![]() |
|
கதவடைப்பு; திருமலையில் இயல்புநிலை பாதிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கதவடைப்பு; திருமலையில் இயல்புநிலை பாதிப்பு (/showthread.php?tid=3238) |
கதவடைப்பு; திருமலையில் இயல்புநிலை பாதிப்பு - mayooran - 09-21-2005 திருகோணமலையில் அத்துமீறி அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுதல், பாடசாலைகளிற்கு அண்மையில் உள்ள படைநிலைகளைக் அகற்றுதல் உட்பட எட்டுக் கோரிக்கைளை முன்வைத்து திருமலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் கதவைடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பொங்கு தமிழ் சமூகம் என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் தமிழ் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த போராட்டம் வெற்றிகரமாகத் தொடர்வதாக எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார். இந்த கதவடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பின் காரணமாக திருமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மற்றும் மாகாணசபை அலுவலகங்கள், வங்கிகள், உள்ளுர் மற்றும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், தமிழ் - முஸ்லீம் வணிக நிறுவனங்கள், பாசாலைகள், கல்வி நிறுவனங்கள் என்பன முடப்பட்டுள்ளதுடன், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. |