Yarl Forum
அநுராவுக்குப் பதிலாக முஸ்லிம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அநுராவுக்குப் பதிலாக முஸ்லிம் (/showthread.php?tid=3042)



அநுராவுக்குப் பதிலாக முஸ்லிம் - mayooran - 10-04-2005

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் பிரேரிக்கப்பட்டிருக் கும் அநுராபண்டாரநாயக்கா, தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் பிரசாரப் பணிகளில் ஈடுபாடுகாட்டாமல் ஒதுங்கி நிற்கிறார். இதனால், அவரது இடத்துக்கு சிறுபான்மையினரான முஸ்லிம்களின் சார்பில் ஒருவரை முன்னிறுத்தி பிரசாரப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்து சுதந்திரக் கட்சிக்குள் தீவிரமடைந்து வரு வதாகத் தெரிகிறது.
சுற்றாடல், இயற்கை வன வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி பிரசாரப் பணிகளை முன்னெ டுக்கும் திட்டத்துக்கு ஆதரவு தேடும் வேட் டையில், தற்போது கட்சிக்குள் பலமடைந்து வரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதர வாளர் அணி இறங்கியிருப்பதாகக் கூறப்படு கின்றது.
கட்சியின் கொள்கை நிலைப்பாடு மற் றும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் ஆகியவை தொடர்பான விடயங்களில் கட்சித் தலைவி யும், ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங் கவுக்கும், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது தெரிந்ததே.
ஜனாதிபதியின் சகோதரரான வெளிவிவ கார அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா இவ் விடயத்தில் ஜனாதிபதி பக்கமே நிற்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜ பக்ஷவைத் தெரிவுசெய்துள்ள சுதந்திரக் கட்சி, தேர்தலில் அவருக்கு ஜோடியாக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அநுரா பண்டார நாயக்காவை நிறுத்தியுள்ளது என்பது தெரிந் ததே.
ஆனால், சந்திரிகா மஹிந்த ராஜபக்ஷ கருத்து முரண்பாட்டில் சந்திரிகா பக்கம் நிற் கும் அநுரா பண்டாரநாயக்கா, அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யாமல், பிரசாரப் பணிகளைப் பகிஷ்கரித்து வருகிறார். தற்போதைய வேளையை வெளிநாடுகளில் கழித்துவருகின்றார்.
தேர்தலில் பிரதமர் மஹிந்தவுக்கு ஜோடி யாகக் கட்சியால் நிறுத்தப்பட்டவர் பிரசாரப் பணிகளைப் புறக்கணித்துவருவது மஹிந்த அணியினரை விசனத்துக்கும் சீற்றத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றதாம்.
இதனால் அநுராவின் இடத்துக்குப் புதிய வர் ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்து வதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளை முடுக்கி, உற்சாகப்படுத்தலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இப்பொறுப்புக்குச் சிறுபான்மையினரான முஸ்லிம் ஒருவரை நிறுத்தினால் இலங்கை முழுவதும் சிதறி வாழும் முஸ்லிம்களின் முழு வாக்குகளையும் அந்த முஸ்லிம் பிரமுகரின் தேர்தல் ஜோடியாக நிற்கும் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு அள்ளி எடுக்கலாம் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மூத்த உறுப்பினரும், இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வு காண் பதில் அதிக ஆர்வம் காட்டுபவருமான அமைச் சர் ஏ.எச்.எம்.பௌஸியை பிரதமர் வேட்பாள ராக நிறுத்துவதன்மூலம் தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பேரினவாதப் போக்குக் குற்றச்சாட்டையும் ஓரளவுக்கு நிவர்த்தி செய்யலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனராம்.
தங்களது இந்த யோசனைக்குக் கட்சிக்குள் ஆதரவு தேடும் வேட்டையிலும் அவர்கள் இறங்கியிருக்கின்றனர் என்று கூறப்படுகின் றது.
uthayan


வடமராட்சியில் இளைஞர் எரியுூட்டிக் கொலை - mayooran - 10-04-2005

யாழ். மாவட்டம் வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் எரியுூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வரணி இயற்றாலையைச் சேர்ந்த 23 அகவையுடைய செந்து}ரன் என்ற இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.
இவர் செலுத்தி வந்ததாகக் கூறும் கன்டர் ரக ஊர்தியில் வைத்து எரியுூட்டி கொல்லப்பட்டுள்ளார


- sinnappu - 10-04-2005

அப்ப சொல்லுறீங்கள் ஒரு முஸ்லீம் வேற களத்தில இறங்கிறார் எண்டு

சரி உவர் மகிந்தவுக்கு முஸ்லீம்கள் கேம் குடுத்தா என்ன செய்வாராம்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: