Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 425 online users.
» 0 Member(s) | 423 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,080
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  பாரிசில் தொடரும் கலவரங்கள்
Posted by: AJeevan - 11-03-2005, 08:06 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (19)

<b>பிரான்ஸ் விவகாரம்</b>

பிரான்சின் தலைநகர் பாரிசில், ஏழாவது இரவாக தொடர்ந்து கலவரங்கள் வெடித்த, இடங்களில், குடியேறிய சமுதாய மக்களுக்கு மரியாதை காட்டுமாறு அரசியல்வாதிகளை பாரிஸ் நகர முஸ்லீம் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40977000/jpg/_40977520_parisshop_ap203i.jpg' border='0' alt='user posted image'>
வன்முறைகள் தொடர்கின்றன
குடியேறும் சமூக மக்கள் அவமானகரமான, பாழடைந்துவரும், 1960கள் காலத்திய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் ஒதுக்கப்படக்கூடாது என்று, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் தலீல் பூபக்கூர் கூறியுள்ளார்.

கிலிஷி சூ புவா என்ற இந்த வன்முறை தொடங்கிய புறநகர்ப் பகுதியில் உள்ள மற்றொரு முஸ்லீம் தலைவர், அந்தப்பகுதியில் உள்ள மக்கள் தொகையில், கால் பங்கினர் வேலை ஏதும் இல்லாத இளைஞர்கள் என்றார்.
<img src='http://a123.g.akamai.net/f/123/12465/1d/media.canada.com/cp/world/20051103/w110312a.jpg' border='0' alt='user posted image'>
- BBC tamil

Print this item

  வடமராட்சி கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல்
Posted by: வினித் - 11-03-2005, 07:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

வடமராட்சி கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடற்படையினரின் கண்காணிப்பும் ரோந்தும் அதிகரிப்பு
வட தமிழீழ கடற்பரப்பில் பெருமளவிலான சிறீலங்கா கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டு கடற்கலன்களும் தாக்குதல் கடற்கலன்களும் களமிறக்கப்பட்டு பரவலாக தேடுதல் நடவடிக்கையிலும் கண்காணப்பு நடவடிக்கையிலும் சிறீலங்கா கடற்படையினர்

வங்கக் கடல் ஊடாக விடுதலைப் புலிகளின் ஆயுதங் கப்பல் ஒன்று வடமராட்சி கிழக்கு அல்லது முல்லைத் தீவுப் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கிடைத்த புலனாய்வு இரகசியத் தகவலை அடுத்தே இந்த நடவடிக்கையில் கடற்படையினர்

இன்றைய நாள் யாழ் குடாநாட்டில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பரவலாக சிறீலங்கா கடற்படையினரால் கடலில் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்
http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&

Print this item

  பிச்சை
Posted by: Nithya - 11-03-2005, 02:25 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

அம்மா "பிச்சை" போடுங்கோ..
(ம்ம் மன்னிக்கவும்)
அக்கா "பிச்சை" போடுங்கோ..

ஏனப்பா?
கால் கை எல்லாம்
நன்றாகத்தானே உள்ளன??

வேலை எதுவும் கிடைக்கேல அக்கா..!!

சரி.. நாளை இங்கு போ..
உனக்கு வேலை கிடைக்கும் !!

அடுத்த நாள் அடுத்த வீதியில்
அதே குரல்
"அம்மா பிச்சை போடுங்கோ"

எதிர் கொண்டேன்..
ஏன்டா "பிச்சை" எடுக்கிறாய்???
அழுத்தமான குரலில் கேட்டேன்

மறுமொழி கூறாமல்
பார்வையுடன் சென்று விட்டான்
கலங்கி நின்றேன்..!!

ஒரு வாரத்தில்
ஒரு கடுதாசி..!

"வயிற்றுக்காய் பணம் சேகரித்தல்"
என்று தலைப்பிடப்பட்டிருந்தது..!

அவசரமாய் பிரித்தேன்..

உள்ளே..

"பிச்சை என்று
இகழ்ச்சி செய்ததால்
உங்கள்மேல் வழக்கு"

அடே தமிழா...
சிரிக்கத் தோன்றுகிறது..!!

நான் நேற்று
பிறந்தவள்..
"பிச்சை" என்றோ
(அதுவும் உன்னால்)
பிறப்பிக்கப் பட்டது..!

அம்மா "பிச்சை" போடுங்க
என்பதை நீ நிறுத்து..
என் பச்சையை நான்
நிறுத்துகிறேன்..!!

Print this item

  சிம்புன்னு ஒரு நடிகர் இருப்பதே தெரியாது&quot;- சானியா
Posted by: வினித் - 11-03-2005, 12:26 PM - Forum: சினிமா - No Replies

சிம்புன்னு ஒரு நடிகர் இருப்பதே தெரியாது"- சானியா மிர்சா கொடுத்த ஷாக்!
- 02.11.2005
By JBR
ஒரு பக்கம் ஸ்கர்ட் அணியாதே என மிரட்டும் இஸ்லாமிய பழமைவாதிகள். மறுபக்கம், விளையாட்டை கோட்டைவிட்டு விளம்பரத்தில் கவனம் செலுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு.மத்தளத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருந்தவரிடம் மைக்கை நீட்டி, சினிமாவில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் நிருபர்.

<img src='http://img481.imageshack.us/img481/3019/02112005thn11image21xa.jpg' border='0' alt='user posted image'>




அவ்வளவுதான்!



சுழன்று அடித்துவிட்டது டென்னிஸ் சூறாவளி! "முப்பத்தி ஒன்றாவது இடத்துக்கு முன்னேறிய பிறகும் எனக்கு சரியான ஸ்பான்சர்ஸ் கிடைக்கலை. தங்குற செலவு, பிரயாண செலவு, உபகரணங்கள் வாங்குவது என்று ஒரு வருடத்துக்கு மூன்று கோடிரூபாய்க்கு மேல் எனக்கு தேவைப்படுது. விளம்பரங்கள் மூலமாகத்தான் இதை நான் சம்பாதித்தாக வேண்டும். தவிர விளம்பரத்தில் நடிப்பதற்கு வருடத்தில் 25 நாள்களுக்கு மேல் நான் செலவழிப்பதில்லை." மூக்கும் முக்குத்தியும் சிவந்துப்போக, தனது கோபப்பார்வையை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸாரின் பக்கம் திருப்பினார் சானியா.



"கொல்கத்தாவில் நடந்த மேட்சுக்கு ஆயிரத்து ஐநூறு போலீஸாரை செக்யூரிட்டிகளாக போட்டிருந்தார்கள். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. என்னை 'செலிபிரிட்டி'யாக்கி செய்யும் அனைத்தும் எனக்கு தொந்தரவானவைதான்".





சானியாமிர்சாவின் கடைசி சர்வீஸ் சிம்புவுக்கு! சானியா மிர்சாவை எப்படியும் நடிக்க வைப்பேன் என்று இவர் சவால் விட்டு அதிகநாள் ஆகாத நிலையில், சிம்புவை பெயரை குறிப்பிட்டே நோஸ்கட் செய்திருக்கிறது இந்த டென்னிஸ் ராக்கெட்!



"சிம்புன்னு ஒரு நடிகர் இருப்பதே எனக்கு தெரியாது. பிறகு எப்படி இது போன்ற செய்திகள் வெளியாகிறது என்று எனக்கு தெரியவில்லை. டென்னிஸில் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காக சின்ன வயசிலிருந்தே பல தியாகங்கள் செய்து வருகிறேன். நடிப்பது குறித்து நான் சிந்தித்ததே இல்லை."



முதல் பந்திலேயே சிம்புவின் விக்கெட் எகிறிவிட்டது. சிம்புவுக்கு ராசி கிரிக்கெட்தான், சானியா.... ஐஸ்ட் லீவ் இட் யா!

http://tamil.cinesouth.com/masala/hotnews/...2112005-1.shtml

Print this item

  சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும்
Posted by: Mathuran - 11-03-2005, 12:19 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (14)

ஆரியத்தால் தமிழ் கெட்டமை


தமிழ் மாது ஆரியமொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்பதாகப் பெற்றிருப்பதாக மகமகோபாத்தியாய டாக்ரர் சாமிநாதய்யர் அவர்கள், தங்கள் "சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்" என்னும் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள் இது எத்தனை உண்மை என ஆராய வேண்டும்.

<b>வீண் வட சொல் </b>

வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மையான தென்சொற்களிற்க்கு பதிலாக, விணான வட சொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன அவ்ற்றுள் சில வருமாறு.






அங்கவஸ்திரம் --- மேலாடை
அசங்கியம் --- அன்னியம்,அயல்
அன்னசத்திரம் --- உண்டிச்சத்திரம்
அத்தியாவசியம் --- இன்றியமையாமை
அந்தரங்கம் --- மறைமுகம்
அநேக --- பல
அப்பியாசம் --- பயிற்சி
அபிவிருத்தி --- மிகுவளர்ச்சி
அபராதம் --- குற்றம், தண்டம்
அபிசேகம் --- திருமுழுக்கு
அபூர்வம் --- அருமை
அமாவாசை --- காருவா
அர்ச்சனை --- தொழுகை, வழிபாடு
அர்த்தம் --- பொருள்
அவசரம் --- விரைவு, பரபரப்பு
அவசியம் --- தேவை
அவயவம் --- உறுப்பு
அற்புதம் --- புதுமை

Print this item

  திருமணம் : சில அனுபவங்கள்
Posted by: Vaanampaadi - 11-03-2005, 11:50 AM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (10)

திருமணம் : சில அனுபவங்கள்


நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை.
-ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு

இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள்.
-பாட்ரிக் முர்ரே

மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும்.
-கிரௌச்சோ மார்க்ஸ்

தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே.
-யாரோ

திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள்.
- ஹேமந்த் ஜோஷி

எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய்.
- சாக்ரடீஸ்

என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?''
-புரூட்

கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான்.
-யாரோ

என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு.
-யாரோ

நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
-சாம் கினிசன்

மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம்.
-ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன்

ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே.
-காலின் சாப்மன்

Print this item

  சர்ச்சைக்குரிய தபால்தலை
Posted by: Vaanampaadi - 11-03-2005, 08:23 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (76)

தபால்தலை பிரச்சினை
இந்து அமைப்புகளின் கோரிக்கை: இங்கிலாந்து தபால் இலாகா நிராகரித்தது


லண்டன், நவ.3-

தபால் தலை பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து தபால் இலாகா நிராகரித்து விட்டது.

சர்ச்சைக்குரிய தபால்தலை

இங்கிலாந்து நாட்டின் ராயல் தபால்துறை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 6 வகையான தபால்தலைகளை வெளியிட்டு உள்ளது.

அதில் ஒரு தபால் தலையில், பொட்டு வைத்த ஒரு ஆணும், நெற்றியில் குங்குமம் வைத்த ஒரு பெண்ணும் குழந்தை இயேசுவை வணங்குவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த தபால்தலை நேற்று முதல் விற்பனைக்கு வந்தது.

இந்துக்கள் எதிர்ப்பு

இந்த தபால்தலைக்கு அங்கு வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்து ஆணும், இந்து பெண்ணும் குழந்தை இயேசுவை வணங்குவது போன்ற தபால்தலை வெளியிட்டது. இந்துக்களை அவமதிப்பதாக உள்ளது என்றும், எனவே அந்த தபால் தலையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் 250 இந்து அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு ராயல் தபால் இலாகாவை கேட்டுக் கொண்டது.

நிராகரிப்பு

ஆனால் இந்த கோரிக்கையை தபால் துறை நிராகரித்து விட்டது. மும்பை ஓவியக் கூடத்தில் உள்ள ஒரு ஓவியத்தின் அடிப்படையில்தான் தபால் தலை வடிவமைக்கப்பட்டதாகவும், மும்பையில் உள்ள அந்த ஓவியம் 17-ம் நூற்றாண்டில் வரையப்பட்டது என்றும் ராயல் தபால்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அந்த தபால் தலையை வாபஸ் பெறுவதோ அல்லது அதில் திருத்தம் செய்வதோ இயலாத காரியம் என்றும் அவர் கூறினார்.

இந்த தபால் தலை இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்டம்

சர்ச்சைக்குரிய தபால் தலையை வாபஸ்பெற முடியாது என்று தபால்துறை கூறி விட்டதால் இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.

பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் ராயல் தபால் துறையின் தலைமை அலுவலகத்துக்கு தபால் தலை ஒட்டாமல் ஏராளமான தபால்களை அனுப்பப் போவதாகவும் இந்தியாவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்ல இருப்பதாகவும் இந்துக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரமேஷ்கல்லிடாய் தெரிவித்தார். இந்து தம்பதி குழந்தை இயேசுவை வணங்குவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ள தபால் தலையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.



Dailythanthi

Print this item

  அது ஒரு கனாக்காலம்
Posted by: SUNDHAL - 11-03-2005, 04:12 AM - Forum: சினிமா - No Replies

மின்னல் வேக ரயிலெல்லாம் வந்தாச்சு. ஆனாலும் கட்டை வண்டி பயணத்திலும் ஒரு சின்ன சுகம் இருக்கிறதல்லவா? காட்சிகள் நகர்வதிலிருந்து கேமிரா சுழல்வது வரை அத்தனையிலும் ஒரு நிதானம். ஆனாலும் இது பாலுமகேந்திராவின் படம் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிய வைக்கிற அழகு!

இளவயசு குறும்புகள் எல்லை மீறினால் என்னாகும்? இதை காதல் என்ற நூலில் கோர்த்து மாலையாக தொடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

அப்பாவும், அம்மாவும் ஊருக்கு போய்விடுகிறார்கள். தனிமையில் தனுஷ். காலிங்பெல் ஒலிக்க கதவை திறந்தால் சந்தனச்சிலையாக ப்ரியாமணி. ÔÔஅம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் வேலைக்கு என்னை அனுப்பிச்சாங்க...ÕÕ டயலாக் முடிந்த அடுத்த வினாடியே என்ன நடக்க போகிறது என்பது புரிகிறது. இருவரின் உடலிலும் ஏற்படுகிற வேதியியல் இம்சைகள் இருக்கிறதே... அது பச்சை பசேல் பாலுமகேந்திரா ரகம்.

உங்கப்பா உன்னை அடிக்கிறத பார்த்துட்டு என் பாவாடையிலேயே ஒண்ணுக்கு போயிருக்கேன். -இது ப்ரியாமணி.

அதான் நீ என்னை கிராஸ் பண்ணி போகும்போதெல்லாம் மூத்திரவாடை அடிச்சுதா? -இது தனுஷ்

வசனங்களில் யதார்த்தம் இருக்க வேண்டியதுதான். அதற்காக....?

அங்கங்கே வழிகிற குறும்புகளையும் பாராட்டியே ஆக வேண்டும். சிறுசுகள் இரண்டும் கள்ளத்தனமாக காதலை தொடர்ந்து கொண்டிருக்க, ÔÔஇந்த காப்பியை அண்ணன்கிட்ட கொடுÕÕ என்று அம்மா சொல்கிற போது தியேட்டரே கலகல!

ஒரே ஒருநாள் லாக்கப் வாசம். வாழ்க்கையையே பறி கொடுத்துவிட்டு தவிக்கிறார் தனுஷ். இயக்குனர் கையில் தன்னை களி மண்ணாக ஒப்படைத்துவிட்டு இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தமைக்காக பாராட்டலாம். அம்மாவின் மரணத்தை அழுத்தத்தோடு எதிர்கொண்டு சிறைக்குள் வந்த பின் கதறுகிறாரே... நெஞ்சை உலுக்குகிற வலி.

அந்த சிறைச்சாலைக்குள் நம்மை கவர்கிற இன்னொரு நபர் கருணாஸ். தன் கானா குரலில் அவர் பாடுகிற அந்த பாடல் உயிரை உருக்குகிறது.

மேக்கப்பே இல்லாவிட்டாலும் தேவதை போலிருக்கிறார் ப்ரியாமணி. கவர்ச்சியை காட்டி கவர்ந்தாலும், நடிப்பில் குன்றிமணி அளவுகூட குறை வைக்கவில்லை இந்த ப்ரியாமணி.

