Yarl Forum
கலகலக்கும் யாழ்ப்பாணம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கலகலக்கும் யாழ்ப்பாணம்... (/showthread.php?tid=3222)



கலகலக்கும் யாழ்ப்பாணம்... - SUNDHAL - 09-22-2005

கொழும்பில் வசிக்கும் ஓர் அன்பர் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த திருமண வைபவத்துக்குச் சென்று திரும்பினார்.

அங்கு ஊருக்கு ஊர் கண்ட ஒரு காட்சி இவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாம்.

திருநெல்வேலி, ஆவரங்கால், நெல்லியடி இப்படிப் பல ஊர்களில் நவீன கல்யாண மண்டபங்கள் தோன்றியுள்ளனவாம். இப்போதெல்லாம் திருமண வைபவத்தை ஏற்பாடு செய்வதற்குச் சிரமப்படத் தேவையில்லை. சாப்பாடு, சோடனை, மேளதாளம் எல்லாவற்றுக்கும் பணத்தைக் கொடுத்தால் போதும், மண்டபக் காரர்களே சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து கொடுக்கிறார்கள்.

கொழும்பில் எப்படிச் செய்கிறார்களோ அதேபோல் அங்கும் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறார்கள் என்றார் அந்த அன்பர்.

யாழ்ப்பாணம் மீண்டும் கலகலக்கத் தொடங்கிவிட்டது!


- nallavan - 09-22-2005

அதுசரி. உவைக்கு இன்னும் உந்த ஆடம்பர ஆசை போகேல. சனம் உந்தளவுக்குக் கஸ்டப்படுது, போராட்டத்துக்கு நிதி தேவைப்படுது, இந்த நேரத்திலதான் யாழ்ப்பாணத்தார் லட்சக்கணக்கில சிலவழிச்சுக் கோயிலுக்குத் தேர் செய்வினம். லட்சக்கணக்கில சிலவழிச்சு கலியாணக் கொண்டாட்டங்கள் செய்வினம். வீட்டில பந்தல் போட்டுக்கலியாணம் செய்யிறதுக்கு என்ன? யாழ்ப்பாணத்தில இல்லாத இடமோ? எதுக்கு மண்டபம் எடுத்துக் கலியாணம்?

அத்தியாவசியமான தேவைகளுக்குச் சிலவழிக்கத்தான் வேணும். அதுக்காக இன்னொருத்தன் செய்யிறானெண்டு தானும் வீண் ஆடம்பரங்களச் செய்யிறது கண்டிக்கப்பட வேணும். உந்த யாழ்ப்பாணத்தாரில


- vasanthan - 09-22-2005

சாதிச் சண்டையில் யாழ்ப்பாணம் கிலிபிடித்து;போயிருக்கு ஒருவர் இறந்தும் விட்டார்.(கொடிகாமத்தில்) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட பலர் படுகாயம். எப்ப தான் திருந்தப்போறாங்களோ?


- RaMa - 09-22-2005

கவலைப்படதையுங்கோ இவர்களின் ஆட்டம் எல்லாம் எங்கள் அண்ணாக்கள் போகுமட்டும் தான்


- Mathan - 09-22-2005

புலத்தில் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக செய்துவரும் நிலையில் தாயகத்தில் மட்டும் விமரிசையாக விழாக்களை செய்ய கூடாது என்று சொல்வது சரியல்ல. கலாச்சார சீர்கேடுகள் மற்றும் சமுதாயத்தில் பிரைச்சனைகள் எழுதும் போது கண்டிக்கலாம். பலவருடங்களாக போரின் தாக்கங்களை நேரடியாக அனுபவித்து வந்த அவர்கள் தற்போது கிடைத்துள்ள இந்த சிறு இடைவெளியில் அவர்கள் தமது விருப்பப்படி விழாக்களை கொண்டாடி மகிழட்டுமே,


- sankeeth - 09-22-2005

நல்லவனுக்கு யாழ்ப்பாணத்தில் உறவுகள் இல்லைப்போல.....


- sakthy - 09-22-2005

யாழ்ப்பாணத்தில் கலகலப்பு மட்டுமல்ல கைகலப்பும் கூடிவிட்டுதாமே....வெட்டுகொத்து என.கேக்கும் போதே கவலையாக இருக்கு.


- ANUMANTHAN - 09-22-2005

மதனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், அத்துடன் எப்போது அடுத்த சண்டை வரப்போகுதோ அப்போதும் அதன் தாக்கத்தை நேரடியாக சந்திக்கப்போகின்றவர்கள் அவர்கள்தானே மிச்சம்பிடித்து என்னாகுமோ ஏதாகுமோ என்று யோசிக்காமல் தற்போதுள்ள அமைதியை சந்தோசமாக அனுபவிக்கட்டுமே!
புலத்தில் நாம் அனுபவிப்பதிலும் பார்க்க இது பெரிதல்லவே!
கொழும்பிலுள்ளவர்களுக்கு இது சிலவேளை பெரிதாக தெரியலாம்.

மேலே உள்ள செய்தி தினக்குரல் பத்திரிகையில் ''ஒளிவுமறைவின்றி'' பகுதியில் உள்ளது.


- sinnakuddy - 09-22-2005

புலத்தின் தாக்கத்தை யாழில் காண்பது ஆச்சசரியமான விடயமல்ல... டெலிபோன் காட் விற்பனை யை பார்க்க தெரியுது தானே அவர்களின் இறுக்கத்தை தெரிந்து கொள்ள...இப்படித்தான் கேரளத்தில் 70 களில் மலையாளிகள் மத்தியகிழக்கு சென்று டொலராக உழைத்து வந்த காரணமாக கேரளாவே உருமாறியது..யாழ்ப்பாணம் சண்டையோ சமாதானமோ என்று இரண்டுகெட்டான் நிலையில் இருப்பதலோல்லோ இப்படி இன்னும் இருக்கிறது..அல்லாட்டால் கேரளத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் உருமாறினது போல யாழ்ப்பாணமும் உருமாறியிருக்கும்...


- kuruvikal - 09-22-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->புலத்தில் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக செய்துவரும் நிலையில் தாயகத்தில் மட்டும் விமரிசையாக விழாக்களை செய்ய கூடாது என்று சொல்வது சரியல்ல. கலாச்சார சீர்கேடுகள் மற்றும் சமுதாயத்தில் பிரைச்சனைகள் எழுதும் போது கண்டிக்கலாம். பலவருடங்களாக போரின் தாக்கங்களை நேரடியாக அனுபவித்து வந்த அவர்கள் தற்போது கிடைத்துள்ள இந்த சிறு இடைவெளியில் அவர்கள் தமது விருப்பப்படி விழாக்களை கொண்டாடி மகிழட்டுமே,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதேதான் குருவிகளின் கருத்தும்...! துன்பப்பட்ட மக்களுக்கு துன்பமே மிஞ்ச வேண்டும் என்பதல்ல நியதி..!அவர்களின் துன்பத்தில் பிழைப்பவர்கள்...பிழைத்தவர்கள் பலர் புலம், கொழும்பு என்று சொகுசாக வாழும் போது..அவர்கள் எப்பவும் துன்பப்பட வேண்டும் என்பது நியதி அல்ல..! எங்கில்ல கோஷ்டி மோதல்..புலத்தில் இல்லையா..??! கொழும்பில் இல்லையா...??! அது எல்லாம் கண்ணுக்கு தெரியாது தாயகத்தில் சின்னன் என்றாலும் பூதாகாரமா தெரியும்...அதுதான் தமிழர்கள் குணமோ...??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Rasikai - 09-22-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->புலத்தில் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக செய்துவரும் நிலையில் தாயகத்தில் மட்டும் விமரிசையாக விழாக்களை செய்ய கூடாது என்று சொல்வது சரியல்ல. கலாச்சார சீர்கேடுகள் மற்றும் சமுதாயத்தில் பிரைச்சனைகள் எழுதும் போது கண்டிக்கலாம். பலவருடங்களாக போரின் தாக்கங்களை நேரடியாக அனுபவித்து வந்த அவர்கள் தற்போது கிடைத்துள்ள இந்த சிறு இடைவெளியில் அவர்கள் தமது விருப்பப்படி விழாக்களை கொண்டாடி மகிழட்டுமே,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதேதான் குருவிகளின் கருத்தும்...! துன்பப்பட்ட மக்களுக்கு துன்பமே மிஞ்ச வேண்டும் என்பதல்ல நியதி..!அவர்களின் துன்பத்தில் பிழைப்பவர்கள்...பிழைத்தவர்கள் பலர் புலம், கொழும்பு என்று சொகுசாக வாழும் போது..அவர்கள் எப்பவும் துன்பப்பட வேண்டும் என்பது நியதி அல்ல..! எங்கில்ல கோஷ்டி மோதல்..புலத்தில் இல்லையா..??! கொழும்பில் இல்லையா...??! அது எல்லாம் கண்ணுக்கு தெரியாது தாயகத்தில் சின்னன் என்றாலும் பூதாகாரமா தெரியும்...அதுதான் தமிழர்கள் குணமோ...??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நல்ல கருத்து.


- வெண்ணிலா - 09-23-2005

ANUMANTHAN Wrote:மதனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், அத்துடன் எப்போது அடுத்த சண்டை வரப்போகுதோ அப்போதும் அதன் தாக்கத்தை நேரடியாக சந்திக்கப்போகின்றவர்கள் அவர்கள்தானே மிச்சம்பிடித்து என்னாகுமோ ஏதாகுமோ என்று யோசிக்காமல் தற்போதுள்ள அமைதியை சந்தோசமாக அனுபவிக்கட்டுமே!
புலத்தில் நாம் அனுபவிப்பதிலும் பார்க்க இது பெரிதல்லவே!
கொழும்பிலுள்ளவர்களுக்கு இது சிலவேளை பெரிதாக தெரியலாம்.

மேலே உள்ள செய்தி தினக்குரல் பத்திரிகையில் ''ஒளிவுமறைவின்றி'' பகுதியில் உள்ளது.


இந்தத் தினக்குரல் "ஒளிவு மறைவின்றி" நோர்வே க்கும் வாறதா? :?:


Re: கலகலக்கும் யாழ்ப்பாணம்... - SUNDHAL - 09-23-2005

SUNDHAL Wrote:கொழும்பில் வசிக்கும் ஓர் அன்பர் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த திருமண வைபவத்துக்குச் சென்று திரும்பினார்.

அங்கு ஊருக்கு ஊர் கண்ட ஒரு காட்சி இவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாம்.

திருநெல்வேலி, ஆவரங்கால், நெல்லியடி இப்படிப் பல ஊர்களில் நவீன கல்யாண மண்டபங்கள் தோன்றியுள்ளனவாம். இப்போதெல்லாம் திருமண வைபவத்தை ஏற்பாடு செய்வதற்குச் சிரமப்படத் தேவையில்லை. சாப்பாடு, சோடனை, மேளதாளம் எல்லாவற்றுக்கும் பணத்தைக் கொடுத்தால் போதும், மண்டபக் காரர்களே சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து கொடுக்கிறார்கள்.

கொழும்பில் எப்படிச் செய்கிறார்களோ அதேபோல் அங்கும் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறார்கள் என்றார் அந்த அன்பர்.

யாழ்ப்பாணம் மீண்டும் கலகலக்கத் தொடங்கிவிட்டது!


Thanks:Thinakural


- SUNDHAL - 09-23-2005

மன்னிக்கவும் பத்திரிகையுனுடைய பெயரை குறிப்பிட மறந்து விட்டேன்....நன்றி அணுமந்தன்...