்கம் வந்த ஒரு சைக்கிளோட முன்னுக்குப்போனவன் மோதி, அடுத்தடுத்து மொத்தம் ஆறு சைக்கிளுகள் விழுந்தபிறகுதான் திருந்தினம். பிறகென்ன பழையபடி அந்த முடக்கில 'பெல் இல்ல.. பிறேக் இல்ல..." உப்பிடி ஒழுங்கை பற்றிக் கனக்க கதைச்சுக் கொண்டே போகலாம். உங்களுக்குக் கேக்கிற பொறுமை வேணுமே? அதால இதோட நிப்பாட்டுறன். நன்றி< பூராயம் - வெண்ணிலா - 10-03-2005 Quote:ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: ஒழுங்கை - Jenany - 10-04-2005 "பெல் இல்ல பிரேக் இல்ல அடிபட்டாக் கேள்வியில்ல" எண்டு ஒரு ராகத்தோட கத்திக்கொண்டுதான் திரும்புவம். எங்களுக்கு முதல் எதிர்ப்பக்கத்திலயிருந்து கத்தல் வந்தா நாங்கள் உடன வேலிக்கரைக்கு சைக்கிள விட்டிடோணும். சிலநேரங்களில அப்பிடிக் கத்துறதுக்கு வெக்கமாயிருந்தா, (ஆனேகமா எங்களோட படிக்கிற, அல்லது எங்களுக்குள்ள ஏதோவொண்ட உருவாக்கிற பொம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடிருக்கிற இடமாயிருக்கும்) அப்பிடியே சைக்கிளில எழும்பிநிண்டு வேலிக்குமேலால அந்த முடக்குப் பாதையப் பாத்திட்டுத் திரும்புவம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன பிருந்தன்? சொந்த அனுபவத்தை எழுதி இருக்கிறீங்களா? நல்லா இருக்கு.... - ப்ரியசகி - 10-07-2005 ம்ம் பிருந் தன் அண்ணா..அனுபவம் அப்பிடி பேசுது போல.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இங்க இந்த பெரீய ரோடீல போறப்போ கூட ஒழுங்கையால சைக்கிள் ஓடுற பீலிங் வராது
- கோமதி - 10-07-2005 உதை வேற எங்கயோ பாத்த மாதிரிக்கிடக்கே? குரல்பதிவும்கூட இணைக்கப்பட்டிருந்துதே? - வெண்ணிலா - 10-07-2005 கோமதி Wrote:உதை வேற எங்கயோ பாத்த மாதிரிக்கிடக்கே? குரல்பதிவும்கூட இணைக்கப்பட்டிருந்துதே? அதுதான் நன்றி பூராயம் என்று சொல்லியிருக்கெல்லோ. - aathipan - 10-07-2005 "ஒழுங்கை"; படிக்கும் போது மீண்டும் எங்கட ஊருக்கு போனமாதிரி இருந்தது. ஓழுங்கைக்குள்ளால போய்வந்துதானே நாங்கள் எல்லாம் வளர்ந்தம். முதல் மெயின் ரோட்டால போன ஆமி பிடிப்பான் பிறகு ஹெலி சுடும் பம்பர்ல இருந்து பாத்தா தெரியும் என்று முழுக்க ஓழுங்கைக்கை வாழ்ந்துட்டம். எந்த இடம் எண்டாலும் அதுக்கு ஓழுங்கைகளுக்கால போகக்கூடியதா இருக்கும். சிலநேரம் றோட்டை கடக்கவேண்டியிருக்கும் அவ்வளவுதான். ஆமிக்குப்பயந்து நாங்க ஓழுங்கைக்கால போவம் ஆனால அதுக்கை நாயல் விட்டுதுரத்தி விழுறது பெரிய முசுப்பாத்தி. பெரும்பாலும் ஒழுங்கையள் எல்லாம் வேலியடைச்சு இருந்தாலும் அதைவைச்சு அந்த அந்த வீட்டுக்காரர் பணக்காரரா இல்லையா எண்டு சொல்லாம். சில வேலிகள் உத்துப்போய் கதியால் மட்டும் நிக்கும். சிலது சதாரணமா கிடுகால அடைச்சு இருக்கும். சிலது மனைமட்டை வச்சு வடிவா வரிஞ்சு கட்டி இருக்கும். சிலது மேல தகரம் வைத்து அடைச்சு இருக்கும். கிடுகு வேலில சில இடங்கள்ள ஒரு பொத்து இருக்கும். பொத்துக்கால புூந்து போய்வரலாம். வளவு பெரிசா இருக்கும் எல்லாத்துக்கும் படலையைத்திறந்து போக முடியுமா அதால பெம்பிளையள் பொத்து வைப்பினம் வேலிக்கு