09-26-2005, 12:42 AM
[size=18]மெல்ல மெல்ல இந்து சமுத்திரத்தை ஆதிக்க வலைக்குள் அகப்படுத்தும் சீனா
<img src='http://www.nyu.edu/globalbeat/jpg/china-military.jpg' border='0' alt='user posted image'>
<b>* டில்லியை அரவணைத்து பெய்ஜிங்குடன் ஆலிங்கனம் செய்யும் கொழும்பின் தந்திரோபாய காய் நகர்த்தல்
* யதார்த்தத்தை அறிந்தும் `மாயை ' பரப்புரைகளை கட்டவிழ்த்து விடும் இந்திய மதியுரைஞர்கள் சிலர்</b>
இந்தியாவின் தென் பிராந்தியத்தில் மூன்றாவது கடற்படையாக கடற்புலிகள் உருவாகியுள்ளார்கள் என்றும் இது இந்தியாவிற்கு ஆபத்தானதென்றும் இந்திய சிந்தனையாளர்கள் என்று கூறப்படும் சிலர் கருத்துகளை வெளியிட்டுவருவதும் இந்தியப் பத்திரிகைகள் சிலவும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
உண்மையில் கடற்புலிகள் தமிழர் தாயகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய கடலணிகளாக மட்டுமே விளங்குகின்றார்கள். புலிகளின் கடற்படை இந்தியா போன்ற பிராந்திய வல்லரசொன்றின் வலிமை மிக்க கடற்படைக்கு சவால்விடும் அளவிற்கு வலிமையுடையது என்று சாதாரண பகுத்தறிவை உடையவர்கள் கூறமாட்டார்கள். ஆனால், அறிவுஜீவிகள் என்றும் பேராசிரியர்கள் என்றும் கூறப்படும் சிலர் இவ்வாறு உண்மையில் இல்லாத அச்சுறுத்தலை இருப்பதாகக் காண்பிக்க முனைவது யாருடைய நலன்களுக்காக? கடற்புலிகளை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக காண்பிப்பதற்கு சிங்கள அரசே தொடர்ந்து முனைந்து வருகின்றது. தமிழர்களுடனான போரில் அறுதியும் இறுதியுமான தோல்வி நெருங்கிவிட்டதென்பதை அறிந்த சிங்களப் பேரினவாதம், அவ்வாறான இறுதிக்களத்தில் கடற்புலிகள் பெரும்பங்கை ஆற்றுவார்கள் என்பதை ஆனையிறவுத் தளத்தை சுற்றிவளைப்பதற்காக நடத்தப்பட்ட குடாரப்பு தரையிறக்கத்திற்கு பின்னர் நன்கு புரிந்து கொண்டுள்ளது.
எனவே, இந்தியாவை அச்சுறுத்தி கடற்புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்று அது முனைந்து வருகின்றது. அந்த கருத்துகளை தமது சொந்த நலன்களுக்காக உள்வாங்கி சிங்களப் பேரினவாதத்தின் நலன்களை இந்திய நலன்களாக திரிபுபடுத்திக் காட்டுவதற்கே சில இந்தியப் பத்திரிகையாளர்களும் சிந்தனையாளர்கள் என்று தெரிவிக்கப்படுபவர்களும் முயற்சிசெய்து வருகின்றனர். இது உண்மையில் இந்தியா எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து அந்நாட்டின் கவனத்தை திசைதிருப்பக் கூடியதென்பதனால் அவ்வாறானவர்கள் ஒருவகையில் சொந்த நாட்டின் நலன்களுக்கே துரோகமிழைத்து வருகின்றனர்.
இப்பிராந்தியத்தில் மூன்று கடற்படைகள் உள்ளன என்று கூறி பலவீனமான இலங்கைக் கடற்படையையும் சுய பாதுகாப்பிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கடற்புலிகளையும் வலிமை வாய்ந்த இந்தியக் கடற்படையுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானதாகும்.
இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்துகின்றாரோ அவர் இந்தியாவைக் கட்டுப்படுத்துகின்றார் என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் பணிக்கர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்து சமுத்திரத்தில் இரண்டு வலிமை வாய்ந்த கடற்படைகள் உள்ளன. ஒன்று இந்திய கடற்படை. மற்றையது உலக வல்லரசாகிய அமெரிக்காவின் கடற்படை.
