![]() |
|
சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித் (/showthread.php?tid=3206) |
சுடுகின்ற புதைமணல்கள் தொடர் - இந்திரஜித் - inthirajith - 09-23-2005 <span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 1</span> வெளியே சுட்டு எரிக்கின்ற வெய்யிலின் வெப்பம். அதன் தாக்கம் வீட்டிற்குள்ளும் பரவ அறையேங்கும் குளிருட்டியின் தண்மையான குளிர் காற்று நிரப்பிக் கொண்டிருந்தது. நண்பர்களின் சமையல் வாசம் மூக்கைத்துளைத்தபடி இருக்க, இதை ஒன்றையும் கவனிக்காதது போல் படுக்கையில் இருந்தபடியே ரமணனின் மனசு மட்டும் சிறகடித்து பறந்து கொண்டது. அன்றுவந்த அப்பாவின் கடிதம் மனசையும் உடலையும் அடித்து போட்டது போல் தளரப்பண்ணிவிட்டது. அருகில் இருந்த 'சிடி'யில் "கண்பேசும் வார்த்தைகள் புரியவில்லை" என்ற அந்த பாடல் இதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. அவன் கண்களில் நீர்.. யாரும் அறியாதவாறு துடைத்துக் கொண்டான். கடிதத்தை விட்ட இடத்தில் இருந்து வாசிக்க தொடங்கினான். <i>அன்பான மகனுக்கு..! சாமியின் சகோதரிக்கு கல்யாணம் முடிந்து விட்டது. அவர்கள் நலமாக கணவன் வீட்டுக்கு போய்விட்டார்கள். நீங்கள் அனுப்பிய பணம் தான் அந்த பெண்ணின் கல்யாணத்துக்கு துணை நின்றது.</i> 'ஹூம்' பெரு மூச்சு விட்டான் ரமணன். பாலைவனத்தில் இருப்பவர்களுக்கு வருகின்ற கடிதங்கள் தான் ஆறுதலும் அரவணைப்பும் தரும். சமயத்தில் இடி போல் செய்திகளையும் சுமந்து வருவதுண்டு. இந்த கடிதமும் அதில் ஒரு வகைதான். கண்ணை மூடியபடி ரமணன்… அவன் வாழ்க்கை திசைமாறிய அந்த நினைப்பு அவன் மனத்திரையில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. தாயகத்தில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தபோது அவனுடன் படித்த ஒருவரும் அவனைதவிர எல்லோருமே சித்தியடையவில்லை. அன்று நிலவிய சூழல் அப்படி. அரசியல் போராட்டம் என்று பல காரணிகள். அவனும் அதிலே சேர்ந்துவிட்டான். ஒரு நாள் அதிகாலையில் சென்றி காவல் முடிந்து… தூக்கம் இல்லா விழிகளுடன் சிவந்து கண்கள் எரிச்சலுடன் வந்தவனுக்கு… வீட்டில் ஏதோ அசாதாரண நிலை போல் தென்பட்டது. அழுதபடி அம்மா மூலையில் சகோதரிகள், வாய்பேசமுடியாத அம்மா, வாசலையே பார்த்ததபடி அப்பா, ரமணன் போனதும் அப்பா கேட்டார் ''தம்பி நல்லவேளை இப்போ வந்திங்களே. இரவு இராணுவம் உங்களை தேடி எங்கள் வீட்டை வந்துவிட்டார்கள்.'' அன்றுதான் அப்பாவுக்கும் புரிந்தது. போராட்டமும் அவன் வாழ்க்கையில் ஒருபக்கம் என்று. அப்பா யோசித்தபடி ரமணனுடன் பேசினார்.. ''தம்பி அண்ணாக்கள் தான் குடும்பத்துக்கு உதவியில்லாமல் போய்விட்டார்கள். கல்யாணம் முடித்தபின் சகோதரிகள் அப்பா, அம்மா என்று வருவதில்லை. நீங்களாவது எங்களுக்கு முழுமையாக வேணும். கொழும்பு போக ஆயத்தபடுத்துங்கோ''. என்று மிகபணிவாக சொன்னார் அப்பா. மறுக்க முடியவில்லை அவனால். இன்றுவரை அவனை கடிந்து பேசியவரில்லை அவர். 'ம்ம்' என்றுவிட்டு 'மதியம் நண்பன் சாமியின் அப்பாவை வைத்தியசாலைக்கு மதியம் அழைத்துச் செல்லவேண்டும்..' என்று நினைத்தபடி சிறிது உறங்கச் சென்றான். சகோதரியின் முகம் பார்க்காமலே அவ தந்த தேனீரை பருகிவிட்டு சரிந்தான் ரமணன். அப்போ சாமி அனுப்பிய மடலை அக்கா தந்துவிட்டுபோனா..! 'ஓ ஓ' மனசு முழுக்க சந்தோசம் நிறைய மடலை ஆவலுடன் பிரித்தான். 'ரமணா அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்தபோது நீதான் அப்பாவைக் காப்பாத்தினாய் என்று என் சிறியதங்கை எழுதி இருந்தா. டேய் என் குடும்பத்தை உன்னை நம்பி தான் விட்டுவிட்டு வந்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்ததுக்கு நீ செய்வது உண்மையிலே என்னால் திருப்பி செய்யமுடியாத கடன்..!' வாசித்தபடியே உறங்கிவிட்டன் ரமணன். திடுக்கிட்டு எழுந்தான் ரமணன் அவன் முகத்தில் ஐந்தாறு நீர்த்துளிகள்..! அவன் அருகே யாரோ அமர்ந்தபடி.. நித்திரை பறந்தோட முழித்துவிட்டான். மிக அருகில் கண்கள் கலங்கியபடி சாமியின் இளைய சகோதரி... யாருமே அருகில் இல்லை.. அவனும் அழுதபடி சாமியின் தங்கை மதுவும் தான்.. அவன் கேட்டான் ''என்ன உங்கள் அப்பாவுக்கு ஏதும் திரும்ப நெஞ்சுவலியே??'' 'இல்லை' என்று தலையாட்டியபடி.. ''உங்களுடன் பேசவேணும் வெளியே வாங்கோ'' ''என்ன சாமி கடிதம் போட்டவனே எதாலும் பிரச்சனையாமே சவூதியில'' என்று கேட்டான். ''இல்லை உங்களிடன் தான் பேசவேணும் வாங்கோ'' அவனும் புரியாதவனாக அமைதியாக அவளை பின்தொடர்ந்தான். அவனுடைய சகோதரிகளிடம் வைத்தியசாலைக்கு போய்வருவதாக சொல்லிவிட்டுப் புறப்பட்டான். ''நானும் உங்களுடன் சைக்கிளில் வரலாமா?'' என்று கேட்டா மது.. அவனும் அரைகுறை மனத்துடன் சம்மதித்து சைக்கிளை மிதிக்க தொடங்கினான். சிறிது தூரம் போனதும் தான் அவனுக்கு மெதுவாக மது அழுவது புரிந்தது. ''ஏன் அழுகிறீங்க?'' ''கோவில் மடத்துக்கு அருகில் நிப்பாட்டுங்க கதைக்கவேணும்'' என்று அழுதபடியே சொன்னா. அவனும் ஏதோ அப்பாவுக்குத்தான் என்று கலங்கிவிட்டான். சைக்கிளை விட்டு கீழே இறங்கிய மது ''என்ன நீங்கள் செய்வது சரியா உங்களை நம்பி இருப்பவங்க மனசுபுரியாமல் இயக்கம் என்று போறீங்களே எங்களையெல்லாம் விட்டுப்பிரிய மனசு வந்துவிட்டதே" என்று உடைந்து அழுதாங்க. அவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. ''என்ன சொல்றீங்க. வீட்டிலும் அப்பா கொழும்பு போக ஆயத்தபடுத்த சொல்கிறார். நீங்க வேறு புரியாமல் பேசுறீங்களே..'' என்று ஆதங்கத்துடன் கேட்டான். அப்போதான் ஒரு குண்டை தூக்கி போட்டாங்க மது. ''இத்தனை காலமும் உங்களைத் தானே அண்ணா நம்பி விட்டுவிட்டுப் போனார். இப்படி எங்களையெல்லாம் தவிக்கவிடலாமா??'' அவன் சொன்னான் ''யாருமே என்னை நம்பி இல்லை நாட்டுக்கு செய்யவேண்டியது தான் நான் செய்வது'' அப்போ மது சொன்னா ''உங்களை நம்பித்தானே நான் இருக்கிறேன்'' என்று... அப்போதான் அவனுக்கு அந்த பேதையின் கண்ணீருக்கும் அர்த்தம் புரிந்தது. அவன் எதுமே பேசவில்லை.. ''முதல் வாங்கோ வீட்டை போவோம். யோசித்து சொல்கிறேன்..'' என்றபடி சைக்கிளில் ஏறினான் அவன். முதல் பின்னாடி இருந்துவந்த மது இப்போ முன்னாடி வந்து இருப்பதாக சொல்ல.. அவன் சொன்னான் ''வேண்டாம் ஊரில் இருப்பவர்கள் தப்பாக பேசுவார்கள் வேண்டாம்'' என்று மறுத்து விட்டான். <b>-தொடரும்-</b> - inthirajith - 09-23-2005 உங்கள் அபிப்பிராயங்கள் பார்த்து தொடர்கிறேன் கள உறவுகளே என் இருமுத்தான கதைகள் என்னோட தவறினால் அழிந்துவிட்டன அதை திருப்பி எழுதும் மனநிலையில் நானும் இல்லை என் எல்லாகதைகளுமே என்னை எழுத தூண்டிய என் அருமைத் தோழிக்கு சமர்ப்பணம் அவங்களை நினைக்கும் போது எங்கே அந்தவெண்ணிலா அங்கே அந்தவெண்ணிலா என்ற அந்த பாடல் தான் மனதில் ஓடும் இன்னும் ஆயிரம் கதைகள் எழுதுவேன் உங்கள் அந்ததேவதை கொடுத்தாங்க அவங்களுக்கும் என் உயிர் வரை சமர்ப்பணம் நன்றி - RaMa - 09-23-2005 இந்திரஐpத் கதை அருமை ஆனால் ஒவ்வொரு காட்சிகளையும் பிரித்துப் போட்டால் நல்லாயிருக்கும். அத்துடன் ஒவ்வொரு வசனங்கள் முடியாமல் தொடர்க்கின்றன. முற்றுப் புள்ளி வைத்து எழுதினால் இன்னும் தெளிவாக விளக்கும். - shanmuhi - 09-23-2005 கதையின் கரு அருமை. கதையை கொண்டு செல்லும் பாணி... திருத்தியமைக்கப்பட்டால் கதை மிக அருமையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் தொடர வாழ்த்துக்கள்... - Rasikai - 09-23-2005 அருமையான கதை ஆனால் வசனநடைகளில் சிறு மாற்றம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.. உங்களின் முயற்சி தொடரட்டும்.. உதவி செய்யுங்கள் சண்முகி - inthirajith - 09-23-2005 முடிந்தால் வசன அர்த்தம் மாறாமல் கோர்வையாக திருத்தம் செய்தால் நன்றி உடையவனாக இருப்பேன் உடனடியாகவே தளத்தில் அனுப்புவதால் எழுத்துபிழைகளை திருத்தம் கூட செய்யமுடியாத நிலை தாமதித்தால் என் 2 கதைகளுக்கு ஏற்பட்டகதி வந்தாலும் என்று பயம் தான் - இராவணன் - 09-23-2005 உங்கள் கதையினை என்னால் முடிந்த அளவு திருத்தம் செய்து ஒன்றாக இணைத்துள்ளேன். - KULAKADDAN - 09-23-2005 இந்திரஜித் நல்ல முயற்சி தொடருங்கள். நீங்கள் கதையை தட்டச்சு செய்து முடிந்ததும் அதை நோட் பாட் அல்லது வேட் இல் பிரதி செய்து செமித்துவிட்டு அனுப்பினீர்கள் என்றால் அனுப்பும் போது ஏதும் சிக்கல் வந்தாலும் நீங்கள் மீண்டும் அதிலிருந்து களத்தில் பிரதி செய்து அனுப்பமுடியும். Re: சுடுகின்ற புதைமணல்கள் - sOliyAn - 09-24-2005 inthirajith Wrote:வெளியே எரிக்கின்ற கதிரவன். அறைக்குள்ளே குளிருட்டியின் தண்மையான குளிர் காற்று, அறை நண்பர்களின் சமையல் வாசம் மூக்கைத்துளைத்தபடி இருக்கின்றது... வாழ்த்துக்கள்.. ஆரம்பம் யதார்த்தமாக உள்ளது. உரையாடல்களையும் ஓரளவு யதார்த்தமாக எழுத முயற்சியுங்கள். அதாவது முழுமையான பேச்சுத் தமிழில். - inthirajith - 09-24-2005 நன்றிகள் என் எழுத்துகளின் அர்த்தம் கெடாமல் உதவி செய்த உறவுகளுக்கு இப்பொ தான் எனக்கும் புரிகிறது அற்புதமாக கோர்வையாக எழுதிய உள்ளங்களூக்கு மீண்டும் சிரம் தாழ்த்திய நன்றிகள் - sankeeth - 09-24-2005 ம்ம்ம் அடுத்த தொடர் எப்போது வரும் என்று உள்ளது. சீக்கிரம் இந்திரஜித் அண்ணா! - Thala - 09-24-2005 இந்திரயித் கதை நல்லாருக்கு தொடருங்கள்.. அலட்டல் இல்லாமல் வாசிக்க காத்திருக்கிறம்.. - sooriyamuhi - 09-24-2005 ம்ம்ம் நல்லாயிருக்கு....... தொடர வாழ்த்துக்கள் - Senthamarai - 09-24-2005 தொடருங்கள் இந்திரயித். நன்றி இராவணன் அண்ணா. நன்றாக தொகுத்திருக்கின்றீர்கள். - ANUMANTHAN - 09-24-2005 கதையை தொடருங்கள்! வந்தவை நன்றாக உள்ளது வருவதும் அதே போல் அமைய வாழ்த்துக்கள். சுடுகின்ற புதைமணல்கள் - inthirajith - 09-24-2005 <span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 2</span> அவர்கள் வீட்டுக்கு போகும் வழியில் ரமணன் சொன்னான் ''மது படித்துவிட்டு வீட்டில் இருந்தால் மனசு அலை பாயும் எதாவது வேலைக்கு போகலாமே ??'' ''என்னவேலைக்கு போகலாம் நீங்களே சொல்லுங்கோ....'' ''ம்ம் தாதி வேலைக்கு போறீங்களா ?'' ''எப்படி யாரை கேட்பது ?'' அதை தான் பார்த்துக்கொள்வதாக சொன்னான். சொன்னபடியே பயிற்சி மருத்துவத்தாதியாக யாழ் மருத்துவ வைத்தியசாலையில் சேர்த்துவிட்டான். காலம் போனது. ரமணன் அப்பா அங்கே இங்கே அலைந்து வெளி நாடு போவதற்கு ஏஜன்சிக்கு பணம் கட்டிவிட்டார். அதற்குள் மதுவும் மருத்துவதாதியாக கடல் கடந்த தீவு ஒன்றில் இடம் கிடைத்து வேலை ஆரம்பித்துவிட்டா. சாமி எழுதும் எல்லா மடலிலும் ''ஏன்ட என் குடும்பத்துக்கு இப்படி உதவி செய்கிறாய் என்னடா கைம்மாறு செய்யபோகிறேன்'' என்று ஆதங்கத்துடன் எழுதுவான். அவனுக்கும் தெரியும் ரமணனின் குணம். நம்பியவர்களுக்கு உயிரையும் கொடுப்பான் என்று. ஒரு நாள் மது அவ அம்மாவிடம் சொல்லிவிட்டு இருந்தா. ரமணனை வைத்தியசாலைக்கு வரும் படி. அன்று மதுவுக்கு இரவு வேலை. 10.00 மணிக்குத்தான் முடியும் என்று சொல்லி அனுப்பியிருந்தா. 10.00 மணிக்கு ரமணன வைத்தியசாலைக்கு; போனபோது உடைமாற்றிய படி வந்த மது௪ "வங்கோ போவோம்..'' என்று சொன்னா. 'சரி போவோம்' என்று புறப்பட்டனர். மெல்லிய வாடைகாற்று அவர்களை தழுவி கொண்டு இருந்தது. சைக்கிலில் முன்னே வந்து நின்றா மது.. அவன் ''மது கரியரில் ஏறுங்கோ'' என்று,சொன்னான். ''இல்லை குளிர்காற்று பலமாக இருக்கு 6 கி.மீ போகவேணும் இருட்டில் எனக்கு பின்னால் இருக்கப்பயம் முன்னால் ஏத்துங்கோ....'' அவனோ இக்கட்டான நிலையில் சம்மதிக்கவேண்டியதாகிவிட்டது.. முன்னால் இருந்தபடியே.. ''எத்தனை நாட்கள் கனவு கண்டேன். இன்றுதான் என்னுடன் தனிமையில் வருகிறீங்க..'' என்று பாசமும் நேசமும் கலந்த குரலில் சொன்னா மது. தனிமையும், அந்த மெல்லிய குளிரும், மௌனமான கடல் காற்றும், தண்ணெண்று மிளிர்ந்து கொண்டு இருந்த நிலவொளியிலும் மது தேவதையாக இருந்தா. கடலின் உள்ளே லாம்பு வெளிச்சதில் மீன் பிடிப்பவர்களின் அசைவுகள். அவர்கள் தனிமைக்கு தேவதைகள் விளக்கு பிடிப்பதாக நினத்தாள் மது. ''மது'' என்று அழைத்தான். ''என்ன'' என்று பின்பக்கம் திரும்பினா மது. இருவர் முகமும் மிக அருகில்.. மூச்சுகாற்று அவன் கன்னத்தை தொட்டது. திடிரென்று சொன்னான்... ''இறங்குங்கோ காற்று சைக்கிள் மிதிக்க முடியவில்லை நடப்போம்'' என்று இறக்கிவிட்டன். ''பேசிக்கொண்டே நடப்போம்'' ''சரி உங்க விருப்பம்'' என்று மனதின் ஏமாற்றம் குரலில் தெரியாமல் மது சொன்னா. ''இனிமேல் இரவு வேலை என்றால் என்னால் வரமுடியாது உங்களுக்கு ஒரு வீடு பார்க்கவா'' என்று ரமணன் கேட்டான். சரி என்று மதுவும் சம்மதித்தா. அவ மனசில் உள்ளது புரியாமல் அவன் வேறு வீடு வாடகைக்கு பார்த்துவிட்டான். அவன் நண்பனின் வீடுதான். அந்த நண்பன் காதலித்தபோது, உறவுகள் எல்லாம் எதிர்த்த போது, உற்ற துணையாக இருந்து௪ அவர்களை சேர்த்து வைத்து௪ குடும்பங்களையும் சேர்த்தவன் அவன் தான். அதனால் அவன் கேட்டதும் சம்மதித்து விட்டார்கள் அந்த உண்மையான காதல் தம்பதிகள். மதுவையும் அவர்களுக்கு நன்றாக தெரியும் அப்போ நண்பனின் மனைவி சொன்னா... 