Yarl Forum
நாகர்கோவில் படுகொலையில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நாகர்கோவில் படுகொலையில் (/showthread.php?tid=3220)



நாகர்கோவில் படுகொலையில் - iruvizhi - 09-22-2005

நாகர்கோவில் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடந்தது.


10 ஆண்டுகளுக்கு முன்பாக சிறிலங்கா விமானப் படையினரின் புக்காரா விமானக் குண்டு வீச்சு விமானங்கள் நிகழ்திய மிக மோசமான குண்டுத் தாக்குதலால் நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்கள் இருபது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மாணவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பருத்தித்துறை கிராமக் கோட்டில் அமைந்துள்ள நாகர்கோவில் ம.வி தற்காலிக பாடசாலையில் அதிபர் சி.மகேந்திரம் தலைமையில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.


- RaMa - 09-22-2005

10 மாணவர்களுக்கும் இறந்த அனைத்து பொதுமக்களுக்கும் எனது ஆஞ்சலிகள்


- Birundan - 09-22-2005

இளம் பிஞ்சுகளை கொன்ற சிங்களத்தின் வெறி என்று தனியும்.
பிஞ்சுகளுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்.


- வெண்ணிலா - 09-22-2005

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- Rasikai - 09-22-2005

கண்ணீர் அஞ்சலிகள் Cry Cry Cry


- kuruvikal - 09-23-2005

இந்த சம்பவத்தில் உயிர்ப்பலியான மாணவ உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry

இந்த சம்பவம் நடந்தபோது இருட்டடிப்பு உலகில் வாழ வேண்டி இருந்தது...! இச்சம்பவத்தின் சோக அனுபவத்தை உண்மை அறிவதற்காக யாரேனும் பகிர்ந்து கொள்ளுங்களன்...!

காரணம் இச்சம்பவம் குறித்தி கதிர்காமர் என்பவர் விழுந்தடிச்சு அறிக்கை விட்டவர்...! இச்சம்பவத்துக்கு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லி புலிகளை திட்டித்தீர்த்து...சமாதான தேவதை..சந்திரிக்காவுக்கும்...யுத்த தேவன் ரத்வத்தைக்கும்...வால்பிடித்தவர்கள்...அவைதான்...மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் குழுமம்...எண்டவே வாயே திறக்கல்ல...! :evil: Confusedhock:


- Nitharsan - 09-23-2005

இனவழிப்புக்காய் சிறிலங்கா அரசினால் குறிவைக்கபட்ட இடம் வடமராட்சி கிழக்கின் மையப்பள்ளியான நாகர்கோவில் மகாவித்தியாலயம். 850 மாணவர்களையும் 30 ஆசிரியர்களையும் கொண்ட நாகர்கோவில் மாகவித்தியாலயம். மதிய வேளையில் சுடுகாடாகியது. மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா விமானப்படைக்கு சொந்த மான புக்காரா விமானம் நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது குண்டு தாக்குதல் நடாத்தியது. செய்வதறியாது சிதியோடிய மாணவர்கள் இரத்த வெள்ளித்தில் மூழ்கினர். அச்சத்தில் புளிய மரத்தின் கீழ் மறைந்த சீருடை அணிந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. உடல்கள் சிதறி வெள்ளை சீருடை சிவப்பாக கையிலிருந்த புத்தககங்களும் இரத்தில் குளிக்க 25 மாணவர்கள் உட்பட 40 பொது மக்கள் சிங்கள அராஜகத்துக்கு பலியானார்கள். (இறந்தவர்கள் தொகை வெவ்வேறு ஊடககங்களில் கூடிக்குறைகின்றது அதை யாராவது உறுதிப்படுதவும்)
ஒளிப்படங்களை (வீடீயோ காட்சிகளை 1995 ம் ஆண்டு செப்ரம்பர் மாத ஒளிவீச்சில் பார்க்கலாம்


- sooriyamuhi - 09-23-2005

கண்ணீர் அஞ்சலிகள்

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- Mathuran - 09-23-2005

sooriyamuhi Wrote:கண்ணீர் அஞ்சலிகள்

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry

அனைத்து மாணவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கத்தின் கோர முகத்தின் ஒரு சிறிய பகுதியே நாகர்கோவில் பாடசாலைமீதான பயங்கரவாதத் தாக்குதலாகும். இவ்வாறான பல தாக்குதல்கள் பயங்கரவாத சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் சிறார்கள் மீது திணிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறீலங்கா அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளால் பல குழந்தைகள் தாய் தந்தயரை இழந்தும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் இறந்தும் உள்ளார்கள். அவற்றினை உலகம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, பயங்கரவாத சிறீலங்கா அரசினை வன்மையாக கண்டிக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.


- Niththila - 09-23-2005

கண்ணீர் அஞ்சலிகள் Cry Cry Cry


- sabi - 09-23-2005

அனைத்து உறவுகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் Cry Cry Cry Cry Cry Cry


- cannon - 09-23-2005

எனது ஒன்றுவிட்ட சகோதரன், இதே காலத்தில், இதே பாடசாலையில் கணித ஆசிரியராக கடமை புரிந்தவானாம். எதோ அதிஸ்ரவசமாக மயிரிலையில் உயிர் தப்பி இருக்கிறான். அன்மையில் தாயகம் சென்றபோது அவன் கூறிய சம்பவக்காட்சி, நாகரீக மனித உலகம் வெட்கித்தலை குனிய வேண்டிய சம்பவம்!!

இங்கு சிங்கள வெறிபிடித்த மிருகங்களினால் அழிக்கப்பட்ட அந்த ஒன்றுமறியாத பிஞ்சுக்களின் ஆத்மாக்களுக்கு சிங்கள வெறியர் பதில் கூறும் காலம் வெகுதொலைவிலில்லை!!


- Mathan - 09-24-2005

இந்த தாக்குதலில் 4 ஒன்றுவிட்ட சகோதரங்களை இழந்ததாக கள உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

http://www.goodlanka.com/22sep1995/