Yarl Forum
சிங்களப் பாசறை திசைகள் எனி இருக்குமோ...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சிங்களப் பாசறை திசைகள் எனி இருக்குமோ...?! (/showthread.php?tid=3153)



சிங்களப் பாசறை திசைகள் எனி இருக்குமோ...?! - kuruvikal - 09-26-2005

<img src='http://img198.imageshack.us/img198/8401/puratchchi7vg.jpg' border='0' alt='user posted image'>

<b>தமிழ் தாய் சேய்
இந்துவின் மைந்தன்
தலைவன் வாரிசு
மக்கள் இதயம்
அகிம்சையின் நாயகன்
திலீபன் அண்ணா
அன்று முழங்கினான்
மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென்று..!
இதோ இன்று...
மக்கள்
புரட்சிக்காய்
பொங்கி எழுந்துள்ளார்
தலைவன் வழியில்
தானே நடக்கின்றார்
சிங்களப் பாசறை
திசைகள் எனி இருக்குமோ...??!
செந்தனல் மீது
சுதந்திரப் புலிக்கொடி
பறந்திடும் வேளை..!</b>

படம் - சூரியன்.கொம்


Re: சிங்களப் பாசறை திசைகள் எனி இருக்குமோ...?! - Birundan - 09-26-2005

kuruvikal Wrote:<img src='http://img198.imageshack.us/img198/8401/puratchchi7vg.jpg' border='0' alt='user posted image'>

<b>தமிழ் தாய் சேய்
இந்துவின் மைந்தன்
தலைவன் வாரிசு
மக்கள் இதயம்
அகிம்சையின் நாயகன்
திலீபன் அண்ணா
அன்று முழங்கினான்
மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென்று..!
இதோ இன்று...
மக்கள்
புரட்சிக்காய்
பொங்கி எழுந்துள்ளார்
தலைவன் வழியில்
தானே நடக்கின்றார்
சிங்களப் பாசறை
திசைகள் எனி இருக்குமோ...??!
செந்தனல் மீது
சுதந்திரப் புலிக்கொடி
பறந்திடும் வேளை..!</b>

படம் - சூரியன்.கொம்
சிவப்பு அடையாள வரிகளின் பொருள்?


- kuruvikal - 09-26-2005

இந்துவின் மைந்தன் - திலீபன் அண்ணா கல்வி கற்றது யாழ் இந்துக்கல்லூரியில்...அவர் யாழ் இந்துக்கல்லூரி சார்பில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவனும் கூட..! Idea


- Birundan - 09-26-2005

நன்றி அண்ணா தகவலுக்கு, நான் நினைத்தேன் திலீபன் அண்ணாவின் தாயார் பெயர் இந்து என்று, நன்றிகள்


- sathiri - 09-26-2005

மேலதிகமாக சில யாழ் இந்துவின் மாணவர்களான.மாவீரரான போரளிகள் லெப்.கேணல் பொன்னம்மான். லெப் கேணல் ராதா. கப்ரன் லிங்கம்


- அருவி - 09-27-2005

இந்திய இராணுவக் காலத்தில் இந்துக் கல்லூரியல் படிக்கிறேன் என்று சொல்லப் பயந்தார்களாம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அந்தளவு விடுதலைப்புலிகளை வளர்த்த ஓர் பாடசாலை இந்துக்கல்லூரி.

நான் கொழும்பு வரும்போது எனது இந்துக் கல்லூரி அடையாள அட்டையினை வெளியே எடுக்கவேண்டாம் என அம்மா எச்சரித்திருந்தார்.


- வன்னியன் - 09-27-2005

தமிழீழத்திலுள்ள ஒவ்வொரு பாடசாலையும் பல அற்புதமான மாவீரர்களை தந்திருக்கின்றது. தந்து கொண்டிருக்கின்றது. தயவுசெய்து பாகுபாடு காட்டாதீர்கள்.