'ரமணன் பிற்காலத்தில் எங்களின் உதவி தேவைபட்டால் இந்த வீடு உங்களை சந்தோசத்துடன் வரவேற்கும்' என்று. அப்போ அருகில் தனது புதிய அறையை பார்க்கவந்த மது சொன்னா 'உங்கள் வார்த்தை பலிக்கவேண்டும்' என்று.. ரமணனுக்கோ எதுவுமே புரியவில்லை. ''என்ன சொல்லுறிங்க'' என்று கேட்டான். ''ம்ம் சுரைக்காய்யுக்கு உப்பில்லை'' என்று குறும்பாக பதில் அளித்தா மது. ஒரு நாள் அவன் சாமிவீட்டுக்கு போனபோது அங்கே மதுவும் இருந்தா. வருகிற மாதத்தில் இருந்து தான் புதிய வீட்டுக்கு போவதாகவும், அவனையும் கூடவந்து 4 நாட்கள் கூடநின்று உதவி செய்ய சொல்லிக் கேட்க.. அப்போ அங்கே இருந்த சாமி. ''ரமணா அவகூட நின்று உதவி பண்ணு'' என்றான். அவனும் சாமி பேச்சைத் தட்டமுடியாமல் மது கூட போனான். அன்று இரவு சாப்பாடு நண்பனின் குடும்பத்துடன். சாப்பிடும் போது நண்பனின் மனைவி.. ''ரமணன் படுக்கையை எங்கே போடுவது'' என்று கேட்க.. அப்போ மது குறுகிட்டு சொன்னா.. ''என் அறையில் போடுங்கோ'' என்று. நண்பனுக்கு சிரித்து புரையேறிவிட்டது. அவசரத்தை பாருங்கோ என்று நண்பனின் மனைவியும் சிரித்தா. ரமணன் சொன்னான் ''இல்லை வெளியே விராந்தையில் போடுங்கோ அங்கே படுத்தால் தான் நித்திரை வரும்'' என்று. ''இல்லை உள்ளே வந்து என் அறைக்கு முன்னால் படுங்கோ'' மது கட்டளை இட்டா. ''சரி'' என்று சொன்னான். ''நாளையில் இருந்து தனியா இருக்கவேணூம் மது'' என்று சொன்ன அவனை எரித்துவிடுவது போல் பார்த்தா மது. அந்த விளக்கொளியிலும் அவ கண்கள் கசிந்து இருந்தது தெரிந்தது. மனதினுள்ளே ஏதோ செய்தாலும், அந்த ஈரவிழிகளை பார்க்கமுடியாமல் சாப்பாடில் புலனை செலுத்தினான் அவன். அப்போ தான் நண்பனின் மனைவி கேட்டா ''மது என்ன இது அழுகை'' ''மிளகாய் கடித்துவிட்டேன் அதுதான்'' ''இன்று நான் மிளகாய் இல்லாதபடியால் போடவில்லையே'' என்ற நண்பனின் மனைவி தொடர்ந்து "ம்ம் ம்ம் காதலித்தால் இப்படியெல்லாம் ஐடியா எல்லாம் வரும். உதவி செய்த ரமணனுக்கு எல்லாமே புரியும்'' என்று போட்டு உடைத்தா அந்த சகோதரி. தலை குனிந்தபடி சாப்பிட்டு முடித்தான். சாப்பிட்டதும் எல்லோரும் நிலவொளியில் சுற்றி இருந்தபடி முற்றத்தில் கதைத்து கொண்டு இருந்தார்கள். <b>-தொடரும்-</b> - inthirajith - 09-24-2005 தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் நேரம் இன்மையால் திருத்தமுடியவில்லை அதற்கான மனநிலையில் இல்லை ஆனால் என் தோழிக்கு சொன்னபடி செய்ய வேண்டுமே - inthirajith - 09-24-2005 உங்கள் அபிப்பிராயங்களை எழுதுங்களேன் - அனிதா - 09-24-2005 கதை நல்லாருக்கு..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 09-24-2005 வாழ்த்துக்கள் இந்திரஜீத் தொடருங்கள்... |