| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 327 online users. » 0 Member(s) | 325 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,517
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| மேத்தாவின் கவிதைகள் |
|
Posted by: sakthy - 09-24-2005, 05:34 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (48)
|
 |
நீர்நெய் அகலில்
நிமிர்ந்த சுடரே!
என் சில இரவுகளைத்
துப்பறிந்தாய் நீ
ஓட வண்டுகள் மொய்கும்
சுதை மொட்டே !
உனக்குள் நான்
மகரந்தமானதுண்டு
நெருப்புத் துண்டுகளை
விழுங்கும் நான் - உன்
மெளன மணலில்
தலை புதைக்க வந்ததுண்டு
சில நேரங்களில்
உன் பனி நிழல்
என்மேல் உதிர்த்த
ஆயுதப் பூக்களின் இதழ்களை
அக்கினி நாக்குகள் ஆகியிருக்கின்றது
உன்மடியில் சிந்திக் கிடக்கும்
நாகலிங்கப்பூ ஆசனங்களில்
என் அதிசியங்களுக்கு
பட்டம் கட்டிய அந்த நாட்கள்
நினைவிருக்கிறதா உனக்கு......?
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம் மெதுவாக
நான் மெளுகுத்திரியாக
நீ ஊதுவர்த்தியாக
வேதனையை நான்
வெளிச்சப் படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைந்ததும் என்னை
மறந்து விடும் வேதனைக்கு
உன் ஜாபகம்
சுற்றிக் கொண்டிருக்கும்...........
|
|
|
| நான் உந்தன் சேயாக வேண்டும் |
|
Posted by: Muthukumaran - 09-24-2005, 02:14 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (12)
|
 |
மாடிப்படியில் இறங்கும் போது தலை சுற்ற கைபிடிகளை பிடித்துகொண்டாள் சந்தியா.ஆனாலும் தொடர்ந்து இறங்க முடியாமல் மயங்கி கீழே விழுந்தாள்.
என்ன துணி காயப்போட போனவள இன்னும் காணோமேன்னு வெளியே வந்த மல்லிகா மயங்கி கிடக்கும் மகளை பார்த்து பதறிக் கொண்டே தூக்க ஓடினாள்.தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாததால் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து வண்டி வரச்செய்தாள். மருத்துவமனையில் அசைவின்றி படுத்திருந்தாள் சந்தியா.
சுந்தர் என்ன சொல்ற,இந்த பொண்ணுங்க யாரையாச்சும் புடிச்சிருக்கா? என அம்மா கேட்க இப்ப என்னம்மா அவசரம், கொஞ்சநாள் போகட்டும், அதுவரைக்கும் தரகர் சொன்னார்ன்னு எந்த போட்டாவையும் என்கிட்ட நீட்டாதமா என்றான்.
பாருங்க சுந்தர் பேசுறதை, அவனை கல்யாண கோலத்துல பாக்க எத்தனை வருசமா காத்துகிட்டிருக்கேன்.அவன் கொஞ்சம்கூட மனச மாத்திக்க மாட்டேன்றானே..ஆண்டவன் இதுக்கு என்ன முடிவு வச்சிருக்கிறான்னே தெரியலையே என்று படபடத்தாள் வடிவு.
சரி போய் நீ வேலையை பாரும்மா என்றார் ராஜப்பா.போன் சிணுங்க போய் எடுத்தார்.
என்ன சொல்ற வெங்கடேசா, இப்ப எப்படி இருக்கா? கவலைபடாம தைரியமா இரு. நானும் வடிவும் புறப்பட்டு வரோம் என்றார் பதட்டமான குரலில்.
என்னாச்சுங்க யாரு போன்ல?
வடிவு, சந்தியா மயக்கமாயி பேச்சு மூச்சில்லமா ஆஸ்பத்திரியிலயிருக்காளாம். வா போய் பார்த்திட்டு வந்திடுவோம். சுந்தர் நீ வரியாடா என்றார் ராஜப்பா.
இல்லப்பா, நீங்க போங்க.. நான் கொஞ்சம் நேரம் கழித்து வரேன்...
சரிப்பா, வர்றப்ப கதவை நல்லா சாத்திட்டு வா என்றபடி கிளம்பிப்போனார்கள்..
அடி வயிற்றில் ஏதோ ஒரு விதமாய் இருக்க பழைய நினைவுகளில்
ஆழ்ந்தான்.
சொந்த மாமன்மகள்தான் சந்தியா. விளையாட்டு பிள்ளையாய் இருந்த காலத்தில் வேடிக்கையாய் இவள்தான் உன் பொண்டாட்டியாக போகிறவள் என்று சொன்னதை அப்படியே நம்பி வாழ தொடங்கிவிட்டான். ஒரே ஊரில் வசித்ததும் அவன் சையை மேலும் அதிகப்படுத்தி விட்டது. மாமா வீட்டுக்கு போய் பலகாரத்தை கொடுத்துட்டு வாடா என்று வடிவு சொன்னாலே... நான் போக மாட்டேன்,எனக்கு கூச்சமா இருக்குமா என்று மறுத்துவிடுவான்.அதிகம் பேசாமல் மனதிற்குள்ளே கற்பனை வாழ்வை ரசிப்பான். கல்லூரி படிப்பு வெளியூரில் படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். இனி மேலும் தன் பிரியத்தை மறைக்கூடாது என்று முடிவு செய்து, மாமா வீட்டு தொலைபேசி எண்ணை மெதுவாக இயக்கினான்.
எதிர்முனையில் சந்தியா எடுத்து ஹலோ யார் பேசுறது என்று கேட்க மெளனமாகி போனான்.உடனே தைரியத்தை வரவழைத்து கொண்டு நான் சுந்தர் பேசுறேன்,எப்படி இருக்கிங்க சந்தியா? என்று அவள் பெயரை எப்படியோ சொல்லிவிட்டான்.
நான் நல்லா இருக்கேன் அத்தான்.என்ன விசயம் சொல்லுங்க ?
மாமா எதுவும் சொன்னாங்களா? அப்பா இன்னும் வரலையே என்றாள்.
இல்ல,நான்தான் உங்கள்ட்ட ஒரு விசயம் சொல்லணும்..
என்ன சொல்லுங்க..
நீங்க என் மனைவியா வரணும்ன்னு ஆசைபடறேன்.சின்ன வயசிலேருந்து நீங்கதான்னு வாழ்ந்திட்டு இருக்கேன்..அத உங்கள்ட்ட சொல்லணும்தான் போன் பண்ணினேன்...
எதிர்முனையில் சட்டென்று சந்தியா அழுது கொண்டே,நீங்க இந்த எண்ணத்தோடதான் பழகினீங்கன்னு எனக்கு தெரியல..என்னக்கும் நான் அந்த மாதிரியெல்லாம் நினச்சது கிடையாது..இனிமேல் எங்க வீட்டுக்கு வராதிங்கனு சொல்லி போனை துண்டித்து விட்டாள்.
ஏன்தான் பிரியத்தை சொன்னோம் என்றாகிவிட்டது அவனுக்கு. பார்த்து கொண்டிருக்கும் வாய்ப்பையும் கெடுத்து கொண்டோம் என்று தன்னையே நொந்து கொண்டான்.
உள்ளூரிலும், வெளி மாநிலத்திலும் வேலை கிடைக்க, சந்தியாவிற்கு சங்கடமாயிருக்க கூடாது என்று வெளி மாநில வேலையை தேர்வு செய்தான்.
அதே கம்பெனி தமிழ்நாட்டில் கிளை தொடங்க இவனை பணிமாற்றம் செய்தது. இங்கே வந்ததிலிருந்து அம்மா கல்யாண பேச்செடுக்க ஆரம்பித்தாள்.
நினவை கலைத்து அவளுக்கு பிடித்த பிள்ளையார் கோயிலுக்கு புறப்பட்டான்..
கோயிலில் அவளுக்காக வேண்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தான்.
வழியில் சந்தியாவின் தோழி ரம்யா அவனை மறித்து எங்க போறிங்க ,ஆஸ்பத்திரிக்கா ?
ஆமாம்
நானும் உங்களோடு வரலாமா என்றாள்.
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை வாங்க போலாம் என்று புறப்பட்டார்கள்.
சுந்தர் மெளனமாகவே வர அமைதியை கலைக்க ரம்யாவே பேச்சை தொடங்கினாள்.சந்தியா கொஞ்ச நாளா உங்களை பத்தி என்கிட்ட சொல்லியிட்டிருப்பா.பாவம் வெளிப்படயா மனசில என்ன இருக்குன்னு சொல்ல தெரியாம தவிக்கிறா. நீங்களும் உங்க குடும்பமும் அந்த பிரச்சனைக்கு அப்புறம் அதைபத்தி பேசாமல் அமைதியா இருக்கிங்கிறதை ரெம்ப சிலாகிச்சு சொல்வா என்றாள்.
அப்படிய்யா என்று மட்டும் சொல்லி வண்டியை செலுத்தினான்.
மறுபடியும் அவள் பற்றிய செய்தி, நினவுகள்¢ன் படையெடுப்பை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை..
அவனுக்கும் அது தெரியத்தான் செய்யும், என்றாலும் இன்னொருமுறை சந்தியாவை அழவைத்திட கூடாதென்பதால் அமைதியாய் இருந்தான்.
அவள் தாத்தாவின் மரணம்தான் இறுக்கமாய் இருந்த குடும்பத்தின் உறவை மறுபடியும் பழைய உறவை கொண்டு வந்தது. சென்னயில் சந்தியாவின் அத்தைவீட்டில் இறந்தவரை அவர் சொந்த ஊரில் அடக்கம் செயவதற்காக எடுத்துவரவே 14 மணிநேரம் ஆகிவிட்டது. சந்தியாமட்டும் யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டே இருந்தாள். அவள் தாத்தா செல்லம். நேரம் ஆக ஆக ஒரு விதமாய் வாடை வர சில பேர் கைக்குட்டை கொண்டு மூக்கை மூடிக் கொண்டனர். சுந்தரும்,ராஜப்பாவும் எந்த சலனமில்லமல் பிரேதத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.
அனைத்தும் முடிந்து கிளம்புகையில் நன்றி பெருக்கோடு வெங்கடேசன் அவர்களைப் பார்த்து கைகளை கூப்ப , ராஜப்பா, எதுக்குடா இதெல்லாம்..? யார் அவரு...என் தாய்மாமா..அவருக்கு சேவை செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். இது நாங்க செஞ்ச புண்ணியம் என்றார்.
இதை பார்த்து கொண்டிருந்த சந்தியாவின் மனதில் சுந்தரின் மீது பாசத்தை ஏற்படுத்தியது
சுந்தர் அந்த மாற்றத்தை உணர முடிந்தாலும், சற்று விலகியே வாழ்ந்தான்.ஆனால் வெங்கடேசன் குடும்பத்தில் அனைவரும் சுந்தரின் காதல் பிரச்சனையை மறக்க தொடங்கி இயல்பாய் பழக ஆரம்பித்தனர்.
என்ன யோசனை சுந்தர் என்று ரம்யா கேட்க ஒன்னுமில்லை என்று மருத்துவமனைக்குள் சென்றனர்.
மருத்துவமனையில் அனைவரும் கலக்கமாய் நின்றிருந்தனர். டாக்டர் வெங்கடேசனை அழைக்க, மாமா நீங்களும் கூட வாங்க என்று ராஜப்பாவை அழைத்தான்.
சரி வாப்பா,எந்த நோய்க்கும் மருந்து இருக்கு,கவலைப்படாம வா என்றபடியே வெங்கடேசனை அழைத்து கொண்டு டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.
டாக்டர் மெதுவாய் பேசத் தொடங்கினார். நரம்புகள் பாதிக்கப் பட்டிருக்கு. ஆனா இன்னொரு விசயம்...என்று டாக்டர் இழுக்க,
சொல்லுங்க என்ன பிரச்சனை?....
உங்க பெண்ணோட கர்ப்பப்பை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கு..அதனால அவங்களுக்கு தாய்மை அடையறதுக்கு அவங்க உடம்ப்புக்கு ஏற்றதல்ல.
இப்படியொரு குறை இருக்கிரது தெரிஞ்சா யார் இவளை கட்டிப்பா, சந்தியாவுக்கு தெரிஞ்சா அவ மனசு எவ்வளவு பாடுபடும். நான் பாவி என்று தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினார்.
மத்த பெண்கள் மாதிரி இவங்களும் கர்ப்பம் அடையலாம்.ஆனால் அந்த கர்ப்பம் கலையறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.இந்த மாதிரி பெண்களுக்கு நடக்கும் பிரசவங்கள்ல அவங்க இறந்து போக வாய்ப்புகள் இருக்கு. ஆண்டவன் அருள் இருந்தா இவங்களும் தாயாகலாம்..அதனால பிராத்தனை செய்யுங்க... கொஞ்ச நாள் டிரிட்மெண்ட் கொடுத்த பின்னாடி பார்ப்போம் முன்னேற்றம் எதுவும் தெரியுதான்னு?
இந்த விசயத்துக்கு மருந்தவிட பாசம்தான் சரியான சுகத்தை கொடுக்கும். கண் முழிச்சிருப்பாங்க நீங்க போய் பாருங்க,என்றார்.
அனைவரும் அறைக்குள் செல்ல சுந்தர் மட்டும் ஓரமாய் நின்று கொண்டிருந்தான். அனைவரும் அவள் கரம் பற்றி ஆறுதல் சொல்ல அவள் விழி மட்டும் சுந்தரை தேடியது. சுந்தர் வா உள்ள என்று வெங்கடேசன் அழைக்க தயங்கி உள்ளே வந்தான்.
சந்தியாவை பார்த்து இப்ப எப்படி இருக்கு என்றான்.
பரவாயில்ல,எல்லாரையும் ரெம்ப பயமுறித்திட்டனோ
என்றாள்,
அப்படில்லாம் இல்ல. இந்தா பிள்ளையார் கோயில் பிரசாதம், உனக்கு நல்லாகனும்ன்னு வேண்டிகிட்டேன். பரவாயில்ல உன் பிள்ளயாருக்கு உம்மேல பிரியம்தான். நான் வரேன் என்று கிளம்பினான்.
நேரம் அதிகமாக ராஜப்பாவும் கிளம்ப தயாரானார்கள்.
பிள்ளைக்கு உடம்பு தேறட்டும், வீட்டுக்கு வரோம் என்றார்.
சுந்தர் வீட்டில் ஏங்க டாக்டரை பார்த்திட்டு வந்த பிறகு நீங்களும் அண்ணனும் தெளிச்சியாவே இல்லயே,என்ன விசயம் என்று வடிவு கேட்க அனத்து விவரத்தையும் சொன்னார்.
நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன்,சுந்தர் என்ன சொல்வான்னு தெரிஞ்சுக்கிட்டு மேற்கொண்டு பார்க்கலாம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்தான்.
என்னப்பா விசயம் ?
சுந்தர் நீ இன்னும் சந்தியாவை விரும்பிறியா?
ஆமாப்பா.
உனக்கு குழந்தைங்ன்னா ரெம்ப இஷ்டமில்ல..
அதுக்கென்னப்பா,
நீங்க எதையோ கேட்க நினக்கிறீங்க? என்னன்னு சொல்லுங்க..
இல்ல உனக்கு சந்தியா ?
டாக்டர் என்ன சொன்னார்ப்பா ?
மகனின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராஜப்பா திகைக்க,நான் சந்தியாவைதான்நேசிக்கிறேன்,அவளை எந்த சூழ்நிலையிலும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு சந்தோசம்தான் என்றான். வேறெதை பத்தியும் பேச வேணாம்ப்பா என்ற மகனை கட்டி தழுவி கொண்டார் ராஜப்பா.
இப்போது அவனுக்கு அம்மா மடியில் படுக்க வேண்டுமென்று தோன்றியது.
அம்மா இங்க உட்காரு என்றான். அவளும் அவனருகே உட்கார மடியில் தலை வைத்து கொண்டு, முந்தானையில் தன் விரல்களில் முடிச்சி போட்டு அவிழ்த்து கொண்டிருந்தான். வடிவு வாஞ்சையாய் அவன் தலையை கோதி விட்டாள். அப்படியே உறங்கிவிட்டான்.
தன் அப்பா முகத்தில் பழைய புன்னகை இல்லாதது சந்தியாவை கவலை கொள்ள செய்தது. அவள் நேராய் அப்பாவின் அருகில் சென்று என்னப்ப ஒரு மாதிரியா இருக்கீங்க?
ஒன்னும் இல்லமா,லேசா தலைவலி அதான்.
நான் தான் நல்லாயிட்டன்ல்ல அப்புறம் என்னப்பா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அழைப்புமணி அடித்தது
அழுதுகொண்டே அனைத்து விசயங்களயும் சொல்லி விட்டார். காலிங்பெல் சத்தம் கேட்க துண்டினால் கண்களை துடத்து கொண்டார்.
மல்லிகா கதவை திறக்க ராஜப்பா குடும்பத்தோடு கையில் பழத்தட்டோடு நின்றார்.
வாங்கண்ணா என்றாள்.
வாங்க மாமா என்ற படியே வந்தார் வெங்கடேசன். என்ன தட்டோட வந்து இருக்கிங்க. என்றார்.
உன் பொண்ணை மருமகளாக்கிக்கனும்னு வடிவுக்கு ஆசை..அதுதான் அவ பின்னாடி தட்டோட வந்துட்டேன்.
என்ன மாமா, இப்ப என்ன மாமா அவசரம்,மனதுக்குள் சந்தோசமாக இருந்தாலும் சுந்தருக்கு இப்படி ஒரு நிலமை வரணுமா என்று வேதனை?
என்ன சுந்தர் உனக்கு சம்மதம்தானா என கேட்க ...
என்ன கேள்வி மாமா இது. நம்ம வீட்டு பிள்ளைய கட்டிக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்....
இல்லை சந்தியாவிற்கு என வாயெடுக்க கண்களாலே அமைதிபடுத்திவிட்டான்.
அங்கே சந்தியா தன் காதல் நிறைவேறியதில் சிலையாகி நின்றிருந்தாள்.
சரி அவங்க பேசிக்கிட்டு இருக்கட்டும்...வா நம்ம தோட்டத்தை சுத்தி பார்ப்போம் என்றபடி அனவரையும் கிளப்பினார் ராஜப்பா.
தனிமையில் முதன்முதலாய் இருவரும்...
கையில் குங்குமச்சிமிழோடு அவனருகே வந்து இந்த நெற்றி நீங்க வைக்கிற குங்குமத்துக்குதான் சொந்தம் என்றபடியே அவன் விழி பார்த்து நீட்டினாள்.
சம்மதமாய் அவள் நெற்றியில் பொட்டு வைத்தான்.அவன் காதருகே சென்று நான்னா உங்களுக்கு அவ்வளவு பிரியமா என்றாள்.
சுந்தர் புன்னகை மட்டும் செய்து அவள் கரம் பற்றி தன் கன்னம் சாய்த்தான்....
பின்னாடி வானொலியில் உல்லாச பறவைகள் பட பாடல்,
நான் உந்தன் தாயாக வேண்டும்.
நீ எந்தன் சேயாக வேண்டும்.
|
|
|
| ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த தமிழர் |
|
Posted by: வினித் - 09-24-2005, 11:56 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (1)
|
 |
ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த தமிழர்
இரா. சிவக்குமார்
இந்தியா விடுதலையடைந்து 58 ஆண்டுகளாகிவிட்டன. வெள்ளை அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி பிறந்த மண்ணில் அடிமைகளாகவும், ஏதிலிகளாகவும் வாழ்ந்த கொடுமையான வரலாற்றை இன்றைய தலைமுறை மறந்திருக்கலாம். பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டுமல்ல, வாழ்வதற்கும் கூட வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுண்டு விரலசைவுக்கு காத்திருந்த காலம் ஒன்றுண்டு. அடிபட்டு, மிதிபட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சிறைப்பட்டு, எண்ணற்றோர் குருதி சிந்திய கொடுமையான சரித்திரத்தைக் கொண்டது இந்திய மண். மண்ணை, மானத்தை,மனிதத்தை மீட்க நடத்திய பெரும் போரில் உற்றார், உறவினர்களை இழந்து, நண்பர்களை இழந்து ரணங்களோடும், தழும்புகளோடும் தியாகப் பரம்பரைத் தலைமுறையினர் மறைந்து கொண்டிருக்கும் தருணம் இது.
இந்திய துணைக்கண்டமே அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், ஆங்காங்கே பீறிட்டெழுந்த விடுதலை உணர்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவும் கிளர்ந்தெழுந்தது. காந்தியடிகளின் தலைமையை ஏற்று ஒன்றுபட்ட பெரும் போராட்டம், பிரிட்டிஷ் அரசிற்குப் பெரும் தலைவலியாய் அமைந்தது. எத்தனையோ அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தபோதிலும் சுடர்விட்டு ஒளிர்ந்த விடுதலை கனலை அணைக்க இயலவில்லை.
பிறகு எந்த மாகாணத்துக்கும் சற்றும் குறைவின்றி, சொல்லப்போனால் இன்னும் கூடுதலாக, தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர், பெருமை கொள்ளத்தக்கது. கும்பினியாரை எதிர்த்த பூலித்தேவன் தொடங்கி, வரி கேட்டு மிரட்டிய வெள்ளையனை `வந்து பார்' என்று விரட்டிய பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்முவின் முழக்கமே, மதப் பகைமையை உண்டாக்கி அதில் குளிர் காய நினைத்த குள்ளநரிகளின் தந்திரத்திற்கு வேட்டு வைத்த வேலூர்க் கோட்டைச் சிப்பாய்க்கலகமும், வட நாட்டில் ஜான்சிராணியா.. இதோ தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியும் வெள்ளைப் படைக்கு முறம் காட்டினாளே! அங்கே தாகூரா.. இங்கே பாரதி முண்டாசு கட்டிக் கொண்டு, தனது சொற்சாட்டைகளால் பிரிட்டிஷ் பேரரசை சுழற்றியடித்தானே! சுதேசியம் பேசிய வடநாட்டுத் தலைவர்களை மிஞ்சி மக்களைப் பங்குதாரராக்கி கப்பல் விட்டுப் பெருமை பெற்றானே வ.உ.சி. செக்கிழுத்து, மூத்திரம் குடித்து தொழு நோயாளியாய் சிறையிலிருந்து வெளியே வந்து, சற்றும் குறையாத கர்வத்துடன் மறைந்தானே சுப்ரமணிய சிவா!உயிர் போகும் நிலையிலும் கொடியின் மானம் காத்து, வரலாற்றில் உயர்ந்து நிற்கிறானே குமரன்! மிதவாதிகளின் போராட்டம் ஒரு புறமிருக்கையில், கலெக்டர் ஆஷ் துரையைக் கொன்று வாஞ்சி மணியாச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறானே வீரன் வாஞ்சிநாதன்!
இம்மண்ணின் விடுதலைக்காக கணக்கற்ற புதல்வர்களை தமிழன்னை வாரிக் கொடுத்திருக்கிறாள். பறங்கிக் கூட்டத்தை விரட்டியடித்து, சுதந்திரக் கொடியேற்ற நாஞ்சில் நாட்டிலிருந்தும் உலகம் போற்றிய உன்னத மகவு ஒன்றை தமிழகம் ஈன்றெடுத்தது. சின்னச்சாமி - நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம்மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? "ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்" எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன்.
1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன்தான் செண்பகராமன் . இந்த அளவில் மட்டும்தான் செண்பகராமன் குறித்த வரலாறு நமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் மேலாக இந்திய நாட்டின் விடுதலைக்காக வெளிநாடுகளில் அவன் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால், அவன் பட்ட வேதனைகளும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது மறக்கப்பட்டுவிட்டன.
தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன். அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். "பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது" என்று உட்ரோ வில்சன் மறுத்துரைத்துவிட்டார். இருந்தும் சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.
முதலாம் உலகப்போர் தொடங்கிய 1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.
இந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாய்க் கொண்ட இம்மாவீரன், தென்னாபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், "நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
"விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது" என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் எரிச்சலூட்டிய காரணத்தால், செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார்.
"சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்" என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமற் போனாலும், "சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ வேண்டும்" என்ற செண்பகராமனின் விருப்பம் மட்டும் 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.
உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற பெருமகனின் வரலாறு, மிக விரிவான அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செண்பகராமனின் தியாகத்திற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
- தினமணி
|
|
|
| தாரமான பின் (சிறுகதை) |
|
Posted by: kuruvikal - 09-24-2005, 11:39 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (9)
|
 |
நண்பர்களுடன் பேசி அவர்களை வழி அனுப்பி விட்டு அறையினுள் நுழைந்து தலையை சீவி அலங்காரத்தில் ஈடுபட்டான் ஈசன். இன்று தான் அவன் திருமணம் முடிந்து இல்லற பந்தத்தில் நுழைகிறான். அது தான் நண்பர்கள் அறிவுரை கூறி வழியனுப்பி விட்டு சென்றார்கள்.
அறையினுள் நுழைந்து கண்ணாடியில் தன் முகம் பார்த்த போது புதிதாய் ஒரு ஒளி தெரிவாதாய் தோன்றியது. கங்கா மனைவியாய் வந்தது அவனுக்கு சந்தோசம். ஒரே ஊர் சிறுவயது முதல் நல்ல பழக்கம் இருவருக்கும். நீண்ட நாட்களாய் நண்பர்களாய் இருந்து ஒரு வருடம் காதலர்களாய் இருந்து இன்று கணவன் மனைவியாய் ஆனாவர்கள்.
ஒரு ஐந்து மாசத்திற்கு முதல் ஒரு முத்தம் கேட்டு கங்காவிடம் வேண்டிக்கட்டிய நினைவு இன்று ஈசனுக்கு வந்தது. "வாடி மவளே இன்டைக்கு வைச்சிருக்கேன்" என்று சிரித்த படி சற்று பின்னோக்கி நினைத்தான். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்த போது இரு பகுதியும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. நன்றாய் பழகியவர்கள், புரிந்து கொண்டவர்கள், வாழ்வில் ஒன்று சேர்வதில் எதும் பிரச்சனை இருக்கவில்லை. கங்காவின் பட்டப்படிப்பு முடிய ஐந்து மாசம் இருந்ததனால் அதன் பின் கலியாணம் செய்வது என்று இரு பகுதியும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர். இவர்கள் இருவரும் காதலர்கள், ஆனால் கங்கா மிகவும் கண்டிப்பானவள் இத்தனை நாள் பழகியும் ஈசனுடன் தனியாய் ஒரு நாளும் வெளியில் சென்றதில்லை, ஒரு நாள் கூட திரைப்படம் பார்க்க சென்றிருந்ததில்லை. அவள் வரமாட்டாள் என்று அவனுக்கு தெரியும் அதனால் கேட்டதில்லை. நண்பர்கள் எல்லாம் தங்கள் காதலி முத்தம் தந்தாள், கட்டிப்பிடித்தாள். என்று கூடிக்கதைக்கும் போது இவனை மட்டும் ஏளனமாய் பார்ப்பார்கள். இப்படி அவர்கள் கதைக்கும் போது கங்காவை அரக்கி என்று கூட தனக்குள் திட்டியிருக்கிறான். ஆம் கங்காவின் கையைக்கூட அவன் பிடித்து நடந்ததில்லை. அவள் அப்படி ஒரு அரக்கி தான் ஆனால் அவனது செல்ல அரக்கி எதற்கும் தனக்கு சுதந்திரம் வேணும் என்று எண்ணுபவள். செய்வது எல்லாவற்றிற்கும் காரணம் சொல்லுவாள்.
நண்பர்கள் நச்சரிப்பு தாங்க முடியாது ஒரு நாள் ஈசன் கங்காவை ஒரு முத்தம் கேட்பதென முடிவுடன் சிறிது கோவத்துடன் போனான். கங்காவை கண்டால் எங்கு கோவம் வாறது? ஒருவாறு வளைஞ்சு நெளிஞ்சு காரியத்திற்கு வந்தான். "ஏன் கங்கா இன்னும் ஐந்து மாசத்தில நான் உனக்கு யார்? " என்று ஆரம்பிச்சான்.
"ஐந்து மாசத்திற்கு பிறகு தெரிஞ்சிடும் தானேடா ஏன் அவசரப்படுறாய்?" என்றாள். "இல்லை நீ எனக்கு மனைவியா வரப்போறவள் ஏன் இப்ப எனக்கொரு முத்தம் தரக்கூடாது?" என்றான். அவளிடமிருந்து கிடைத்தது மெளனம் மட்டுமே. "என்ன நீ எல்லாரும் காதலர்களாய் இருக்கும் போது என்ன என்னவெல்லாம் செய்வாங்கள் நான் மட்டும் தான் ஒரு முத்தம் கூட இல்லாமல் இதுவரை இருக்கிறன்". என்று சற்று கோவிச்சான். இந்த கோவம் அவளை ஒன்றும் செய்யாது என்று அவனிற்கு தெரியும்.
ஏன்டா உனக்கு என்னாச்சு? இங்க பார் ஈசன் நீ எனக்கு நண்பனாய் காதலனாய் நாளைக்கு கணவனாய் வரப்போறவன் இதில எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒன்றைத்தெரிஞ்சு கொள், முத்தம் கொடுக்கிறதும் கட்டிப்பிடிக்கிறதும் கைகோத்து நடக்கிறதும் பார்க் பீச் தியேட்டர் என்று சுத்துறதும் தான் காதலா? இப்ப முத்தம் கேக்க தோன்றும் பிறகு..? இதுக்கு பேர் காதல் இல்லை ஈசன், காதல் என்கிற பேரில இளசுகள் செய்கிற லீலை. இப்படி திரிகிறவையில எத்தனை பேர் கணவன் மனைவியாய் ஆகியிருக்கினம். நம்ம கலாச்சாரத்தையும் சீரழிச்சு, நம்ம பெற்றோர்கள் மானம் மரியாதையையும் குழி தோண்டிப்புதைத்து. நாலு பேருக்கு காதலர்கள் என்று காட்டிறதில எல்லாம் எனக்கு ஈடுபாடில்லை. இப்ப நாங்கள் இப்படி கண்மூடி திரிஞ்சிட்டு நாளைக்கு வாற சந்ததியை எப்படி திருத்த முடியும். நமக்கு கீழை இருக்கிறவர்கள் நாளைக்கு எங்களை பின்பற்றக்கூடிய மாதிரி நாங்கள் நடக்க வேணும். இது என் கொள்கை, உனக்கு நான் எனக்கு நீ என்று ஆச்சு. உன் மனசில சுத்தமாய் காதல் தான் இருக்கு என்றால் எனக்காய் காத்திரு. அப்படி இல்லை என்றால் உனக்கு ஏற்றாற் போல ஒரு காதலை தேடிக்கொள்ளலாம், இன்னொரு வழியிருக்கு வேணும் என்றால் சொல்லு நம்ம பெற்றோருக்க சொல்லி அடுத்த கிழமையே நம்ம கலியாணத்தை வைச்சுக்கலாம் எப்படி வசதி" என்று கூறி முடிச்சாள்.அன்று அவளை ஒரு தமிழ் பெண்ணாய், சிறந்த ஒரு காதலியாய் பார்த்தான்.
ஐந்து மாசம் ஓடிப்போனது. இன்று கலியாணமும் முடிந்துவிட்டது. இன்று அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய் இல்லறத்தில் நுழைந்தனர். அவள் இல்லறத்தில் அவனுக்கு ஒளிகொடுக்கும் விளக்காய் நல்ல துணைவியாய். அவன் அன்று கேட்டதும் இன்று கேட்காததும் கேட்காமலே அவனிற்கு கிடைத்தது. அவன் தாரமாய் அவள் அவனுடன். இன்று அவன் இதயத்தில் மட்டும் அல்ல இல்லறத்தினுள்ளும் அவள் தான் விளக்காய்.......!
கதை - கயல்விழி : ஆதாரம் - சூரியன்.கொம்
|
|
|
| ஐஷ்வர்யாராய் |
|
Posted by: sooriyamuhi - 09-24-2005, 09:32 AM - Forum: சினிமா
- Replies (24)
|
 |
<img src='http://img372.imageshack.us/img372/7750/aish16ki.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/512/aish23ve.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/8780/aish39hh.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/9300/aish40zg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/7875/aish50xp.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/9840/aish63yy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/1434/aish71hk.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/6471/aish82ti.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img372.imageshack.us/img372/6835/aish95pw.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| கனவே வராதே |
|
Posted by: Muthukumaran - 09-24-2005, 09:00 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (37)
|
 |
<b>தூக்கம் என்னும்
இடைக்கால மரணத்தில்-
சிந்தை உறங்கியபின்
கனவாய் வருபவை
என் எண்ணங்களா???????
அய்யோ
நானா?
நானா அது ?
வக்கிர படிமமாய்,
கோர விகாரமாய்,
எப்படி என்னுள்....
எங்கே இருக்கிறாய்,
எதுவரையிலும் இருப்பாய்..,
விழித்தபின்பெல்லாம்
நான் தேடும்
தொலைந்த பதிலா நீ????????
மலரும்,
மழலையும்,காண்கையில்
மனம் விரிக்கும் நானா-
என் உயிர்களின் மரணகாட்சியையும்
எனக்குள் சேமித்திருந்தேன்.........
பதறி விழிக்கும் போதெல்லாம்
என்மேல் ரணச்சகதி........
உறங்க பிடிக்கவில்லை-
மீறி உறங்கையில் கனவே
என்னுள் வராதே......
அன்றில்
ஆண்டவா என்னை
ஓரறிவு ஜீவனாக்கிடு
கனவேதும் காணாமல்
கழித்துவிடுகிறேன் காலத்தை..........................</b>
|
|
|
| சேலை |
|
Posted by: Muthukumaran - 09-24-2005, 08:49 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
<b>
தாய்ப்பால் தந்தாய்.
தமிழ் தந்தாய்..
பரிவுடன் பாசம் தந்தாய்..
தங்கம் அனைத்தும் தந்தாய்..
நான் பட்டம் பெற...
மஞ்சள் கிழங்கு கட்டி கொண்டு
மலர்ந்த முகமாய் இருந்தாய்..
காவிரியிலும் என்னுள் புழுக்கம்..
கண்ணீர் மறைத்தாய்
வழியனுப்பகையில்..
என் மேல் சுமையாய் விமானம்..
என் ஆன்மா நிறைந்தது..
மறுபடியும் உன் மார்பில்
மாங்கல்யம்.....
உன் மடி கட்டிகொண்டு
கோழி குஞ்சாய் சுருங்க
ஆண்டொன்று பொறுத்திட
வேண்டுமாம்..
அதுவரை நான் உறங்க
உன் சேலை ஒன்றை
அனுப்பி வை..</b>
|
|
|
| தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான் |
|
Posted by: வினித் - 09-24-2005, 07:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான் - இளந்திரையன
(நமது நிருபர்)
நாம் இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான். ஒரு நாட்டிற்குத் தேவையான 98 வீதமான அலகுகள் எம்மிடம் உள்ளன என்று மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளந்திரையன் அவர்கள் லண்டன் சுவிஸ் கலையகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவி வருகின்றது. எங்களுடைய தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக பேரினவாதச் சக்திகளின் கையாட்கள், குறிப்பாகப் படையினருடைய புலனாய்வுத்துறை ஆட்கள் மிக மோசமான யுத்தநிறுத்த மீறல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலை உணர்வு கொண்டவர்களையும், விடுதலைப் பாதையில் பயணிப்பவர்களையும் துன்புறுத்துகின்ற, அச்சுறுத்துகின்ற செயல்களையும்; செய்து வருகின்றனர்.
இதனால் இங்கு சிக்கலான நிலை இருக்கின்றது. ஆனால் இந்த இன்னல்களுக்கு இடையேயும் இங்கே நடைபெறுகின்ற பேரணிகளில், எழுச்சி நிகழ்வுகளில் பங்கேற்றுத் தங்களது உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம்மிடம் படைக்கட்டுமானங்கள் மட்டுமே முன்பு இருந்தன. இப்போது அரசியல் ரீதியான கட்டுமானங்கள், நிர்வாகக் கட்டுமானங்கள், சேவைக் கட்டுமானங்கள் என்று ஒரு நாட்டிற்குத் தேவையான கட்டுமானங்கள் அத்தனையும் இப்போது உள்ளன. ஒரு நாடு தன் இறைமையையும், வெளிப்படுத்துகின்ற வகையில் தாம் ஒரு நாடாக இருப்பதைக் காட்டக் கூடிய 98 சதவீதமான அலகுகளை நாம் இப்போது பெற்று இருக்கின்றோம். அவை நம் நடைமுறையில் இருக்கின்றன.
நாம் இப்போது செய்ய வேண்டிய வேலை தமிழீழத்திற்கான பணத்தை அச்சடிக்க வேண்டியது மட்டும்தான். சேவை நிறுவனங்கள், திணைக்களங்கள் எல்லாம் இப்போது எமது நிர்வாகப் பிரதேசத்தில் இயங்கி வருகின்றன. இவற்றைத் தமிழர் தாயகத்தின் இதரப் பகுதிகளிலும் செயற்படுத்த வேண்டியது மட்டும் தான் தேவை.
http://www.battieezhanatham.com/2005/
|
|
|
| இரவின் மடியில் நான் மட்டும் |
|
Posted by: inthirajith - 09-24-2005, 06:46 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (9)
|
 |
உறங்கா விழிகள் உன்னினைப்பில்
உன் ஆசைமுகம் என்னருகில்
உன்வார்த்தைகள் என்காதில்
உன்வாசம் என் தூக்கம் தொலைகிறதே
கனவிலேனும் அருகில் வந்தால்
கண்கள் உன்னை தழுவுமே
கருத்து மெல்லிய அமைதி கொள்ளுமே
கண்களை மூடினாலும் உன்பிம்பம்
என் கருத்தை மூட விடவில்லையே
என் தப்பு என்ன என்று புரியவில்லையே
என் அன்பு தப்பா என் வாழ்க்கை தப்பா
என் மனதை உன்னிடம் கொடுத்து விட்டேன்
பொறுத்திரு காலம் வரும் என்றாய்
பொறூத்த்கு இருப்பேன் வசலில் விழிவைதபடி
பொன்னான உன்பாதங்கள் என் வாசல்
பொருந்தும் அந்த நாளின் பொழுதுக்காய்
அது வரை இந்த இரவின் மடி தான்
அந்த உணர்வுகளின் தாலாட்டு
அந்த தாயின்மடியில் நான்மட்டும்
அந்த நினைப்பில் கண்ணுறங்கா தனிமையில்--------
|
|
|
| சிறீலங்கா படையினனுக்கு 2 ஆண்டு கடூழிய சிறை |
|
Posted by: mayooran - 09-24-2005, 03:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
நீர்வேலியில் வயோதிப பெண்ணை வன்புணர்ச்சிக்கு உட்படுத்த முயன்ற படையினனுக்கு 2 ஆண்டு கடூழிய சிறை
கடந்த மே மாதம் யாழ். நீர்வேலிப் பகுதியில் வைத்து வயோதிய பெண் ஒருவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்த முயன்ற சிறீலங்கா படையினன் ஒருவருக்கு இரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையி;ன் முடிவில் நேற்று யாழ். நீதிமன்ற நீதியாளர் சிறிநந்தசேகரம் வழங்கிய தீர்ப்பிலேயே இந்த தண்டனை குறித்த படையாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
|
|
|
|