Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
நீர்நெய் அகலில்
நிமிர்ந்த சுடரே!
என் சில இரவுகளைத்
துப்பறிந்தாய் நீ
ஓட வண்டுகள் மொய்கும்
சுதை மொட்டே !
உனக்குள் நான்
மகரந்தமானதுண்டு
நெருப்புத் துண்டுகளை
விழுங்கும் நான் - உன்
மெளன மணலில்
தலை புதைக்க வந்ததுண்டு
சில நேரங்களில்
உன் பனி நிழல்
என்மேல் உதிர்த்த
ஆயுதப் பூக்களின் இதழ்களை
அக்கினி நாக்குகள் ஆகியிருக்கின்றது
உன்மடியில் சிந்திக் கிடக்கும்
நாகலிங்கப்பூ ஆசனங்களில்
என் அதிசியங்களுக்கு
பட்டம் கட்டிய அந்த நாட்கள்
நினைவிருக்கிறதா உனக்கு......?
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம் மெதுவாக
நான் மெளுகுத்திரியாக
நீ ஊதுவர்த்தியாக
வேதனையை நான்
வெளிச்சப் படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைந்ததும் என்னை
மறந்து விடும் வேதனைக்கு
உன் ஜாபகம்
சுற்றிக் கொண்டிருக்கும்...........
....
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றெ
இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்.
ஜாபக முட்கள்
காயங்களைச் சுற்றி
வட்டமிடும்
என் ஏகாந்தத்தின்
இதயத் துடிப்பாக,
பிரிந்து சென்ற உன்
காலடி ஓசை.........
வெற்றி
உன்னை
அடுத்தவர்களுக்கெல்லாம்
அறிமுகப்படுத்தும் !
தோல்வியோ
உன்னையே உனக்குள்
ஒரு முகப்படுத்தும்
நிரந்தரமான வெற்றிக்காக
உன்னை தளுவிக் கொள்ளும்
தற்காலிகத் தோல்விகளை நீ
தாங்கிக் கொள் !
குவிந்த பிணங்களை
குழி தோண்டிப் புதைக்க
அல்லது
கொளுத்தி முடிக்க
அவகாசம் வேண்டாமா ?
அதற்காகத்தான்
ஒரு வாரம்
போர் நிறுத்தம் !
கடந்த கால செருப்புக்களைக்
கழற்றி எறிவோம்;
எதிர்காலத்திற்கான
சிறகுகளைச் சேகரிப்போம் !
....
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
நிச்சயமாக தல. எப்படி இருக்கிறீன்க ?
அவருடைய கவிதைகளின் நிஜம் எம்மை சுடுவதை உணருவேன் நான். முடிந்தால் நீங்களும் அவரின் படைப்புக்களை இணையுங்கள்
....
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம் எனக்கும் பிடிக்கும் மேத்தாவின் கவிதைகள். நன்றி சக்தி தொடரட்டும் உங்கள் பணி
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மேத்தாவின் கவிதைகளில் மிகவும் பிடித்தது
எனது வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எத்தனையோ காட்சிகள்
எழ முடியா வீழ்ச்சிகள்!
மண் வாழ்க்கை மேடையில் நான்
மாபெரிய காவியம்
மாபெரிய காவியத்தின்
மனம் சிதைந்த ஒவியம்!
ஆடுகின்ற பேய் மனதில்
ஆயிரமாம் ஆசைகள்
ஆயிரமாய் ஆசைகட்கு
அனுதினமும் புசைகள்!
சூடுகின்ற மாலைகளோ
தோள்வலிக்கும் தோல்விகள்
தோள்வலிக்கும் தோல்விகள் நான்
தொடங்கிவைத்த வேள்விகள்
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நன்றிகள் மெத்தாவின் கவிதைகளை தொடர்ந்து இணையுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
வாவ் சூப்பர் கவிதைகள்..நன்றி சக்தி...
அதுசரி யாரு மேத்தா என்று எனக்கு ஒரு சிறிய அறிமுகம் அவரைப்பற்றித்தர முடியுமா?
..
....
..!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மேத்த ஒரு நல்;ல கவிஞர் ப்ரியசகி!
அவர் பல கவிதைகளை எழுதியவர்
கனவுக் குதிரைகள், என் பிள்ளைத் தமிழ் கம்பன், கவியரங்கில் என்னுடைய போதிமரங்கள், நந்தவன நாட்கள், கண்ணீர்ப்புக்கள் காத்திருந்த காற்று, மனசிற்கு அவர்களின் வருகிறார்கள், முகத்து முகம் நடந்த நாடகங்கள், திருவிழாவில் ஒரு தெருப் பாடகன், ஒருவானம் இரு சிறகு, இதயத்தில் நாற்காலி ஊர்வலம்
கவிதைச் சிறுகதை- வெளிச்சம் வெளியே இல்லை
சிறுகதை
-கிழித்த கோடு
புதினம்-சோழ நிலா
(ரூ 20000 ஆனந்த விகடன் பொன் விழாப் பரிசு பெற்ற சரித்திர நாவல்)
-மகுடநிலா
-நதிகள் நனைவதில்லை
கட்டுரை
-அவளுக்கு ஒரு கடிதம்
-நானும் என் கவிதையும்
-நினைத்தது நெகிழ்ந்து
-மு.மேத்தா முன்னுரைகள்
-பக்கம் பார்த்துப் பேசுகின்றேன்
-புதுக்கவிதைப் போரட்டம்
போட்டிகள்
-இதய வாசல்
-திறந்த புத்தகம்
காவியம்-நாயகம் ஒரு காவியம்
திரைப்பாடல்கள்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
என் இதயத் தோட்டத்தில்
ரோஐhக்களைப் பயிரிட்டேன்
அறுவடை செய்ய
உன்னை அழைத்தேன்
அரிவளோடு நீ வந்த பிறகுதான்
என் தவறு எனக்கு புரிந்தது
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
நன்றிகள் . வேறு யாரிடமாவது அவரின் கவிதைகள் இருந்தால் பிரசுரியுங்கள்
....
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மேத்தாவின் கவிதைகள் சிலவற்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஆரளிப்பு அழுகிறது
புக்களிலே நானுமொரு
புவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
புவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
புமாலை யாகலையே!
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
நல்ல கவிதைகள் சக்தி.........
Posts: 20
Threads: 0
Joined: Sep 2005
Reputation:
0
வெற்றி
உன்னை
அடுத்தவர்களுக்கெல்லாம்
அறிமுகப்படுத்தும்
மேத்தாவின் கவிதைகள் சிலவற்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சக்தி.
.
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
[quote=RaMa]ஆரளிப்பு அழுகிறது
புக்களிலே நானுமொரு
புவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
புவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
புமாலை யாகலையே!
முதிர்கன்னிகளின் பிரச்சனையை மிக நுட்பமாக வெளிப்படுத்திய கவிதை இது.... நானும் நாளை மேத்தாவின் சில கவிதைகளைத் தருகிறேன்,,,
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Muthukumaran Wrote:[quote=RaMa]ஆரளிப்பு அழுகிறது
புக்களிலே நானுமொரு
புவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
புவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
புமாலை யாகலையே!
முதிர்கன்னிகளின் பிரச்சனையை மிக நுட்பமாக வெளிப்படுத்திய கவிதை இது....
ம் முதிர்கன்னிகளின் பிரச்சனை போல் ஈழ சமுதாயத்தில் ஆண்களுக்கும் பிரைச்சனை இருந்தது. புலம் பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் குடும்பங்களுக்காக ஓடாக தேய்ந்து திருமணம் செய்யாமல் இருந்தார்கள். இதற்குரிய தமிழ் சொல் என்ன என்று எனக்கு தெரியவில்லை, இதை அடிப்படையாக வைத்து சில கதைகளும் வந்திருக்கின்றன. இப்போது இந்த பிரைச்சனை குறைவு என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 170
Threads: 4
Joined: May 2005
Reputation:
0
அருமையான கவிதை. வேறு கவிதைகளும் வேண்டுமே நமக்கு.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>