10-01-2005, 03:24 AM
திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி கத்தியால் குத்தியவனுக்கு கோர்ட் தண்டனை தரும் நேரத்தில் அவனையே மணமுடிக்க ஒரு பெண் சம்மதம் தெரிவித்தார். மும்பை ஐகோர்ட்டில் இந்த சம்பவம் நடந்தது.
மும்பையைச் சேர்ந்த ரசூல் ஷேக் என்பவன் மம்தா குர்குலா என்ற பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தான். அவனது "சேது' பாணி காதலை அந்தப்பெண் ஏற்க மறுத்தாள். ஆத்திரமடைந்த ஷேக் அந்த பெண்ணின் வயிற்றில் கத்தியால் குத்தினான். கடந்த ஜனவரியில் நடந்த இந்த சம்பவத்தின் போது அவளது தோழி லட்சுமி அருகில் இருந்தாள்.
தனது கண் முன்னால் நடந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த லட்சுமி, ஷேக்குக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து ஷேக்கை கைது செய்த போலீசார் அவன் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் ஜாமீனில் வெளியில் வந்த அவன் மம்தாவுக்கு மீண்டும் மீண்டும் "காதல் துõது' அனுப்பி வந்தான். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி அவனுக்கு கை கொடுத்தது. ஷேக் தொடர்ச்சியாக வீசிய காதல் கணைகளில் வீழ்ந்த மம்தா அவனை மணாளனாக ஏற்றாள்.
கடந்த ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது "நான் ஷேக்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுங்கள்' என்று கோர்ட்டில் மம்தா கூறினார். மம்தாவின் வாக்கு மூலத்தை ஆய்வு செய்த மும்பை ஐகோர்ட் கடந்த வியாழக் கிழமை ஷேக்கை விடுதலை செய்தது. இதையடுத்து, ஷேக் மம்தாவின் மோதல் காதலில் முடிந்தது.
[size=13]<b>dinamalar.com</b>

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&