ஆயினும், ஆசியாவில் மாறிவரும் இராணுவ மற்றும் பொருளாதார சூழல்களினால் மூன்றாவது சக்திவாய்ந்த கடற்படையொன்றும் இந்து சமுத்திரத்தில் நிரந்தரமாக நிலைகொள்ளும் காலம் அண்மித்து வருகின்றது. அந்தக் கடற்படை சீனாவினுடையதாகும்.
சீனாவின் பொருளாதாரம் விரைந்து வளர்ந்து வருகின்றது. இதே வளர்ச்சியில் தொடர்ந்து செல்லுமாயின், அது 2025 ஆம் ஆண்டளவில் ஜப்பானிய பொருளாதாரத்தை விஞ்சிவிடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின், பொருளாதார வளர்ச்சி அதன் படைபலத்தை அதிகரிப்பதற்கு பெருமளவு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
"கடந்த கால போக்கின் அடிப்படையில்... சீனப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டளவில் அநேகமாக 6.4 ரில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவடைய முடியும். தொடர்ச்சியான ஒட்டுமொத்த பொருளாதாரச் செயற்பாட்டிலிருந்து சீனப் பாதுகாப்புப் பிரிவு அநேகமாக நன்மை பெறும்" என்று இவ்வாண்டு ஜூலை 19 ஆம் திகதி வெளியான அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் "சீன மக்கள் குடியரசின் இராணுவ வலிமை" என்பது குறித்த வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 களிலிருந்து சீனாவின் எரிபொருள் நகர்வானது, உள்நாட்டு உற்பத்தியை விட அதிகரித்துச் செல்கின்றது. சீனாவின் பொருளாதாரத்திற்கு அவசியமான எரிபொருளின் பெரும்பகுதி மத்திய கிழக்கிலிருந்து கடல்வழியாகவே பெறப்படுகின்றது.
இந்தக் கடற்பாதையூடான தனது விநியோகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அந்நாடு இந்து சமுத்திரக் கரையோர நாடுகள் பலவற்றில் தனது கடற்படைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
சீனா உலக வல்லரசு என்ற நிலையை அடைவதற்கான நீண்ட காலத்திட்டத்துடன் செயற்பட்டு வருகின்றது. அந்த நிலையை அடைவதற்கு இந்து சமுத்திரத்தில் வலிமையான கடற்படையைக் கொண்டிருப்பது அவசியமானது என்பதை அது நன்கு அறிந்துவைத்துள்ளது.
சீனா, ஈரானின் கரையோரமாக ஒரு கடற்படைத்தளத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன், பாகிஸ்தானில் குவாடோனில் கடற்படைத் தளம் ஒன்றை அமைத்து வருகின்றது.
காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் அந்நாட்டுடன் சீனாவிற்கு நேரடியான தரைத் தொடர்பு உள்ளது. இது பாகிஸ்தானில் அமைத்துவரும் கடற்படைத்தளத்தின் இராணுவ முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அம்சமாகும்.
பங்களாதேஷுடன் தனது உறவுகளை இறுக்கமாக்கிவரும் அந்நாடு, சிட்டகொஸ் துறைமுகத்தில் கொள்கலன் வசதிகளை கட்டியெழுப்ப உதவி வருகின்றது.
மற்றுமொரு இந்து சமுத்திர நாடான மியான்மாரில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்துவரும் சீனா அங்கு கடற்தளங்களைக் கட்டியெழுப்பி வருவதுடன் அந்நாட்டுக்குச் சொந்தமான கொக்கோத் தீவுகளில் கண்காணிப்பு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்காசியக் கரையோர நாடான கம்போடியாவுடன் நவம்பர் 2003 இல் பயிற்சியளித்தல் மற்றும் ஆயுதங்கள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அரசு கைச்சாத்திட்டுள்ளது. தெற்கு சீனாவிலிருந்து கடல்வரை புகையிரதப்பாதையொன்றை அமைப்பதற்கு அந்நாட்டுக்கு கம்போடியா உதவுகின்றது.
அத்துடன், மலாக்கா நீரிணையை கப்பல்கள் கடந்து செல்லாமல் இருக்கக் கூடியதாக தாய்லாந்தின் க்ரா நிலத்துண்டினூடாக சுயஸ் மற்றும் பனாமா கால்வாய் போன்ற ஒரு கால்வாயை அமைக்கும் 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவு பிடிக்கும் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கும் சீனா திட்டமிட்டு வருகின்றது. இந்த கால்வாய்த் திட்டம் சீனாவிற்கு தாய்லாந்தில் துறைமுக வசதிகள், களஞ்சிய வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்.
இவ்வாறாக இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில் தனது கடலாதிக்கத்திற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் அந்நாடு திட்டமிட்ட ரீதியில் செயலாற்றி வருகின்றது.
சீனாவின் எரிபொருள் நலன்களைப் பாதுகாப்பது என்று கருதும் வழிவகையில் அந்நாடு மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையான கடற்பாதை நெடுகிலும் தந்திரோபாயத் தொடர்புகளைக் கட்டியெழுப்பி வருவதாகவும் அவை பரந்தளவிலான பாதுகாப்பு நோக்கங்களுக்கும் பயன்படும் என்று "ஆசியாவில் சக்திவள எதிர்காலம்" என்ற தலைப்பில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ் பெல்ட்டிற்காக தயாரிக்கப்பட்ட உள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக "வாஷிங்டன் ரைம்ஸ்" கடந்த ஜனவரி மாதத்தில் தகவல் வெளியிட்டது.
சீனா "முத்துக்கள் கோர்க்கப்பட்ட இழை" (String of Pearls) என்ற மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக்கடல்வரை தளங்கள் அமைத்தல் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தல் தந்திரோபாயத்தை கைக்கொண்டுள்ளது என்று அந்த உள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக "வாஷிங்டன் ரைம்ஸ்" தெரிவித்திருந்தது.
இந்த இழையில் புதிய முத்தாக இலங்கையும் கோர்க்கப்பட்டுள்ளமையை அண்மையில் ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் பின்னர் இடம்பெற்ற விடயங்கள் காட்டுகின்றன.
தமிழர்களுக்கு எதிரான போரில் கொழும்பு அரசிற்கு சீனா நீண்டகாலமாக ஆயுதங்கள் விநியோகம் செய்யும் நாடாக இருந்து வருகின்றது. இது நீண்டகால நோக்கில் சிங்கள அரசை தனது இராணுவ தளபாடங்களில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்துவதனையும் ஒரு நோக்கமாகக் கொண்ட சீனாவின் தந்திரோபாயமாகும்.
சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டம், பொஸ்பேற் அகழ்வுத்திட்டம், கொழும்பு - கட்டுநாயக்க கடுகதிவீதி, கொழும்பு - இரத்மலானை புகையிரதப் பாதைத் திட்டம் போன்ற பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் உள்ளடங்குகின்றன. இதன் மூலம் சீனா இலங்கையின் பொருளாதாரத்தினுள் ஊடுருவுகின்றது. எதிர்காலத்தில் இலங்கைப் பொருளாதாரத்தில் சீனா கணிசமான செல்வாக்குச் செலுத்த இந்த ஒப்பந்தங்கள் வழிவகுத்துள்ளன.
இவற்றைத் தவிர, இந்த ஒப்பந்தத்தில் குறப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் தான் இலங்கை தொடர்பில் சீனாவின் எண்ணப் போக்கைக் காட்டுவதாக உள்ளது.
அது அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான எண்ணெய்த் தாங்கிகள் அமைப்பது தொடர்பிலான ஒப்பந்தமாகும். இதன் மூலம் தனது கடல்சார் நடவடிக்கைகளில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் சீனா உள்ளடக்க விரும்புவது தெளிவாகத் தெரிகின்றது.
சீனாவின் இந்தக் கடல்சார் ஆதிக்கமானது, இந்தியாவையே அதிகம் பாதிக்கக்கூடியது. இந்தியாவின் வடக்கில் பெரும் பகுதியை சீனா எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான், மியான்மார் போன்ற வலுவான நட்பு நாடுகளை இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ளதனால் ஏறத்தாழ பெரும்பாலான இந்தியாவின் நில எல்லைப்புறங்கள் சீனாவின் இராணுவ நகர்வுகளுக்கு திறந்து விடப்பட்ட நிலையே காணப்படுகின்றது. அத்துடன், பாகிஸ்தானிலும் மியான்மாரிலுமான சீனாவின் கடற்படைத் தளங்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நிலையைத் தோற்றுவிக்கும். வடக்கில் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகளைக் கொண்டிருப்பதனால் இந்தியா பாதுகாப்புக் காரணங்களுக்காக தனது முக்கிய தளங்களையும் மையங்களையும் தென்னிந்தியாவிலேயே அமைத்து வந்தது. ஆயினும், இந்து சமுத்திரத்தில் சீனாவின் எழுச்சியால் அவை அர்த்தமற்றுப் போகும் நிலைமை தோன்றியுள்ளது.
அமையப்போகும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனச் செல்வாக்கிற்கு உட்படுவது இந்தியாவின் கடற்பாதுகாப்பிற்கு இறுதி அடியாக அமையும்.
15 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சீனாவின் மிங் அரச வம்சகாலத்தில் சீனா உலகில் அதுவரைகாலத்திலும் எவராலும் எட்டப்பட்டிராத அளவிலான பெரும் கடற்பேரரசாக உருவெடுத்தது. செங்கோ அல்லது ஷெஸ் ஹீ என்ற பிறப்பில் முஸ்லிமான சீனக் கடற்படைத் தளபதி சுமார் 28,000 பேருடன் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல் அணிகளுடன் இந்து சமுத்திரத்தின் பல்வேறு நாடுகளுக்கு வெற்றிகரமான பயணங்களை மேற்கொண்டார். இந்தப்பயணங்களில் ஒன்று ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரம் வரை மேற்கொள்ளப்பட்டது. 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் சீனப் பேரரசிற்கு தங்களின் மரியாதையைச் செலுத்துமுகமாக தூதுவர்களை அனுப்பின. சீனாவின், இந்தக் கடல் எழுச்சியின் பொழுது தென்னிலங்கையிலும் அக்கடற்படை தரித்துச் சென்றது.
(தென்னிலங்கை அரசன்சீனர்களுடன் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் அவனையும் அவனின் குடும்பத்தையும் ஷெங் ஹீ கைது செய்து சீனாவிற்குக் கொண்டு சென்றதாக மிங் வம்சக் குறிப்பேடுகள் கூறுகின்றன.)
ஆயினும், இந்தக் கடற்பயணங்கள் வீண் செலவென்று கூறி பின்வந்த அரசர்களால் தடை செய்யப்பட்டதனால், அந்நாடு உலக அரங்கில் ஆற்றியிருக்கக்கூடிய பெரும்பங்கு இல்லாதொழிக்கப்பட்டது.சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னரே ஐரோப்பியர்கள் தமது நீண்ட கடற்பயணங்களை ஆரம்பித்து உலகில் சக்திவாய்ந்தவர்களாக மாறினர்.
ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னர் விட்டதவறை சீனா இனிமேல் விடப்போவதில்லை என்பதையே அதன் தற்போதைய நகர்வுகள் காட்டுகின்றன.
இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்துபவர் இந்தியாவைக் கட்டுப்படுத்துவார் என்றே பணிக்கர் கூறினார். இதன் மறுதலை உண்மையல்ல. அதாவது, இந்தியாவைக் கட்டுப்படுத்துபவர் இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்துவார் என்பது உண்மையல்ல.
இந்தியா, இலங்கையின் அதிவிஷேட நண்பன் என்று கூறிக்கொண்டு கொழும்பு அரசாங்கம் இந்தியாவிற்கு ஆபத்தானதென்று நன்கு தெரிந்த விடயங்களில் சீனாவுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
இந்திய நலன்களுக்கு இவ்வொப்பந்தங்கள் ஆபத்தானவை என்று நன்கு தெரிந்ததனாலேயே தென்னிலங்கைப் பேரினவாத நாளேடுகள் இதைப்பற்றி அதிகமாக ஆரவாரம் செய்யாமல் உள்ளூர இரசித்து மகிழ்ந்தன. பேரினவாதிகளின் வலைகளில் விழுந்துள்ள சில இந்திய அறிவுஜீவிகள் எனப்படுவோரும் உண்மையான ஆபத்துகளை மறைத்து தமிழர் நலன்களுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு சொந்த நாட்டிற்கே துரோகம் இழைத்துவருகின்றனர்.
¿ýÈ¢:
நர்த்தன்-¾¢ÉìÌÃø
25/09/2005

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )