Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 419 online users.
» 0 Member(s) | 417 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,080
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  புலம் பெயர்ந்த கடவுளர்கள்
Posted by: Vaanampaadi - 11-02-2005, 07:32 PM - Forum: நகைச்சுவை - Replies (2)

புலம் பெயர்ந்த கடவுளர்கள


(இடம்: புலம் பெயர் மண்ணிலுள்ள ஒரு கடவுள் ஸ்தலம் .... கடவுளர்கள் அவரவர் அடையாளங்களைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் மேலைத்தேய நவீன உடையமைப்புகளுடனும் காட்சியளிக்கிறார்கள்)

சிவன்:- (சடாமுடி, கங்கை, நாகம், புலித்தோல் ஜீன்ஸ்….நவீனரக சப்பாத்துடன் காட்சியளிக்கிறார்)
பார்வதி:-( ஒரு நவீன அலங்காரத்துடன் நிற்கிறா)

சிவன்:- பார்வதி…..பார்வதி…..எங்கே உன் சின்னமகன் முருகனைக் காணவில்லை..? இங்கே அவனின் பக்தர்களெல்லாம் வெகு நேரமாக மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்….அவன் அவர்களைக் கவனிக்காமல் அப்படியென்ன செய்துகொண்டிருக்கிறான்?

பார்வதி:- முருகன் computer ல் ஏதோ விளையாடிக்கொண்டிருக்கிறான்…கூப்பிட்டாலும் வருகிறானில்லை…..அவனுக்கு அதே வேலையாகப் போய்விட்டது!

கணபதி:- இல்லையம்மா…அவன் வள்ளி, தெய்வானை என்ற இரண்டு பெண்களுடன் Internet Chatting செய்து கொண்டிருக்கிறானம்மா.

பார்வதி:- சிவ சிவா

சிவன்:- நான் இங்கு தானிருக்கிறேன்.என்னை எதற்காக இப்போ அழைக்கிறாய்?

பார்வதி:- அவனைக் கூப்பிடுங்கள்.இப்படியே computer ம் Playstation ம் என்று அவனின் பொழுதுகள் போய்விடுகிறது….படிப்புமில்லை….பாட்டுமில்லை….பக்தர்களைக் கவனிப்பதுமில்லை..

சிவன்:- கணபதி….நீ போய் உடனே அவனை இவ்விடம் வரச்சொல்லி விடு. (கணபதி….முருகனை அழைத்தவாறே செல்ல, முருகன் வருகிறார்)

முருகன்:- என்னப்பா? என்னை அழைத்தீர்களா?

சிவன்:- முருகா! நீ இப்படியே நாளும் பொழுதும் விளையாட்டுடன் இருந்தால்..உன் பக்தர்களை யார் கவனிப்பது? இதற்காகவா நாமெல்லாம் சொந்த மண்ணைவிட்டு இங்கு வாழும் எங்கள் மக்களைக் காக்கவும் அருள் புரியவும் வந்தோம்? அங்கே பார்..! எத்தனை பக்தர்கள் உனக்கு அபிஷேகம் செய்யவும், அர்ச்சனை செய்யவும் காத்திருக்கிறார்கள்?

முருகன்:- அப்பா! இங்கிருக்கும் பக்தர்களெல்லாம் ஒரேவிதமான பிரச்சனையைத்தான் என்னிடம் எப்பவும் முறையிடுகிறார்கள்! அதைக் கேட்டுக் கேட்டு, எனக்கு ஒரே boring ஆக இருக்கிறதப்பா!

பார்வதி:- அப்படியென்னப்பா ஒரே விதமான பிரச்சனை?

முருகன்:- அம்மா! சொந்தமாக வீடு வாங்கியிருப்பவர்கள். mortgage கட்டுவதற்குக் கஸ்டமாக இருப்பதாகவும் அதற்கு ஒரு வழி கிடைக்க அருள் செய்யுமாறும் கேட்கிறார்கள். சொந்த வீடு அல்லாதவர்கள்…..ஒரு three bedroom வீடாவது வாங்குவதற்கு அருள் புரியுமாறு கேட்கிறார்கள். பழைய range ல் car வைத்திருப்பவர்கள் ஒரு புது range ல் car வாங்க அருள் புரிய வேண்டுமென்று கேட்கிறார்கள். Car ஏ இல்லாமல் நடந்து திரிகிறவர்கள் ஒரு நெளிந்த Car என்றாலும் பரவாயில்லை…வாங்குவதற்கு அருள் புரியவேண்டுமென்று கேட்கிறார்கள்…..குழந்தைகளெல்லாம் வந்து இரண்டு தேவாரங்களைப் பாடி..என்னைப் பரவசப்படுத்திவிட்டு, Computer, playstation, mobile phone, Football T-Shirt…..இப்படியான பொருட்கள் தமக்குக் gift ஆகக் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று வரம் கேட்கிறார்கள். யாருமே இது வரை நன்றாகப் படித்து, நல்ல நிலைக்கு வரவேண்டுமென்றோ….அல்லது எனக்குப் பிடித்த மொழியான தமிழ் மொழியில் நல்ல புலமையும் தேர்ச்சியும் பெற்று, அதை புலம் பெயர்ந்து வந்திருக்கும் இந்த மண்ணிலும் பரப்ப அருள் புரிய வேண்டுமென்றோ ஒரு நாளும் என்னிடம் கேட்கவில்லை! இந்த நிலையில் எனக்கு சலிப்பு வராமல் என்னம்மா செய்யும்??

பார்வதி:- சரி….சரி…நீ இன்னும் சாப்பிடவில்லை. அங்கே நல்ல பிரசாதங்கள் வடை, கடலை, பொங்கல், மற்றும் அறுசுவையுண்டி, பஞ்சாமிர்தம் …என்று அமோகமான படையல் வைத்திருக்கிறார்கள்…முதலில் போய்ச் சாப்பிடு. அதன் பின்னர் ஆறுதலாக நாம் இதுபற்றி ஆலோசிக்கலாம்.

முருகன்:- அம்மா…..இந்த பஞ்சாமிர்தத்தை எத்தனை நாட்களிற்குத் தான் சாப்பிடுவது? இவையெல்லாம் tin-fruit இல் செய்யப்பட்டது! அது போலவே இவர்கள் சமைக்கும் மரக்கறிகளெல்லாம்…அரைவாசிக்கு மேல் packet ல் அடைத்து பல மாதங்களாக fridge ல் பாதுகாக்கப்பட்டது! ஏன் அபிஷேகத்திற்கான பசுப்பால் கூட எத்தனை நாட்களாக fridge ல் வைக்கப்பட்டிருந்தது தெரியுமா? என் மேல் அதனை அவர்கள் ஊற்றும் போது, அப்பப்பா உயிர் போய் வருகிறது…அத்தனை குளிராக இருக்கும்! இதையெல்லாம் எத்தனை நாட்களிற்குத் தான் நான் சகித்துக் கொள்ள முடியும்??

பார்வதி:- சரி…இப்போதைக்கு போய் சாப்பிடு…நான் அப்பாவுடன் யோசித்து இதற்கு ஒரு வழி சொல்கிறேன்.

முருகன்:- நான் சாப்பிடமாட்டேனம்மா! எனக்கு இவற்றைச் சாப்பிட்டு நாக்கெல்லாம் மரத்து விட்டதம்மா….எனக்கு ஏதாவது pizza அல்லது noodles செய்து தாருங்கள்.

பார்வதி:- pizza வுக்கு நானிப்போ எங்கேயடா போவேன்? எங்காவது order பண்ணித்தான் எடுக்க வேண்டும்.(யோசிக்கிறார்)

கணபதி:- அம்மா என் mobile phone ல் ஒரு super pizza கடை number இருக்கிறது. நான் எடுத்துத் தருகிறேன். வேண்டுமானால் order பண்ணுங்கள்.

சிவன்:- முருகா.உன்னை நான் இந்த Europe நாட்டிற்குக் கூட்டி வந்ததே பிழையாகப் போய்விட்டதோ என்று இப்போ வருத்தப்படு கிறேன்

முருகன்:- ஏனப்பா?

சிவன்:- பின்னயென்ன? மக்கள் தான், மண்ணை மறந்து…ஏதேதோ காரியங்களிலெல்லாம் ஈடுபடுகிறார்களென்றால் ….எங்கள் பிள்ளைகளுமா

கணபதி:- அப்பா…தம்பி சொல்வதிலும் ஆசைப்படுவதிலும் கூட நியாயம் இருப்பதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.

பார்வதி: (சற்று அதட்டலாக) கணபதி! தம்பி தான் குழந்தைத் தனத்தில் ஏதேதோ கதைக்கிறான் என்றால் நீயுமா இப்பிடி எதிர் வாதம் செய்வது? நாங்கள் உலகின் எந்தப்பாகத்திற்குப் போனாலும் எங்கள் ஒழுக்கங்களையும் பண்புகளையும் இயற்கையுடன் இணைந்த அந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைமைகளையும் மாற்றி விடக்கூடாது மகனே

கணபதி:- அம்மா…நாங்கள் எப்பவும் நாகரீகம் தெரியாதவர்களாக இருக்கக் கூடாது. இது computer யுகம் அம்மா நாங்களும் கொஞ்சமாவது அதற்கேற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் பக்தர்களே எம்மைப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்!

முருகன்:- நன்றாகச் சொல்லுங்களண்ணா. அம்மாவும் அப்பாவும் இப்பவும் சிந்துவெளி நாகரித்தில் இருக்கிறார்கள்.

சிவன்:- பார்வதி.இவர்களுடன் கதைத்து பிரயோசனம் எதுவுமில்லை…..இவர்களாக உணரும் காலம் வரும் போது தாமாகவே உணர்ந்து கொள்வார்கள்.

(நாரதர் வருகிறார்)

நாரதர்:- ஓம்.. நமசிவாய..ஓம் நமசிவாய.ஈஸ்வரா!..மூவுலகங்களிற்கும் மூத்த பரமனே! முக்கண் முதல்வனே! நடராசப் பெருமானே! ஆணும் பெண்ணும் சரிபாதி என்றுணரச் செய்த சிவசக்திப் பெருமானே! ஆதியும் அந்தமும் நீயே!அரும் பெரும் சோதி நீயே!முழுமுதற் கடவுள் நீயே! (அவர் தொடர்ந்து ஈசனைப் போற்றிப் பேசியபடியே இருக்க)

முருகன்:_ என்ன? நாரதர் மூச்சு விடாமல் புழுகித் தட்டிக்கொண்டு வருகிறார்….ஏதோ அலுவல் போலும். நாக்குச் சுழுக்கி விடப்போகிறது, நிப்பாட்டுங்கள் நாரதரே!

பார்வதி:- (அதட்டலுடன்) முருகா! வாயை மூடு! பெரியவர்கள் வீட்டிற்கு வரும் போது இப்படியா வரவேற்பது?

நாரதர்:- (சிரித்தவாறே) பரவாயில்லை…அவனைத் திட்டாதீர்கள் தாயே! வாழும் நாடு அப்படி! அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். முருகனைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. பெரியவர்கள் நாங்கள் அவர்களையும் கூட்டிக் கொண்டு இந்த நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்தோமல்லவா…எங்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

பார்வதி:- நன்றாகச் சொன்னீர்கள் நாரதரே! குழப்படி செய்யும் போது பேசித்திருத்தவும் முடியவில்லை, அடி கொடுத்துத் திருத்தவும் முடியவில்லை. சும்மா சாடையாக தட்டினால் கூட…முகத்தை நீட்டிக்கொண்டு அழுகிறான்…மிஞ்சினால் எல்லாவற்றையும் விட்டுவிட் Social Service ல் போய் முயிட்டுக் கொண்டு அங்கேயே தங்கிவிடுவேனென்று எங்களையே பயமுறுத்துகிறான்…..நிலைமை இப்படியிருக்கிறது பாருங்கள்!

நாரதர்:- (சிரித்தவாறே) இவற்றை நினைத்து மனவருத்தப்பட வேண்டிய நேரத்தில்….அப்பன் ஈசனோ…வெகு அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கிறாரே!

பார்வதி:- ம்..அவருக்கென்ன …நேரத்துக்கு நேரம் நான் எல்லாப் பணிவிடைகளும் செய்ய ராஜா போல வாழ்கிறார். நீங்களாவது கேளுங்கள் நாரதரே! அவருக்கு நான் பிள்ளைகளின் பிரச்சனைகளைச் சொன்னால்….நான் தான் செல்லம் கொடுத்து இவர்களை இப்படியாக்கி வைத்திருக்கிறேன் என்று என் மீது குற்றம் சொல்லிச் சமாளிப்பாரே தவிர, பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்று ஒரு முயற்சியும் எடுப்பதில்லை! அவரின் உலகம் வேறு என்பது போல அவர் ஜாலியாகத் திரிகிறார்!

நாரதர்:- என்ன தாயே! நீங்கள் ஒருவர் தான் ஈசனை இப்படித் திட்டுகிறீர்களே தவிர…..அங்கே பக்தர்களெல்லாம் ஈசனடி போற்றி…எந்தையடி போற்றி…என்று உருகியுருகி பாடிப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

பார்வதி:- (கேலியாக) ம்…ம்…நன்றாகப் பரவசப் படட்டும்….அவரின் திருவிளையாடல்கள் எல்லாம் அவர்களுக்கெங்கே புரியப்போகிறது?

சிவன்:- பார்த்தீரா நாரதரே! நான் சிவனேயென்று என்பாட்டில் இருந்தாலும் இந்தப் பார்வதி என்னை விட்டு வைக்கிறாளா என்று நீரே பாரும்…நான் என்னதான் செய்வது?

பார்வதி:- இல்லை நாரதரே…நீங்கள் வந்த இடத்தில் நான் என் பிரச்சனையை சொல்லித்தான் ஆகவேண்டும்

நாரதர்:- சிவ சிவா என் தலை போய்விடாதபடி..சொல்லுங்கள் தாயே..!

பார்வதி:- போன கிழமை…..இவர் குடியிருக்கும் கோயில் தலத்தில்….பக்தர்கள் குழுமியிருக்க….பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது….இவர் அங்கு நிற்காமல் சுற்றப்போய்விட்டார்….பக்தர்களுக்கெல்லாம் இது எங்கே தெரியப்போகிறது?... கணபதி தான் ஓடிவந்து என்னிடம் வெளியில் சென்ற அப்பா இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை என்ற விசயத்தை என்னிடம் முறையிட்டான். அதன் பின்னர் தான், நான் முருகனை அனுப்பி எல்லா இடமும் தேடவிட்டேன். ( விம்மியழுதவாறே) அந்நேரம் அவர் எங்கே நின்றார் தெரியுமா….ஊர்க்கோடியிலுள்ள ஒரு Pub ல் நின்று பெண்களி;ன் கபரே நடனம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். இதனை முருகன் வந்து என்னிடம் சொல்லும் போது எனக்கு செத்துவிடலாம் போல இருந்தது! அவரே இப்படியெல்லாம் செய்யும் போது நான் பிள்ளைகளை எப்படித் திருத்த முடியும்??

நாரதர்:- சிவசிவா சிவசிவா
சிவன்:- நாரதரே..பார்வதி சொல்கிறாளே என்று நீரும் விளங்காமல்…என்னை அப்படி அழைக்காதீர். நான் Pub ற்குச் சென்று நடனம் பார்ப்பதற்காகவா.இந்தச் சமுத்திரங்களெல்லாம் கடந்து இங்கு குடும்பத்துடன் வந்திருக்கிறேன்? நீர் இதை உண்மை என்று நம்புவீரா?

முருகன்:- அப்பா…பொய் சொல்கிறார்..நான் என் கண்ணால் கண்டேன்….அப்பா pub ல் நின்று ரசித்து ரசித்து நடனம் பார்த்துக் கொண்டிருந்ததை என் கண்ணால் கண்டேன்.

சிவன்:-- (கோபமாக) முருகா..

பார்வதி:- அவனை ஏன் அதட்டுகிறீர்களா? பார்த்தீர்களா நாரதரே! பிள்ளைகள் என்னிடம் வந்து உண்மையைச் சொன்னால்…..இவர் பிள்ளைகள் மீது காரணமில்லாமல் பாய்ந்து விடுகிறார்….இவரின் கூத்துகள் எல்லாம் ஏற்கனவே உலகமறிந்த விடயம் தானே?

வுஷ்ணு:- வணக்கம் ஈஸ்வரா! வணக்கம் சக்தி தேவி!

சிவன்:- வணக்கம் விஷ்ணு! வா.ரும்... நல்ல சமயத்தில் வந்தீர்;….இந்தப் பார்வதியுடன் தினமும் ஒரே ரகளையாக இருக்கிறது.

விஷ்ணு:- அப்படியென்ன பிரச்சனை உங்களுக்கிடையில் இருக்கிறது?

கணபதி:- விஷ்ணு மாமா! நான் சொல்கிறேன். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த முருகன் தான்! இவனின் தொல்லை தாங்கமுடியவில்லை மாமா! அப்பாவை pub ல் கண்டதாக இவன் அம்மாவிடம் வந்து கோள்முடித்து வைத்திருக்கிறான்….அதனால் தான் அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையில் தினமும் பிரச்சனை!

வுஷ்ணு:- (சிரித்தவாறே) சரி சரி எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. நீங்கள் இனி எதுவும் எனக்குச் சொல்லத் தேவையில்லை.

சிவன்:- விஷ்ணு! நான் அன்று pub ற்கு ஏன் போனேன் என்ற விடயம் எல்லாம் உமக்குத் தெரியும் தானே? நீராவது இந்தப் பார்வதிக்கு எடுத்துச் சொல்லும்..கணவன் மனைவி பிரச்சனைகள் எல்லாம் இப்படித் தெருத்தெருவாய் நாறிப் போகிறமாதிரி இந்தப் பெண்கள் ஆக்கிவிடுகிறார்கள்..என்ன செய்வது?

பார்வதி:- (கோபமாக) ஏன் பெண்களை இழுக்கிறீர்கள்? ஆண்கள் நீங்கள் செய்யும் கோமாளி வேலைகளையெல்லாம் சரியென்று நாங்கள் கைககட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா??

வுஷ்ணு:- அடடா?....இருவரும் சற்று நேரம் பொறுங்கள். (நாரதரைப் பார்த்து) நாரதரே! நீர் வந்த வேலை அமோகமாக நடக்கிறது என்று நினை;கிறேன்…..அப்படித்தானே?

நாரதர்:- சிவ சிவா……நான் எதுவும் அறியேன் மகாதேவா!...சுகம் விசாரிக்கலாம் என்று வந்தேன்…..அவ்வளவு தான்.

விஷ்ணு:- ம்….இப்படித்தான்….அன்று லக்ஷ்மியிடமும் என்னை தருணம் பார்த்து மாட்டி வைத்தீர்.

நாரதர்:- சிவ…சிவா.அப்படியானால் நான் போய்விடட்டுமா மகாதேவா

வுஷ்ணு:- இனியென்ன போவது? ஒரு வழி செய்து விட்டுத்தானே போகவேண்டும்…..சரி….சக்திதேவி……நீங்கள் சற்று அமைதியாக நான் சொல்வதைக் கேட்பீர்களா?

பார்வதி:- சரி கேட்கிறேன் சொல்லுங்கள்.....

வுஷ்ணு:- நாங்கள் வந்து குடியேறியிருக்கும் இந்த நுரசழிந நாடுகளில் எங்கள் மக்கள் என்னென்ன சொறி வேலைகளெல்லாம் செய்கிறார்களென்று உங்களுக்குத் தெரியுமா?

பார்வதி:- எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.அங்கே கோயில்களைப் பாருங்கள் எவ்வளவு பக்தர்கள் என்று.

வுஷ்ணு:- இதை மட்டும் வைத்து, எல்லோரையும் கணக்குப் போடுகிறீர்கள் நீங்கள். சற்று வெளியில் சென்று….நல்ல இடங்கள், கூடாத இடங்கள் எல்லாவற்றிற்கும் போய் சுற்றிப் பாருங்கள்….அப்போ தான் எங்கள் இளசுகள் எல்லாம் என்னென்ன சுத்துமாத்துகள் செய்கிறார்கள் என்பது தெரியும்!

பார்வதி:- அப்படியென்ன செய்கிறார்கள்?

வுஷ்ணு:- அப்படிக் கேளுங்கள் தாயே! அந்தத் திருகுதாளங்கள் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் ஈஸ்வரன் அவர்கள் அதனைப் பார்த்து ஒரு முடிவு எடுப்பதற்காக நீங்கள் சொல்லும் அந்த pub ற்கும் ஒருநாள் போயிருந்தார்…அவர் நடனம் பார்ப்பதற்காகப் போவதென்றால்….ஏதாவது ஒரு பெரிய பொய்யாக உங்களுக்கெல்லாம் சொல்லிவிட்டுப் போகலாம் தானே? அவருக்குரிய ஒரு பிரதானமான அபிஷேக நேரமா அவர் போகவேண்டும்?

பார்வதி:- (யோசனையுடன்) ம்….அதுவும் சரிதான்.

வுஷ்ணு:- அவர் போனது….அங்கே எங்களை ஆத்மார்த்தமாக வழிபடும் பெற்றோருக்குப் பிறந்த சில தமிழ் இளைஞர்கள் மது அருந்திவிட்டு….ஒரு girl friendபிரச்சனைக்காக…..ஒருவரையொருவர் கத்தியால் வெட்டிக் குத்தி….சண்டைபிடித்துக் கொண்டிருந்ததை தடுத்துஅந்தப் பிள்ளைகளை அதிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான்..

கணபதி:- பார்த்தியா முருகா? உன் குரங்குப் புத்தியால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எத்தனை மனஸ்தாபம் என்று பார்த்தியா?

பார்வதி:- சிவ சிவா….என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி!

சிவன்:- சரி …சரி உன்னை எத்தனை தரம் தான் மன்னித்து விட்டிருக்கிறேன். நான் காரணம் சொல்ல முயன்ற போதெல்லாம் போதும் உங்கள் புழுகெல்லாம் என்று எத்தனை தடவைகள் உன் காதுகளை மூடிக்கொண்டாய்….இப்போ விஷ்ணு சொன்ன போது தான் கேட்டாயாக்கும்…இனி ஒவ்வொரு தடவைகளும் நான் என் பிரச்சனைகளை விளங்க வைக்க விஷ்ணுவைத்தான் அழைக்க வேண்டுமோ..

நாரதர்:- சரி ….அப்போநான் வரட்டுமா ஐயனே?

சிவன்:- வந்த வேலை முடிந்தது தானே போய்வா…..

நாரதர்:- (மேடையை விட்டுப் போனவாறே) சிவ சிவா….சம்போ மகாதேவா

காட்சி 2
(இடம்:- வீடு.) காட்சி:- ( மேசையில் cake வெட்டுவதற்கான ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது. சுவரில் பிறந்த நாள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது)

(பாத்திரங்கள்:- சிவன், பார்வதி, கணபதி, முருகன், விஷ்ணு, லக்சுமி, நாரதர்,.யாவரும் நிற்கிறார்கள்)
சிவன்:- பார்வதி.இன்னும் யார்யாரெல்லாம் வரவிருக்கிறார்கள்..?

பார்வதி:- ம் பிரம்மன் குடும்பம் இன்னும் வரவில்லை.நெருக்கமான உறவினர்களைத் தவிர வேறு யாருக்கும் நாம் சொல்லவில்லைத் தானே?

(அந்நேரம் வள்ளியும் தெய்வானையும் வருகிறார்கள். அவர்கள் நவீன உடையான tight skirt high-heels அணிந்திருக்கிறார்கள்)

தெய்வானை:- (நடந்து வந்தவாறே) Hi..முருகா! எப்படி இருக்கீறீர்கள்? Happy Birthday To You!

முருகன்:- thank you! தெய்வானை.

வள்ளி:- Happy Birthday To You முருகா!

முருகன்:- thanks வள்ளி.

நாரதர்:- கொஞ்சம் இருங்கள். (தெய்வானையைக் காட்டி) இவர் தெய்வானை…முருகனின் வருங்கால மனைவி. பெரியோர்கள் பார்த்து நிச்சயம் பண்ணியது! (பின்பு வள்ளியைக் காட்டி) இந்தப் பெண் யார்?

முருகன்:_ நாரதரே!....இவள் just என் Girl Friend அவ்வளவு தான்.

நாரதர்:- ( முகத்தைச் சுளித்தபடி) சரி…சரி….பூலோகத்து மனிதர்கள் தான் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள் என்றால்…தேவலோகத்தவர்களுமா??

கணபதி:- (மூச்சிரைக்க ஓடி வருகிறார்) அம்மா…அம்மா…பிரம்மன் uncle ம் சரஸ்வதி aunty யும் வருகிறார்கள்….இனி முருகனின் birthday cake ஐ வெட்டலாம் அம்மா.

பார்வதி:- சரி….வெட்டுவதற்கு ஆயத்தப்டுத்துங்கள்.

(பிரம்மனும் சரஸ்வதியும் மேடைக்கு வருகிறார்கள்)

சிவன்:- பிரம்ம தேவனே வாருங்கள். எங்கே உங்கள் மனைவி…வீணையோடு வீட்டில் அமர்ந்து விடுவார்களோ என்று யோசித்தேன்…நல்லவேளை அவரும் வந்து விட்டார்.

பிரம்மன்:- சரஸ்வதி இன்று party க்கு வராமல் தப்பமுடியவில்லை. ஏன் தெரியுமா? பார்வதி தேவி அவர்கள் phone ல் கையும் மெய்யுமாக பிடித்து, நிச்சயம் முருகனின் birthday party க்கு வரவேண்டும் என்று சொல்லி விட்டா….அதன் பிறகு அவள் எப்படி வராமல் இருக்கமுடியும்?

சரஸ்வதி:- (மெதுவாக புன்னகை செய்தவாறே) முருகனின் 21 வது பிறந்தநாள் அல்லவா? வராமல் இருந்தால் நன்றாக இருக்காதல்லவா?

பார்வதி:- மிக்க நன்றி எல்லோருக்கும். சரி இனி நாங்கள் cake ஐ வெட்டலாம்.

…(.அந்த நேரத்தில்….ஒளவைப் பாட்டியும்…..சில முனிவர்களும் வருகிறார்கள்) ( எல்லோரும் cakeவெட்டுவதற்கு ஆயத்தமாகிறார்கள்)

ஒளவை:- சிவன் , சக்தி, விஷ்ணு, லக்சுமி, பிரம்மன், சரஸ்வதி….கணபதி, முருகன்….இன்னும் நாரதர்….முனிவர்கள் எல்லாரும் ஒன்றுகூடி நிற்கும் இந்த அற்புதமான நேரத்தை நான் தவறவிடலாமா என்று எண்ணி….நானும் அழையாத விருந்தாளியாக இங்கு வந்திருக்கிறேன். என்னை ஆசிர்வதியுங்கள் சுவாமி! ( எல்லோரும் ஏக குரலில்) வருக…வருக…ஒளவையே! _ என்று வரவேற்கிறார்கள்)

ஓளவை:- எம்பெருமான் முருகனின் அழகே அழகு ! இன்று அவனின் பிறந்த நாளன்று அவனை நான் வாழ்த்தி ஒரு பாடல் பாடவே முக்கியமாக இந்நேரம் வந்தேன்.

சிவன்:- சரி…மு cake ஐ முருகன் வெட்டட்டும்…அதன் பின் ஓளவைப்பாட்டி தன் பாடலைப் பாடட்டும்.

(அதன் பின் ஒளவைப் பாட்டி பாட ஆரம்பிக்கிறார்) பட்டாசுகளுடன் Cake வெட்டப்படுகிறது. முருகன் எல்லோருக்கும் கேக் தீத்துகிறார்

பாடல்:- பழம் நீயப்பா…..காய் நீயப்பா…… தமிழ் ஞானப் பூ நீயப்பா….. கடல் நீயப்பா….குளம் நீயப்பா…. எல்லாக் குட்டைகளும் நீதானப்பா…

(இடையில் கணபதி குறுக்கிடுகிறார்)

கணபதி:- நிறுத்துங்கள்….ஒளவைப்பாட்டியாரே..! அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நீங்கள் எப்பவும் என் தம்பியைப் பற்றித்தான் அதிகமாகப் புகழ்ந்து பாடுகிறீர்கள்….என்னை, அவல் கடலை சுண்டல்..அரிசிக்கொழுக்கட்டையோடு மட்டும் நிறுத்திவிட்டீர்கள்….இன்று நீங்கள் என்னையும் போற்றிப் பாடவேண்டும். பாடுவீர்களா?

ஒளவை:- ஆனை முகத்தானே! தும்பிக்கையானே!...முருகனுக்கு மூத்தவனே! உன்னை நான் பாடாமலா !

(பாடல் ஆரம்பிக்கிறது)
ஒளவை:- “குளிர் பாலும் சீனியில் கரைத்த தேனும் பழைய பாகும் பருப்புமிவை நாலும் கலந்து freezer ல் வைத்தெடுத்து நான் தருவேன்! கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ யெனக்கு இங்கிலீஸில் நாலுவார்த்தை பேசி மகிழ ..நல்லதொரு வரம் தா!”

(மேடையில் நிற்பவர்கள் அனைவரும் ரசித்து ஆரவாரப்பட்டுக் கைதட்டுகிறார்கள்)

சிவன்:- பிறகென்ன ஒளவைப் பாட்டியே ! உங்கள் கவிப்புலமையே புலமை! நீவிர் பெரும் பேறு பெற்று வாழ்வீர்! வாழ்க! வளமுடன்!

பார்வதி:- யாரோ வாசலில் வந்து நிற்பது போலத் தெரிகிறது. கணபதி…யாரென்று பார்.

கணபதி:- அம்மா…!.order பண்ணிய pizza வந்துவிட்டது.

சரஸ்வதி:- (மெதுவாக) எனக்கு mushroom ஒத்துக் கொள்ளாது….

கணபதி:- சரஸ்வதி aunty , எல்லா varieties pizza வும் வந்திருக்கிறது. பயப்படாதீர்கள். நீங்கள் choose பண்ணிச் சாப்பிடலாம்.

சிவன்:- o.k…. cheers எல்லோரும் சாப்பிட ஆயத்தமாகுங்கள்.

முற்றும்.

நன்றி- சந்திரா.இரவீந்திரன்.

Print this item

  முன்நாள் புலி உறுப்பினர்கள் சுட்டுகொலை
Posted by: Vaanampaadi - 11-02-2005, 06:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

Ex-LTTE members shot dead in Valaichenai

[TamilNet, November 02, 2005 10:54 GMT]
Unidentified gunmen shot and killed a former member of the Liberation Tigers of Tamil Eelam Wednesday morning 8:30 a.m. in Kurunchi Nagar in Valaichenai, 32 km north of Batticaloa. The victim, Mr. Sellathamby Punniyamoorthy,26, a father of two children, was kidnapped three days earlier by the assailants suspected to belong to the paramilitary Karuna Group, civilian sources said. Another former member of the LTTE was shot and killed on Monday in Kiran.
The incident took place on Vishnu Temple Road at Pattiyadichenai in Kurunchi Nagar in Valaichenai.

The victim, a resident of Vinayagapuram, Valaichenai, left the LTTE two years ago, sources added.

Valaichenai Police conducting investigations said that the hands of the victim were tied behind his back with a rope. The body was handed over to Valaichenai hospital, police said.

On Monday, another ex-LTTE member, Mr. Kandasamy Sasikumar, 22, from Kiran in Valaichenai, was shot and killed by paramilitary gunmen at 1:30 a.m. Five gunmen entered the house of the victim and took him a few meters away before they shot him.


Source: Tamilnet

Print this item

  அதிக செலவு பிடிக்கும் நகரம் லண்டன்
Posted by: SUNDHAL - 11-02-2005, 04:10 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (12)

ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி மற்றும் வாழ்க்கை செலவு அதிகமாக இருக்கும் நகரம் எது என்பது குறித்து ஒரு நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் லண்டன் நகரம் தான் செலவு அதிகம் பிடிக்கும் நகரம் என்று தெரிய வந்துள்ளது.

பாரிஸ் நகரம் 2-வது இடத்தையும், ஜெர்மனியின் பிராஷ்க்பர்ட் நகரம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. பெல்ஜியத்தின் புரூசெல்ஸ் நகரம் 4-வது இடத்தில் உள்ளது.
Thanks:Malaimalar..

Print this item

  பூமி வெப்பமடைதலும் காலநிலை மாற்றமும்
Posted by: Mathan - 11-02-2005, 04:04 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

புவி வெப்பமடைவதை தடுக்கு வழிவகைகள் தொடர்பாக இருபது நாடுகள் விவாதம்

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40968000/jpg/_40968794_greenpeacehongkongafpg.jpg' border='0' alt='user posted image'>
<b>மாசு ஏற்படுத்தாத எரிசக்தி கோரி ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள்</b>

புவி வெப்பமடைவதை தடுப்பதற்கு எவ்வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது பற்றி இருபது நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர்கள் இன்று லண்டனில் கூடி விவாதித்துவருகின்றனர்.

வளருமுக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு தடைபோடாமல் அவர்களின் வெப்பவாயு வெளியேற்றத்தை குறைப்பது எப்படி என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் என்ற விவகாரத்தில் மிகச் சிக்கலான அம்சம் இது.

குறிப்பாக இந்தியா சீனா போன்ற வளருமுக நாடுகள் தங்களுடைய வெப்ப வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதை இதுவரையில் இலக்குகளை நிர்ணயித்திருக்கவில்லை. இலக்குகளை நிர்ணயிக்கப்படுவதிலும் அவை ஆர்வம் காட்டாமல் இருந்துவருகின்றன.

மேலும் உலகில் மிக அதிகமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்திவரும் அமெரிக்காவும் இலக்கு நிர்ணயிக்கப்படுதல் என்ற யோசனையை முழுமையாக எதிர்க்கிறது. காலநிலை மாற்றத்தை நிர்ணயிப்பது இயற்கையும் அறிவியலும்தானே ஒழிய நாடுகள் பேரம் பேசுவதோ அடுத்த நாடுகளுக்கு அழுத்தம் தருவதோ அல்ல என்று இன்றைய கூட்டத்தை துவக்கிவைத்து பேசிய பிரிட்டன் சுற்றுச்சூழல் அமைச்சர் மார்கரெட் பெக்கெட் கூறினார்.

வளர்ந்த நாடுகளுக்கு வெப்பவாயு வெளியேற்ற இலக்குகளை நிர்ணயித்த கியோட்டோ ஒப்பந்தம் இந்த ஆண்டுதான் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

BBC தமிழ்

Print this item

  ஓயாத அலைகள் மூன்று - நீண்ட பாய்ச்சலின் நினைவு கூரல்
Posted by: இவோன் - 11-02-2005, 02:58 PM - Forum: தமிழீழம் - Replies (1)

நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல்.

இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஆறாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.


கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட
பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்


1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.

இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.

இனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.


தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.


இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.

அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.


மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு "வோட்டர்செட்" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.

மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.

இந்நிலையில்தான் "வோட்டர் செட் - இரண்டு" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.

ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.

ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.

அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.
-----------------------------------------------------------------

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.

சம்பந்தமுள்ள வேறுபதிவு.

-வன்னியன்-
02.11.2005.

Print this item

  கமலரஜினியின் வந்தனங்கள்!
Posted by: kamalarajini - 11-02-2005, 02:00 PM - Forum: அறிமுகம் - Replies (44)

வணக்கம்! என் பெயர் கமல ரஜினி. இன்று முதல் யாழ் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் வணக்கங்கள்.

Print this item

  திருமண வாழ்த்துக்கள்
Posted by: kpriyan - 11-02-2005, 11:00 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

அவள் என்றும் அழகுதான்,
என் கண்களுக்கு.
அன்றோ எல்லோருக்கும் அழகாக தெரிந்தாள்,

சிறிது நேரம் அவளை ரசிப்போமே
என்று இதயம் விண்ணப்பமிட
இருமனதாய் ஒத்துக்கொள்ளுகிறது மனது

தலையில் ஒரு அழகிய பூந்தோட்டம்
கறுத்து நீண்ட புற்கள்,
நெற்றியில் ஒரு அந்நிய ஒற்றை முடி
அதில் தொங்கும் என் இதயம்,

உயிரினை உருக்கும் கண்கள்
என்னைப்பார்த்து அல்ல
என்னைப்பார்க்கவைத்து,

அவள் அன்பாய் என்னை அழைக்கையில்
உடலை விட்டு ஒடுச்சென்றது மனது,
கனவுகளை கலைத்துவிட்டு
சப்த்தங்களை சபித்துவிட்டு

பூக்களுக்கு அவளை கையளித்து
வழ்த்தினேன்

"திருமண வாழ்த்துக்கள்"

Print this item

  இன்னுமொரு காதல்..
Posted by: இவோன் - 11-02-2005, 10:25 AM - Forum: கவிதை/பாடல் - Replies (91)

களத்தில இப்ப குட்டிக்கவிகளின் செல்வாக்கு தான் அதிகம்.. அதுவும் தோத்துப் போனது என சொல்லப்படுகின்ற காதல்களைப் பற்றி எழுதுறது தான் பிரபல்யம்.. அந்த வகையில் நானும் ஒரு குட்டிக்கவி எழுதுறன்..

தோல்வியடைந்த எந்த மனமும்
நினைக்காது அடுத்த காதலை
இன்னொரு காதலி கிடைக்கும் வரை

Print this item

  தமிழ்நாட்டின் உத்தியோகபூர்வமான பூ காந்தள்
Posted by: Eelavan - 11-02-2005, 07:31 AM - Forum: தமிழீழம் - Replies (8)

இப்போதுதான் வலைப்பதிவில் படித்துத் தெரிந்துகொண்ட செய்தி

தமிழ்நாட்டின்(தமிழ்நாட்டு மாநில அரசின்) உத்தியோக பூர்வ மரம் பனைமரம்

http://www.environment.tn.nic.in/images/DO...E/StateTree.jpg

உத்தியோகபூர்வமான பூ காந்தள் பூ
http://www.environment.tn.nic.in/images/DO...StateFlower.jpg

தமிழீழத்தினதும் தமிழகத்தினதும் தேர்வுகளின் ஒற்ருமையைப் பாருங்கள் ஆச்சரியமாக இல்லை

Print this item

  தாறுமாறாக ஓட்டிய டிரைவருக்கு &quot;பளார்' விட்ட இந்தியப் பெண்
Posted by: SUNDHAL - 11-02-2005, 03:55 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (11)

துபாயில் தாறுமாறாக டாக்சி ஓட்டிய டிரைவருக்கு இந்திய பெண் கன்னத்தில் "பளார்' விட்டு தண்டனை கொடுத்தார்.

இது பற்றிய விபரம் வருமாறு:

இந்தியாவை சேர்ந்தவர் பீனா சோனி. இவர் தன்னுடைய சகோதரருடன் ஷார்ஜாவில் டாக்சியில் பயணம் செய்தார். அப்போது டாக்சி டிரைவர் மிக வேகமாக போவதும் அடிக்கடி வண்டியை நிறுத்துவது (சடன் பிரேக்) என அவருக்கு பெரும் "இம்சை' கொடுத்துள்ளார். வண்டியை மெதுவாக ஓட்டும்படி பீனா வேண்டுகோள் விடுத்தார். அதற்கு செவி சாய்க்காத டிரைவர் பீனாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதில் அவமானமடைந்த பீனா ஷார்ஜா போலீசாரிடம் புகார் செய்தார்.இதை விசாரித்த போலீசார் இக்குற்றம் சம்மந்தமாக டிரைவர் மீது முறையாக புகார் பதிவு செய்யலாம் அல்லது "உடனடி நீதி' என்ற கொள்கையின் அடிப்படையில் பொது இடத்தில் டிரைவரின் கன்னத்தில் அறை விடலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

தனது சகோதரரிடம் ஆலோசனை செய்த பீனா இரண்டாவது தண்டனை முறையை கையாள முடிவு செய்தார். அதன்படி பொது இடத்தில் அந்த டிரைவரின் கன்னத்தில் "பளார்'விட்டார். இச்சம்பவத்தை காண கூடியிருந்த மக்கள் கூட்டத்தை போலீசார் விரட்டி விட்டனர்.

இக்குற்றத்தை செய்த டிரைவர் மீது புகார் கொடுத்து சிறையில் தள்ளினால் அவருடைய வருமானத்தை இழக்க நேரிடும்.இதை நான் விரும்பவில்லை. அவர் செய்த குற்றத்துக்கு "உடனடி தண்டனை' கொடுத்தது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளித்தது என்று பீனா சோனி கூறியதாக "கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Print this item