| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 281 online users. » 0 Member(s) | 278 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,237
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,087
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,519
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் |
|
Posted by: iruvizhi - 09-21-2005, 10:52 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (3)
|
 |
தமிழ் ஆட்சி மொழி உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், தொல். திருமாவளவன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் சீமான், தங்கர்பச்சான் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ்த் தேசிய இயக்கத்தினர் அண்ணா சாலையிலிருந்து தமிழ்நாடு தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த புறப்பட்டனர்.
காவல்துறையினர் அனைவரையும் வழிமறுத்து கைது செய்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதாகும் வரை போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையில் தமிழ்த் தேசியத் தலைவர்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மைதானம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
கடலுரில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக இந்தப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி புதினம்
|
|
|
| கதவடைப்பு; திருமலையில் இயல்புநிலை பாதிப்பு |
|
Posted by: mayooran - 09-21-2005, 06:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
திருகோணமலையில் அத்துமீறி அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுதல், பாடசாலைகளிற்கு அண்மையில் உள்ள படைநிலைகளைக் அகற்றுதல் உட்பட எட்டுக் கோரிக்கைளை முன்வைத்து திருமலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் கதவைடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பொங்கு தமிழ் சமூகம் என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் தமிழ் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த போராட்டம் வெற்றிகரமாகத் தொடர்வதாக எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இந்த கதவடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பின் காரணமாக திருமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மற்றும் மாகாணசபை அலுவலகங்கள், வங்கிகள், உள்ளுர் மற்றும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், தமிழ் - முஸ்லீம் வணிக நிறுவனங்கள், பாசாலைகள், கல்வி நிறுவனங்கள் என்பன முடப்பட்டுள்ளதுடன், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
|
|
|
| ஒரு ஜோக் சொல்லுங்கள் |
|
Posted by: malaravan - 09-21-2005, 02:10 AM - Forum: நகைச்சுவை
- Replies (82)
|
 |
இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா?
ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன்
கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான்.
என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே
சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை.
எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய்.
இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன். இருந்த இடத்தை மறக்காமல் இங்கேயே திரும்பி வந்திருச்சு. அதனால் தான் சொல்கிறேன்
டக்கண்ணாவின் நாய் ஓடிச்சாம். அது நன்றியுள்ளது. அவர் வித்துப்போட்டார். நாளைககு வந்திடும்.ஜி ஜி ஜி சும்மா சும்மா
மலரவன்
|
|
|
| உங்கள் முகப்பருக்கள் அகற்ற வழிகள் |
|
Posted by: கீதா - 09-20-2005, 08:44 PM - Forum: மருத்துவம்
- Replies (40)
|
 |
உங்கள் முகப்பருக்கள் அகற்ற வழிகள்
---------------------------------
உங்கள் முகப் பரு இல்லாமல் இருக்க ஒரு சில வழிகள்
உங்கள் முகத்தில் பரு கரும்புள்ளி இருந்தால்
நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்
முழுசாக இருக்கும் பயறு நன்றாக பட்டுப்போல
(மாவாக)அதைத்தல்
பின்னேரம் உங்கள் முகத்தை நன்றாக குளிர் தண்ணீரில் கழுவி
துடைக்கவும் ?
பயற்று மாவை சறிதளவு எடுத்து குளிர் தண்ணீர் சிறிதளவு விட்டு குலைக்கவும் அதனை முகத்தில் நன்றாக புூசவும்
15 நிமிடத்தால (அது முகம் நோகும்வரை காய்ந்து வந்திடும்) குளிர்தண்ணீரில் களுவவும் இப்படி தெடர்ந்து சில மாதங்கள் செய்து வந்தால் முகம் அழகாக வந்திடும் (ஒவ்வொரு நாளும் Üடாது ஒரு கிழமைக்கு ஒருக்கா புூசினால் கானும்) உங்கள் முகம் நன்றாக வரும் ? அத்தோடு ஒவ்வொரு நாளும் ஒரு பழம் சாப்பிட்டு வாறதும் நல்லம்
|
|
|
| கவிதைகள் |
|
Posted by: கீதா - 09-20-2005, 08:05 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (140)
|
 |
கவிதைகள்
-----------------------------------------------
எனக்கு வந்த கடிதம்----------------------------------
அன்பானவளே நீ நலமாக
இருக்கின்றாயா----
நீ எப்பவும் படிப்புபடிப்பு
என்று செல்கின்றாய்-
நான் நீ போகுமிடமெல்லாம்
வருகின்றேன் அது
உனக்குத் தெரியாது
ஆனால் நீ நல்ல பெண்
ஏதோ உன் அழகு என்னை
மயக்கியது? உன் நல்ல
குணம் நடைகள்
எனக்குப் படித்தது
எவ்வளவோ பணம் இருந்தும்
நீ ஒரு சராசரி மனிதர்
போல இருப்பாய் ---
என் காதலை என்னிடம்
நேரில் சொல்ல எனக்குப்
பயமாக இருக்கின்றது
என் காதலை நீ ஏற்றுக்
கொள்ள மாட்டாய்
என எனக்குத் தெரியும்
இருந்தாலும் நான் நேரில்
சொல்லாட்டியும் கடிதம்
முலமாக எழுதி அனுப்புகின்றேன்
நீ அதை பார்த்ததும்
திகைத்துப் போய் நிப்பாய்
ஏன் என்றால் உனக்கு
நல்ல குணம்
தயவு செய்து என் காதலை
மறுக்காதே என்னவளே----
|
|
|
| இடைநிறுத்திவிட்டேன்... |
|
Posted by: Nitharsan - 09-20-2005, 07:52 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (16)
|
 |
[size=16]உன்னை தேடுகின்றேன்..
நேற்று என்னோடு பழகிய - என்
ஆருயிர் நண்பனே!
ஆயிரமாயிரம் மைகளுக்கப்பால்
இமைக்குள் வடியும் கண்ணீரோடு
கவி வடிக்கிறேன் நட்புக்காய்...
ஆமியின் அடாவடிக்குள்ளும்
அரசியலின் சீண்டலுக்குள்ளும்
ஆனந்தமாய் கழிந்த வாழ்வு
அழியில் வீழ்ந்த துருப்பாகிது...
ஆற்றெனா துயரில்..
சொல்ல முடியாத சோகத்துக்குள்
மெல்ல முடியாத வேதனைக்குள்
மெல்ல மெல்ல சாகும் -என்
உணர்வுகள்....
அன்னிய தேசமதில்
அகதியாய் நானிங்கு
அன்னை மண்ணில்
அரணாய் நீயங்கு...
தேசம்மாறும் வேளை -நான்
தேம்பியழவில்லை.. என்
கண்ணில் ஒரு நீர்
துளிகூட வரவில்லை...
ஏனெனில்.. -அப்போது
எனக்கு புரியவில்லை -அது
பிரிவின் ஆரம்பம் என்று
இப்போது புரிகின்றது
பிரிவின் வேதனை....
இனி எப்போதும்...
வேண்டாம் பிரிவு என்பதால்
இணைவுகளை
இடைநிறுத்திவிட்டேன்...
|
|
|
| புனர்வாழ்வுக் கழகமும் அமெரிக்க நிலைப்பாடும் |
|
Posted by: வினித் - 09-20-2005, 07:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் அமெரிக்காவின் நிலைப்பாடும்
அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்ய வேண்டிய நிலை இன்னும் ஏற்படவில்லை எனவும் தமிழர் புனர்வாழ்வு கழகம் அமெரிக்க சட்ட விதிகளுக்கு உட்படவே நடந்து கொள்வதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் திங்களன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அமெரிக்க தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொண்டர் நிறுவனம் என்ற அடிப்படையில் எங்கெல்லாம் மக்கள் கஷ்டப்படுகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி உதவி வருகின்றது.
எனினும் தமிழ் மக்களின் உதவியில் அது இயங்குவதன் ஒரே காரணத்தினால் இலங்கையிலுள்ள இனவாதிகளுக்கும் பேரினவாதிகளின் ஊதுகுழலாக செயற்படும் ஊடகங்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சற்று மாறுபட்ட அமைப்பாகவே தென்படுகின்றது.
இதன் காரணமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு புலி முத்திரை குத்துவதுடன் அதனை தடை செய்ய வேண்டும் என சதா வாய் கிழிய கூக்குரல் இட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் நியாயமான தன்னிகரற்ற பணியை நன்குணர்ந்தவகையில் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட், இனவாதிகளின் வாயை அடைக்கும் வகையில் பதிலளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
இலங்கையில் சுனாமி தாக்கத்தையடுத்து பரிதவித்த மக்களுக்கு இன மத பேதமின்றி உதவிக்கரம் நீட்டியவர்கள் இலங்கையிலுள்ள சமூக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என்றால் அது மிகையாகாது. அதனை தொடர்ந்தே ஆமை வேகத்தில் அரச நிவாரணங்கள் நகரத் தொடங்கின.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மருந்து வகைகள் நிவாரணப் பொருட்கள் என்பவற்றுடன் ஓடோடி வந்து அன்று முதல் தன்னாலான உதவிகளை செய்து வருகின்றது. இதனை உணர்ந்து கொள்ளவோ, ஜீரணித்துக் கொள்ளவோ முடியாத பேரினவாதிகள் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
அது மாத்திரமன்றி தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாதவாறு தடை செய்வது மற்றும் அவர்களின் பணிகளுக்கு முட்டுக் கட்டைகளைப் போடுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழ் பேசும் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று எவராவது கருதுவார்களேயானால் அது வெறும் பகற்கனவாகவே இருக்கும்.
அண்மையில் அமெரிக்காவின் நியூஓர்லியன்ஸில் வீசிய கற்றினா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தன்னாலான உதவிகளை வழங்கியிருந்தது. இதுவே இலங்கையிலுள்ள இனவாதிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய விவகாரமாகவும் மாறியுள்ளது.
அமெரிக்காவின் துறைமுக நகரான நியூ ஓர்லியன்ஸ் மக்கள் மிகுந்த செல்வ சிறப்புடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒரே நாளில் உணவுக்கும் குடி நீருக்கும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டமை மனிதாபிமானமுள்ள எவரையும் கவலைகொள்ளச் செய்வதாகவே இருக்கும். அந்த வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமல்ல உலகிலுள்ள எந்தவொரு தொண்டர் அமைப்பõவது முன் வந்து உதவினால் அதனை அனைத்துத் தரப்பினரும் வரவேற்கவே செய்வார்கள்.
ஆனால் இலங்கை மாத்திரம் அவற்றுக்கு முற்றிலும் விதிவிலக்காக நடந்து கொள்வதை உலகம் நன்கு அவதானித்துக் கொண்டே இருக்கின்றது.
சாதாரணமாக தமிழ் மக்கள் என்றாலோ, தமிழ் அமைப்புகள் என்றோலோ அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்து, சர்வதேச அரங்கில் கண்டனக் குரல்கøள் எழுப்பும் பேரினவாதிகள் எவ்வாறு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண ஒத்துழைப்பு வழங்கப் போகிறார்கள். எவ்வாறு நாட்டில் இன உறவை வளர்க்க உதவப் போகிறார்கள் என்பதை சர்வதேச உலகம் நன்கு கவனத்தில் கொள்வது இன்றியமையாததாகும் என்பதே தமிழ் பேசும் மக்களின் விருப்பமாகும்.
இதேவேளை, கடந்த காலங்களைப் போலன்றி இலங்கையில் நடப்பதென்ன என்பதையும் தமிழ் பேசும் மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதையும் சர்வதேச நாடுகள் அறிந்து வைத்துள்ளன.
இந்த பின்னணியிலேயே, அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத் தொடரில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதிலும் அது பிசுபிசுத்துப் போனமை நினைவில் கொள்ளத்தக்கதாகும
|
|
|
| தேசியத் தலைவரின் படத்தை விழுங்கச் சொல்லும்இராணுவநடவடிக்கை ' |
|
Posted by: வினித் - 09-20-2005, 06:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தேசியத் தலைவரின் படத்தை விழுங்கச் சொல்லும் சிங்கள இராணுவ 'நடவடிக்கை'
[செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2005, 14:58 ஈழம்] [தாயக செய்தியாளர்]
தேசியத் தலைவரின் உருவப்படத்தை பணப்பைக்குள் வைத்திருந்த இளைஞரை கடுமையாக சோதனையிட்ட படையினர் அந்தப் படத்தை வாய்க்குள் போட்டு விழுங்குமாறு நிர்ப்பந்தித்துள்ளனர்.
திருகோணமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் இராணுவச் சோதனைச் சாவடி மீது நேற்று முன்தினம் மாலை கைக்குண்டு வீசப்பட்டது.
இதன் பின்னர் அப்பகுதிக்கு வந்திருந்த இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவினர் இந்த இளைஞரை வழிமறித்து உடற் சோதனைகுட்படுத்தினர்.
இதன்போது தேசிய அடையாள அட்டையை இராணுவச் சிப்பாய் ஒருவர் கேட்டபோது பணப்பைக்குள் எடுக்க முயன்றார்.
அதில் தமிழீழத் தேசியத் தலைவரின் புகைப்படம் இருந்ததைப் பார்த்த இராணுவத்தினர் அப்படத்தை விழுங்குமாறு நிர்பந்தம் செய்துள்ளனர். அப்படத்தை விழுங்காமல் நகர அனுமதிக்கமாட்டோம் என்றும் கொடுமை செய்துள்ளனர்.
வேறு வழியின்றி தேசியத் தலைவரின் படத்தை உள்விழுங்கிய பின்னரே அந்த இளைஞரை அந்த இடத்திலிருந்து நகர சிங்கள இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.
|
|
|
| Font change |
|
Posted by: tamillinux - 09-20-2005, 11:33 AM - Forum: அறிமுகம்
- No Replies
|
 |
±ýÉ¡ø ¸½É¢ À¢Ã¢Å¢ø À¾¢ÄÇ¢ì¸ ÓÊÂÅ¢ø¨Ä.
¿øÄÅý ¯í¸û ¸Õò¾¢ü§¸üÀ þýÚ ¦Á¦ºïºÃ¢ø ±ØòÐ Á¡üÈ¢ þ¨½ì¸ôÀðÎûÇÐ.
Ò¾¢Â ¦Á¦ºïº÷ ¿£í¸û þ¨½Ôõ §À¡Ð ¾¡É¡¸§Å ¾¨Ã¢Èì¸õ ¦ºöÔõ.
Automatically upgrade users client whenever a new upgrade comes out so they don't have to "download" again.
Tamilmessenger.com
|
|
|
|