![]() |
|
காத்திருப்புக்கள் தொடரும்!...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காத்திருப்புக்கள் தொடரும்!...... (/showthread.php?tid=3161) |
காத்திருப்புக்கள் தொடரும்!...... - Nitharsan - 09-26-2005 [size=12][b]பெண்னே! நீயும் மானிடப்பிறப்பு தானே!? மனங்களை... மனதார உணரதெரியாத நீ.. எப்படி மனிதப்பபிறப்புக்குள் அடங்கினாய்? அன்பாய் பழகுவதையும் ஆசையாய் பார்ப்பதையும் அர்தமின்றி..... நான் செய்வதாய் எண்ணுகிறாயோ? அர்தங்கள் புரிந்தாலும்...-அதை நீ அலட்சியம் செய்வது -என் நெஞ்சுக்கு புரிகிறது? எதற்காக இந்த அலட்சியம் எதற்காக இந்த வஞ்சனை... உன்னை நினைத்து... கவிதையேழுதினேன்.... உன் நினைவினில்... உயிர் வாழ்ந்தேன்... இதை தவிர நான்.. என் செய்தேன் உனக்கு? இவை தான் குற்ற மெனில்... தண்டனையை... ஆயுள் முழுவதும்...-நான் அழுதுகொண்டிருக்கும் படி தருவதா? -இன்னும் காலம் போகவில்லை கண்னே!... காதலையுன்னிடம் -நான் சொல்லவில்லை..... கவிதையை உன்னிடம்-நான் காட்டவில்லை.....ஆனாலும் உணர்தத் முற்ப்பட்டேன் -என் காதலை......-எதை சொன்னாலும் சிரித்து கொண்டிருப்பாய்...- இதற்க்கும் சிரித்து...-என் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிடாதே! சிந்தனை மாறி... சிதறிக்கிடந்த என் சீரற்ற வாழ்வுக்கு.... மீள் உயிர் கொடுத்தது -நான் உன் மேல் கொண்ட காதல்... உலகத்தில் காதல் எனும் உணர்வின் உன்னதத்தை-எனக்கு உணரவைத்தவளும் நீயே! உணர்வாலே..-நீ என்னுயிராகிவிட்டாய் எனக்கு தெரியாமலே..... என்னிதயத்தில் நுழைந்தும் விட்டாய்.... நுனுக்கமான உன் இதயத்தை படிப்பது கடினமானதாகியதால்.... காதலை நானும்...-உன்னிடம் காட்டிக் கொள்ளவில்லை....-இப்போ காதல் பொய்யாகுமோ!? கனவுகள்...கனவுகளாகுமோ!? கண்ணீர் தான் என் வாழ்வாகுமோ? எத்தனை அச்சம் என் மனதில்... இத்தனைக்கும் காரணம் நீ...!? ஏனிப்படி செய்கிறாய்? - என் நித்திரையற்ற இரவுகளில்- உன் நினைவுகள் தான் எச்சங்களாய்... நினைத்து நினைத்து நிதம் என்னை வாட்டுகிறேன்...-நீ வருவாய் என் காதலியாய் என்று எண்ணுவதால்.....-என் சோகமான வாழ்வுக்குள் ஒரு சந்தோச ஒளிதந்த நீ- மீண்டும் இருள்சூழ்ந்த அந்த குகைக்குள் -ஏன் தள்ளிவிட நினைக்கிறாய்? -உனை இழந்த வாழ்வெனக்கு வாழ்வாகாது உனைப்பிரிந்தால் உயிர் கூட -என் உடலிருக்க அச்சப்படும்-உறுதி மட்டும் நெஞ்சில் கொண்டு இதயத்தில் உன்னை கொண்டு இயங்குகிறேன் மனிதனாய்...!? என் இதயத்து ஜீவனே! ஒரு முறை செல்லிடு -நீ என்னை காதலிப்பதாய்.... சினிமா என்ற சித்திரத்தை போல் சிரிப்பதற்காய் கவி எழுதவில்லை சிந்திப்பாய் நீயேன... -நான் சிந்திப்பதால் எழுதுகிறேன்......... சிநேகிதியே!... சிற்பமாய் நீயும் அமைதி கொள்ளாதே!....-உன் அமைதியை நேசிக்கும் -என் கேள்விக்கு பதிலையும்.. மெளனத்தால் தந்திடாதே!? மரத்துப் போயிருந்த என் மனதில் காதலெனும் கனியை தந்தவளே! கனவுகளுடன்..... உன் நினைவுகளுடன் காலம் போகுது காதல் கவிதையை நான் எழுதியது உனை கண்ட பின் தான்....-இது உனக்காக நான் சொல்லும் பொய்யல்ல உண்மை...... உருளும் உலகில் மீண்டும் சந்திப்போம் என்று... நழுவிடாதே!...-நான் சந்திப்புக்களை எதிர் பார்க்கவில்லை என்னுடன் நீ வாழ வேண்டுமென விரும்புகிறேன்....! உன் வாய்கள் சொல்லும் வார்த்தைகள்-என் வாழ்க்கையின் முடிவுகள்... சத்தியமாய் இந்த வார்த்தை -என் கற்பனையில் உதிக்கவில்லை கண்மணியாள் உன் நினைவுதனில்- இன்றும் ஒரு நித்திரையற்ற இரவில் நிஜமாக எழுந்த வரிகள்.... காத்திரமாய் சொல்லிய -என் உள்ளத்து உணர்வுகளுடன் -என் காத்திருப்புக்கள் தொடரும் உனக்காக.... - RaMa - 09-26-2005 காத்திருப்புக்கள் வீண் போகமால் இருக்க எனது வாழ்த்துக்கள். நல்;லாயிருக்கு கவிதை - inthirajith - 09-26-2005 அற்புதம் நண்பரே காதல் தான் என்னையும் இப்படி ஆக்கியது உங்களையும்??ம்ம் அதன் வலி புரிந்தால் காதலிக்கவே மாட்டிர்கள் அந்த வலியில் எழுதியகவிதைகள் உண்மையானது ஆனால் புரியவேண்டியவர்களுக்கு மட்டும் ஏனொ புரிவதே இல்லை வாழ்த்துக்கள் - Birundan - 09-26-2005 அற்புதம் வாழ்த்துக்கள். - Rasikai - 09-26-2005 கவிதை ரொம்ப உணர்ச்சிபூர்வமாக உள்ளது. உங்கள் காத்திருப்பு வீண்போகாது இருக்க வாழ்த்துக்கள். மேலும் உங்கள் கவியை எதிர்பார்க்கிறோம் - inthirajith - 09-26-2005 ரசிகை அவரின் வேதனையை இன்னும் ரசிக்க ஆசைபடுகிறீங்களா?? பாவமுங்க விட்டு விடுங்க எதோ முகம் அறியா உறவுகளிடன் வேதனையை சொல்வது மன ஆறுதலுக்கு தானே - KULAKADDAN - 09-26-2005 நிதர்சன் உங்கள் காத்திருப்பு ....நன்றாக உள்ளது தொடருங்க - ப்ரியசகி - 09-26-2005 அழகான கவிதை நிதர்சன்..... - Rasikai - 09-26-2005 inthirajith Wrote:ரசிகை அவரின் வேதனையை இன்னும் ரசிக்க ஆசைபடுகிறீங்களா?? பாவமுங்க விட்டு விடுங்க எதோ முகம் அறியா உறவுகளிடன் வேதனையை சொல்வது மன ஆறுதலுக்கு தானே அவரின் வேதனையை இரசிப்பதில் எனக்கு ஒரு ஆனந்தம்மும் இல்லை நண்பரே. நான் கவி தான் தொடர்ந்து எழுத சொன்னேன். :roll: |