Yarl Forum
மனைவியை கொல்ல துப்பாக்கி திருடிய இராணுவச் சிப்பாய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மனைவியை கொல்ல துப்பாக்கி திருடிய இராணுவச் சிப்பாய் (/showthread.php?tid=3147)



மனைவியை கொல்ல துப்பாக்கி திருடிய இராணுவச் சிப்பாய் - வினித் - 09-27-2005

மனைவியை கொல்ல ஆயுத களஞ்சியத்திலிருந்து துப்பாக்கி திருடிய இராணுவச் சிப்பாய்

கடவத்தையிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து நேற்று திங்கட்கிழமை நண்பகல் இராணுவச் சிப்பாயொருவர் துப்பாக்கியொன்றையும் துப்பாக்கி சன்னங்கள் நிரப்பப்பட்ட நான்கு ரவைக் கூடுகளையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

மனைவி தனக்கு துரோகமிழைத்து விட்டதாக கூறிக்கொண்டிருந்த சிப்பாய் ஒருவரே, துப்பாக்கியை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற இந்தச் சிப்பாய் பசியாலை கொட்டகவெலைப்பிட்டிய காட்டுக்குள் மறைந்திருப்பதாக நிட்டம்புவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து அவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிட்டம்புவையைச் சேர்ந்த இந்தச் சிப்பாய் தனது மனைவியைச் சுட்டுக் கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

துப்பாக்கியுடன் சென்றுள்ள இவர், தனது மனைவியைத் தேடி அலைந்து திரிந்ததுடன் துப்பாக்கியால் கண்டபடி சுட்டுக்கொண்டும் காட்டுக்குள் சென்றதாக, அதை நேரில் கண்டவர்கள் நிட்டம்புவ பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இராணுத்தினரும் பொலிஸாரும், இவரைக் கைது செய்ய அப் பகுதியில் தேடுதல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm