Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 360 online users.
» 0 Member(s) | 357 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,086
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,517
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  விடுதலை வேள்வியின் ஆகுதி நீ
Posted by: inthirajith - 09-22-2005, 08:40 PM - Forum: கவிதை/பாடல் - No Replies

அன்று நவாலியில் உன்கரம் துளைக்கபட்டது
அருகில் பார்த்தபோது இராணுவம் உன்நெஞ்சின்
உறுதி புரியாமல் இல்லை அதன் வலிமை
உள்ளம் இந்திய வல்லரசுக்கு புரிய வைக்க
எங்கள் திலீபா உன்னிடம் விளையாடமுடியாமல்
எங்களுடன் பழகவைத்தானோ சின்னகுழந்தையாய்
மழலையாய் பழகும் உன்குணம் புரிந்த எனக்கும்
மனதின் உறுதி புரிகிறது பசிமறந்து எங்கள் இனத்துக்காக
வாழ்வை ஆகுதியாக்கியவனே என் இறப்பிலும்
வாழ்வாய் தோழனே உன் ஆகுதியான நினைப்
புடன்

Print this item

  யாழ் களத்திற்கு புதியவன்
Posted by: selvam - 09-22-2005, 06:31 PM - Forum: அறிமுகம் - Replies (33)

Hello i am new to yarl i like to write in tamil please tell
me how to write in tamil <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
thanks

தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  அடுத்த காதலி
Posted by: sathiri - 09-22-2005, 04:18 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (28)

எல்லாரும் கதை கவிதையெண்டு எழுதி தள்ளினம் நானும் ஒரு கதை எழுதுவமெண்டு நினைச்சு இதை எழுதிறன் படிச்சிட்டு அடிக்க வராதையுங்கோ

<span style='font-size:25pt;line-height:100%'>அடுத்த காதலி</span>
நள்ளிரவு ஒரு மணி மெதுவாக கண்ணை விழித்து பார்த்தான் அவன் மனைவி நன்றாக ஆழ்ந்த நித்திரையிலிருந்தாள்.
மெதுவாக எழுந்து முடிந்தளவுக்கு சத்தம் வராமல் மெது மெதுவாக படுக்கையறையை விட்டு வெளியேறினான்.ஆனாலும் அவனுக்கு ஒரு சந்தேகம் மனைவி உண்மையாகவே நித்திரைதானா சிலநேரம் திடீரெண்டு விழித்து அவன் செய்யபோகும் காரியம் கையும் களவுமாக பிடிபட்டால் அவ்வளவுதான்.

வீடே யுத்தகளமாகி விடும். எதற்கும் மீண்டும் ஒருமுறை அவள் நித்திரை தானா என்பதை உறுதி செய்து கொள்ள மெதுவாக இருமுவது போல ஒரு தடைவை இருமிப்பாத்தான்.அவள் அசையவில்லை.மெதுவாக அறையை விட்டு வெளியேறி அறை கதவை மெதுவாக சாத்திவிட்டு இருட்டில் மிக அவதானமாக அடுத்த அறைக்குள் நுளைந்தான்.

மின் விளக்கை கூட போடாமல் மெதுவாக அவளருகே சென்று போர்த்தியிருந்த போர்வையை விலக்கினான் . அவனது இதய துடிப்பு அதிகரித்து கொண்டே பொனது காரணம் நேற்றும் இப்படித்தான் வந்து தொட்ட போது அவனது மனைவி கண்டுவிட்டாள் இனிமேல் இரவில் இந்த அறைக்குள் நுளைந்தால் பெரிய பிரச்சனையே வரும்
இனியும் பொறுக்க மாட்டன் விவாக ரத்துதான் என்று கத்த தொடங்கி விட்டாள்.

பிறகு அவளை சமாதானப்படுத்தி இனி இரவில் இந்த அறைக்குள் நுளைய மாட்டேன் என்று சத்தியமெல்லாம் பண்ணித்தான் ஒருமாதிரி சமாளித்தது. ஆனாலும் இன்றும் மனம் கேட்கவில்லை ஒருநாளைக்கு ஒருமுறையேனும் அவளை என்னால் தொடமுடியாமல் இருக்கமுடியாது நடப்பது நடக்கட்டும் எண்று எண்ணியவாறு மெதுவாக் அவள் மீது அவனது விரல்கள் படர அவள் விழித்து கொண்டாள் அவனுக்குள் ஒரு இனம்புரியாத ஆனந்தம் பரவிக்கொண்டது.

காதல் இதுதான் அவன் உள்ளே நுளைவதற்கான(யாழ்களத்தில் உள்ளே நுளைவதற்கான )கடவுச்சொல்.என்றாலும் அவனுக்கு மனதில் பயமாக தான் இருந்தது மனைவி வந்தால் சத்தம் போடுவாள் அவள் பல முறை சண்டை பிடித்திருக்கிறாள்; விடிய விடிய கணணியிலை தட்டி கொண்டிருக்காதையுங்கோ எண்டு. ஆனாலும் என்ன செய்ய கணணி அவனது அடுத்த காதலியாகி விட்டது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


இப்பிடி கன பேரின்ரை வீட்டிலை உண்மையா நடக்கிது எனக்கும்தான்

Print this item

  நாகர்கோவில் படுகொலையில்
Posted by: iruvizhi - 09-22-2005, 04:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (12)

நாகர்கோவில் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடந்தது.


10 ஆண்டுகளுக்கு முன்பாக சிறிலங்கா விமானப் படையினரின் புக்காரா விமானக் குண்டு வீச்சு விமானங்கள் நிகழ்திய மிக மோசமான குண்டுத் தாக்குதலால் நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்கள் இருபது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மாணவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பருத்தித்துறை கிராமக் கோட்டில் அமைந்துள்ள நாகர்கோவில் ம.வி தற்காலிக பாடசாலையில் அதிபர் சி.மகேந்திரம் தலைமையில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

Print this item

  ரீட்டா புயல் ஜப்பான் சதியா?
Posted by: வினித் - 09-22-2005, 02:27 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (9)

165 கீ.மீ. வேகத்தில் ரீட்டா புயல் டெக்சாஸ் நகரை நாளை தாக்குகிறது உஷார் நிலை பிரகடனம் ஜப்பான் சதியா?
மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் வீசும் ரீட்டா புயல் நாளை அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரை பகுதியை தாக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவுக்கு செப்டம்பர் மாதம் போதாத காலம் போலாகி விட்டது. கடந்த 2001 செப்டம் பரில் அல்கொய்தா தீவிரவாதிகள் நியூயார்க் நகரில் 110 மாடி கட்டிடம் மீது விமான தாக்குதல் நடத்தியதில் சுமார் 3000 பேர் பலியானார்கள். அந்த அட்டாக்கில் அமெரிக்கா மட்டுமின்றி உலகமே கதி கலங்கியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவை புயல் அச்சுறுத்துகிறது. அங்குள்ள நியூஆர்லியன்ஸ் நகரை கடந்த 28-ந்தேதி கத்ரினா புயல் தாக்கியது. இதில் சுமார் 1000 பேர் பலியானார்கள். அந்த நகரமே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. அதன் பாதிப்பில் இருந்து அமெ ரிக்கர்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இப்போது செப்டம் பரில் அமெரிக்காவை தாக்க இன்னொரு புயல் ரீட்டா தயாராகி வருகிறது.

இதுபற்றி புயல் மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்புயல் இந்த ரீட்டா புயல் வலுவடைந்து வருகிறது. அது 5-ம் நிலையை தொட்டுள்ளது என்பது விமான மூலம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரீட்டா புயல் மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ரீட்டா நேற்று மெக்சிகோ வளைகுடா பகுதியை அடைந்தது. அது நாளை அதிகாலை டெக்சாஸ் கடற்கரை பகுதியை தாக்கும் அபாயம் உள்ளது.