கடைசி சில நிமிடங்களில் தலை காட்டுகிற சண்முகராஜா, ஒரு கொலை குற்றவாளியை தப்பவிடுகிற காரணம் நம்பும்படியாக இல்லை. ஆனாலும் மிடுக்கான போலீஸ் ஆபிசர்.

சோக காட்சிகளில் வம்படியாக பாட ஆரம்பித்துவிடுகிறார் இளையராஜா. எத்தனை படங்களுக்கு இதையே கேட்பது? போர்... ஆனால் பின்னணி இசை மட்டும் வழக்கம்போலவே ஜோர்!

முதன் முறையாக அகல திரையில் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா.

பாலுமகேந்திராவின் படங்கள் மனசுக்குள் புகுந்து உணர்வுக்குள் கலகம் விளைவிக்கும். ம்ம்ம்... Ôஅது ஒரு கனாக்காலம்!Õ

-ஆர்.எஸ்.அந்தணன்

Print this item

  ஆறு மாதமாக துõங்குகிறார் நவீன கும்பகர்ணன் கிச்சுக்கிச்சு' மூ
Posted by: SUNDHAL - 11-03-2005, 03:58 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

துõங்காதே தம்பி துõங்காதே' என்று பாடினால் மட்டுமல்ல, கிச்சுக்கிச்சு மூட்டினாலும், கை, காலை பிடித்து இழுத்தாலும், படுக்கையை விட்டே தள்ளினாலும், இந்த மனிதர் எதற்கும் அசைந்து கூட கொடுப்பதில்லை. தொடர்ந்து கொர்ர்ர்...தான் பெரும்பாலான நேரம் அமைதியாக, சில சமயம் குறட்டையும் விட்டபடி, துõங்கிக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவு நேரம் தெரியுமா? நேரமா... ஒரு நாளல்ல, ஒரு வாரமல்ல, ஆறு மாதமாக...! என்ன வாயடைத்து விட்டீர்கள். உங்கள் சந்தேகம் எதுவாக இருந்தாலும், இது மருத்துவத்திற்கே சவாலாக தான் இருக்கிறது. மருத்துவ அபூர்வம் என்றும் கூறுகின்றனர்.

மத்தியபிரதேசம் குனா மாவட்டத்தில் உள்ளது கோன்யாடங் கிராமம். இங்கு வசித்து வருபவர் சந்தன் சிங். வயது 45. விவசாயி என்றாலும், ஏதோ அவ்வப்போது கூலி வேலைக்கு போய்த்தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கடந்த ஆறு மாதமாக இவர் வீட்டில் துõங்கிக் கொண்டே இருக்கிறார்.

எவ்வளவு எழுப்பியும், அவர் எழுந்திருக்கவே இல்லையாம். இதுபற்றி இப்போது தான் போலீஸ் மூலம் டாக்டர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுவரை அவர் மனைவியோ, உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சந்தன் சிங் அடிக்கடி காணாமல் போய் விடுவாராம். சில நாட்கள் கழித்து, ஏகப்பட்ட பழங்கள், காய்கறிகள் என்று மூட்டையுடன் வருவாராம். அப்போது சில சமயம் மணிக்கணக்கில், நாட்கணக்கில் கூட துõங்குவாராம். எழுந்திருக்கவே மாட்டாராம். எழுப்பினாலும், அவரால் எழுந்திருக்க முடியாதாம்.

எப்படி காணாமல் போகிறார்? எப்படி திரும்பி வருகிறார்? எங்கு இருந்தார்? என்பதெல்லாம், மனைவி கங்காபாய்க்கும் அவர் இரு குழந்தைகளுக்கும் தெரியவே தெரியாதாம். கிராமத்தினரும், "சந்தன் சிங்கிடம் அபூர்வ சக்தி உள்ளது. அதனால் தான் அவர் திடீர் என்று மாயமாகி விடுகிறார். அவர் துõங்குவதும் அப்படித்தான் . அவர் நவீன கால கும்பகர்ணன்' என்று பயபக்தியுடன் கூறுகின்றனர்.

