![]() |
|
பாண்டிருப்பில் படையினரின் உந்துருளி படையணி தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாண்டிருப்பில் படையினரின் உந்துருளி படையணி தாக்குதல் (/showthread.php?tid=3158) |
பாண்டிருப்பில் படையினரின் உந்துருளி படையணி தாக்குதல் - mayooran - 09-26-2005 இரு இளைஞர்கள் படுகாயம் மட்டக்களப்பு மாவட்டம் பாண்டிருப்பு மாரியம்மன் கோவில் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் உந்துருளி அணியினரின் பலத்த தாக்குதலுக்கு இலக்கான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்தி திருத்துமிடம் ஒன்றில் போலை செய்யும் இவ் இரு இளைஞர்களும் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது, இராணுவ உந்துருளிப் படையினர் இவர்களை வழி மறித்துள்ளனர். இதனை அவதானிக்காது சென்ற இவர்களை உந்துருளிப்; படையணியினர் துரத்திப் பிடித்து துப்பாக்கிப் பிடிகளால் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று முன்தினம் நண்பகல் நடைபெற்ற இச் சம்பவத்தில் கடும் தாக்குதலுக்குள்ளானவர்கள் ராசரட்ணம் நிதர்சன்(22), பாக்கியராஜா நவோதயன்(23) என இனம் காணப்பட்டுள்ளனர். |