![]() |
|
காணவில்லை? தேடுகிறோம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: காணவில்லை? தேடுகிறோம் (/showthread.php?tid=3154) |
காணவில்லை? தேடுகிறோம் - வன்னியன் - 09-26-2005 சுவிஸிலிருந்து நண்பர் அனுப்பிய தகவலை (அவலத்தை) உங்கள்முன் வைக்கின்றேன். நகல் எடுத்து இவைக்கமுடியாமையினால் சுயமாக அதை பிரதிபண்னுகின்றேன். காணவில்லை? தேடுகிறோம். <span style='color:blue'>நாம் அகதிகாளாக வாழும் அன்னியமண்ணாம் சுவிஸ் மண்ணில் எம் தமிழ்சமூகத்தின் சாபக்கேடுகளான சில தமிழ் ஆண்பெண் இருபாலாரும் இணைந்து பாலியல்தொழிலில் ஈடுபட்டு அதை படம்பிடித்து பணம் பண்ணுவதாலும் புகலிடம் தேடி அகதியாய் வந்த மண்ணில் அடைக்கலம் தந்த சுவிஸ்நாட்டவரையே துப்பாக்கி ஏந்தி சுட்டுத் தள்ளிய துரதிஷ்டசாலியாலும் ஆயுதம் எடுத்து அட்டகாசம் பண்ணி காவல்துறையால் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் காவாலி தமிழ் இளைஞர்களாலும் அக்கறையில்லாத பெற்றோரால் அக்கறையில்லாமல் வளர்க்கப்பட்டு ஒழுக்கமில்லாத பெற்றோரால் ஒழுக்கமில்லாமல் வளர்க்கப்பட்டு கட்டுப்பாடற்ற காவாலிக்கூட்டமாய் புகையிரத நிலையங்களிலும் கலாச்சார விழா மையங்களிலும் கோவில்களிலும் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மதுபோதையில் நின்று பொதுமக்களுக்கு பலவகைகளிலும் துன்பம் விளைவிப்பதோடு இந்த இடங்களுக்கு வரும் இளம் தமிழ்ப்பெண்களை தொலைபேசிமூலம் படமெடுத்து அதைவைத்து அந்த பெண்களை மிரட்டும் தமிழ் இளைஞர்களாலும் பெண்கள்மீது பாலியல் வனமுறையில் ஈடுபடும் இளைஞர்களாலும் பணத்துக்காக கொலை கொள்ளைகளில் ஈடுபடும் தறுதலை தமிழ் இளைஞர்களாலும் மற்றவர் பணத்துக்கு ஆசைப்பட்டு நல்லவர் போல நடித்து மற்றவர் பணத்தை அபகரித்து திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றும் ஏமாற்றுபேர்வழிகளாலும் கட்டிய மனைவியையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவித்ததுவிட்ட அந்த படுபாதக தமிழனாலும் கட்டிய கணவனைவிட்டு மற்றவள் கணவனோடு மாற்று வாழ்க்கை வாழும் ஓரிரு மதிகெட்ட பெண்களாலும் தன் மனைவியைவிட்டுவிட்டு மாற்றான் மனைவியோடு மகிழ்ந்திருக்கும் ஒரிரு மலிவுத் தமிழராலும் கையில் ஏந்திக் காப்பாற்ற வேண்டிய தங்கள் மனைவி பிள்ளைகளை குடித்துவிட்டு கொத்தடிமைகளாக நடத்தும் சில அரைவேக்காட்டு தமிழர்களாலும் ஈழத்தமிழரான எம்மவரின் ஒட்டுமொத்தமான கண்ணியம் கற்புநெறி ஒழுக்கம் பண்பாடு மனசாட்சிக்கு பயப்படும் தன்மை கலாச்சார விழுமியங்களை கட்டிக்காக்கும் பொறுப்பு இவை அத்தனையும் எம்மவரிடமிருந்து காணாமல்போய் பலசாட்களாகி விட்டன. இந்த அடையாளங்கள் தொலையக்காரணமாய் இருந்த இந்த சமூகவிரோதிகளை இந்த கலாச்சாரதுரோகிகளை எம் சமூகத்தின் ஒரு அங்கமென ஏற்றுக்கொண்ட தொடர்ந்து வாழ வேண்டுமா? வேண்டாம். இவர்கள் எம் சமூகத்தில் தொடர்ந்து இருக்கக்கூடாது. இவர்களால் தொலைந்து போன மாற்றாரும் மதிக்கின்ற எம் கலாச்சாரா விழுமியங்களை கண்டுபிடித்து கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு தமிழ்மக்களாகிய எம்மையே சாரும். அதனால் இந்த சமூக விரோதிகளை எம் தமிழ்ச் சமூகத்தின் பெயரால் கடுமையாக எச்சரிக்கின்றோம். தொடர்ந்தும் இவர்கள் இப்படியே செயல்படுவார்களானால் அதன் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும். பொறுத்திருங்கள். தங்கள் அடையாளங்களை நேசிக்கும் தமிழர்கள்</span> இப்படி அந்த செய்தி இருக்கிறது. - vasisutha - 09-26-2005 நல்ல நகைச்சுவையாக உள்ளது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- விது - 09-26-2005 இல்லை வசி இது அனைத்தும் உண்மை நானும் சுவிசில் தான்னுள்ளேன் சுவிசில் இப்போ பரபரப்பே இதுதான் தொலைபேசியில் பாலியல் படம் குறுப்பாகசேர்ந்து பாலியல்படம்மெடுத்தல் இன்னும் எத்தனையோ கண்றாவிகள் இதுதான் தற்சமயம் சுவிசில் ரெப் நிவுஸ; - MEERA - 09-26-2005 இதில் உள்ள வேதனையை பாருங்கள்......... - vasisutha - 09-26-2005 vithu Wrote:இல்லை வசி இது அனைத்தும் உண்மை நானும் சுவிசில் தான்னுள்ளேன் சுவிசில் இப்போ பரபரப்பே இதுதான் தொலைபேசியில் பாலியல் படம் குறுப்பாகசேர்ந்து பாலியல்படம்மெடுத்தல் இன்னும் எத்தனையோ கண்றாவிகள் இதுதான் தற்சமயம் சுவிசில் ரெப் நிவுஸ; hock: hock:
- sathiri - 09-26-2005 நான் முடிந்தவரை விசாரித்ததில் முன்னர் சுவிசில் நடந்த சம்பவம் ஆபாச படம் எடுத்தாக் தெரியவில்லை அது இரு நண்பர்கள் இணைந்து பெண்ணிற்கு தெரியாமல் காட்சிகளை படமாக்கி விட்டு பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய மற்பட்ட போதே காவல் துறையிடம் சிக்கியதாக அறிந்தேன் சரியான தெளிவான விபரங்கள் தெரியாததால் இத்துடன் இதனை விடுவது நல்லது - Mathan - 09-27-2005 இதெல்லாம் சரிதான், ஆனால் இப்படி நடவடிக்கை எடுக்க சுவிஸ் நாட்டு சட்டதிட்டங்கள் அனுமதிக்குமா? இவை தமிழ் சமூகம் ஒத்துழைத்தால் சுவிஸ் சட்டங்களுக்கு அமையவே தீர்க்கப்பட கூடியவை தானே? - வன்னியன் - 09-27-2005 சாத்திரி உங்களுக்கு யாரோ தவறாக சொல்லியிருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். ஐரோப்பாவில் பாலியல் சம்மந்தப்பட்ட படங்கள் அனுமதி பெற்று எடுக்கலாம்.. ஆனால் நம்மவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்துதான் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்கள். (இனிமேல் அனுமதி பெற்று எடுப்பார்கள்) என்னுடைய வேதனை என்னவென்றால் நம்முடைய சமுதாயம் எவ்வளவு சுலபமாக மாறிவிடுகன்றது என்பதுதான். விபச்சாரம் அறவே நம்முடைய இனத்தில் இல்லை என்றில்லை. தாய்நாட்டில் வறுமைக் கொடுமையில் சிலர் அந்த தொழிலை செய்தனர். ஐரோப்பாவில் நீங்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் அரச உதவிகள் கிடைக்கும். எதற்காக இப்படியான படங்களில் எமது பெண்கள் நடிக்கின்றனர்? |