இந்த ரீட்டா புயல்யால் நியூஆர்லியன்ஸ்புயல் கல்வெஸ்டன் நகரங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதுபற்றி நியூஆர்லியன்ஸ் நகர மேயர் ரே நாகின் கூறுகையில்புயல்

கடந்த முறை வீசிய கத்ரினா புயல்யால் நிறைய பாடம் கற்று கொண் டோம். இப்போது மிகவும் உஷராக இருக்கிறோம். 2 பஸ்சில் மக்களை ஏற்றி அனுப்பி விட் டோம். இன்னும் 500 பஸ்சில் மக்களை ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைப்போம் என்றார். வளைகுடா கடற்கரை யில் உள்ள கல்வெஸ்டன் நகரில் 57புயல்000 பேர் உள்ளனர். அங்கு 1900-ம் ஆண்டு புயல் தாக்கியபோது 8புயல்000 முதல் 12புயல்000 பேர் வரை உயிரிழந்தனர். அதனால் இப்போது மக்கள் பாதுகாப்பான பகுதி நோக்கி செல்ல தொடங்கி விட்டனர்.

இதனிடையே புயல் தாக்கும் வாய்ப்புள்ள இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தயாராக இருக்குமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சு{றாவளி பீதி குழந்தைகளை புகைபடம் எடுக்கும் டெக்சாஸ் பெற்றோர்

டெக்சாஸ்செப்.22 அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை ரிட்டா சு{றாவளி தாக்க உள்ளது அல்லவா? அமெரிக்க வரலாற்றிலேயே 3வது மிகப் பெரிய புயலாக இது அமையும் என்று தேசிய புயல் ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. மணிக்கு 175 மைல் வேகத்தில் புயல் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 10லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அதனால் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் வெளியேறும்கார்கள் மைல் கணக்கில் நீண்ட கியூவில் காத்து கிடக்கின்றன.

மேலும் பொதுமக்கள் தங்களின் குhந்தைகளை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்திரவிட்டு உள்ளனர். ஏனெனில் ஒரு வேளை புயலால் குழந்தைகளைப் பிரிய நேர்ந்தால் புகைப்படம் உதவியால் அடையாளம் காட்ட பிறகு அது உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற் கெனவே கத்ரினா புயலுக்குப்பிறகு ஆயிரக்கணக்கானவர்கள் டெக்சாஸில் அடைக்கலம் தேடினார்கள். இப்போது ரிட்டா புயலில் இருந்து தப்பிக்க அவர்கள் 2ம் முறையாக டெக்சாஸில் இருந்து வேறு இடத்துக்கு அடைக்கலம் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பான் சதியா?

இதுபற்றி அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஸ்டீவன்ஸ் கூறுகையில்புயல் கத்ரினா புயல்யை ஜப்பானின் யாசுகா மாபியா கும்பல் உருவாக்கி உள்ளது. ரஷியாவில் தயாரிக்கப்பட்ட மின்காந்த அலை ஜெனரேட்டர் உதவியுடன் கத்ரின் புயல்யாக உருவாக் கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக போரின் போது ஜப்பானின் ஹரோஷிமாபுயல் நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு வீசியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த புயல் தாக்குதலை ஜப்பான் மாபியா கும்பல் நடத்தி உள்ளது என்றார்.
dinakaran.com

Print this item

  கலகலக்கும் யாழ்ப்பாணம்...
Posted by: SUNDHAL - 09-22-2005, 01:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (13)

கொழும்பில் வசிக்கும் ஓர் அன்பர் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த திருமண வைபவத்துக்குச் சென்று திரும்பினார்.

அங்கு ஊருக்கு ஊர் கண்ட ஒரு காட்சி இவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாம்.

திருநெல்வேலி, ஆவரங்கால், நெல்லியடி இப்படிப் பல ஊர்களில் நவீன கல்யாண மண்டபங்கள் தோன்றியுள்ளனவாம். இப்போதெல்லாம் திருமண வைபவத்தை ஏற்பாடு செய்வதற்குச் சிரமப்படத் தேவையில்லை. சாப்பாடு, சோடனை, மேளதாளம் எல்லாவற்றுக்கும் பணத்தைக் கொடுத்தால் போதும், மண்டபக் காரர்களே சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து கொடுக்கிறார்கள்.

கொழும்பில் எப்படிச் செய்கிறார்களோ அதேபோல் அங்கும் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறார்கள் என்றார் அந்த அன்பர்.

யாழ்ப்பாணம் மீண்டும் கலகலக்கத் தொடங்கிவிட்டது!

Print this item

  'தமிழீழ வைப்பகம்
Posted by: iruvizhi - 09-22-2005, 10:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

'தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்!



இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகம்' திகழ்கிறது என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது.


இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை:

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை.

இருந்தபோதும் யுத்தத்தின் போதும் அமைதிக் காலத்தின் போதும் தமிழர்களுக்கான பாதுகாப்பு வைப்பகமாக அந்த வங்கி திகழ்கிறது.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ வங்கியானது சிறிலங்கா அரசாங்கத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த வங்கியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் முழுமையான நிதிக் கொள்கை நிர்வாகத்தோடு இயங்கி வருகிறது.

இந்த வங்கி 1994 ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் வங்கியில் சிறிலங்கா ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியான சிறிலங்காவின் வங்கிகளை விட இந்த வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் 8.5 வீதம் அளவிற்கு வழங்கப்படுகிறது. சிறிலங்காவில் வைப்புத்தொகைக்கான சராசரி வட்டி 5.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கிச் செயற்பாடுகள் குறித்து வங்கியின் பணிப்பாளர் மகாலிங்கம் வீரத்தேவன் கூறுகையில், யுத்த காலத்தின் போது மக்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் வைப்பீடு செய்தனர். அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் பெருமளவில் கடன் பெற்று வருகின்றனர். நாங்களும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சேமிப்புத் தொகைக்கான செயற்திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

36 வயதாகும் வீரத்தேவன, யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர்.

தற்போது தமிழீழ வங்கியில் 15 மில்லியன் டொலர் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரத்தேவன் கூறினார்.

தமிழீழ வங்கி லாப நட்டக் கணக்குகளை வெளியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் மட்டுமே இந்த விவரங்கள் கையளிக்கப்படும்.

இந்த 7 பேர் கொண்ட நிர்வாக சபையே வங்கி தொடர்பான நிதிக் கொள்கைகளையும் வட்டி விகிதங்களையும் முடிவு செய்து அறிவிக்கிறது.

"சிறிலங்காவின் வர்த்தக நிலைமையில் அரசாங்கம் பணத்தை அச்சடித்தும் பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. இது எமது வர்த்தகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது" என்கிறார் வீரத்தேவன்.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து கடன் தொகையை மக்கள் பெருமளவில் பெற்றனர். வீடுகளைத் திருத்தவும், வர்த்தகங்களை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களை அமைக்கவும் இந்தத் தொகையை தமிழீழ வங்கியிடமிருந்து பெற்றுச் சென்றனர்.

2002 ஆம் ஆண்டு 30 வீதமாக இருந்த தமிழீழ வங்கியின் வைப்புத் தொகை 2003 ஆம் ஆண்டு 42 வீதமாக உயர்ந்தது. அதேபோல் 2002 ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறுவோர் விகிதம் 20 வீதமாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு 40 வீதமானது என்றார் வீரத்தேவன்.

தவணைகளை நாம் துப்பாக்கி முனையில் பெறுவதில்லை. இந்தப் பணிக்கு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியுள்ளோம் என்கிறார் தமிழீழ வங்கியின் நிர்வாக அதிகாரியான கந்தையா பாலகிருஸ்ணன்.

தமிழீழ வங்கியின் 12 கிளைகளில் 4 கிளைகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளன.