"அவர் இப்படி பல மணி நேரம் அடிக்கடி துõங்குவது வழக்கம் தான். இதற்கு முன்பு ஒரு வாரம், பத்து நாள் என்று கூட தொடர்ந்து துõங்கி

இருக்கிறார். அதனால், அவருக்கு எந்த வியாதியும் இல்லை, துõக்கம் தான் வருகிறது. அதற்கு காரணம், அவரிடம் இருக்கும் அபூர்வ சக்தியாக இருக்கலாம்' என்று அவர் குடும்பத்தினரே நம்பினர்.

இந்நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு ஒரு நாள், திடீர் என்று வீட்டுக்கு வந்து, பழங்களை கொடுத்து விட்டு படுக்கையில் படுத்தாராம். அப்பறம் எழுந்திருக்கவே இல்லையாம். சில சமயம், அமைதியாக துõங்கிக் கொண்டு இருப்பாராம். சில சமயம், குறட்டை விடுவாராம். முன்பெல்லாம், தினமும் இல்லாவிட்டாலும், இரண்டு நாளுக்கு ஒரு முறை, குளிக்க வைத்து, உடை மாற்றுவாராம் கங்காபாய்.

அப்படியே, கடந்த நாட்களில் வாரத்துக்கு ஒருமுறை குளிக்கவைத்து, உடைகளை மாற்றி, மீண்டும் படுக்க வைத்து விடுவாராம். ஆனால், எதையும் சாப்பிடுவதோ, குடிப்பதோ மாட்டாராம். அப்படியே கொடுத்தாலும், வாய்க்குள் போகாதாம்.

தொடர்ந்து ஆறு மாதமாக துõங்கிக் கொண்டிருப்பதால், கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு வித பயமும் வந்து விட்டது. "நவீன கும்பகர்ணன் ஏன் இப்படி தொடர்ந்து துõங்கி வருகிறார்? ஏதாவது வியாதி இருக்குமோ, கோமா என்கிறார்களே, அதுவாக இருக்குமோ' என்று பயந்து போலீசுக்கு சிலர் சொல்லிவிட்டனர்.

போலீஸ் மூலம், சில டாக்டர்களுக்கு விஷயம் பரவ, அவர்கள் வந்து, சந்தன் சிங்கை போய்ப் பார்த்தனர். ஆனாலும், பரிசோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை. அரசு அதிகாரிகள் வந்து பார்த்து சொன்னபின், அதுபற்றி முடிவெடுக்கலாம் என்று இருந்து விட்டனர்.

"அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஒரு மனிதனால், தொடர்ந்து ஆறு மாதம் துõங்கிக் கொண்டிருக்க முடியாது. இது மருத்துவ அபூர்வம். அதுவும், சாப்பிடாமல், எதுவும் குடிக்காமல், சிறுநீர், மலம் கழிக்காமல், ஒருவரால் இப்படி பலநாட்கள் துõங்க முடியாது' என்றார் டாக்டர் மனிஷ் சுக்லானி.

"ஒரு மனிதனால், பத்து நாட்களுக்கு மேல், சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. அப்படி இருப்பது சாத்தியமே இல்லை. அதனால், சந்தன் சிங் பற்றி முழுமையாக பரிசோதித்து தான் சொல்ல முடியும். எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் தான் மருத்துவத்திற்கு சவாலான இவரைப் பற்றி எதுவும் சொல்ல முடியும்' என்று இன்னொரு டாக்டர் அஜய்பால் சிங் கூறினார்.
ThanksBig Grininamalar.............

Print this item

  தமிழ் தொழில்நுட்பச் சொற்கள்
Posted by: kurukaalapoovan - 11-02-2005, 10:44 PM - Forum: தமிழும் நயமும் - Replies (6)

உங்களுக்கு தெரிந்த ஆங்கில தொழில்நுட்பச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் பற்றி பகிருங்கள், கேள்வி எழுப்புங்கள்.

அறிந்து கொள்ள விரும்புவது:
analog, digital, ADC, DAC
transister
sequential logic, combinatorial logic
gates
register, cache, memory
modulation, demodulation
sampling
down/up conversion
amplification, amplifier, power amplifier
gain,
antenna
RF (Radio Frequency)
Frequency, wavelength
filtering, filter
spreading & despreading
encoding & decoding
crypting/cryptography, encrypting & decrypting
Interleaver, deinterleaver

Print this item