வேலி. நாயும் அதுக்கால தான் வரும். சில இடங்கள்ளை நாய் தான் போத்து வைக்கும் பிறகு சனங்கள் அதுக்கை புூந்து புூந்து போய் பெரிசாக்கிடுவினம். சில ஓழுங்கைக்கை அதிகம் சனம் வராது. படலையள் றோட்டுப்பக்கம் இருக்கும். அந்த மாதிரி ஒழுங்கைக்கைதான் டூட்டறிக்கு படிக்கப்போறன் எண்டு பெட்டை பெடியள் லவ் பண்ணுவினம். பெரும்பாலும் வேற இடத்துப் ஆக்கள்தான் நிண்டு கதைப்பினம். அவையள தொந்தரவு கொடுக்க எணடு ஒரு பொடிசுகள் கூட்டம் இருக்கும் அதுகள் சைக்கிள் பளகிறன் எண்டு அடிக்கடி அதுக்கால போய்வருங்கள். அந்தக்காலத்துச் சைக்கிள்ளை ஒரு பெரிய பெல் இருக்கும். அதைப்போட்டு அடிக்குங்கள். சிலதுல பெல் மூடி கூட இருக்காது. அது டொக்கு டொக்கு எண்டும். காதல் பண்ணுறவை அடிக்கடி இடத்தை பாத்திக்கொண்டு இருப்பினம். எல்லாம் ஓழுங்கையாத்தானிருக்கும். சில ஓழுங்கைகள் பொல்லாத ஓழுங்கைளா இருக்கும் ஏதாவது குடிகாறன்வீடு பக்கத்தில இருந்தா அது பொல்லாத ஓழுங்கை குடிகாறன் குடிச்சுப்போட்டு போறவாற ஆக்களோட சண்டித்தனம் செய்வான். அந்தமாதிரி ஓழுங்கைகால பொம்பிளைப்பிள்ளையள அனுப்ப மாட்டினம். அவங்கள் யாரும் சேட்டை விட்டுடுவாங்கள் எண்டு. சிலவேளை ஓழுங்கைக்கை போறதுக்கு துணை வேண்டியிருக்கும். காவாலிகள் ஓழுங்கை எண்டு சொல்லுவினம். ஓழுங்கைள் பெரும்பாலும் மண்ணாத்தான் இருக்கும். கால வைச்சாலே முள்ளுக் குத்தும். வண்டிபோற பாதை மட்டும் மண்ணா இருக்கும் மற்ற இடங்கள் முள்ளுச்செடியா இருக்கும். சில ஓழுங்கைக்கை மேடாக்கிறன் எண்டு உடைச்ச வீட்டுக் கல்லைப்போட்டு வைச்சிருப்பினம். இந்த மாதிரி ஓழுங்கைக்கை சைக்கிள் கவனமா ஓட வேணும் இல்லை எண்டா காத்துப்போய் நடக்க வேண்டியதுதான். ஓழுங்கைக்கை அக்சிடண்ட் கூட நடக்கும். அக்சிடன்ட் எண்டோன பெரிசா பயந்துபோடாதுங்கோ. அதிகமா அடிபடுறது சைக்கிளும் சைக்கிளும் இல்லை எண்டா சைக்கிளும் ஆளும் தான். - Birundan - 10-07-2005 vennila Wrote:கோமதி Wrote:உதை வேற எங்கயோ பாத்த மாதிரிக்கிடக்கே? குரல்பதிவும்கூட இணைக்கப்பட்டிருந்துதே? இந்த சைசு போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேனுமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: ஒழுங்கை - Rasikai - 10-07-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 10-07-2005 ஒழுங்கையைப் பற்றி கதைக்கும் போது எனது பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றது.... நாங்கள் 5ம் வகுப்பு படித்து வேறு பாடசாலைக்கு போன பின்பு தான் குழப்படி செய்தோம். ஒழுங்கைக்குள் வரும்போது பெல் இல்ல பிரேக் இல்ல அடிச்ச முன் வாய் பல்லு இல்லை என்று சொல்கிறானாங்கள். இதெல்லாம் எங்கடை வகுப்பு பையன்களிடம் இருந்து பழகிக் கொண்டோம். எனக்கு இன்னும் ஞாபகம். எங்கள் வீட்டு ஒர் ஒழுங்கையின் கடைசி வீடு. அந்த ஒழுங்கையில் இருப்பவர்களின் குடும்பங்களில் நான் தான் சின்னப் பிள்ளை. ஆகவே ஒருதரும் என்னை கணக்கில் எடுக்க மாட்டினம். எமது ஒழுங்கை வந்தவுடன் நல்ல விரைவாக சைக்கிளை மிதித்து விட்டு பின்னார் காலை தூக்கி பின் கரியரில் போட்டுக் கொண்டு ஒடுவது எல்லாம் நினைக்க இப்ப சிரிப்பாய் இருக்கு..... - Rasikai - 10-07-2005 ஆகா றமா நீங்களும் இப்படி சொல்லி ஓடி இருக்கிறீர்களா? ம்ம்ம் நாங்கள் நாய் துரத்தினால் காலை தூக்கி சைக்கிள் முன் கான்டில போட்டு விட்டு வேலிக்கை விழுந்தும் இருக்கிறம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 10-07-2005 ரசிகை நாயைக் கண்டால் உடனே சிவா சிவா என்போம். இல்லாவிடின் வயிரவா வயிரவா என்போம். ஆனால் பல சமயம் அது உண்மை மாதிரி.... துரத்தும் இப்படி நாங்கள் சொன்னவுடன் பேசமால் போய் விடும் - Rasikai - 10-07-2005 ஆகா அப்படியா? நாங்கள் நாயை கண்டால் அதை விட வேகமாக ஓடுவமாக்க்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 10-07-2005 ஆனாலும் அது உங்களைப் பிடித்திடும் தானே... எத்தனை சட்டையை கிழித்திருக்கும்? - Rasikai - 10-07-2005 ஆஆஆஆ இப்படி பப்ளிக்ல இது எல்லாம் சொல்லக்கூடாது :oops: - RaMa - 10-08-2005 ஆனால் அங்கு உள்ள நாய்கள் பாவம். இங்குள்ள நாய்கள் எவ்வளவு அதிஷ்சாலிகள் - MUGATHTHAR - 10-08-2005 RaMa Wrote:எமது ஒழுங்கை வந்தவுடன் நல்ல விரைவாக சைக்கிளை மிதித்து விட்டு பின்னார் காலை தூக்கி பின் கரியரில் போட்டுக் கொண்டு ஒடுவது எல்லாம் .....அது பிள்ளை நீங்களே.................. ஏனெண்டால் முந்தி உரும்பிராயிலை ஒரு பெம்பிளை ரவுடி இருக்கெண்டு எங்களை தனியப் போக விடமாட்டினம் அது தான் சொன்னன்..... - வெண்ணிலா - 10-08-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கோமதி - 10-08-2005 பிருந்தன் அண்ணா, நீங்கள் எடுத்துப்போட்ட பதிவின்ர சரியான முழுச்சுட்டியையும் இணைச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும். தனிய புூராயம் எண்டு போடுறதவிட அது நல்லம். ஏனெண்டா அங்க ஒலிப்பதிவும் இருந்திச்சு. நான் போய்க்கேட்டுட்டு வாறன். எழுத்தில இருக்கிறதவிட அந்த ஒலிப்பதிவக் கேக்கிறது நல்லாயிருந்திச்சு. அதால மூல இணைப்பின்ர முழுச்சுட்டியையும் தந்திருந்தா விரும்பிறவர்கள் அங்கயும்போய் பாத்து, கேட்டு சந்தோசப்பட்டிருக்கலாம்தானே? - ப்ரியசகி - 10-08-2005 Rasikai Wrote:ஆஆஆஆ இப்படி பப்ளிக்ல இது எல்லாம் சொல்லக்கூடாது :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன அக்காமார் பழைய கதைகள் எல்லாம் அலசுறீங்கள் போல..எண்டாலும் காலை கரியரில் போடுவது கஷ்டம் தான் கடைசி வரைக்கும் எனக்கு சரி வரல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஆனால் நான் ஒரு 8ம் ஆண்டும் படிக்கையில் என்னோட கிளாஸ் பாய்ஸ் என் வீட்டு பக்கத்தால் வரும் போது...எட்டி என்னைக்கூப்பிட்டு விட்டு ப்போனதுக்கு எங்கம்மா.."எவண்டா அவன்" எண்டு பேசினது ஞாபகம் இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அவங்கள் பயத்தில ஓடி ஒரு குட்டி ஒழுங்கைக்க சைக்கிளை விட்டு தடுமாறி..ஈச்சம் மரத்துக்க விழுந்ததா அடுத்த நாள் ஸ்கூலில சொல்லி சிரிச்சாங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |