![]() |
|
பிரபாவின் படத்துடன் இங்கிலாந்துப் பெண்மணி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பிரபாவின் படத்துடன் இங்கிலாந்துப் பெண்மணி (/showthread.php?tid=3089) |
பிரபாவின் படத்துடன் இங்கிலாந்துப் பெண்மணி - வினித் - 10-01-2005 வெளிநாட்டவர்கள் பலரும் பொங்கு தமிழில் பங்கேற்பு! பிரபாவின் படத்துடன் இங்கிலாந்துப் பெண்மணி நேற்றைய பொங்கு தமிழ் எழுச்சி நிகழ் வுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர் களும் வந்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற சில சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பணி யாற்றுகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சிலர் மொழி பெயர்ப்பாளர்கள் சகிதம் மருத்துவ பீட மைதானத்தில் பிரசன்னமாகியிருந்தனர். அங்கு நடைபெற்ற எழுச்சி நிகழ்வு களை, மக்களின் உணர்வுகளை, அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. தாம் கொண்டு வந்திருந்த கமராக்கள் மூலம் நிகழ்வுகளைப் புகைப்படம் பிடிப்பதிலும் அவர்கள் ஆர் வம் காண்டினர். அவ்வாறு வந்து நின்றவர்களில் இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒரு வர் தலைவர் பிரபாகரனின் படங்கள் சில வற்றை அங்கிருந்தவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அந்த இங்கிலாந்துப் பெண் மணியின் பெயர் ஷாலட் (இஏஅகீஃOகூகூஉ) அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். தலைவர் பிரபாகரனின் படத்தை ஆர் வத்துடன் வாங்கி வைத்திருக்கிறீர்கள். அதற் கான காரணத்தைக் கூறமுடியுமா என்று அவ ரிடம் கேட்டோம். தங்கள் தலைவர் மீது இந்த மக்கள் காட்டுகின்ற விசுவாசத்தையும் ஆர்வத்தையும் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கிறது. இந் தப் படங்களை நான் ஆவணப்படுத்தப் போகின்றேன் என்றார். அந்தப் வெள்ளைக் காரப் பெண். இதேவேளை வெளிநாடுகளைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்களும் நேற்றைய நிகழ் வுக்கு வந்திருந்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனர் http://www.uthayan.com/ |