![]() |
|
சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும் (/showthread.php?tid=2629) |
சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும் - Mathuran - 11-03-2005 ஆரியத்தால் தமிழ் கெட்டமை தமிழ் மாது ஆரியமொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்பதாகப் பெற்றிருப்பதாக மகமகோபாத்தியாய டாக்ரர் சாமிநாதய்யர் அவர்கள், தங்கள் "சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்" என்னும் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள் இது எத்தனை உண்மை என ஆராய வேண்டும். <b>வீண் வட சொல் </b> வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மையான தென்சொற்களிற்க்கு பதிலாக, விணான வட சொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன அவ்ற்றுள் சில வருமாறு. அங்கவஸ்திரம் --- மேலாடை அசங்கியம் --- அன்னியம்,அயல் அன்னசத்திரம் --- உண்டிச்சத்திரம் அத்தியாவசியம் --- இன்றியமையாமை அந்தரங்கம் --- மறைமுகம் அநேக --- பல அப்பியாசம் --- பயிற்சி அபிவிருத்தி --- மிகுவளர்ச்சி அபராதம் --- குற்றம், தண்டம் அபிசேகம் --- திருமுழுக்கு அபூர்வம் --- அருமை அமாவாசை --- காருவா அர்ச்சனை --- தொழுகை, வழிபாடு அர்த்தம் --- பொருள் அவசரம் --- விரைவு, பரபரப்பு அவசியம் --- தேவை அவயவம் --- உறுப்பு அற்புதம் --- புதுமை - tamilini - 11-03-2005 பல சொற்களை சமஸ்கிரிதம் என்று தெரியாமலே பயன்படுத்துகிறோமா?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Re: சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும் - adithadi - 11-03-2005 இவ் சொற்கள் உண்மையிலேயே சமஷ்கிருத சொற்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? சரியான வேடிக்கை என்னவென்றால் தமிழ் சொற்கள் சமஷ்கிருத மொழியில் இல்லையாம். - tamilini - 11-03-2005 வன்டஸசல் அப்படி என்றால் என்ன?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->இதென்ன இது மேல உள்ளது 1 வரி இல்லையா?? :? உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். - ANUMANTHAN - 11-03-2005 மேலே கூறப்பட்ட சில சொற்களுக்கு பொருள்கள் மாறுபட்டுள்ளதுபோல் தெரிகிறது யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். உதாரணமாக சில:- 1, அன்னசத்திரம் - உண்டிச்சத்திரம் ( சத்திரம் - தமிழ்சொல்லா? அன்னம் சமஸ்கிருதமா? அப்படியென்றால்..) அமுதசத்திரம் , அமுதசாலை, அன்னதானமடம் என கூறமுடியாதா? 2.அவசியம் - தேவை இதன்பொருள் தவறு! அவசியம் - முக்கியம், பிரதானம் (இது தமிழ்சொல்லா தெரியவில்லை) 3.அபராதம் - குற்றம்,தண்டம். இதில் குற்றம் என்பது பொருந்தாது தண்டம் என்பது சரியானது! - Mathuran - 11-03-2005 அன்னவஸ்த்திரம் ---ஊணுடை அன்னியம் --- அயல் அனுபவி --- நுகர் அனுஸ்டி ---கைக்கொள் அஸ்திபாரம் ---அடிப்படை ஆக்கினை (ஆணை) ---கட்டளை ஆகாரம் ---உணவு ஆச்சர்யம் ---வியப்பு ஆசாரம் ---ஒளுக்கம் ஆசிர்வாதம் ---வாழ்த்து ஆதரி --- தங்கு (அரவணை) ஆதியோடந்தமாய் ---முதலிலிருந்து முடிவுவரை ஆபத்து --- அல்லல் ஆமோதி --- வழிமொழி ஆரம்பம் --- துவக்கம், தொடக்கம் ஆரோக்கியம் --- நலம், நோயின்மை ஆலோசி --- சூழ் - KULAKADDAN - 11-03-2005 Mathuran Wrote:ஆலோசி --- சூழ் இந்த கருத்து சரியானதா?...... ஆலோசி........கலந்துரையாடுதல் போன்ற பொருள் கொள்வதாகவே இருக்கும். - vasisutha - 11-04-2005 ஆபத்து என்பதற்கு அல்லல் என்பது சரியான பொருளா? - Birundan - 11-04-2005 அல்லல் தீத்தாண்டவா..... வாவா அருமை நாதனே வா,வா,,, உச்சி பிள்ளையார் கோயில் கொண்ட இடம் திருச்சி மலைதனிலே........ Re: சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும் - மின்னல் - 11-04-2005 adithadi Wrote:இவ் சொற்கள் உண்மையிலேயே சமஷ்கிருத சொற்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?இது சமஸ்கிரத சொல் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தமிழ் இவை சொற்கள் இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம். - மின்னல் - 11-04-2005 ANUMANTHAN Wrote:2.அவசியம் - தேவை இதன்பொருள் தவறு! அவசியம் - முக்கியம், பிரதானம் (இது தமிழ்சொல்லா தெரியவில்லை) அவசியம் என்பதற்கு முக்கியம் என்பது சரி ஆனால், பிரதானம் என்பது தவறு. பிரதானம் என்றால் முதன்மை. - மின்னல் - 11-04-2005 vasisutha Wrote:ஆபத்து என்பதற்கு அல்லல் என்பது சரியான பொருளா?ஆபத்து வருகிறது என்று யாராவது சொன்னால் 10 பசு மாடுகள் வருகின்றன என அர்த்தப்படுத்துங்கள். காரணம், ஆ என்றால் பசுவாம், பத்து என்றால் இலக்கம் 10 என்பதாம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆபத்திற்கு அல்லல் என்பது பிழையான பொருளல்ல. ஆபத்து என்றால் துன்பம், துன்பம் என்றால் அல்லல் எனவே அல்லல் என்றால் ஆபத்து சரியா விளக்கம் :twisted: - Rasikai - 11-04-2005 இதுல எது சமஸ்கிரதம் எது தமிழ் என்றே எனக்கு தெரியலை hock: :oops:
- vasisutha - 11-04-2005 மின்னல் Wrote:ஆபத்திற்கு அல்லல் என்பது பிழையான பொருளல்ல. ஆபத்து என்றால் துன்பம், துன்பம் என்றால் அல்லல் எனவே அல்லல் என்றால் ஆபத்து ஆபத்து என்றால் எப்படி துன்பம் என்று அர்த்தமாகும்..? அதோ ஆபத்து வருகிறது ஓடுங்கள் என்றுதான் சொல்வார்கள்.. அதோ துன்பம் வருகிறது ஓடுங்கள் என்று சொல்லுவார்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Aravinthan - 04-21-2006 மதுரன் ஏன் நீங்கள் ஆரியச் சொற்களும், தமிழ்ச் சொற்களும் பற்றி தொடர்ந்து எழுதவில்லை? |