Yarl Forum
ரீட்டா புயல் ஜப்பான் சதியா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: ரீட்டா புயல் ஜப்பான் சதியா? (/showthread.php?tid=3221)



ரீட்டா புயல் ஜப்பான் சதியா? - வினித் - 09-22-2005

165 கீ.மீ. வேகத்தில் ரீட்டா புயல் டெக்சாஸ் நகரை நாளை தாக்குகிறது உஷார் நிலை பிரகடனம் ஜப்பான் சதியா?
மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் வீசும் ரீட்டா புயல் நாளை அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரை பகுதியை தாக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவுக்கு செப்டம்பர் மாதம் போதாத காலம் போலாகி விட்டது. கடந்த 2001 செப்டம் பரில் அல்கொய்தா தீவிரவாதிகள் நியூயார்க் நகரில் 110 மாடி கட்டிடம் மீது விமான தாக்குதல் நடத்தியதில் சுமார் 3000 பேர் பலியானார்கள். அந்த அட்டாக்கில் அமெரிக்கா மட்டுமின்றி உலகமே கதி கலங்கியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவை புயல் அச்சுறுத்துகிறது. அங்குள்ள நியூஆர்லியன்ஸ் நகரை கடந்த 28-ந்தேதி கத்ரினா புயல் தாக்கியது. இதில் சுமார் 1000 பேர் பலியானார்கள். அந்த நகரமே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. அதன் பாதிப்பில் இருந்து அமெ ரிக்கர்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இப்போது செப்டம் பரில் அமெரிக்காவை தாக்க இன்னொரு புயல் ரீட்டா தயாராகி வருகிறது.

இதுபற்றி புயல் மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்புயல் இந்த ரீட்டா புயல் வலுவடைந்து வருகிறது. அது 5-ம் நிலையை தொட்டுள்ளது என்பது விமான மூலம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரீட்டா புயல் மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ரீட்டா நேற்று மெக்சிகோ வளைகுடா பகுதியை அடைந்தது. அது நாளை அதிகாலை டெக்சாஸ் கடற்கரை பகுதியை தாக்கும் அபாயம் உள்ளது.

இந்த ரீட்டா புயல்யால் நியூஆர்லியன்ஸ்புயல் கல்வெஸ்டன் நகரங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதுபற்றி நியூஆர்லியன்ஸ் நகர மேயர் ரே நாகின் கூறுகையில்புயல்

கடந்த முறை வீசிய கத்ரினா புயல்யால் நிறைய பாடம் கற்று கொண் டோம். இப்போது மிகவும் உஷராக இருக்கிறோம். 2 பஸ்சில் மக்களை ஏற்றி அனுப்பி விட் டோம். இன்னும் 500 பஸ்சில் மக்களை ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைப்போம் என்றார். வளைகுடா கடற்கரை யில் உள்ள கல்வெஸ்டன் நகரில் 57புயல்000 பேர் உள்ளனர். அங்கு 1900-ம் ஆண்டு புயல் தாக்கியபோது 8புயல்000 முதல் 12புயல்000 பேர் வரை உயிரிழந்தனர். அதனால் இப்போது மக்கள் பாதுகாப்பான பகுதி நோக்கி செல்ல தொடங்கி விட்டனர்.

இதனிடையே புயல் தாக்கும் வாய்ப்புள்ள இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தயாராக இருக்குமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சு{றாவளி பீதி குழந்தைகளை புகைபடம் எடுக்கும் டெக்சாஸ் பெற்றோர்

டெக்சாஸ்செப்.22 அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை ரிட்டா சு{றாவளி தாக்க உள்ளது அல்லவா? அமெரிக்க வரலாற்றிலேயே 3வது மிகப் பெரிய புயலாக இது அமையும் என்று தேசிய புயல் ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. மணிக்கு 175 மைல் வேகத்தில் புயல் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 10லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அதனால் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் வெளியேறும்கார்கள் மைல் கணக்கில் நீண்ட கியூவில் காத்து கிடக்கின்றன.

மேலும் பொதுமக்கள் தங்களின் குhந்தைகளை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்திரவிட்டு உள்ளனர். ஏனெனில் ஒரு வேளை புயலால் குழந்தைகளைப் பிரிய நேர்ந்தால் புகைப்படம் உதவியால் அடையாளம் காட்ட பிறகு அது உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற் கெனவே கத்ரினா புயலுக்குப்பிறகு ஆயிரக்கணக்கானவர்கள் டெக்சாஸில் அடைக்கலம் தேடினார்கள். இப்போது ரிட்டா புயலில் இருந்து தப்பிக்க அவர்கள் 2ம் முறையாக டெக்சாஸில் இருந்து வேறு இடத்துக்கு அடைக்கலம் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பான் சதியா?

இதுபற்றி அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஸ்டீவன்ஸ் கூறுகையில்புயல் கத்ரினா புயல்யை ஜப்பானின் யாசுகா மாபியா கும்பல் உருவாக்கி உள்ளது. ரஷியாவில் தயாரிக்கப்பட்ட மின்காந்த அலை ஜெனரேட்டர் உதவியுடன் கத்ரின் புயல்யாக உருவாக் கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக போரின் போது ஜப்பானின் ஹரோஷிமாபுயல் நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு வீசியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த புயல் தாக்குதலை ஜப்பான் மாபியா கும்பல் நடத்தி உள்ளது என்றார்.
dinakaran.com


- Birundan - 09-22-2005

Confusedhock: Confusedhock: Confusedhock: எண்ட குருவாயூரப்பா எந்தா சோதன இது :roll: :roll: :roll:


- vasisutha - 09-22-2005

Confusedhock: Confusedhock: இப்படிக் கூட செய்ய முடியுமா? Confusedhock:


- RaMa - 09-22-2005

ம்ம்ம் என்ன தான் நடக்குது உலகத்திலை?


- வெண்ணிலா - 09-22-2005

Confusedhock:


- kurukaalapoovan - 09-22-2005

பக்கத்தில இருக்கிற உங்களுக்குதானே தெரியச்சந்தர்ப்பம் Confusedhock:


- kurukaalapoovan - 09-22-2005

யப்பான் பழிவாங்கா உப்படியெல்லாம் கஷ்டப்பட தேவையில்லையே. சீனாவோடை பொருளாதாரீதியில் கொஞ்ச உடன்பாடுகளுக்கு வந்தா காணும். மிச்சம் தன்பாட்டில நடக்கும்...


- Mathan - 09-22-2005

இது பரபரப்பிற்காகவும் பிரபல்யமாவதற்காகவும் கிளப்பிவிடப்பட்ட புரளி என்று தான் நான் நினைக்கின்றேன். இப்படித்தான் சுனாமி வந்த சமயம் கூட அது உருவாக்கப்பட்டது என்றார்கள். இப்படியே போனால் எதையுமே நம்ப முடியாது, அனைத்தையுமே சந்தேக கண் கொண்டே பார்க்க வேண்டியிருக்கும்.


- kuruvikal - 09-22-2005

எல்லாம் அல்லாவின் செயல்...எங்கிறது ஒரு குறூப்..! :wink: 8)

வழமையாக மத்திய அமெரிக்க நாடுகளையும் அமெரிக்காவையும் புயல் தாக்குவது இங்கிருந்துதான்...சூழல் வெப்பமுறுதலால் வரும் எல்னினோவின் (El nino) விளைவுகள் தான் இப்படி அடிக்கடி புயல் உருவாகக் காரணமாயிருக்கலாம்...! சூழல் வெப்பமுறுதலில் அமெரிக்கா வெளித்தள்ளும் புகையே அதிகம் பங்களிப்புச் செய்கிறது...! இது அமெரிக்கா தானே தன் தலையில் வாரிப் போடுவது போன்றது...! பாவம் அப்பாவி அமெரிக்க மக்கள்..! மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடையது..! Idea


- Mathuran - 09-23-2005

kuruvikal Wrote:எல்லாம் அல்லாவின் செயல்...எங்கிறது ஒரு குறூப்..! :wink: 8)

வழமையாக மத்திய அமெரிக்க நாடுகளையும் அமெரிக்காவையும் புயல் தாக்குவது இங்கிருந்துதான்...சூழல் வெப்பமுறுதலால் வரும் எல்னினோவின் (El nino) விளைவுகள் தான் இப்படி அடிக்கடி புயல் உருவாகக் காரணமாயிருக்கலாம்...! சூழல் வெப்பமுறுதலில் அமெரிக்கா வெளித்தள்ளும் புகையே அதிகம் பங்களிப்புச் செய்கிறது...! இது அமெரிக்கா தானே தன் தலையில் வாரிப் போடுவது போன்றது...! பாவம் அப்பாவி அமெரிக்க மக்கள்..! மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடையது..! Idea