Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 328 online users.
» 0 Member(s) | 326 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,517
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  Art on street
Posted by: sooriyamuhi - 09-24-2005, 03:09 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (6)

Art on Street
.
Julian Beever is an English artist who's famous for his art on the pavements of England , France , Germany , USA , Australia and Belgium . It's particularity because Beever gives to his drawings an anamorphous, his images are drawn completely diforms which give a 3D image when viewing on the right angle.

<img src='http://img74.imageshack.us/img74/728/art18wt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/6880/art23pi.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/1929/art35ev.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/8950/art49cz.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/271/art52en.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  வணக்கம்
Posted by: thamizhan.vicky - 09-24-2005, 12:01 AM - Forum: அறிமுகம் - Replies (48)

அன்புமிகு சகொதர சகொதரிகழுக்கும் மற்றும் நண்பர்கழுக்கும் வணக்கம்

நான் நெற்றுமுந்தினம்தான் இங்குசேர்ந்தனான். எனது பெயர் விக்கி, இப்போது கனடாவில் இருக்கிரேன்
அடுத்த கடிதத்தில் மேலும் எனனைப்பற்றிசொல்லுவன்

என்றும் அன்புடன்
விக்கி

Print this item

  எப்படிச் சொல்லுவாய்
Posted by: Muthukumaran - 09-23-2005, 09:03 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<b>உன் இமைகள்
வேகமாகப் படபடக்கக் காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??</b>

Print this item

  2020 ஆண்டில் இலங்கை (கற்பனையில்)
Posted by: Rasikai - 09-23-2005, 08:52 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (17)

கொழும்பு
<img src='http://img160.imageshack.us/img160/4295/image0011111cv.jpg' border='0' alt='user posted image'>

யாழ்ப்பாணம்
<img src='http://img160.imageshack.us/img160/4060/image0022221mj.jpg' border='0' alt='user posted image'>

கிரிதல
<img src='http://img160.imageshack.us/img160/8265/image0033332is.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ஆட்டுஇறச்சிக்கறி
Posted by: கீதா - 09-23-2005, 08:21 PM - Forum: சமையல் - Replies (18)

ஆட்டுஇறச்சிக்கறி
..........................................
தேவையன பொருற்கள்

ஒரு கிலோ ஆட்டு இறச்சி (சின்னனாக வெட்டல்)
இரண்டு வெங்காயம் ( சின்னனாக வெட்டல்)
உள்ளி தேவையனது
கருகப்பிளை
உடன் தேங்காய்ப்;பால் சிறிதளவு

1தேக்கரண்டி பெரிஞ்சீரகம்
1தேக்கரண்டி வெந்தையம்
சிறிதளவு கடுகு
1தேக்கரண்டி வறுத்திடித்த பெரிஞ்சீரகத்தூள்
தேவையான கறித்தூள்
சிறிதளவுமஞ்சள்
ஒரு துண்டு இஞ்சி
தேவையான தேங்காய்எண்ணெய்
தேவையான உப்பு
தேசிக்காய்ப்புளி

செய் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பிள் வைத்து ? தேவையான எண்ணெயை விடவும் எண்ணெய் கொதித்த பின் வெட்டின வெங்காயம் உள்ளி கருகப்பிளை ? போட்டு நன்றாக கிளறவும் அரப்பதம் வரும் போது பெரிஞ்சீரகம் வெந்தையம் கடுகு ? போட்டு கிளறவும் பின் வெட்டின ஆட்டுஇறச்சியைப் போட்டு நன்றாக கிளறி மஞ்சள் உப்பு இஞ்சி போட்டு நன்றாக கிளறி முடவும் ?
சில நிமிடத்தால தண்ணி வத்தி வரும் பிறகு நீங்கள் கறித்தூளைப் போட்டு கிளறி சிறிதளவு உடன் தேங்காய்ப்பாலை விட்டு முடவும் அது நன்றாக கறி சேர்ந்து வரும் போது பெரிஞ்சீரகத்தூளைப்போட்டு கிளறி பின் தேசிக்காய்ப்புளியை விட்டு இறக்கவும்

இதோ உங்களுக்கு சாப்பிட ஆட்டுஇறச்சிக்கறி றெடி

Print this item

  இந்தியனாம்! சந்திரனாம்!! றொக்கட்டாம்!!!
Posted by: கறுணா - 09-23-2005, 07:00 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

<b>செய்தி: நேற்று முந்தினம் இந்திய வாணரங்களின் ஆராட்சி நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், இந்தியா சந்திரனுக்கு ராக்கற்றுடன் மனிதனை அனுப்பும் காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.</b>

ஐயோ! அய்யய்யோ!! ஐயோ!!! கேட்பாரில்லையோ???? எங்கை போனை வைச்சன் ...

கிற்றிங்...... கிறீங்....... கிறிகிறி....

மமோசிங்கு: நமஸ்தே! நமஸ்தே!!

கருணா: வணங்கமுங்கோ!! நான் தான் உங்கள் எச்சிலிலை நக்ஸ்ஸ்ஸ்........

மமோசிங்கு: நமஸ்தே!! நானும் கிட்டத்தட்ட அப்படியே.....

கருணா: ??????

மமோசிங்கு: என்ன விசயம்? சொல்லு....

கருணா: இல்லயுங்கோ! நீங்கள் விடப்போகுறீர்களாமே!!!...

மமோசிங்கு: பிரதர் பதவியையா?? ஐயோ! அய்யய்யோ!!...

கருணா: இல்லை! சந்திரனுக்காம்!! ரொக்கட்டாம்!! இந்தியனையாம்!!!..

மமோசிங்கு: ஓஓஓ...... அதுவா!! இப்போதைக்கு சந்திரனுக்கு!! பின்னம் சூரியனுக்கு!! பின்னம் .....

கருணா: ஓஒ.. போதும்! போதும்!! உதென்ன இன்னும் விடுவியள்!! உங்கை நாட்டிலை முக்காவாசி பள்ளிக்கூட நிறமே தெரியாதாம்? அரைவாசிக்கு மேல் இருக்க ஆமான வீடில்லையாம்? பக்கங்களுக்கு போறதுக்கே போக்குவரத்துக்கு ஒரு ஒழுங்கான றோட்டில்லையாம்?? ..... ஏன் கக்கூசுகளுக்குக் கூட உங்கை அரைவாசிக்கு மேல் பிறீறேஞ்சுக்கு தானாம் போறதுகள்?

மமோசிங்கு: ஓஒ... பெருமைப்படுகிறேன்!! உதெல்லாம் உலகின் அதிபெரும் ஜனநாயக நாட்டின் உன்னத பண்புகள்!!!

கருணா: கோதாரி!!! ... போதாக்குறைக்கு "கிழட்டு காந்தியின் பெயரில்" ரகுவர ராகவ ராஜா ராம்மையும் பகலிலை போட்டு மந்தைகளாக்கிப் போட்டு!!! இரவிலை சினிமா விபச்சாரிகளின் "காமசூத்திரங்களையும்" போட்டு!!! வந்தே மாதரம்!! எண்டு கோஸமும் போடப்பண்ணி விட சனத்தொகை பில்லியனென்ன!! றில்லியனையே!! கடந்துவிடும்!! ... கோதாரி!!!

மமோசிங்கு: ம்ம்ம்... உதுகளுக்காகத்தான் உந்த றொக்கட்!!!!!!

கருணா: ???????????

மமோசிங்கு: ஒரு கால்லிலை பல மாங்காய்! எண்றதை உந்த ரொக்கட்டோடு காட்டப் போகிறோம்!!!

கருணா: ?????!!!!!!!!

மமோசிங்கு: 1) இந்தியாவில் பெருகும் சனத்தொகையை கட்டுப்படுத்த, சந்திரனில் இந்தியர்களை பெருமளவில் குடியமர்த்தப் போகிறோம்!! 2) சந்திரனில் இருக்கும் ஒளியை இந்தியாவிற்கு எடுத்து வந்து, ஒவ்வொரு இந்திய குடிமகனையும் ஒலியேற்றப் போகுறோம்!! 3) அங்கு பெருமளவில் இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து வர இருக்கிறோம்!! 4).... இப்படி பலபல ஐடியாக்களை வைத்திருக்கிறோம்!!... அதேன் உங்களெல்லோருக்கும் தெரிந்த அவ்வைப்பாட்டி சந்திரனில் இருப்பதால், அங்கு டமிழ்நாட்டு டமிழர்களை அனுப்பி தமிழ் படிப்பிக்க இருக்கின்றோம்!!! ... இன்னும்.....

கருணா: ஓஓஒ........ ஆஆஆஆஆஆ................ ஓஓஓஓஓஒ............ அரிக்குது!! அரிக்குது!!! கூச்செறிகிறது!! அப்படியே அங்கு எம்போன்ற மாட்டுக்கருத்தாளர்களையும் திருப்திப்படுத்த ஏதாவது செய்யுங்களேன்??? ஈழபதீஸ்வரத்தானின் புண்ணியம் கிடைக்கும்!!

மமோசிங்கு: ஓமோம்.... அங்கு 1) ஈழ்பதீஸ் உண்டியலின் கிளையை நிறுவலாம்!! 2) தூளுக்கு பக்ரறியே கட்டலாம்! அதன் மூலம் முஸ்தப்பன் அங்கையும் வந்து ரேடியோ பாடலாம்!! 3) ..... ம்ம்ம்ம்ம்ம்.... அங்கையேதோ சத்தம் கேட்குதுபோல???? அவ சோணி...யா..ஆஆ... வாறாபோல.... கனக்க கேட்காமல் கதைத்துட்டன்!!! கேட்டால்....????? ...அம்மா ஜிந்தாபாத்!!!

கருணா: இதென்ன தீடிரென ஜிந்தாபாத் என்கிறீர்கள்??????

மமோசிங்கு: இல்லை! இல்லை!! நான் நினைத்தேன் அவ இத்தாலிக்காரி வாறாண்டு!!!!!!!

கருணா: "நீயும் பொம்மை! நானும் பொம்மை!! நினச்சுப் பாத்தால் எல்லாம் பொம்மை!!!!!" ....

மமோசிங்கு: என்ன முனுமுனுப்பு!!!!!!!!!!!...

கருணா: இல்லை! இண்டியன் பிலிமான் ஓல்டு சாங்கு ஒண்டு வாயிலை வந்தது ....

மமோசிங்கு: ஓம்!! ஜிந்தாபாத்!! சப்பாத்தி!! சமோசா!! .....

கருணா: ஓமோம்... உங்களுக்கு பசி வந்திட்டுதோ!!!??? போய் வாங்கோ!!!! இண்டியா வாளுக!!! நீங்கள் வாளுக!! நானும் வாளுக!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Print this item

  முடிந்தால் போய் பாருங்களேன்.
Posted by: sakthy - 09-23-2005, 06:12 PM - Forum: இணையம் - No Replies

மிகவும் பயனுள்ள இணைய முகவரிகள் .முடிந்தால் போய் பாருங்களேன்.

www.tamilartsacademy.com
www.queendom.com
www.tamiluniv.org
www.tamilnool.com
www.callchennai.com
www.queendom.com

Print this item

  திரைப்பட இயக்குநர்களுக்கு அச்சுறுத்தல்
Posted by: sakthy - 09-23-2005, 05:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

திரைப்பட இயக்குநர்களுக்கு அச்சுறுத்தல்: சுதந்திர ஊடக அமைப்பு கண்டனம்
[வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2005, 13:06 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக திரைப்படம் தயாரித்த திரைப்பட இயக்குநர்களுக்கு படைத்தரப்பு மற்றும் ஊடகத்துறையினரால் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுதலுக்கு சுதந்திர ஊடக அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


சுதந்திர ஊடக அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"போருக்கு எதிராக திரைப்படம் எடுத்த அசோக ஹந்தகம, பிரசன்னா விதானகே, சுதத் மகாதிவுல்வெவ மற்றும் விமுக்தி ஜயசுந்தர ஆகியோரை செப்டம்பர் 14ஆம் திகதியிட்ட ஆங்கிலம் ஊடகம் ஒன்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது ஒரு புதிய பயங்கரவாதம் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நான்கு இயக்குநர்களுமே தங்களது படைப்புகளுக்காக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இவர்களில் இரண்டு இயக்குநர்களை அண்மையில் சந்தித்த இராணுவ மூத்த அதிகாரிகள் மிக மோசமான முறையில் அவர்களை நடத்தி, விமர்சித்துள்ளார்.

இச்சந்திப்புகளையடுத்து அவர்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

இனப்பிரச்சனை தொடர்பான கருத்துகளை வெளியிடுகிற கருத்துச் சுதந்திரம், படைப்பாளிகளுக்கு உண்டு. ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அந்த திரைப்பட இயக்குநர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். இந்தக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.

Print this item

  தமிழராகக் காட்டிக்கொள்வதை விட
Posted by: cannon - 09-23-2005, 02:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளின் போதும் தன்னை தமிழராகக் காட்டிக்கொள்வதை விட இலங்கையனாகவே லக்ஸ்மன் கதிர்காமர் காட்டிக்கொண்டார் என்று ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


கதிர்காமரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச பேசியதாவது:

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றியவர் அமைச்சர் கதிர்காமர். வரலாற்றின் சிறைக் கைதியாக இருக்க விரும்பாதவர்.

நாட்டை இரண்டாகப் பிரிக்கும் சித்தாந்தம் கொண்ட குழுவினரின் பிடியில் இருந்து விடுபட்டு வாழ்ந்தார்.

அவர் தன்னை ஒரு தமிழ் இனவாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் ஓர் இலங்கையன் என்று கூறுவதில் பெருமை கண்டவர்.

1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளின் போதும் அவர் இந்த நிலையில் இருந்து புரளவில்லை.

தான் ஒரு தமிழராக இருந்துகொண்டு, ஐக்கிய இலங்கை ஒன்றுபட்ட நாடு என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.

அதுவே அவருடைய உயிருக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்தது. ஆனால், அவர் தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்தையும் துச்சமாகக் கருதித் துணிச்சலுடன் செயற்பட்டார்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக நோர்வே அனுசரணையாளர்களையும் துணிச்சலுடன் விமர்சனம் செய்தவர் கதிர்காமர்.

சந்திரிகாவின் பிறந்தநாள் தொடர்பான கட்டுரை ஒன்றிலேயே கதிர்காமர் இதனை விமர்சித்துள்ளார்.

இதன் மூலம் தாம் எவருக்கும் தலை வணங்காதவர் என்பதை அவர் உறுதிப்படுத்திவிட்டார்.

சர்வதேச மட்டத்தில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதற்கும் துணை நின்றவர். இது புலிகள் இயக்கத்திற்கு கிடைத்த ஒரு தோல்வியேயன்றி வெற்றி அல்ல.

கதிர்காமர் சிறுபான்மை இனத்தவராக இருந்தபோதும் அவரை இந்த நாட்டின் பிரதமராக்க முயற்சித்தோம்.

ஆனால், அது முடியாமல் போய்விட்டது. ஆனால், கதிர்காமருக்குப் பிரதமர் பதவியை விட உயர்ந்த பதவி ஒன்றையே வழங்கியிருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கின்றோம் என்றார் அவர்.

விமல் வீரவன்ச பேச்சு குறித்து கொழும்பு ஊடகவியலாளர்கள் நகைத்துக் கொண்டனர்.

கதிர்காமருக்கு பிரதமர் பதவியை அளிக்க சந்திரிகா முன்வந்த போது அதை மிகக் கடுமையாக எதிர்த்து தங்களது தலையாட்டி பொம்மையாக இருக்கும் மகிந்தவை முன் நிறுத்தியதும் கதிர்காமருக்கு முட்டுக் கட்டை போட்டதும் இந்த ஜே.வி.பி.தானே என்று அவர்கள் தங்கள் கருத்தை நாடாளுமன்றத்துக்கு வெளியே பரிமாறிக் கொண்டனர்.

........நன்றி புதினம்.......

http://www.eelampage.com/?cn=20276

Print this item

  சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித்
Posted by: inthirajith - 09-23-2005, 01:14 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (89)

<span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 1</span>


வெளியே சுட்டு எரிக்கின்ற வெய்யிலின் வெப்பம். அதன் தாக்கம் வீட்டிற்குள்ளும் பரவ அறையேங்கும் குளிருட்டியின் தண்மையான குளிர் காற்று நிரப்பிக் கொண்டிருந்தது. நண்பர்களின் சமையல் வாசம் மூக்கைத்துளைத்தபடி இருக்க, இதை ஒன்றையும் கவனிக்காதது போல் படுக்கையில் இருந்தபடியே ரமணனின் மனசு மட்டும் சிறகடித்து பறந்து கொண்டது.

அன்றுவந்த அப்பாவின் கடிதம் மனசையும் உடலையும் அடித்து போட்டது போல் தளரப்பண்ணிவிட்டது. அருகில் இருந்த 'சிடி'யில் "கண்பேசும் வார்த்தைகள் புரியவில்லை" என்ற அந்த பாடல் இதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. அவன் கண்களில் நீர்.. யாரும் அறியாதவாறு துடைத்துக் கொண்டான். கடிதத்தை விட்ட இடத்தில் இருந்து வாசிக்க தொடங்கினான்.

<i>அன்பான மகனுக்கு..!

சாமியின் சகோதரிக்கு கல்யாணம் முடிந்து விட்டது. அவர்கள் நலமாக கணவன் வீட்டுக்கு போய்விட்டார்கள். நீங்கள் அனுப்பிய பணம் தான் அந்த பெண்ணின் கல்யாணத்துக்கு துணை நின்றது.</i>

'ஹூம்' பெரு மூச்சு விட்டான் ரமணன்.

பாலைவனத்தில் இருப்பவர்களுக்கு வருகின்ற கடிதங்கள் தான் ஆறுதலும் அரவணைப்பும் தரும். சமயத்தில் இடி போல் செய்திகளையும் சுமந்து வருவதுண்டு. இந்த கடிதமும் அதில் ஒரு வகைதான். கண்ணை மூடியபடி ரமணன்… அவன் வாழ்க்கை திசைமாறிய அந்த நினைப்பு அவன் மனத்திரையில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

தாயகத்தில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தபோது அவனுடன் படித்த ஒருவரும் அவனைதவிர எல்லோருமே சித்தியடையவில்லை. அன்று நிலவிய சூழல் அப்படி. அரசியல் போராட்டம் என்று பல காரணிகள். அவனும் அதிலே சேர்ந்துவிட்டான்.

ஒரு நாள் அதிகாலையில் சென்றி காவல் முடிந்து… தூக்கம் இல்லா விழிகளுடன் சிவந்து கண்கள் எரிச்சலுடன் வந்தவனுக்கு… வீட்டில் ஏதோ அசாதாரண நிலை போல் தென்பட்டது. அழுதபடி அம்மா மூலையில் சகோதரிகள்,
வாய்பேசமுடியாத அம்மா, வாசலையே பார்த்ததபடி அப்பா, ரமணன் போனதும் அப்பா கேட்டார்

''தம்பி நல்லவேளை இப்போ வந்திங்களே. இரவு இராணுவம் உங்களை தேடி எங்கள் வீட்டை வந்துவிட்டார்கள்.''

அன்றுதான் அப்பாவுக்கும் புரிந்தது. போராட்டமும் அவன் வாழ்க்கையில் ஒருபக்கம் என்று.

அப்பா யோசித்தபடி ரமணனுடன் பேசினார்..

''தம்பி அண்ணாக்கள் தான் குடும்பத்துக்கு உதவியில்லாமல் போய்விட்டார்கள். கல்யாணம் முடித்தபின் சகோதரிகள் அப்பா, அம்மா என்று வருவதில்லை. நீங்களாவது எங்களுக்கு முழுமையாக வேணும். கொழும்பு போக ஆயத்தபடுத்துங்கோ''.

என்று மிகபணிவாக சொன்னார் அப்பா. மறுக்க முடியவில்லை அவனால். இன்றுவரை அவனை கடிந்து பேசியவரில்லை அவர். 'ம்ம்' என்றுவிட்டு 'மதியம் நண்பன் சாமியின் அப்பாவை வைத்தியசாலைக்கு மதியம் அழைத்துச் செல்லவேண்டும்..' என்று நினைத்தபடி சிறிது உறங்கச் சென்றான்.

சகோதரியின் முகம் பார்க்காமலே அவ தந்த தேனீரை பருகிவிட்டு சரிந்தான் ரமணன். அப்போ சாமி அனுப்பிய மடலை அக்கா தந்துவிட்டுபோனா..! 'ஓ ஓ' மனசு முழுக்க சந்தோசம் நிறைய மடலை ஆவலுடன் பிரித்தான்.

'ரமணா அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்தபோது நீதான் அப்பாவைக் காப்பாத்தினாய் என்று என் சிறியதங்கை எழுதி இருந்தா.

டேய் என் குடும்பத்தை உன்னை நம்பி தான் விட்டுவிட்டு வந்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்ததுக்கு நீ செய்வது உண்மையிலே என்னால் திருப்பி செய்யமுடியாத கடன்..!'
வாசித்தபடியே உறங்கிவிட்டன் ரமணன்.

திடுக்கிட்டு எழுந்தான் ரமணன் அவன் முகத்தில் ஐந்தாறு நீர்த்துளிகள்..! அவன் அருகே யாரோ அமர்ந்தபடி..
நித்திரை பறந்தோட முழித்துவிட்டான். மிக அருகில் கண்கள் கலங்கியபடி சாமியின் இளைய சகோதரி...

யாருமே அருகில் இல்லை.. அவனும் அழுதபடி சாமியின் தங்கை மதுவும் தான்.. அவன் கேட்டான்

''என்ன உங்கள் அப்பாவுக்கு ஏதும் திரும்ப நெஞ்சுவலியே??''

'இல்லை' என்று தலையாட்டியபடி..
''உங்களுடன் பேசவேணும் வெளியே வாங்கோ''

''என்ன சாமி கடிதம் போட்டவனே எதாலும் பிரச்சனையாமே சவூதியில'' என்று கேட்டான்.

''இல்லை உங்களிடன் தான் பேசவேணும் வாங்கோ''

அவனும் புரியாதவனாக அமைதியாக அவளை பின்தொடர்ந்தான். அவனுடைய சகோதரிகளிடம் வைத்தியசாலைக்கு போய்வருவதாக சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

''நானும் உங்களுடன் சைக்கிளில் வரலாமா?''
என்று கேட்டா மது.. அவனும் அரைகுறை மனத்துடன் சம்மதித்து சைக்கிளை மிதிக்க தொடங்கினான். சிறிது தூரம் போனதும் தான் அவனுக்கு மெதுவாக மது அழுவது புரிந்தது.

''ஏன் அழுகிறீங்க?''

''கோவில் மடத்துக்கு அருகில் நிப்பாட்டுங்க கதைக்கவேணும்'' என்று அழுதபடியே சொன்னா. அவனும் ஏதோ அப்பாவுக்குத்தான் என்று கலங்கிவிட்டான். சைக்கிளை விட்டு கீழே இறங்கிய மது

''என்ன நீங்கள் செய்வது சரியா உங்களை நம்பி இருப்பவங்க மனசுபுரியாமல் இயக்கம் என்று போறீங்களே எங்களையெல்லாம் விட்டுப்பிரிய மனசு வந்துவிட்டதே"
என்று உடைந்து அழுதாங்க.

அவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

''என்ன சொல்றீங்க. வீட்டிலும் அப்பா கொழும்பு போக ஆயத்தபடுத்த சொல்கிறார். நீங்க வேறு புரியாமல் பேசுறீங்களே..'' என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
அப்போதான் ஒரு குண்டை தூக்கி போட்டாங்க மது.

''இத்தனை காலமும் உங்களைத் தானே அண்ணா நம்பி விட்டுவிட்டுப் போனார். இப்படி எங்களையெல்லாம் தவிக்கவிடலாமா??''

அவன் சொன்னான் ''யாருமே என்னை நம்பி இல்லை நாட்டுக்கு செய்யவேண்டியது தான் நான் செய்வது''

அப்போ மது சொன்னா ''உங்களை நம்பித்தானே நான் இருக்கிறேன்'' என்று...
அப்போதான் அவனுக்கு அந்த பேதையின் கண்ணீருக்கும் அர்த்தம் புரிந்தது. அவன் எதுமே பேசவில்லை..

''முதல் வாங்கோ வீட்டை போவோம். யோசித்து சொல்கிறேன்..'' என்றபடி சைக்கிளில் ஏறினான் அவன். முதல் பின்னாடி இருந்துவந்த மது இப்போ முன்னாடி வந்து இருப்பதாக சொல்ல.. அவன் சொன்னான் ''வேண்டாம் ஊரில் இருப்பவர்கள் தப்பாக பேசுவார்கள் வேண்டாம்'' என்று மறுத்து விட்டான்.

<b>-தொடரும்-</b>

Print this item