தலைமையகமான கிளிநொச்சியில் பிளாஸ்மா ஸ்கிறீன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரம் வைப்புத் தொகைதாரர்களும் 300 நடப்பு வங்கிக் கணக்கு வைத்துள்ளோரும் உள்ளனர்.

தமிழீழ வங்கியினது காசோலைகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளை தவிர்த்த சிறிலங்காவின் இதர பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை.

வெளிநாடு வாழ் தமிழர்களின் பணம் சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்டபோதும் விடுதலைப் புலிகள் அந்த வங்கிகளின் பணிகளில் தலையிடுவது இல்லை.

தமிழீழ வங்கியானது சர்வதேச நாடுகளில் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் சிறிலங்காவின் இதர பகுதி உள்ளிட்ட பிற்பகுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கிறது.

சிறிலங்காவின் மத்திய வங்கியானது தமிழீழ வங்கி வைப்புத் தொகைகளைப் பெறுவது சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும் அதன் உத்தரவுகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருந்துவதில்லை.

இந்த வங்கியின் பணம் கொள்ளை போவதில்லை என்று வீரத்தேவன் கூறுகையில் அது ஏன் என்று நாம் கேட்டோம்...அவர் சிரித்துக் கொண்டே எளிமையான வரிகளில் சொன்னார்...

"யாரும் எங்களிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கமாட்டார்கள். நாட்டில் அசாதாரண சூழல் ஒன்று ஏற்படும் வரை இங்கு பாதுகாப்பாகவே அவை இருக்கும் என்றார் வீரத்தேவன்.


நன்றி புதினம்

Print this item

  புதிய உறுப்பினர்
Posted by: sooriyamuhi - 09-22-2005, 06:27 AM - Forum: அறிமுகம் - Replies (43)

அன்புள்ள நெஞ்சங்களுக்கு,
நான் புதிய உறுப்பினர்
உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி

தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

Print this item

  அன்பு நெஞ்சங்களுக்கு
Posted by: Muthukumaran - 09-22-2005, 05:10 AM - Forum: அறிமுகம் - Replies (50)

அன்பு நெஞ்சங்களுக்கு முத்துகுமரனின் வணக்கங்கள்..
நீண்ட முயற்சிக்குப் பின் ஒரு வழியாக உள்ளே வந்துவிட்டேன்.....
சொந்த ஊர் மதுரை. இப்போது பணிபுரிவது துபாய்

என்றும் எங்கும் தமிழர் வெல்லட்டும்.....

Print this item

  அவளவனாய்....
Posted by: kuruvikal - 09-22-2005, 04:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

<img src='http://img372.imageshack.us/img372/407/birds6oa.jpg' border='0' alt='user posted image'>

<b>விழி தேடிய வழி
தோழி மலர்ந்தாள்
மலராய்..!
அன்புத் தோழியவள்
அன்பில்
அருகிருக்க வேண்டும்
ஆயுள் வரை
அவளவனாய்....!
அரங்கக் கூட முடியவில்லை
அட... அங்கு அவள்
காந்தமானாள்
இரும்பாய் தவிக்கிறேன் நான்..!

அரவணைக்க அவள்
கரம் வேண்டாம்
அது கசங்கிவிடும்
சிந்தும்
பார்வை போதும்..!
அன்புக்கு அவள்
அணைப்பு வேண்டாம்
அருகிருந்து காதோடு
பேசும் தமிழ் மொழியாள்
தமிழ் போதும்...!

நேற்று வரை
நான் தான் எனக்கு
இன்று அவளே நான்..!
ரசிக்க மறந்ததைக் கூட
ரசிக்க ருசிக்க வைத்தாள்
எனக்குள் அவளாய்...!
வார்த்தையல்ல....
உணர்வு சொல்கிறது
உணர்ந்து சொல்கிறது
காதல் புனிதம்
பூவிலும் மென்மை
எனக்குள் பூத்தவள்
தந்தாள் தரிசன உண்மை..!</b>

Print this item