Yarl Forum
யாழ் கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ் கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் (/showthread.php?tid=3048)



யாழ் கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் - mahilan - 10-03-2005

<b>மகிழன்
அருச்சுனா இணையத்தளம்
தமிழீழம்

03 10 2005</b>

யாழ் களம்,

என் உயிரிலும் மேலான புலத்து உறவுகளுக்கும் யாழ்கள அமைப்பாளர்களுக்கும் வணக்கம்.

யாழ்களம் ஊடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இதேவேளை சில தினங்களில் கண்டவற்றை எனது மனதில் பதிந்தவற்றை எழுதலாம் என நினைக்கிறேன் யாரையும் புண்படுத்ததுவது எனது நோக்கமில்லை. எனது அன்பு உறவுகளே யாழ் இணையத்தை செய்பவர்கள் தாயகத்தின் விடுதலையின் பொருட்டும் பிற நல்ல நோக்கத்திற்காகவும் இதனைச் செய்கிறார்கள் என நினைக்கிறேன. ஆனால் சிலர் தாயகத்தையும் ஒருசில தனி நபர்களின் பெயர்களையும் போராட்டத்தையும் தொடர்புபடுத்தி பொறுப்பற்ற முறையில் எழுதுவதை காணக்கூடியதாகவுள்ளது. இதனால் நான் மிக வேதனை அடைகிறேன். தாயக விடுதலைப் போராட்டம் எந்தத் தனிமனிதனுடையதுமில்லை எங்களுடையது. எனவே தனி நபரை சம்மந்தப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். 18000 மாவீரர்கள் மற்றும் 80000 தாயக உறவுகளின் உயிரும் அதுதவிர புலத்திலுள்ள உங்களின் குருதியும் வியர்வையும் இழந்துதான் இன்றைக்கு உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். எனவே தனிநபரின் விமர்சனத்தை விட்டு தமிழீழத் தேசிய தலைவரின் கரத்தைப் பலப்படுத்தி தாயகவிடுதலையை வெல்வோம். இதேவேளை யாழ் இணையம் ஊடாக பயன்னுள்ள நல்ல கருத்துக்களைத் தந்து தாயக விடுதலைக்கு வலுச் சேர்ப்பதுடன் இளைய தலைமுறைக்கு நல்வழி காட்டுங்கள். பெரும்பாலும் நல்ல கருத்துகளை நிறையப் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. கருத்துக்களை எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. இத்துடன் யாழின் தொழில்நுட்வியலாளர்கள் புலத்தில் பல்வேறு இடங்களில் இருப்பதாய் அறிந்தேன். அவர்களிற்கும் எனது நன்றிகள்


<b>என்றும்
அன்புடன்
மகிழன்
அருச்சுனா இணையத்தளம் (விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவு)
தாயகம்
http://www.aruchuna.com/
</b>


- selvanNL - 10-03-2005

மகிழன் அவர்களுட்கு, உங்களின் கருத்தை மிகவும் வரவேற்கிறோம், உங்களின் கருத்துக்கு நன்றி.

மேலும் நீங்கள் கூறிய தனி நபர்கள் (போராட்டத்தோடு சம்பந்தப்படாத, எதிரான) பற்றிய கருத்துக்களை சக உறுப்பினர்கள் புரிந்து செயற்படுவார்கள் என்று நம்புகிறேன், மேலும் நீங்கள் உற்சாகபடுத்தியதை, படுத்தி களத்தை மேம்படுத்த வேண்டும் (அனுபவம் உள்ளவர்கள், புரிந்து செயற்படுவீர்கள்)..

மேலும் தமிழீழத்தில் இருக்கும் இளையோர்களுக்கு பயன் படும் விதத்தில் கருத்துக்கள் வரும், தற்பொழுதும் சில வந்துகொண்டு இருக்கின்றன. எங்களுக்கு தெரிந்தவற்றை கண்டிப்பாக இங்கே பிரசுரிப்போம், அதை சக நண்பர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

சக உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைத்து மகிழனின் ஆதங்கத்துக்கு, விருப்பத்துக்கு வழி சமைப்பீர்கள் என உறுதி கூறுவோமாக..

நன்றி, தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.


- kurukaalapoovan - 10-03-2005

நன்றி மகிழன்,

அருச்சுணா இணயத்தளம் சம்பந்தம் இல்லாதா கேள்வி சில கேக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றய களஉறவுகளிற்கும் கேள்விகள் கேக்க இருக்கும். :roll:

குறிப்பாக ஓளிவீச்சு மற்றும் தமிழ் தேசிய தொலைக்காட்சி பற்றியவை.

அமைப்பின் ஊடகத்துறை பிரதிநிதி ஒருவர் யாழ்களத்தில் இணைந்தால் நல்லா இருக்கும் எல்லோ? :wink:


- வியாசன் - 10-03-2005

மகிழன் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு
இங்கு நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள தவறிவிட்டீர்கள். பெரும்பாலும் உறுப்பினர்கள் அரட்டையடி;பதையே விரும்புகின்றனர். ஒரு சிலர் விடுதலைக்கு எதிரான(சிலவேளைகளில் வேண்டுமேன்றோ என்னவோ ஆதரவான கருத்துக்களை வரவழைப்பதற்காவோ) சில கருத்துக்களை வைக்கும்போது அது தனிநபர் தாக்குதலாக அமைந்துவிடுகின்றது. மட்டுறுத்துனர்களுக்கும் நேரமின்மையால் அதை தட்டிக்கேட்க முடிவதில்லை. அவர்கள் அந்த விடயத்தை பார்க்கும்போது பலர் கருத்துக்கைள எழுதிவிடுவதால் சங்கடமாகிவிடுகின்றது.
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை