Yarl Forum
இடைநிறுத்திவிட்டேன்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இடைநிறுத்திவிட்டேன்... (/showthread.php?tid=3242)



இடைநிறுத்திவிட்டேன்... - Nitharsan - 09-20-2005

[size=16]உன்னை தேடுகின்றேன்..
நேற்று என்னோடு பழகிய - என்
ஆருயிர் நண்பனே!
ஆயிரமாயிரம் மைகளுக்கப்பால்
இமைக்குள் வடியும் கண்ணீரோடு
கவி வடிக்கிறேன் நட்புக்காய்...

ஆமியின் அடாவடிக்குள்ளும்
அரசியலின் சீண்டலுக்குள்ளும்
ஆனந்தமாய் கழிந்த வாழ்வு
அழியில் வீழ்ந்த துருப்பாகிது...
ஆற்றெனா துயரில்..
சொல்ல முடியாத சோகத்துக்குள்
மெல்ல முடியாத வேதனைக்குள்
மெல்ல மெல்ல சாகும் -என்
உணர்வுகள்....

அன்னிய தேசமதில்
அகதியாய் நானிங்கு
அன்னை மண்ணில்
அரணாய் நீயங்கு...
தேசம்மாறும் வேளை -நான்
தேம்பியழவில்லை.. என்
கண்ணில் ஒரு நீர்
துளிகூட வரவில்லை...
ஏனெனில்.. -அப்போது
எனக்கு புரியவில்லை -அது
பிரிவின் ஆரம்பம் என்று
இப்போது புரிகின்றது
பிரிவின் வேதனை....
இனி எப்போதும்...
வேண்டாம் பிரிவு என்பதால்
இணைவுகளை
இடைநிறுத்திவிட்டேன்...


- inthirajith - 09-20-2005

என்கல்லூரி வாழ்வும் அப்படிதான் நண்பனே
நட்பு தான் உலகத்திலே சுதந்திரமானது
எப்படியும் எதையும் பேசக்கூடியது நட்பிடம்
மட்டும்தான் அருமையான கவிதை


- வெண்ணிலா - 09-21-2005

கொடுமையிலும் கொடுமை பிரிவு. அதிலும் நட்பில் பிரிவு என்பது எப்படியான கொடுமை என சொல்லவே முடியாது.

நட்புக்காக கவி வடித்த நிதர்சனுக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 09-21-2005

இந்தக் கொடுமை தாயகத்தில் பிறந்த அனைவருக்கும் உண்டு. நன்றி அண்ணா உங்கள் கவிதைக்கு


- தமிழரசன் - 09-21-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-21-2005

Quote:உன்னை தேடுகின்றேன்..
நேற்று என்னோடு பழகிய - என்
ஆருயிர் நண்பனே!
ஆயிரமாயிரம் மைகளுக்கப்பால்
இமைக்குள் வடியும் கண்ணீரோடு
கவி வடிக்கிறேன் நட்புக்காய்...


ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால்

இப்படித்தானே வரும் நிதர்சன்
Arrow


- Birundan - 09-21-2005

கவிதை நன்று வாழ்த்துக்கள்.


Re: இடைநிறுத்திவிட்டேன்... - lollu Thamilichee - 09-21-2005

தலைப்பை பார்த்தவுடன்
லொள்ளு விடலாம் என நினைத்தேன்..

ஆனால்.. இந்த வரிகள்..

[quote=Nitharsan][size=16]
ஏனெனில்.. -அப்போது
எனக்கு புரியவில்லை -அது
பிரிவின் ஆரம்பம் என்று
இப்போது புரிகின்றது
பிரிவின் வேதனை....
இனி எப்போதும்...
வேண்டாம் பிரிவு என்பதால்
இணைவுகளை
இடைநிறுத்திவிட்டேன்...

பிரிவு..
இந்த மூண்றேழுத்தின்
சோகம் தெரியாமல்
பிரியம் கொண்டேன்..
இந்தப்பிரிவு
இன்னுமோர் பிரியத்தின்
தொடக்கம் என்று
சமாதாணம் அடைந்தேன்!!


- Jenany - 09-21-2005

நட்புக்காக வடித்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள் நிதர்சன் அண்ணா.....


- அனிதா - 09-21-2005

கவிதை நன்று வாழ்த்துக்கள்....


- KULAKADDAN - 09-21-2005

நிதர்சன், கவிதை நல்லா இருக்கு தொடருங்கள்.


- sakthy - 09-21-2005

உன்
பிரிவின் துயரத்தை
கவிதையாய் கொட்டிவிட்டாய்
தோழனே -ஆனால்
நானோ சொல்லவதற்கு கூட
வழியில்லாமல்
தேடுகிறேன்
பிரிந்த உறவுகளையும்
வார்த்தைகளையும்.............


- கீதா - 09-21-2005

நல்ல கவிதை நன்றி


- Rasikai - 09-21-2005

கவிதை நல்லா இருக்கு நிதர்சன் & சக்தி வாழ்த்துக்கள்.


- Mathan - 09-21-2005

நிதர்சன் மற்றும் சக்தி கவிதை நல்லாருக்கு, தொடர்ந்து எழுதுங்க.


- Senthamarai - 09-22-2005

நல்ல கவிதை நன்றிகள் இருவருக்கும்.


- hari - 09-22-2005

கவிதை நன்று வாழ்த்துக்கள்