![]() |
|
சாக்லெட் கேக் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: சாக்லெட் கேக் (/showthread.php?tid=3087) |
சாக்லெட் கேக் - தூயா - 10-01-2005 சாக்லெட் கேக் <img src='http://www.vikatan.com/aval/2004/dec/31122004/p43.jpg' border='0' alt='user posted image'> தேவையானவை: மைதா 2 கப், வெண்ணெய் 100 கிராம், கன்டென்ஸ்டு மில்க் 1 டின் (400 மிலி), வெனிலா எசன்ஸ் 2 டே. ஸ்பூன், பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன், ஆப்பசோடா கால் டீஸ்பூன், தண்ணீர் 400 மிலி, கோகோ 2 டே. ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை (அளவுகள் தலை தட்டி எடுப்பது முக்கியம்). செய்முறை: மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், ஆப்பசோடா, கோகோ அனைத்தையும் சேர்த்து இரண்டு முறை சலியுங்கள். வெண்ணெயைக் குழைத்து, அதனுடன் சலித்து வைத்த மாவு, வெனிலா எசன்ஸ், பால், தண்ணீர் சேர்த்து, முட்டை அடிக்கும் கருவியால் நன்கு அடியுங்கள். கேக் பாத்திரம் (விதவிதமான வடிவங்களில் கடைகளில் கிடைக்கிறது) அல்லது அலுமினிய குக்கர் தட்டின் உள்ளே வெண்ணெய் தடவி, எல்லா இடங்களிலும் படுமாறு மாவை சிறிது தூவி விடுங்கள். அந்தத் தட்டில் முக்கால் பாகம் வரை கேக் கலவையை கொட்டுங்கள். வெறும் குக்கரை கேஸ்கட் போடாமல் அடுப்பில் ஏற்றி, 3 நிமிஷம் சூடாக்குங்கள். பிறகு, கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து மூடி, வெயிட் போடுங்கள். மிகக் குறைந்த தீயில் ஒன்றே கால் முதல் ஒன்றரை மணி நேரம்வரை வேகவிடுங்கள். பின்னர், குக்கரின் மூடியைத் திறந்து, மெல்லிய கம்பியால் கேக்கினுள்ளே நுழைத்துப் பாருங்கள். கம்பியில் கேக் ஒட்டவில்லை எனில், நன்கு வெந்துவிட்டதென்று அர்த்தம். பிறகு, கேக்கை கவனமாக வெளியில் எடுத்து, சற்றே பெரிய கண்ணுள்ள சல்லடையின் மேல் வையுங்கள். (நேரடியாக தட்டில் வைத்தால், சூட்டில் வேர்த்து கேக் தட்டோடு ஒட்டிக்கொள்ளும்). இதை 3 முதல் 4 மணி நேரம் வரை நன்கு ஆறவிட்டு, ஐஸிங் செய்யுங்கள். ஐஸிங் செய்ய தேவையானவை: வெண்ணெய் அரை கப், பொடித்த சர்க்கரைத் தூள் ஒன்றரை கப், கோகோ பவுடர், வெனிலா எசன்ஸ் தலா 2 டீஸ்பூன். செய்முறை: சர்க்கரைத் தூளை, கட்டிகள் இல்லாமல் சலியுங்கள். வெண்ணெயை ஒரு தட்டில் போட்டு, கையால் நன்கு குழைத்து, சலித்த சர்க்கரைத் தூளை சிறிது சிறிதாக அதனுடன் சேர்த்து நன்கு பிசையுங்கள். இந்தக் கலவையை இரண்டு பாதிகளாகப் பிரித்து, ஒன்றில் வெனிலா எசன்ஸ் சேர்த்துப் பிசையுங்கள். மற்றொன்றில் கோகோ பவுடரைச் சேர்த்து நன்கு கலக்குங்கள். பட்டர் பேப்பரில் கோன் செய்து, முனையை வெட்டுங்கள். அதனுள்ளே பூ செய்யும் பிளாஸ்டிக் அச்சைப் (கடைகளில் ‘நாஸில்’ என்று கேட்டால், கிடைக்கும்) போட்டு, இரண்டு நிற மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, இரண்டு நிறமும் பக்கம் பக்கமாக வெளியேறுவதுபோல் கோனுக்குள் போட்டு, கோனை மடித்து மூடிக்கொள்ளுங்கள். இப்போது மீதமுள்ள கோகோ கலவையை சிறிது சிறிதாக ஒரு கத்தியினால் எடுத்து, கேக்கின் மேல்புறத்திலும் பக்க வாட்டிலும் சீராகத் தடவுங்கள். ஒரு கிண்ணத்தில் சிறிது வெந்நீரை வைத்துக் கொண்டு, கத்தியை அதில் நனைத்து, நனைத்து ஐஸிங் கலவையை சமப்படுத்துங்கள். அடுத்து, கேக்கின்மேல், கோனினால் விருப்பத்துக்கேற்ப டிசைன், பூக்கள் போட்டு அலங்கரித்தால் சாக்லெட் கேக் தயார்! சாக்லெட் கேக் என்பதால்தான் அலங்கரிக்க கோகோ பவுடர் உபயோகிக்கிறோம். மற்ற கேக்குகளுக்கு, விரும்பிய நிறத்தில் பவுடர் போட்டுப் பிசைந்து கொள்ளலாம். vikatan - vasisutha - 10-01-2005 <span style='font-size:20pt;line-height:100%'>சொக்லட் கேக் நல்லா இருக்கு...</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கீதா - 10-01-2005 [quote=vasisutha]<span style='font-size:20pt;line-height:100%'>சொக்லட் கேக் நல்லா இருக்கு...</span> நல்லாயிருக்கா செய்து சாப்பிட்டிங்களா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-01-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சொக்லட் கேக் நல்லா இருக்கு... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வாசிச்சதிலையே இத்தனை ரேஸ்ட்டா. அது சரி சலிக்கிறது என்டா என்ன. :roll: - vasisutha - 10-01-2005 நாங்கள் மா அரித்தல் என்று சொல்லுவோம் தமிழ்நாட்டில் சலித்தல் என்று சொல்வார்கள் சலித்தல் - அரித்தல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 10-01-2005 தூய நன்றி செய்முறைக்கு - தூயா - 10-02-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நன்றி வசி அண்ணா உங்கள் உதவிக்கு.
- tamilini - 10-02-2005 Quote:சலித்தல் - அரித்தல்அப்படியா நன்றி நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-02-2005 நன்றி தூயா.. அப்பிடியே மரக்கறி கேக் செய்யும் முறை கிடைத்தால் தருவீர்களா? நன்றி.. - Rasikai - 10-02-2005 நன்றி தூயா - தூயா - 10-03-2005 மரக்கறி கேக் செய்முறை எங்கோ வாசித்த நினைவு, பார்த்து சொல்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|